எப்போதோ எனக்கு இந்த வலைப்பூ எண்ணம் உதித்தாலும் பிறவியிலேயே என்னோடு தொற்றி கொண்ட சோம்பலும் என்னுடைய வானொலி வேலைப்பளுவும் என்னை வலைப்பூ எழுத்தாளனாக வர முடியாமலேயே செய்திருந்தன. இன்று முதல் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிக் கிழித்து எழுத்துப் பணி செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
தமிழுலகம் & வலைப் பதிவுலகம் வரவேற்குமா அல்லது வேண்டாமப்பா என்று சொல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்
நல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai
-
வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத்
தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman
நன்னிலவே நீ நல்லை இ...
6 years ago
13 comments:
வணக்கம்- வாருங்கோ..
திரைப்படங்களில behind the scene எண்டு சினிமா தயாரிப்புகளை பார்க்கிறது சுவாரசியமா இருக்கும்.
அதை மாதிரி நீங்களும் வானொலியின் சுவாரசிய சம்பவங்களை எழுதலாமே..
அப்புறம் இந்த word verification ஐ தூக்கிடுங்க..
நன்றி கொழுவி .. உங்கள் விருப்பபடியே அதை (word verification) தூக்கிட்டேன்..
வாங்கோ வாங்கோ
கொழும்பு ஒலிவாங்கியை சிட்னி ஒலிவாங்கி வரவேற்கிறது ;)
நன்றி நன்றி.. தொடர்ந்து வாங்கோ, விமர்சனம் தாங்கோ
இலங்கைவலைப்பதிவர்களுடன் சிறந்ததோர் கலைஞர் இணைகின்றமையையிட்டு மகிழ்ச்சி !
http://mayunathan.blogspot.com/2007/10/blog-post_27.html சென்று மேலதிக தகவல்களைப்பெறலாம்
ஆஹா உங்கள் அருமையான வரவேற்புக் கண்டு மகிழ்ந்தோம்..
கலைஞன் என்பது உண்மை,சிறந்த என்பது ஓவர்..வலைப்பதிவில் நான் உங்கள் எல்லோருடனும் பார்க்கும் பொது நான் இன்னும் சிறுவனே..எனவே விமர்சனங்கள் மூலமாக மேலும் நான் என்னை மேம்படுத்தலாம்.
வணக்கம் லோஷன் வருக வருக என வரவேற்கின்றேன். என்னை ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுடன் பிரேம்நாத் சேரின் கிளாஸில் இருந்தவன். சில நாட்களாக வெற்றி எவ் எம்முடனும் இணைந்திருக்கின்றேன். உங்கள் பொடியள் நன்றாகச் செய்கிறார்கள். வலையிலும் உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்.
வணக்கம் லோஷன்,
உங்கள் வலைப்பதிவை 'இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி'யிலும் இணைத்துள்ளொம்.
வாழ்த்துகள்...!!
http://kurungkavi.yeanthiram.com/tamilblogs/
தங்கள் வரவு நல்வரவாகட்டும்.
காலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.
வாழ்த்துக்கள்.
வாங்க கலக்கலாம்....
வாழ்த்துக்கள்...
www.nallasudar.blogspot.com
வணக்கம்..வாருங்கள் :)
வணக்கம் லோஷன் அண்ணா வாருங்கள்..!
அன்றே சொல்ல நினைத்தை சோம்பல் காரணமாக காலம் தாழ்த்தி இன்று சொல்கின்றேன் : வணக்கம்..வாருங்கள். ;>)
Post a Comment