September 08, 2008

வெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk



எங்கள் வெற்றி ஆரம்பித்து ஏழு மாதங்களே ஆகின்ற இந்த கால கட்டத்தில் வெற்றியை இணையத்தில் ஏற்றி சர்வதேச நேயர்களும் கேட்க வைக்க வேண்டும் என்ற எங்கள் முயற்சி கை கூடி இருக்கிறது..



இணையத்தில் நாங்கள் உத்தியோகபூர்வமாக ஏற்ற முதலே சில நண்பர்கள் சர்வதேச நேயர்கள் பலரை எங்களுக்குப் பெற்று தந்திருந்தார்கள்.. 
எனினும் என்ன காரணமோ அந்த இணையத்தளம் செயலற்று போய்விட கொஞ்ச நாளாக நாம் எமது மேலிடத்தை தொடர்ந்து நச்சரித்து இணையத்தில் ஏற்றி விட்டோம்..  
இன்று காலையில் எனது நிகழ்ச்சியிலே அமெரிக்க நேயர் ஒருவர், ஆஸ்திரேலிய நேயர் ஒருவர் , மற்றும் இந்தியாவின் காஞ்சிபுரத்தை சேர்ந்த நேயர் ஆகியோரின் தொடர்புகள் கிடைத்தன.. நீண்ட காலம் விட்டுப் போய் இருந்த எனது வெளி நாட்டு நண்பர்கள் மற்றும் நேயர்களோடு தொடர்பு இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சி தான்..

என்னுடைய குரலை என்னுடைய வெளி நாட்டில் வாழும் உறவினர்களும் நண்பர்களும் கேட்பார்கள் என்ற மகிழ்ச்சியும் உள்ளது..  


சர்வதேசத்தில் எங்கள் நிகழ்ச்சிகளுக்கு தனி அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்..எனது வெற்றி குழுவினரின் தேடலும் கடும் முயற்சியும் நிச்சயமாக வெளிநாட்டு அன்பர்தளுக்கும் பிடிக்கும்..  


எம் நாட்டில் இருக்கின்ற பலமும்,அனுபவமும் வாய்ந்த வானொலிகளுடன் போட்டி போட்டு தனியான இடம் பிடிக்க முடிந்திருக்கிறது என்றால் இதுவும் எம்மால் முடியுமே.. அது மட்டுமன்றி எங்கள் செய்திகள் பக்கம் சாராமலும் பெரிதாக பயப்படாமலும் இருப்பது எமக்கு கூடுதல் பலம் என்றே நம்புகிறேன்..


6 comments:

Vathees Varunan said...

மிகவும் உண்மை லோஷன் அண்ணா தொடங்கி ஏழு மாதத்திலேயே அதுவும் பல வானொலிகள் ஒலித்துக்கொண்டு இருக்கும் போது ஒரு வானொலி இவ்வளவு நேயர்களை கவர்ந்திருப்பது மிகவும் வியப்பான விடையம்

Anonymous said...

People should read this.

SASee said...

Hi Loshan அண்ணா,
உண்மையானதொரு விடயம்.
வெளிநாட்டு நேயர்களை இணையத்தினூடக கவர்ந்திலுக்கும் வெற்றி FM. உள்நாட்டு நேயர்களையும்
வெகுவேகமாய் கவர்ந்திலுப்பதாக தெறியவருகிறது. அண்ணா இப்படியொரு விடயமும் உள்ளது,
எமது நாட்டிலும் வேலைக்கு செல்லும் சிலரால் வானொலிகேட்பதென்பது எட்டாக்கனியாகி விடுகின்னறது. அப்படியானவர்களில் கணினியோடு வேலைசெய்பவர்களுக்கு இணையத்தினூடாக வெற்றி FM ஐ கேட்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உள்ளது. நானும் அப்படி கேட்டவாரே இக்கருத்துரையினை தருகிறேன்.

ம.தி.சுதா said...

வெற்றிக்கு என்றுமே வெற்றிதான்

vanithasan said...

வணக்கம் லோஷன் அண்ணா, முதலில் வெற்றிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .
ஆஜிரம் ஆஜிரம் பிறந்தநாள் காண மனமார வாழ்த்துகிறேன்.(உங்கள் குரல் ஒலிக்கும் வானொலிக்கு மாறும் நேயர் நான்)
தற்போது உங்கள் வானொலி கேட்க முடியல அண்ணா.
கஷ்டமா இருக்கு. நன்றிங்க.

vanithasan said...

வணக்கம் லோஷன் அண்ணா, முதலில் வெற்றிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .
ஆஜிரம் ஆஜிரம் பிறந்தநாள் காண மனமார வாழ்த்துகிறேன்.(உங்கள் குரல் ஒலிக்கும் வானொலிக்கு மாறும் நேயர் நான்)
தற்போது உங்கள் வானொலி கேட்க முடியல அண்ணா.
கஷ்டமா இருக்கு. நன்றிங்க.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner