December 13, 2008

சனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்

சனிக்கிழமை.. இன்று தான் நான் ஓரளவு நிம்மதியா வீட்டில் இருந்து மதியச் சாப்பாட்டை ருசி பார்த்து சுடச் சுட சாப்பிடுகிற நாள்.. ஞாயிற்றுக் கிழமைகளில் கூட என்னால் அது முடியாது..சரி நிம்மதியாக சாப்பிடும் நாளில் சாப்பாட்டு ஜோக்ஸ் இரண்டை அவிழ்த்து விடலாமே என்று யோசித்தேன்.. (வழமையாகவே ஒவ்வொரு நாளும் காலையில் ஜோக் என்று அறுவைகளை அவிழ்த்து விடுபவன் இங்கேயும் தொடங்கிட்டாம்பா என்று சில முணுமுணுப்புக்கள் கேட்டாலும் இன்று நான் சொல்லாமல் விடுவதாய் இல்லை..) 

       *******
நானும், நம்ம நண்பர் கஞ்சிபாயும் (இவர் யாரென்று அறியாதோருக்கு இவர் பற்றிய விரிவான அறிமுகம் வெகுவிரைவில் பிரம்மாண்டமாகக் காத்திருக்கிறது என்பதை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்) சாப்பிடுவதற்காக ஒரு உணவகத்துக்குப் போயிருந்தோம்..

ஒரு நாளும் போயிராத உணவகம்..உணவு சொல்லி வழமையாக எல்லா உணவகங்களிலும் நடப்பது போலவே நீண்டநேரக் காத்திருப்புக்குப் பின்னர் உணவு வந்தது..  (பசியோடு காத்திருந்தால் நிமிஷமும் வருஷமாகும்- வைரமுத்து மன்னிப்பாராக) அப்படியானதொரு கருமமான உணவை இதற்கு முன் நான் சாப்பிட்டதே இல்லை..

பசியோடு இருந்ததால் முடிந்த வரை விழுங்கியும்,விழுங்காமலும் கொட்டித் தீர்த்துவிட்டு எழுந்தோம்.. சபை (அல்லது கடை) நாகரிகம் கருதி உணவின் ருசி பற்றி எதுவும் சொல்லாமலே போக வேண்டும் என்று நான் எண்ணினாலும் நம்ம நண்பர் கஞ்சி பாய் விடுவதாக இல்லை. 

எதோ சொல்லப் போபவர் போலவே அவரது முகத் தோற்றம் உணர்த்திற்று. நான் கஞ்சி பாயிடம் மெல்லிய குரலில் "இனி மேலும் இங்கே நாங்கள் வரப்போவதில்லை.. பிறகேனைய்யா வீண் வம்பு? நீர் என்னைக் கூட்டிக் கொண்டு வந்த பாவத்துக்கு நானே பில்லைக் கட்டுறேன்.. சும்மா சண்டை பிடித்து சீன் ஆக்க வேண்டாம்"என்று சொல்லிப் பார்த்தேன்.. ம்கூம்.. மனிதர் கேட்பதை இல்லை.. 

நான் பில் கட்டும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு, காசாளர்(அவரே தான் கடையின் முதலாளியும் கூட) கிட்டே போய் "உங்க உணவகத்தின் சமையல் மாஸ்டரைக் கொஞ்சம் பார்க்கணுமே" என்றார் நம்ம நண்பர். சரிடா இன்று எதோ நடக்கப் போகிறது என்று நானும் வருவது வரட்டும் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்..

ஆடி அசைந்து வந்த சமையல் மாஸ்டர் கிட்ட வரும்வரை பார்த்துக் கொண்டிருந்தார் நாம்ம கஞ்சிபாய். கடை முதலாளி,நான்,அங்கிருந்த ஒரு சிலர் (அந்த உணவகத்தின் திறத்துக்குப் பலபேரை எதிர்பார்க்க முடியுமா?) எல்லாரும் என்ன நடக்கப் போகுது,நம் நண்பர் என்ன சொல்லப் போகிறார் என்று பார்த்திட்டே இருக்கிறோம்..

கஞ்சிபாய் கிட்டப் போனார்.. சமையல் மாஸ்டரின் கைகளைப் பிடித்தார்.. 
"வாழ்த்துக்கள்.. நீங்கள் கொடுத்து வைத்தவர்.. உங்க சமையலின் திறத்துக்கு இவ்வளவு காலம் நீங்கள் இங்கே வேலை செய்யக் குடுத்து வச்சிருக்கணும் " என்று முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சொல்லிட்டு நம்மை ஒரு பெருமிதத்தோடு பார்த்தார் கஞ்சிபாய்..  

வாழ்க்கையில் அந்த சமையல்காரர் இப்படி ஒரு வாழ்த்து வாங்கியிருப்பாரா தெரியல.. 
கஞ்சி பாயும் அதுக்குப் பிறகு எங்கேயும் எந்த ஒரு சாப்பாட்டுக் கடையைப் பற்றியும் புகழ்ந்து சொல்வதில்லை.. (அடுத்த முறை பில்லை தன்னையே கட்ட சொல்லி விடுவேனோ என்றோ தெரியல்ல) 

---------------------###################---------------------

  ஆனால் விதி யாரை விட்டது.. இன்னொரு முறை.. இதே மாதிரி ஒரு சம்பவம்.. 

அதே மாதிரி ஒரு சாப்பாட்டுக் கடை.. (உணவகம் என்று சொன்னாலே அந்த சொல்லுக்குக் கேவலம்) முன்பு சாப்பிட்டதை விட மோசமான உணவு.. வாயிலே வைக்க முடியாத ருசி;மூக்கையே மரணிக்க செய்கிற மாதிரி கெட்ட நாற்றம்..

எவ்வளவு தான் பசித்தாலும் இதை சாப்பிட முடியாது என்று நானும்,கஞ்சிபாயும் தீர்மானித்து விட்டோம்.. 
இம்முறை கஞ்சிபாய் விட்டாலும் நான் விடுவதாய் இல்லை என்று முடிவு பண்ணி, சமையல்காரரைக் கூப்பிட்டனுப்பினேன்..

வந்தார்.. எங்கள் நாக்கை சமாதி கட்டுகிற மாதிரி உணவு சமைத்த அவரை நாக்கை பிடுங்குகிற மாதிரி ஏதாவது கேட்கலாம்னு நான் வாய் திறக்க முதல் வழமை போலவே கஞ்சிபாய் முந்திக் கொண்டார்..

சமையல்காரர் வந்தவுடன் எழும்பிய கஞ்சிபாய்,சமையல்காரரின் கைகளை அப்படியே பற்றிப்பிடித்துக் குலுக்கி "என்ன அதிசயமைய்யா.. உங்களுக்கு அப்படியே என் மனைவியின் சமையல் பக்குவம் இருக்குது"என்று சொன்னார் பாருங்கள்.. 

கஞ்சிபாயின் மனைவி அங்கே இருந்திருந்தால் கஞ்சிபாய்க்கு மரணம்; அல்லது திருமதி.கஞ்சிபாய் தூக்கிலே தொங்கி இருப்பார்; அல்லது அவர் பற்றித் தெரிந்திருந்தால் சமையல்காரர் நாக்கைப் பிடுங்கிக்கொண்டு இறந்து போயிருப்பார்..

---------------------------------###################-----------------------

யாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று.. ;)
(நமக்கு இரண்டுமே நல்லாத்தான் கிடைக்குதுங்கோ.. - 
யாராவது போட்டுக் குடுத்து இரண்டையுமே இல்லாமப் பண்ணிடாதேங்கோ..;) )

20 comments:

கார்க்கிபவா said...

சிரித்தேன். ஆனா இப்போ பசிக்குதே!!!!!

kuma36 said...

நீங்கள் சென்ற உணவகத்தின் பெயர் தெரிந்தால் அந்த பாக்கத்தை தவிர்க்கலாம்.

///யாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று..///

ம்ம்ம்ம்ம்ம்

எனக்கு எப்படி அமையுமோ!!!!!!!!!!

Sinthu said...

Anna
I'm not bored......
I can hear கஞ்சிபாய்'s joke anytime anywhere so u can say a lot everyday...............
good joke.
Thxs

தமிழ் மதுரம் said...

யாரோ சொன்னார்களாம் சாப்பாடும் சம்சாரமும் தலைவிதிப்படி என்று.. ;)
(நமக்கு இரண்டுமே நல்லாத்தான் கிடைக்குதுங்கோ.. -
யாராவது போட்டுக் குடுத்து இரண்டையுமே இல்லாமப் பண்ணிடாதேங்கோ..;) )


Haaa......Ha.........Ha........... this is so funny.

சி தயாளன் said...

//சிரித்தேன். ஆனா இப்போ பசிக்குதே!!!!!//

அய்யோ அய்யோ...:-)

வந்தியத்தேவன் said...

வெள்ளவத்தையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றுக்கு திறப்பு விழா நடந்து அடுத்த நாள் சென்றிருந்தேன் ஒரு மணி நேரம் காத்திருந்தேன் யாரும் கவனிக்கவில்லை எழுந்துவந்துவிட்டேன். சில உணவகங்களில் கவனிக்கவே மாட்டார்கள்.

Anonymous said...

லோசன் அண்ணா அந்த கஞ்சி பாய் யாரண்ணா? என் நண்பன் சுதனும் இவரய் பற்றிதான் பேசுவான்..

நான் தம்பிலுவில் திசாந்தன்(இப்போ கட்டார்)

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆகா...எங்கட கஞ்சிபாய் இங்கயும் வந்துவிட்டாரா...இனிக் கலக்கல்தான்... கலக்குங்கோ லோஷன் அண்ணா...

மதுவதனன் மௌ.

அத்திரி said...

//"என்ன அதிசயமைய்யா.. உங்களுக்கு அப்படியே என் மனைவியின் சமையல் பக்குவம் இருக்குது"என்று சொன்னார் பாருங்கள்.. //


உன்மைய சொல்லுங்க இதச் சொன்னது நீங்கதானே????

Anonymous said...

யாழ்பாண கதைகளை அவிழ்த்து விட்ட உமக்கு சில Hotel- காமெடிகள் சமர்பணம்!!!!

http://in.youtube.com/watch?v=TkB-pTYRKxk

http://in.youtube.com/watch?v=oAzL2OWZ_lA

http://in.youtube.com/watch?v=LEAwwOI7t1s

http://in.youtube.com/watch?v=VffSdUMnl2A

http://in.youtube.com/watch?v=7J49VIUyX9g

http://in.youtube.com/watch?v=x9tVXkjjYpU

Anonymous said...

http://www.youtube.com/watch?v=tLFwLVKpCvQ
http://www.youtube.com/watch?v=70LNfoChRe4

ஆட்காட்டி said...

இதுக்கெல்லாம் பதிப்புரிமை கிடையாதா?

Anonymous said...

//இதுக்கெல்லாம் பதிப்புரிமை கிடையாதா?//

அண்ணை லோசனுக்காக இணையத்தில் தேடி ய போது கிடைத்தது எடுத்து போட்டேன்

ARV Loshan said...

நன்றி நன்றி நன்றி.. (வானொலிப் பாதிப்பு தான்.. )

கார்க்கி- அதை வாசித்துமா உங்களுக்குப் பசிக்குது?

கலை - ஆகா அந்தப் பக்கமே நான் இப்ப எட்டிப் பார்கிறதில்லையே.. ;)

ஆகா கலை இப்பவே யோசிக்க ஆரம்பிச்சாச்சா?
இதுக்குத் தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்
"தனித்திரு,பசித்திரு,விழித்திரு"

சிந்து, நன்றி.. கஞ்சிபாயிடம் சொல்கிறேன்..

கமல், ஹீ ஹீ.. இதெல்லாம் funny என்று அநியாயமா சிரிக்கிறீங்களே.. ;)

டொன் லீ.. ஏன்யா உங்கள்அதே பசியா?

வந்தி, இதெல்லாம் சாப்பாட்டுக் கடையில சகஜம் நண்பா.. வெள்ளவத்தையில ஒரு கடையில் சாப்பிட யாருமே இருக்க மாட்டார்கள்.. ஆனால் கடையில் பணி புரிகிற எல்லோருமே பிஸியாக இருப்பார்கள்.. விபரம் வேணுமெண்டால் நம்ம வெற்றி அறிவிப்பாளர் விமல்ட்ட கேளுங்கோ..

ARV Loshan said...

நன்றி திசாந்தன்.. அவர் யாரென்று தான் நிறையப் பேர் தேடுகினம்.. கொஞ்ச நாளில என் வலைப்பதிவுப் பக்கம் கூட்டிட்டு வாறன்.. ;)

நன்றி மது.மௌ .. :)

ஐயா அத்திரி.. போடப் பார்க்கிறீர் என் வாழ்வில கத்திரி..
நான் சொன்ன ரொம்பவும் மரியாதையா வேற யார் காதிலையும் கேட்காமல் சொல்லி இருப்பேன்.. ;)

நன்றி அட்டாக், என் மேல உண்மையிலேயே உங்களுக்கு அன்பு தான்.. நன்றி அண்ணே..
சிரித்தேன்..

ஆட்காட்டி.. எதுக்கய்யா காப்புரிமை? யாரைக் கேக்கிறாய் காப்புரிமை? ;)(சும்மா ஒரு உதார் தான்.. )

ஆட்காட்டி said...

கன காலத்துக்கு முதல்ல எங்கேயோ கேட்ட ஞாபக,,,,

வந்தியத்தேவன் said...

///வந்தி, இதெல்லாம் சாப்பாட்டுக் கடையில சகஜம் நண்பா.. வெள்ளவத்தையில ஒரு கடையில் சாப்பிட யாருமே இருக்க மாட்டார்கள்.. ஆனால் கடையில் பணி புரிகிற எல்லோருமே பிஸியாக இருப்பார்கள்.. விபரம் வேணுமெண்டால் நம்ம வெற்றி அறிவிப்பாளர் விமல்ட்ட கேளுங்கோ.//

அந்தக் கடையில் விமலை ஒருதடைவை கண்டேன் ஹிஹிஹி.

Anonymous said...

வாசித்தேன்............ மகிழ்த்தேன்.........
என்னது கணித பாட வகுப்பில் பிரேம்நாத் சொன்னது...
வெள்ளவத்தை ஜில் உள்ள பிரபல கடை ஒன்றில் (எல்லா கடைகிலும் தான்) பருப்பு சாம்பார் பழையது தான் mix பண்ணுவார்கள்.... எப்போது புதிய சாம்பார் வைப்பார்கள் என்றால்.. அவர்கள் name board மாற்றும் போதுதான் புதிய சாம்பார் வைப்பார்கள்........ Eg: hotel name ABC ஆக இருத்தால் NEW ABC ஆக மாறும் போது புதிய சாம்பார் வைப்பார்கள்..........

Anonymous said...

Surprised to know abt the shops in wellawatte.... I closed my eyes and imagined what i would have done if the food sux big time as you mentioned here.... Thnk god....

I've been to Colombo quite a few times. But, ended up eating at particular places only till a couple of yrs back.

Last time when i was there (2.5yrs ago), I had to do my work myself though the driver was there. He was scared to drive me out often as police was arresting ppl randomly... It was annoyed when he repeated about the prob in colombo. (who likes to listen to advices)

So, I thought of walking out & doing my work - myself. Just asked him to shut his mouth and not to let mom knows about me walking alone with my friend on Colombo roads..

Me and my friend (female) were so tired after shopping, so we went to rolex.

My friends were studying in moratuwa. so whenever they came to see me their friends asked them to take away some food from rolex. They also got us some noodles the previous day which was good. Both facts gave us the courage to go to the shop by ourselves.

The shop was ......argh..so dirty...(I have a habit of checking the kitchen area b4 dinning there.) But didnt have guts to check the kitchen after seeing the dinning place as i could imagine the condition of the kitchen already....


We also didnt know that the girls dont go to those shops. We didnt even bother to wait till the male friends come and get food for us. we just walked in...No words to express our stage tat day....

The worst thing was, all were staring at us. We just ordered some briyani and took away home.The food was quite ok again. but i still cant forget the condition of that shop and those guys (men especially) stare...

one day we ate without knowing how clean was that shop, second day we ate as we were so tired. but, NO guts to eat food from that shop again though the taste was ok.

We had no choice so ended up eating snacks till i left colombo... if i wanna go to far - other places for food then i have to listen to the driver's complaints about the probs in colombo. its seemed more tiring.

i was wondering how these guys who stay alone without their families manage in colombo. especially those guys in wellawatte...

many shops cheat by selling tasteless sweets as best indian sweets...

Only the shop at the corner - on Royal hospital road had better sweets... i had to spent few thousands to find the place. I got fed up at one stage coz those tamil shops cheat you more if they know you are tamil.


Asia Emporium... Another disaster. My unlce was doing import business... he was importing salwars from india and his friend was importing sarees from india. we went to buy some wedding saree form the uncle in petta.... we know abt the quality as we have ppl in our family doing textile business.. we got the saree for 10,500Rs..

We took the saree to asia emporium and asked them to show a similar one as we needed for bride's maid... they looked at our saree and said it was a nice one...this n tat..then, they showed the exactly the same saree and said it was 28,000 Rs but they will give us for 23,000 Rs as we were their regular costumers... My foot...

When we showed the bill of the saree we bought, they twisted the story as the saree we got was fake. I called the manager and asked him how could they sell for that price. i was annoyed with the sales person who told me that the saree was a fake one. the boss was also there.

They apologized for the sales person's statement and explained that they have to sell for that price to pay the rental for the shop..

Asia emporium was the only shopped opened very late night the day we went to colombo the first time. we needed lot stuff so we shopped and the materials seemed quite ok. we kept buying there even after we knew others shops got cheaper prices as it was the closest and had lot choices.

After the saree incident, we never step into that shop..

Nithiyakalyani shop is another shop... Have to write lot if I am gonna write about it.

You need profit / money in your business. But மற்றவர்களுடைய வயிற்றில் எப்படி அடிச்சு அல்ல.

Anonymous said...

பசிக்குதே....

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner