February 06, 2009

ஸ்ரீலங்காவுக்கு அவமானம்!

எல்லாப் பக்கத்தினாலும் ஸ்ரீலங்காவுக்கு அவமானம்! நான் அரசியல் எதுவும் பேசவில்லை!

வெறுமனே கிரிக்கெட்; கிரிக்கெட்; கிரிக்கெட் மட்டும்தான்!

விளையாட்டில் வெற்றி,தோல்வி மிக சகஜமே! அதுவும் கிரிக்கெட்டில் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றி & தோல்வி மாறி மாறி வரும்! எனினும் தோல்வியடைவதிலும் ஒருமுறை இருக்கிறதில்லையா?

சொந்த மண்ணில் சிங்கங்கள் என்று கருதப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இந்திய அணியிடம் தொடர்ச்சியாகப் பெற்ற நான்கு தோல்விகளுமே படுமோசமானவை! 2வது ஒருநாள் சர்வதேச போட்டியைத் தவிர மற்றைய மூன்றிலுமே பெயரெடுத்தாலும் இலங்கை அணி போராடவே இல்லை. ஒரு சில வீரர்களின் ஒரு சில வேளை ஆட்டத்திறமைகளின் இலங்கை அணிக்கு வெற்றியைத் தேடித் தருவதாக இல்லை!

பேசாமல் காமினி சில்வாவையே எல்லாப் போட்டிகளிலும் நடுவராகப் போட்டிருக்கலாம்!

முத்தையா முரளீதரன் நேற்றைய தினம் பெற்றுக்கொண்ட உலக சாதனையை விட இலங்கை அணி மகிழ்ச்சியடையவோ,பெருமையடையவோ எதுவுமே இந்த தொடரிலே இல்லை!

முரளியின் கடும் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசு இந்த உலகசாதனை.. துடுப்பாட்டத்தில் சச்சின் எவ்வாறோ,அதே போல பந்துவீச்சில் முரளியின் சாதனைகளை முறியடிக்க இனியொருவர் பிறந்தவுடன் பந்தைக் கையில் எடுத்தாலே உண்டு..

மற்றுமொரு உலக சாதனை - முரளி

மென்டிஸ் என்ற மந்திரவாதியை அடித்து அணியை விட்டே துரத்திவிட்டனர் இந்தியவீரர்கள்! முரளீதரன் என்ற மாயாஜாலவித்தைக்காரரும் இந்திய மகுடிக்காரரின் முன்னால் பல்லுப் பிடுங்கிய பாம்பாக!

குறுகிய காலத்தில் பெரும் புகழ் பெற்று,ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விரைவான ஐம்பது விக்கெட்டுக்கள் என்ற சாதனையையும் பெற்ற மென்டிசை அணியில் இருந்து நீக்கியதன் மூலம் இலங்கைத் தெரிவாளர்கள் அவரது மன நம்பிக்கையையும் குறைத்து,அவர் பற்றி கிரிக்கெட் உலகில் இருந்த மதிப்பையும் குறைத்து விட்டார்கள்.

தொடர் ஆரம்பிக்க முன்னர் இலங்கையின் சுழல்பந்து மன்னர்கள் பற்றி இருந்த பிரமிப்பு முழுவதுமே மறைந்து இப்போது இந்தியாவின் சாதாரண சுழல்பந்து வீச்சாளர்களும் விசுவரூபம் எடுத்து வெற்றிகளைப் பெற்றுள்ளார்கள்.

முன்பொரு காலத்தில் ஜெயசூரிய,டீ சில்வாவினால் துவைத்து எடுக்கப்பட்டு, பின்னர் முரளி,வாசினாலும்,அண்மையில் மென்டிசினாலும் உருட்டி எடுக்கப்பட்ட இந்தியா தனது தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு இப்போது உலகின் தலை சிறந்த ஒரு நாள் அணியாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை.ஞாயிறு இடம்பெறும் இறுதிப் போட்டியிலும் இலங்கை அணியைத் துவம்சம் செய்தால் இந்திய முதலாம் இடத்தை நெருங்கிவிடும். இன்று இடம் பெரும் போட்டியில் ஆஸ்திரேலியா நியூ சீலாந்து அணியிடம் தோற்றால் இந்தியாவின் இரண்டாம் இடம் உறுதி.இலங்கை அணி இப்போதிருக்கும் மன நிலையில் 5-0 என்ற தோல்வி உறுதி போலத் தான் தெரிகிறது.

புதிய உத்வேகத்துடன் இந்தியா

இலங்கை(ஸ்ரீ லங்கா) கிரிக்கெட்டில் பெற்ற தோல்விகளில் இருந்து மட்டுமல்ல.. வேறெந்த விடயங்களில் இருந்தும் பாடங்கள் கற்பதாக இல்லை..எல்லா விடயங்களிலும் மற்ற நாடுகளை விடப் பின் தங்கி இருப்பது எங்களுக்குப் பெருமையான ஒரு விஷயமாக மாறிவிட்டது. எப்போ தான் திருந்துவோமோ?

இதனிடையே தோனியின் தலைமையிலே இந்தியா நேற்று மற்றுமொரு புதிய சாதனை நிகழ்த்தியது.. தொடர்ச்சியான ஒன்பதாவது ஒருநாள் வெற்றியை பதிவு செய்தது.இதுவரை எட்டு போட்டிகளை வென்றதே இந்தியாவின் சாதனை..


தோனி - தலைவன் இருக்கிறான்

அதுபோல் இலங்கை மண்ணில் பெறப்பட்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கையை நேற்று கம்பீர் நிகழ்த்தினார்.சச்சினின் ஓய்வினால் கிடைத்த வாய்ப்பை கம்பீர் சரியாகப் பயன்படுத்தினார்.. (விளையாடுற நேரம் எல்லாம் LBW குடுக்கிறாங்கன்னு சச்சினை Dressing roomலையே இருத்தீட்டாங்களோ??)

கம்பீர் - கம்பீர ஆட்டம்
சரி விளையாட்டுக்களில் நாங்கள் பின் தங்கி விட்டோம்.. மீண்டும் பயிற்சிகளின் பின்னர் முன்னேறலாம் என்று வைத்துக் கொள்வோமே.. இலங்கையரின் பழக்கவழக்கம் எங்கே போனது? இதுவரை நடக்காத மாதிரி காட்டுமிராண்டிகளாக இலங்கை ரசிகர்கள் நடந்துள்ளார்கள்..


மீண்டும் இந்திய அணி மீது தாக்குதல்

கொழும்பில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் மூவர் போத்தல்,மற்றும் இதர பொருட்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.காயம் ஏற்படாவிட்டாலும்,ஓரிருவரே இவ்வாறு நடந்து கொண்டாலும் இதுவரை இலங்கையில் இவ்வாறு நடைபெறாத ஒரு கேவலமான நிகழ்வு இடம்பெற்றிருப்பது சில கேள்விகளை எழுப்பி இருக்கிறது..
தொடர் தோல்விகளால் இலங்கை ரசிகர்கள் விரக்தி அடைந்து விட்டனரா?
முன்பிருந்த இந்திய விரோதம் மீண்டும் தொடங்கி இருக்கிறதா?
இல்லை இது வெறும் வேடிக்கைக்கா?

எனினும் கெட்ட பெயர் எடுத்துவிட்ட (இதிலுமா?) இலங்கை ரசிகர்கள் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள்..

இலங்கைக்கு எல்லா விதத்திலும் இந்தியாவே துணை..எல்லா விடயத்திலும்.(கவனித்துக் கொள்ளுங்கள் இலங்கைக்கு) குண்டு வெடிப்பு அச்சம் என்று எல்லா நாடுகளும் வராமல் இருந்த போதும் வந்த ஒரே அணி இந்தியா.. அந்த வீரர்களையும் வெறுப்படையச் செய்வதன் மூலம் தனிமைப்படப் போகிறார்களா?

தோல்வியடைந்த அவமானத்தை விட ரசிகர்களின் மோசமான நடத்தையே இலங்கைக்கு மிகப்பெரும் கேவலத்தை தந்துள்ளது.. எல்லாரையும் அடித்து விரட்டிவிட்டு கிரிக்கட்டிலும் வெல்லலாம் என்று நினைத்தார்களோ?

ஞாயிறு இவ்வாறு ஒரு கவலைக்குரிய சம்பவம் இடம்பெறாது என்று கிரிக்கெட் நிர்வாகிகள் உறுதியளித்துள்ளார்கள்.. பார்க்கலாம் இந்த உறுதியை ஸ்ரீ லங்காவின் ரசிகப் பெருந்தகைகள் காப்பாற்றுவார்களா? இலங்கை அணி இந்தப்போட்டியிலாவது வெல்லுமா என்பதை விட மிக முக்கிய கேள்வி இதுதான்..

38 comments:

சி தயாளன் said...

போட்டு பின்னி பெடலெடுக்கிறீங்க...பார்த்து ...கவனம் :-)

//(விளையாடுற நேரம் எல்லாம் LBW குடுக்கிறாங்கன்னு சச்சினை Dressing roomலையே இருத்தீட்டாங்களோ??
//

:-)))

Gajen said...

அண்ணா, நான் அண்டேக்கு match நடக்கேக்க எழுதலாம் எண்டு இருந்தனான்.எங்கட ரசிகர்களுக்கு திடீரெண்டு எங்கிருந்து உந்த கோவம்?எல்லாருக்கும் அடிக்கிறம், இந்தா நீயும் வாங்கிக்கொள் என்ட மனப்பான்மையோ?

Gajen said...

தர்மசேனவையும் பற்றி கொஞ்சம்..........????

Invólucro said...

Good Blog!!!
Involucro

நிராதன் said...

//மென்டிஸ் என்ற மந்திரவாதியை அடித்து அணியை விட்டே துரத்திவிட்டனர்//

மெண்டிஸின் மந்திரம் இனி பலிக்காது அண்ணே...
இலங்கைக்கு இப்போ பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறை. மேலதிக விபரங்களுக்கு.....
http://blast2005.blogspot.com

இனி பேசாம கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுடன் விளையாடினால் தான் வெல்ல முடியும்.

Anonymous said...

இலங்கை அணி பழைய இந்திய அணி நிலைமைக்கு செல்வதை கடந்த ஒரு வருடமாக அவதானித்திருக்கிறேன்.. முழு அணி என்றில்லாமல் நட்சத்திரங்கள் சிலரின் சேர்கை என்றாகிவிட்டது.. பல நட்சத்திரங்கள் ஏமாற்றமளித்தாலும் விரைவில் மீளுவார்கள் என நம்புகிறேன்.. அதேவேளை முழு அணியாக மீளாதவரை ..

ers said...

இலங்கையில் இவ்வாறு நடைபெறாத ஒரு கேவலமான நிகழ்வு இடம்பெற்றிருப்பது சில கேள்விகளை எழுப்பி இருக்கிறது..

காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சிங்கள ஓநாய்கள் தோற்ற வெறியில் கடிக்க தானே செய்யும்? சொரணை கெட்ட இந்திய அணி இந்த நேரத்தில் எதற்காக விளையாட போய் சிங்கள நாய்களிடம் வாங்கி கட்ட வேண்டும்?

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு..
ஊர்மேல போற மாரியாத்தா... எம்மேல வந்து ஏறாத்தா...

அவனவன் வெறிப்புடிச்சுப்போய் தமிழனை கொன்னுக்கிட்டு இருக்கான். இந்த நேரத்தில வேலியில போற ஓணானை வேட்டி(?) இல்லை பேண்டினுள் போட்டுக்கொள்ளுமா இந்திய அணி...

இங்கே செய்தார்கள்... அதான் இது நடந்துச்சு.. லோசன் முன்னவே நான் சொன்னேன் அல்லவா... எங்க பாவம் சும்மா விடாது... இலங்கை அணி சுக்குநூறாக போகிறதென்று... நடந்துடுச்சா?

Anonymous said...

இத் தோல்விகளை இன்னுமொரு கண்ணோட்டத்தில் பாருங்கள்..

எயார்டேல் வந்ததும் டயலொக் இலங்கை அணியை sponsor செய்தது.. பாகிஸ்தானில் வெற்றிபெற்றபின்(தான்) இலங்கை சிங்கங்கள் என்று விளம்பர படுத்தியது.. இந்தியாவுடன் வென்றிருந்தால் "இந்தியாவை வென்றுவிட்டோம்" என்று இரட்டை அர்த்தத்தில் விளம்பரப்படுத்த நினைத்திருக்க கூடும்.. ஆனால்..

நிராதன் said...

இர்ஷாத் அண்ணே சொன்னது....
////இலங்கை அணி பழைய இந்திய அணி நிலைமைக்கு செல்வதை கடந்த ஒரு வருடமாக அவதானித்திருக்கிறேன்.. முழு அணி என்றில்லாமல் நட்சத்திரங்கள் சிலரின் சேர்கை என்றாகிவிட்டது.///

சங்கக்காரா மட்டுமே எல்லா ஆட்டங்களிலும் நன்றாக விளையாடுகிறார்.
டில்ஷான் சும்மா துடுப்பை சுழற்றுகிறாரே தவிர வேறு ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.
ஜெயசூரியா தம்புள்ளவில் மட்டும் தான் அடிப்பேன் என்று சபதம் செய்தாறோ தெரியவில்லை. பிறகு ஒன்றையும் காணோம்.

Sinthu said...

முடிந்தால் முயலட்டும் முடிந்தால் முயலட்டும் அதைத் தவிர வேறு என்ன சொல்ல.. அதைத் தவிர வேறு என்ன சொல்ல..

Prapa said...

எல்லாமே சரியான விஷயங்கள் தான் ...... ஆனா எங்க "ஏரியா" வில அந்த "நாணயத " (toss coin) தான் தேடுறாங்க லோஸ்... அதுவும் இந்தியா பக்கமாமே !

Anonymous said...

"இலங்கைக்கு எல்லா விதத்திலும் இந்தியாவே துணை..எல்லா விடயத்திலும்.(கவனித்துக் கொள்ளுங்கள் இலங்கைக்கு)"


எதையோ கொடுத்து அடியையும் வாங்கும் கதை ஆகி விட்டது இந்தியாவுக்கு

Anonymous said...

'இந்தி'யா.. 'இந்தி'யா... சே! இந்த பெயரை கேட்டாலே எரிச்சலாக இருக்கு! தமிழீழ கிரிகெட் அணி 'இந்தி'யாவோடு விளையாடும் போது தமிழக தமிழர் அனைவரும் தமிழீழ அணிக்கே சப்போட் செய்யவேண்டும் ..செய்வோம்!

எட்வின் said...

இலங்கை அணி மோசமாக ஆடியது என்று கூறுவதை விட; இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடியது என கூறலாம். இலங்கை வீரர்கள் முடிந்த மட்டும் ஈடு கொடுத்தே ஆடினார்கள். அதோடு ஆடுதளம் (Pitch) இந்த தொடரில் சுழற்பந்திற்கு சாதகமில்லாமல் போனதும் இலங்கைக்கு அடி. ஒரு போட்டியைத் தவிர மற்ற 3 ஆட்டங்களிலும் இந்திய அணி முதலாவது மட்டை வீசியே வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது ஆட்டத்தில் இந்தியா இரண்டாவது மட்டை வீசுமென்றால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும். ஆஸ்திரேலியா மீண்டும் தோல்வியடைந்து இந்தியாவிற்கு வழியை திறந்து விட்டிருக்கிறது.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//ஸ்ரீலங்காவுக்கு அவமானம்!//

கண்டிப்பா அவமானந்தேன்!

நெற்றிக்கண் said...

தீவிர கிரிக்கெட் ரசிகரான நானும், என்னை போல இங்கு தமிழகத்தில் இன்னும் சிலரும் (பலராக இருக்க வேண்டும் என்பதும் என் ஆவல்தான்) இந்த தொடரை புறக்கணித்து அதைப்பற்றி எள்ளளவும் சிந்திக்காமல் உள்ளோம்,
எனினும் நான் குற்றம் ஏதும் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை,
தமிழனின் நிலைகண்டு என்ன செய்வது என்று, என்றும்போல் சிந்திக்க மட்டுமே செய்கிறேன்...

Sugeevan said...

Now Srilanka's market is going down and some of the bad Behaviours of the fans of Srilanka it is getting more Damaged.They want to introduce some new faces to the world.That can be give some changes in Srilanka's Victory.

Anonymous said...

தமிழீழ கிரிகெட் அணி 'இந்தி'யாவோடு விளையாடும் போது தமிழக தமிழர் அனைவரும் தமிழீழ அணிக்கே சப்போட் செய்யவேண்டும் ..செய்வோம்!//

தனக்குதானே ஆப்பு வைத்து கொள்ள தமிழனை அடிச்சிக்க ஆளே கிடையாது!!!

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

Vathees Varunan said...

மிகவு சரியாக சொன்னீர்கள் அண்ணா

Anonymous said...

இலங்கையில் இருந்து கொண்டு பதிவு எழுதும் உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது.உங்களது அனுபவவும் உங்களை முழு நேர கிரிக்கெட் பதிவு போடுபவராக மாற்றிவிட்டது போல உள்ளது.
என்றாலும் எனக்கு என்னவோ ரோம் பற்றி எரியும் பொழுது பிடில் வாசித்த நீரோ மன்னனின் நினைவு வருகிறது.
பந்துகள் பற்றி நீங்கள் எழுதினால் எனக்கு குண்டுகளின் நினைவு வருகிறது.
விக்கெட் பற்றி நீங்கள் எழுதினால் எனக்கு செல்களின் நினைவு வருகிறது.
என்னவோ ஆதங்கத்தில் எழுதுகிறேன். தவறு என்றால் மன்னியுங்கள்.

வேத்தியன் said...

அண்ணே 4வது போட்டி ரொம்ப பாதித்து விட்டது போல...
எனக்கும் தான்.. கடுப்பு தாங்க முடியாம தான் இந்தப் பதிவு..
களத்தடுப்பும் மோசம்...

http://jsprasu.blogspot.com/2009/02/blog-post_05.html

Subankan said...

முதல்ல toss ஐ ஆவது வெல்ல சொலுங்க. ரொம்ப பேர் toss வெல்லாதது தான் காரணம் எண்டு சொல்லித் திரியுறாங்க

Agent - Zer08 said...
This comment has been removed by the author.
*இயற்கை ராஜி* said...

:-))

Mathu said...

Yeah what to do, நீங்க சொன்னது ரொம்ப சரி....வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே...அதுவும் கிரிக்கெட்டில் எப்ப என்ன நடக்கும் என்று தெரியாது..
By the way, why did they kick out Mendis? :(

கார்த்தி said...

நல்லா தோக்கட்டும் எல்லாத்திலேயும்!!!!!

Anonymous said...

//முன்பொரு காலத்தில் ஜெயசூரிய,டீ சில்வாவினால் துவைத்து எடுக்கப்பட்டு, பின்னர் முரளி,வாசினாலும்,அண்மையில் மென்டிசினாலும் உருட்டி எடுக்கப்பட்ட இந்தியா//

இது எப்போ நடந்தது?. எனக்கு தெரிந்து ஜெயசூரியா தவிர வேறு யாரும் அப்படி ஆடியதாக் ஞாபகம் இல்லை.

பில்டபுக்கு ஒரு அளவே இல்லை. போன வருடம் கூட இலங்கைலேயே வைச்சுதான அடிச்சோம்.

Anonymous said...

//தர்மசேனவையும்//

இவன் எப்போதுமே மூஞ்சியை வெடச்சமாதிரியே வைத்திருப்பான். இவனையெல்லாம் யாருயா நடுவராக்கினது. பரவாயில்லை இப்போ கொஞ்சம் சதை போட்டிருக்கான். இவனைமாதிரியே இருக்கும், இந்த உப்பு சந்தானாவை எங்கையா கானோம்.

டிபிக்கல் ஸ்ரீலங்கன் மூஞ்சி.

ARV Loshan said...

’டொன்’ லீ said...
போட்டு பின்னி பெடலெடுக்கிறீங்க...பார்த்து ...கவனம் :-)//
நன்றி.. :) கிரிக்கெட்டைப் பற்றி தானே.. ஹீ ஹீ

தியாகி said...
அண்ணா, நான் அண்டேக்கு match நடக்கேக்க எழுதலாம் எண்டு இருந்தனான்.எங்கட ரசிகர்களுக்கு திடீரெண்டு எங்கிருந்து உந்த கோவம்?எல்லாருக்கும் அடிக்கிறம், இந்தா நீயும் வாங்கிக்கொள் என்ட மனப்பான்மையோ?//
அது தான் எனக்கும் பிடிபடல.. அதுசரி வன்முறை செய்ய எம்மவர்களுக்கு சொல்லியா தரனும்.. கிரிக்கட்ல வன்முறை தான் நாங்க கொஞ்சம் லேட்.


தியாகி said...
தர்மசேனவையும் பற்றி கொஞ்சம்..........????//
தர்மசேன??? ம்ம்ம் சொல்ல வேணும்.. கொஞ்சம் தகவல் சேர்த்து எழுதிறேன்.


Invólucro said...
Good Blog!!!
Involucro//

Thanx bro.. hope u have said about my design. ;)

நிராதன் said...
மெண்டிஸின் மந்திரம் இனி பலிக்காது அண்ணே...//
இல்லை சகோதரா.. ஒரு சிறந்த பந்துவீச்சாளரை ஒரே தொடரில் இல்லாமல் பண்ணிவிடவும் முடியாது;மோசமான ஒரு பந்துவீச்சாளரை ஒரே தொடரில் நல்ல ஒரு பந்துவீச்சாளராகக் காட்டவும் முடியாது..

இலங்கைக்கு இப்போ பந்து வீச்சாளர்கள் பற்றாக்குறை. மேலதிக விபரங்களுக்கு.....
http://blast2005.blogspot.com//
உலகின் மிகச் சிறந்த ஒரு நாள் பந்து வீச்சாளர குலசேகர அணியில் இருப்பதை மறந்து விட்டீர்களா?
உங்கள் தளமும் வந்தேன்;பார்த்தேன்.. பின்னூட்டமும் இட்டுள்ளேன்.. பாருங்கள்.
இனி பேசாம கென்யா, சிம்பாப்வே போன்ற நாடுகளுடன் விளையாடினால் தான் வெல்ல முடியும்.//
இன்றைய போட்டி பார்த்துமா இப்படி சொல்லப் போகிறீர்கள்? இந்த தொடரில் நாணய சுழற்சியில் இலங்கை வென்ற ஒரே போட்டி இது மட்டும் தான் என்பதும் குறிப்பிடத் தக்கது..

இர்ஷாத் said...
இலங்கை அணி பழைய இந்திய அணி நிலைமைக்கு செல்வதை கடந்த ஒரு வருடமாக அவதானித்திருக்கிறேன்.. முழு அணி என்றில்லாமல் நட்சத்திரங்கள் சிலரின் சேர்கை என்றாகிவிட்டது.. பல நட்சத்திரங்கள் ஏமாற்றமளித்தாலும் விரைவில் மீளுவார்கள் என நம்புகிறேன்.. அதேவேளை முழு அணியாக மீளாதவரை ..//
ஆமாம்.. சிலர் சில நேரங்களில் பிரகாசித்தால் எல்லா நேரமும் வெற்றி பெற முடியாது..அதே வேளை சில நேரம் அதிர்ஷ்டமும் கை கொடுக்க வேண்டும்.(நாணய சுழற்சி & நடுவர்கள்)

tamil cinema said...
காட்டுமிராண்டித்தனம் நிறைந்த சிங்கள ஓநாய்கள் தோற்ற வெறியில் கடிக்க தானே செய்யும்? சொரணை கெட்ட இந்திய அணி இந்த நேரத்தில் எதற்காக விளையாட போய் சிங்கள நாய்களிடம் வாங்கி கட்ட வேண்டும்?

எங்க ஊர்ல ஒரு பழமொழி உண்டு..
ஊர்மேல போற மாரியாத்தா... எம்மேல வந்து ஏறாத்தா...

அவனவன் வெறிப்புடிச்சுப்போய் தமிழனை கொன்னுக்கிட்டு இருக்கான். இந்த நேரத்தில வேலியில போற ஓணானை வேட்டி(?) இல்லை பேண்டினுள் போட்டுக்கொள்ளுமா இந்திய அணி...

இங்கே செய்தார்கள்... அதான் இது நடந்துச்சு.. லோசன் முன்னவே நான் சொன்னேன் அல்லவா... எங்க பாவம் சும்மா விடாது... இலங்கை அணி சுக்குநூறாக போகிறதென்று... நடந்துடுச்சா?//
உங்கள் கொதிப்பும்,கோபமும் புரிகிறது.. ஆனால் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பார்க்கலாமே.. :)

என்ன கொடும சார் said...
இத் தோல்விகளை இன்னுமொரு கண்ணோட்டத்தில் பாருங்கள்..

எயார்டேல் வந்ததும் டயலொக் இலங்கை அணியை sponsor செய்தது.. பாகிஸ்தானில் வெற்றிபெற்றபின்(தான்) இலங்கை சிங்கங்கள் என்று விளம்பர படுத்தியது.. இந்தியாவுடன் வென்றிருந்தால் "இந்தியாவை வென்றுவிட்டோம்" என்று இரட்டை அர்த்தத்தில் விளம்பரப்படுத்த நினைத்திருக்க கூடும்.. ஆனால்..//
உங்கள் கண்ணோட்டத்திலேயே பார்த்தேன்.. ;) நல்லாத் தான் இருக்கு.. இனியும் டயலொக் இலங்கை அணிக்கு அனுசரணை வழங்க வருமா? ;)


நிராதன் said...
சங்கக்காரா மட்டுமே எல்லா ஆட்டங்களிலும் நன்றாக விளையாடுகிறார்.
டில்ஷான் சும்மா துடுப்பை சுழற்றுகிறாரே தவிர வேறு ஒன்றும் செய்வதாக தெரியவில்லை.
ஜெயசூரியா தம்புள்ளவில் மட்டும் தான் அடிப்பேன் என்று சபதம் செய்தாறோ தெரியவில்லை. பிறகு ஒன்றையும் காணோம்.//
இன்று டில்ஷான் பெற்றது 97.. அவரது ஸ்டைல் அப்படித் தானே.. சுழற்றுவது பட்டால் ஓட்டங்கள்.. இதே போன்ற விமர்சனங்கள் தான் ஸ்ரீக்காந்த்,சனத்,இன்சமாம் மீதும் சொல்லப்பட்டன.
சனத்தின் பாணியே அது தானே..
இந்தத் தொடர் மூலம் கண்டம்பி தன் இடத்தை உறுதிப் படுத்தி விட்டார்..

Sinthu said...
முடிந்தால் முயலட்டும் முடிந்தால் முயலட்டும் அதைத் தவிர வேறு என்ன சொல்ல.. அதைத் தவிர வேறு என்ன சொல்ல..//
இப்ப என்ன சொல்ல வாறீங்க?;)


பிரபா said...
எல்லாமே சரியான விஷயங்கள் தான் ...... ஆனா எங்க "ஏரியா" வில அந்த "நாணயத " (toss coin) தான் தேடுறாங்க லோஸ்... அதுவும் இந்தியா பக்கமாமே !//
ஆமாம் பிரபா, நாணய சுழற்சி பிரேமதாச மைதானத்தைப் பொறுத்தவரை வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறது.. தோனிக்கு நான்கிலும் வெற்றி.. நாணய சுழற்சியும்.. ஐந்தாவது இன்று மகேல நானே சுழற்சியையும் வென்றார்.. போட்டியையும்.. ;)

துஷா said...
எதையோ கொடுத்து அடியையும் வாங்கும் கதை ஆகி விட்டது இந்தியாவுக்கு//
அப்படி இந்தியா பற்றி சொல்லப் படாது.. இலங்கைக்கு இந்தியா,இந்தியாவுக்கு இலங்கை.. குடுத்து மாறுவது சகஜம் தானே.. கிரிக்கெட்டிலும் தான்..

attackpandiyan said...
'இந்தி'யா.. 'இந்தி'யா... சே! இந்த பெயரை கேட்டாலே எரிச்சலாக இருக்கு!//
செம அட்டாக் குடுத்திருக்கீங்க.. 'இந்தி'யா என்று இருந்தாலும் அங்கேயும் நீங்க எல்லாம் நிம்மதியா இருக்கீங்களே..
தமிழீழ கிரிகெட் அணி 'இந்தி'யாவோடு விளையாடும் போது தமிழக தமிழர் அனைவரும் தமிழீழ அணிக்கே சப்போட் செய்யவேண்டும் ..செய்வோம்!//
அண்ணே அந்தக் காலம் வரும் என்ற நம்பிக்கை இப்ப ரொம்பவே குறைஞ்சு போச்சண்ணே.. :(

ARV Loshan said...

Arnold Edwin said...
இலங்கை அணி மோசமாக ஆடியது என்று கூறுவதை விட; இந்திய அணி மிகச் சிறப்பாக ஆடியது என கூறலாம். இலங்கை வீரர்கள் முடிந்த மட்டும் ஈடு கொடுத்தே ஆடினார்கள். அதோடு ஆடுதளம் (Pitch) இந்த தொடரில் சுழற்பந்திற்கு சாதகமில்லாமல் போனதும் இலங்கைக்கு அடி. ஒரு போட்டியைத் தவிர மற்ற 3 ஆட்டங்களிலும் இந்திய அணி முதலாவது மட்டை வீசியே வெற்றி பெற்றுள்ளது. ஐந்தாவது ஆட்டத்தில் இந்தியா இரண்டாவது மட்டை வீசுமென்றால் ஆட்டம் சுவாரஸ்யமாக இருக்கும். ஆஸ்திரேலியா மீண்டும் தோல்வியடைந்து இந்தியாவிற்கு வழியை திறந்து விட்டிருக்கிறது.//
நீங்கள் சொல்வதும் மிகச் சரியே.. ஐந்தாவது போட்டியில் அப்படியே நடந்தது.. இந்திய அணியின் இந்தத் தோல்விக்கு காரணத்தை தேடிப் பார்த்தால்,இலங்கை அணியின் முன்னைய தோல்விகளுக்கான காரணங்களும் கிடைக்கலாம்.. ;)



ஜோதிபாரதி said...
//ஸ்ரீலங்காவுக்கு அவமானம்!//

கண்டிப்பா அவமானந்தேன்!
:)


நெற்றிக்கண் said...
தீவிர கிரிக்கெட் ரசிகரான நானும், என்னை போல இங்கு தமிழகத்தில் இன்னும் சிலரும் (பலராக இருக்க வேண்டும் என்பதும் என் ஆவல்தான்) இந்த தொடரை புறக்கணித்து அதைப்பற்றி எள்ளளவும் சிந்திக்காமல் உள்ளோம்,
எனினும் நான் குற்றம் ஏதும் இங்கு பதிவு செய்ய விரும்பவில்லை,
தமிழனின் நிலைகண்டு என்ன செய்வது என்று, என்றும்போல் சிந்திக்க மட்டுமே செய்கிறேன்...//
உங்கள் பார்வை அது.. தமிழன் நிலை கண்டு எல்லோருக்குமே வேதனை தான்.. அதற்காக அன்றாட நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருக்கிறோமா? இல்லை அந்த விஷயங்களைத் தான் முழுக்கப் புறக்கணிக்கிறோமா?
உணர்வுகள் ஒரு பக்கம்.. இலங்கையில் எங்கள் வாழ்க்கை இந்தப் பக்கமும்.
புரியும் என்று நம்புகிறேன்.


Sugeevan said...
Now Srilanka's market is going down and some of the bad Behaviours of the fans of Srilanka it is getting more Damaged.They want to introduce some new faces to the world.That can be give some changes in Srilanka's Victory.//
இன்றைய வெற்றியில் திருப்திப் பட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.


Anonymous said...
தமிழீழ கிரிகெட் அணி 'இந்தி'யாவோடு விளையாடும் போது தமிழக தமிழர் அனைவரும் தமிழீழ அணிக்கே சப்போட் செய்யவேண்டும் ..செய்வோம்!//
தனக்குதானே ஆப்பு வைத்து கொள்ள தமிழனை அடிச்சிக்க ஆளே கிடையாது!!!//
அனானி, அவர் சொந்த அடையாளத்தோடு வந்து சொல்லி இருக்கிறார். அவரது எதிர்பார்ப்பு அது.. நீங்க அனானியாக வந்து கும்மியடிக்கிறீங்க.. நீங்க சொன்னது உங்களுக்கே பொருந்துதே.. ;)


வதீஸ்வருணன் said...
மிகவு சரியாக சொன்னீர்கள் அண்ணா//
நன்றி..


selvi said...
இலங்கையில் இருந்து கொண்டு பதிவு எழுதும் உங்கள் நிலைமை எனக்குப் புரிகிறது.உங்களது அனுபவவும் உங்களை முழு நேர கிரிக்கெட் பதிவு போடுபவராக மாற்றிவிட்டது போல உள்ளது. //
சகோதரி, என்னுடைய மற்றப் பதிவுகளை வாசிக்கவில்லையோ? தனியே கிரிக்கெட் பதிவுகள் தான் கண்ணில் பட்டுதோ?
'முழுநேர'????

//என்றாலும் எனக்கு என்னவோ ரோம் பற்றி எரியும் பொழுது பிடில் வாசித்த நீரோ மன்னனின் நினைவு வருகிறது.//
நீங்கள் எந்த நாட்டில் இப்போது இருக்கிறீர்கள்?
//பந்துகள் பற்றி நீங்கள் எழுதினால் எனக்கு குண்டுகளின் நினைவு வருகிறது.
விக்கெட் பற்றி நீங்கள் எழுதினால் எனக்கு செல்களின் நினைவு வருகிறது.
என்னவோ ஆதங்கத்தில் எழுதுகிறேன். தவறு என்றால் மன்னியுங்கள்.//
பந்துகள்,விக்கெட்டுக்கள் இல்லாத பதிவுகள் பக்கமும் எட்டிப் பார்த்திருக்கலாமே.. இல்லையேல் இந்தப் பதிவு கிரிக்கெட்டைப் பற்றியது என்று தெரிந்திருந்தால் வாசிக்காமலேயே இருந்திருக்கலாமே.. ;)
மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டியதில்லை.. உங்கள் கருத்துக்கள் அவை.

Media 1st said...

hi anna i am dharshan bangkok thailand i am a vettri fan www.dshan2009.tk is my web i add vettri fm on my site
and make a new id 4 u www.vettrifm.tk
so visit www.vettrifm.tk
thankyou ( & say comments please )

ARV Loshan said...

வேத்தியன் said...
அண்ணே 4வது போட்டி ரொம்ப பாதித்து விட்டது போல...
எனக்கும் தான்.. கடுப்பு தாங்க முடியாம தான் இந்தப் பதிவு..
களத்தடுப்பும் மோசம்...//
ம்ம்.. தோற்பதிலும் ஒரு முறை இருக்கு இல்லையா? உங்கள் பதிவும் பார்த்தேன்..என்ன செய்ய நீங்கள் எல்லாம் ஆப் போற அளவுக்கு மோசமாயிட்டுது இலங்கை அணி.. ;)


Subankan said...
முதல்ல toss ஐ ஆவது வெல்ல சொலுங்க. ரொம்ப பேர் toss வெல்லாதது தான் காரணம் எண்டு சொல்லித் திரியுறாங்க//
ஆமாமா.. நீங்க சொன்ன மாதிரியே வென்ற உடன் போட்டியையும் வென்றிட்டாங்களே.. அப்ப அது தான் காரணமா? ;)

நன்றி இயற்கை.


Mathu said...
Yeah what to do, நீங்க சொன்னது ரொம்ப சரி....வெற்றியும் தோல்வியும் விளையாட்டில் சகஜமே...அதுவும் கிரிக்கெட்டில் எப்ப என்ன நடக்கும் என்று தெரியாது..//
அதனால் தான் இன்று வரை cricket is a golden game என்று சொல்லப் படுவதோடு, நீளமாக இருந்தாலும்,இன்னமும் சுவை குன்றாமல் ரசிக்கப் படுகிறது..
By the way, why did they kick out Mendis? :(//
அது தான் தெரிவாளர்களின் முட்டாள் தனம். அவரை அணியிலிருந்து நீக்கியதன் மூலம் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.ஐந்தாவது போட்டியில் மீண்டும் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இருக்கிறார்கள்..


கார்த்தி said...
நல்லா தோக்கட்டும் எல்லாத்திலேயும்!!!!!//
எல்லாத்திலேயும்??? :)

Anonymous said...
//முன்பொரு காலத்தில் ஜெயசூரிய,டீ சில்வாவினால் துவைத்து எடுக்கப்பட்டு, பின்னர் முரளி,வாசினாலும்,அண்மையில் மென்டிசினாலும் உருட்டி எடுக்கப்பட்ட இந்தியா//

இது எப்போ நடந்தது?. எனக்கு தெரிந்து ஜெயசூரியா தவிர வேறு யாரும் அப்படி ஆடியதாக் ஞாபகம் இல்லை.//
அனானி அண்ணே, பழைய விஷயம் எல்லாம் மறந்து போச்சா? கொஞ்சம் பழைய போட்டிகளைப் பின்னோக்கி பாருங்க.. ஷார்ஜாவில் முரளி சுருட்டியதில் இருந்து, இலங்கையில் தொடராக அடி வாங்கியது வரை ஞாபகம் வரும்.

Anonymous said...
//தர்மசேனவையும்//
இவன் எப்போதுமே மூஞ்சியை வெடச்சமாதிரியே வைத்திருப்பான். இவனையெல்லாம் யாருயா நடுவராக்கினது. பரவாயில்லை இப்போ கொஞ்சம் சதை போட்டிருக்கான். இவனைமாதிரியே இருக்கும், இந்த உப்பு சந்தானாவை எங்கையா கானோம்.//
இதை என்ன வென்று சொல்வது???? உங்கள் முகம் கண்ணாடியில் பார்த்ததில்லையா? தக்கண மலைக்கு கீழே அனைவருக்குமே திராவிட மூஞ்சிகள் தான்.. உங்களுக்கும்,எனக்கும், தர்மசேன,சந்தனவுக்கும்..
நடுவராவதற்கும் மூஞ்சி தான் முக்கியம் என்றால் இன்று அமீர்கான்,சல்மான் கான்,அஜீத்,சூர்யா தான் நடுவர்களாக இருக்க வேண்டும்..

டிபிக்கல் ஸ்ரீலங்கன் மூஞ்சி..//
இதை இலங்கை மீதான உங்கள் துவேஷம் என்று சொல்வதா?

The Godfather said...

"ஸ்லம் டாக் மிலியனர்" திரைப்படத்துக்கு 7 BAFTA விருதுகள்.

இலங்கை மண்ணில் முதல் முதலாக T20 போட்டி.

மேலதிக விபரம்....

http://mytamildiary.blogspot.com/

Anonymous said...

hallo Mr. Roshan, do you think India is better all over the world ??? have any thing wrong with your mind??? any how go to Mental hospital for your future health. கொழும்பில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளிலுமே இந்திய வீரர்கள் மூவர் போத்தல்,மற்றும் இதர பொருட்களால் தாக்கப்பட்டுள்ளார்கள்.காயம் ஏற்படாவிட்டாலும்,ஓரிருவரே இவ்வாறு நடந்து கொண்டாலும் இதுவரை இலங்கையில் இவ்வாறு நடைபெறாத ஒரு கேவலமான நிகழ்வு

Nantharupan said...

இத்தனை பெரிய BATTING LINE UP உள்ள இந்தியா, கடைசி போட்டியில் வெல்ல முடியாது போனது சந்தேகத்தை தருகிறது?
மனட்சட்சியை கேளுங்கள் இலங்கை இந்தியாவை வெற்றி பெறுவதற்க்கானா தகுதி உள்ள் அணியா??

Nantharupan said...

//இதனிடையே தோனியின் தலைமையிலே இந்தியா நேற்று மற்றுமொரு புதிய சாதனை நிகழ்த்தியது//
லோஷன் அண்ணா ஒரு doubt dhoni நல்ல அணித்தலைவாராயே இருக்கட்டும்!!
dhoni இன் batting position என்ன?
ஏன் அவர் மற்ற இளைய வீரர்களுக்கு சந்தர்ப்பம் வழங்காமல் தானே முன்வந்து ஆடவருகிறார்???
அப்படி வருபவர் pressure ஆன chasing இன் போது ஏன் முன் இறங்கி ஆடவில்லை????
is dhoni self player???
dhoni's average 47 in odi.

Anonymous said...

//Anonymous said...
//தர்மசேனவையும்//
இவன் எப்போதுமே மூஞ்சியை வெடச்சமாதிரியே வைத்திருப்பான். இவனையெல்லாம் யாருயா நடுவராக்கினது. பரவாயில்லை இப்போ கொஞ்சம் சதை போட்டிருக்கான். இவனைமாதிரியே இருக்கும், இந்த உப்பு சந்தானாவை எங்கையா கானோம்.//
இதை என்ன வென்று சொல்வது???? உங்கள் முகம் கண்ணாடியில் பார்த்ததில்லையா? தக்கண மலைக்கு கீழே அனைவருக்குமே திராவிட மூஞ்சிகள் தான்.. உங்களுக்கும்,எனக்கும், தர்மசேன,சந்தனவுக்கும்..
நடுவராவதற்கும் மூஞ்சி தான் முக்கியம் என்றால் இன்று அமீர்கான்,சல்மான் கான்,அஜீத்,சூர்யா தான் நடுவர்களாக இருக்க வேண்டும்..//


தர்மசேனா விளையாடும் போதே அழுகுனி ஆட்டம் ஆடுவான், அதனால் தான் அவனெல்லாம் எப்படி நடுவாரானான் என்று கேட்டுள்ளேன்.

நடுவராக மூஞ்சி தேவையில்லைதான் ஆனால் மூளை தேவையாயிற்றே. எனக்கு தெரிந்து உலகசாதனை செய்த யாருக்கும் அப்போது நடுவராக இருப்பவர் களத்திலேயே கை குழுக்கியதாக ஞாபகம் இல்லை. ஆனால் இந்த தர்மசேனாவின் ஊர்ப்பாசம் அவனை முரளி விசயத்தில் இப்படி செய்யவைத்தது.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner