February 24, 2009

எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..


நேற்றைய நாள் உலகத் தமிழர் எல்லாருமே தமிழராய்ப் பிறந்ததற்கு ஒரு தடவையாவது பரவசமும் பெருமையும் பெற்றிருக்கக் கூடிய ஒருநாள்!

'ரோஜா' திரைப்படத்தின் பாடல்கள் மூலமாக கீ போர்டும் கையுமாக புதியதொரு இளம் மந்திரவாதியாக ஆரம்பித்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற இளைஞன் உலக மகா  இசைக்கலைஞனாக 'ஒஸ்கார்'என்ற இசைமகுடம் சூடிக்கொண்டநாள்!

கேட் வின்ஸ்லட் என்ற பிலபலமான ஹொலிவூட் / பிரித்தானிய நடிகை ஒரு தடவை இறுதிச் சுற்று வரை நியமனம் பெற்று இம்முறையே விருது கிடைக்க மெரில் ஸ்டீரிப் என்ற நடிகை 15 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்க(இரு தடவையே இவர் வென்றிருக்கிறார்) இந்தியாவில் புறப்பட்ட இசைப்புயல் ஒரே தடவையில் ஒரே படத்தில் இரு 'ஒஸ்கார்' விருதுகளை வென்று வந்திருக்கிறார்!

உலகம் முழுவதும் ஏ ஆர் ரஹ்மானை கொண்டாடுகிறது. 

இந்தியா முழுவதும் இவரது பெயரை உச்சரித்து உச்சரித்து உருகிப் போகிறது!

மேடையிலே ரஹ்மான் உச்சரித்த 'எல்லாம் புகழும் இறைவனுக்கே'

மத அடையாளம் கடந்து – எல்லாத் தமிழ்பேசும் இதயங்களிலும் தந்த புல்லரிப்பும் புளங்காகிதமும் இருக்கிறதே இந்த ஜென்மத்துக்குப் போதும்!

இலங்கையிலே நாம் வாழும் பிரச்சனைகளின் சூழல் கூட மறந்து போய்த் தமிழையைப் பிறந்ததற்குப் பெருமையடைந்த போது தந்த ரஹ்மானுக்கு மனதால் நன்றிகள் சொன்னேன்!

உலக நட்சத்திரங்கள் அனைவரும் கூடியிருந்த KODAK அரங்கில்,இன்னும் பல கோடி மக்களின் உலகம் முழுவதும் பார்த்திருக்க,ரஹ்மான் தனது பாடலையும் பாடி,அன்னைக்கு அர்ப்பணித்து,அனைவருக்கும் நன்றி சொல்லி உலகின் அதி உயர் திரை விருதுகளை இரு தடவை அள்ளிக்கொண்ட போது எண்பது ஆண்டுகால ஒஸ்கார் சரித்திரத்தில் தமிழுக்குக் கிடைத்த மிகப்பெரிய தருணம் அதுதான்.

கமல் சொன்னது போல இது உலக தரம் என்பதை விட உலகிலே திரை,இசை மற்றும் திரையிசை மூலமாக ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்கத் தரமான விருது எம்மைத் தேடி வந்திருப்பதாக எண்ணிக் கொண்டாலும்,ஒரு தமிழருக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. 

எனினும் தமிழ் திரைப்படம் ஒன்றின் தமிழ்ப்பாடல் மூலமாக எங்கள் ரஹ்மான் எப்போது இந்த விருதை அள்ளிவருவார் என்ற ஏக்கம் எழாமலும் இல்லை.. ஜயகோவுக்கு கிடைத்ததற்குப் பதிலாக ஓ ஷயாவுக்கு கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் நாங்கள் மகிழ்ந்திருப்போம். மாயா/மாதங்கி ரஹ்மானோடு சேர்ந்து உருவாகிய பாடலாச்சே..

ரஹ்மானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அவரது திறமை,கடுமையான உழைப்பு,புதிய தேடல்களுக்கு நன்றிகளை சொல்லிக் கொள்வதோடு,அவரது நன்றி மறவாமையும்,தன்னம்பிக்கை,தன்னடக்கம் ஆகியவை இன்னும் மேலே மேலே ரஹ்மானை உயரத் தூக்கி செல்லும் என்றும் குறிப்பிட்டே ஆகவேண்டும். 

இன்றைய என் பதிவில் ரஹ்மான பற்றிய எனது மேலும் சில எண்ணக் குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்ள எண்ணியுள்ளேன்..

மற்ற இசையமைப்பாளர்களிடம் இருந்து ரஹ்மானை வேறுபடுத்திய விடயங்கள் மற்றும் ரஹ்மான் தமிழ் திரையிசையில் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று நான் கருதும் விடயங்கள்..

இதில் யாருக்காவது மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் அல்லது நான் குறிப்பிடாமல் விட்ட விடயங்கள் என்று நீங்கள் கருதுபவை இருந்தால் பின்னூட்டங்கள் மூலமாக அறியத் தாருங்கள்..

  ரஹ்மான அளவுக்கு வேறெந்த இசையமைப்பாளரும் இத்தனை அதிக புதிய பாடக,பாடகியரை அறிமுகப்படுத்தவில்லை..
ரோஜாவில் ஹரிஹரநொடு ஆரம்பித்த இந்த நீண்ட பட்டியல் இறுதியாக வெளிவந்த டெல்லி 6 வரை தொடர்கிறது..

ரஹ்மானின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட அநேகர் (எல்லோருமே என்றுகூட சொல்லலாம்) மிகப் பிரபலமானவர்களாகவும்,ஏனைய எல்லா இசையமைப்பாளரின் இசையிலும் பிரகாசிக்கின்றார்கள் எண்பது குறிப்பிடத் தக்கது.

மிகச் சிறந்த உதாரணங்கள்

ஹரிஹரன்,உன்னி கிருஷ்ணன்,ஸ்ரீநிவாஸ்,ஹரிணி,கார்த்திக்,ஷங்கர் மகாதேவன்,அனுராதா ஸ்ரீராம்,சுபா.. இப்படியே இன்றைய சின்மயீ, நரேஷ் ஐயர்,பென்னி தயாள் வரை வரும்..

அத்துடன் ரஹ்மான் தமிழுக்குக் கொண்டுவந்த ஹிந்தி பாடக,பாடகியரை தங்கள் ஆஸ்தான பாடகராக்கிக் கொண்ட ஏனைய இசையமைப்பாளர்களும் உண்டு..

இந்த ஏராளம் புதிய குரல்கள் மூலமாக தமிழ்த் திரையிசையுலகில் இருந்துவந்த Monopoly உடைந்தது;பாடல்களுக்கும் புத்துணர்ச்சி பிறந்தது.

சுக்விந்தர்,உதித்,மதுஸ்ரீ என்று இந்தப் பட்டியலில் இருப்போர் ரஹ்மானின் இசையில் பாடும்போது தமிழை பிழையில்லாமல் பாடுவதையும்,தேவா,யுவன்,ஸ்ரீக்காந்த் தேவா போன்றோரின் இசைகளில் பாடும்போது தமிழ் சொற்களை கடித்து இம்சிப்பதையும் பார்க்கும்போது, ரஹ்மான் தனது ஒவ்வொரு பாடலிலும் காட்டும் அக்கறை புரிகிறது.

இளைய தலைமுறையாக இருந்தாலும்,புதிய பாடக பாடகியரை ரஹ்மான அறிமுகப்படுத்தினாலும் கூட,இன்றைய இசையமைப்பாளர்களில் ரஹ்மான் அளவுக்கு எந்த ஒரு இசையமைப்பாளரும் மூத்த பாடக,பாடகியரின் குரல்களை அதிகளவில் பயன்படுத்தியவர் எவரு யாருமே கிடையாது..

பீ.சுசீலா(கண்ணுக்கு மையழகு)
டி.கே.கலா(குளிச்சா குத்தாலம்)
கல்யாணி மேனன்(முத்து படப்பாடல்)
சீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)
டி.எல்.மகராஜன்(நீ கட்டும் சேலை)
M.S.விஸ்வநாதன் (மழைத்துளி மழைத்துளி)

இன்னும் SPB,K.J.யேசுதாஸ்,மலேசியா வாசுதேவன்,S.ஜானகி,ஜெயச்சந்திரன் போன்றோரை எல்லாம் எண்ணிக்கை இல்லாத அளவுக்கு ரஹ்மான் பயன்படுத்தி ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட மூத்த தலைமுறையினரில் பலபேர் நீண்ட காலம் பாடாமல் இருந்தோர் என்பதும் முக்கியமானது..

எனது ஒரே ஆதங்கம் வெண்கலக் குரல் TMSஐயும் ரஹ்மான் ஒரே தடவையாவது ஏதாவது ஓர் பாடலில் பயன்படுத்தி இருக்கலாம் எண்பது தான்.. பொருத்தமான இடம் வரும் வேளை ரஹ்மான் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன்.

பல கர்நாடக சங்கீத பின்னணி உடையோர் ரஹ்மான் மூலமாகவே திரையிசை உலகுக்குள் நுழைந்து தரம் மாறாமல் ஜோலிக்கின்றார்கள். 

அந்தந்த SPECIALISTகளை குறித்த பாடல்கள் மூலமாகத் தரும் திறமையும்,கைவண்ணமும் ரஹ்மானின் பிறவி ஞானம் என்றே சொல்லவேண்டும்.

மழலைகளின் குரலுக்கு M.S.ராஜேஸ்வரியையும்,ஜானகியையுமே பலர் பயன்படுத்தி இருக்க,ரஹ்மான் தான் மழலை மாறாத G.V.பிரகாஷின் குரலை அறிமுகப்படுத்திய விதம் தமிழ் திரை இசையில் ஒரு மாற்றத்தின் ஆரம்பம் என்றே சொல்லவேண்டும்.  

ஹிந்தி,ஆங்கிலப் பாடல்களில் எமது தமிழ் இளைய தலைமுறை மோகம் கொண்டு அலைந்த காலம் போய் தமிழ் பாடல்களைப் பிற மொழிபேசுவோரும் முணுமுணுக்க முக்கியமான காரணம் ரஹ்மான் என்றால் அது மிகையல்ல.

இளையரஜாவுக்கு அடுத்தபடியாக பின்னணி இசைக்கு (BGM) அதிக சிரத்தை எடுத்து,பின்னணி இசையைக் கூர்ந்து அவதானிக்க வைத்தவர் ரஹ்மான் மட்டுமே. 
ரஹ்மானின் இசையில் வந்த ரோஜா,பாம்பே,உயிரே,என் சுவாசக் காற்றே,இருவர்,ரங்கீலா,கண்டு கொண்டேன்,திருடா திருடா, இன்றைய Slumdog Millionaire படங்களின் பின்னணி இசைகள் மெய் சிலிர்க்க செய்யும் உலகத் தரம் வாய்ந்தவை.

நாதஸ்வரம்,பறை,தவில்,புல்லாங்குழல்,Saxophone என்று எத்தனையோ வாத்தியங்களை ஒரிஜினல் வடிவம் மாறாமல் பரிமாணங்கள் பல மாற்றி தனது பாடல்களில் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி (BGM இலும் கூட) பல இசை விற்பன்னர்களை ஆச்சரியப்படுத்தியவரும் ரஹ்மானே..

டூயட் மறந்து போகுமா??

இளையராஜாவின் பின்னர் பாடல்களின் மூலமாக சாதரண திரைப்படங்களை வெற்றித் திரைப்படங்களாக மாற்றியவர் இசைப் புயல் ரஹ்மான்.ஓடவே இயலாத நோண்டிக் குதிரைத் திரைப்படங்களையும் பல சந்தர்ப்பங்களில் ரஹ்மானின் பாடல்கள் ஒட்டியிருக்கின்றன.

மிக நீண்ட காலத்தின் பின்னர் கவிதை வரிகளையும்,பாடல் வரிகளையும் கூர்ந்து அவதானித்து ரசிக்க வைத்தது ரஹ்மானின் வருகைக்குப் பின்னரே.. (வைரமுத்துவின் மீதான எனது அபிமானத்தின் காரணமாக எனது தனிப்பட்ட கருத்தாகவும் இது இருக்கலாம்)

ராப்,ஜாஸ் என்று புதிய இசை வடிவங்களை ரஹ்மான் தமிழில் பிரபல்யப் படுத்தி இசைக்கு இளைஞர்களை அடிமையாக்கினதோடு ஏனைய எல்லா இசையமைப்பாளர்களும் அவ்வாறு செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குள்ளாகினர்.
ராஜாவே தனது இசைப்பாணியை மாற்றியே ஆகவேண்டி வந்தது.. ராஜாவின் மகன் யுவனோ இன்னொரு ரஹ்மானாக ஆகிவிட்டார்.

ரஹ்மானின் ஆரம்பத்தில் 'கம்பியுட்டர் இசை தானே.. A.R.ரஹ்மானிடம் எந்த சுய திறமை இல்லை' என்று எழுந்த புழுக்க விமர்சனங்கள் பொய்த்துப் போன விதம்..

இதற்கான முக்கிய காரணம் ரஹ்மானின் ஆழ்ந்த இசைஞானம்,இசை நுணுக்கங்கள் பற்றிய தெளிவான அறிவு,நவீன தொழினுட்பங்களை நுணுக்கமாக தமிழ் திரையிசைக்குள் நுழைக்கத் தெரிந்த புத்திஜீவித்தனம். 

அவ்வளவு தூரம் இயற்கையையும் பாடல்களிலும்,இசையிலும் பங்குபற்ற செய்தார். இயற்கையின் ஒலிகளை ரஹ்மான் தொழிநுட்பம் மூலம் இசையில் இணைத்த புதிய புரட்சியை நிகழ்த்தியதன் மூலம் ஒரு புத்துணர்ச்சி அலையை ரஹ்மான் உருவாக்கியிருந்தார்.

A.R.ரஹ்மானின் வரவின் பின்னர் தான் உயர் தொழிநுட்ப சுத்தங்களும்,நுணுக்கங்களும் பாடல்களிலும்,பின்னணி இசையிலும் எதிர்பார்க்கப் பட ஆரம்பித்தன.

திரையிசையல்லாத Album பாடல்களுக்கும் மவுசு ஏற்பட ரஹ்மானே முக்கிய காரணம். 

கர்நாடக,கிராமிய இசைகளிலும் தனது ஆழ்ந்த அறிவைப் பயன்படுத்தி A.R.ரஹ்மான் பாடல்கள் தந்தது இளைய தலைமுறையினரையும் அவை பற்றி திரும்பிப் பார்க்கவைத்த பங்களிப்பும் ரஹ்மானுக்கு உள்ளதென்பதும் உண்மையே.

புயலாக ஆரம்பித்ததனால் 'இசைப் புயல்' என்று பெயர் சூட்டப் பட்டு விட்டாலும்,இனி யாராவது ரஹ்மானுக்கு பொருத்தமான இன்னுமொரு பட்டம் சூட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். (ஒஸ்கார் நாயகன் பரவாயில்லையா???- கமல் கோபிப்பாரா?)

இன்னொரு சந்தோசம்.. முன்பிருந்தே எனக்கு இருக்கும் தனிப்பெருமை - நம்மோட இனிஷியலும் இசைப்புயலின் இனிஷியலும் ஒன்றே.. A.R.  

    

 

  



25 comments:

Subankan said...

//மேடையிலே ரஹ்மான் உச்சரித்த 'எல்லாம் புகழும் இறைவனுக்கே'

மத அடையாளம் கடந்து – எல்லாத் தமிழ்பேசும் இதயங்களிலும் தந்த புல்லரிப்பும் புளங்காகிதமும் இருக்கிறதே இந்த ஜென்மத்துக்குப் போதும்!//

எனக்கும் தான் அண்ணா, எழுதியும் உள்ளேன். முடிந்தால் படியுங்கள்

http://subankan.blogspot.com/2009/02/blog-post_23.html

Anonymous said...

நண்பா ரஹ்மானைப் பற்றி தாங்கள் கூறிய அனைத்து கருத்துக்களும் கொஞ்சம் கூட மிகை அல்ல. 5 பேரை மட்டும் வைத்துக் கொண்டு மோனோப்பாலி வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் மத்தியில் அள்ள அள்ள நீர் கொடுக்கும் கிணற்ளைப் போல் பாடகர்களை அறிமுகப்படுத்தியவர்.
ஆனால் எனக்கும் இன்~pயல் ஏ ஆர் என்று சொல்லி ஓஸ்கார் கேட்பதை(மனதுக்குள் கொடுக்க மாட்டார்களா?என்று)நிராகரிக்கிறேன். ஓவர் லொள்;ளுளுளுளுளுளுளுளுளுளுளுளுளுளுளுளு லோ~ன்

நட்புடன்

Anonymous said...

Anbu Nanbar Loshan,
Vanakkam.

Thangalidam irunthu nan ethir parthu kondu iruntha pathivu.

Sivamani entra Tamil Drum isai Kalaigar entru India matrum Ulagil ellarum parthu viyakka karanamum entha A R Rthan Karanam enpathu en karuthu.

Enakku thangalai vida ennum konjam kuduthal santhosam. Namma peru A. R. Ramu. Short A.R.R.

Anbudan
Ramu

Anonymous said...

//எனது ஒரே ஆதங்கம் வெண்கலக் குரல் TMSஐயும் ரஹ்மான் ஒரே தடவையாவது ஏதாவது ஓர் பாடலில் பயன்படுத்தி இருக்கலாம் எண்பது தான்..//

எனது ஒரே ஆசை ரஹ்மானின் இசையில் இளையரஜாவை ஓர் பாடலில் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். (ரஹ்மான் விருப்பப்பட்டாலும் இளையரஜா மனசு வைக்க வேண்டுமே)

நன்றி டெனி
வாழ்த்துக்கள் ரஹ்மான்

சி தயாளன் said...

ரகுமான் மேன்மேலும் சிகரங்கள் தொடவேண்டும்..தமிழராய் நாம் மேன் மேலும் பெருமைப் படவேண்டும்...

உங்கள் AR initial குறும்பை ரசித்தேன் :-)

Anonymous said...

vanakkam,

melai kooriya sila karuthakkulai varaverkoodithayum, sila karuthukkal matra thakkathai irukirathu..

sivamani mudhalil thanathu guruvaga ninepathu IR sir than.avar thannidam adangi vidamal irukka avar thiramai velipada anupivaithar. atharkupin ARR avarai payan paduthinar. Intha vishayam ethavathu interviewil sivamani avargal solli konde iruppargal.

Pazhaya padagargalai muluvathumaga payan paduthinar enpathu konjam athigam. SPB & chithra mattume athiga padiya padavaithar, mathapadi SJ amma, P.S. amma avargali 5 padalagalukku mel pada vaikka villai.

Pudhiya padagargal paduvatharkku neraya vaipu thanthar enpatharkku matru karuthu irukka povathillai. But ellorum thangali 20 varudangalukku mel panpaduthi kolla villai. Ovvaru padalukkum oru padagar or padagi enpathal yar padugirargal endru arivatharkul avar oiynthu vidugirargal.

ARR bgmil sothappiya padangal endru sonnal IRUVAR, Kannathil muthamittal (nandhita das meet his child scene i hope very attaractive bgm but not satisfied by ARR)and others. total 68 movies tamil compose panniyulla padangalil 35 padangal failure movie. songs nalla irunthathu but athu padathai hit seiyavillai.

Indru perumaiyaga naam parkum ARR than ellaiyai global vasam thirupiyathal intha movie kidathu avarukku oscar kidapathu naam tamilnaga perumai padalam, but idhu ondrum nam nattu padam alla.

avar meendum nam padam moolamaga migaperiya award vanga vendum ena virumbum oru tamilian.

Anonymous said...

Hi

உங்கள் வலைப்பதிவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி. அதன் இணைப்பை இங்கு பார்க்கவும். வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைபூக்கள்/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

Anonymous said...

அண்ணா.. சைக்கள் கேப்ல என்னவோ பண்ணிடீங்க..

//முன்பிருந்தே எனக்கு இருக்கும் தனிப்பெருமை - நம்மோட இனிஷியலும் இசைப்புயலின் இனிஷியலும் ஒன்றே.. A.R. //

தர்ஷன் said...

அட கோ இன்சிடன்ட் என்பார்களே இதுதானோ
கிட்டத் தட்ட நான் என் பதிவுக்கு வைத்த தலைப்பும் இதுதான் but படத்தை பற்றிய என் கருத்துகளாய் கூறி இருந்தேன்.
முடிந்தால் வந்து பாருங்கள்
உங்கள் கட்டுரை அருமை

எட்வின் said...

நல்ல பதிவு... வாழ்த்துக்கள். ரஹ்மானால் தமிழுக்கும்,தமிழர்களுக்கும் பெருமை

வந்தியத்தேவன் said...

லோஷன் அனுராதா ஸ்ரீராம் தேவாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். படம் காதல்கோட்டை நலம் நலமறிய ஆவல் பாடல்.

வந்தியத்தேவன் said...

தமிழ்ப் பாடல்களில் ஆங்கிலம் கலந்து புதிய கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியவர் ரகுமான் தான்.இசையில் வரிகளை தவறவிட்டவரும் இவர்தான். உங்களின் அதீத ரகுமான் பக்தியிலும் வைரமுத்து பக்தியிலும் இவர்களுக்கு இடையில் நடந்த சண்டை மறந்துவிட்டிர்கள்.

ARV Loshan said...

// வந்தியத்தேவன் said...
தமிழ்ப் பாடல்களில் ஆங்கிலம் கலந்து புதிய கலாச்சாரத்தையும் ஏற்படுத்தியவர் ரகுமான் தான்.//

இல்லை நண்பரே.. அதை நான் மறக்கவில்லை.. ரஹ்மான் சேர்த்த ஆங்கில வரிகளில் ஒரு நயமும்,நாகரிக அளவும் இருந்தது.. பின் வந்தவர்கள் அதனை மீறி நாசமாக்கி விட்டார்கள்..

//உங்களின் அதீத ரகுமான் பக்தியிலும் வைரமுத்து பக்தியிலும் இவர்களுக்கு இடையில் நடந்த சண்டை மறந்துவிட்டிர்கள்.//

அந்த மோதல் பற்றி முன்பொரு தடவை நான் சொல்லி இருக்கிறேனே..

ரஹ்மான் மீது எனக்கு அதீத பக்தியா? வைரமுத்து மீது உண்டு.. ஆனால் ரஹ்மான் மீது அல்ல.. தயவு செய்து எனது முந்தைய பதிவு LOSHAN - லோஷன்: அன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்
ஐப் பார்க்கவும்..

//
வந்தியத்தேவன் said...
லோஷன் அனுராதா ஸ்ரீராம் தேவாவால் அறிமுகப்படுத்தப்பட்டவர். படம் காதல்கோட்டை நலம் நலமறிய ஆவல் பாடல்.//

அனுராதா ஸ்ரீராம் அறிமுகமானது ரஹ்மானின் இசையில் பாம்பே திரைப்படத்தில் வந்த தீம் பாடலான 'மலரோடு'paadal மூலம், பின்னர் தான் அவர் ஏனைய இசையமைப்பாளர்களிடம் பாடினார்..நான் பல முறை பேட்டி கண்டபோதும் சொல்லி இருக்கிறார்.

அவரது பேட்டியிலேயே சொல்கிறார் வாசித்துப் பாருங்கள்..
http://www.screenindia.com/old/apr17/music3.htm

Anonymous said...

//Your comment has been saved and will be visible after blog owner approval.//

ha haaa ha

வந்தியத்தேவன் said...

//இல்லை நண்பரே.. அதை நான் மறக்கவில்லை.. ரஹ்மான் சேர்த்த ஆங்கில வரிகளில் ஒரு நயமும்,நாகரிக அளவும் இருந்தது.. பின் வந்தவர்கள் அதனை மீறி நாசமாக்கி விட்டார்கள்..//

இதற்க்கு நோ கொமண்ட்ஸ்.


//ரஹ்மான் மீது எனக்கு அதீத பக்தியா? வைரமுத்து மீது உண்டு.. ஆனால் ரஹ்மான் மீது அல்ல.. தயவு செய்து எனது முந்தைய பதிவு LOSHAN - லோஷன்: அன்று நான் ரசித்த A.R.ரஹ்மான்
ஐப் பார்க்கவும்..//

படித்தேன் ஒரு பின்னூட்டமும் இட்டிருந்தேன் பார்க்கவில்லையா?

//அனுராதா ஸ்ரீராம் அறிமுகமானது ரஹ்மானின் இசையில் பாம்பே திரைப்படத்தில் வந்த தீம் பாடலான 'மலரோடு'paadal மூலம், பின்னர் தான் அவர் ஏனைய இசையமைப்பாளர்களிடம் பாடினார்..நான் பல முறை பேட்டி கண்டபோதும் சொல்லி இருக்கிறார். //

தகவலுக்கு நன்றி ஏனெனில் அண்மையில் விஜய் டிவியில் ஒரு பேட்டியில் அனுராதா ஸ்ரீ ராம் தான் முதன்முதலில் பாடியது தேவா இசையில் என கூறியிருந்தார்.

ers said...

படிக்கல. ஆனாலும் பின்னோட்டம் போட்டுட்டேன். லோசன் ஒரு முக்கியமான வேலை காரணமாக என்னால் சரிவர இணையத்திற்கு வரமுடியலை. இதற்கான காரணத்தை தனிமடலில் எழுதுகிறேன். இன்னும் ஒரு மாதத்திற்கு இதே நிலை தொடரும்னு நினைக்கிறேன். நான் படிக்காமல் விட்ட பதிவுகளை மொத்தமாய் சேர்த்து படித்துக்கொள்கிறேன். நன்றி.

Sinthu said...

"புயலாக ஆரம்பித்ததனால் 'இசைப் புயல்' என்று பெயர் சூட்டப் பட்டு விட்டாலும்,இனி யாராவது ரஹ்மானுக்கு பொருத்தமான இன்னுமொரு பட்டம் சூட்டினால் நன்றாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். (ஒஸ்கார் நாயகன் பரவாயில்லையா???- கமல் கோபிப்பாரா?)"

நேற்று மட்டும் எத்தனை தடவை இதைச் சொல்லி இருப்பீர்கள் (வானொலியில் தான்) அண்ணா....


இன்னொரு சந்தோசம்.. முன்பிருந்தே எனக்கு இருக்கும் தனிப்பெருமை - நம்மோட இனிஷியலும் இசைப்புயலின் இனிஷியலும் ஒன்றே.. A.R. "
A for ஆனந்தர்
R for ரகுபதிபாலஸ்ரீதரன்
எனக்குத் தெரியும் ஆனால் ரஹ்மானின் அந்த A.R க்கு என்ன விரிவு எண்டும் சொல்லுங்களேன்
அப்படியே சந்தோசமாக இருங்க....
(வானொலியில் உங்கள் குரலில் இருந்து அறிந்து கொண்டேன் நீங்கள் எவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று..)

madhan said...

it doesent matter who sayswhat at last rehman did it,well done congrats

Anonymous said...

"இன்னொரு சந்தோசம்.. முன்பிருந்தே எனக்கு இருக்கும் தனிப்பெருமை - நம்மோட இனிஷியலும் இசைப்புயலின் இனிஷியலும் ஒன்றே.. A.R."

ம்ம் அண்ணா கலக்குங்க உங்களுக்கும் ஒரு விருது கொடுத்துட்டா போச்சு "காந்தக்குரலோன்" என்று
என்ன எல்லாருக்கும் ok தானே

Anonymous said...

’அஞ்சலி’ படத்துல வர்ற குழந்தைகள் குரல் எல்லாம் எம்.எஸ்.ராஜேஸ்வரியும், ஜானகியுமா பாடுனாங்க..?
அதுல அவங்களைப் பாடவைக்காததால ‘அஞ்சலி’ பாட்டெல்லாம் ஹிட்டாகலை போல.
//A.R.ரஹ்மானின் வரவின் பின்னர் தான் உயர் தொழிநுட்ப சுத்தங்களும்,நுணுக்கங்களும் பாடல்களிலும்,பின்னணி இசையிலும் எதிர்பார்க்கப் பட ஆரம்பித்தன.//
அந்த சமயத்தில் டிஜிட்டல் புரட்சி ஆரம்பித்திருந்தது. அதை ரகுமான் சாதகமாக்கிக் கொண்டார் எனக் கூறாலாம்.
//
திரையிசையல்லாத Album பாடல்களுக்கும் மவுசு ஏற்பட ரஹ்மானே முக்கிய காரணம்.//
டி.எம்.எஸ் சோட முருகன் பாடல்கள் எல்லாம் திரைஇசையா...அல்லது தனி ஆல்பமா?
இளையராஜோவோட ‘ஹவ் டூ நேம் இட்’ என்ன வகை..?இல்லை அது ஹிட் ஆகலையா...?
சரி இது ரகுமானைப் பாராட்டும் பதிவு.. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.
அப்படியே இதையும் சேத்துக்குங்க..
எம்.எஸ்.வி, சுசீலா இவங்க எல்லாருக்கும் இவர்தான் பாடச் சொல்லிக் கொடுத்தாரு...
இளையராஜாவுக்கு டிஜிட்டல் இசைன்னா என்னன்னு இவர்தான் சொல்லிக் கொடுத்தாரு...
//ரஹ்மானின் இசையில் வந்த ரோஜா,பாம்பே,உயிரே,என் சுவாசக் காற்றே,இருவர்,ரங்கீலா,கண்டு கொண்டேன்,திருடா திருடா, இன்றைய Slumdog Millionaire படங்களின் பின்னணி இசைகள் மெய் சிலிர்க்க செய்யும் உலகத் தரம் வாய்ந்தவை.//
இதுல மத்ததைக் கூட ஒத்துக்கலாம். ஆனால் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ இசை...?உலகத்தரம்?
ஆஸ்கார் வாங்கியதால் மட்டும் உலகத்தரம் என்று கூறாமுடியாது...சபேஷ்-முரளி இதைவிட ந்ல்லாப் போட்டிருப்பார்...
என்ன இந்த ஆஸ்கார் பரிட்சையில ரகுமானுக்கு கொஸ்டின் ஈஸியா வந்துடுச்சு. செண்டம் வாங்கிட்டார்.
‘ஸ்லம்டாக் மில்லியனர்’ ல க்டைசிக் கேள்விக்கு ஹீரோ ஆன்ஸ்ர் பண்ணின மாதிரி...

Anonymous said...

என்னைப்பொருத்த வரை இந்த ஆஸ்கார் விருதுகள் பூவோட சேர்ந்த நாறு மாதிரிதான் நமக்கு கிடைத்துள்ளது. ஒரு சுத்தமான முழுக்க முழுக்க இந்தியர்களால் எடுக்கப்பட்ட படத்திற்கு கிடைந்திருந்தால் பெருமை பட்டுக்கொள்ளலாம்.

ஆனால் இந்தப்படத்தைப் பார்க்கும் போது, பூவோடு சேர்ந்த நாறு மாதிரியில்லை, பண்றியோடு சேர்ந்த எதோ மாதிரிதான் எனக்கு தெரியுது.

இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன?

ஆ! இதழ்கள் said...

ரஹ்மானின் பாடல்கள் இறைச்சலாகவும் பாடல் வரி கேட்க முடியாததாகவும் இருப்பதாகவும் கூறுவோர்கள் உண்டு... மொத்தமும் பிதற்றல். அவர் இசையில் பாடல் வரிகள் சும்மா பளிங்கு மாதிரி கேட்கும்.

இசையை குறைத்து அவர் இட்ட பாடல்கள்

ராசாத்தி ஏன் உசுரு என்னதில்ல - திருடா திருடா

பெண்ணல்ல பெண்ணல்ல - உழவன்

தென்கிழக்கு சீமையில - தெ.சீ

போன்றவை.

மாத்தியோசி.... என்று தெளிவாகக் கூறினாலும் வார்த்தை புதிதென்பதால் நமக்கு புரியவில்லை. நன்றி - வாலி

சிறந்த பதிவு. நன்றி.

ஆ! இதழ்கள் said...

இதை விட சிறப்பான இசை,பாடல்கள் நிறைந்த எத்தனையோ இந்தியப்படங்கள் வந்துள்ளன, அதெற்கெல்லாம் விருதுகிடைத்துவிட்டதா என்ன//

ஐயா. குழப்பி கொள்ளாதீர்கள். ஆஸ்கர் என்பது ஆங்கில படத்திற்கு கொடுக்கப்படும் அவார்டு, வேற்று மொழிக்கென்று ஒரு பிரிவு தான் உள்ளது. அதனால், தமிழ் இசைக்கோ இந்திய இசைக்கோ ஆஸ்கரை எதிர் பார்க்காதீர்கள்.

அவர்கள் தரத்திற்கு நாம் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என்று உரக்க கூறியிருக்கிறாரே ரகுமான் அதற்கு தான் இந்த கொண்டாட்டம். கொண்டாடுங்கள் தவறில்லை.

:)

Anonymous said...

ரொம்ப நல்ல பதிவு. இதன் சிறப்பம்சம், உங்கள் மனத்தில் உதித்த எண்ணங்களை அப்படியே கொடுத்திருப்பதுதான்.

அது இருக்கட்டும், என்ன நம்ம ப்ளாக் பக்கம் தலி வைத்து படுப்பதில்லை என்ற்ய் ஏதேனும் உறுதிஹ் மொழி எடுத்திருகிறீர்களா என்ன?

வினோத் said...

லோஷன் அன்ன உங்கள் கனவு நிறைவேறிவிட்டதே! T M S செம்மொழி மாநாட்டு பாடலுக்கு குரல் கொடுத்து உள்ளாரே!

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner