March 04, 2009

இளமையின் வெற்றி - ஆஸ்திரேலியா


நேற்றைய தினம் இந்தப் பதிவை இட தயாராகிய போது தான் கிரிக்கெட்டின் கறுப்பு நாளாக நேற்றைய நாளை மாற்றிய இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் இடம்பெற்றது. எனவே நேற்று இந்தப் பதிவை இடாமல் தவிர்த்தபோதும், யுத்தத்தின் மத்தியிலும்,அன்றாடப் பிரச்சினைகளின் மத்தியிலும் எங்கள் வாழ்வு செல்வதைப் போல, தீவிரவாத தாக்குதல்கள் மத்தியிலும் கிரிக்கெட் பயணிக்கும் என்பதை நினைவுறுத்தி, இதோ.....

இளமையின் வெற்றி - ஆஸ்திரேலியா


சரிந்தது அவுஸ்திரேலியாவின் சாம்ராஜ்யம் என்று என் இந்த வலைத்தளத்திலேயே நான் ஒரு பதிவை முன்பு எழுதியிருந்தேன்.  


காயம் காரணமாக சிலர் ஓய்வு காரணமாக பலர் என முக்கியமான சிரேஷ்ட வீரர்களை இழந்திருந்த அவுஸ்திரேலியா புதிய மாற்றத்துக்குள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் தென்னாபிரிக்க அணியிடம் அதுவும் சொந்த நாட்டிலேயே வாங்கிய அடி அப்படி!  

நானே இப்படி என்றால் உலகின் பிரபல கிரிக்கெட் விமர்சர்கள்,அனுபவம் வாய்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்,விற்பன்னர்கள் எல்லோரும் சேர்ந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முடிவுரையே எழுதிவிட்டார்கள்.  

அவுஸ்திரேலியாவின் கதை அவ்வளவுதான்! 
இனி தென்னாபிரிக்காவா,இந்தியாவா என்று முடிவே பண்ணிவிட்டார்கள்!  

இதற்கிடையில் புதுமுகங்கள்,அறிமுகமே இல்லாத வீரர்களோடு தென்னாபிரிக்கா நுழைந்த அவுஸ்திரேலியா மீது யாருமே நம்பிக்கை வைக்கவில்லை.  

மூன்று டெஸ்ட்கள் அடங்கிய இந்தத் தொடரில் வெற்றி பெறும் அணி ICC உலக டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாமிடத்தைப் பெறும் என்பதனால் அப்படி ஒரு முக்கியத்துவம் இந்தத் தொடருக்கு.  

நேற்று முன்தினம் அவுஸ்திரேலிய அணி வெற்றியீட்டிய டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு முன் ஆரம்பித்த வேளையில் யாருமே பொன்டிங்கின் அவுஸ்திரேலியாவுக்கு வாய்ப்பை வழங்கியிருக்கவில்லை.  

அவுஸ்திரேலியத் தொடர் வெற்றியை பெற்றுக் கொண்ட பெருமிதத்தோடும் உத்வேகத்தோடும் உற்சாகத்தோடும் காத்திருந்த காத்திரமான தென்னாபிரிக்க அணிக்கு முன்னால் பொன்டிங்,கிளார்க்,ஹசி,கடிச் என்று ஒரு சில அனுபவம் வாய்ந்த வீரர்களோடு மட்டும் களமிறங்கிய அவுஸ்திரேலியா பூச்சியாகத் தான் தெரிந்தது.  

ஒரு வருடத்துக்குள்ளே அறிமுகமான ஹடின்,ஜோன்சன் ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமான பீட்டர் சிடில்,ஒரேயொரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள மக்டொனால்ட் என்று புத்தம் புதிய அணியுடன் முதல் டெஸ்ட் போட்டியிலேயே மூன்று புதுமுகங்களை அறிமுகப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தம் அவுஸ்திரேலியாவுக்கு .  

அண்மைக்காலத்தில் எந்தவொரு டெஸ்ட் அணிக்கும் நிகழாத Acid test இது! 

அடிமேல் அடிவாங்கி இப்போது தான் எழும்ப முயற்சிக்கும் அணி உலகின் பலம் வாய்ந்த அணியான தென்னாபிரிக்காவை மூன்று புதிய அறிமுகங்களோடு சந்திப்பதென்றால் அது எப்படிப்பட்ட விபரீதம்?  

பங்காளதேஷ்,சிம்பாப்வேயுடன் கூட இவ்வாறான பரீட்சார்த்த முறையிலும் கூட எந்தவொரு அணியும் முயல முடியாத விடயம் அவுஸ்திரேலியாவுக்கு தவிர்க்க முடியாமல் போனது. 

Philip Hughes Marcus North Ben Hilfenhaus  
பலவீனமாகக் கருதப்பட்ட இந்த மூவரின் அறிமுகமும் அனுபமின்மை என்று கணிக்கப்பட்ட சில வீரர்களுமே அவுஸ்திரேலியாவின் ஆச்சரியமான அபாரமான வெற்றிக்கு அடிப்படை என்பதே உண்மை!  

இதற்கு முதல் அவுஸ்திரேலியா இவ்வாறு மூன்று புதிய வீரர்களை அறிமுகப்படுத்தியது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கு முன்னர் 1984 – 85இல் ஜெஃப் மார்ஷ்,ப்ரூஸ் ரீட் ,மேர்வ் ஹியூஸ் (Geoff Marsh,Bruce Reid,Merv Hughes)  

இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜொஹனஸ்பேர்க்கில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக அறிமுகமான ஃபில் ஹியூஸ் முதல் இனிங்சில் பூஜ்யத்தில் ஆட்டமிழந்தாலும் இரண்டாவது இனிங்சில் அபாரமாக ஆடிப் பெற்ற 75 ஒட்டங்கள் விலைமதிப்பற்றவை!. 

ஃபில் ஹியூஸ்

29 வயதிலேயே சற்றுத் தாமதாக (தனது சக கழக/பிராந்திய வீரரான மைக்கல் ஹசியைப் போலவே) அறிமுகமானாலும் சகலருமான வீரரான மார்க்கஸ் நோர்த் அறிமுகம் போட்டியிலேயே ஆழமாகத் தான் முத்திரையைப் பதித்துள்ளார். 

முதல் இனிங்சிலேயே அபாரமான சதம் (116)  

சிறப்பான களத்தடுப்பு,தேவையான போது விக்கெட்டுக்களைச் சரிக்கும் சாதுரியமான பந்துவீச்சு என்று நோர்த் அவுஸ்திரேலியாவின் எதிர்காலம்!  


ஹியூஸ்,நோர்த் இரண்டு பேரின் துடுப்பாட்டங்களும் பார்க்கக் கண்கொள்ளாக் காட்சிகள்! அழகான துடுப்பாட்டப் பிரயோகங்களும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் போன்ற பொறுமையான அணுகுமுறைகளும்!  

பொன்டிங்குக்கும் தெரிவாளர்களுக்கும் முழுமையான மனநிறைவைக் கொடுத்திருக்கும்.!  

வேகப்பந்து வீச்சாளர் பென் ஹில்ஃபென்ஹோஸ் பெரிதாக சாதிக்காவிட்டாலும் மோசமில்லை! மூன்று முக்கியமான விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்..  

பென் ஹில்ஃபென்ஹோஸ்

மறுபக்கம் வேகப்பந்துவீச்சாளர் பீட்டர் சிடில் இந்தியாவில் தனது அறிமுகத்தில் தொடங்கிய வெற்றி நடையை இந்தப்போட்டியில் பெற்ற ஆறு விக்கெட்டுக்களுடன் தொடர்கிறார்.  

பீட்டர் சிடில்

இறுதியாகப் போட்டியில் சிறப்பாட்டக்காரர் மிச்செல் ஜோன்சன்! ஜொஹனஸ்பேர்க் டெஸ்ட் போட்டியில் எட்டு விக்கெட்டுக்களும் முதலாம் இனிங்சில் ஆட்டமிழக்காமல் 96 ஓட்டங்களும்!  

(முதலாம் இனிங்சில் இவர் சதம்பெற நான்கு ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் இறுதி மூன்று விக்கெட்டுக்களும் சரிந்தவேளை ஜோன்சனைப் பார்க்கவே The Last man standing போலப் பரிதாபமாகவிருந்தது.  

அவுஸ்திரேலியாவுக்காக டெஸ்டில் இவ்வாறு சிறப்பாக சகலதுறைப் பெறுபேற்றை வீரர்கள் பெற்று வருடங்கள் பலப்பல கடந்துவிட்டன.  

அலட் டேவிட்சன்- 1960ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிராக இடம்பெற்ற TIE டெஸ்ட் போட்டியில் 44 & 80 ஓட்டங்கள் + 11விக்கெட்டுக்கள்

89இல் அப்போதைய தலைவர் அலன் போர்டர் மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிராக 75 & 16 ஓட்டங்கள் + 11 விக்கெட்டுக்கள்


இளமைத் துடிப்போடு புதிய மாற்றத்துக்கான வழியை ஆரோக்கியமான முறையில் தென்னாபிரிக்க மண்ணில் வெற்றியோடு ஜோன்சன் முன்னெடுத்திருக்கும் அந்த வெற்றி,80களில் அலன் போர்டர் கட்டியெழுப்பிய அவுஸ்திரேலியாவை பொன்டிங்குக்கு மீள ஞாபகப்படுத்தும் என நினைக்கிறேன்.  
முதலாம் இனிங்சில் பொன்டிங்,கிளார்க்கின் அரைச்சதங்கள் தவிர டெஸ்ட் வெற்றி முழுக்க அவுஸ்திரேலியாவின் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்ட இளமை வெற்றி!  


இளமையின் வேகத்தோடு வெற்றியை ருசிபார்க்கப் புறப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவின் வெற்றி அலை அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கிறேன்.     

9 comments:

எட்வின் said...

ஆஸிக்கு வாழ்த்துக்கள். பீட்டர் சிடில் அற்புதமாக பந்து வீசினார் இரண்டாம் இன்னிங்க்சில்...

//அவுஸ்திரேலியாவின் கதை அவ்வளவுதான்!
இனி தென்னாபிரிக்காவா,இந்தியாவா என்று முடிவே பண்ணிவிட்டார்கள்!
// கிரிக்கெட்டில் எப்போ என்ன நடக்கும்னு ஊகிப்பது மிகக்கடினமே.

இங்கிலாந்து மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு காலியாகும் என யார் தான் ஊகித்திருக்க முடியும்... அது போன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவின் இறுதி ஒரு விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெறுமென நினைத்தது என்னவாயிற்று...

Anonymous said...

Aus back on track

Anonymous said...

:)

செவியன் said...

this is a good comeback from Aus

நிரூஜா said...

என்ன தான் Aus சிறப்பாக விளையாடி இருந்தாலும்... Smith இன் சில தவறுதலான முடிவுகள் (அல்லது வாய்ப்பு இருந்தும் சரியாக பயன்படுத்தாமை) தான் போட்டியை மாற்றி அமைத்தது என்றே நான் கருதுகின்றேன். referral முறையை அவர் சரியான சமயத்தில் பயன்படுத்தி இருந்தால் சிலவேளை போட்டியின் தன்மை மாறி இருக்கும்.

இன்னொன்றை கவனித்தீர்களா..., நடுவர் இரு முறை தவறுதலாக நடந்து கொண்டும், பெரிதாக ஒருவரும் நடுவரை ஒன்றும் சொல்ல வில்லை. Smith தை தான் வைந்தார்கள். இதன்மூலம் IIC இனிமேல் நடுவர்கள் தவறுதலாக தீர்ப்பு சொல்லலாம், அணித்தலைவர்களோ அல்லது குறிப்பிட்ட வீரரோ தான் அதனை சரியாக திருத்திக்கொள்ள வேணும் என சொல்ல விளைகின்றார்களோ...!!!!

நிரூஜா said...

இங்க பாருங்கையா..., நிகழ்ச்சி செய்யேக்கையும் ஒருத்தர் மின்னஞ்சல் பாக்கிறார்....!

மணிகண்டன் said...

Loshan, i have been reading your posts on cricket. All are good ones. Even after this victory, australia proves only to be a good team which is on par with some other test playing nations. Their bowlers are toiling to win the test matches like other nations ! So, let us wait for some test matches before bestowing the greatness to these young cricketers.

ARV Loshan said...

// எட்வின் said...
ஆஸிக்கு வாழ்த்துக்கள். பீட்டர் சிடில் அற்புதமாக பந்து வீசினார் இரண்டாம் இன்னிங்க்சில்...

//அவுஸ்திரேலியாவின் கதை அவ்வளவுதான்!
இனி தென்னாபிரிக்காவா,இந்தியாவா என்று முடிவே பண்ணிவிட்டார்கள்!
// கிரிக்கெட்டில் எப்போ என்ன நடக்கும்னு ஊகிப்பது மிகக்கடினமே.

இங்கிலாந்து மேற்கு இந்திய தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் 51 ஓட்டங்களுக்கு காலியாகும் என யார் தான் ஊகித்திருக்க முடியும்... அது போன்று மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவின் இறுதி ஒரு விக்கெட்டை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெறுமென நினைத்தது என்னவாயிற்று...//
ம்ம் உண்மை தான்..
ஆனால் இன்றும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலும் ஆஸ்திரேலியா வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்களே.
அதிலும் அந்த புதிய வீரர், நான் குறிப்பிட்டிருந்த ஹியூஸ் வேகமாகப் பெற்ற சதம் எப்படி? காணக் கண்கொள்ளாக் காட்சியன்றோ??


//
Nimal said...
Aus back on track//
அப்படித் தான் தெரியுது..


Thooya said...
:)//
:) :)

//
செவியன் said...
this is a good comeback from Aus//
ம்ம் .. புது இரத்தம் பாய்ச்சி freshஆ இருக்கிறார்கள்..

ARV Loshan said...

//
நிரூஜா said...
என்ன தான் Aus சிறப்பாக விளையாடி இருந்தாலும்... Smith இன் சில தவறுதலான முடிவுகள் (அல்லது வாய்ப்பு இருந்தும் சரியாக பயன்படுத்தாமை) தான் போட்டியை மாற்றி அமைத்தது என்றே நான் கருதுகின்றேன். referral முறையை அவர் சரியான சமயத்தில் பயன்படுத்தி இருந்தால் சிலவேளை போட்டியின் தன்மை மாறி இருக்கும்.

இன்னொன்றை கவனித்தீர்களா..., நடுவர் இரு முறை தவறுதலாக நடந்து கொண்டும், பெரிதாக ஒருவரும் நடுவரை ஒன்றும் சொல்ல வில்லை. Smith தை தான் வைந்தார்கள். இதன்மூலம் IIC இனிமேல் நடுவர்கள் தவறுதலாக தீர்ப்பு சொல்லலாம், அணித்தலைவர்களோ அல்லது குறிப்பிட்ட வீரரோ தான் அதனை சரியாக திருத்திக்கொள்ள வேணும் என சொல்ல விளைகின்றார்களோ...//

அது சரி தான்.. ஆனாலும் பெற்றுக் கொள்ளப்பட்ட பிரம்மாண்ட வெற்றிக்கு முன்னாள் ஸ்மித்தின் தவறுகள் சிறியவையே.. ;)

இன்னொன்று referrals என்று சொல்லப் படுகின்ற விடயம், ஒவ்வொரு தலைவரும் சமயோசித,சாதுரியத் தன்மைகளையும் பொறுத்து அமைகிறது. ஆட்டமிழப்புக்கள் கோரும் போது, சரியானவற்றுக்கு கோருவதும் தலைமைத்துவம் தானே.. ஸ்மித் அதில் சறுக்கி விட்டார்.

எனினும் பில்லி பௌடன் தொடர்ந்து தீர்ப்புக்களை சொதப்பி வருகிறார்.

//
நிரூஜா said...
இங்க பாருங்கையா..., நிகழ்ச்சி செய்யேக்கையும் ஒருத்தர் மின்னஞ்சல் பாக்கிறார்....!//
ஹீ ஹீ.. அது தான் திறமை.. (போட்டுக் குடுத்தாலும் பரவாயில்லை.. Chairman ஒண்ணுமே சொல்ல மாட்டார்)

//
மணிகண்டன் said...
Loshan, i have been reading your posts on cricket. All are good ones. Even after this victory, australia proves only to be a good team which is on par with some other test playing nations. Their bowlers are toiling to win the test matches like other nations ! So, let us wait for some test matches before bestowing the greatness to these young cricketers.//

Tx Manikandan.. :)
Still Australia stands taller above all the teams only cos of their bench strength.For example the way Hughes smashed the SA attack today.. I ll tell you these guys gonna go a round.:)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner