April 21, 2009

ஐயாவிடம் (கலைஞர்) மன்னிப்பு & 'ஐ'க்கு நன்றிகள்

                                                         படம் உபயம் - என்வழி

கலைஞர் ஐயா தயை கூர்ந்து என்னை மன்னியுங்கள்... 
கலைஞர் ஐயா நீங்கள் பெரியவர் – நான் அறியாமை நிறைந்த சிறுவன். உங்களைப் பற்றி மீண்டும் ஒரு தடவை தவறாக எழுதிவிட்டேன். பாமரர்களாகிய எம்மைப் போன்றோருக்கு உங்கள் சங்கத் தமிழின் மறைபொருள் அர்த்தம் புரியாமல் நேரடி அர்த்தம் மட்டுமே கொண்டுவிட்டேன்.

நேற்று என் பதிவு போட்ட பின் தான் உங்கள் மறுப்பறிக்கையை பார்த்தேன் ஐயா. 
நீங்கள் மறுபடி ஏதாவது மறுப்பறிக்கை விட்டுவிடுவீர்களோ என்று நான் எனது பதிவில் எந்தத் திருத்தங்களையும் மேற்கொள்ளவில்லை.

பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 06:40.44 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகளின் தலைவரை நண்பர் என்று சொன்னதாக தொலைக்காட்சி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது. 

இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர். 

கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று, ‘ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது'என்று விளக்கம் அளித்துள்ளார். 

மேலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு " இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக்கூறிக் கொண்டே இருப்போம்" என்றார்.


நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி
திங்கள்கிழமை, ஏப்ரல் 20, 2009, 12:39 [IST]
  
      

சென்னை: நான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

அதேசமயம், கருணாநிதி அடித்துள்ள தேர்தல் நேரத்து ஸ்டண்ட் இது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை.

தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.

என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.




உங்கள் 'நண்பரை' நீங்கள் 'ராஜீவ் கொலை' விடயத்தில் மன்னிக்கவே கூடாது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

ஆதாரம் - NDTV

நேற்று முன் தினமோ அவர் பயங்கரவாதியே அல்ல என்று நீங்கள் உங்கள் அதே வெண்கலக்குரலில் சொல்லியதைக் காணொளியாக NDTVயில் கண்டேன்.

அப்படியானால் அதன் அர்த்தமே உங்கள் தமிழில் வேறா ஐயா? அதுசரி நான் கற்ற தமிழ் உங்கள் முத்தமிழுக்கு முன்னால் வருமா?

எனது நண்பர் கஞ்சிபாய் கலைஞரின் அண்மைக்கால அறிக்கைகள் 'தொட்டால் பூ மலரும்' திரைப்படத்தில் என்னத்தே கண்ணையா சொல்கின்ற 'வரும்.... ஆனா வராது' என்பது போலவே இருப்பதாக நேற்று எனக்கு சொல்லியிருந்தார்.

தமிழினத் தலைவரை அப்படியெல்லாம் விஷமமாக வேடிக்கை பண்ணக்கூடாது என்று ஏசிவிட்டேன் அவரை!

கலைஞர் என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் அதில் ஒரு உள்ளார்ந்த அர்த்தமும், எதிர்காலத்துக்கான தொலைவு நோக்கும் இருக்கும் என்று நம்பும் கோடிக்கணக்கான தமிழர்கள் இருக்கின்றார்கள் என்று கஞ்சிபாய்க்கு புரியச்செய்தேன்.

ஆனால் ஒரு சில சந்தேகங்கள் ஐயா – 

பேட்டி கொடுக்கக் காரணமும், பின் அதை மறுத்து உங்கள் கட்சியினதும் உங்களினதும் எதிரிகள் NDTV நிறுவனத்தினர் என்று கோரிக்கை விடுவதும் எந்த சாணக்கியம்?

உங்கள் பேட்டி மூலமாக நீங்கள் பெற்ற ஆதரவை விட, மறுப்பறிக்கை மூலம் நீங்கள் அதிகமான எதிர்ப்பை பெற்றதாக அரசியல் அவதானிகள் சொல்கிறார்களே உண்மையா ஐயா?

ஸ்டாலின் பதவிக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது என்பதற்கான அறிகுறிகளா? 
சுப்ரமணியம் சுவாமியை ரொம்ப நாளாகக் காணலையே என்று பார்த்திருந்தால் நீங்கள் அவரையும் தூக்கி சாப்பிட்டு விடுவீர்கள் போல – 

இலங்கை இராணுவத் தளபதி சொன்னதில் தப்பில்லையே? (கோமாளிகள்.....)
(நன்றி ஆதிரையின் பின்னூட்டம்)

..................................................

IPL போட்டிகளை ஒளிபரப்பும் SONY MAX தொலைக்காட்சி எங்கள் வீட்டிலுள்ள கேபிளில் வருவதில்லை!

இதனால் IPL தொடக்கியும் எனக்குத் தொடங்காத மாதிரி ஒரு ஃபீலிங்! IPL தொடங்கிய அன்று எங்கள் அலுவலகத்தில் பிரிவுகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப்போட்டி இடம்பெற்றது. ( Inter Division Cricket Tournament) மாலை வரை அந்தப் பரபரப்பினாலும், எமது வெற்றி (நிகழ்ச்சி மற்றும் செய்திப்பிரிவுகள் இணைந்த) அணி 2ம் இடத்தைப் பிடித்த ஓரளவு திருப்தியும் IPL பரபரப்பைக் கூடியளவு மறக்கடித்துவிட்டது.

பின்னர் இரவு 9.30 வரை அலுவலகத்தில் இருந்ததனாலும், ஞாயிறும் அலுவலகப்பணி இரவு நேரம் இருந்ததனாலும் அலுவலகத்தில் Sony Max இணைப்பு இருப்பதனால் ஓரளவு போட்டி பார்க்க முடிந்தது.

எனினும் இரவு 7 மணி போல தொடர்பு கொண்ட நண்பரொருவர் தான் அந்த சந்தோஷமான, ஆறுதலான செய்தியை சொன்னார்...

இலங்கையின் அரச தொலைக்காட்சி 'CHANNEL EYE' IPLஐ இனித் தொடர்ந்து ஒளிபரப்பும் என்று!

'ஐ'க்கு நன்றி! நன்றி! நன்றி!

'ஐ'யில் பார்த்த முதல் போட்டியே எனக்குப் பிடித்த சென்னை சூப்பர் கிங்சுக்கு அபார வெற்றி. அதுவும் நம்ம ஹீரோக்கள் ஹெய்டனும், முரளியும் பெற்றுக் கொடுத்த வெற்றியில்லையா?

வயதேறினாலும் சிங்கங்கள் சிங்கங்கள் தான்!

இந்த IPL தொடங்கியதிலிருந்து இளம் வீரர்களைவிட சிரேஷ்ட வீரர்களான சச்சின், சனத், டிராவிட். கும்ப்ளே, வோர்ன், ஹெய்டன், முரளி என்று இளவயது வீரர்களின் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் T - 20ஐயெ மாற்றிப் போட்டு பின்னியெடுக்கிறார்கள்!

'ஐ' மூலமாக என் வீட்டிலும் இனி IPL திருவிழா தான்!

CSK இன் வெற்றிப்பயணம் தொடரட்டும்!


26 comments:

Anonymous said...

எதுக்கு நடுவுல நீங்க மூக்குடை படுறீங்க..

என்ன கொடும சார் said...

//IPL போட்டிகளை ஒளிபரப்பும் SONY MAX தொலைக்காட்சி எங்கள் வீட்டிலுள்ள கேபிளில் வருவதில்லை!//

யார் வீட்டு CABLE இலும் வருவதில்லை.. வந்தால் tv இல் தான் வரும். அதுவும் காசு கட்டி நல்ல PACKAGE எடுத்தால் எல்லாம் வரும்..

//'ஐ'க்கு நன்றி! நன்றி! நன்றி!//
ரிப்பீட்டு

//எனக்குப் பிடித்த சென்னை சூப்பர் கிங்சுக்கு //

இந்த நம்பிக்கையிலதான் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் விரும்பியபடி பேசுகிறார்கள்.. என்ன செய்தாலும் ஆதரவு அவங்களுக்கு தானே..

எனக்கு பிடித்தது rOYAL Challengers . Team இல்லப்பா, Cheer Girls!

கிருஷ்ணா said...

ஐயாவோடு சேர்த்து நிறையப் பேருக்கு அறளை பெயர்ந்துவிட்டது என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அதனால் அனுதாபப்படத்தான் முடிகிறது. NDTV நேர்காணலில் ஐயா அருகில் இருந்த அம்மணி(கனிமொழி)யாவது கொஞ்சம் அவரைக் கவனிக்கக்கூடாதா?

அடுத்ததாக ஜெயா தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கப்போகிறாராமே! உண்மையாக இருக்குமோ?

maalmarugan said...

இந்த போட்டி நடைபெறுவது தென்னாபிரிக்காவில் என்றபடியால் இந்திய இளம் வீரர்களை விட அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களே போட்டி முடிவுகளை தீர்மானிக்கும் காரணிகளாக அமைவர்

ஆதிரை said...

ஐயா.., எங்களுக்கும் தான் முதுகு வலிக்கிறது. நீங்கள் பின்னால் இருந்து குத்தும் ஒவ்வொரு குத்துக்கும்...
:(

என்ன கொடும சார் said...

கவிதைக்கு பொய்யழகு...

இது கூட தெரியல உங்களுக்கு.. பாவம்...

சயந்தன் said...

நீங்கள் போட்ட படத்தில்

வெற்றி கண்ணை மறைக்கிறது.

சி தயாளன் said...

:-)))

Anonymous said...

கோமாளிகள்.....

இந்தியர்கள் கோமாளிகள்தான், இலங்கையர்கள்????

30 ஆண்டுகளில் ஒரு பிரச்சனைக்கு பல முறை கை கூடி வந்த தீர்வை தவற விட்டு இன்று போரில் செத்து மடியும் இலங்கையர்கள் "மூடர்கள்" / "முட்டாள்கள்" / "தனி மனித போற்றிகள்" இன்னும் பிற....

Manikandan AV said...

சரி விடுங்க. மாத்திரை போடா மறந்துருப்பாறு பெரியவரு...அதை போய்... ;P

attack pandiyan said...

காங்கிரசு களவாணிகளை எதிர்க்க செருப்புடன் தயாராகி விட்டோம் !!! இனி இவர்களை விடகூடாது! டெல்லியிலே குந்தி இந்தி கற்று அங்கேயே இந்திகாரனாக மாறி அங்கேயே தேரதலில் நின்று ஓட்டல் சப்ளையர் சோனியா மைனாவின் முந்தானையை பிடித்து தொங்கட்டும்.... தமிழ்நாட்டினுள் விடக்கூடாது காங்கிரசுக்கு கை கொடுப்பவனும் களவாணிதான்... இங்கிலாந்து ஆல்ம் ஆக்டேவியன் கியுமில் இருந்து கேம்பிரிட்சு யுனிவர்சிட்டி கேண்டின் ஓட்டல் சப்ளையர் இத்தாலி சனியன் சோனியா மைனா வரை காங்கிரசு வரலாறே தமிழின துரோகம் தான் துரோகிகளை ஒழிப்போம் தமிழ்நாட்டை காப்போம்!!!

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

என்னதான் சொனாலும் அரசியல் வாதிங்க மனம் திறந்து தங்களின் கருத்து வெளியிடப் போவதில்லை எல்லாம் அரசியல். அணைப்பதும் உதைப்பதும் தங்கள் நலன்களுக்காகவே

Anonymous said...

நிரந்தர போர் நிறுத்தம் கோரி 23ல் பொதுவேலைநிறுத்தம்::கலைஞர்
http://www.ponmaalai.com/2009/04/23.html

ilhamaran said...

தயவு செய்து நம் தாயக மக்களுக்காக இங்கே வாக்களிக்கவும்


link here

Anonymous said...

பிரபாகரன் எனது நண்பர் என்று கருணாநிதி சொல்லியதை நீங்கள் உங்கள் செவியால் கேட்டாயா???

ARV Loshan said...

Anonymous said...
எதுக்கு நடுவுல நீங்க மூக்குடை படுறீங்க..//
என்ன செய்யிறது? எங்க கடன் பணி செய்து கிடப்பதே....
மு.க வை விடவா நான் மூக்குடை பட்டிட்டேன்?

=====================

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
//IPL போட்டிகளை ஒளிபரப்பும் SONY MAX தொலைக்காட்சி எங்கள் வீட்டிலுள்ள கேபிளில் வருவதில்லை!//

யார் வீட்டு CABLE இலும் வருவதில்லை.. வந்தால் tv இல் தான் வரும். அதுவும் காசு கட்டி நல்ல PACKAGE எடுத்தால் எல்லாம் வரும்..//

ரொம்ப தெளிவா இருக்கீங்க... அறிவுக்கொழுந்து.. உங்களை நினைச்சாலே சின்னக்கவுண்டர் படத்தில வந்த செந்தில் தான் ஞாபகம் வருது.


//எனக்குப் பிடித்த சென்னை சூப்பர் கிங்சுக்கு //

இந்த நம்பிக்கையிலதான் தமிழ் நாட்டு அரசியல் வாதிகள் விரும்பியபடி பேசுகிறார்கள்.. என்ன செய்தாலும் ஆதரவு அவங்களுக்கு தானே.. //
அணிக்குத்தாம்பா ஆதரவு! எனக்குப் பிடித்த முரளியும், ஹெய்டனும் விளையாடுகிறார்களே... அத்துடன் அங்குள்ள மக்களுக்கு தசையாடும் போது எங்களுக்கு ஆடாதா? பேசும் மொழியாவது ஒன்றுதானே... சமயத்துக்காகவே பலபேர் பல அணிகளுக்கு ஆதரவு தரும்போது மொழிக்காக support பண்ணினால் தப்பில்லையே MR.EKSAAR?


//எனக்கு பிடித்தது rOYAL Challengers . Team இல்லப்பா, Cheer Girls!
உங்களைப் பற்றி தெரியாதா? உங்க அணி நல்லா ஆடுறாங்களே... Team இல்லைப்பா...Cheer girls....

ARV Loshan said...

கிருஷ்ணா said...
ஐயாவோடு சேர்த்து நிறையப் பேருக்கு அறளை பெயர்ந்துவிட்டது என்று இங்குள்ளவர்கள் சொல்கிறார்கள். அதனால் அனுதாபப்படத்தான் முடிகிறது. NDTV நேர்காணலில் ஐயா அருகில் இருந்த அம்மணி(கனிமொழி)யாவது கொஞ்சம் அவரைக் கவனிக்கக்கூடாதா? //
ஐயாவிற்கு அறளை பேந்திட்டுதோ என்னவோ. ஐயாவை சேர்ந்தவர்களுக்கு எல்லாமே பெயர்ந்திடும். கனிமொழி வழி கலைஞர் வழியில்லையா? ஐயா பொன்மொழிகளை உதிர்த்தபோது அமைதி காத்திருப்பாங்க.....


அடுத்ததாக ஜெயா தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கப்போகிறாராமே! உண்மையாக இருக்குமோ?//
சொல்ல முடியாது.... அங்கே போய் ஜெயலலிதா தனது நண்பி என்று சொன்னாலும் ஆச்சரியமில்லை.

ARV Loshan said...

maalmarugan said...
இந்த போட்டி நடைபெறுவது தென்னாபிரிக்காவில் என்றபடியால் இந்திய இளம் வீரர்களை விட அனுபவம் வாய்ந்த சர்வதேச வீரர்களே போட்டி முடிவுகளை தீர்மானிக்கும் காரணிகளாக அமைவர்//
உண்மைதான்! அனுபவமே தென் ஆபிரிக்கா ஆடுகளங்களில் ஜெயிக்க மூலமந்திரம்

===========================
ஆதிரை said...
ஐயா.., எங்களுக்கும் தான் முதுகு வலிக்கிறது. நீங்கள் பின்னால் இருந்து குத்தும் ஒவ்வொரு குத்துக்கும்...
:(//
நெத்திப்பொட்டில் அடித்தது போல் சொன்னீர்கள் ஆதிரை! கலைஞரின் பெயரும் எமது வரலாற்றில் இருக்கும்.
இன்று மறுபடியும் உண்ணாவிரதம் ஆரம்பிச்சிருக்காரே..

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
கவிதைக்கு பொய்யழகு...//

எதைக் கவிதை என்று சொன்னீங்க? 'நண்பன்' என்றதையா? 'நான் சொன்னதைத் திரிபு படுத்தி விட்டார்கள்' என்றதையா?


//இது கூட தெரியல உங்களுக்கு.. பாவம்...//
எல்லாம் தெரிஞ்சுவச்சிருக்க நான் என்ன கலைஞரா என்ன... நான் கத்துக்குட்டி சார்....

ARV Loshan said...

சயந்தன் said...
நீங்கள் போட்ட படத்தில் வெற்றி கண்ணை மறைக்கிறது.//

ஹாஹா கலைஞரின் கண்ணைத்தானே.... நாற்பதில் எத்தனை மறையும் என்பதைத் தீர்மானிப்பவர் நாமில்லையே என்பதில் அப்படியொரு நம்பிக்கை.

===================
Suresh said...
உங்க பதிவு மிக அருமை ...//
நன்றி நண்பரே.


After Reading this post i have become ur follower,

If you like my posts you can follow me ;) hope u like it//

நானும் வாசித்தேன். தொடர்கிறேன்.

ARV Loshan said...

’டொன்’ லீ said...
:-)))//

இப்போ திருப்தியா?
================


Anonymous said...
கோமாளிகள்.....

இந்தியர்கள் கோமாளிகள்தான், இலங்கையர்கள்????

30 ஆண்டுகளில் ஒரு பிரச்சனைக்கு பல முறை கை கூடி வந்த தீர்வை தவற விட்டு இன்று போரில் செத்து மடியும் இலங்கையர்கள் "மூடர்கள்" / "முட்டாள்கள்" / "தனி மனித போற்றிகள்" இன்னும் பிற....//

உண்மைதான்... ஏற்றுகொள்கிறோம்.... இல்லாவிட்டால் இப்போதும் இப்படியே இருப்போமா, உங்களைப் போல ஒரு பெரியவரே வந்து சொல்லும் போது உண்மையை ஏற்பதில் என்ன தயக்கம்? அது சரி நீங்க ஏன் அனானியாக?

Anonymous said...

டேய், கருணாநிதி! நீ மனிதப்பிறவிதானா??
---------------

தமிழீழத்துத் தாய்மாரின் சாபம்!
----------------
இன்று காலை திடீரென்று உண்ணாவிரதமிருப்பதாக நாடகமாட ஆரம்பித்த கருணாநிதியே! இப்போது சட்டென்று அதை முடித்துக்கொண்டு 'பழரசம்' அருந்தியிருக்கிறாயே!

அது மட்டுமல்லாமல் இலங்கை இனவெறி இரத்தவெறி மகிந்த ராஜபக் ஷ அரசு போர் நிறுத்தம் செய்வதாக வேறு புரளியைக் கிளப்பியிருக்கிறாயே!

என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாய் நீ??

இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது இன்று அதிகாலை முதல் இரசாயன குண்டுகளை வீசீ கொலைவெறி தாக்குதல் நடத்திக்கொண்டு இனவெறிச் சிங்கள இராணுவம் 'பாதுகாப்பு' வலயத்தில் நுழைய முயல்கிறதே..

ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இன்று காலை முதல் கொன்று குவித்திருக்கிறதே!

நீ என்னடா இதையெல்லாம் மூடி மறைத்து புதுக் கதை விடுகிறாய்??

டேய் நீ நாசமாத்தான்டா போவாய்.

உன்னுடைய மகள் NDTV க்கு எவ்வளவு பெரிய பொய்யைச் சொல்லியிருக்கிறாள் தெரியுமா?

இலங்கை அரசு எப்போதடா யுதத் நிறுத்தம் அறிவித்தது?

நாயே!!!

நீங்கள் குடும்பத்தோடு நாசமாய்ப் போவீர்களடா!

பெத்த வயிறு எரிஞ்சு சாபம் போடுறனடா!!!

புழுப்பிடிச்சுப் புழுத்துத்தாண்டா போவீங்கள் நாசமறுவான்களே!!

ARV Loshan said...

Its Me The Monk said...
சரி விடுங்க. மாத்திரை போடா மறந்துருப்பாறு பெரியவரு...அதை போய்... ;P//

எதுக்கான மாத்திரைங்க? நட்பு மாத்திரையா நடப்பு மாத்திரையா?

==================

attack pandiyan said...
காங்கிரசு களவாணிகளை எதிர்க்க செருப்புடன் தயாராகி விட்டோம் !!! இனி இவர்களை விடகூடாது! டெல்லியிலே குந்தி இந்தி கற்று அங்கேயே இந்திகாரனாக மாறி அங்கேயே தேரதலில் நின்று ஓட்டல் சப்ளையர் சோனியா மைனாவின் முந்தானையை பிடித்து தொங்கட்டும்.... தமிழ்நாட்டினுள் விடக்கூடாது காங்கிரசுக்கு கை கொடுப்பவனும் களவாணிதான்... இங்கிலாந்து ஆல்ம் ஆக்டேவியன் கியுமில் இருந்து கேம்பிரிட்சு யுனிவர்சிட்டி கேண்டின் ஓட்டல் சப்ளையர் இத்தாலி சனியன் சோனியா மைனா வரை காங்கிரசு வரலாறே தமிழின துரோகம் தான் துரோகிகளை ஒழிப்போம் தமிழ்நாட்டை காப்போம்!!!//

பாண்டி.... பார்க்கலாம்... தமிழக மக்கள் பேயிடமிருந்து பிசாசிடம் கொடுக்கிறார்களா புதிதாக ஏதாவது ஒருவரிடம் கையளிக்கிறார்களா என்று..

ARV Loshan said...

R.V.Raj said...
என்னதான் சொனாலும் அரசியல் வாதிங்க மனம் திறந்து தங்களின் கருத்து வெளியிடப் போவதில்லை எல்லாம் அரசியல். அணைப்பதும் உதைப்பதும் தங்கள் நலன்களுக்காகவே//

ஆமாமா.... பட்டறிவு தான் பெரியது... பகுத்தறிவு எல்லாம் பயன்தராது.

==================

Anonymous said...
பிரபாகரன் எனது நண்பர் என்று கருணாநிதி சொல்லியதை நீங்கள் உங்கள் செவியால் கேட்டாயா???//

NDTVயில் மறுபடி மறுபடி ஒளிபரப்பியதை உலகமே பார்த்தும், கேட்டதே – 'செம்மொழி' தமிழிலும் - ஆங்கிலத்திலும் கலைஞர் அறுத்துறுத்து சொன்னாரே? ஏன் நீங்க பார்க்கலையா? பார்த்தும் நம்பலையா?

ARV Loshan said...

மர்மயோகி உங்கள் கொதிப்பு புரிகிறது.. ஆரால் என்ன செய்ய முடியும்.. அமெரிக்காவுக்கே சொன்னவர்களாயிற்றே எங்கள் இலங்கை அரசினர்.. எல்லாம் எங்கள் தலைவிதி..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner