April 06, 2009

அயன் - நான் guarantee !!! ஒரு முழுமை விமர்சனம்

Loshan


'அயன்' திரைப்படம் வந்தவுடனேயே இரண்டாவது காட்சியே பார்த்துவிட வேண்டும் (முதல் காட்சி எப்படியும் பார்க்க முடிந்திருக்காது) என்று நான் முடிவெடுக்க ஒன்றல்ல – பல காரணங்கள் 
அண்மைக்காலத்தைய சூர்யா படங்கள் கொடுத்த திருப்தியும் நல்ல ரசனையும்,'அயன்' படப்பாடல்கள் அத்தனையுமே பிடித்தமானதாக இருந்ததும்,அசினுக்குப் பிறகு நம்ம ரசனைக்குரியவராக அண்மைக்காலமாக தமனா மாறியிருப்பதுவும்,கே.வி.ஆனந்தின் முன்னைய 'கனாக் கண்டேன்'கொடுத்த நம்பிக்கையும் தான்.

படத்தின் ஆரம்ப எழுத்தோட்டத்திலேயே பல நாடுகளில் எடுக்கப்பட்ட படம் என்பதை மிகத் தெளிவாக,நுட்பமாகக் காட்டிவிடுகிறார் ஆனந்த்.அசத்தலான பிரமாண்டம் அது! 

stylish ஆன சூர்யாவின் அறிமுகமும் அதிலேயே corporate கம்பெனிகளுக்கு கொடுக்கும் சாட்டையடியும்,பொன்வண்ணன் - பிரபு போன்றோர் அறிமுகமாவதுமே திரைப்படம் ஒரு வித்தியாசமான பாதையில் செல்லப்போகிறது என்ற நம்பிக்கையைத் தந்து நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

                                       Loshan
அப்படியே பரபர வேகம்... 'பளபள' பாடலும் பரபரக்கிறது. நடனக்காட்சி அமைப்புக்கள்,நடன அமைப்புக்கள்,குறிப்பாக பல்வேறு கெட் அப்பில் வரும் சூர்யாவும்,பல நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளும் அசத்துகிறது.

கோங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படியொரு இயல்பு!

முதல் தடவையாக தமிழ் சினிமாவின் கமெரா படாத ஆபிரிக்க மண்ணைத் தொட்ட ஆனந்தின் கமெராவுக்கு வாழ்த்துக்கள்.. (ஆனால் படத்தில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார் M.S.பிரபு - திருத்தம் நன்றி இரா.பிரஜீவ்) 

குறிப்பாக அந்த துப்பாக்கிச் சூட்டுக் காட்சியில் எனக்கொரு கணம் எம் நாட்டின் நினைவு வந்து போனது.  
ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றுக்கும் எங்கள் நாட்டுக்குமிடையில் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது உண்மைதான்.

வசனங்களிலேயே பல விஷயம் சொல்லி விடுகிறார். இன்னும் கொஞ்சம் நீண்டிருந்தாலும் சலிப்பைத் தந்துவிடக் கூடிய அபாயத்தை புரிந்து கொண்டு காட்சிகளின் வேகத்தினால் சுவாரஸ்யமாக்கியிருக்கிறார் இயக்குநர்.

கதை,திரைக்கதை சுபா என்றால் இது போல இருக்கும் என்பது எதிர்பார்க்கக் கூடியதே.. பரபர வேகத்துக்கு ஆனந்தின் ஒளிப்பதிவும்,அண்டனியின் படத்தொகுப்பும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.. 

பிரபு - கம்பீரம் திரைப்படத்தின் தூண்களில் ஒருவர். சூர்யா கொஞ்சம் வேகம் - கொஞ்சம் விளையாட்டு என்றிருப்பதனால் பிரபுதான் திரைப்படத்தின் மையம் என்று பலவிடயங்களில் தோன்றுகிறது. உனக்கும் எனக்கும்,பில்லாவுக்கு பிறகு பிரபு பெருமைப்படக் கூடிய ஒரு பாத்திரம்! கண்களிலேயே பேசும் போது தந்தையார் சிவாஜி தெரிகிறார்.

எனினும் பிரபு ஒரு கடத்தல் பெரும்புள்ளியாக இருந்தும் இரு அடியாட்களோடு மட்டும் அவரை உலவ விட்டு சொதப்பி இருக்கிறார் இயக்குனர்.. ஏன் ஏன் ஏன்?

வில்லனை நல்லவேளை 'சேட்' ஆக காட்டியது! நிறைய பெண்களையே பொறாமைப்பட வைக்குமளவுக்கு அழகான நேரான முடி! 
மனிதர் கலக்குகிறார்! மிரளவும் வைக்கிறார். எனினும் வித்தியாசம் என்று எதுவுமில்லை.

கனாக்கண்டேனில் - பிருதிவிராஜ் வந்த அளவுக்கு மீண்டும் கே.வி.ஆனந்திடம் எதிர்பார்த்து என் தப்புத்தான்!
தாய் ரேணுகா பாத்திரம் மூலமாக நிற்கிறார்.. பிரபுவை வையும் இடமெல்லாம் எங்கே flashback போட்டு அறுக்கப் போகிறார்களோ பார்த்தால் நல்ல காலாம் அப்படி எதுவும் செய்து சொதப்பவில்லை..  

ஜெகன் தன் 'வீட்டிற்கு' கூட்டிப் போவது கலகல கலாட்டா!
ஆனால் கூத்துப்பட்டறையின் திறமையான கலைராணிக்கு ஒரு டப்பா பாத்திரம்.. ஏன் இந்தக் கொடுமை?

முதல் தரம் பட்ட 'பலான' அனுபவத்தையே சூர்யா இரண்டாவது தடவை உண்மை வீட்டிலே காட்டுமிடத்தில் இதுவரை எந்த கதாநாயகிக்கும் இல்லாத அறிமுகக் காட்சி தமன்னாவுக்கு! 
அது ஒரு வித்தியாசமான டூ பீஸ்! (ஜொள்ளர்களே படம் பாருங்க ... )

அசின் மும்பை பக்கமே போனால் அவர் வெற்றிடம் நிச்சயம் தமன்னாவுக்குப் போகும் என்று அடித்து சொல்லும் முதல் நபராக நானும் இருப்பேன்! குறும்பு காதல் சோகம் கோபம் அவற்றுடன் கவர்ச்சியும் தேவையான அளவு பொருத்தமான இடங்களில் வெளிப்படுகிறார்.

                                           Loshan

நல்லா மேலே வாங்கக்கா!

(ஆனால் ஏதோ ஒரு minus இருப்பதாக மனசு சொல்லுது என்னவென்று சரியாகக் கண்டுபிடிச்சு எனக்கு மின்னஞ்சலில் அனுப்புவோருக்கு என் சார்பில் நண்பர் காலாண்டி பரிசு கொடுப்பார்.)

தமிழ்த்திரைப்பட இயக்குனர்களுக்கு 'பில்லா' வின் பிறகு மலேசிய மேனியா பிடிச்சிருக்கு போல – 'அயன்'இலும் பாடல்களுடன் மட்டுமல்லாமல் ஜெகனை சாகடிக்கவென்றே மலேசியாவுக்கு கூட்டிப்போகிறார்கள். எனினும் ஆபிரிக்காவில் அசத்தும் காட்சிகள் போல மலேசியக் காட்சிகள் இல்லை!

விஜய் டிவி புகழ் ஜெகனுக்கு முதல் முறையாக ஒரு நல்ல நீண்டநேரம் வரக்கூடிய பாத்திரம் ஜெகனின் ஜொலிக்கிறார்.

                                   
                                      Loshan
ஜெகனுக்கு இனிமேலாவது நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்!  சூர்யா gap விடும் இடமெல்லாம் மனிதர் பட்டை கிளப்புகிறார்! அவரது timing sense of humour அபாரம்! சீனியர் கருணாவையும் ஓரங்கட்டி விடுகிறார்.
ஜெகன் தன் தங்கையை சூர்யா லவ்வும்போது மாமாவாக மாறிப்போவது நல்ல காமெடி.. நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)

ஜெகன் பற்றி எனது முன்னைய பதிவொன்றுக்கு இங்கே சொடுக்குங்கோவ்..

சூர்யா – smart & class ! அவரது துள்ளல்,துடிப்பு,நடிப்பு நகைச்சுவை அனைத்துக்குமேற்ற மற்றுமொரு படம்! பல இடங்களில் விஜய்,அஜித் பட formulaக்கள் தெரிந்தாலும் சூர்யாவின் தனித்துவம் எல்லாவற்றையும் மறக்கடித்து விடுகிறது.


                                     Loshan
சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். எந்த ஒரு கெட் அப்பும்,ஆடைகளும் அவருக்கு பொருந்தி விடுகிறது.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருந்தால் சிலவேளை போலிவூடில் ஷாருக்கான்,சல்மான் கான்,ஆமிர்கானுக்கெல்லாம் சவால் விட்டிருப்பார்..

'குருவி' விஜய் மாதிரியே பறக்கிறார்; பாய்கிறார்..சில இடங்களில் காதில் பூச்சுற்றினாலும் விஜய்க்கும் அவருக்கும் ஒரே வித்தியாசம் - அவருக்கு எவ்வளவு பாய்ந்தாலும் காயம் வராது - இவருக்கு காயமும் வருதே!

அக்ஷன் காட்சிகளில் அசத்தும் அதே அளவுக்கு ஆட்டம் ஒட்டம் தமன்னாவுடன் காதல் பொன்வண்ணனிடம் பதுங்கலிலும் பின்னி மினுங்குகிறார்.

தனக்கென்று தனி formulaவை வைத்துக் கொள்ளாமல் இப்படியே வேறுபட்ட கதைகளை மாற்றி மாற்றி எடுத்தால் என்ன வேடத்தில் சூர்யா நடித்தாலும் யாரும் ஏற்றுக்கொள்வார்கள்.

அந்த நகைக்கடை முதலாளி நம்ம S.P.முத்துராமனா? மனிதர் இணை தயாரிப்பாளர் என்று பெயரையும் போட்டுக் கொண்டதோடு பார்ட் டைமாக இனி நடிக்கவும் ஆரம்பிக்கலாம்.. 

ஹரிஸ் ஜெயராஜ் பாடல்கள் போலவே பின்னணி இசையிலுத் பிளந்து கட்டினாலும் ஒரு சில இடங்களில் சொதப்புகிறார்.. எனினும் பல இடங்களில் இவரை விட்டால் ரஹ்மானையும் மிஞ்சிவிடும் அபாரம்!

'விழிமூடி' பாடல் டச்சிங் ரகம் என்றால்,'அய்யய்யோ' - அட்டகாசம்; 'நெஞ்சே' காட்சிகளின் ரம்மியம். ஹரிஸின் இசையை அனுபவித்து –பாடல் வரிகளை ரசித்து ஆழ்நது படமாக்கியிருக்கிறார்கள்.

                                   Loshan
80களில் சகலகலாவல்லவன்,முரட்டுக்காளை பின்னர் அண்மையில் ஜெமினி என்று அடிக்கடி தமிழ் திரையுலகின் போக்குகளை மாற்றி வந்துள்ள AVM நிறுவனம் அயன் மூலமாக மேலும் ஒரு மாற்றம் கொண்டுவரும் போலுள்ளது..

படத்தை பார்த்துக் கொண்டு போகும் போது எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மெக்சிகனோ அல்லது ஸ்பானியப் படமோ ஞாபகம் வந்தது.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் DVD சுட்டு படமாக்குகிறார்கள் என்று விலாவாரியாகக் காட்டியதும் உங்களையும் சேர்த்தா K.V.ஆனந்த்?

அதிலும் வில்லனும் வில்லனின் காட்சிகளின் ஸ்பானிய பாணி பின்னணி இசையும் ஆபிரிக்காவின் சில காட்சிகளும் பல கடத்தல் காட்சிகளும் அந்த ஒரிஜினல் படத்தையே அடிக்கடி ஞாபகப்படுத்துது. 
ஆனால் பெயர் மட்டும் வருவதில்லையே!

கடத்தலில் இப்படி இப்படியெல்லாம் வழிகளுண்டா?

சுங்கத்தினரும் கடத்தல்காரர்களும் அயனுக்கும் ஆனந்துக்கும் நன்றி சொல்வார்கள் - அல்லது வெளில வாய்யா வச்சுக்கிறோம் என்பார்கள் -

வேறெந்நத் தமிழ்படத்திலும் இதுவரை பார்க்காதளவுக்கு கடத்தலை அக்குவேறு ஆணிவேறாகப் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார் - ஒருவேளை அனுபவமோ?

கிளைமாக்ஸ் காட்சி கூட பல ஹொலிவூட் படங்களை ஞாபகப்படுத்தியது.  நிறைய LOGIC ஓட்டைகள் இருந்தாலும் கூட சுவாரஸ்யத்தில் ஒன்றுமே உறுத்தவில்லை.

பாடல்காட்சிகளில் நேர்த்தி & நயம்.ஒவ்வொன்றிலுமே கலைநயம்,வெளிநாட்டுப் பயணம்,பணச் செழுமை தெரிகிறது.

அறிவுரை சொல்லும் காட்சியொன்றில் இயக்குனர் சங்கரையும் வருகிறார்!  

ஆனால் அண்மைக்காலத்தில் நான் பார்த்த படங்களின் தொடக்கம் முதல் முடிவு வரை தொய்வில்லாமல் ரசித்த ஒரு படம் அயன்!

ஜாலியாக ஒரு 2 ½ மணிநேரத்தை ரசிக்க 'அயன்' Jolly guarantee ! 

டிஸ்கி - படம் முடிந்து வெளியே வரும் நேரம் அடை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை என்று நண்பர் காலாண்டி முணுமுணுத்தது இன்னும் எதிரொலிக்கிறது..   





32 comments:

Anonymous said...

//நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)//


ஏன்னய்யா இன்னும் இந்த ஆசை விடேலய்யே... இதுக்காகவே உங்க பிளைட் எடுத்து வந்து அண்ணியிட்ட போட்டுக்கொடுக்க வேணும் மாதிரி இருக்கு... செய்யவே?

//டை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை//
நண்பன் என்டு சொன்னத நம்பிட்டன்.. உண்மையாத் தான்... நற நற..... ச்சா 5ம் நம்பர் ஜொள்ளு என்டு சொன்னது உண்மையா... ஆனால் நான் ஜொள்ளு இல்லையே ;-)

FunScribbler said...

//சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். //

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

-சூர்யாவை பிடிக்காத, தோனி ரசிகை மன்ற செயலாளர்.

இரா பிரஜீவ் said...

லோஷன் அண்ணா, எல்லாமே சரி தான். ஆனா ஒரே ஒரு தவறு... படத்தின் ஒளிப்பதிவாளர் KV ஆனந்த் அல்ல, MS பிரபு என்னபதே சரியானது. ஆனந்தின் முதல் படத்திலும் சௌந்தரராஜன் எனற அவரின் உதவியாளரைத்தான் ஒளிப்பதிவாளர் ஆக பயன்படுத்தினார்.

ப்ரியா பக்கங்கள் said...

அப்போ நாங்க அயனை பார்க்கலாம் .:) நம்ம கனவு கன்னி இப்போ தமன்னா ஆச்சே..
அதிகாலை நித்திரையிலும் வந்து ஜொள்ளு விடுறா.. பார்த்தா தான்
.. நிம்மதியா தூங்கலாம் போல கிடக்கு!!

ARV Loshan said...

Triumph said...
//நல்ல காலம் எனக்கும் தங்கைகள் இல்லை. எனது நெருங்கிய நண்பர்கள் யாருக்குமே தங்கைமார்,அக்காமார் இல்லை.. ;)//
ஏன்னய்யா இன்னும் இந்த ஆசை விடேலய்யே... இதுக்காகவே உங்க பிளைட் எடுத்து வந்து அண்ணியிட்ட போட்டுக்கொடுக்க வேணும் மாதிரி இருக்கு... செய்யவே?//

என்ன நடந்துது தங்கச்சி.. (ஆகா தப்பிடுவேன்) நல்லா தானே சொல்லி இருக்கிறேன்.. நல்ல காலம் என்று தானே சொன்னேன்? அண்ணன் மனசு (உடம்பு) தாங்காதம்மா.. வேணாம்..


//அடை மழைக்கிடையில் சூர்யாவின் ஸ்டாண்டை விட நானும் நண்பர்களும் ஓடி பாய்ந்து நனையாமல் என் வாகனத்தை தேடி ஏறியது,எந்த ஒரு HOLLYWOOD படத்திலுமே இதுவரை வந்திருக்காது.. ஆனால் ஒன்றிரண்டு பெண்கள் மாத்திரமே படம் பார்க்க வந்திருந்தது கொடுமை//
நண்பன் என்டு சொன்னத நம்பிட்டன்.. உண்மையாத் தான்... நற நற..... //

நண்பன் எண்டு சொன்னதை நம்பியுமா? இப்ப நான் நற நற நற..

//ச்சா 5ம் நம்பர் ஜொள்ளு என்டு சொன்னது உண்மையா... ஆனால் நான் ஜொள்ளு இல்லையே ;-)//
யார் சொன்னா? அது நட்புக்கான நம்பர்.. ஓ நீங்களும் ஐந்தா?
பி.கு அந்த profile pic கலக்கல்.. ;) (உண்மையாத் தான்)

=========================================


Thamizhmaangani said...
//சூர்யா பார்க்கும் போது சில நேரங்களில் தோனி போல இருக்கிறார். //

இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

-சூர்யாவை பிடிக்காத, தோனி ரசிகை மன்ற செயலாளர்.//

இது நல்ல கதையா இருக்கே,..சூர்யாவைப் பிடிக்காமலும் பெண்களா? நம்பமுடியவில்லை..

நான் பார்த்தேன் தோனி பிடிக்காத பெண்கள் தான் போர்க்கொடி தூக்குவாங்கன்னு..

ARV Loshan said...

இரா பிரஜீவ் said...
லோஷன் அண்ணா, எல்லாமே சரி தான். ஆனா ஒரே ஒரு தவறு... படத்தின் ஒளிப்பதிவாளர் KV ஆனந்த் அல்ல, MS பிரபு என்னபதே சரியானது. ஆனந்தின் முதல் படத்திலும் சௌந்தரராஜன் எனற அவரின் உதவியாளரைத்தான் ஒளிப்பதிவாளர் ஆக பயன்படுத்தினார்.//

ஆமாம் பிரஜீவ் திருத்திக் கொள்கிறேன்.. நன்றி..

நான் பொதுவாக ஆனந்தின் கமெரா என்று பயன் படுத்தியது அவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனராக மாறியதாலேயே.. எனினும் தெளிவாக இடுகிறேன்..

============================

Priyan said...
அப்போ நாங்க அயனை பார்க்கலாம் .:) நம்ம கனவு கன்னி இப்போ தமன்னா ஆச்சே..
அதிகாலை நித்திரையிலும் வந்து ஜொள்ளு விடுறா.. பார்த்தா தான்
.. நிம்மதியா தூங்கலாம் போல கிடக்கு!!//

நிச்சயமாக.. அது சரி நீங்க உங்க தமன்னா எண்டு சொன்னது 'அவங்கள' தானே? அடிக்கடி சொல்லுறீங்கலாமே.. ;) சரி சரி அயன் பார்த்திட்டு சொல்லுங்க..

Unknown said...

Hai loshan,

I like your review about "Ayan"
Hope to see near by!!!(not u & i said abt film hi hi hi.....)

First time Commenting
Neenga Akka thangachiyoda pirakaatiyum naanga ellorume unkalukku sisters maathiri thane..
dont worry much ..
nanga anna iku help pannuwam..
i read your bloggs daily though never tried to write comments, but today finally did it
we like thammana too!!!

Ps: try to learn tamil typing soon and write comments in tamil later :)

Kinds
Theepa

பாசகி said...

///இது நல்ல கதையா இருக்கே,..சூர்யாவைப் பிடிக்காமலும் பெண்களா? நம்பமுடியவில்லை..///

Same doubt :)

ARV Loshan said...

Priyatheepa said...
Hai loshan,

I like your review about "Ayan"
Hope to see near by!!!(not u & i said abt film hi hi hi.....)//
நன்றி தீபா வருகைக்கு..
ஹீ ஹீ.. விளங்குது..

//First time Commenting i read your bloggs daily though never tried to write comments, but today finally did it//
மழை பெய்யும் (நேதேர்லாந்திலும், இங்கேயும் உங்க commentனால்)

//Neenga Akka thangachiyoda pirakaatiyum naanga ellorume unkalukku sisters maathiri thane..
dont worry much ..
nanga anna iku help pannuwam..//
ஆ?? டமார்.. (ஏதோ உடையும் சத்தம்)

// try to learn tamil typing soon and write comments in tamil later :)//
வாங்க தமிழ் சந்தோஷப்படும்.. பயன்படுத்தினா இலகுவாயிருக்கும்.

கொழுவி said...

நீங்கள் கவனிக்காத ஒரு அரசியலை நான் கவனித்திருக்கிறேன்.

அதாவது ஒரு இடத்தில் திருட்டு விசிடி விற்றால் எவ்வளவு தேறும் சரக்கு வித்தால் எவ்வளவு தேறும் என வில்லன் தன் பணியாளர்களிடம் கேட்டுகொண்டு வருவார்.

பாஸ்போட்டில தலைமாத்தினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்டபோது - தலை மாற்றுபவரை இலங்கைத் தமிழில் பேச வைத்திருப்பார்கள்.

ஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)

ARV Loshan said...

பாசகி said...
///இது நல்ல கதையா இருக்கே,..சூர்யாவைப் பிடிக்காமலும் பெண்களா? நம்பமுடியவில்லை..///

Same doubt :)..

:) அதானே..

பேசாம தமிழ்மாங்கனிக்கு எதிரா ஒரு போராட்டம் அறிவிச்சிடுங்க..

===================

கொழுவி said...
நீங்கள் கவனிக்காத ஒரு அரசியலை நான் கவனித்திருக்கிறேன்.

அதாவது ஒரு இடத்தில் திருட்டு விசிடி விற்றால் எவ்வளவு தேறும் சரக்கு வித்தால் எவ்வளவு தேறும் என வில்லன் தன் பணியாளர்களிடம் கேட்டுகொண்டு வருவார்.

பாஸ்போட்டில தலைமாத்தினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்டபோது - தலை மாற்றுபவரை இலங்கைத் தமிழில் பேச வைத்திருப்பார்கள்.

ஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)//

இது மாதிரி நுணுக்க அரசியலுக்கு தான் நம்ம கொழுவி வேணும் எண்டிறது.. ;)

நான் ஆச்சரியப்பட்ட இன்னொரு விஷயம் கோங்கோவில நம்மட ஆக்கள் இல்லாம இருந்தது.. :)

புல்லட் said...

நீங்க என்னண்ண குண்ட தூக்கி போடுறியள்? நான் அயன் சரியில்லையாக்குமெண்டு (ஏனைய விமர்சனங்களின் படி) அருந்ததீ பாக்கப்போய் வெந்து போய் வந்திருக்கிறன்...

சரி பாப்பம்... அடுத்தகிழமை பாத்துட்டு வந்து இருக்கு வெடி! :)நீங்க புழுகியிருக்கிற புழுகுக்கு ”லோசன் த லூசன்” எண்டு யாராவதுதனிப் பதிவு போட்டாலும் போடுவாங்கள்.. ;)!

ஏதோ கதைய பெரிசா சொல்லாமல் நன்றாக விமர்சித்ததுக்கு நன்றிகள்...

என்ன கொடும சார் said...

//(ஜொள்ளர்களே படம் பாருங்க ... )//

அதுதானே நீங்க பார்த்திருக்கீங்க.. உங்களை விஞ்ச முடியுமா?

Anonymous said...

//யார் சொன்னா? அது நட்புக்கான நம்பர்.. ஓ நீங்களும் ஐந்தா?
பி.கு அந்த profile pic கலக்கல்.. ;) (உண்மையாத் தான்)//

Yea that is very friendly number. 5 and 9 are the best numbers...

Profile Pic - Lilo. My favourite cartoon character. A sweetheart like me :P:P:P

I bored my dad and boring my bf (best friend pa) if me or lilo the cutest.. and guess whts their answer.. its me eeeeeeeee :D:D:D

I am posting something I read abt number 5 in facebook

|| Personality By Birthday
My result is: You are Number 5

You are very "popular" and you can get things done "only by talking". Even to your enemies! (Its VERY True... )

You are business-minded and like to do things spontaneously.You will be famous if you get involved in any business. Your friends and families will always ask for your help, and you are the one actually with the money to help your friends. (But ppl just come to talk to me as all have some sort of comfort level with me :-) )

You will have more than one relationship,but when you settle down you tend to be selfish. You tend to go for other relationships - even if you are married at times because of your popularity. (he he - No comments... But I am very possessive.. I didnt even let my mom to talk to appa when I was around.. )

You tend to get along easily with anyone because the numbers is a middle number. (True. I dont talk to any but just smile when i pass them. later heard that ppl saying that they will do anything for my smile. so i guess its our specialty. have seen many number 5 ppl with a spark in eyes and small smile at their lips.)

You love freedom and changes. You learn your life through your personal experiences (pretty true) ||

Lets try to write an article abt Number 5.

Gajen said...

குட்..வெரி குட்...ஐ ஷுட் வாச் அயன்...டங்க் யு மிஸ்டர் லோஷன்!!

Anonymous said...

அவசியம் பார்க்கனும்! பார்திடுவம்

சயந்தன் said...

யாரங்கே...
நம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.

Subankan said...

//கொழுவி said :April 6, 2009 4:10 PM
நீங்கள் கவனிக்காத ஒரு அரசியலை நான் கவனித்திருக்கிறேன்.

அதாவது ஒரு இடத்தில் திருட்டு விசிடி விற்றால் எவ்வளவு தேறும் சரக்கு வித்தால் எவ்வளவு தேறும் என வில்லன் தன் பணியாளர்களிடம் கேட்டுகொண்டு வருவார்.

பாஸ்போட்டில தலைமாத்தினால் எவ்வளவு கிடைக்கும் என கேட்டபோது - தலை மாற்றுபவரை இலங்கைத் தமிழில் பேச வைத்திருப்பார்கள்.

ஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)//

அவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் ....

எதிரி வெளியில இல்லைங்கோவ்...

//ஜொள்ளர்களே படம் பாருங்க ...//

ஏன் அண்ணா, தியேட்டர் காரங்க ப்ரீயா ரிக்க்ட் தந்து சொல்ல சொன்னாங்களா?
(தயாரிப்பாளர் எண்டு போட்டு உங்களை ரொம்பப் பெரியாளாக்க விரும்பலேண்ணா)

கொழுவி said...

அவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் //

புதுகோட்டையிலிருந்து சரவணன் என ஒரு படம். அதில் சிங்கப்பூரில் தனுசுக்கு கள்ள பாஸ்போட் ஒன்று தேவைப்படுகிறது. அதற்காக அவர் செல்லும் நபர் எப்படி பேசுகிறார் என அவதானியுங்கள்..

மற்றும்படி இது தவறு என நான் சொல்லவில்லை. தமிழக மட்டத்தில் பாஸ்போட் சுத்துமாத்துகளுக்கு ஈழத்தமிழர்கள் பெயர் போனவர்கள் என்ற கருத்தொன்று இருக்கிறதுதான். அது படங்களிலும் பிரதிபலிக்கிறது.

Anonymous said...

//சயந்தன் said...

யாரங்கே...
நம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.//

He he.. Neengalum 5 number..? Join the group then...

//எதிரி வெளியில இல்லைங்கோவ்...//

Yea true

//ஏன் அண்ணா, தியேட்டர் காரங்க ப்ரீயா ரிக்க்ட் தந்து சொல்ல சொன்னாங்களா?
(தயாரிப்பாளர் எண்டு போட்டு உங்களை ரொம்பப் பெரியாளாக்க விரும்பலேண்ணா)//
ha ha..

Tech Shankar said...

சூரியாவுக்காகவே படத்தைப் பார்த்திடனும்னு நினைச்சேன்.

தமனாக்காகவும் பார்த்திடலாம்னு சொல்லுதீக.. நன்றி

Tech Shankar said...

உங்கள் பதிவில் பின்னூட்டப் பெட்டியைத் திறக்கும்போது SweetIM னு ஒன்னு சேர்ந்து திறக்குது. அது உங்கள் ஏற்பாடா? இல்லை. அதைப் பற்றித் தனிமடல் போட நேரம் இருந்தால் முயற்சிக்கவும்.

Nimalesh said...

hi bri i watched the movie but not up to the VA standerd's still it's gud enough to beat some of new movie, But surya, Tamana luks geogous,, n this,,

Bharathy said...

that Gongo sencee pakumpothu 'Blood diamond"movie njapakam vanthuchungaa anna
and first chacing sence la "quantumof solace" chasing syaal..but they did veryy well..i enjioyed..

ARV Loshan said...

புல்லட் பாண்டி said...
நீங்க என்னண்ண குண்ட தூக்கி போடுறியள்? நான் அயன் சரியில்லையாக்குமெண்டு (ஏனைய விமர்சனங்களின் படி) அருந்ததீ பாக்கப்போய் வெந்து போய் வந்திருக்கிறன்...//

எனக்கும் அருந்ததி பிடிக்கல.. ஆனால் என்னை விட (இப்ப உங்களையும் விட) எல்லோரும் அருந்ததி பற்றி புகழ்ந்து தள்ளுறாங்க.. என்னான்னு புரியல.. ;)
யார் சொன்னா அயன் சரியில்லை என்று.. நான் பார்த்தவரை எல்லோரும் நல்லம் எண்டு தான் எழுதியிருக்கினம்..

//சரி பாப்பம்... அடுத்தகிழமை பாத்துட்டு வந்து இருக்கு வெடி! :)நீங்க புழுகியிருக்கிற புழுகுக்கு ”லோசன் த லூசன்” எண்டு யாராவதுதனிப் பதிவு போட்டாலும் போடுவாங்கள்.. ;)!//
போட்டா அந்தப் படு பாவிப் பயல் புல்லட் தான் போடுவான்.. அப்பா இருக்கு அவனுக்கு என் கையால புல்லட். ;)


//ஏதோ கதைய பெரிசா சொல்லாமல் நன்றாக விமர்சித்ததுக்கு நன்றிகள்...//
கதை சின்னது என்றதால பெரிசா சொல்லல.. ;)

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
//(ஜொள்ளர்களே படம் பாருங்க ... )//

அதுதானே நீங்க பார்த்திருக்கீங்க.. உங்களை விஞ்ச முடியுமா?//

ஒத்துக் கொள்றவன் பெரிய மனுஷன்.. நான் பெரிய மனுஷன். நீங்க???? (இது எப்படி?)

==========================

Triumph said...
//யார் சொன்னா? அது நட்புக்கான நம்பர்.. ஓ நீங்களும் ஐந்தா?
பி.கு அந்த profile pic கலக்கல்.. ;) (உண்மையாத் தான்)//

Yea that is very friendly number. 5 and 9 are the best numbers...

Profile Pic - Lilo. My favourite cartoon character. A sweetheart like me :P:P:P

I bored my dad and boring my bf (best friend pa) if me or lilo the cutest.. and guess whts their answer.. its me eeeeeeeee :D:D:D //

அப்பாடா .. இவ்வளவு இருக்கா? பேசாம நாம் எல்லாம் சேர்ந்து (எல்லா 5 இலக்கக்காரரும்) Triumphஅவர்களையே 5 பற்றி எழுத நியமிப்பதாக பிரகடனம் செய்ய இருக்கிறோம்..

ARV Loshan said...

தியாகி said...
குட்..வெரி குட்...ஐ ஷுட் வாச் அயன்...டங்க் யு மிஸ்டர் லோஷன்!!//

எஸ் யு மஸ்ட் வோட்ச்.. டாங்க்ஸ் மிஸ்டர்.தியாகி .. (ஹீ ஹீ)

=====================
கவின் said...
அவசியம் பார்க்கனும்! பார்திடுவம்//
:)

====================

சயந்தன் said...
யாரங்கே...
நம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.//

அரசே கஜானா recessionஇனால் காலியாகக் கிடக்கிறது.. சுவிசில் உங்கள் வங்கிக் கணக்கின் ரகசிய இலக்கம் சொன்னீர்கள் என்றால் எதோ பாத்துக் கீத்து செய்யலாம்..

ARV Loshan said...

Subankan said...
//கொழுவி said :April 6, 2009 4:10 PM
ஓங்குக ஈழத்தமிழன் புகழ் :)//

அவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் ....//
இல்லைங்க அந்த நுணுக்க அரசியலை எல்லாம் மிக நுணுக்கமாக பார்க்கணும்..

//எதிரி வெளியில இல்லைங்கோவ்...//
நீங்கள் சொல்லும் வேறு விடயத்தில் இது மிகச் சரி..

//ஜொள்ளர்களே படம் பாருங்க ...//

ஏன் அண்ணா, தியேட்டர் காரங்க ப்ரீயா ரிக்க்ட் தந்து சொல்ல சொன்னாங்களா?
(தயாரிப்பாளர் எண்டு போட்டு உங்களை ரொம்பப் பெரியாளாக்க விரும்பலேண்ணா)//

ஏன்யா இப்பிடி? அப்பிடித் தான் ப்ரீயாத் தந்திருந்தால் தான் தளத்தையே அயன் புகழ் பாடி நிரப்ப மாட்டோம்.. (பார்த்து சரவணனும் குகனும் வழக்கு போடப் போறாங்க)


==============================

ARV Loshan said...

கொழுவி said...
அவங்க சும்மாதான் போட்டிருப்பாங்க. நீங்களே எதுக்கு இதையெல்லாம் //

புதுகோட்டையிலிருந்து சரவணன் என ஒரு படம். அதில் சிங்கப்பூரில் தனுசுக்கு கள்ள பாஸ்போட் ஒன்று தேவைப்படுகிறது. அதற்காக அவர் செல்லும் நபர் எப்படி பேசுகிறார் என அவதானியுங்கள்..

மற்றும்படி இது தவறு என நான் சொல்லவில்லை. தமிழக மட்டத்தில் பாஸ்போட் சுத்துமாத்துகளுக்கு ஈழத்தமிழர்கள் பெயர் போனவர்கள் என்ற கருத்தொன்று இருக்கிறதுதான். அது படங்களிலும் பிரதிபலிக்கிறது.//

மெத்தச் சரி.. நானும் அதை அவதானித்தேன்.. (அயனில் அல்ல) நம்மவர்களுக்கு தலை மாத்திகள் என்று வேறொரு பெயரும் இருப்பதாக அறிந்து புளகாங்கிதமுற்றேன்.. ;)

=============================

Triumph said...
//சயந்தன் said...

யாரங்கே...
நம்பர் ஐந்து புகழ் பாடிய இந்தப் புலவர் பெருமானுக்கு பொற்காசுகளை அள்ளி வழங்குங்கள்.. ம்.//

He he.. Neengalum 5 number..? Join the group then... //

கட்சியா? அப்ப நான் தான் பொருளாளர்.. ;) வாங்க நிதியை செக்ல அனுப்புங்க.. ;)

========================

ARV Loshan said...

தமிழ்நெஞ்சம் said...
சூரியாவுக்காகவே படத்தைப் பார்த்திடனும்னு நினைச்சேன்.
தமனாக்காகவும் பார்த்திடலாம்னு சொல்லுதீக.. நன்றி//

ஆமாமா.. சூர்யாக்காக ஒரு தடவை.. தமனாக்காக ஒரு தடவை.. ரெண்டு பேருக்காகவும் மேலும் ஒரு தடவை.. நேரமும் பணமும் இருந்தால்.. ;)

===================
தமிழ்நெஞ்சம் said...
உங்கள் பதிவில் பின்னூட்டப் பெட்டியைத் திறக்கும்போது SweetIM னு ஒன்னு சேர்ந்து திறக்குது. அது உங்கள் ஏற்பாடா? இல்லை. அதைப் பற்றித் தனிமடல் போட நேரம் இருந்தால் முயற்சிக்கவும்.//

நானும் பல பேர் சொல்லி பின் அவதானித்தேன்.. நான் ஒண்ணுமே செய்யல.. அது ஏன் வருதுன்னும் தெரியல..
ஆனால் குறோமில் இந்தப் பிரச்சினை இல்லை என நினைக்கிறேன்.. நான் அதிகமாகப் பாவிப்பது குரோம்.

(தனி மடலில் விளக்கம் கேட்கிறேன் நண்பா)

ARV Loshan said...

Nimalesh said...
hi bri i watched the movie but not up to the VA standerd's still it's gud enough to beat some of new movie, But surya, Tamana luks geogous,, n this,,//

ya true.. u cant compare this to V1000..Both are diffrent platforms.. Yeah good enough n better than lost of other movies which have recently.

=======================


ernesto said...
that Gongo sencee pakumpothu 'Blood diamond"movie njapakam vanthuchungaa anna
and first chacing sence la "quantumof solace" chasing syaal..but they did veryy well..i enjioyed..//

yeah i think those are the movies.. But i still cant recall that Mexican/Spanish movie..

Anonymous said...

Not clearly

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner