May 28, 2009

அம்மா பாடல்களில் அதிகம் பிடித்தவை


அண்மையில் 'சர்வதேச அன்னையர் தினம்' கொண்டாடப்பட்டது (சில நாட்களுக்கு முன்னர்) எங்கள் அனைவருக்குமே தெரியும்.

அந்த நேரம் இருந்த பரபரப்பில் சிறப்புப் பதிவு எதுவும் போடக்கிடைக்கவில்லை. அம்மா பற்றி ஒரு நாள் தான் பதிவு போட வேண்டுமா?

எப்போது போட்டாலும் அம்மாவின் அன்பு மனதுக்குள்ளே இருக்குமே என்று மனதை ஆறுதல் படுத்திக்கொண்டேன்.

எனினும் வானொலியில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குக் குறைவில்லை. ஞாயிறு எனக்கு நிகழ்ச்சிகள் இல்லாத காரணத்தால் (ஒரு மாதிரியாக வாரத்தில் ஒரு நாளாவது வீட்டில் இருக்கிற மாதிரி ஒழுங்குபடுத்திவிட்டேன்.) திங்கள், செவ்வாய் (11,12) இருநாட்களும் சிறப்பு நிகழ்ச்சிகளை காலையில் எனது 'விடியல்' நிகழ்ச்சியில் வழங்கியிருந்தேன். (அதைக் கேட்ட பலபேரும் இப்போது இதை வாசித்தால் - 'ரிப்பீட்டு' ஆகத்தானிருக்கும். என்ன செய்ய... ஒரு படத்தை 2,3 தடவை பார்ப்பதில்லையா....)

அதில் ஒன்றில் மனதில் மிகப் பிடித்த அம்மா பாடல் (சினிமா / உள்ளுர் பாடல்) எதுவென்ற கருத்துக் கணிப்பை நடத்தினேன்.

தமிழ் சினிமாவின் மிக முக்கியமானதே அம்மா சென்டிமென்ட் தானே.... பாடல்களுக்கா குறைவிருக்கும்.

பல நூற்றுக்கணக்கான பாடல்களையும் நேயர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்...அதில் TOP 10 பாடல்கள் இவை....

10ம் இடம் அம்மன் கோவில் எல்லாமே
திரைப்படம் : ராஜாவின் பார்வையிலே
பாடியவர் : அருண்மொழி
இசை : இளையராஜா
09ம் இடம் ஆசைப்பட்ட எல்லாத்தையும்
திரைப்படம் : வியாபாரி
பாடியவர் : ஹரிஹரன்
இசை : தேவா
பாடல் வரி : வாலி

08ம் இடம் அம்மாவென்றழைக்காத உயிரில்லையே
திரைப்படம் : மன்னன்
பாடியவர் : K.J.ஜேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடல் வரி : வாலி

07ம் இடம் உயிரும் நீயே
திரைப்படம் : பவித்ரா
பாடியவர் : உன்னிகிருஷ்ணன்
இசை : A.R. ரஹ்மான்
பாடல் வரி : வைரமுத்து

06ம் இடம் நீயே நீயே
திரைப்படம் : M.குமரன் Son of மஹாலக்ஷ்மி
பாடியவர் : K.K
இசை : ஸ்ரீகாந் தேவா

05ம் இடம் தாய் மடியே
திரைப்படம் : RED
பாடியவர் : டிப்பு
இசை : தேவா
பாடல் வரி : வைரமுத்து

04ம் இடம் அம்மான்னா சும்மா இல்லடா
திரைப்படம் : திருப்புமுனை
பாடியவர் : இளையராஜா
இசை : இளையராஜா

03ம் இடம் தாய் மனசு தங்கம்
திரைப்படம் : தாய் மனசு
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
இசை : தேவா

02ம் இடம் அம்மா அம்மா எந்தன்
திரைப்படம் : உழைப்பாளி
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா

01ம் இடம் ஆலயங்கள் தேவையில்லை
திரைப்படம் : காமராசு
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம்
இசை : தேவா

கணிசமான வாக்குகள் பெற்றும் முதல் பத்துக்குள் வரமுடியாத இன்னும் சில பிரபலமான பாடல்கள்.

காலையில் தினமும் - NEW
நானாக நானில்லை - தூங்காதே தம்பி தூங்காதே
அம்மம்மா உனைப் போலே - சாது
அம்மா நீ சுமந்த - அன்னை ஓர் ஆலயம்

இவற்றில் எனக்குப் பிடித்த பாடல்கள் பல இருந்தாலும் இன்னுமொரு அம்மா பாடல் அண்மைக் காலத்தில் எனக்குப் பிடித்துப் போயுள்ளது.

வைரமுத்து எழுதிய கவிதை பின்னர் இனியவளின் இசையில் பாடலாக மாறியிருக்கும் 'ஆயிரம் தான் கவி சொன்னேன்'
S.P.B பாடியிருக்கிறார். உருக வைக்கும் வரிகள்...
இந்தப் பாடலையும் சிலர் சொல்லியிருந்தார்கள்.
காமராசு படம் வந்த சுவடு தெரியாமல் போனாலும்,பாடல் மட்டும் மனதில் நிலைத்திருக்கிறது..

இலங்கை நேயர்களைப் பொறுத்தவரையில் படங்களை வைத்துக் கொண்டு பாடல்களை அவர்கள் ரசிப்பதில்லை என்பதை இந்தக் கருத்துக் கணிப்பின் மூலமும் மீண்டும் காட்டி இருக்கிறார்கள்...

அதுபோல நடிகர்கள்,பாடகர்கள்,இசையமைப்பாளர்கள்,கவிஞர்களுக்காக பாடல்களை ரசிப்பது போலவே பாடல் வரிகள்,பொருளுக்காகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நம் நேயர்கள் என்பதறிந்து மகிழ்ச்சி தான்.



13 comments:

Sinthu said...

அம்மா என்ற சொல்லில் யாரும் அடக்கம் தானே அண்ணா.. அது தான் யாவருக்கும் பிடித்திருக்கிறது..

என்ன கொடும சார் said...

//ஒரு படத்தை 2,3 தடவை பார்ப்பதில்லையா....//

நாங்க மரியாதை படத்தை ஒரு முறை கூட பார்ப்பதில்லை..

கலையரசன் said...

லேட்டஸ்ட் ஹிட்
தாலாட்டு கேட்க நானும்.. எத்தனை நாள் காத்திருந்தேன்
தாயும் உனை காண தானே.. தவிச்சி நா ஓடிவந்தேன்

படம் நந்தலாலா
பாடியவர் இளையராஜா

கவிக்கிழவன் said...

நல்ல சகோதரனாய்,

நல்ல நண்பனாய்

இறைவனின் சிறந்த அடிமைகளில் ஒருவனாய்

Prapa said...

நிகழ்ச்சியை முழுமையாக கற்க முடிந்தது , இருந்தாலும் ஒரு சின்ன கவலை நமக்கு அதிகம் பிடித்த (நிறைய தடவைகள் ஒலிபரப்பிய) ராஜாவின் பார்வையிலே -அம்மன் கோயில் எல்லாமே ..... 10 வது இடத்திற்கு வந்ததுதான்....
நிகழ்ச்சியில் இன்னுமொரு சிறப்பு நேயர்கள் சொன்ன பாடல்களை ஒலிபரப்பி பக்கம் சாராமல் இருந்தது. தொடரட்டும் உங்கள் வித்தியாசங்கள் , நாங்கள் கற்றுக்கொள்கிறோம்

Risamdeen said...

//(அதைக் கேட்ட பலபேரும் இப்போது இதை வாசித்தால் - 'ரிப்பீட்டு' ஆகத்தானிருக்கும். என்ன செய்ய... ஒரு படத்தை 2,3 தடவை பார்ப்பதில்லையா....)??//

பல படங்களை DVDயில் கூட பார்க்க பிடிக்கல இதுல ரெண்டு (மாத்திட்டாங்க இல்ல) இரண்டு மூன்று தடவ எங்க பார்க்கிறது? இந்தப்படம் பரவால ஒரு தடவ திரும்ப பார்க்கலாம்.

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

குழந்தையின் சிரிப்பில் கல்லும் கரையும் என்பார்கள். தாயின் சிரிப்பில் குழந்தைகள் நாம் கரையவில்லை என்றால் எப்படி? தாயை பிடிக்காத குழந்தைகள் இல்லை என்ன செய்யலாம் பாசத்தை நெஞ்சுக்குள் பொத்தி வைத்து சந்தர்ப்பத் தை பார்த்து நிற்கிறோம் பாசத்தை வெளிப்படுத்த. இப்போது வேலைகளுக்கு நாம் கால அட்டவணை போடுவதில்லை வேலைகள்தான் எமக்கு கால அட்டவணை போடுகின்றன ஆதலால் இப்படியான சந்தர்ப்பங்களின் போதுதான் பாடலாயோ கவிதைகளாலோ பாசத்தை கொட்டித் தீர்த்துவிடுகின்றோம் லோஷன் அண்ணா உங்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது போல கொட்டித்தீர்த்திருக்கிரீர்கள் எனக்கு நிகழ்ச்சி கேட்க முடியவில்லை இருந்தும் இப்பதிவால் அறிந்து கொண்டேன் நன்றி. {அங்கு விடியல் செல்லும் நேரம் இங்கு எமக்கு அதிகாலையாகவல்லவா இருக்கிறது கஞ்சிபாய் ஸ்டைலில் என் நேரத்தை மாற்ற ஒரு யோசனை சொல்லுங்களேன்}

புல்லட் said...

நானும் ஏதோ கிட்டடில வந்து போன தேர்தல் மற்றும் வாக்குறுதியள் ஞாபகம் வந்தாப்போல ஏதோ அம்மாவப் பற்றி எழுதப்போறியள் எண்டு யோசிசசன்..

வந்து பாத்தா நல்லாப் புழிபழியெண்டு புழிஞ்சு போட்டீங்க செண்டிமென்ட.. பரவால்ல... நல்லாத்தானிருக்கு...

எப்படிப்பட்ட பெண்களாலும் நல்ல அம்மாவா இருக்க முடியும்.. அது பெண்ணினத்தின் சிறப்பு...

Tech Shankar said...

காலையில் தினமும் - NEW - I like that song very much becoz of Rahman and Unni.

Hi. Advanced Congrats - U r going to touch 2 Lakh page views for this blog. nice yaar.

now I am seeing 196055.. just less than 4000 is there..

I wish u and ur blog for touching 2 Lakh page views.

மயாதி said...

காதலை , நட்பை. துரோகத்தை . விபச்சாரத்தை முக்கியப்படுத்திய அளவுக்கு அம்மாவை முக்கியப்படுத்திய காவியங்கள் தமிழில் குறைவு...
இப்படி சில பாடல்களிலாவது அம்மாக்களை முக்கியப்படுத்தியிருக்காங்களே!

அப்பாக்கள் பற்றிய பாடல்கள் என்னென்ன இருக்கென்று ஒரு லிஸ்ட் போஸ்ட் பண்ணுங்க அண்ணா !(நேரம் கிடைக்கும் போது)

Mal Ramanathan said...

ஆசைப்பட்ட எல்லாத்தையும்
திரைப்படம் : வியாபாரி
பாடியவர் : ஹரிஹரன்
இசை : தேவா
பாடல் வரி : வாலி


இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள விபரங்கள் சரிதானா??
சில வருடங்கள் முன்பு நீங்கள் ஒரு காலை வேளை ஒலிபரப்பின் போது இந்த பாடல் சம்பந்தமாக இதன் உண்மையான புனைவாளர் யார் இசையமைப்பாளர் யார் என்ற புதிருடன் முன்னைய காலங்களிலும் இது வெளியாகிய சில வடிவங்களையும் அதனுடைய உரிமையாளர்கள் என்று கூறப்படுவவர்களையும் செவ்வி கண்டீர்கள் இசையமைப்பாளர் தேவா கூட பேசியதாக நினைவு!!
துரதிஷ்ட்ட வசமாக இதன் முடிவினை,conclusionஐ கேட்க முடியவில்லை
சர்ச்சை எவ்வாறு தீர்ந்தது என்று சற்றுக் கூறுங்களேன்

என்ன கொடும சார் said...

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
இன்றைய பத்திரிகை – 4
இந்த நாளில் – 10
Jingles – 25
விளம்பரம் – 25
தலைப்பு – 1
பாடல்கள் - 30
நட்ஷத்திர பலன் - விரும்பினால்

செய்முறை...

மேலும் வாசிக்க கிளிக்குங்க http://eksaar.blogspot.com/

Unknown said...

அனைத்தும் அருமையான பாடல்கள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner