ஒளிமயமான இலங்கை - 2025இல் இலங்கை.. படங்களுடன்

ARV Loshan
5 minute read
35

வாசிக்க ஆரம்பிக்கு முன்னே சொல்லுகிறேன்.. இது நகைச்சுவை,நக்கல் பதிவல்ல.

அபிவிருத்தி தகவல் தரும் ஒரு பதிவு மட்டுமே..

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பிறகு இப்போது அரசாங்கத் தகவல்களின்படி, துரித அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன..

யுத்தத்துக்கு செலவிடப்பட்ட பாரியளவு நிதியை அபிவிருத்திப் பக்கம் திருப்புவதால் எதிர்காலத்தில் ஆசியாவில் மிக அபிவிருத்தி அடைந்த நாடக இலங்கை மாறும் என்கின்றனர் அவதானிகள் (இவங்க யாருன்னு கேட்காதீங்க)

ஒரு காலத்தில் சிங்கப்பூர் இலங்கையைப் போல் வரமாட்டோமா என்று ஆதங்கப்பட்டது போல இன்னும் இருபது வருடங்களில் மீண்டும் இலங்கையைப் பார்த்து அதே சிங்கப்பூர் ஆசைப்படும் என்று நம்பியிருக்கலாமாம்...

(இந்தியா,பாகிஸ்தான்,சீனா, ரஷ்யா,அமெரிக்கா என்று எல்லோரும் பகை மறந்து வரிந்து கட்டிக்கொண்டு உதவி செய்யும்போது இதெல்லாம் சாத்தியமாகாதா?)

ராஜா மாதிரி ஒரு ஜனாதிபதி இருக்கும்போது இதெல்லாம் சிம்பிளா முடிக்கலாமே...

மாதிரிக்கு ஒரு சில திட்டங்கள்.. இவை இதோ அடுத்த வாரமே ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.. (நாளைய தினம் நடைபெறவிருக்கும் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு)

கொழும்பிலே நிலத்தடி ரயில் போக்குவரத்து

நாடு பூராகவும் 250 மேம்பாலங்கள்

இந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிகின் எயார் (Mihin Air) உலக தர விமான சேவையாகத் தரம் உயர்த்தப்படும்.

உலகின் மிக உயரமான நினைவுத் தூபியொன்று நாட்டின் வட பகுதியிலே அமைக்கப்பட உள்ளது. (யாருக்காக?)

வீதிகளை துரிதமாக சுத்தப்படுத்தக் கூடிய துப்புரவு செய்யும் இயந்திரங்கள் (Road cleaning machines by MICRO) இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
தெற்காசியாவின் மிக உயரமான கட்டடம் நிறுவப்படும். (இனித் தான் விமான,குண்டு பயம் இல்லையே)

தடங்கலற்ற மின்சாரம்,நீர்,தொலைபேசி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். (தமிழ்நாட்டின் ஆற்காட்டார் ஐடியா கொடுத்திருப்பாரோ?)

வெளிநாட்டு பணத்தை உள்வாங்குவதற்காக சர்வதேச பல்கலைக் கழகங்கள் இலங்கையில் உருவாக்கப்படும்.

மிகப்பெரிய 'யுத்த நூதனசாலை' - War museum யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படும்.

எல்லா நதிகளுக்கு குறுக்கேயும் அணைக்கட்டுகள்.

இன்னும் பல பல பல..

பாருங்களேன் இலங்கை எப்படி பள பளக்கப் போகிறது என்று...

மனதுக்குள்ளே கற்பனை செய்யாமல், 2025இல் இலங்கையை உங்கள் கண்முன்னே கொண்டு தருகிறேன்....


கொழும்பு - 2025இல்

2025இல் ஹம்பாந்தோட்டை (ஜனாதிபதியின் சொந்த ஊர்)


கம்பஹா - 2025இல்
கண்டி - 2025இல்


அனுராதபுரம் - 2025இல்


மட்டக்களப்பு (கிழக்கிலங்கை) - 2025இல்


2025இல்
இலங்கையின் உயரமான குளு குளு நுவர எலியவுக்கான வீதி

கட்டுகஸ்தோட்டை - 2025இல்


குருநாகலை - 2025இல்

திருகோணமலை - 2025இல்


அது சரி யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு எங்கே?

நானும் தேடுகிறேன்..
அதெல்லாம் முன்பிருந்த நிலைக்கே மீண்டும் திரும்ப இன்னொரு ஐம்பது வருடம் எடுக்குமாம்.. விபரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்...


நலன்புரி நிலையங்களில் அவதியுறும் நம்மவர்கள் சொந்த இடங்களுக்கு திரும்பவே இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்குமோ என்ற ஏக்கம் எங்களுக்கு இருக்கையில் வடக்குப் பக்க நகரங்களில் அபிவிருத்தி எப்போது என்ற கேள்விக்கு என்ன பதில் யார் தருவார்?

Post a Comment

35Comments

Please Select Embedded Mode To show the Comment System.*