July 10, 2009

சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2

பகுதி ஒன்று பற்றி பலவாறான கருத்துக்கள்.. பின்னூட்டமிட்டு தெரிவித்த நண்பர்களுக்கெல்லாம் நன்றிகள்.

சஸ்பென்சில் விட்டு விட்டுப் போன ட்விஸ்ட் என்னவென்று அறிந்துகொள்ள பல பேர் தனி மடல், தொலைபேசி அழைப்பு மூலமும் கேட்டிருந்தார்கள்.

இதோ

சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்....
ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 2

அந்த ட்விஸ்ட் என்னவென்றால், விமான நிலையத்துக்கு எனது வாகனத்திலேயே போவதாக முடிவெடுத்த பின்னர், விமான நிலையம் வருவதாக அப்பாவும் , என் சின்னவனைக் கூட்டிவர ஆசைப்பட்ட மனைவியும் கூறியதை அடுத்து அயலிலுள்ள தெரிந்த ஓட்டுனர் ஒருவர் ஒருவரை அழைத்திருந்தேன்.

கொஞ்சம் முன்கூட்டியே புறப்படலாம் என்று நினைத்து, (பாதுகாப்பு, வீதி தடைகள், போக்குவரத்து நெரிசல் என்பவற்றைத் தவிர்ப்பதற்காக) புறப்படலாம் என்று பார்த்தால், எங்கள் நிர்வாக இயக்குனர் நிஷாந்த (இவர் நிறுவனத் தலைவரின் மைத்துனரும் கூட) அழைப்பெடுத்து தனது ஓட்டுனர் இல்லையென்றும், தான் என்னுடன் தொற்றிக் கொள்ளப்போவதாகவும் சொன்னார்..

இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை..

அவர் அதுக்குப் பிறகு சொன்னது தான் என்னை பயங்கரமா டென்ஷன் ஆக்கியது..

அப்போது நேரம் எட்டு மணி.. எங்கள் flight இருந்தது 11.50க்கு. எப்படியும் மூன்று மணி நேரத்துக்கு முன்னதாகவே விமான நிலையத்தில் இருக்க வேண்டும் என்பது வழக்கமான நியதி.

இவர் அப்போது தான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு போகிறாராம்.

தான் வீட்டுக்குப் போய் தயாராகி விட்டு சொன்ன பிறகு தன்னை வந்து ஏற்றிக் கொண்டு செல்லுமாறு கேட்டார்..

பாவமாக இருந்தது.. சரியென்று சொல்லிவிட்டேன்.

ஆனாலும் கொஞ்சம் பதற்றம்.

கடைசியில் பம்பலப்பிட்டியிலிருந்து (அவரது வீடு) புறப்படும் நேரம் 9.20.


அதற்கிடையில் நமது Chairman இரண்டு தடவை அழைப்பெடுத்து எங்கே என்று கேட்டு விட்டார்.

வாகனத்தை வேகமாக ஒட்டுங்கள் என்று நான் அழைத்த ஓட்டுனருக்கு சொல்லியும்.. அவர் மணிக்கு 40 தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

வாகனம் ஊர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் ஆளுக்கொரு சைக்கிள் எடுத்தாலே அரை மணி நேரத்தில் விமான நிலையத்துக்குப் போய் விடலாம் போல இருந்தது.

"என்ன அண்ணே, நம்ம வாகனம் ஓட்டக் கஷ்ட்டமா இருக்கா?" என்று கேட்டேன்.
பிறகு கொஞ்ச நேரத்தின் பின் "கொஞ்சம் வேகமா ஓட்டுங்க.. நேரம் ஆகிக் கொண்டிருக்கு" என்றேன்.

அதற்கும் பிறகு பொறுமை எல்லை கடக்க ஆரம்பிக்க, " நானே ஓட்டவா?" என்று கேட்டும் விட்டேன்.

அதற்குப் பிறகு கொஞ்சம் வேகம் எடுத்தது.. எனினும் தாமதமாகி விடும் என்ற டென்ஷனில் இருந்த நிஷாந்த தனக்கு தெரிந்த விமான நிலைய அதிகாரிகளிடம் தனது influenceஐப் பயன்படுத்தி கொஞ்சம் தாமதமாகி வந்தாலும் பொருத்தருள சொல்லி தகவல் கொடுத்து வைத்தார்..

ஒரு மாதிரியாக விமான நிலையத்தை அண்மித்துக் கொண்டிருந்தோம்..

பொதுவாகவே எனது வாகனத்தின் ராசிப்படி எந்தவொரு சோதனை நிலையத்திலும் நிறுத்தப்படாமல் விமான நிலைய பிரதான சோதனை சாவடி (சாவடிக்கிற இடம் ???) வரை வந்தாச்சு..

அப்போது தான் அடுத்த பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது..

(என்னடா இது இன்னமும் விமானமே ஏறல்ல.. அதுக்குள்ளே ட்விஸ்ட் & திருப்பம் என்று போட்டு கொல்றானே என்று யோசிக்காதீங்க.. அதுக்கு தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்.. பழக்கமில்லை என்று..
இந்த தொடர் பதிவில் சின்ன சின்ன விஷயங்களையும் மிஸ் பண்ணாமல் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் .. அது தான்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்)

(நேரம் கிடைக்கும் போது பகுதி 3 தொடரும்...)

ஆதிரை, நீங்கள் சொன்ன சேடம் இழுக்கும் அதுவும் திங்கள் முதல் தொடரும்.. ;)

24 comments:

ஜெகதீசன் said...

ஏர்ப்போர்ட் வந்து சேரவே 2 பதிவா...
:)

ஆதிரை said...

இந்தப் பதிவை 'அட்ஜஸ்ட்' பண்ணி வாசித்தேன். :) எழுத்தின் அவசரம் புரிகின்றது.



ஆதிரை, நீங்கள் சொன்ன சேடம் இழுக்கும் அதுவும் திங்கள் முதல் தொடரும்.



நன்றி... :)

இரா பிரஜீவ் said...

இப்படியே இழுத்து இழுத்து நிறைய hits எடுக்க திட்டமோ?

இதுக்கு தான் சொல்லுறது அடிக்கடி இந்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்க்க கூடாதென்று!!!

முடியல....

ஆ.ஞானசேகரன் said...

இன்னும் ஏர்போட் வரவே இல்லையா தலைவா!

Admin said...

அண்ணா விரைவில் சிங்கப்பூருக்கு போயிடுங்கோ...நம்ம நாட்டு கதைகளைக் கேட்டு அலுத்துப்போச்சு...

Mathu said...

On your blog after ages, I love to write and read about travels. What is that twist!?! This part started with a twist and ended with a to-be-said twist. Niraiya twists'oda travel panni irukinga :) Waiting to read the rest.
Hope you are doing well.

ஆதிரை said...

ஆனால், எங்களுக்குத்தான் எந்த ஸ்வீட்டும் இல்லை.
:@

தினேஷ் said...

டிவிஸ்ட் தொடருட்டும் .. ஆனா படிக்கிற கூட்டம் டிவிஸ்ட்டாயி உங்களை டிவிஸ்ட் பண்ணிறகூடாதுனு வேண்டிக்கிறேன் எங்க ஊர் முனியய்யாகிட்ட ..

dilsbro said...

அய்யா கடைசியில் என்னதான் நடந்துச்சு? சிங்கப்பூர் போனீரா? இல்லையா?

Anonymous said...

anna mudiyala...
pls anna tel me the full story i'll any how write it nd upload it for u...
hope u will accept ths...

-vythegi-

அஸ்வினி said...

அடிக்கடி வந்து போகும் நான் இன்று முதன் முதலில் பினூட்டமிடுகிறேன்..... பயணங்கள் தொடரட்டும் அண்ணா..

Hamshi said...

Anna it is going to very Interisting.nice anna.plz write to full story.dont tkae a long period.

ARV Loshan said...

அவசர அவசரமாகப் பதிவிட்டதன் காரணமாக நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தது கண்டேன். சில நண்பர்களும் சுட்டிக் காட்டியிருந்தார்கள். இப்போது திருத்தியுள்ளேன்.

தயவு செய்து இனிமேல் இப்படிப் பிழைகள் இருந்தால் சுட்டிக் காட்டத் தயங்காதீர்கள்.

வழுக்களைக் கூடியளவு குறைத்துக்கொள்ளப் பார்க்கிறேன்.

கானா பிரபா said...

அப்படியே 4 மணி நேரம் பயணித்து அவுஸ்திரேலியா வந்திருக்கலாமே :)

Anonymous said...

லோஷன் அண்ணா உங்கள் பதிவுகளுக்கு நான் வழங்கும் முதலாவது கருத்துரை..

சும்மா சொல்லக்கூடாது முதலாவது
பயணக்கட்டுரையிலையே அசத்தீட்டீங்க...
வாழ்த்துக்கள்..
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன்.தாளம் வானொலி.

Anonymous said...

இது நான் உங்கள் பதிவுகளுக்கு வழங்கும் முதலாவது கருத்துரை...

சும்மா சொல்லக்கூடாது முதலாவது பயணக்கட்டுரையிலையே அசத்தீட்டீங்க...

வாழ்த்துக்கள்..
தொடர்ந்து பகுதி மூன்றை எதிர்பார்க்கிறோம்..

அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன்.தாளம் வானொலி.

ARV Loshan said...

ஜெகதீசன் said...
ஏர்ப்போர்ட் வந்து சேரவே 2 பதிவா...
:)//

நீண்ட தூரமாச்சே ... வந்திட்டே இருக்கேன் நண்பா


===================

ஆதிரை said...
இந்தப் பதிவை 'அட்ஜஸ்ட்' பண்ணி வாசித்தேன். :) எழுத்தின் அவசரம் புரிகின்றது.//

கவனித்தோம்... புரிந்தது.

ARV Loshan said...

இரா பிரஜீவ் said...
இப்படியே இழுத்து இழுத்து நிறைய hits எடுக்க திட்டமோ? //

அது எங்கே ஜயா... முன்பு போல இல்லை. கொஞ்ச நாள் இடைவெளி விட்டு வந்த பிறகு மூச்சு வாங்குது!



//இதுக்கு தான் சொல்லுறது அடிக்கடி இந்த தமிழ் தொலைக்காட்சி தொடர்களை பார்க்க கூடாதென்று!!! //

நான் அதெல்லாம் பார்க்கிறதே இல்லையே...


//முடியல....//
ஆமாமா... இப்போதானே 2 அங்கம் முடிஞ்சிருக்கு.

ARV Loshan said...

ஆ.ஞானசேகரன் said...
இன்னும் ஏர்போட் வரவே இல்லையா தலைவா!//

வந்திட்டே இருக்கேன் நண்பா

===================

சந்ரு said...
அண்ணா விரைவில் சிங்கப்பூருக்கு போயிடுங்கோ...நம்ம நாட்டு கதைகளைக் கேட்டு அலுத்துப்போச்சு...//

இல்லை ராஜா... இன்னும் அலுக்காத விஷயமும் இருக்கு.

ARV Loshan said...

Mathu said...
On your blog after ages, I love to write and read about travels. What is that twist!?! This part started with a twist and ended with a to-be-said twist. Niraiya twists'oda travel panni irukinga :) Waiting to read the rest.
Hope you are doing well.//

Welcome back. Get back to blogging.Expecting ur blog posts like before.

ஆமாம் ஊடகவியலாளர் நாங்களே Twisterகள்தானே...


===================

ஆதிரை said...
ஆனால், எங்களுக்குத்தான் எந்த ஸ்வீட்டும் இல்லை.
:@//

ஸ்வீட், என்னத்துக்கு?

ARV Loshan said...

சூரியன் said...
டிவிஸ்ட் தொடருட்டும் .. ஆனா படிக்கிற கூட்டம் டிவிஸ்ட்டாயி உங்களை டிவிஸ்ட் பண்ணிறகூடாதுனு வேண்டிக்கிறேன் எங்க ஊர் முனியய்யாகிட்ட ..//

அதான் என் யோசனையும் கூட...
நல்லா வேண்டிக்கங்கய்யா... என் சார்பில் 100 தேங்காயும் உடைச்சிருங்க.

=====================


தேவதாசன் dilshaad said...
அய்யா கடைசியில் என்னதான் நடந்துச்சு? சிங்கப்பூர் போனீரா? இல்லையா?//


என்னய்யா...அதுக்குள்ள பொறுமை இழந்திட்டீங்க...
பொறுமை... பொறுமை!
போனபடியால் தானே எழுதிறேன்.

ARV Loshan said...

Anonymous said...
anna mudiyala...
pls anna tel me the full story i'll any how write it nd upload it for u...
hope u will accept ths...

-vythegi-//

அதுக்குள்ளே பொறுமை இழந்தால் எப்பிடி?
இதை முதல்லேயே சொல்லி இருந்தால் அருந்ததி அக்காவையும், வனிதாவையும் தட்டச்சித் தருமாறு தொந்தரவு படுத்தி இருக்க மாட்டேனே..

=====================

அஸ்வினி said...
அடிக்கடி வந்து போகும் நான் இன்று முதன் முதலில் பினூட்டமிடுகிறேன்..... பயணங்கள் தொடரட்டும் அண்ணா..//

வாருங்கள் அஸ்வினி.. நல்வரவு.. தொடர்ந்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

ARV Loshan said...

Hamshi said...
Anna it is going to very Interisting.nice anna.plz write to full story.dont tkae a long period.//

ok .. tx.. ll c..

ARV Loshan said...

கானா பிரபா said...
அப்படியே 4 மணி நேரம் பயணித்து அவுஸ்திரேலியா வந்திருக்கலாமே :)//

முன்னரே அழைத்து டிக்கெட் அனுப்பி இருந்தீங்கன்னா அண்ணாவைப் பார்க்க பறந்து வந்திருக்க மாட்டேனா?

இப்ப கூப்பிடுங்க பாசமிக்க தம்பி பறந்தோடி வருகிறேன்.. ;)


=========

Anonymous said...
லோஷன் அண்ணா உங்கள் பதிவுகளுக்கு நான் வழங்கும் முதலாவது கருத்துரை..

சும்மா சொல்லக்கூடாது முதலாவது
பயணக்கட்டுரையிலையே அசத்தீட்டீங்க...
வாழ்த்துக்கள்..
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன்.தாளம் வானொலி.//

நன்றி சகோதரா.. தொடர்ந்து வாருங்கள்.
வாழ்த்துக்கள்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner