July 23, 2009

சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 5

கடந்த சில நாட்களாக இருந்த வேறு வேலைகள். விருதுகளால் போடவேண்டியிருந்த பதிவுகளால் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திலேயே ரொம்ப நாட்கள் காக்கவைத்துவிட்டேன்.

இனி வெளியே வரலாம்...



விமானம் ஏறுவதற்கு முன் நடந்த இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்.

அப்போதைய காலகட்டத்தில் (இப்போதும் கூடத்தான்) சில ஊடகவியலாளர்கள் (தமிழர்கள் மட்டுமன்றி) வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது அனைவரும் அறிந்ததே.

அதிலும் எனது நவெம்பர் மாத சம்பவமும் அது சம்பந்தமாக இனியும் ஏதாவது சந்தேகம் இருக்கலாம் என்பதையும் எங்கள் அலுவலக நிர்வாகம் அறிந்தே இருந்தது.

என் மீது அவர்கள் காட்டிய அக்கறை வெளிப்பட்ட தருணம் அது. புலனாய்வு அதிகாரிகள் செயந்துள்ள நுழைவாயில் பகுதியில் மிகப்பக்குவமாக எனக்கு முன்னால் குருவிட்ட அவர்களை அனுப்பிய பின் என்னைப் போகவிட்டு பின்னாலேயே எங்கள் பெரிய தலைகள் வந்திருந்தார்கள்.

தற்செயலாக எனக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் என்று இந்த முன்னெச்சரிக்கை..

கடந்த அங்கத்தில் நான் விட்ட இடம்...

யாரோ இரண்டு இளம் வாலிபர்கள் தூரத்திலிருந்தே என்னையே உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று விளங்கியது. தமிழர்கள் என்றும் தெரிந்தது.
அப்படியே என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...


அந்த இருவரும் கிட்ட வந்து புன்னகைத்த பின்னரும் எனக்கு அவர்களை யாரென்று அடையாளம் காணவில்லை.. அவர்களாக அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.

அண்ணனும் தம்பியுமான அந்த இருவரும் நீண்டகால எனது நேயர்கள். தம்பி சிங்கப்போரில் தொழில் செய்கிறார்.அண்ணன் கனடாவிலிருந்து விடுமுறைக்காக தம்பியிடம் வந்திருந்தார்.

குசலம் விசாரித்து நாட்டு நடப்புக்கள்,நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொன்டார்கள்.
சிங்கப்பூரில் இறங்கிய உடனேயே நம்ம நேயர்களா? பரவாயில்லையே..

எனது Chairmanக்கும் பெரிய பெருமிதம்.. இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.

லோஷன் அண்ணா என்று இன்னுமொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் பெண், அருகே அவரது கணவர் மற்றும் ஒரு சிறுமி.. மகளாக இருக்கவேண்டும்நான் யாரென்று புதிர்ப்பார்வை பார்க்க, தாங்களாகவே அறிமுகப்படுத்தினார்கள்.

எனது நீண்டகால நேயர்களில் ஒருவரான சிசிலியாவின் தங்கை குடும்பத்தினர். சிசிலியா எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு பரிசு அனுப்பி வைப்பவர். அவரது பிறந்த நாளும் எனது பிறந்தநாள் அன்றே (ஜூன் 5) எனது ஒவ்வொரு ஒலிபரப்பு மைல் கற்களையும் ஞாபகித்து வைத்து வாழ்த்து சொல்பவர்.

தாங்கள் இங்கே வாழ்ந்து வருவதாகவும், யாரோ உறவினர் ஒருவரை வரவேற்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள். நலம் விசாரித்து விடை பெற்றேன். வாயில் கடப்பதற்குள் மேலும் ஒரு சிலர்.. இணையத்தளத்தில் வெற்றி FM கேட்கும் நண்பர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு பேசினார். தனது நண்பர்களையும் அறிமுகப் படுத்தினார்.

"பேசாமல் லோஷனை இங்கேயே விட்டிட்டு போனால் இங்கேயே ஒரு வெற்றியைத் தொடங்கிடுவார் போல இருக்கு " என்று டினால் கிண்டலடித்தார்.

வெளியே வந்து இல ஏறி நாம் தங்கவிருந்த hotelக்கு பயணித்தோம்..
இருபக்கமும் பசுமையான மரங்களும் அழகான சுத்தமான வீதியும், நெடிதுயர்ந்த கட்டடங்களும் எனக்கு ஐரோப்பிய நாடுகளையே ஞாபகப்படுத்தியது.

இந்த நாட்டையா எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது என்று எண்ணிப் பார்த்தேன்..

எனினும் வியப்பை அளித்த ஓரிரு விஷயங்கள்..

போக்குவரத்து நெரிசல் இல்லா வீதிகள்..
காலை வேளைக்கான எந்தவொரு பரபரப்பும் இல்லை..

2002ஆம் ஆண்டு Modelக்குரிய Toyotaகாரில் மணிக்கு 120என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தும் எந்தவொரு குலுக்கலசைவுகளும் இல்லை.

எங்கள் Chairman,அவரது மனைவி ஆகியோர் வேறிடத்திலும் நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர விடுதியை அடைந்தோம்.
ஓய்வெடுக்க நேரமில்லை.. அவசர அவசரமாக அலுப்புத் தீர குளித்து ஆடை மாற்றி கண்காட்சிக்கு புறப்பட்டோம்.

ஊர் சுற்றிப் பார்ப்பதற்கும், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்துள்ள எனக்கும்,குருவிட்ட அவர்களுக்கும் இடங்கள்,இடக்குறிப்புக்கள் காட்டுவதற்காகவும் தொடரூந்து மூலமாக செல்வதாக ஏற்பாடு.

போகிறவழியிலேயே காலை சாப்பாட்டை ஒரு இந்தியக் கடையிலே முடித்துக் கொண்டோம்..

உள்ளே நுழைகிற நேரம்
"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது" ஒலி வானொலிப் பாடல் வரவேற்றது.

அடுத்த அங்கம் கண்காட்சித் திடலில்..

(நேரம் கிடைக்கும் போது பகுதி 6 தொடரும்...)

25 comments:

sdc said...

poothum nirutthikkuvam

ஆ.ஞானசேகரன் said...

waiting for part 6

அஜுவத் said...

பேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......

Anonymous said...

Why Loshan you stayed at "Kelang". Is it your management decission... Anyhow i think you enjoyed that location very well thane...

Awaithing for your next episodi..

சி தயாளன் said...

:-)

தொடரட்டும்:-)

Admin said...

//அஜுவத் said...
பேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//


இதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....

தொடங்கலாமே....

யோ வொய்ஸ் (யோகா) said...

யப்பா உங்கள விட்ட நல்ல மெகா சீரியல் எழுதி தள்ளிடுவீங்க போல, ஒரு மாதிரி 6 ஆம் அங்கத்தில் ஹோட்டல் வரை போயாச்சி, எப்படியும் இலங்கை வரும் போது வெற்றிகரமான 100 வது அங்கம் என எழுதிடுவீங்களோ ?????

Risamdeen said...

சந்ரு Said...

//அஜுவத் said...
பேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//


இதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....

தொடங்கலாமே....

Yeya ye yengada ovvoru vidiyalum santhosamaaha vidivathu ungalukku viruppamillaya

Anonymous said...

"""""வானொலித்துறையில் பத்து ஆண்டுகளை படிப்படியாக ஒவ்வொரு பதவியென கடந்து இப்போது உச்ச பதவியில் இருக்கும் உங்களுக்கு சிங்கப்பூரில் இல்லை உலகமெலாம் ரசிகர்கள் உள்ளார்கள் அண்ணா"""""..

அப்புறம் இன்னுமொரு விஷயம் நம்ம தமிழ்ர்களில் ஒரு நல்ல பழ்க்கம் இருக்கிறது. அதாவது, தெரிந்தவர்களை எங்கு கண்டாலும் நலம் விசாரிக்கத் தவறாமை. எனினும் சிலர் விதிவிலக்குகளாக இருக்கலாம்....

பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. கடந்த நான்கு பகுதியிலும் ஒரு எதிர்பார்ப்பை வைத்துவிட்டு முடித்தீர்கள். இந்தப் பதிவில் அது இல்லாதது ஒரு குறையாக தெரிகிறது. எனவே இனிவரும் பதிவுகளில் எதிர்பார்ப்புடன் தொடரும் போடவும்....

வாழ்த்துக்கள் அண்ணா...
ஆறாவது பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...

நன்றி..
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.

என்ன கொடும சார் said...

// என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...//
டக் ....டக் ....டக் ....டக் ....

//இருவரும் நீண்டகால எனது நேயர்கள்//
ஞங்... ஞங்... ஞங்... ஞங்...

ஏன் இந்த கொல வெறி.. சீரியல் பார்க்காம blog படிச்சா நீங்க இங்க வந்து ...

//ஒரு இளம் பெண//
ஆரம்பிச்சுட்டான்யா..

//நலம் விசாரித்து விடை பெற்றேன//
இப்பதான் மூச்சு வந்தது...

பெண் என்று மட்டும் பாருங்க.. எதுக்கு இளம்?

//இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.//
எப்ப சம்பளம் கூட்டி கேக்க போறீங்க

//எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது//

நிச்சயம் பிடிக்கும்

//நாங்கள் கேலாங்//
இப்ப எங்களுக்கு தெரிஞ்சிட்டுது.. ஏன் தனியே போனீங்க என்டு..

//ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர//
என்ன கம்பனி அய்யா? 5 நட்சத்திரமா ஏற்பாடு செய்திருக்க வேண்டாம்?

வந்தியத்தேவன் said...

//நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.//

கட்டுநாயக்காவிலும் இளம்பெண் சிரிக்கிறார். சங்காய் விமான நிலையத்திலும் சிரிக்கிறார், சிங்கம் சிங்கிள் என தலைப்பையும் வைத்திருக்கிறார், தங்கியிருக்கும் இடம் கேலாங், எல்லாம் சேர்ந்தால் ஏதோ ஒரு விடை வருகிறது, ஆனால் நண்பனில் எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால் சிங்கம் சிங்கிளாக சிங்கிகளை லுக்கு மட்டும் விட்டிருக்கும் என நம்புகிறேன்.

லோஷன் உடனடியாக ஒரு மெஹா சீரியலுக்கு கதாசிரியராகுங்கள் உங்களுக்கு அங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது. தொல்காப்பியனின் ஈமெயில் ஐடி அனுப்பவா?

just for fun said...

http://www.e07329.tk/

HARRY POTTER said...

excellent மெஹா சீரியல் http://harrypotter009.blogspot.com

ARV Loshan said...

tamil kathal said...
poothum nirutthikkuvam
//

முடியாது சகோதரா.. அவங்க எல்லாரையும் நிறுத்த சொல்லுங்க (யாரை என்றெல்லாம் கேக்கப்படாது..)

பிடிக்கலேன்னா வாசிக்காமல் விடலாம் சகோதரா..

===============
ஆ.ஞானசேகரன் said...
waiting for part 6//

வந்திட்டே இருக்கு ஞானா..

ARV Loshan said...

அஜுவத் said...
பேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//

நல்லது தான்.. நம்ம பெரியவங்க காதில கொஞ்சம் போட்டு வையுங்களேன்.. ;)

=================
Anonymous said...
Why Loshan you stayed at "Kelang". Is it your management decission... //
our management decision. i ve already stated this was my 1st visit to S'pore.

Anyhow i think you enjoyed that location very well thane...//
;) i know wat u r meaning but not in that way.

ARV Loshan said...

’டொன்’ லீ said...
:-)

தொடரட்டும்:-)//

:) அடுத்தடுத்த அங்கங்களில் சில பிரபல பதிவர்களும் என்னுடன் தோன்றுவார்கள்.. ;)

==================


சந்ரு said...
//அஜுவத் said...
பேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//


இதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....

தொடங்கலாமே....//

வாங்கய்யா.. பேசாமல் நீங்க முதலிடுங்க.. நான் ரெடி

ARV Loshan said...

யோ (Yoga) said...
யப்பா உங்கள விட்ட நல்ல மெகா சீரியல் எழுதி தள்ளிடுவீங்க போல, ஒரு மாதிரி 6 ஆம் அங்கத்தில் ஹோட்டல் வரை போயாச்சி, எப்படியும் இலங்கை வரும் போது வெற்றிகரமான 100 வது அங்கம் என எழுதிடுவீங்களோ ?????//

வாழ்த்துக்களுக்கு நன்றி யோ.. இப்போதைக்கு அந்த பெரிய ஐடியா எல்லாம் இல்லை.. ;)

நூறா? ஆளை விடுங்க சாமி.. ஆறுக்கே நாக்கு தள்ளுது.. ஆனாலும் முடியுமானவரை சின்ன சின்ன சம்பவங்கலாயிருந்தாலும் முக்கியமானவை எல்லாம் சொல்ல வேண்டுமே.

ARV Loshan said...

Risamdeen said...
சந்ரு Said...

//அஜுவத் said...
பேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//


இதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....

தொடங்கலாமே....

Yeya ye yengada ovvoru vidiyalum santhosamaaha vidivathu ungalukku viruppamillaya//

அதானே.. கேக்கிறாங்களா? ;)

====================

Anonymous said...நன்றி..
அன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.


"""""வானொலித்துறையில் பத்து ஆண்டுகளை படிப்படியாக ஒவ்வொரு பதவியென கடந்து இப்போது உச்ச பதவியில் இருக்கும் உங்களுக்கு சிங்கப்பூரில் இல்லை உலகமெலாம் ரசிகர்கள் உள்ளார்கள் அண்ணா"""""..//

ஆகா.. நன்றி சகோதரா.. :)

//அப்புறம் இன்னுமொரு விஷயம் நம்ம தமிழ்ர்களில் ஒரு நல்ல பழ்க்கம் இருக்கிறது. அதாவது, தெரிந்தவர்களை எங்கு கண்டாலும் நலம் விசாரிக்கத் தவறாமை. எனினும் சிலர் விதிவிலக்குகளாக இருக்கலாம்....//

உண்மை தான்.. ஆனால் எனையவரோடு ஒப்பிட்டுப் பார்த்தல் நம்மவரிடையே இது குறைவுதான்..

//பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. கடந்த நான்கு பகுதியிலும் ஒரு எதிர்பார்ப்பை வைத்துவிட்டு முடித்தீர்கள். இந்தப் பதிவில் அது இல்லாதது ஒரு குறையாக தெரிகிறது. எனவே இனிவரும் பதிவுகளில் எதிர்பார்ப்புடன் தொடரும் போடவும்....//

அப்படிப் போட்டால் தான் மெகா சீரியல் என்கிறாங்களே.. ;)
சரி பார்க்கலாம்.. ஏதாவது சஸ்பென்ஸ் வைப்போமே.. ;)

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
// என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...//
டக் ....டக் ....டக் ....டக் ....

//இருவரும் நீண்டகால எனது நேயர்கள்//
ஞங்... ஞங்... ஞங்... ஞங்...

ஏன் இந்த கொல வெறி.. சீரியல் பார்க்காம blog படிச்சா நீங்க இங்க வந்து ... //

அட விடப்பா விடப்பா.. வழமையானது போல அங்கே போனோம் இங்கே போனோம் என்றில்லாமல் ஏதாவது வித்தியாசமா எழுதுவம்னா விட மாட்டீரே....


//ஒரு இளம் பெண//
ஆரம்பிச்சுட்டான்யா.. //

உண்மைய சொல்ல முடியாதே.. ;)

//நலம் விசாரித்து விடை பெற்றேன//
இப்பதான் மூச்சு வந்தது...//

ஏன்யா இப்படி எரியுரீர்? ;)

பெண் என்று மட்டும் பாருங்க.. எதுக்கு இளம்?//
ஒரு மேலதிகத் தகவல் தான்

//இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.//
எப்ப சம்பளம் கூட்டி கேக்க போறீங்க //

already கேட்டாச்சுள்ள..;)

//எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது//

நிச்சயம் பிடிக்கும் //

பிடிச்சா சந்தோசம் தான்.. ஆனா அதுக்குள்ளே அவங்க எங்கேயோ போயிடுவாங்க..

//நாங்கள் கேலாங்//
இப்ப எங்களுக்கு தெரிஞ்சிட்டுது.. ஏன் தனியே போனீங்க என்டு.. //

என்ன கொடும சார்.. எப்ப பார்த்தாலும் அதே எண்ணத்துல திரியுறாங்க.. பதிவுலக பகவானே இவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு

//ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர//
என்ன கம்பனி அய்யா? 5 நட்சத்திரமா ஏற்பாடு செய்திருக்க வேண்டாம்?//

paymentல தங்க வைக்காம இப்படியாவது ஏற்பாடு செய்தாங்களே..

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
//நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.//

கட்டுநாயக்காவிலும் இளம்பெண் சிரிக்கிறார். சங்காய் விமான நிலையத்திலும் சிரிக்கிறார், சிங்கம் சிங்கிள் என தலைப்பையும் வைத்திருக்கிறார், தங்கியிருக்கும் இடம் கேலாங், எல்லாம் சேர்ந்தால் ஏதோ ஒரு விடை வருகிறது, ஆனால் நண்பனில் எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால் சிங்கம் சிங்கிளாக சிங்கிகளை லுக்கு மட்டும் விட்டிருக்கும் என நம்புகிறேன். //

பார்த்தீங்களாய்யா இது தான் நண்பனின் நம்பிக்கை.. வந்தி வாழ்க ஐயா நீர்..
நான் பார்வை ஒன்றே போதுமே என்ற கொள்கை உள்ளவனைய்யா.. (நம்பித்தான் ஆகணும்)

லோஷன் உடனடியாக ஒரு மெஹா சீரியலுக்கு கதாசிரியராகுங்கள் உங்களுக்கு அங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது. தொல்காப்பியனின் ஈமெயில் ஐடி அனுப்பவா?//

நீங்களுமா? இப்போதைக்கு வேணாமய்யா.. நிலைமை நம்ம பக்கம் (media)மோசமானா பார்க்கலாம்.. ;)

அஜுவத் said...

Loshan said.....
நல்லது தான்.. நம்ம பெரியவங்க காதில கொஞ்சம் போட்டு வையுங்களேன்....//

பெரியவங்க எண்டா யாரு கஞ்சி பாயும் சிங்கப்பூர் சீலனும் தானே

என்ன கொடும சார் said...

//எதுக்கு இளம்?//
ஒரு மேலதிகத் தகவல் தான்//
கண்கள் கருகுதே...

//ஆனா அதுக்குள்ளே அவங்க எங்கேயோ போயிடுவாங்க..//

எங்க போக போறாங்க.. recession அது இது என்டு நமக்காக wait பண்ணுவாங்க..

//பதிவுலக பகவானே இவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு//
ஒரு பக்கம் புகையுதே..

Mathu said...

That must have been a great moment for you when you meet a lot of fans abroad. All the best in your career and good lucks for more successes.:)

Anonymous said...

அண்ணா , உங்கள பத்தி நீங்களே பெருமைய பேசுறது ரொம்ப ஓவரா இல்ல

ஜெகதீசன் said...

தொடரட்டும்:-)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner