August 19, 2009

மோசடி நடுவரும், மோசமான தீர்ப்புக்களும்


இலங்கையிலே ஒரு நடுவர் இருக்கிறார். 'சிவாஜியில்' ரஜினி பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல என்று சொல்கிற மாதிரி, இந்த நடுவரின் பெயரைச் சொன்னாலும் யுவராஜ்சிங், கம்ரன் அக்மல் மற்றும் பல வெளிநாட்டுக் கிரிக்கெட் வீரர்களுக்கு உடலெல்லாம் உதறல் எடுக்கும்.


அந்த நடுவரின் பெயர் காமினி சில்வா...

இவர் நடுவராக நின்றாலே சில இலங்கை வீரர்களுக்கும் நடுங்குகிறது. ஆட்டமிழப்புக்களை இல்லையென்றும், இல்லாதவற்றை ஆட்டமிழப்பென்றும் மோசமான தீர்ப்புக்களை வழங்கிப் போட்டியின் முடிவுகளைத் தலைகீழாக மாற்றிப்போடுவதில் காமினி சில்வாவுக்கு நிகர் அவரே...


இவ்வாண்டு மார்ச் மாதம் இந்தியாவுக்கெதிரான தொடரில் கண்மண் தெரியாமல் காமினி சில்வா வழங்கிய தீர்ப்புக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. அவற்றுள் அநேகமானவை இந்தியாவுக்கெதிராகவே அமைந்தன.

எனினும் இந்தியா தொடரை வென்றதனால் பிரச்சினை பெரிதாகவில்லை. இம்முறை பாகிஸ்தானுக்கெதிராகவும் காமினி சில்வாவின் லீலைகள் தொடர்ந்தன.


காமினி சில்வா அண்மையில் நடந்து முடிந்த இலங்கை – பாகிஸ்தானிய ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியில் ஆடிய திருவிளையாடல் கிருஷ்ணபரமாத்மா கூட நிகழ்த்தாதது.

முதலில் பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் சந்தித்த முதல் பந்திலேயே துடுப்பில் பட்டுச்சென்ற (inside edge) பந்துக்கு lbw முறை மூலம் ஆட்டமிழந்ததாக அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

பின்னர் பாகிஸ்தானிய அணித்தலைவர் யூனிஸ்கானின் துடுப்பில் பட்டு விக்கெட் காப்பாளரும், தலைவருமான சங்கக்காரவின் கைகளுக்குள் சென்ற பந்தையே ஆட்டமிழப்பில்லை என மறுபடி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

இடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.

ஆட்டமிழப்பு என்று தெரிந்தவுடன் நடுவர் தவறுவிட்டாலும் நேர்மையுடன் வெளியேறுவதற்கு யூனிஸ்கான் என்ன கில்கிரிஸ்டா அல்லது சங்கக்காரவா?

மீண்டும் மீண்டும் தவறான தீர்ப்புக்கள் வழங்கியும் - எதிரணித்தலைவர்கள் முறைப்பாடு செய்தும், ஊடகங்கள் விமர்சித்துமே தொடர்ந்தும் காமினி சில்வாவை நடுவராக நியமிக்கக் காரணம் என்ன?

ஏதாவது அரசியல் பின்னணியா? அல்லது வெற்றி பெறுவதற்கான ஒரு வழியாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் கருதுகிறதா?

ஆனால் இலங்கை அணியும் இவரால் பல தடவை பாதிக்கப்பட்டுள்ளதே?

இந்த வேளையில் தான் காமினி சில்வா பற்றிய இன்னொரு தடாலடி மோசடி விவகாரம் தெரியவந்தது.

நடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுதி (காப்பியடித்து) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.

எனினும் தடையில்லாமல் இப்போதும் இலங்கை சார்பாக சர்வதேச நடுவராக வலம்வருகிறது இந்த மோசடி நரி! சில உள்ளூர் நடுவர்கள் பொருமியபடி இருக்கிறார்கள்.

பொதுவாகவே ஆசியநாடுகளில் போட்டிகள் இடம்பெறும் நேரம் உள்ளூர் நடுவர்கள் பற்றி எப்போதுமே முறைப்பாடுகள், விமர்சனங்கள் எழுவது முன்பிருந்தே வழமை. டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச நடுவர்கள் முறை வந்த பிறகு இக்குறை நீங்கியதாயினும், ஒருநாள் போட்டிகள், முதல் தரப்போட்டிகள், A அணிகளுக்கிடையிலான போட்டிகள் குளறுபடிகள் இன்னமும் நீடிக்கின்றன.

இலங்கைக்கு வந்துள்ள பாகிஸ்தான் A அணி நடுவர்களின் தீர்ப்புக்களால் நொந்து, வெந்து போய், தொடரை இடை நடுவே கைவிடத் தீர்மானித்து, பின் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உயரதிகாரிகள் தலையிட்டு தீர்த்து, சமாதானப்படுத்தி வைத்து, இரண்டாவது உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டியை பாகிஸ்தான் A வென்று தொடரைக் கைப்பற்றியது தனிக்கதை!

முன்னைய இலங்கை நடுவர்கள் பற்றிப் பேசவே வேண்டியதில்லை.

80 முதல் 90களின் நடுப்பகுதி வரை இலங்கையில் போட்டிகள் இடம்பெறும்போது இலங்கை நடுவர்கள் இலங்கை அணியின் மேலதிக இரு வீரர்கள் போலவே 'விளையாடி' வந்தனர் என்பது கசப்பான வரலாறு – எதிரணி பந்துவீச்சாளர்கள் LBW, Bat & pad catches, tip catchesஎதிர்பார்க்கவே முடியாது. இலங்கைப் பந்து வீச்சாளர்களுக்கோ இவை கேட்காமலே பரிசளிக்கப்படும்

T.A.M.சமரசிங்க, பொன்னுத்துத்துரை, B.C.கூரே, சாலிய டீ அல்விஸ் போன்ற மிக மோசமான நடுவர்களையும், K.T.பிரான்சிஸ், இமானுவேல் போன்ற சராசரி நடுவர்களையும் இலங்கை வழங்கியுள்ளது. இமானுவேல், பிரான்சிஸ் போன்றோர் பிற்காலத்தில் நல்ல நடுவர்கள் என்று பெயரெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

அசோக டீ சில்வா (முன்னாள் இலங்கை வீரரும் கூட) தனது நடுவர் வாழ்க்கையில் ஆரம்பக்கட்டத்தில் இந்திய அணி யாருக்கு எதிராக விளையாடினாலும் வில்லனாக, வில்லங்க முடிவுகளை வழங்கி இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை வாங்கினாலும் இப்போது சிறப்பாக செயற்பட்டு வருகிறார்.

அசோக டீ சில்வா - இந்திய கிரிக்கெட் அணியின் முன்னைய வில்லன்..

பல நல்ல, இளம் நடுவர்கள் சர்வதேச அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கும் வேளையில் காமினி சில்வா போன்ற துளி விஷங்கள் இலங்கையின் பெயரைக் கிரிக்கெட் உலகில் முற்று முழுதாகக் கெடுத்துவிடும்!

85 -86இல் இலங்கையில் வைத்து டெஸ்ட் தொடரைத் தோற்ற பிறகு அப்போதைய இந்திய அணித்தலைவர் கபில்தேவ் சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகிறது. 'இப்படிப்பட்ட மோசமான நடுவர்களை வைத்துக்கொண்டே உள்நாட்டில் விளையாடி வந்தால், வெளிநாட்டு மண்ணில் இலங்கையால் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வெல்ல முடியாது'

இலங்கை அணி வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றை வெல்ல மேலும் 9 வருடங்கள் தேவைப்பட்டன.

நல்ல காலம் டெஸ்ட் போட்டிகளுக்கு உள்ளூர் நடுவர்கள் இல்லை. இலங்கையணி சிறப்பாக விளையாடி பெற்று வரும் உண்மையான அண்மைக்கால வெற்றிகளுக்கும் அர்த்தமில்லாமல் போயிருக்கும்.




22 comments:

ஆதிரை said...

பதிவிட்டதும் உடனடியாகவே இணைக்கப்பட வேண்டிய திரட்டிகளில் இணைக்கவும். முந்திக்கொள்ளும் வாசகர்களின் வாக்குகளை வீணாக இழக்கின்றீர்கள்.

Nimalesh said...

angaum copy cut ahh?????????? mudiyala........

யோ வொய்ஸ் (யோகா) said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கட் பதிவு. ஒரு நாள் போட்டிக்கும் ரிவியு முறை கொண்டு வந்தால் இலகுவாக இருக்கும், இல்லா விட்டால் காமினி சில்வா போன்றவர்கள் தொடர்ந்து இருப்பார்கள்.

ஒரு 10 வருடங்களுககு முன் எனது பாடசாலை கால கட்டத்திலே சஜீவ டீ சில்வாவின் பந்து வீச்சில் விக்கட் காப்பாளரிடம் பிடி கொடுத்து ஜடேஜா ஆட்டமிழந்துவிடுவார். நடுவரும் ஆட்டமிழப்பை கொடுத்துவிடுவார். பின் ஜடேஜா நடுவரை பார்த்து முறைக்க நடுவர் ஆட்டமிழப்பு காட்டிய விரலை கொண்டு தலை சொறிகிற மாதிரி காட்டி கொள்வார். அந்த ஆட்டமிழப்பு வழங்கப்படவில்லை. இது நடந்தது இந்தியாவிலே, நாங்கள் வீதியில் விளையாடும் போது கூட இந்த மாதிரி விளையாண்டதில்லை. இப்படி எல்லாம் உள்ள நடுவர்கள் கிரிக்கட்டுக்கு அவமானம்...

ரொம்ப பெரிய பினனூட்டமோ?

Prapa said...

நாங்க என்ன தெரிஞ்சா செய்யுறம் ? அதுவா நடக்குது என்று சொல்லுவாரோ???

சப்ராஸ் அபூ பக்கர் said...

////நடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுதி (காப்பியடித்து) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.///

ஓஹோ.... அந்த வழியில் வந்தவரா இவர்?... அப்படியானால் இப்படித் தான் நடந்து கொள்ளுவார் இல்லையா?.... அவர் தான் திருந்தவில்லை என்றால் அவரை நியமித்தவர்கலாவது திருந்தக் கூடாதா?.... (அது எங்க நடக்க?.... அரசியல் பின்னணி அழகாய் இடம் அமைக்கிறது இல்லையா?...)

தேஜஸ்வினி said...

இவனுங்க எல்லாமே இப்படித்தான்.. 96 world cup semi final ல் B.C.Coorey கரெக்டா விலகுறேன்னு தலைய கொடுத்து Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது என்னால இன்னும் மறக்க முடியல..கடைசியில WI நான்கு ஓட்டங்களில் தோற்றுப் போனார்கள்

shabi said...

dharmasena va vittuteengale...............

Unknown said...

கடைசியா நியாயமான ஒரு ஆளைக் கண்டுபிடிச்சிட்டன்.. இது வரை இலங்கை நடுவர்கள் பற்றி என்ன சொன்னாலும் எல்லோரும் அவர்களை நீதி தேவன்களாகச் சித்தரித்து சண்டை போட்டார்கள் என்னிடம்.. ஆக, எனது கோணத்திலிருந்தும் பார்க்க நீங்கள் கிடைத்திருக்கிறீர்கள் லோஷன்..

இங்கிலாந்து 2001ம் வருடம் இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரை 2-1 என்று வென்றார்கள். முதல் போட்டியை இலங்கையும், அடுத்த இரண்டை இங்கிலாந்தும் வென்றார்கள். இரண்டாவது டெஸ்டில் முதலில் இலங்கை 297 எடுக்க பதிலளித்த இங்கிலாந்தின் இன்னிங்ஸில் பல தவறான முடிவுகளை பி.சி. குரே எடுத்தார். ஓவர் த ஸ்டம்ப்ஸ் வீசி லெக் ஸ்டம்புக்கு மிக வெளியே விழுந்து அலெக் ஸ்டுவெர்டின் காலில் லெக் ஸ்டம்புக்கு வெளியே பட்ட ஜயசூரியவின் பந்துக்கு எல்.பி.டபிள்யூ கொடுத்தார்... அதே நாள் மாலை விதி விளையாடியது.. ஜயசூரிய அடித்த மட்டைக் கடியிலேயே ஒரு பந்து நிலத்தில் பட்டுச் செல்ல அதை தோர்ப் பிடிக்க, குழம்பிப் போன கூரே அதையும் அவுட் கொடுத்தார்... அடுத்த நாள் இலங்கைப் பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகளில்
1. ஜயசூரியவை அவுட் கொடுத்ததுக்காக கூரே திட்டித் தீர்க்கப்பட்டார்
2. ஸ்டூவர்ட் பற்றி கதையே இல்லை

Sutha said...

//இவனுங்க எல்லாமே இப்படித்தான்.. 96 world cup semi final ல் B.C.Coorey கரெக்டா விலகுறேன்னு தலைய கொடுத்து Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது என்னால இன்னும் மறக்க முடியல..கடைசியில WI நான்கு ஓட்டங்களில் தோற்றுப் போனார்கள்//

B.C.Coorey போன்ற நடுவர்களை , சர்வதேச போட்டிகளில் விடுறதே பிரிய விஷயம். அதுவும் world cup semi final ல B.C.Coorey நிண்டா அது உலக அதிசயம். Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது ஒரு காலத்தில் நல்லா இருந்து பிறகு மோசடியாப்போன Steve Buckner எண்டு நினைக்கிரன்

hamshi said...

Neengala anna Srilankavittkku ethera coment?athuvum cricketa paththi.napa mudiyala?erunthum nadu nilamayaithan nekkurina.
நடுவர்களைத் தெரிவுசெய்யும் பரீட்சையொன்றில் பார்த்தெழுதி (காப்பியடித்து) கையும் மெய்யுமாக அகப்பட்டுள்ளார் காமினி சில்வா.
sheee!evangaluma?nala mantha vanguringa S.L teamen.paththu anna

தேஜஸ்வினி said...

//Sutha said...
B.C.Coorey போன்ற நடுவர்களை , சர்வதேச போட்டிகளில் விடுறதே பிரிய விஷயம். அதுவும் world cup semi final ல B.C.Coorey நிண்டா அது உலக அதிசயம். Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது ஒரு காலத்தில் நல்லா இருந்து பிறகு மோசடியாப்போன Steve Buckner எண்டு நினைக்கிரன்
//
very sorry
http://www.cricinfo.com/statsguru/engine/match/65191.html
இந்த லிங்க்ல போய் பாருங்க கீழே match notes னு ஒன்னு இருக்கு அதையும் பாருங்க

எட்வின் said...

கிரிக்கெட்டில இதெல்லாம் சகஜமப்பா என்று கூறினாலும் கூறுவார்கள் இந்த நடுவர்கள். யோ கூறுவது போல் Review system கொண்டு வந்தால் இதற்கு ஒரு தீர்வாகலாம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

தேஜஸ்வினி
இவனுங்க எல்லாமே இப்படித்தான்.. 96 world cup semi final ல் B.C.Coorey கரெக்டா விலகுறேன்னு தலைய கொடுத்து Richerdsan நின் பவுண்டரியை தடுத்தது என்னால இன்னும் மறக்க முடியல..கடைசியில WI நான்கு ஓட்டங்களில் தோற்றுப் போனார்கள்//

இது தற்செயலா நடந்த விடயம், இந்த மாதிரி விடயங்களுக்கு நடுவர்களை திட்டி பயன் இல்லை. நான் குரேயை நல்ல நடுவர் என கூற வரவில்லை. அந்த போட்டியை அவுஸ்திரேலியா வெல்ல காரணம் ஷேன் வோர்ன்னின் சிறப்பான பந்து வீச்சும், சந்திரபோல்க்கு ஏற்பட்ட உபாதை மற்றும் அவர்களது பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமுமே. இதற்கு நடுவரை குறை கூறுவது சரியில்லை

தேஜஸ்வினி said...

//யோ வாய்ஸ் said...
இது தற்செயலா நடந்த விடயம், இந்த மாதிரி விடயங்களுக்கு நடுவர்களை திட்டி பயன் இல்லை. நான் குரேயை நல்ல நடுவர் என கூற வரவில்லை. அந்த போட்டியை அவுஸ்திரேலியா வெல்ல காரணம் ஷேன் வோர்ன்னின் சிறப்பான பந்து வீச்சும், சந்திரபோல்க்கு ஏற்பட்ட உபாதை மற்றும் அவர்களது பின்வரிசை துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமுமே. இதற்கு நடுவரை குறை கூறுவது சரியில்லை
//
நான் நடுவர்களை குறை சொல்லவில்லை இலங்கை நடுவர்களால் ஆட்டங்களின் முடிவுகள் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டதற்கு உதாரணமான சம்பவத்தை தான் சொன்னேன் ..யாரும் விருப்பப்பட்டு பந்துக்கு தலையை கொடுக்க மாட்டார்கள்

யோ வொய்ஸ் (யோகா) said...

தேஜஸ்வினி
இலங்கை நடுவர்களால் ஆட்டங்களின் முடிவுகள் தலைகீழாக மாற்றி அமைக்கப்பட்டதற்கு உதாரணமான சம்பவத்தை தான் சொன்னேன் .//

இலங்கை நடுவர் என மட்டும் கூற கூடாது. எல்லா நடுவர்களும் பொதுவா அப்படிதான் இந்தியா அவுஸ்திரேலியாவில் கடைசி நாள் மதியஉணவுக்கு பின் சகல விக்கட்டுகளையும் இழந்தது, அதே அவுஸ்திரேலியாவில் சங்கக்கார தோளில் பட்ட பந்து கேட்ச் பிடிக்கப்பட்டு 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது என பல போட்டிகளை கூறலாம் இந்த போட்டிகளில் எல்லாம் இலங்கை நடுவர்கள் இருக்கவில்லை

Sutha said...

//தேஜஸ்வினி//
பாத்துட்டேன். தப்பு தான் ....b.c .cooray world cup semi final ல கூட நடுவரா இருந்த இலங்கையர் எண்டு நினைக்கயில பெருமையா இருக்கு.

Karthikeyan G said...

//இடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.//


சங்ககாரா கிரிக்கெட்டில் நேர்மையை குத்தகைக்கு எடுத்திருப்பது போல எல்லோரிடமும் நாட்டாமை பண்றாரே.. சங்காவின் செயல் ரொம்ப சின்னபுள்ளதனமா இருந்தது
Ans was also too irrittating.. :(
Younis khan looked more genuine than Sanga.

தேஜஸ்வினி said...
This comment has been removed by the author.
தேஜஸ்வினி said...
This comment has been removed by the author.
தேஜஸ்வினி said...

//யோ வாய்ஸ் said...
இலங்கை நடுவர் என மட்டும் கூற கூடாது. எல்லா நடுவர்களும் பொதுவா அப்படிதான் இந்தியா அவுஸ்திரேலியாவில் கடைசி நாள் மதியஉணவுக்கு பின் சகல விக்கட்டுகளையும் இழந்தது, அதே அவுஸ்திரேலியாவில் சங்கக்கார தோளில் பட்ட பந்து கேட்ச் பிடிக்கப்பட்டு 191 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது என பல போட்டிகளை கூறலாம் இந்த போட்டிகளில் எல்லாம் இலங்கை நடுவர்கள் இருக்கவில்லை
//
அண்ணா உடுங்கண்ணா..இதுக்கெல்லாம் போய் கோவப்பட்டுக்கிட்டு...உங்களுக்கு விருப்பம் என்றால் அந்த இலங்கை நடுவர்களில் இலங்கையை எடுத்துருங்க..

யோ வொய்ஸ் (யோகா) said...

Karthikeyan G said...

//இடையிடையே இலங்கை அணிக்குக் கொடுக்க வேண்டிய ஆட்டமிழப்புக்கள் கிடைத்தாலும், பாகிஸ்தானின் ஓட்டக்குவிப்பாலும் விரக்தியடைந்திருந்த சங்கக்கார – யூனிஸ்கான் நேர்மையாக வெளியேறியிருக்கவேண்டும் என்று வாக்குவாதப்பட ஆரம்பித்தார்.//


சங்ககாரா கிரிக்கெட்டில் நேர்மையை குத்தகைக்கு எடுத்திருப்பது போல எல்லோரிடமும் நாட்டாமை பண்றாரே.. சங்காவின் செயல் ரொம்ப சின்னபுள்ளதனமா இருந்தது
Ans was also too irrittating.. :((
Younis khan looked more genuine than Sanga.

ஜீனியஸ் தான் தான் ஆட்டமிழந்தது தெரிந்தும் வெளியே போகாதவரோ? சங்கா ஒரு முறை இங்கிலாந்தோடு எப்பீல் பண்ண முதல் வெளியே நடந்தவர் தொரியாதா?

யோ வொய்ஸ் (யோகா) said...

சீச்சீ நான் கோவபடல சும்மா

சும்மா டமாஷ் பண்ணுனேன்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner