August 22, 2009

வர்றீங்க தானே?


வர்றீங்க தானே?

இது ஒரு ஞாபகமூட்டல் பதிவு..


நாளை ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு என்ன வேலை இருந்தாலும் போட்டுவிட்டு ஓடி வந்து விடுங்கள்..

வருவீங்க என்று தெரியும்.. இருந்தாலும் ஒரு நினைவுறுத்தல் தான்..
எல்லா ஏற்பாடுகளும் பூர்த்தி.. பங்கேற்பாளர்கள் (நீங்க தானே முக்கியம்) வந்து நிகழ்ச்சியைப் பூரணப்படுத்தி வெற்றியாக்குவது மட்டும் தான் மிச்சம்..

முதலில் வந்து முந்துவோருக்கு சொகுசான இருக்கைகள், புல்லட் வழங்கும் விசேட உணவுகள் கிடைக்கும்..உண்மையா.. நம்புங்கப்பா.. அட ச்சே இந்த புல்லட் பெயரைப் போட்டால் எதையும் யாரும் நம்புறாங்க இல்லை.. (அதுக்கு தானே ஆரம்பம் முதலே வருவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டு எண்ணிக்கை எடுத்தோம்)

விஜயகாந்த் ஸ்டைலில் சில புள்ளி விபரங்கள்..

இலங்கையைச் சேர்ந்த பதிவர்கள் பல நூறு.. ;) (இப்ப ஆயிரம் தாண்டும் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்)

அதில் இலங்கையில் இருந்தே பதிவிடுவோர் சில நூறு..

நாம் சேர்ந்து அழைப்பு விட்டது எல்லோருக்கும்..

வாழ்த்து சொன்னவர்கள் பல பேர்..
வருவதாக சொன்னோர் பலர்..

ஒழுங்குபடுத்தலை ஆரம்பித்த அப்பாவிகள் நாலு பேர்..

இப்போ எங்களோடு ஆதரவாக இன்னும் ஒரு நாலைந்து பேர்.. ((பக்க பலமாக இன்னும் பல பேர் - வெளியிலருந்து ஆதரவு ;))

நாங்கள் வருவார்கள் என்று நினைத்தது முதலில் ஒரு 25.(அதுக்கே நொண்டியடிக்கும் என்று பார்த்தோம்.. ஆனா இப்போ.. :))

உறுதிப் படுத்தியோர் மட்டும் இப்போதைக்கு தாண்டியிருக்கிறது 80.

சொல்லாமல் கொள்ளாமல் வரும் அன்புள்ளங்களையும் அழைக்கிறோம்..

பல பயனுள்ள விடயங்கள் பகிரப்படும் ஒரு சந்திப்பாக மாற்ற வரும் உடன்பிறப்புக்களே.. (கட்சி பீலிங் வருதா?) நேரத்துக்கே வாருங்கள்..

நேரத்துக்கு ஆரம்பித்து ஒரு புதிய கூட்ட பரம்பரைப் பரிணாமத்தை ஏற்படுத்துவோம்..

மறந்துடாதீங்க இலங்கை நேரம் (கொழும்பு நேரம்) காலை ஒன்பது மணிக்கு..

கொழும்பு தமிழ் சங்கத்துக்கு வரும் வழி தெரியும் தானே?? தெரியாதவர்கள் வெள்ளவத்தையில் உள்ள உங்கள் உறவுகள் நண்பர்களிடம் கேளுங்கள்.. இல்லையெனில் ஆதிரையின் பதிவில் காட்டப்பட்டுள்ள வரைபடம் பாருங்கள்..

நிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..

Bloggerஇன் பத்தாவது பிறந்த நாள் சிறப்பு நிகழ்ச்சியும் எங்கள் இலங்கைப் பதிவர் சந்திப்பை சிறப்பு செய்து சரித்திரம் படைக்க வைக்கிறது..

வர்றீங்க தானே?


எதிர்காலத்துக்கான் பெரிய முயற்சிகளுக்கான இந்த சின்ன முதலடியை நாளை சரித்திரபூர்வமாக்குவோம்..

குறுகிய காலத்தில் இதை சாத்தியப்படுத்திய அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் & வாழ்த்துக்கள்..

மீதி சந்தித்த பிறகு.. ;)

வர்றீங்க தானே?


13 comments:

சயந்தன் said...

வாழ்த்துக்கள்...
//நிறைய சந்தோஷங்கள் எதிர்பாராத எதிர்காலத்துக்கான நல்ல விஷயங்கள் காத்திருக்கின்றன..//

ஏன் அண்ணை சுயம்வரம்.. அல்லது கல்யாணமாலைமாதிரி ஏதாகிலும் நிகழ்ச்சியும் வைக்கப்போறியளா... ?

அந்த கல்யாணமாலை நிகழ்ச்சி செய்யிறவரா உங்களை நினைச்சுப்பார்த்தன் :).. சரிம்மா... நீங்க விரும்புற மாதிரி ஒரு நல்ல வரன் உங்களுக்கு கண்டிப்பா கிடைக்கும்...

--

முக்கியமா புதிய பலரை எழுத வையுங்கோ.. முடிஞ்சா மீடியா பவரையும் பாவியுங்கோ :)...

(தமிழாலயம் நிகழ்ச்சி ஒண்டுக்கு அழைப்பிதழ் கொடுக்க சூரியன் FM க்கு வந்து 35ம் மாடியேற மூண்டையும் ஐஞ்சையும் லிப்டுக்குள்ளை அமத்திப்போட்டு நிண்டது நினைவு வருகுது :)

Rama from UK said...

My heartest wishes your (including everybody) first step. I am not blogger, but do not missed any of your articles.

I will be the first participant if I live there. May be I will join in your 3rd meeting (in 2011).

Comming monday I will check your blog for the details of meeting. Good luck

Paheerathan said...

வாரமுங்கோ........... :)

என்ன கொடும சார் said...

சார்.. " இளம் " பெண்கள் வருவாங்களா?

புல்லட் said...

நான் பதிவை போட்டா இவங்க சும்மா காமெடி பண்றாங்களோ எண்டு பலபேர் வராம விட்டுடுவாங்க... ஆனா மேலே லோசன்ணா சொன்னது அனைத்துமுண்மை.. நாளைக்கு சிற்றுண்டி சிறுபானம் அது இதெண்டு சும்மா கலக்கப்போகுது..(வயித்தை இல்ல) கட்டாயம் வாங்கோ.. ஒரு கொஞ்ச நேரம் ஜாலியா ஒண்டு கூடலாம்....

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் லோஷன், எப்படியும் வர முயற்சிக்கிறேன்.

Sinthu said...

அண்ணா, பதிவாளர் சந்திப்பைப் பற்றிய தகவல்களை எதிர்பார்த்துருக்கிறேன். பதிவீர்கள் தானே? இலங்கையில் இப்படி ஒரு சந்திப்பு என்று எதிர் பார்க்கவே இல்லை..வாழ்த்துக்கள்.
சந்திப்பு பற்றிய தகவல்கள் எப்போது வரும்? (சந்திப்பே இன்னும் நடக்கல்ல என்று கேக்காதீங்க...)

Sinthu said...

விஜயகாந்த் பாணியில் நீங்கள் சொன்னது நன்றாகவே உள்ளது, ஆனால் சொல்லும் பொது கொஞ்சம் இடிக்கிற மாதிரி இருக்கே..............

Nimalesh said...

illai coz i ma nt blogger..............lol

சப்ராஸ் அபூ பக்கர் said...

நிச்சயம் சந்திப்பு வெற்றி கரமாய் அமையும் அண்ணா.... நான் கடல் கடந்து இருந்தாலும் என் சார்பாக என் நண்பர் ஒருவர் கலந்து கொள்கிறார் அண்ணா.....

சந்திப்பு பற்றி கட்டாயம் பதிவு எழுதுங்கள் அண்ணா.....

சந்தோஷ் said...

ok....
9 மணிக்கு chorus சா ஒரு “உள்ளோம் அய்யா” போட்டுட்டா போச்சு

Colvin said...

நாளை எப்படியும் வந்துவிடுவேன். கூ்ட்டம் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல ஆண்டவர் துணை நிற்பார்

அன்புடன்
கொல்வின்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் லோஷன்!

உங்க புள்ளி விபரம் விஜயகாந்து பாணியா தெரியல.

கருணாநிதி பாணியா தெரியுது. அவர் தான் ஒரு பாதுகாப்புக்கு ஏறத்தாழ அப்படின்னு சொல்லுவார். சரியான புள்ளிவிபரத்தை சொல்வதில்லை, சொல்லத்தேவை இல்லை. தப்பிப்பது எளிதல்லவா?


தவறாக இருந்தாலும் துல்லியமாக புள்ளி விபரம் சொல்லக்கூடியவர்.

நம்ம புல்... விஜயகாந்து தான்!

என்னாத்த இருந்தாலும்

நம்ம விஜயகாந்த் ஆவுமா?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner