August 24, 2009

முதலாவது பதிவர் சந்திப்பு - சில நிகழ்வுகள் சில தகவல்கள் சில படங்கள்




வழமையாகத் தாமதமாக விடியும் ஞாயிறு காலை எங்களுக்கெல்லாம் நேற்று சீக்கிரமாகவே விடிந்துவிட்டது.

வழமையான கொழும்பு நேர மரபுகளையெல்லாம் உடைத்து சரியாக 9 மணிக்கே எமது பதிவர் சந்திப்பை ஆரம்பிப்பதென்றால் சும்மாவா?

என்னதான் எல்லா ஆயத்தமும் செய்தும், பலபேர் 9 மணிக்கே வந்தும், மரபை அவ்வளவு சீக்கிரம் உடைப்பது நல்லாயிருக்காது என்று கருதியும், மேலும் சிலர் வந்தபிறகு ஆரம்பிக்கலாமென்றும் 9.15 அளவிலேயே எமது சரித்திரபூர்வமான முதலாவது இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பை ஆரம்பித்தோம்.(இதுவே பெரிய விஷயமில்லையா?)

சுமார் 75பேர் தாராளமாக அமரக்கூடிய தமிழ்ச்சங்க வினோதன் மண்டபம் முற்றிலும் நிரம்பும் அளவுக்கு பதிவர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் என்று வந்திருந்தது நிறைவு.

சில முக்கிய நிகழ்வுகள்:

யாழ்ப்பாணம், மன்னார், கிழக்கு மாகாணம், பதுளை, கண்டி, புத்தளம் என்று நெடுந்தொலைவிலிருந்தும் ஆர்வத்துடன் பலர் வந்திருந்தனர்.

இனிமேலும் பதிவு ஆரம்பிக்கும் உற்சாகத்துடன் பல இளையவர்கள்!
பதிவர்கள் தங்களை அறிமுகப்படுத்திய போது இவ்வளவு நாளும் எழுத்துக்கள், பின்னூட்டங்கள் மூலமாக அறிந்த பல நண்பர்களின் முகங்களைக் கண்டோம்.

தங்களையும் தங்கள் வலைத்தளங்களையும் அறிமுகப்படுத்தியோரில் ஒன்றோ, இரண்டு பேர்தான் சீரியஸ் பதிவு எழுதுகின்றவர்களாம் (அரசியல், சமூக, இலக்கியப் பதிவுகள்) இவ்வளவு சீரியஸான இலங்கையில் சீரியஸான பதிவரே இவ்வளவு பேர் தானா?

அநேகமானவர்கள் என்னைப் போல, நம்மைப்போல பல்சுவை (அதாங்க மொக்கை, மசாலா) பதிவர்கள் தானாம்.... வேறு வழி?

புல்லட்டின் ஆரம்ப வரவேற்புரையே அதிரடி சிரிப்பு வெடிகளைத் தூவிவிட கலகலப்பான ஆரம்பத்துடன் கூட்டம் செல்வது உறுதிப்பட்டது.

6ஆம் வகுப்புப் படிக்கும் ஒரு குட்டி பதிவரும்(தந்தையார் தான் அதிகம் உதவுகிறார் போலத் தெரிந்தது). வந்திருந்தார்.

குட்டிப் பதிவர்..

புல்லட்டின் கடிகள் மொக்கைகள் கூட்டத்தின் கனதியையும் சீரியஸ் தனத்தையும் குறைக்க உதவியதோடு பட்ட (நிதிக்) கஷ்டங்களை வேடிக்கையாக்க உணர்த்தவும் உதவியது.

குறிப்பாக வடை டீ சாப்பிட வந்தவர்கள் பல்லுப்போன கதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.

புல்லட்டின் ஐடியாவில் கொண்டுவரப்பட்ட Blogger இன் 10வது பிறந்தநாள் கேக்கை அறிமுகப்படுத்தி 10 மெழுகுவர்த்திகளை ஏற்றி மின் அனைத்து வெட்டுவதற்கு ஆட்களை சுவாரஸ்யமாகத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை ஆதிரைக்கு வழங்கினோம்.

Happy birthday Blogger...

இஸ்லாமிய சகோதரர்களின் நோன்பினால் நிறைய வடைகள் பற்றிஸ்கள் கேக்குகள் கேட்பாரற்று கிடக்க என் வயிறும் எங்கள் வீட்டு புல்லட் வீட்டு குளிர்சாதப் பெட்டிகளும் அவற்றுக்கு தஞ்சம் வழங்கின.


சுபானு வலைப்பதிவுகளும் சட்டமும் பற்றி கொடுத்த விளக்கங்கள் சிலபேருக்குத் தெரிந்தும் பலபேருக்குப் புதியதாகவும் இருந்தது. இந்தப் பையன் தானா அந்த ஊஞ்சல் காரன் என்று யாரோ பின்னாலிருந்து முனுமுணுத்தார்கள்.

சட்டப்படி விளக்கம் கொடுத்த சுபானு..

யாரோ Law-சன் இருக்க இவர் என்ன law விடுகிறார் என்றார்கள்.

மருதவூரான் திரட்டி பற்றி விளக்கினார்...அது கொஞ்சம் அதிகமாகவே யாழ்தேவி திரட்டி பற்றிய விளக்கமாய்ப் போய் விட்டதோ என்று தான் வற்தியின் காதைக்கடித்தும் வைத்தேன். (பின்னர் கலந்துரையாடலின் சூடான விஷயமாக இந்த யாழ்தேவியே மாறிப்போனது)

திரட்டிகள் பற்றி சொல்லும் மருதமூரான்

சேரன் கிரிஷ் தொழினுட்ப விக்கங்கள் தந்தார். அணுகமுடியாதளவு பயமாக இருந்த சில பிரமாண்ட விஷயங்களும் என்னைப்போல தொழினுட்ப அறிவின் ஆரம்பக் கட்டத்தில் இருப்போரும் மிக எளிதாக புரியக் கூடியதாக இருந்தது.

மதுவதனின் கைவண்ணத்தில் ஊரோடி பகியும் சேர்த்து நேரடி ஒளிபரப்பை மேற்கொண்டது நேற்றைய சந்திப்பின் உச்சக்கட்டம்.

கணினி திருப்பி திருப்பியே கழுத்தையும் கைகளையும் சுளுக்கிக்கொண்ட பகீ, மது

பல பிரபல மிகப்பிரபல சர்வதேசப் பதிவர்களும் நேரடியாக பார்த்ததோடு தங்கள் கருத்துக்களையும் உடனுக்குடன் பதிவு செய்தார்கள்.
ஒரே நேரத்தில் நாற்பது பேர் வரை இணைந்திருந்தது சிறப்பு. தொழிநுட்பம் எப்படியெல்லாம் எம்மை சேர்க்கிறது..

எங்களுக்கும் யாராவது தாய்க்குலம் பேசாதா என்று ஆசைதான். முன்வந்தால் தானே? ஒரேயொரு (மன்னாரிலிருந்து வந்த சகோதரி) கலந்துரையாடலில் பேசினார்.

மின்னும் கமெரா பளிச்கள்

அவர்களது கேள்விகள் உடனடியாக பதிலளிக்கப்பட்டன. பெண்களில் யாராவது ஒருவரைப் பேச விடுமாறு கோரிக்கைகள் தான் அதிகமாகவே chattingஇல் வேகமாக வந்தன.


மன்னார் சகோதரி பேசும் போது எதோ ஒரு இடத்திலே தான் தமிழச்சி என்று சொல்லி வைக்க, யாரோ ஒரு பதிவர் வந்து என்னிடமும் வந்தியிடமும் 'இவர் தான் அந்த 'தமிழச்சி'யா என்று கேட்டது கொடுமையிலும் கொடுமை..

33 வீத ஒதுக்கீடு இங்கே கேட்க மாட்டீங்களா?

சிறப்புரையாற்ற நாம் அழைத்தவர் பிரபல ஒலி ஒளிபரப்பாளர் கவிஞர் விமர்சகர் நல்ல வாசகர் என்று பல பரிமாணம் கொண்ட திரு எழில்வேந்தன்..இலங்கையில் பிரபல கவிஞர் நீலாவணனின் மகன்..

சுருக்கமாகவும் சுவையாகவும் உரையாற்றிவிட்டு கிரிக்கெட் பதிவுகளை மட்டும் அதிகமாகப் போடும் என்னையும் சகபதிவர்களையும் ஒரு பிடி பிடித்துவிட்டுப் போனார்.

எழில் அண்ணா செய்த இன்னுமொரு நல்ல காரியம் நிதி சேகரிப்பு பற்றிய அறிவித்தல்..
எல்லாச் செலவுகளையும் எமக்குள்ளேயே பகிர்ந்து கொள்வது என்று நாம் முடிவெடுத்திருந்தாலும், எமது கைகளை கொஞ்சம் அதிகமாகவே கடித்தாலும் (குறிப்பாக புல்லட்டுக்கு) நாசூக்காக இது பற்றி புல்லட் கடித்திருந்தும் இது பற்றி வெளிப்படையாகக் கோரிக்கை விடத் தயங்கிக் கொண்டிருந்தவேளையில் பெட்டி ஒன்றை உண்டியலாக்கி விரும்பிய தொகையைப் போடுமாறு எழில் அண்ணா தான் ஐடியா கொடுத்தார்..

(எங்களுக்கு தலைமேல் இடி இறக்காமல் ஓரளவு நிதி சேர்ந்துள்ளது.. நன்றிகள் நண்பர்களே... அடுத்தமுறை ஏற்பாடு செய்வோர் தயங்காமல்,பயப்படாமல் நடத்தலாம்.. துண்டு விழாது.. குண்டும் விழாது)

வடை பற்றிஸ் நெஸ்கஃபே பரிமாறும் போது டிஷ்யூவும் கொடுக்கப்பட்டது. (இதையெல்லாம் சொல்றானே என்று பார்க்காதீர்கள்...விருந்தோம்பல் நடந்தது என்றும் ஆதாரபூர்வமாகப் பதிவுசெய்ய ஆசைப்படுகிறேன்..எனக்கு மட்டும் டிஷ்யூ தாராத வந்திக்கு கண்டனங்கள்)

வடை வடையாம்..

அதிரடி ஆட்டக்காரர்களை இறக்கி விட்டுப் பின்னரே நானும் வந்தியும் பேசுவதாக முடிவெடுத்திருந்தோம். (கல்லெறி கூச்சல் குழப்பங்கள் பற்றி சந்திரனுக்கு 'லைக்கா' அனுப்பி பரிசோதித்த பிறகே நாம் இறங்குவது பாதுகாப்பு இல்லையா?)

மைக்கைக் கண்டால் போதுமே.. பெரிய மைக் மோகன் இவர்.. ;)

எப்போதும் வானொலியில் பேச்சோ பேச்சு என்றிருக்கும் நான் யாரையாவது மாட்டிவிட்டு ஒதுங்கலாம் என்று பார்த்தால் எந்தப் புண்ணியவானும் தாமாக முன் வராததால் சரி கச்சேரி நடத்தலாம் என்று ஒலிவாங்கி பிடித்து ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்ற படியால் வழமையான எனது பதிவு போலவே அங்கொன்று இங்கொன்றாக தொட்டு வைத்து என்னுடைய நேரக் கணக்கை ஒப்பேற்றி வைத்தேன்.. (நிறையப் பதிவுலக நண்பர்கள் அந்த நேரம் வந்து நிறையக் கடித்து வைத்ததாக கேள்வி)

என்னோடு பாட்டுப் பாடுங்கள்.. ;)

என்னுடைய பேச்சைத் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறவிருந்ததால், பேச்சிலே சில கலந்துரையாடக் கூடிய விஷயங்களையும் தூவி விட்டுப் போனேன்.. (அதையெல்லாம் யார் பார்த்தார்கள்.. காரசாரமாக வந்த விஷயங்களோ வேறு)

கலந்துரையாடலில் அடுத்த பதிவர் சந்திப்பு பற்றிய ஐடியாக்கள், அனானிப் பின்னூட்டங்கள் பற்றிய ஏதாவது நல்ல தீர்மானங்கள், தமிழாக்கம், தொழினுட்பங்கள் பற்றி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாவது பேசலாம் என்று ஒரு மணிநேரம் வரை பேசலாம் என்றிருந்தோம்..

பார்த்தால் தமிழ் தட்டச்சு, யாழ்தேவி திரட்டி இந்த இரண்டிலுமே கருத்து மோதல்,வாதப் பிரதிவாதம், சர்ச்சை (எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக் கொள்ளுங்கள்) ஏற்பட்டு நேரம் பறந்து விட்டது..

இதிலே சிறப்பு என்னவென்றால் நேரடியாக இணைய ஒளிபரப்பினூடாக இணைந்திருந்த பலரும் முட்டி மோதி இருக்கிறார்களாம்.. ;)

ஒருவாறாக தட்டச்சுப் பொறி, திரட்டி இரண்டு விஷயத்தையும் தட்டி நிறுத்தி முடிவேதும் எட்டாமலேயே முடிவுக்கு கொண்டுவந்தோம்..
தேவையில்லாத சர்ச்சை என்று இதை சொல்ல முடியாது.. பல பயனுள்ள விடயங்கள் வந்தாலும் புதியவர்கள்,புரியாதவர்களுக்கு இதன் நேர நீளம் சிலவேளை போரடிக்கும் என்பதே எங்கள் ஒரே கவலையாக அப்போது இருந்தது.

ஏதாவது சர்ச்சை வரும் என்று தெரிந்தே இருந்தோம்.. ஆனால் இந்தப் பக்கம் இப்படி வரும் என்று யோசிக்கவில்லை..

ஒரே ஒரு கவலை.. கொஞ்சம் பெரிய வாக்குவாதம், சண்டையாக வந்திருந்தால் எங்கள் முதலாவது பதிவர் சந்திப்பு இன்னும் கொஞ்சம் பிரபலமாகி தலைப்பு செய்திகளில் வந்திருக்கும்.. அடுத்த முறை பார்க்கலாம்.. ;)

சரவெடி புல்லட்டின் மற்றொரு டுமீல்..

இந்தக் கலந்துரையாடலில் பதிவு போட்டு போலீஸ் பிடித்தது (நான் இல்லைங்கோ.. இது இன்னுமொருவர்), புல்லட்டின் பெயர்ப் பிரச்சினை, புனைபெயரில் எழுதக் கூடாது, லோஷன் எழுதிய நயன்தாரா சிங்கம்.. (தேவையாடா உனக்கு.. இப்பிடி நாரடிச்சாங்களே),தமிழ் பிழைகள்,இந்திய சொல்லாக்கங்கள், சினிமா மோகம், ஊரோடி பகீ இலவசமாக வழங்கவுள்ள இணையத்தள உதவிகள் என்று பல சுவாரஸ்ய விஷங்கள்..

அனானி எதிர்ப்பு சங்கம் அமைக்கவிருந்த நம்ம சதீஷ், ஹிஷாமுக்கு அனானி பற்றியே பேசாதது பயங்கர ஏமாற்றம் & கோபம்..
இதுக்காகவே இவர்கள் இருவரும் இன்னும் அனானிகளால் பாதிக்கப்பட்ட சிலரும் சேர்ந்தே விரைவில் அடுத்த பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்தாலும் செய்வார்கள்.. (அப்படி செய்யும்போது நான் எனது உரையில் குறிப்பிட்ட ஐந்து நட்சத்திர ஹோடேலில் குளிரில் நடாத்துவது பற்றியும் கவனிக்க..)

மறக்காமல் சிங்கை நாதனின் மருத்துவ சிகிச்சைக்கும் நிதி சேகரிப்பு பற்றியும் அறிவித்தல் கொடுக்கப்பட்டது..
ஆர்வமுள்ளவர்கள் விபரம் அறியவும், தொடர்பு கொள்ளவும் நண்பர் கோவி.கண்ணனின் தொடர்பு விபரங்களை அனுப்பி வைக்கவுள்ளோம்.

இறுதியாக இடம்பெறவிருந்த வந்தியத்தேவனின் நன்றியுரைக்கு பின்னூட்டம் என்று பெயரிட்டிருந்தோம்..

இடிதாங்கி வந்தியின் பின்னூட்டம்..

பின்னூட்டம் கொஞ்சம் நீளமாகவே போனாலும் சொல்லவேண்டியதெல்லாம் அவர் மீது நாம் சுமத்தியதால் எங்கள் அண்ணன் இடிதாங்கி வந்தி அத்தனையையும் சொல்லி இனிதே பதிவர் சந்திப்பை நிறைவு செய்தார்..
வழமையான வந்தியின் நக்கல்,நையாண்டி, சீரியஸ் என்று அத்தனையும் கலந்த அவரது சூப் தான் பின்னூட்டம்..

அளவில் இந்த முதலாவது இலங்கைப் பதிவர் சந்திப்பு நிறைவுக்கு வந்தவேளை எங்களுக்கு அப்படியொரு பெருமையும் திருப்தியும்..

எல்லோர் முகத்திலும் அப்படியொரு பூரிப்பு..

ஓடியாடி வேலைகள் செய்த அன்புத் தம்பி பால்குடி, வீடியோ கமெராவை தூக்கிக் கொண்டே லொள்ளு செய்த புல்லட் (அடிக்கடி அவர் என்னிடமும், ஆதிரையிடமும், பால்குடியிடமும் கை மாற்றியது வேறு கதை) இனி நான் DVDக்கு மாற்றும் போது தான் தெரியும் புல்லட் என்ன எடுத்திருக்கிறார் என்று.. , தொகுத்து வழங்கி பெரும் பங்காற்றிய சதீஷ், அழைத்த நேரத்துக்கு வந்த அத்தனை பேர், வராமல் இருந்தும் மனப்பூர்வமாக ஆதரவளித்த அத்தனை அன்புள்ளங்கள், விளம்பரப் படுத்தி ஆட்களை அனுப்பி வைத்த ஊடகங்கள், சஞ்சிகைகளை இலவசமாக வழங்கிய இருக்கிறம் சஞ்சிகை, நூல்களை அன்போடு வழங்கி விற்று வரும் பணத்தை நிதியுதவியாக நல்கிய மன்னார் அமுதன்,தங்கள் வலைத்தளங்களில் செய்திகள்,விளம்பரங்கள் பதிப்பித்த நண்பர்கள், ஆலோசனை சொன்னவர்கள் என்று அனைவருக்குமே இதயபூர்வமான நன்றிகள்..

முக்கியமாக எனக்கும் முந்தி இது பற்றி பதிவுகள் இட்டு தகவல்களை உலகெங்கும் பரப்பிய நண்பர்களுக்கு நன்றிகள்..

முதல் அடி வெற்றி.. திருப்தி.. அடுத்து யார் எங்கே செய்யப் போகிறீர்கள்.. நாம் உதவவும் உழைக்கவும் தயார்..

அடுத்தமுறை பதிவர் சந்திப்பு ஏற்பாடு செய்வோருக்கு இலகு.. நாங்கள் வந்திருந்த எல்லோரது விபரங்களும் தொகுத்து ஒரு விபரக்கொத்தே வைத்துள்ளோம்..


பி கு - படங்களுக்கு மட்டும் தான் Making of... என்று போடுவீங்களா? இந்தப் பதிவர் சந்திப்புக்கும் ஒரு Making of இருக்கிறது.. அதிலும் பல சுவாரஸ்யங்கள்.. அடுத்த பதிவில் (சிலவேளை இன்று மாலையே) எதிர்பாருங்கள்..

41 comments:

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் லோஷன், தங்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும்! நல்லா இருக்கு உங்க தொகுப்பு! :-)

புல்லட் said...

பிந்தி வந்தாலும் பிரிச்சு மேஞ்சிட்டீங்க.. எல்லா ஏரியாவிலும் கைவைச்சு கலக்கியாச்சு.. நன்றி..
மேக்கிங்.. பிகைன்ட் த சீன்ஸ் இதெல்லாம் பார்க்க நான் மிகுந்த ஆர்வமாயுள்ளேன்...

உங்கள் எளிமை, ஈடுபாடு, வந்தியின் ஊக்கம் இவை இந்த வெற்றிக்கு பிரதான காரணங்களில்முக்கியமானவை என்பது மறுத்துரைக்க முடியாது கருத்து ..

மறுபடியும் நன்றிகளும் வாழ்த்துக்களும்..

Nimalesh said...

congrats anna.. + thx for the poto's...............

கிராமத்து பயல் said...

மிகவும் அருமையாக தொகுத்து தந்துள்ளீர்கள் அண்ணா. வரணும் என்று எதிர் பார்த்தேன் முடியவில்லை. அடுத்த சந்திப்பில் சந்திப்போம்..
வாழ்த்துகள்.........

கிளியனூர் இஸ்மத் said...

முதல் சந்திப்பை ஏற்படுத்திய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....! தொடரட்டும்....பதிவர்களின் சந்திப்பு....

Sinthu said...

பதிவுக்கு நன்றி அண்ணா, நேரடியாகவே பதிவாளர் சந்திப்பில் இருந்த மாதிரி ஒரு உணர்வு தோன்றுகிறது..

Admin said...

வர முடியவில்லையே என்ற கவலைதான் அண்ணா. இருந்தாலும் நேரடி ஒலி, ஒளிபரப்பினால் நீரடியாக இருந்தது போன்ற சந்தோசம். முதல் சந்திப்பே அசத்தல்...

ஏட்பாடுகளைச் செய்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள்.

புல்லட், ஆதிரை, வந்தி, மது மற்றும் உங்கள் கஷ்டங்களையும் உணர்ந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

மீண்டும் அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகள் பல..

பதிவுலகில் புதுமைகள் படைப்போம்.

அமுதா கிருஷ்ணா said...

நேராக பார்த்த மாதிரி ஒரு திருப்தி, பதிவை படித்த பின்.

யோ வொய்ஸ் (யோகா) said...

சந்திப்பை பற்றி நீங்க எழுதியது சீரியஸ் பதிவா? இல்லை பம்மல் பதிவா? ஒரே குழப்பம்...

Jana said...

தங்கள் அனைவரின் முயற்சிகளும் திருவினையாகியது மட்டற்ற மகிழ்ச்சி. கலந்துகொள்ளவில்லை உணர்வால் இணைந்து கொண்டேன்.(நேற்றைய தினம் என் சரீரம் பெங்களுரில், மனம் வெள்ளவத்தையில்)
சகல இலங்கைப்பதிவாளர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

Ahamed Nishadh said...

பக்கத்தில் இருந்து இந்த இனிய நிகழ்வை மிஸ் பண்ணிட்டேனே என்னும் போது வருத்தமா இருக்கு. அடுத்த ஒன்று கூடலுக்கு கட்டாயம் வரப்பார்க்கிறேன்!!!

தமிழ் ப்லோக்கேர்ஸ் ஒன்டுசெர்ந்தது பற்றி வாழ்த்துக்கள்.

சயந்தன் said...

லோசன் வந்திருந்தவர்களின் இணைய முகவரிகளைத் தாருங்களேன்.. (எப்பிடித்தனிய 7 முகவரிகளைத்தாருங்கோ என்று பப்ளிக்கில கேட்கிறது :) :)

சுபானு said...

என்றென்றைக்கும் நெஞ்சில் நிலைக்கும் இனிய நினைவுகள்.. பதிர்ந்தமைக்கு நன்றிகள்... :)

Anonymous said...

ithu thaan pathivulagin mudal neralaiyaga irukkum

Unknown said...

//9.15 அளவிலேயே எமது சரித்திரபூர்வமான முதலாவது இலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பை ஆரம்பித்தோம்.(இதுவே பெரிய விஷயமில்லையா?)//
அட.. அப்ப நான் சரியான நேரரத்துக்குத் தான் வந்திருக்கிறன். ஹி.. ஹி...
என்னுடைய தளத்திலும் கொஞ்ச புகைப்படங்களை தரவேற்றம் செய்திருக்கிறேன்... முடியுமானால் பாருங்கள்...

Unknown said...

வணக்கம் லோஷன்,

எங்கே வலைப்பதிவர் சந்திப்பு தொடர்பான உங்களது பதிவைக் காணோமே என எதிர்பார்த்த என்னைப் போன்றோருக்கு நேரம் பிந்தியாவது தீனி கிடைத்ததே!

பாராட்டுக்கள் லோஷன், கடந்த நாட்களில் சந்திப்பு ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டதனால் மின்னஞ்சலைத் திறந்திருக்கமாட்டீகள் என நினைக்கின்றேன், நானும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன்.

rajaugan said...

அண்ணா அழகான பதிவர் சந்திப்பை அழகாக விமர்சித்தமைக்கு மிக்க நன்றி
நான் இப்பொழுது நாடு கடந்து இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை
ஆனாலும் உங்கள் விமர்சனத்தை வாசித்ததும் எதோ நானும் கலந்து கொண்டதுபோல ஒரு உணர்வு.
அடுத்த பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்

நன்றி

rajaugan said...

அண்ணா அழகான பதிவர் சந்திப்பை அழகாக விமர்சித்தமைக்கு மிக்க நன்றி
நான் இப்பொழுது நாடு கடந்து இருப்பதால் கலந்து கொள்ள முடியவில்லை
ஆனாலும் உங்கள் விமர்சனத்தை வாசித்ததும் எதோ நானும் கலந்து கொண்டதுபோல ஒரு உணர்வு.
அடுத்த பதிவர் சந்திப்பில் நானும் கலந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்

நன்றி

pirasanna said...

பாராட்டுக்கள் அண்ணா உங்களுக்கும் உங்களுடன் சேர்ந்தது
இச் சந்திப்பினை ஒழுங்கு செய்த அனைவர்க்கும்
இது போல இனியும் பல சந்திப்புகள் நடைபெற வாழ்த்துக்கள்
அவற்றையும் என் போன்ற வாசகர்களுக்காக இது போன்று நீங்கள் தொகுத்து
பதிவிடுங்கள்

சுபானு said...

புல்லட்டின் பின்னூட்டத்தினை மீள இடுகின்றேன்..
உங்கள் எளிமை, ஈடுபாடு, வந்தியின் ஊக்கம் இவை இந்த வெற்றிக்கு பிரதான காரணங்களில்முக்கியமானவை என்பது மறுத்துரைக்க முடியாது கருத்து. மறுபடியும் நன்றிகளும் வாழ்த்துக்களும்..

உண்மைதான் அண்ணா..! :)

வந்தியத்தேவன் said...

இன்று காலையிலிருந்தே நிறைய ஆணிகள் அத்தனையையும் பிடிங்கிவிட்டு வர கிட்டத்தட்ட பத்து பதிவர் சந்திப்புப் பற்றிய பதிவுகள், எனக்கு ஒரு பத்து பின்னூட்டங்கள் அதிலும் ஒரு விருது(இதனைப் பற்றியும் கலந்துரையாடலில் பேசலாம் என்றால் விசைப்பலகை அரைமணித்தியாலத்தை தின்றுவிட்டது), ஆகவே சற்றே பிந்திய பின்னூட்டம்.

லோஷனின் பதிவு வழக்கம் போல் கலக்கல், ஆனால் என்னை இடிதாங்கியாக்கிவிட்டார், என்ன செய்வது ஒரு நிகழ்வை திறம்பட நடத்தவேண்டும் என்றால் எத்தனை இடியையும் தாங்கமுடியும், இன்னும் சந்திப்புக்கு பின்னரான வேலைகள் முடியவில்லை.

//யாரோ ஒரு பதிவர் வந்து என்னிடமும் வந்தியிடமும் 'இவர் தான் அந்த 'தமிழச்சி'யா என்று கேட்டது கொடுமையிலும் கொடுமை..//

இப்போ தொலைபேசியிலும் இந்தக்கொடுமையைப் பற்றி ஆதிரையிடம் சொன்னேன்.

//எனக்கு மட்டும் டிஷ்யூ தாராத வந்திக்கு கண்டனங்கள்)//

அடடே இப்படி ஒரு விடயம் நடந்ததா? பக்கத்தில் இருந்தவரிடம் கொஞ்சம் கைமாத்தாக கேட்டிருக்கலாம், பரவாயில்லை அடுத்த சந்திப்பில் உங்களுக்கு பைக்கட்டுடன் தருவார்கள்.

சில விடயங்களை பின்னூட்டங்களீனூடு விளக்குவதை விட பதிவாக இடவேண்டும் எப்போ என்பதுதான் கேள்வி. பார்ப்போம் இன்றைக்கு இரவு அல்லது நாளை பதிவு வரலாம், இல்லையென்றால் நாளை மறுநாள் லோஷன் ஆணி பிடுங்கப்போன வந்திக்கு ஆப்பு வைத்தவர் யார்? என்ற பதிவை இடலாம்.

maruthamooran said...

//////மருதவூரான் திரட்டி பற்றி விளக்கினார்...அது கொஞ்சம் அதிகமாகவே யாழ்தேவி திரட்டி பற்றிய விளக்கமாய்ப் போய் விட்டதோ என்று தான் வற்தியின் காதைக்கடித்தும் வைத்தேன். (பின்னர் கலந்துரையாடலின் சூடான விஷயமாக இந்த யாழ்தேவியே மாறிப்போனது)////

லோஷன்…..

எனக்கும் அந்த விடயம் கொஞ்சம் அதிகமாகவே பட்டது. யாழ்தேவி திரட்டி ஆரம்பித்த நாட்களிலிருந்து அது தொடர்பில் கவனம் செலுத்த 10-12 பேரே இருந்தோம்…. தாங்கள் ஏற்பாடு செய்த பதிவர் சந்திப்பினால் அந்த எண்ணிக்கை 80ஆக அதிகரித்தமை மகிழ்ச்சியே…. நேரத்தை தின்றமைக்கு மன்னிக்கவும்.

பனையூரான் said...

மீண்டும் சந்திப்பில் இருந்தது போன்ற ஓர் உணர்வு

Jeya -S said...

நானும் இங்கிருந்து நேரடி இணைய ஒலி,ஒளிபரப்பினூடாக கண்டுகளித்தேன்..நன்றாக ஆரம்பம் முதல் முடிவு வரை நீங்களும் உங்கள் குழுவும் சிறப்பாக நடாத்தி முடித்தீர்கள்.. நன்றிகள் பல.. ஆனால் என்ன என் சகோதரிகள் கடைசிவரை முன்னுக்கு வரமாட்டன் எண்டு முரண்டு பிடிதிட்டார்கள்.. உங்களை கண்டு பயந்திருப்பர்கள் போல..lolz

Muruganandan M.K. said...

அருமையான பதிவு லோஷன். உங்கள் பதிவு மூலமே பல இணைய நண்பர்களின் முகங்களை அறிய முடிந்தது. வர முடியாத குறை நீங்கியது. மற்றொரு சந்திப்பு நடக்கையில் எக் கஷ்டப் பட்டாவது கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

வேந்தன் said...

//சயந்தன் said
லோசன் வந்திருந்தவர்களின் இணைய முகவரிகளைத் தாருங்களேன்.. (எப்பிடித்தனிய 7 முகவரிகளைத்தாருங்கோ என்று பப்ளிக்கில கேட்கிறது :) :) //

நான் சயந்தனை வழிமொழிகின்றேன். :):):)

இரா.வி.விஷ்ணு (ராஜ் ) said...

பதிவர் சந்திப்பு தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்ற ஊட்டங்கள் அனைத்துமே அச்சந்திப்பில் நாமும் இருந்தது போன்று ஒரு உணர்வை ஏற்ப்படுத்தியிருக்கிரது. ஒவ்வொருவரும் அவர்களுக்கே ஏற்ற பாணியில் அழகாக விபரித்து எழுத்தியிருக்கிறார்கள் அனைவருக்கும் நன்றிகள். அந்த வகையில் லோஷன் அண்ணாவும் தன்னுடைய கலக்கல் பானில் போட்டுத்தாக்கியிருக்கிறார். அடுத்த பதிவில் இன்னும் சில விடையங்கள் வெளிவருமென எதிர்பாக்கலாம்போல.. மாலையாச்சே Making of i.... காணோம்.!

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

சந்திப்பின் ஆவணம் நகைச்சுவை இழையோடுவதோடு படங்களின் வலுவோடு அழகான பதிவாக வந்துள்ளது லோஷன் அண்ணா...

குழுமம் உருவாக்கிவிட்டேன்... கூகுள் ஆண்டவர் நோண்டி நொங்கெடுத்த கதையை நாளை பதிவிடுகிறேன்.. :))

Unknown said...

நான் துணிஞ்ச கட்டை.. பொதுவில கேட்கிறன் பாருங்கோ... அவன் பொடியன் யசீர் நிசார்டீனுக்கு இடது பக்கம் இருந்த பதிவரின் தொடர்பு எனக்கு வேணும்... எப்புடீ...

Gifariz said...

இப்பதிவர் சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன்....

ஆனால் முடியாமல் போய்விட்டது

இருந்தாலும் உங்கள் பதிவை வாசிக்கும் போது அதில் பங்குபற்றியது போல் ஒரு உணர்வு

நன்றிகள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமையான பதிவு அண்ணா... நிச்சயம் அடுத்த சந்திப்பு இதை விட வித்தியாசமாகவும், பிரபல்யம் மிக்கதாகவும் அமையும்.....

(அண்ணா... நான் வந்திருந்தாள் நயன்தாராவின் சிங்கத்தை வைத்து ஒரு பெரிய ரகளையை ஏற்படுத்தியிருப்பேன். miss பண்ணிட்டேன்... லொள்.....)

பதிவிட்டமைக்கு வாழ்த்துக்கள் அண்ணா.....

Vathees Varunan said...

சுவாரசியமான சந்திப்பு தான். யாழில் தற்போது நிற்பதன் காரணமாக தவறவிட்டுவிட்டேன். அடுத்த சந்திப்பில் சந்திப்போம்.

-வதீஸ்-

பெண்கள் சார்பாக said...

பதிவர் சந்திப்புக்கு எத்தனை இளம்பெண்கள் வந்திருந்தார்கள்? அவர்கள் தொடர்பு கிடைக்குமா? அவர்களை தனித்தனியாக காட்டவில்லையே.. Zoom camera வசதி இருந்திருக்க வேண்டும்.. 7 பெண்கள் தான் வந்திருந்தார்களா? எக்ஸ்சட்ரா.. எக்ஸ்சட்ரா..

இதெல்லாம் எதனைக் காட்டுகிறது? பெண்கள் வருவதை எந்தத் தேவைக்காக ஊக்கப்படுத்துகிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தி நிற்கின்றன இத்தகைய கேள்விகள்.. & எதிர்காலத்தில் வர நினைப்பவர்களையும் வராமலே இருந்து விட வைப்பன என்று புரியவில்லையா??...

80 பேரில் 7 அல்லது 9 தான் பெண்கள் வந்திருந்தது எதனால்?? எழுதுபவர்களும் குறைவு என்பது ஒருபுறமிருக்க இது போன்றவற்றை எதிர்பார்த்ததால் தான் என்பது புரியவில்லை???

Anonymous said...

வலைப்பதிவர் சந்திப்பின் ஏற்பாடுகள் அற்புதம்!!!!
பிறந்திருக்கும் பதிவர் குழுமம் வீறு நடை போட வாழ்த்துக்கள் !!! ......

Son of கொழுவி said...

ஒருமாதிரி பின்னூட்டத்திலாவது பெண்களை பேச வைத்துவிட்டார்கள் பார்த்தீர்களா..?

ஊர்சுற்றி said...

மற்றுமொரு அருமையான பதிவு, சந்திப்பு பற்றி.

அடைப்புக்குள் இருந்த கடிகளை நன்றாகவே ரசித்தேன். :)

கலந்துகொண்ட அத்தனை பேருக்கும் ஏற்பாடு செய்தவர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

பால்குடி said...

முழு நிகழ்வையும் இன்னுமொரு முறை மீட்டிய சந்தோசம்.

மயூரேசன் said...

உங்கள் பாணியில் துணுக்குகளுடன் கல கல பதிவு. வாழ்த்துக்கள். அனைவரையும் சந்திக்க கிடைச்சதில் பேரானந்தம் ;)

கானா பிரபா said...

;-) nalla varnanai

Arasi said...

பதிவர் சந்திப்புக்கு நேரில் சென்றிருந்தால் கூட இவ்வலவு சுவாரசியம் இருந்திருக்குமோ என்பது சந்தேகம் தான்... நிகழ்வை கண் முன்னே அருமையாயாக பதிவு செய்த லோஷன் அண்ணாவுக்கு நன்றி...

விதர்ஷன் said...

உங்கள் பதிவை வாசித்த பின் நானும் கலந்து கொண்டதை போல ஒரு உணர்வு

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner