September 24, 2009

விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????




இளைய தளபதி,நாளைய இந்தியப் பிரதமர்(எதை யோசிச்சாலும் பெரிசா யோசிக்கனுங்க்னா..) விஜய் அவர்கள்(மரியாதைங்க்னா) நடிக்கும் வேட்டைக்காரன் பாடல்கள் மிக ஆர்ப்பாட்டமாக நேற்றைய தினம் உலகம் முழுதும் வெளியாகின..


விஜய் அன்டனி இசை..

ஐந்து பாடல்கள்

கபிலன் (விஜயின் ஆஸ்தான அறிமுகப் பாடலாசிரியர்) 3 பாடல்களும், விவேகா,அண்ணாமலை ஆகியோர் தல ஒவ்வொரு பாடல்களையும் எழுதியுள்ளனர்.


இதில், விவேகா எழுதிய சின்னத் தாமரை என்ற பாடலின் இசை உருவாக்கம், மெட்டமைப்பு, ப்ரோக்ராமிங் போன்றவற்றை செய்திருப்பவர் இலங்கையின் பிரபல சிங்கள இசைக் கலைஞரான ஹிப் ஹொப் புகழ் இராஜ்.

க்ரிஷ்,சுசித்ரா (கந்தசாமியின் சுப்புலட்சுமி குரலுக்கு சொந்தக்காரி) பாடியுள்ள சின்னத் தாமரை பாடலில் ஆங்கில ராப் பாடியுள்ளவர் இலங்கையில் இளவட்டங்கள் நன்கு அறிந்த BK(Bone Killa). இவர் வேறு யாருமில்லை.. இலங்கையின் பிரதி அமைச்சர் புத்திரசிகாமணியின் புதல்வர்.


தமிழ் ராப் பாடியுள்ளவர் தினேஷ் கனகரத்தினம். இலங்கையில் நிறையப் பாடல்கள் (அதிகமாக ராப்,ஹிப் ஹொப்) மூலமாகவும், தா.நா.அ.ல (Taxi TN) படத்தின் நவீன ஆத்திசூடி மூலமாக தமிழகத்திலும் தெரிந்தவர் இவர்.

(நவீன ஆத்திசூடி எல்லாப் பக்கமும் கிழி வாங்கியது வேறு கதை..)

சின்னத் தாமரை கேட்க...



இதன் ஒரிஜினலான சிங்களப் பாடல் இதோ..





புலி உறுமுது என்று கபிலன் வழமையான விஜய்க்கான படங்களில் வரும் அறிமுகப் பாடலை எழுதியிருக்கிறார்..
காது இரத்தம் வடிக்குமளவுக்கு வரிகளுடன் அனந்து, மகேஷ் என்று இரண்டு பேர் கத்தி தொலைக்கிறார்கள்..

பாடலின் ஆரம்பத்திலேயே ஓம் ஷாந்தி.. இடை நடுவே சமஸ்கிருத மந்திரங்கள்..

போதாக்குறைக்கு வேட்டைக்காரன் வாரதப் பார்த்து புலி உறுமுதாம், நரி ஓடுதாம்,கிலி பிறக்குதாம், குலை நடுங்குதாம்...

உண்மையில் கபிலன் விஜயின் புகழ்பாடி இருக்கிறாரா? இல்லை நக்கலிலேயே விஜயை நாறடிக்கிராரா?

பாடலின் இடையே
வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு என்று துரத்துகிறார்கள்..
அவங்களுக்கே புரிஞ்சு போச்சோ?

என்ன கொடுமையப்பா.. அந்தக் கொடுமைய முடிஞ்சா நீங்களும் கீழே சொடுக்கி கேளுங்களேன்.. சிரிப்பு தாங்க முடியாம இருக்கும்..


இன்னொரு பாடல் மகா மெகா கொடுமை..

நானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்.. இது தான் கபிலன் எழுதிய ஆரம்ப வரிகள்..

ஐயோ அம்மா.. கேட்டு முடிக்க முதல் இரத்தம் கக்கி செத்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது..

எனக்கொரு பெரிய சந்தேகம்..
கபிலன் எழுதியது "நான் டிச்சா தாங்க மாட்டேயா?"
அல்லது
"நான் நடிச்சா தாங்க மாட்டேயா?"

கபிலன் எதோ உள்குத்து வச்சுகிட்டே எல்லாப் பாடல்களையும் எழுதியிருப்பதாகப் படுகிறது..பழைய படங்களின் சம்பளப் பாக்கி ஏதாவது கொடுபடவில்லையோ?

போதாக்குறைக்கு இந்தப் பாட்டுக்கு இளைய இளைய தளபதி(அதாங்க விஜய் மகன் சஞ்சய்) ஆடுகிறாராம்.. அடுத்த வாரிசு?



கேட்ட ஐந்து பாடல்களில் 'அட' சொல்ல வைத்த பாடல்.. காரிகாலன் கால்..

இலக்கிய சுவையும் காதல் குறும்பும் கலந்து கபிலன் எழுதியிருக்கிறார்.. மெட்டமைப்பில் ஒரு புதுமையும், சுவையும் தெரிகிறது..

ரசனையான வரிகளுக்கு புதிய குரல்களும்.. மறுபடி மறுபடி கேட்கலாம்..


அண்ணாமலை என்பவர் எழுதிய உச்சிமண்டை சுர்ருங்குது.. (வரிகளைப் பாருங்க.. இதுக்குப் பிறகும் 'வேட்டைக்காரன்' பார்க்கிற ஐடியா இருக்கு???)

வழமையான விஜய் அன்டனி சரக்கு இது..

தாயார் ஷோபா சேகர், கர்நாடக சங்கீதப் பாடகி சாருலதா மணி ஆகியோரும் இந்தப் பாடலில் சேர்ந்து தாளித்திருக்கிறார்கள்..




பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?

பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..

பாடல்கள் கேட்டு கடுப்பாகிப் போன உங்களுக்காக கொஞ்சமாவது கூலாக.. வேட்டைக்காரி.. அதாங்க படத்தின் கதாநாயகி அனுஷ்கா..

இப்ப திருப்தியா?

பதிவை ஏற்றுவோம் என்று இருக்க மீண்டும் வானொலியில் ஒலிக்கிறது..

"நான் நடிச்சா தாங்க மாட்டே..".. oh sorry...

" நான் அடிச்சா தாங்க மாட்டே"


97 comments:

ப்ரியா பக்கங்கள் said...

பாவ மன்னிப்பு சொல்லும் பாதர் :

தினமும் சிகரெட் குடி- 10 வருஷம் முன்னர் உனக்கு சாவு
தினமும் Drum குடி- 20 வருஷம் முன்னர் உனக்கு சாவு
யாரயும் நீ உண்மையா காதலி - நீ தினமும் செத்து கொண்டு இருப்பாய்!!!
அதற்கு
அந்த பாவ மன்னிப்பு கேட்க வந்த பையன் சொன்னான்
பாதர், நீங்க ஒருக்கா வில்லு படம் இல்லாடி போனால் போகுது வேட்டைக்காரன் பாருங்க ஒவ்வொரு மணித்தியாலமும் செத்து கொண்டு இருப்பீங்க.............!!!

யோ வொய்ஸ் (யோகா) said...

”அடிச்சா தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்ட, மோதி பாரு வீடு போய் சேர மாட்ட"

என்ற இலக்கிய நயம் மிக்க வரிகளை கிண்டலடிப்பதா?..

Nimalesh said...

ma fav.... ORU CHINNA THAMARAI.. + BK, he is ma class mate..i know him during college day's..

யோ வொய்ஸ் (யோகா) said...

விஜய் நன்றாக டான்ஸ் ஆடி பாட்டை காப்பாற்றிவிடுவார். விஜய் படம் ஊத்தினாலும், விஜய் பாடல்கள் எப்பவுமே ஹிட் தான்

வந்தியத்தேவன் said...

ஹாஹா வேட்டைக்காரன் பாடல்களே காதை ரணகளமாக்குகிறது. நண்பர் புல்லட் முதல் நாள் காட்சிக்கு என்னை அழைத்துச் செல்வதாக சத்தியம் பண்ணியிருக்கிறார், அவரின் அன்புக்காக படம் பார்க்கவேண்டும்.

இராஜ்யின் பாடலில் நம்ம நாட்டின் சகல நிகழ்ச்சிகளையும் நன்றாக கிண்டலடித்திருக்கின்றார்கள். ஆனாலும் அகங்கார நகரேயும் நிந்த நொயன ஹந்தாவேயும் இதனை விட கலக்கல் பாடல்கள்.

Subankan said...

//பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?
//

உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா? பாடல்களைப் பார்த்தாலே தெரியுத் அதே வழக்கமான விஜய் பாணிதான் என்று.

இறக்குவானை நிர்ஷன் said...

இப்பவே கிளம்பிட்டீங்களா?

Anonymous said...

Not the regular Vijay Anthony....May be S A Chandrasekar would've wanted the songs to be this way...APPAPILLAI

கார்க்கிபவா said...

//வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு//

நம்ம இஷ்டத்துக்கு வரிகளை மாற்றிப் போட்டு நகக்லடிக்க வேண்டியதுதான் லோஷன். இலங்கை நண்பர்கள் இருந்தால் அந்த பாட்டு மட்டும் நல்ல பாட்டா? அதையும் வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே

புலி உறுமுது அறிமுகப்பாடலா? வரிகளை கேட்காமலே பதிவெழுதியது புரிகிறது. அது சரி கேட்க முடியாமல் கத்துவதாக சொல்விங்க.

இனி கொஞ்ச காலம் வேட்டைக்காரன் இல்லாமல் உங்க ரேடியோ வேலைக்காவ்து சகா. பதிவு போடுமுன் யோசிச்சிட்டு போடுங்க. இந்த பாடல் எல்லாம் வெற்றிபெறும்போது அட நல்லாத்தானே இருக்குனு யோசிப்பிங்க. அது சரி வெளிய சொன்னாத்தானே


உங்க நண்பரிடம் சொல்லி பதிலுக்கு ஒரு பதிவு போட்டு 3000 ஹிட்ஸ் வாங்கிக்கோங்க. அதுக்குத்தானே பாட்டே கேட்காம இந்த பதிவு

இதுல வெட்கமே இல்லாம லிங்க் வேற... இதெல்லாம் ஒரு பொ...

kajan said...

அய்யோ..... இப்படி ஒரு கடி விஜய் க்கு தேவையா???

ILA (a) இளா said...

Same Blood

maruthamooran said...

லோஷன்…….
தங்களின் இசை விமர்சனத்துக்கு பெரிய முத்தாய்ப்பே அந்த படம்தான். ஆருங்க அது இவ்வளவு பெரிய்ய்ய்யய்ய்ய மனுஷி.

Rama said...

வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு என்று துரத்துகிறார்கள்..
அவங்களுக்கே புரிஞ்சு போச்சோ?


mudiyala saamy...I am feeling pain in my stomach (because of laughing )after listened this song

மதிபாலா said...

ஹலோ....சும்மா இருக்காம லிங்க் வேற கொடுத்து என் மூடையே புலி உருமுது கெடுத்துப் போடுச்சி..

தாங்க முடியல.

விஜய் இன்னும் 100 படம் நடிச்சாலும் திருந்தப் போறதில்லைன்னு நினைக்கிறேன்....

டன் டன் டாணா டர்றாவே என் காதுக்குள்ளே இன்னும் இடிச்சிகிட்டு இருக்கு.

:((

Chander said...

அடடா லோஷன் அண்ணா நீங்களும் எதை செய்தாலும் பெரிய வித்தகர்கள் போல விமர்சனம் செய்யும் இந்த கூட்டத்தோடு இணைந்துவிட்டீர்கள் போல. கில்லீ, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என தொடர் hit களை விஜய் கொடுத்த போது கொண்டாடியவர்கள் 3 சுமாரான படங்களுக்கு பிறகு ஒரே அடியாக விஜயை தாக்குவது சரியா? ஏதோ விஜய் படங்களை பார்த்தால் கண்கள் அலுகிவிடுவது போல தான் உங்கள் கதை உள்ளது. படம் வந்ததும் முதல் show இற்கு இந்த விமர்சகர்களில் பலர் பல் இழிய பார்ப்பதும் நடந்துதான் வருகிறது.

ஒரே நடிகரை குறிவைத்து இந்த சில விமர்சகர்கள் தாக்குவது அவர்கள் தரத்தை குறைக்கின்றதே தவிர வேறொன்றும் இல்லை.

கந்தசாமியில் "போடா போடி" என கத்தி கிழிப்பதை விட வேட்டைக்காரன் பாடல்கள் நன்றாகவே உள்ளது. நான் விஜய் ரசிகன் என்பதையும் மீறி இந்த தரமற்ற விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாது.

இன்று சூர்யாவை தூக்கி உச்சத்தில் வைத்துள்ள இந்த பதிவு விமர்சகர்கள் ஆதவனை வேட்டைக்காரன் மிஞ்சி விட்டால் சூர்யாவை வைத்து காமெடி பண்ணுவார்கள்.

Nimalesh said...

movie some how will be hit coz this is a sun pictures productions.. they promo the movie like a hel.... dat's for sure..... ( i am nt a Vijay Fan) lol

Unknown said...

super anaa ,you cant get than this,early morning also there was a confusion in the lines from our fan,any way hope shathieshan wont suicide..........
MADHAN NUWARAELIYA

Unknown said...

but im proud that my cousin is also a part of the song "CHINNA THAMARAI"

ILA (a) இளா said...

//ஆதவனை வேட்டைக்காரன் மிஞ்சி விட்டால் சூர்யாவை வைத்து காமெடி பண்ணுவார்கள்.//
கண்டிப்பா. அவுங்க படத்தை(குப்பையாவே இருந்தாலும்) பாராட்ட இவுங்க எங்களுக்கு மாமனும் இல்லே மச்சானும் இல்லே. நல்ல படம் குடுத்தா பாராட்டுவாங்க. இல்லாட்டி ஆப்புதான். கமல் ரஜினி எல்லாம் இந்த லிஸ்டில அடக்கம். விஜய்ய மட்டும் தனியா பாராட்ட என்ன சிறப்பு? சொல்லுங்க. ஆதவன் நல்லா இல்லைன்னாலும் கிழிப்பாங்க. வேட்டைக்காரன் படம்(பாட்டு ரொம்பச்சுமார்) நல்லா இருந்தாலும் பாராட்டுவாங்க. இதுதான் பதிவர்கள். ரசிகர் வேற பதிவர்கள் வேற....

வாகீசன் said...

//கில்லீ, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என தொடர் hit களை விஜய் கொடுத்த போது கொண்டாடியவர்கள்//

இப்படியும் ஒரு கற்பனை உலகம் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. நல்ல படமா இருந்தா பார்ப்போம், அவ்வளவுதான் ஒழிய கொண்டாடுவதற்கு இந்தப் படங்களில் ஒன்றிற்காவது தகுதி இருக்கா? இந்தப் படங்கள் வெற்றிபெற்றபோது விஜய் வெறியர்கள் (ரசிகர்கள் அப்படியானவர்களாக இருக்க முடியாது என்பதால்) இணையத்தில் அதிகம் பதிவுகளிட்டுவிட்டு இப்போது மவுனமாக இருப்பதால் உங்களுக்கு இந்தப் பிரமை.

//ஒரே நடிகரை குறிவைத்து இந்த சில விமர்சகர்கள் தாக்குவது//
அவர் நடிகர் என்றே முடிவிற்கு நீங்கள் வந்தபின்னர் உங்களிடம் என்னத்தைப் பேசுவது. கந்தசாமி போடா போடி பாடலை எந்த மடையன் நல்ல பாடல் என்று இங்கு சான்றிதல் கொடுத்தது? கந்தசாமி படத்தையே துவைத்து காயப்போட்டபின்னரும் இப்படிச் சொல்லலாமா? நீங்கள் ரசிகராக இருக்கும் வரை இது பிரச்சனையான கருத்து அல்ல. அதற்கு மேலும் போகும்போதுதான்...

KANA VARO said...

நெடுகலும் கிரிக்கட்டை பற்றி எழுதாமல் ஹிட் லிஸ்ட் க்காக இப்பிடி அடிக்கடி பொழுது போகாமல் எதையாவது எழுதுறது லோஷன் அண்ணாவின் வழமை...

இவ்வளவு பிஸி யான மனுஷனுக்கு விஜயை கடிச்சு எழுத மட்டும் எப்பிடி டைம் கிடைக்குதெண்டு தெரியல (விஜய் ஒழிக எண்டு பதிவு போடும் போதெ வேட்டைக்காரனுக்காக வெயிட் பண்ணின ஆளுயா இவரு....)

தீபாவளிக்கு படம் வரும் போது முந்திக்கொண்டு நாங்கதான் இலங்கையில் பிரதான அனுசரணையாளர்கள் என்று பீத்த போரதும் இவர்தான்....

கமல் பத்து மனிசி வைச்சிருந்தாலும் அதை சரி என்று ஞாய படுத்தி விஜய் ஒரு மனிசி வைச்சிருந்தாலும் பிழை என்று வாதிடுவர் இவர்...
இதைவிட உங்களுக்கு எப்பிடி சுகமா விளங்க படுத்துறதேண்டு விளங்கல...

ஊடகவியலாளன் நடுநிலைய இருக்கணும் ... அதுகும் உங்களை போல ஆக்கள் இன்னும் கவனமா இருக்கணும் . விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி ஹிட் லிஸ்ட் வாங்கணும் எண்ட அவசியம் உங்களுக்கு இல்லை. (அது உங்க ரேடியோ கும் நல்லதில்லை)

வந்தியத்தேவன் said...

வரோவுக்கு
லோஷனின் தொழில் வேறை பதிவு வேறை. அவர் இந்தப் பதிவை வெற்றியின் வலையிலோ அல்லது வெற்றியிலோ எழுதிச் சொல்லியிருந்தால் அது தப்பு. அதற்காக அவர் தன் ரசனையையும் விமர்சனத்தையும் விட்டுவிடமுடியுமா? கமல் விடயம் எல்லாம் இங்கே தேவையில்லை.

suthan said...

hi vijey jen padam pidekkaviddal ungal oruvaraum vanthu padam parkkachchollu kaddayappidekkavillai pidenthal parungal "silaper nalla peyar eduppatharkkakave pilai kannu pidekkirargal (paddu eduthi peyar vankupavargalai vida pilai kandu pidenthu peyar vankupavargal thaneppa enku athigam ) vidungal evarkalum erunthuddu pogaddum .

by suthan

ஆதிரை said...

பாட்டைக் கேட்டு வந்த எரிச்சலை கொட்டித் தீர்ப்பதற்கு வரோ போல எனக்கு எழுதத் தெரியாது...

விஜய் ரசிகன் said...

@ கார்க்கி said...

//நம்ம இஷ்டத்துக்கு வரிகளை மாற்றிப் போட்டு நகக்லடிக்க வேண்டியதுதான் லோஷன். இலங்கை நண்பர்கள் இருந்தால் அந்த பாட்டு மட்டும் நல்ல பாட்டா? அதையும் வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே//

வரிகள் எதனையும் மாற்றவில்லை, பாட்டை ஒழுங்காக தெளிவான சிடியில் கேளுங்கள் பாடலில் அப்படித்தான் வருகின்றது. முதலில் பாடியவர்கள் நிறுத்தி நிதானமாகப் பாடவேண்டும். இலங்கையர்களின் பாடல் பழைய இலங்கைப் பாடல் ஒன்றின் காப்பி என்பதை லோஷன் தெளிவாக ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார்.


//இனி கொஞ்ச காலம் வேட்டைக்காரன் இல்லாமல் உங்க ரேடியோ வேலைக்காவ்து சகா. பதிவு போடுமுன் யோசிச்சிட்டு போடுங்க. இந்த பாடல் எல்லாம் வெற்றிபெறும்போது அட நல்லாத்தானே இருக்குனு யோசிப்பிங்க. அது சரி வெளிய சொன்னாத்தானே//

ஐயா அறிவுக் கொழுந்தே ஒருவரின் தொழில் வேறை வலைவேறை. லோஷன் ஒலிபரப்புகின்றாரோ இல்லையோ அவர் அங்கிருக்கும் விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த தனக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ ஒலிபரப்பத்தான் வேண்டும். எப்படியும் சன் வேட்டைக்காரனை சன் நியூஸ் போன்ற கருமங்களில் விளம்பரம் செய்து செய்தியாக அறிவித்து வெற்றிப்படமாக மாற்றிவிடும் குருவிக்குச் செய்தது போல் இதுவும் நிகழும்.

//அதுக்குத்தானே பாட்டே கேட்காம இந்த பதிவு//

எங்கப்பன் குதிருக்குள் இல்லை, நீங்கள் பாட்டுகேட்காமல் படம் பாராமல் விமர்சனம் எழுதுகிறது போல் நினைத்துவிட்டீர்கள்.

//இதுல வெட்கமே இல்லாம லிங்க் வேற... இதெல்லாம் ஒரு பொ...//

என்ன ஒரு முரண்பாடு வெட்கமே இல்லாமல் லிங்க் கொடுப்பவர் பாட்டைக் கேளாமலா கொடுக்கபோகின்றார்.

முதலில் உங்கள் பொழைப்புகளைப் பாருங்கள் பின்னர் மற்றவர்களை யோசிக்கலாம்.

மறந்துபோனேன் நானும் இளையதளபதி விஜய் ரசிகன் தான் ஆனால் இப்படி தனிமனிதக் தாக்குதல் நடத்தும் விசிலடிச்சான் குஞ்சல்ல.

Suresh said...

Padichitu nalla sirichitan ha ha enaku puli urumbuthu pudichi irunthathu neenga sonnathuku apprum keta siripu agi pochu

padam partha mandai surunkuthu nu pattu

Unknown said...

பட்டை அண்ணை....
நீங்க இப்பவே முக்காவாசி விமர்சனம் எழுதி முடிச்சிருப்பிங்களே....
படம் வந்த உடன லேட் பண்ணாமல் டக்கெண்டு போஸ்ட் பண்ணிடுங்க.....

ஆனா பாருங்க படத்துக்கு கன சனம் போகும்.. அதில அரைவாசி நக்கலடிக்குறதிற்ற்கு தான் போகுது (புல்லட் பாண்டி கூட நக்கல் விமர்சனம் எழுத்தான முதல் ஸோ போறார் போல..) அது தெரியாமல் பயபுள்ள பட்டய கிளப்பபோது...

Anonymous said...

போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன? கைதி - கமல் ரஜினிய பார்க்கணும் போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா விஜைய பார்கிறீயா?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

Rotfl

Nanthu

Chander said...

வாகீசன்
//இப்படியும் ஒரு கற்பனை உலகம் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை//

இது கற்பனை உலகம் ஒன்றுமில்லை வாகீசன், எந்த துறையிலும் யாரும் திறமையின்றி முன்னேற முடியாது. விஜய் ஒரு superstar அளவிற்கு பேசப்படுவதற்கு அவரிடம் ஒன்றுமின்றி வந்திருக்க முடியாது. ஒரு தனி மனிதன் தன்னை சுற்றி இவ்வளவு ரசிகர்களை சேர்த்து இருப்பது பெருமை பட வேண்டியது. அதை விடுத்து விஜய் ரசிகர்கள் என்றால் அவர்கள் வெறியர், முட்டாள் என கூறுவது அபத்தம்.

சின்ன குழந்தைகள் பலரை தன் ரசிகராக கொண்டவர் விஜய். குழந்தைகள் மனதில் இடம் பிடிப்பது எளிதல்ல. ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு style இல் நடிப்பார்கள். காமெடி, ஆகஷன், செண்டிமெண்ட், டான்ஸ் என எல்லா திறமையும் கொண்டவர் என்பதை உங்களால் ஏற்று கொள்ள முடியாதா?

ஏதோ நீங்கள் தான் உலகிலேயே திறமைசாலி என நினனப்பது தான் உங்களிடம் தெரிகிறது.

Chander said...

வாகீசன்

//அவர் நடிகர் என்றே முடிவிற்கு நீங்கள் வந்தபின்னர் உங்களிடம் என்னத்தைப் பேசுவது//

அட சாமி நடிகராக இல்லாமல் தான் இன்று 50 படங்கள் நடித்து 40 ஆயிரத்திற்கு மேல் ரசிகர் மன்றங்களை கொண்டிருக்கிறார் என்றால் விஜய் மந்திரவாதி போல.

கோப்பாய் பொடியன் said...

நான் நடிச்சால் தாங்கமாட்டாய்.......-விஜய்

வேட்டைக்காரன் பாட்டுகள் கிளம்பி காதுகள் எல்லாம் புழுதியை கிளப்பி கொண்டிருப்பது நீங்கள் எல்லாம் அறிந்ததே...அதிலையும் பாருங்க நம்ம விஜய் அண்டனி தான் இசை... என்னதான் நல்ல இசையமைப்பாளராக இருந்தாலும் பாடல்கள் ஹீரோவிற்க்கு ஏற்றமாரி அமைய வேண்டும் என்பதால் தான் இந்த எவெக்ட்...

விசயம் என்னவெண்டால்,..
விஜய் நடிக்கும் படங்கள் பார்த்து நொந்து வெந்து புழுங்கி புண்ணாக்காகி இருப்பது கண்டு விஜய் ஒரு பாடல் பண்ணியிருக்கிறார்..
நான் நடிச்சால் தாங்கமாட்டாய் எண்டு.. உன்மையில் அது நான் அடிச்சால் தாங்கமாட்டாய் என்பது.. தான்...
இது குறித்து கபிலனிடம் பேட்டி கண்ட குமுதம் குழுவினர்,

கேள்வி: எவ்வாறான சந்தர்பத்தில் இப்படி எண்ணங்கள் வந்தது? "நானடிச்சால் தாங்கமாட்டாய் நாலு மாசம் தூங்கமாட்டாய்" உண்மையில் அற்புதமான வரிகள்

கபிலன்: அது வந்துங்க.. கனகாலத்திற்க்கு பிறகு நேரம் கிடைச்சுது.. அப்பதான சும்ம வில்லு படம் பார்த்து மண்டை விறைச்சு போய் உட்காந்து இருந்தன். அப்ப தான் விஜய் அண்டனி குரூப் விஜய் பாடல் எழுதி தரசொல்லி கேட்டாங்க..

நான் சொன்னன் "அது தான் எல்லாரும் எழுதலாமேப்பா......... விஜயிண்ட விசிலடிச்சான் குஞ்சுகளை பிடிச்சி எண்டாலே எழுதுவாங்களே...... சரி சரி படத்துக்கு என்ன பேர்?

வேட்டைகாரன் ஸார்

அப்ப வேட்டைகாரன் வாறாண்டா வேட்டைகாரன் வாறாண்டா வேட்டைகாரன் வாறாண்டா எண்டு கத்தி கததியே ஒரு பாட்டை போடலாம்...

இல்ல ஸேர் பிளாங் ஆக இருக்குது...

அப்ப சும்மா புலி உறுமுது நரி உறுமுது எண்டு கத்திப்போட்டு பிறகு வேட்டைகாரன் வாறாண்டா எண்டு கத்தினா சரி...

இல்லை ஸேர் கொஞ்சம் மொடேர்னா.. பார்க்கலாமே...

அப்ப இடைக்கிட உங்கட பானில விளங்காத வார்தைகளை போடவேண்டியது தானே...........

அப்ப இடைக்கிட சமஸ்கிரத சொல்லுகளை போடுவமா?

என்ன சம்மந்தமே இல்லாமல் சொல்லுறீங்கள்.. சரி சரி விஜய் தானே பரவாயில்லை.. நெஃஸ்ட்..

இதெல்லாம் நடிச்சு எண்டு மனதுக்குள்ள புண்பட்டு விட்டு... அடுத்த பாடல் பற்றி யோசிக்கும் போது தான் சமீப காலமாக இவனால் பட்ட வேதனைகளை பாடால் வடித்தால் என்ன எண்டு கேட்டேன்..

அதுண்ட நாகரீகமான வடிவம் தான் நானடிச்சால் தாங்க மாட்டாய் நாலு மாதம் தூங்க மாட்டாய் என்பது...

ஆஹா அருமை.....

Sinthu said...

அண்ணா வானொலியில் இன்று நீங்க கேட்ட கேள்விக்கு விஜய் ஐப் பற்றி தப்பாகப் பேசினால் பிடிக்காது என்று பலர் சொல்லியிருந்தார்கள். இந்தப் பதிவைப் பார்த்தால் என்ன செய்வார்களோ.. நீங்க தான் எதுக்குமே தயங்காத சிங்கமாச்சே..

Sinthu said...

நல்ல தாக்குதலும் கூட... நல்லாவே இருக்கு..

Anonymous said...

//போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன? கைதி - கமல் ரஜினிய பார்க்கணும் போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா விஜைய பார்கிறீயா?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

Rotfl

Nanthu
//


இது tamilcinema.com இல் இப்படி வந்தது:

தூக்கில் போடும் முன் கைதியிடம்,

போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?
கைதி - இளைய தளபதியை பார்க்கணும்
போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா சின்னத் தளபதியை பார்க்கிறீயா?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

Unknown said...

2009 இன் மிகப்பெரிய வெற்றிப்படமான வேட்டைக் காரனை நக்கல் செய்ததற்காக உங்களை அப்பாவிகள் சங்கத்தின் சார்பாக கண்டிக்கிறேன்...

வேட்டைக்காரன் படத்தின் விநியோக உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதால் எப்படியும் அவர்களின் தரவரிசையில் முதலிடம் வேட்டைக்காரன் தான்.
பின்பு சன் தொலைக்காட்சியின் விமர்சனங்களின் படியும் வேட்டைக்காரன் அசத்தலாக இருக்கும்.
பின்னர் அவர்களின் அறிக்கைகளின் படி வேட்டைக்காரன் 200 நாள் ஓடும்...
இதைவிட வேறென்ன வேண்டும்???

Anonymous said...

விஜய் ரசிகன் said...
//பாட்டை ஒழுங்காக தெளிவான சிடியில் கேளுங்கள் பாடலில் அப்படித்தான் வருகின்றது.//

நானறிந்து பாடல் கேட்ட ஒருவர் கூட "நான் நடிச்சா தாங்க மாட்டே.." வரி வருவதாகச் சொல்லவில்லை. அது லோசனின் நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடு!

விஜய் ரசிகன் said...
//முதலில் பாடியவர்கள் நிறுத்தி நிதானமாகப் பாடவேண்டும்.//
பாடகர்(சங்கர் மகாதேவன்) சரியாகத்தான் பாடியிருக்கிறார். நிறுத்திப் பாடுவதென்றால் எவ்வளவு நேரம்?

விஜய் ரசிகன் said...
//எப்படியும் சன் வேட்டைக்காரனை சன் நியூஸ் போன்ற கருமங்களில் விளம்பரம் செய்து செய்தியாக அறிவித்து வெற்றிப்படமாக மாற்றிவிடும் "குருவிக்குச் செய்தது போல் இதுவும் நிகழும்".//

குருவி Sun Pictures படமல்ல

விஜய் ரசிகன் said...
//மறந்துபோனேன் நானும் இளையதளபதி விஜய் ரசிகன் தான் //

உண்மையாகவா???

விஜய் ரசிகன் said...
//ஆனால் இப்படி தனிமனிதக் தாக்குதல் நடத்தும் விசிலடிச்சான் குஞ்சல்ல.//

எனக்கொரு சந்தேகம்.
1. தனிமனிதத் தாக்குதலே பிழையா?
2. தனிமனிதத் தாக்குதலை சற்றுக் கறாரான வார்த்தைகளோடு செய்வதுதான் பிழையா?

இதற்குப் பதில், 2 ஆவது எனில்,
தனிமனிதத் தாக்குதலை சற்று நகைச்சுவையான வார்த்தைகளோடு செய்வதுதான் சரியா?
உதாரணங்கள்:(நன்றி லோசன்)
---
இளைய தளபதி,நாளைய இந்தியப் பிரதமர்(எதை யோசிச்சாலும் பெரிசா யோசிக்கனுங்க்னா..) விஜய் அவர்கள்(மரியாதைங்க்னா)...
---
இன்னொரு பாடல் மகா மெகா கொடுமை..

நானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்.. இது தான் கபிலன் எழுதிய ஆரம்ப வரிகள்..

ஐயோ அம்மா.. கேட்டு முடிக்க முதல் இரத்தம் கக்கி செத்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது..

எனக்கொரு பெரிய சந்தேகம்..
கபிலன் எழுதியது "நான் அடிச்சா தாங்க மாட்டேயா?"
அல்லது
"நான் நடிச்சா தாங்க மாட்டேயா?"

----------------

அல்லது
தனி மனிதத் தாக்குதலே (எழுத்தில்) பிழையா???????????????

அஜுவத் said...

விஜயோட அப்படி என்ன கோபம்.... இன்னும் ஒரு கிளு கிளு படம் போட்டிருக்கலாமே??.... அண்ணா இந்த photo??........ இது வேட்டைக்காரன் படத்தில வார கட்டமா???

கஜீவன் said...

லோஷன் அண்ணா..
நான் உங்கள் பதிவுகளின் தீவிர ரசிகன்..கடைசியாக நீங்கள் எழுதிய "கந்தசாமி", " உன்னைப்போல் ஒருவன்" விமர்சனங்களின் பின் உங்களின் விமர்சனங்கள் மீது எதிர்பார்ப்பும்,மதிப்பும்.ஆனால் இறுதியாக நீங்கள் எழுதிய "விஜய் நடிச்சா தாங்க மாட்டோம்?????"

பதிவு எனக்கு பிடிக்கவில்லை...உண்மையில் நான் கமல் ரசிகன். ஆனால் அஜித்தை விட விஜய் பிடிக்கும்..
சில பதிவர்கள் தாம் பிரபலம் அடைவதற்கு நல்ல படங்களுக்கு ("அண்மையில் "கந்தசாமி" போல) கூடாமல் விமர்சனம் எழுதுவதும்,பிரபல்யங்களை போட்டுத் தாக்குவதும் வழமை..விஜய் மேல் உள்ள தனிப்பட்ட வெறுப்பால் ஒரு படம் வர முதலே அதைப்பற்றி எதிர்வு கூறுவது உங்களையும் குறைத்து எண்ண தோன்றுகிறது.. //
பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?

பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்.. //// உண்மயில் விஜய்க்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்...நிச்சயம் இப்பதிவால் அவர்களுக்கு உங்கள் Blog மீது வெறுப்பு ஏற்படலாம்...தயவு செய்து இனிவரும் காலங்களில் இப்படி எழுதாதீர்கள்...

Anonymous said...

"கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு"

"ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே"

மேற் தரப்பட்ட இரண்டு பாடல்களுமே Melody touch உள்ள பாடல்கள்.
வழமையாக விஜய்(கடைசியாக வந்த சில படங்களில்) படங்களில் ஒரு Melody touch உள்ள பாடல் தான் வரும்.
உதாரணம்:
வில்லு - நீ கோபப் பட்டால்...
குருவி - தேன் தேன்...
அழகிய தமிழ்மகன் - கேளாயோ...

வேட்டைக்காரன் பாடல் தொகுப்பின் முக்கியமான வித்தியாமே இது தான்.
மற்றது,
என் இசை நாட்டத்தைப் பொறுத்தமட்டில், மேற்சொன்ன இரண்டு பாடல்களும் தரமானதாகவே தோன்றுகின்றன. பாடல் வரிகளும் நன்றாகவே உள்ளன. 'கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு' வரியின் அழகே தனி தான்.
மற்றைய பாடல்களில்,
புலி உறுமுது... , நான் அடிச்சா தாங்கமட்டே ... ஆகியவை விஜயைப் பிடிக்காதவர்களைக் கடுப்பேற்றும் பாடல்கள்.
மற்றபடி(படம், நாயகனை மறந்து பாடலைக் கேட்கவும்),

'புலி உறுமுது...' - நிறைய அடிகளால் நொந்து போன எங்கள் உள்ளங்களுக்கு மீண்டும் பொங்கி எழுவதற்கான உந்துசக்தி.

'நான் அடிச்சா தாங்க மாட்டே...' - ஆரம்ப வரிகள் சற்று உறுத்தினாலும் சங்கர் மகாதேவனின் குரலும், பாடலின்(இசையின்) ஏற்ற இறக்கமும் பாடலின் இடையே உள்ள வரிகளும் நமக்கு ஒரு வேகத்தைத் தருகின்றன.

'என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...' - வழமையான குத்துப் பாடல்.

மொத்தத்தில் வேட்டைக்காரன் இந்த வருடத்தின் மோசமான பாடற் தொகுப்பும் அல்ல / மிகச் சிறந்த பாடற் தொகுப்பும் அல்ல.
(இது தனியே பாடல்களிற்கான பார்வை மாத்திரமே. சில வேளைகளில் திரைப்படம் வந்த பின்னர் பாடல்களுக்கான வரவேற்பு இன்னும் அதிகரிக்கலாம்)

பின் குறிப்பு: நீண்ட நாட்களின் பின் நேற்று எனது வீடு வந்த அக்காவின் இரண்டரை வயது மகள் பாடிய பாடல்,
'வாடா மாப்பிள்ளை...'.

-கரன்

KANA VARO said...

"நான் அடிச்சா தாங்க மாட்டாய்…".
சங்கர் மகாதேவன், யோசன் சஞ்சய்

வழமையான விஜயின் அறிமுகப்பாடல். மக்களுக்கு தத்துவங்கள் (ரசிகர்களுக்கு) விடலைப்பையன்களே விரல் சொடுக்கி அறிமுகப்பாடல் வைக்கும் போது ‘மாஸ் ஹீரோ’ விஜய் வைப்பதொன்றும் தப்பில்லையே…
அண்மைக்காலமாக விஜய்க்கு அறிமுகப்பாடல்களை எழுதிவரும் கபிலன் இப்பாடலையும் எழுதியுள்ளார்.
“வாழு வாழு வாழவிடு வாழும் போதே வானைத் தொடு வம்பு பண்ணினா வாளை எடு வணங்கி நிண்டா தோளைக் கொடு….”

“உணவு உடை இருப்பிடன் உழவனுக்கும் கிடைக்கணும் அவன் அனுபவிச்ச மிச்சந்தான் ஆண்டவனுக்கு படைக்கணும்..”

“வாய்மூடி வாழாதே… வீண் பேச்சு பேசாதே…. காலம் கடந்து போச்சு எண்டு கவலைப்பட்டு ஏங்காதே…கனவு ஜெயிக்க வேண்டும் எண்டா கண்ணை மூடித் தூங்காதே…”

“தாய்ப்பேச்சை மீறாதே… தீயோர் சொல் கேட்காதே…”

இப்பிடி பல நல்ல வரிகள் இப்பாடலில் இருக்க சில பெரிய மனுசன்களுக்கு
“நான் அடிச்சா தாங்க மாட்டாய்…” என்ற வரி மட்டும் பாடல் முழுவதும் தொடர்ந்து கேட்குது. எதுக்கும் இறுவட்டை அவங்க செக் பண்ணி பார்க்கிறது நல்லது எண்டு நினைக்கிறன்.

sanjeevan said...

தாங்கள் கமல் நடிச்சா மட்டும் தான் தாங்குவீங்களோ....படம் வர முதலே பாட்டு
வரிகளை வைச்சே விமர்சனம் எழுதுறீங்க .....இவ்வளவு திறமையான ஆழா
நீங்க. ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது லோசன் அண்ணே.....

KANA VARO said...

வந்தி அண்ணா,
நான் விஜய் ரசிகன் என்றாலும் தமிழ் சினிமாவை நேசிப்பவன்
கமலை உதாரணம் காட்டினது எனக்கும் மனக்கஷ்டம் தான். கமல் ரசிகர்களிடம் நான் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். (உங்களிடமும்தான்)
என்னைப்போல் மனமுள்ள பதிவு எழுதுபவர்கள் பிற நடிகர்களை தாக்கமாட்டார்கள்.

விஜயின் வளர்ச்சியையும் வெற்றியையும் பொறுக்காதவர்களை ஒன்றும் செய்யமுடியாது.

Nimalesh said...

itha vida kodumai..... Vijay Tv start panna poraram..... yenna koduma sir ithu.....

Anonymous said...

Congresskku vaal pidikkira ivanukkellaam kodi pidikkira koottam irukkirathe kevalam.

Loshan why r u giving unwanted promotion for these useless songs of this senseless idiot?

Varatharajan - Salisbury

டவுசர் பாண்டி said...

னாஙும்முன்னர் விஜய் ரசிகன் தான்.என்று விஜய் காங்கிரஸில் சேர முனைந்தாரோ அன்றே வெறுத்துப் போயிட்டேன். அரசியல் அந்தர் பல்டி அடிக்கும் ஆளுக்கெல்லாம் ஜால்ரா போடுறவங்களா நாங்க?

உண்மையிலேயே விஜய் படப்பாட்டு எல்லாம் எப்போதும் ரசனையில் ரொம்பத் தாழ்ந்தவை. யாருமே இத எத்துக்கிட்டே ஆவணும்.
டப்பாங்குத்து பாட்டுல எல்லாம் இலக்கிய ரசனை பாக்கணுமா?

இதுக்குள்ள கபிலன் விஜய்க்கு போடி வச்சு எழுதுராராமா.. சும்மா போவீங்களா..

கேவலமான பாட்டுக்களும் கேனத்தனமான வரிகளும்.. இனி படம் வரும்போது கருமாந்திரமான டான்சுகளும் வரும்.

தலைவலியின் சாரிங்க தளபதியின் வாலுகள் லூசுத்தனமா கொண்டாடும்..

வாங்கய்யா நாம பொழப்ப பார்த்து புள்ள குட்டிங்கள காப்பாத்துவோம்..

டவுசர் பாண்டி

Anonymous said...

One of ur listener ..

please check this link where susiganesan blast at "ghani" for his about kandasami on KUMUDAM.....

i like to say the same to u.....

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/19540.html

வாகீசன் said...

//இது கற்பனை உலகம் ஒன்றுமில்லை வாகீசன், எந்த துறையிலும் யாரும் திறமையின்றி முன்னேற முடியாது.//
விஜயின் திறமைக்குத்தான் டொக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதா? அவரின் திறமையை நம்பித்தான் காங்கிரஸில் சேரச்சொன்னார்களா? இல்லவே இல்லை. அவரின் பெயரைச் சொல்லி, அவரின் ரசிகர்கள் என்று சுத்தும் வெறியர்களிடம் காரியம் சாதிக்கமுடியும் என்பதால் தான் இந்த நிலமை. மண்டபத்தை இடிக்கபோவதாக செய்தி வந்ததும் காங்கிரஸில் சேராமல் பின்னங்கால் பிரடியில் அடிபட ஓடியதில் அவரது திறமை நன்கு தெரிந்தது. அதற்கு நான் ஒரு டாக்டர் பட்டம் கொடுக்கப்போறேன்.

//ஒரு தனி மனிதன் தன்னை சுற்றி இவ்வளவு ரசிகர்களை சேர்த்து இருப்பது பெருமை பட வேண்டியது. அதை விடுத்து விஜய் ரசிகர்கள் என்றால் அவர்கள் வெறியர், முட்டாள் என கூறுவது அபத்தம். //
இரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது இங்கேயே தெரிகிறதே..நான் சொன்னது என்னவெனில் ரசிகர்கள் என்பவர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய கதாநாயகன் செய்யும் எல்லாவற்றையும் ரசிப்பவனல்ல, அப்படி ரசித்தால் அது வெறியர்கள் பட்டியல்.

//அட சாமி நடிகராக இல்லாமல் தான் இன்று 50 படங்கள் நடித்து 40 ஆயிரத்திற்கு மேல் ரசிகர் மன்றங்களை கொண்டிருக்கிறார் என்றால் விஜய் மந்திரவாதி போல.//
அட, எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? 50 படங்கள் நடிப்பதற்கு நடிக்கத்தெரியவேண்டுமா? கடைரியாக 1999ல் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு சிறந்த நடிகர் விருது கிடைத்ததுடன் சரி...அது ஆச்சு 10 வருஷம்...

Anonymous said...

dont you have shy to tell this?? noncence.... u guys dont have any rights to talk about him... mind your own business loshan...!!

Anonymous said...

வாகீசன் said...
//விஜயின் திறமைக்குத்தான் டொக்டர் பட்டம் கொடுக்கப்பட்டதா? அவரின் திறமையை நம்பித்தான் காங்கிரஸில் சேரச்சொன்னார்களா? //

இல்லை ஐயா. உங்களுக்கு இருக்கும் திறமை கூட அவருக்கு இல்லை.


வாகீசன் said...
//அவரின் பெயரைச் சொல்லி, அவரின் ரசிகர்கள் என்று சுத்தும் வெறியர்களிடம் காரியம் சாதிக்கமுடியும் என்பதால் தான் இந்த நிலமை.//

எப்படி அந்த ரசிகர்கள்/வெறியர்கள் வந்தார்கள்?
விஜய் மாதம் மாதம் அவர்களுக்கு காசு கொடுக்கிறவரோ?

வாகீசன் said...
//மண்டபத்தை இடிக்கபோவதாக செய்தி வந்ததும் காங்கிரஸில் சேராமல் பின்னங்கால் பிரடியில் அடிபட ஓடியதில் அவரது திறமை நன்கு தெரிந்தது. //

பக்கத்தில் இருந்து பார்த்தவர் போலும்...


வாகீசன் said...
//இரசிகர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது இங்கேயே தெரிகிறதே..நான் சொன்னது என்னவெனில் ரசிகர்கள் என்பவர்கள் தங்களின் விருப்பத்திற்குரிய கதாநாயகன் செய்யும் எல்லாவற்றையும் ரசிப்பவனல்ல, அப்படி ரசித்தால் அது வெறியர்கள் பட்டியல். //

பெரும்பாலும் பதிவுலகில் விஜய் ரசிகர் எனக் கருதப்படுவோர் மற்ற நடிகர்கள் தொடர்பான காட்டமான கருத்துகளை(பெரும்பாலானோர்) சொல்லுவதில்லை / எழுதுவதில்லை.
யார் வெறியர்கள்? (விஜய் எதிர்ப்பு வெ......ள்)
எங்கள் வாழ்க்கையில் நேரடியாக எமது உரிமைகளை / சுதந்திரத்தை பறிப்பவர்கள் மீது வெறுப்புக் கொள்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.

சில வேளைகளில், விஜய் படம் பார்ப்பதாலோ பாடல்கள் கேட்பதாலோ உங்கள் மகிழ்ச்சி கெடுகின்றதெனின் தயவுசெய்து அவற்றைப் புறக்கணியுங்கள். உங்கள் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது.


வாகீசன் said...
//கடைரியாக 1999ல் துள்ளாத மனமும் துள்ளும் படத்திற்கு சிறந்த நடிகர் விருது கிடைத்ததுடன் சரி...அது ஆச்சு 10 வருஷம்... //

நல்ல நடிகர் என்று கருதப்படும் சூர்யா தனது திரையுலக வாழ்க்கையில் எத்தனை தடவை தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்?
மற்றது,
டாக்டர் பட்டம் வாங்கிய விஜயால் ஏன் சிறந்த நடிகருக்கான விருதைப் பல முறை பெற முடியவில்லை?

--கரன்

Anonymous said...

hi loshan,

u need to be a neutral person when you comment on some ones effort and deliverable, what u have done here is you are trying to forcibly yourself publish something to the public, if you dont like vijay u can simply comment on his performance on visual songs and the film once its released, here you don't need to take into consideration about vijay that much , here you can talk more about music director, lyrics author and singers i think vijay's part is very rare when it's come to audio for the film.. so when you come to comment on audio for a film please try to talk about the things that mentioned above more.

you can be a fan either to any one or not to any one but the comments you have published seems to be you dont like vijay nt the songs and you are jealous on him.

please correct the things that i mentioned in the future...

i know you are good radio announcer and a good journalist. i like your programs and litern to those whenever i get free times .... i really disappointed on you when i see this post.

U.P.Tharsan said...

மசாலா படம் வாழ்க

சுபானு said...

//கபிலன் எழுதியது "நான் அடிச்சா தாங்க மாட்டேயா?"
அல்லது
"நான் நடிச்சா தாங்க மாட்டேயா?"
//

அந்த மக்கு விஜய்க்கு எங்க இதெல்லாம் வௌங்கப்போகுது..

இந்தப் படத்தைப் போய்ப்பாக்களுக்கு படத்தைப்பற்றி முதல்லேயே அவங்க தெளிவாச்சொல்லீட்டாங்க..
//
வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு ..
//
இதுக்கு மேலேயும் போய்ப் படத்தைப் பாக்கிறவங்களை அந்த விஜய்யைவிட மற களன்றதுகள் என்றுதான் சொல்ல வேண்டும்...

சுபானு said...

@விஜய் ரசிகன்

//ஆனால் இப்படி தனிமனிதக் தாக்குதல் நடத்தும் விசிலடிச்சான் குஞ்சல்ல.//

நீங்களெல்லாம் திருந்தவே மாட்டிங்களா...

சுபானு said...

என்ன அண்ணா நிறைய அனானிப் பின்னூட்டம் வந்திருக்குப்போல.. ம்ம்ம்.. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... :) :)

சுபானு said...

அன்பின் VARO
தொழில் வேறு, பதிவுலகம் வேறு.. ஒருவர் தனது சொந்த விமர்சனங்களை பதிவுலகில் சொல்வதற்கு நீங்கள் கூடாது எனக் கருத்துக்கூற முயல்வது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லை..

சுபானு said...

//Sinthu
அண்ணா வானொலியில் இன்று நீங்க கேட்ட கேள்விக்கு விஜய் ஐப் பற்றி தப்பாகப் பேசினால் பிடிக்காது என்று பலர் சொல்லியிருந்தார்கள். இந்தப் பதிவைப் பார்த்தால் என்ன செய்வார்களோ.. நீங்க தான் எதுக்குமே தயங்காத சிங்கமாச்சே..
//

ஆகா.. ஆகா... நானும் கேட்டுக்கொண்டிருந்தேன்..

அண்ணா பின்னேரம் வேலை முடிந்து வரும் போது கவனமாக இருக்கவும்.. இளயதளபதியின் தூசிப்படை ஒன்று திரியுதாம்... ;)

Anonymous said...

தம்பி நீர் சின்னப் பையன் சுபானு ....

பதிவுலகம் வேற இல்ல லோஷன் வேற இல்ல எல்லாம் ஒன்றுதான், ரேடியோ ல லோஷன் வேல செய்யாடி அவர யாருக்குமே தெரியாது ... அதனால்தான் ரேடியோ வை பற்றிக் கதைத்தோம் ....

if loshan is like a brother to u then u dnt need to support him in public posts .....

KANA VARO said...

பாசமிகு சுபானு ....

"இலங்கைப் பதிவர்களில் சர்வதேசத் தரப்படுத்தலில் எனது தளம் தான் முன்னிலையில் நிற்கிறது". எண்டு லோஷன் அண்ணா சொல்லுறார் எண்டால் அதுக்கு காரணம் என்ன? கொஞ்சம் யோஸிச்சு பாருங்க....
பத்து வருஷம் ரேடியோ ல இருந்ததா... அல்லது இரண்டு வருஷம் பதிவு எழுதினதா? ரேடியோ ல இருந்து சேர்த்த மரியாதையை சொந்த விருப்பு வெறுப்பை பதிவு எழுதி கெடுக்கிறதா? அதுக்கு தான் நான் மீடியா ல இருக்கிறவங்க நடுநிலைய இருக்கணும் எண்டன்.

தொழில் வேறு, பதிவுலகம் வேறு இல்ல

லோஷன் அண்ணாவின் பத்து வருஷ விசிறி நான்... அவரை முன்னுதாரணமா வைத்து நானும் இப்பொழுது வானொலி துறையில காலடி வைச்சிருக்கன்... அவரை நாங்க உயரமான இடத்தில வைக்கும் போது இவ்வாறான பதிவுகளால் என்னை போல இருக்கிற பல விஜய் ரசிகர்களை கோபப்பட வைக்கிறார்...
இப்ப நான் விஜய் காக கோபபட்டது போல தான் நாளைக்கு லோஷன் அண்ணா பற்றி யாராவது கதைத்தாலும் கோபபடுவன்... (என்னை தனிப்பட்ட ரீதீல தொடர்பு கொள்ளுங்க லோஷன் அண்ணாகாக நான் சண்டை பிடிச்சதை ஆதாரத்துடன் சொல்லுறன்)

"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே..."

Anonymous said...

ஈழத்தமிழர்கள் திருந்தப்போவதில்லை, ஈழத்தில் படுகொலை புரிந்த காங்கிரஸுடன் விஜய் சேரப்போகின்றான். ராகுலைச் சந்தித்தான் அப்படியிருந்தும் இன்னுமா அவனை ரசிக்கின்றீர்கள். இதிலும் பார்க்க நீங்கள் நாண்டுக்கிட்டு சாகலாம்.

Vivekam said...

நான் விக்ரம் ரசிகன் தான் ...
ஆனாலும் ஒண்டு சொல்லுறன் எந்த ரசிகனும் தனது ஹீரோ பற்றி கதைத்தால் கோப படத்தான் செய்வான்.. (அது லோஷனா இருந்தாலும்)

Anonymous said...

ithula Loshan Vettaikkaran songs patri sonnathula enna thapu?
paatu nalla irukka? maka kevalam!

en thaan Vijaykku iththanai mattamana rasanai ulla rasigarkalo.

Loshan oru naalum Vijayaik kana=dapadi attack seiyala.

ithaik konjam paarunga.
http://loshan-loshan.blogspot.com/2008/12/blog-post_23.html

so oru Blogger than rasanaiyai sonna vaasinga. summa thullathenga.

Vijay rasigarkalin rasanai velangip pochchu.

Sanjeevan

Keerthi said...

வேட்டைக்காரன் பாடல்கள் சிறந்தவை என்று சொல்லும் உங்களில் யாராவது நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள், நீங்கள் உங்கள் விஜய்க்காக சொல்கிறீர்களா இல்லை மெய்யாலுமே பாடல்கள் நல்ல இருக்கு என்று சொல்கிறீர்களா?

சும்மா ஒரு அப்பைவியின் நகைச்சுவை உணர்வை உங்கள் விஜய் படங்களில் செய்கிற மாதிரியே கும்முறீங்களே..

படம் வரட்டும்.பதிவுலகமே சேர்ந்து உங்கள் எல்லாரையும் கும்மும்.

waiting for that day.

ARV Loshan said...

ப்ரியானந்த சுவாமிகள்,
யோகா,
நிமலேஷ்,
வந்தியத் தேவன்

நன்றிகள்..

ARV Loshan said...

சுபாங்கன்,
நிர்ஷன் -
//இறக்குவானை நிர்ஷன் said...
இப்பவே கிளம்பிட்டீங்களா?
//
இப்பவே பாட்டு வந்ததால்.. ;)

அனானி,

நன்றிகள்..

ARV Loshan said...

கார்க்கி said...
//வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு//

நம்ம இஷ்டத்துக்கு வரிகளை மாற்றிப் போட்டு நகக்லடிக்க வேண்டியதுதான் லோஷன். இலங்கை நண்பர்கள் இருந்தால் அந்த பாட்டு மட்டும் நல்ல பாட்டா? அதையும் வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே//

ஏன் இவ்வளவு சூடு சகா.. நான் அந்தப் பாடலையும் நல்லது என்று சொல்லவில்லையே.. ;)
கரிகாலன் கால் மட்டும் பிடிச்சிருக்கு என்று தானே சொல்லி இருக்கிறேன்..

//புலி உறுமுது அறிமுகப்பாடலா?//
சகா ரெண்டு பாட்டு பில்ட் அப்ப் பட்டா இருந்தா எதைன்னு கண்டுபிடிக்கிறது? இதுல தானே வேட்டைக்காரன் வரான்னு சொல்ராங்கா.. ஸாரி கத்துறாங்க.. ;)

வரிகளை கேட்காமலே பதிவெழுதியது புரிகிறது.//
பார்க்காமல் பட விமர்சனமோ, கேட்காமல் சினிமா விமர்சனமோ எழுதுவதில்லை நான்..

அது சரி கேட்க முடியாமல் கத்துவதாக சொல்விங்க.//
உண்மை தானே.. ;)

இனி கொஞ்ச காலம் வேட்டைக்காரன் இல்லாமல் உங்க ரேடியோ வேலைக்காவ்து சகா. பதிவு போடுமுன் யோசிச்சிட்டு போடுங்க. இந்த பாடல் எல்லாம் வெற்றிபெறும்போது அட நல்லாத்தானே இருக்குனு யோசிப்பிங்க. அது சரி வெளிய சொன்னாத்தானே//
உண்மை தான்.. வானொலி வேறு..அங்கே நான் நடுநிலையானவன். ஏன் விருப்பத்தை விட ரசிகரின் விருப்பத்துக்கே அங்கே முதலிடம். அதற்காக ஏன் சொந்தக் கருத்தை ஏன் தளத்தில் சொல்லாமல் இருக்க முடியுமா? என்ன சகா இது? சின்னப் புள்ளத் தனமா..

பாடல்கள் எனக்குப் பிடிப்பது வேறு.. வெற்றி பெறுவது(ஜனரஞ்சகத் தன்மை அடைவது வேறு)



உங்க நண்பரிடம் சொல்லி பதிலுக்கு ஒரு பதிவு போட்டு 3000 ஹிட்ஸ் வாங்கிக்கோங்க. அதுக்குத்தானே பாட்டே கேட்காம இந்த பதிவு

இதுல வெட்கமே இல்லாம லிங்க் வேற... இதெல்லாம் ஒரு பொ...//

ஹிட்ஸ் வாங்குறதுன்னா வேறு எத்தனையோ வழிகள் இருக்கு.. பிரபல பதிவரான தங்களுக்கு தெரியாததா?
இதுவும் பொழப்பு,பொழுதுபோக்கு தான் சகா..
ஒரு விரலை என் நோக்கி காட்டும் போது மீதி விரல்களைப் பாருங்கள்..

link கொடுத்தாத் தானே பாடல்களின் கிழிவு தெரியும்.. இதுக்கென்ன வெட்கம் வேணும்?? ;)

உங்கள் ஹீரோவை தாக்கியதும் பொங்கி விட்டீர்கள்.. ஆனால் உங்கள் நட்பு மனது தெரியும்.. உங்கள் வேட்டைக்காரன் பதிவும் வாசித்தேன்.. பின்னூட்டம் போட்டால் வீண் வம்பு என்று சிரித்துவிட்டு திரும்பிவிட்டேன்..

ரசனைகள் பலவிதம்.. :)

ARV Loshan said...

Bankajan said...
அய்யோ..... இப்படி ஒரு கடி விஜய் க்கு தேவையா???//
;)

=============
ILA said...
Same Blood//
;)
சொன்னா கேக்கிறாங்க இல்லையே..

=================

மருதமூரான். said...
லோஷன்…….
தங்களின் இசை விமர்சனத்துக்கு பெரிய முத்தாய்ப்பே அந்த படம்தான். ஆருங்க அது இவ்வளவு பெரிய்ய்ய்யய்ய்ய மனுஷி.//

ஹத.. அவங்க தானுங்க வேட்டைக்காரி.. அன்புள்ள அனுஷ்கா..

ARV Loshan said...

Rama said...
வேட்டைக்காரன் வரதப் பார்த்து.... நிக்காம ஓடு ஓடு ஓடு என்று துரத்துகிறார்கள்..
அவங்களுக்கே புரிஞ்சு போச்சோ?


mudiyala saamy...I am feeling pain in my stomach (because of laughing )after listened this song//

haha :)

============

மதிபாலா said...
ஹலோ....சும்மா இருக்காம லிங்க் வேற கொடுத்து என் மூடையே புலி உருமுது கெடுத்துப் போடுச்சி..

தாங்க முடியல.

விஜய் இன்னும் 100 படம் நடிச்சாலும் திருந்தப் போறதில்லைன்னு நினைக்கிறேன்....

டன் டன் டாணா டர்றாவே என் காதுக்குள்ளே இன்னும் இடிச்சிகிட்டு இருக்கு.

:((
//

லிங்க் குடுத்ததுக்கு மன்னிச்சுக்கொங்கோ...
யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெறுங்க என்று தான்.. ஹி ஹி..

டண்டானா லிங்க் அனுப்பி வைக்கவா? ;)

ARV Loshan said...

VETTI PAYAL said...
அடடா லோஷன் அண்ணா நீங்களும் எதை செய்தாலும் பெரிய வித்தகர்கள் போல விமர்சனம் செய்யும் இந்த கூட்டத்தோடு இணைந்துவிட்டீர்கள் போல. கில்லீ, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என தொடர் hit களை விஜய் கொடுத்த போது கொண்டாடியவர்கள் 3 சுமாரான படங்களுக்கு பிறகு ஒரே அடியாக விஜயை தாக்குவது சரியா? ஏதோ விஜய் படங்களை பார்த்தால் கண்கள் அலுகிவிடுவது போல தான் உங்கள் கதை உள்ளது. படம் வந்ததும் முதல் show இற்கு இந்த விமர்சகர்களில் பலர் பல் இழிய பார்ப்பதும் நடந்துதான் வருகிறது. //

உங்கள் பின்னூட்டம் பார்த்து சிரிப்பு தான் வருகிறது..
மேலே சொன்ன விஜயின் திரைப்படங்களில் அப்படி என்ன விசேடங்கள்/சமூகத்துக்கான நியாயங்கள்/புதுமைகள் இருக்கின்றன?

கில்லி திரைக்கதை,விஜயின் துட்பிப்பான நடிப்பு என்று யாரும் புகழவில்லையா? தொடர்ந்து வந்த ஆதி,அழகிய தமிழ்மகன்,குருவி,வில்லு படங்கள் நீங்களும் பார்த்தவை தானே? முதல் காட்சி பார்க்கவந்து யாரும் பல் இழிக்கலாம்.. பின்னர் கிழிக்கலாம்.. அது அவரவர் விருப்பம்

ஒரே நடிகரை குறிவைத்து இந்த சில விமர்சகர்கள் தாக்குவது அவர்கள் தரத்தை குறைக்கின்றதே தவிர வேறொன்றும் இல்லை.

கந்தசாமியில் "போடா போடி" என கத்தி கிழிப்பதை விட வேட்டைக்காரன் பாடல்கள் நன்றாகவே உள்ளது. நான் விஜய் ரசிகன் என்பதையும் மீறி இந்த தரமற்ற விமர்சனங்களை ஏற்று கொள்ள முடியாது.//
நான் விஜய் ரசிகன் .. இது மட்டுமே போதுமே.. கந்தசாமி பாடல்கள் எல்லாமே ஹிட் தானே.. யாரும் அந்தப் பாடல்கள் பற்றி மோசமாக விமர்சிக்கவில்லையே..


இன்று சூர்யாவை தூக்கி உச்சத்தில் வைத்துள்ள இந்த பதிவு விமர்சகர்கள் ஆதவனை வேட்டைக்காரன் மிஞ்சி விட்டால் சூர்யாவை வைத்து காமெடி பண்ணுவார்கள்.//

மோசமான படம் தந்தால் அது யாராக இருந்தாலும், கமல்,ரஜினி,மணிரத்னம்,ஷங்கராக இருந்தால் கூட விமர்சிப்போம்..

டவுசர் பாண்டி said...

சிங்கம் அமைதியா இருக்கேன்னு பார்த்தேன். வாங்க வாங்க..

டவுசர் பாண்டி

ARV Loshan said...

Nimalesh said...
movie some how will be hit coz this is a sun pictures productions.. they promo the movie like a hel.... dat's for sure..... ( i am nt a Vijay Fan) lol/
true.. :)

===========

madhaan said...
super anaa ,you cant get than this,early morning also there was a confusion in the lines from our fan,any way hope shathieshan wont suicide..........
MADHAN NUWARAELIYA
//

haha.. nope. He s clear in that

madhaan said...
but im proud that my cousin is also a part of the song "CHINNA THAMARAI"//
BK? Good to know that.

ARV Loshan said...

ILA said...
//ஆதவனை வேட்டைக்காரன் மிஞ்சி விட்டால் சூர்யாவை வைத்து காமெடி பண்ணுவார்கள்.//
கண்டிப்பா. அவுங்க படத்தை(குப்பையாவே இருந்தாலும்) பாராட்ட இவுங்க எங்களுக்கு மாமனும் இல்லே மச்சானும் இல்லே. நல்ல படம் குடுத்தா பாராட்டுவாங்க. இல்லாட்டி ஆப்புதான். கமல் ரஜினி எல்லாம் இந்த லிஸ்டில அடக்கம். விஜய்ய மட்டும் தனியா பாராட்ட என்ன சிறப்பு? சொல்லுங்க. ஆதவன் நல்லா இல்லைன்னாலும் கிழிப்பாங்க. வேட்டைக்காரன் படம்(பாட்டு ரொம்பச்சுமார்) நல்லா இருந்தாலும் பாராட்டுவாங்க. இதுதான் பதிவர்கள். ரசிகர் வேற பதிவர்கள் வேற....//

சரியா சொன்னீங்க இலா.. //ரசிகர் வேற பதிவர்கள் வேற....////
இந்த வேறுபாடு பலருக்குப் புரிவதில்லை. உணர்வுகள் உந்தித் தள்ள கொதிப்பாகி விடுகிறார்கள்..

ARV Loshan said...

வாகீசன் said...
//கில்லீ, திருப்பாச்சி, சிவகாசி, போக்கிரி என தொடர் hit களை விஜய் கொடுத்த போது கொண்டாடியவர்கள்//

இப்படியும் ஒரு கற்பனை உலகம் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. நல்ல படமா இருந்தா பார்ப்போம், அவ்வளவுதான் ஒழிய கொண்டாடுவதற்கு இந்தப் படங்களில் ஒன்றிற்காவது தகுதி இருக்கா? இந்தப் படங்கள் வெற்றிபெற்றபோது விஜய் வெறியர்கள் (ரசிகர்கள் அப்படியானவர்களாக இருக்க முடியாது என்பதால்) இணையத்தில் அதிகம் பதிவுகளிட்டுவிட்டு இப்போது மவுனமாக இருப்பதால் உங்களுக்கு இந்தப் பிரமை.//

ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்கள்.. ஒவ்வொரு நாளும் விஜயைக் கலாய்க்கும் பதிவுகள் எத்தனை வருகின்றன என்று திரட்டிகள் பலவும் காட்டுகின்றனவே..

//ஒரே நடிகரை குறிவைத்து இந்த சில விமர்சகர்கள் தாக்குவது//
அவர் நடிகர் என்றே முடிவிற்கு நீங்கள் வந்தபின்னர் உங்களிடம் என்னத்தைப் பேசுவது. கந்தசாமி போடா போடி பாடலை எந்த மடையன் நல்ல பாடல் என்று இங்கு சான்றிதல் கொடுத்தது? கந்தசாமி படத்தையே துவைத்து காயப்போட்டபின்னரும் இப்படிச் சொல்லலாமா? நீங்கள் ரசிகராக இருக்கும் வரை இது பிரச்சனையான கருத்து அல்ல. அதற்கு மேலும் போகும்போதுதான்...//

இது தான் ரசனை வேறுபாடு என்பது.. எனக்குப் பிடித்தது எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என்று தேவையில்லை.. வாகேசன், உங்களுக்கும் எனக்கும் வேட்டைக்காரன் பாடல்கள் பிடிக்கவில்லை.. ஆனால் கந்தசாமி பாடல்கள் எனக்குப் பிடிக்குது.அவருக்கு பிடிக்கவில்லை. அது போல் தான் இதுவும்.. வெட்டிப் பயல் பொதுவாக யோசித்தால் விளங்கும்.

ARV Loshan said...

VARO said...
நெடுகலும் கிரிக்கட்டை பற்றி எழுதாமல் ஹிட் லிஸ்ட் க்காக இப்பிடி அடிக்கடி பொழுது போகாமல் எதையாவது எழுதுறது லோஷன் அண்ணாவின் வழமை...//

தொடர்ந்து வாசிக்கிறீங்க என்று விளங்குது.. ஆனாலும் கார்க்கிக்கு நான் முதலிலேயே சொன்னது போல, ஹிட்ஸ் தேடுறதுக்கு பல வழி இருக்கு.. ;) பதிவுலகுக்கு வந்து சில மாதங்கள் தானே.. போகப் போகத் தெரியும்..

//இவ்வளவு பிஸி யான மனுஷனுக்கு விஜயை கடிச்சு எழுத மட்டும் எப்பிடி டைம் கிடைக்குதெண்டு தெரியல (விஜய் ஒழிக எண்டு பதிவு போடும் போதெ வேட்டைக்காரனுக்காக வெயிட் பண்ணின ஆளுயா இவரு....)//
ஹா ஹா.. இது தான் பெரிய காமெடி.. கொஞ்சம் வில்லு பாடல் பற்றி நான் எழுதிய பதிவையும் பாருங்க

தீபாவளிக்கு படம் வரும் போது முந்திக்கொண்டு நாங்கதான் இலங்கையில் பிரதான அனுசரணையாளர்கள் என்று பீத்த போரதும் இவர்தான்....//

அது வானொலிக்காக.. எல்லா தரப்பு ரசிகரையும் திருப்தி செய்யும் கடமை என் போன்ற ஒளிபரப்பாளனுக்கு இருக்கின்றதே..

கமல் பத்து மனிசி வைச்சிருந்தாலும் அதை சரி என்று ஞாய படுத்தி விஜய் ஒரு மனிசி வைச்சிருந்தாலும் பிழை என்று வாதிடுவர் இவர்...
இதைவிட உங்களுக்கு எப்பிடி சுகமா விளங்க படுத்துறதேண்டு விளங்கல...//

விஜய் வச்சிருக்கிறது பற்றி எதுவும் பேசவில்லையே.. கமல் பற்றி நான் எதுவும் நியயப் படுத்தவும் இல்லையே.. இங்கே தான் உங்கள் நியாயம்/தர்க்கம் நெறியிழந்து போய் தோற்று விட்டீர்கள்..

ஊடகவியலாளன் நடுநிலைய இருக்கணும் ... அதுகும் உங்களை போல ஆக்கள் இன்னும் கவனமா இருக்கணும் .//

அதை நீங்கள் வரோ என்ற வளர்ந்துவரும் ஊடகவியலாளனுக்கும் சொல்ல வேண்டும்..
கொஞ்சம் உங்கள் பதிவுகளையும் மீள வாசியுங்கள்.. புரியும்
http://shayan2613.blogspot.com/2009/09/blog-post_25.html
http://shayan2613.blogspot.com/2009/09/blog-post_12.html

//விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி ஹிட் லிஸ்ட் வாங்கணும் எண்ட அவசியம் உங்களுக்கு இல்லை.//
அது தான் சொல்லுறேனே.. ;) கோபப்பட்டால் எங்கே ஹிட்ஸ் கிடைக்கும்?

(அது உங்க ரேடியோ கும் நல்லதில்லை//
வானொலியில் இப்படி என் தனிப்பட்ட கருத்தை திணித்தால் அது தான் தப்பு. புரிந்து கொள்ளுங்கள். இது லோஷனின் வலைத்தளம் தவிர வெற்றியினது தளம் அல்ல.. ஊடகவியலானான நீங்கள் இதை மிகத் தெளிவாகப் புரிவது உங்கள் எதிர்காலத்துக்கும் நல்லது

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
வரோவுக்கு
லோஷனின் தொழில் வேறை பதிவு வேறை. அவர் இந்தப் பதிவை வெற்றியின் வலையிலோ அல்லது வெற்றியிலோ எழுதிச் சொல்லியிருந்தால் அது தப்பு. அதற்காக அவர் தன் ரசனையையும் விமர்சனத்தையும் விட்டுவிடமுடியுமா? கமல் விடயம் எல்லாம் இங்கே தேவையில்லை.//

நன்றி வந்தி.. இந்த வேறுபாடு விளங்காததனால் தான் நிறையப் பேருக்கு என் மேல் காண்டு.. ஹா ஹா

==================

IT Services said...
hi vijey jen padam pidekkaviddal ungal oruvaraum vanthu padam parkkachchollu kaddayappidekkavillai pidenthal parungal "silaper nalla peyar eduppatharkkakave pilai kannu pidekkirargal (paddu eduthi peyar vankupavargalai vida pilai kandu pidenthu peyar vankupavargal thaneppa enku athigam ) vidungal evarkalum erunthuddu pogaddum .

by suthan//


ஹா ஹா.. சிரித்தேன். நன்றி சுதன் வருகைக்கு

ARV Loshan said...

ஆதிரை said...
பாட்டைக் கேட்டு வந்த எரிச்சலை கொட்டித் தீர்ப்பதற்கு வரோ போல எனக்கு எழுதத் தெரியாது...//
ஹஹ. உங்கள் வேதனையும் குமுறலும் புரிகிறது.. ஷாந்தி.. ஷாந்தி..

===================
Suresh said...
Padichitu nalla sirichitan ha ha enaku puli urumbuthu pudichi irunthathu neenga sonnathuku apprum keta siripu agi pochu

padam partha mandai surunkuthu nu pattu//

:)

சுபானு said...

அன்பின் varo. மன்னித்துவிடுங்கள். உடனடியாக உங்களுக்கு பதிற்பின்னூட்டம் போடமுடியவில்லை.. நேரம் மிகவேகமாக நகர்ந்து கொண்டிருக்கின்றது.. ஆனாலும் லோசன் அண்ணா பதிலளித்துள்ளார்.. நன்றி அண்ணா..

சுபானு said...

@Anonymous
//
தம்பி நீர் சின்னப் பையன் சுபானு ....
if loshan is like a brother to u then u dnt need to support him in public posts .....
//

;).. வேலிக்குப் பின்னால் மறைந்து குரைக்கின்ற “பொட்டை” களுக்கு கருத்துக்கூறி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை..

ARV Loshan said...

விஜய் ரசிகன் said...
@ கார்க்கி said...

//நம்ம இஷ்டத்துக்கு வரிகளை மாற்றிப் போட்டு நகக்லடிக்க வேண்டியதுதான் லோஷன். இலங்கை நண்பர்கள் இருந்தால் அந்த பாட்டு மட்டும் நல்ல பாட்டா? அதையும் வேஸ்ட்டுன்னு சொல்ல வேண்டியதுதானே//

வரிகள் எதனையும் மாற்றவில்லை, பாட்டை ஒழுங்காக தெளிவான சிடியில் கேளுங்கள் பாடலில் அப்படித்தான் வருகின்றது. முதலில் பாடியவர்கள் நிறுத்தி நிதானமாகப் பாடவேண்டும். இலங்கையர்களின் பாடல் பழைய இலங்கைப் பாடல் ஒன்றின் காப்பி என்பதை லோஷன் தெளிவாக ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறார். //

நம்மவர்களின் பாடலின் கொப்பி என்பதை விட நம்மவர்கள் உருவாக்கி கொடுத்துள்ளார்கள் என்பதே பொருத்தம்.


//இனி கொஞ்ச காலம் வேட்டைக்காரன் இல்லாமல் உங்க ரேடியோ வேலைக்காவ்து சகா. பதிவு போடுமுன் யோசிச்சிட்டு போடுங்க. இந்த பாடல் எல்லாம் வெற்றிபெறும்போது அட நல்லாத்தானே இருக்குனு யோசிப்பிங்க. அது சரி வெளிய சொன்னாத்தானே//

ஐயா அறிவுக் கொழுந்தே ஒருவரின் தொழில் வேறை வலைவேறை. லோஷன் ஒலிபரப்புகின்றாரோ இல்லையோ அவர் அங்கிருக்கும் விஜயின் விசிலடிச்சான் குஞ்சுகளை திருப்திப்படுத்த தனக்கு பிடிக்குதோ பிடிக்கவில்லையோ ஒலிபரப்பத்தான் வேண்டும். எப்படியும் சன் வேட்டைக்காரனை சன் நியூஸ் போன்ற கருமங்களில் விளம்பரம் செய்து செய்தியாக அறிவித்து வெற்றிப்படமாக மாற்றிவிடும் குருவிக்குச் செய்தது போல் இதுவும் நிகழும்.//

சரியாக சொன்னீர்கள்.. தொழில் வேறு, பதிவுலகம் என்ற பொழுதுபோக்கு வேறு

//அதுக்குத்தானே பாட்டே கேட்காம இந்த பதிவு//

எங்கப்பன் குதிருக்குள் இல்லை, நீங்கள் பாட்டுகேட்காமல் படம் பாராமல் விமர்சனம் எழுதுகிறது போல் நினைத்துவிட்டீர்கள்.//

கார்க்கி அப்படியில்லை என நம்புகிறேன்..

நன்றி விஜய் ரசிகன்.. உங்களுக்கு விஷயம் விளங்கியிருக்கு.. விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் உங்கள் மனதை வாழ்த்துகிறேன்

ARV Loshan said...

SIRUVAN said...
பட்டை அண்ணை....
நீங்க இப்பவே முக்காவாசி விமர்சனம் எழுதி முடிச்சிருப்பிங்களே....
படம் வந்த உடன லேட் பண்ணாமல் டக்கெண்டு போஸ்ட் பண்ணிடுங்க.....//

வழமையான விஜய் படம் தானே என்று தானே சொல்ல வர்றீங்க?
நான் ஒன்றும் டெம்ப்ளேட் பட விமர்சனப் பதிவர் இல்லை சிறுவனே.. அதுக்கு வேறு பலர் இருக்கிறார்கள்.. :)

ஆனா பாருங்க படத்துக்கு கன சனம் போகும்.. அதில அரைவாசி நக்கலடிக்குறதிற்ற்கு தான் போகுது (புல்லட் பாண்டி கூட நக்கல் விமர்சனம் எழுத்தான முதல் ஸோ போறார் போல..) அது தெரியாமல் பயபுள்ள பட்டய கிளப்பபோது...//
:) உங்களுக்கு புரியுது

===============
Anonymous said...
போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன? கைதி - கமல் ரஜினிய பார்க்கணும் போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா விஜைய பார்கிறீயா?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

Rotfl

Nanthu

//

tx Nanthu.. lol

ARV Loshan said...

VETTI PAYAL said...
வாகீசன்
//இப்படியும் ஒரு கற்பனை உலகம் இருப்பது சினிமா ரசிகர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை//

இது கற்பனை உலகம் ஒன்றுமில்லை வாகீசன், எந்த துறையிலும் யாரும் திறமையின்றி முன்னேற முடியாது. விஜய் ஒரு superstar அளவிற்கு பேசப்படுவதற்கு அவரிடம் ஒன்றுமின்றி வந்திருக்க முடியாது. ஒரு தனி மனிதன் தன்னை சுற்றி இவ்வளவு ரசிகர்களை சேர்த்து இருப்பது பெருமை பட வேண்டியது. அதை விடுத்து விஜய் ரசிகர்கள் என்றால் அவர்கள் வெறியர், முட்டாள் என கூறுவது அபத்தம்.//

சரி..

சின்ன குழந்தைகள் பலரை தன் ரசிகராக கொண்டவர் விஜய். குழந்தைகள் மனதில் இடம் பிடிப்பது எளிதல்ல. ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொரு style இல் நடிப்பார்கள். காமெடி, ஆகஷன், செண்டிமெண்ட், டான்ஸ் என எல்லா திறமையும் கொண்டவர் என்பதை உங்களால் ஏற்று கொள்ள முடியாதா?//

ஏற்றுக் கொள்கிறேன்.. ஆனால் சின்னக் குழந்தைகள் மட்டுமிலையே படம் பார்க்கிறது.. உங்களை,இதர எங்களைப் போல இளைஞர்கள் நல்ல படங்களை ரசிப்போரை எப்படி திருப்திப் படுத்துவார்?



VETTI PAYAL said...
வாகீசன்

//அவர் நடிகர் என்றே முடிவிற்கு நீங்கள் வந்தபின்னர் உங்களிடம் என்னத்தைப் பேசுவது//

அட சாமி நடிகராக இல்லாமல் தான் இன்று 50 படங்கள் நடித்து 40 ஆயிரத்திற்கு மேல் ரசிகர் மன்றங்களை கொண்டிருக்கிறார் என்றால் விஜய் மந்திரவாதி போல.//

வாகீசன் நடிகர் என்று சொன்னது சிவாஜி,கமல்,சூர்யா, அப்படி.. இப்போ உதாரணத்துக்கு விஷால்,சிம்பு,பரத் இவர்களை எப்படி சொல்லலாம்? அப்பிடித் தான் வாகீசனின் கேள்வி என நினைக்கிறேன்..

கார்க்கிபவா said...

என்னமோ போங்க சகா.. :) கேட்கனும்ன்னா நானும் கேட்பேன்.. இது பாடல் விமர்சனம் தானே.. இதுல் ஏன் விஜய்க்கு அதிக பாதிப்பு? இசையமைப்பாளர், பாடலாசிரியர் பற்றி எழுதலாமே?

இதுல விஜய் நடிகனே இல்லைன்னு வேற சொல்றாங்க..

கந்தசாமி நல்ல படம்ன்னு நீங்க சொன்னப்ப, உங்கள் மொக்காம விட்டது தப்பு. அதான் நல்ல பாட்டு எதுன்னு கூட தெரியாம போச்சு :)))

ARV Loshan said...

கோப்பாய் பொடியன் said...
நான் நடிச்சால் தாங்கமாட்டாய்.......-விஜய்

வேட்டைக்காரன் பாட்டுகள் கிளம்பி காதுகள் எல்லாம் புழுதியை கிளப்பி கொண்டிருப்பது நீங்கள் எல்லாம் அறிந்ததே...அதிலையும் பாருங்க நம்ம விஜய் அண்டனி தான் இசை... என்னதான் நல்ல இசையமைப்பாளராக இருந்தாலும் பாடல்கள் ஹீரோவிற்க்கு ஏற்றமாரி அமைய வேண்டும் என்பதால் தான் இந்த எவெக்ட்...

விசயம் என்னவெண்டால்,..
விஜய் நடிக்கும் படங்கள் பார்த்து நொந்து வெந்து புழுங்கி புண்ணாக்காகி இருப்பது கண்டு விஜய் ஒரு பாடல் பண்ணியிருக்கிறார்..
நான் நடிச்சால் தாங்கமாட்டாய் எண்டு.. உன்மையில் அது நான் அடிச்சால் தாங்கமாட்டாய் என்பது.. தான்...
இது குறித்து கபிலனிடம் பேட்டி கண்ட குமுதம் குழுவினர்,

கேள்வி: எவ்வாறான சந்தர்பத்தில் இப்படி எண்ணங்கள் வந்தது? "நானடிச்சால் தாங்கமாட்டாய் நாலு மாசம் தூங்கமாட்டாய்" உண்மையில் அற்புதமான வரிகள்

கபிலன்: அது வந்துங்க.. கனகாலத்திற்க்கு பிறகு நேரம் கிடைச்சுது.. அப்பதான சும்ம வில்லு படம் பார்த்து மண்டை விறைச்சு போய் உட்காந்து இருந்தன். அப்ப தான் விஜய் அண்டனி குரூப் விஜய் பாடல் எழுதி தரசொல்லி கேட்டாங்க..

நான் சொன்னன் "அது தான் எல்லாரும் எழுதலாமேப்பா......... விஜயிண்ட விசிலடிச்சான் குஞ்சுகளை பிடிச்சி எண்டாலே எழுதுவாங்களே...... சரி சரி படத்துக்கு என்ன பேர்?

வேட்டைகாரன் ஸார்

அப்ப வேட்டைகாரன் வாறாண்டா வேட்டைகாரன் வாறாண்டா வேட்டைகாரன் வாறாண்டா எண்டு கத்தி கததியே ஒரு பாட்டை போடலாம்...

இல்ல ஸேர் பிளாங் ஆக இருக்குது...

அப்ப சும்மா புலி உறுமுது நரி உறுமுது எண்டு கத்திப்போட்டு பிறகு வேட்டைகாரன் வாறாண்டா எண்டு கத்தினா சரி...

இல்லை ஸேர் கொஞ்சம் மொடேர்னா.. பார்க்கலாமே...

அப்ப இடைக்கிட உங்கட பானில விளங்காத வார்தைகளை போடவேண்டியது தானே...........

அப்ப இடைக்கிட சமஸ்கிரத சொல்லுகளை போடுவமா?

என்ன சம்மந்தமே இல்லாமல் சொல்லுறீங்கள்.. சரி சரி விஜய் தானே பரவாயில்லை.. நெஃஸ்ட்..

இதெல்லாம் நடிச்சு எண்டு மனதுக்குள்ள புண்பட்டு விட்டு... அடுத்த பாடல் பற்றி யோசிக்கும் போது தான் சமீப காலமாக இவனால் பட்ட வேதனைகளை பாடால் வடித்தால் என்ன எண்டு கேட்டேன்..

அதுண்ட நாகரீகமான வடிவம் தான் நானடிச்சால் தாங்க மாட்டாய் நாலு மாதம் தூங்க மாட்டாய் என்பது...

ஆஹா அருமை.....//

ஹா ஹா.. வயிறு வலிக்க சிரித்தேன்.. கோப்பாய் பையன்.. இது உங்கள் படைப்பாக இருந்தால் பாராட்டுக்கள்..

ARV Loshan said...

Sinthu said...
அண்ணா வானொலியில் இன்று நீங்க கேட்ட கேள்விக்கு விஜய் ஐப் பற்றி தப்பாகப் பேசினால் பிடிக்காது என்று பலர் சொல்லியிருந்தார்கள். இந்தப் பதிவைப் பார்த்தால் என்ன செய்வார்களோ.. நீங்க தான் எதுக்குமே தயங்காத சிங்கமாச்சே..

==========

Sinthu said...
நல்ல தாக்குதலும் கூட... நல்லாவே இருக்கு..//

நன்றி சிந்து உங்கள் அக்கறைக்கு.. :)
விஜய்க்கு ஆதரவு அதிகம் தான்.. அதுக்காக சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்லாம இருக்க முடியுமா?

=================

Anonymous said...
//போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன? கைதி - கமல் ரஜினிய பார்க்கணும் போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா விஜைய பார்கிறீயா?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்

Rotfl

Nanthu
//


இது tamilcinema.com இல் இப்படி வந்தது:

தூக்கில் போடும் முன் கைதியிடம்,

போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?
கைதி - இளைய தளபதியை பார்க்கணும்
போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா சின்னத் தளபதியை பார்க்கிறீயா?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்//

ஓகோ அப்பிடியா? சிரித்தேன்.

ARV Loshan said...

கார்க்கி said...
என்னமோ போங்க சகா.. :) கேட்கனும்ன்னா நானும் கேட்பேன்.. இது பாடல் விமர்சனம் தானே.. இதுல் ஏன் விஜய்க்கு அதிக பாதிப்பு? இசையமைப்பாளர், பாடலாசிரியர் பற்றி எழுதலாமே?//

சகா, அவர்கள் பற்றியும் சொல்லி இர்க்கேனே.. விஜய் படம் என்றால் அவர் தானே பாடல்களிலும் விஸ்வரூபமாக தெரிகிறார்.. ;)
உதாரணம் - எம் ஜி ஆர ,ரஜினி, கமல் படப் பாடல்கள் போல.. (உதாரணத்தில் சந்தோசப் பட்டிருப்பீர்களே சகா)


இதுல விஜய் நடிகனே இல்லைன்னு வேற சொல்றாங்க..//
:)

கந்தசாமி நல்ல படம்ன்னு நீங்க சொன்னப்ப, உங்கள் மொக்காம விட்டது தப்பு. அதான் நல்ல பாட்டு எதுன்னு கூட தெரியாம போச்சு :)))//
புரிந்தது சகா.. அப்பவே மொக்கி இருந்தாலும் இதே போலத் தான் கூலாக இருந்திருப்பேன்.. ;) ரசனைகள் மாறுபடும்.. தவறில்லை

கரன் said...

---------------------------------
வந்தியத்தேவனின் 'வேட்டைக்காரன், அம்மா பகவான் சில எதிர்வினைகள்' பதிவின் கருத்துப்பகிர்வில் என்னால் எழுதப்பட்டது.
உங்கள் பார்வைக்காக,
----------------------------------

/ கமல் ரசிகன் said...
///

பாடல்கள் ஹிட் ஆகுதோ இல்லையோ, வேட்டைக்காரன் இப்படித் தான் இருப்பான் என்று புரிஞ்சுகிட்டீங்களா?

பாவம் இயக்குனர்.. விஜய் ரசிகர்கள் பப்பாவம்..

///

இது என்ன பாடல் விமர்சனமோ வந்தி?????????? :))

4:02 PM, September 28, 2009//


-----------------------------------
LOSHAN said...
//அதுவும் விமர்சனம் தான்.. :)//

நீங்கள் மட்டும் பாடல் விமர்சனத்தில் விஜயின் வரவிருக்கும் படம் பற்றியும், விஜயின் அரசியல் பற்றியும்(அதில் உண்மையில் என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பதே ஒருவருக்கும் புரியவில்லை) இணைத்து விமர்சனம் என்ற பெயரில் எழுதுவது சரியாயின், உங்களது பதிவுலகத்துறையையும் உங்களது ஒலிபரப்புத் துறையையும் இணைத்துக் கருத்துக் கூறுவதிலும் என்ன தவறிருக்க முடியும்.
ஏனென்றால், நீங்களும் விஜய் போல பிரபலமான ஒருவர்தான்.
வந்தியத்தேவன் கூறுவதுபோல் நீங்கள்(லோஷன்) இலங்கையில் மாத்திரம் பிரபலமான ஒருவரல்ல (நீங்கள் பதிவுலகில் களம் அமைக்க முன்னர்). உலக நாடுகளிலுள்ள (இலங்கையைச் சேர்ந்த) பதிவர்களால் அறியப்பட்டவர்.

விஜய் நடிகராக இருப்பதால் தான், அவரது சகல நடவடிக்கைகளையும் நாம் ஒன்றாக விமர்சிக்கின்றோம்(சரியோ பிழையோ).
அது போலத்தான் நீங்களும் ஒலிபரப்பாளராக இருப்பதால் உங்களது எல்லா நடவடிக்கைகளும் ஒன்றாக விமர்சிக்கப்படலாம்.

ஆகவே, ஒரு வகையில் வந்தியத்தேவன் சொல்வது சரியோ?
//வலையில் எழுதும் லோஷன் வேறை, வானொலி அறிவிப்பாளர் லோஷன் வேறை என்பதை ஏனோ சில விளங்கிக்கொள்ளவில்லை//
இதை இப்படி மாற்றலாம்.
நிஜத்தில் உள்ள விஜய் வேறு, படவுலகில் உள்ள விஜய் வேறு என்பதை ஏனோ சிலர் விளங்கிக்கொள்ளவில்லை.

லோஷன், நீங்கள் எங்கள் நெஞ்சில் நிறைந்தவர். அதனால் தான் விமர்சிக்கப்படுகிறீர்கள் ரஜினி, கமல், விஜய்.....போன்றவர்கள் போல்.

தொடருங்கள்.

ARV Loshan said...

கனககோபி said...
2009 இன் மிகப்பெரிய வெற்றிப்படமான வேட்டைக் காரனை நக்கல் செய்ததற்காக உங்களை அப்பாவிகள் சங்கத்தின் சார்பாக கண்டிக்கிறேன்...//

இப்ப நான் என்ன செய்யனும்? மன்னிப்பு கேக்கணுமா? ;)

வேட்டைக்காரன் படத்தின் விநியோக உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதால் எப்படியும் அவர்களின் தரவரிசையில் முதலிடம் வேட்டைக்காரன் தான்.
பின்பு சன் தொலைக்காட்சியின் விமர்சனங்களின் படியும் வேட்டைக்காரன் அசத்தலாக இருக்கும்.
பின்னர் அவர்களின் அறிக்கைகளின் படி வேட்டைக்காரன் 200 நாள் ஓடும்...
இதைவிட வேறென்ன வேண்டும்???//
:) மற்றொரு மாசிலாமணி? காதலில் விழுந்தேன்??

ARV Loshan said...

Anonymous said...
விஜய் ரசிகன் said...
//பாட்டை ஒழுங்காக தெளிவான சிடியில் கேளுங்கள் பாடலில் அப்படித்தான் வருகின்றது.//

நானறிந்து பாடல் கேட்ட ஒருவர் கூட "நான் நடிச்சா தாங்க மாட்டே.." வரி வருவதாகச் சொல்லவில்லை. அது லோசனின் நகைச்சுவை உணர்வின் வெளிப்பாடு!//

:)

விஜய் ரசிகன் said...
//முதலில் பாடியவர்கள் நிறுத்தி நிதானமாகப் பாடவேண்டும்.//
பாடகர்(சங்கர் மகாதேவன்) சரியாகத்தான் பாடியிருக்கிறார். நிறுத்திப் பாடுவதென்றால் எவ்வளவு நேரம்?//
இந்தக் கேள்வி நல்லா இருக்கே? ;)


விஜய் ரசிகன் said...
//எப்படியும் சன் வேட்டைக்காரனை சன் நியூஸ் போன்ற கருமங்களில் விளம்பரம் செய்து செய்தியாக அறிவித்து வெற்றிப்படமாக மாற்றிவிடும் "குருவிக்குச் செய்தது போல் இதுவும் நிகழும்".//

குருவி Sun Pictures படமல்ல..//
உண்மை.. குருவி அவங்க.. வேட்டைக்காரன் இவங்க.. நடக்கட்டும்.

விஜய் ரசிகன் said...
//ஆனால் இப்படி தனிமனிதக் தாக்குதல் நடத்தும் விசிலடிச்சான் குஞ்சல்ல.//

எனக்கொரு சந்தேகம்.
1. தனிமனிதத் தாக்குதலே பிழையா?
2. தனிமனிதத் தாக்குதலை சற்றுக் கறாரான வார்த்தைகளோடு செய்வதுதான் பிழையா?

இதற்குப் பதில், 2 ஆவது எனில்,
தனிமனிதத் தாக்குதலை சற்று நகைச்சுவையான வார்த்தைகளோடு செய்வதுதான் சரியா?
உதாரணங்கள்:(நன்றி லோசன்)
---
இளைய தளபதி,நாளைய இந்தியப் பிரதமர்(எதை யோசிச்சாலும் பெரிசா யோசிக்கனுங்க்னா..) விஜய் அவர்கள்(மரியாதைங்க்னா)...
---
இன்னொரு பாடல் மகா மெகா கொடுமை..

நானடிச்சா தாங்க மாட்டாய்.. நாலுமாதம் தூங்க மாட்டாய்.. இது தான் கபிலன் எழுதிய ஆரம்ப வரிகள்..

ஐயோ அம்மா.. கேட்டு முடிக்க முதல் இரத்தம் கக்கி செத்துவிடுவேனோ என்று பயம் வந்துவிட்டது..

எனக்கொரு பெரிய சந்தேகம்..
கபிலன் எழுதியது "நான் அடிச்சா தாங்க மாட்டேயா?"
அல்லது
"நான் நடிச்சா தாங்க மாட்டேயா?"

----------------

அல்லது
தனி மனிதத் தாக்குதலே (எழுத்தில்) பிழையா???????????????//

அனானியாக வந்தாலும் ஒரு கை தேர்ந்த,பிரபல,அனுபவம் வாய்ந்த பதிவராகத் தான் உங்கள் எழுத்துநடையிலே புலப்படுத்துகிறீர்கள்..

பதிவுலகத்துக்கு வந்த பிறகு தனி மனித தாக்குதல் பிழையாவது..மண்ணாவது.. எல்லாரும் இதையே தானே செய்யுறாங்க.. கலைஞரும்,கமலும்,விஜயும்,லோஷனும் இங்கே இவ்விடயத்தில் ஒன்று தான்.. :)

ARV Loshan said...

SShathiesh said...
உங்களுக்கு தேவதையை சந்திக்கும் வாய்ப்பொன்றை வழங்கியுள்ளேன்.என் தளத்துக்கு வந்து சந்தித்து பாருங்கள்.
http://sshathiesh.blogspot.com/2009/09/blog-post_24.html//

அடப்பாவி இங்கே ஒரு ரனகலமே நடக்குது.. இவனொருத்தன் வந்து தேவதையையும் தேவாங்கையும் கூப்பிடுறான்.. :)
வருகிறேன் சதீஸ்..
(விஜயின் தீவிர ரசிகரின் மௌனம் சொல்வது என்ன?)

===============

அஜுவத் said...
விஜயோட அப்படி என்ன கோபம்.... இன்னும் ஒரு கிளு கிளு படம் போட்டிருக்கலாமே??.... அண்ணா இந்த photo??........ இது வேட்டைக்காரன் படத்தில வார கட்டமா???//

அவர் என் நண்பர் போல.. ;)
இன்னொரு கிளு கிளுப்பா.. இல்லை படம் வாரவரைக்கும் வெயிட் பண்ணுங்க,.,
தெரியல. நெட்டில் கிடைத்தது போட்டேன்..

Unknown said...

ஆதிரை சொன்னது
///பாட்டைக் கேட்டு வந்த எரிச்சலை கொட்டித் தீர்ப்பதற்கு வரோ போல எனக்கு எழுதத் தெரியாது...///

இந்தாள் அடிக்கிற நக்கலுகளை என்னால நம்பவும் முடியேல்லை நம்பாமல் இருக்கவும் முடியேல்லை. பள்ளிக்கூடக் காலத்தில பிள்ளைப் பூச்சி மாதிரி இருந்த மனிசன் அடிக்கிற comment பாத்து அடிக்கடி விசர் மாதிரி சிரிக்கிறன்... ஐயோ ஐயோ..

மற்றபடி... ஓவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு feelings.. இதுக்கெல்லாம் போய் லோஷன் அண்ணாவத் திட்டி... போங்கப்பா

கரன் said...

கனககோபி said...
வேட்டைக்காரன் படத்தின் விநியோக உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதால் எப்படியும் அவர்களின் தரவரிசையில் முதலிடம் வேட்டைக்காரன் தான்.
பின்பு சன் தொலைக்காட்சியின் விமர்சனங்களின் படியும் வேட்டைக்காரன் அசத்தலாக இருக்கும்.
பின்னர் அவர்களின் அறிக்கைகளின் படி வேட்டைக்காரன் 200 நாள் ஓடும்...
இதைவிட வேறென்ன வேண்டும்???//

லோஷன் said...
//:) மற்றொரு மாசிலாமணி? காதலில் விழுந்தேன்??//

லோஷன், இதுவரை இந்த வருடத்தின் மிகப் பெரும் வெற்றிப்படம் எனக் கருதப்பட்ட அயன் கூட Sun Pictures திரைப்படம் தான்.
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அயனின் வெற்றியும் பொய்யெனக் கருத வேண்டியுள்ளது.
ஆனால், உண்மையில் அப்படியல்லவே.

எதிர்காலத்தைக் கணிக்குமளவு நீங்கள் தீர்க்கதரிசியாக இருப்பது கண்டு மகிழ்ச்சி.

ஆனால், அண்மையில் தங்கள் கணிப்புகளும் சற்றுப் பிசகுகின்றனவே. கவனித்தீர்களா...(நான் துடுப்பாட்டக் கணிப்புகளைச் சொன்னேன்)
(
மற்றொரு மாசிலாமணி? காதலில் விழுந்தேன்?? - முடிவில் கேள்விக்குறி இட்டதன் மூலம், இது தங்கள் முடிவல்ல, கேள்வி(எதிர்பார்ப்பு) என அறிந்து கொண்டேன்.
)

கருத்துகள் தொடரும்...

Ahamed Nishadh said...

சபா...
நல்ல காமெடியா எழுதியிருக்கிங்களே..

உண்மைய சொல்ல போனா விஜே படம்னு சொன்னாலே ஐயோ அம்மா தாங்க முடியலையே என்ற reaction. இதுல இப்படி பாட்டு வேறயா. தாங்கமுடியதுபா.

அண்ணே ஒரு வேண்டுகோள். தயவு செய்து இந்த படத்துக்கு உங்கள் வானொலி நிலையம் ச்போன்சொர் பண்ணுறதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இல்லயென்றால் இந்த வீடியோவில் உள்ளது போல நடந்துவிடும். உங்களுக்கு தான் பழியும் சேரும்!! http://www.youtube.com/watch?v=9S4cEcwV0IA

ஐயோஒ ஐயோஓஒ!!!!!!!

KANA VARO said...

LOSHAN said...
//தொடர்ந்து வாசிக்கிறீங்க என்று விளங்குது..//

நான் தொடர்ந்து உங்க பதிவுகளை வாசித்து வாறன். ஆனால் இதுவரை எந்த பதிவுக்கும் பின்னுட்டம் இட்டதில்லை. (உங்களுக்கே தெரியும்) "விஜய் நடிச்சா தாங்கமாட்டோம்" வேண்டும் எண்டே வம்பிழுப்பது போல் தெரிந்தது. பாடல்களை பற்றி மட்டும் கதைத்திருக்கலாம்... (எனது அபிப்ராயம்) விஜயை பற்றி கதைத்து விஜயை உங்களுக்கு அறவே பிடிக்காது என்று காட்டி விட்டீர்கள்.

வந்தியத்தேவன் said...
//வலையில் எழுதும் லோஷன் வேறை, வானொலி அறிவிப்பாளர் லோஷன் வேறை என்பதை ஏனோ சில விளங்கிக்கொள்ளவில்லை//
LOSHAN said...
//நன்றி வந்தி.. இந்த வேறுபாடு விளங்காததனால் தான் நிறையப் பேருக்கு என் மேல் காண்டு.. ஹா ஹா//
வலையில் எழுதும் லோஷன் வாமலோஷன் , வானொலி அறிவிப்பாளர் லோஷன் பாமலோஷன் ஆக இருந்தால் எங்களுக்கு கவலை இல்லையே... இரண்டும் A.R.V லோஷனே... இது பலருக்கு விளங்க வில்லையே... (விதண்டாவாதம் கதைக்கவில்லை) நான் விஜய் ரசிகன் and லோஷன் ரசிகன் என்னை திருப்பி படுத்த வேண்டிய கடமையும் லோஷன் அண்ணாக்கு உண்டு... அது தான் //ரேடியோகும் நல்லதில்லை// என்றேன். பல விஜய் + வெற்றி ரசிகர்களுக்கு ஒரு வெறுப்பு வரும் (பதிவை வாசித்தவர்களுக்கு)
LOSHAN said...
//எல்லா தரப்பு ரசிகரையும் திருப்தி செய்யும் கடமை என் போன்ற ஒளிபரப்பாளனுக்கு இருக்கின்றதே.. //
அது பதிவுக்கும் பொருந்தும். லோஷன் எனும் நபர் ஒருவரே... எல்லோரும் பிரித்து பார்க்க மாட்டார்கள். (அதி மேதாவிகளை தவிர)

//அதை நீங்கள் வரோ என்ற வளர்ந்துவரும் ஊடகவியலாளனுக்கும் சொல்ல வேண்டும்..
கொஞ்சம் உங்கள் பதிவுகளையும் மீள வாசியுங்கள்.. புரியும் //
நீங்கள் ஊடகவியலாளனா? ஒலிபரப்பாளனா? அல்லது ஊடகவியலாளன் + ஒலிபரப்பாளனா? பலருக்கு புரியவில்லை நீங்களே தெளிவு படுத்துங்கள். ஊடகவியலில் நடுநிலை என்பது ஏதோ ஒரு பக்கம் சார்ந்தது என்பது உங்களுக்கு தெரியும். நான் வளர்ந்துவரும் ஊடகவியலாளன் என் பதிவுகளை கணக்கெடுக்க மாட்டார்கள் ஆனால் உங்களின் பதிவில் குற்றம் கண்டு பிடிக்க பலர் இருப்பார்கள் (நானும்)
http://shayan2613.blogspot.com/2009/09/blog-post_12.html
இதற்கான விளக்கம் அப்பதிவிலேயே இருக்கு.. 'எனக்கு லாபமோ நட்டமே இல்லை'
http://shayan2613.blogspot.com/2009/09/blog-post_25.html
இது வேணுமெண்டு போட்டது... (என்ன பண்றது ஹி ஹி)
*****என் பதிவை வாசிச்சதுக்கு நன்றி அண்ணா*****

வந்தியத்தேவன் said...
//அண்மைக்காலமாக வலையுலகில் சிலர் கருத்துகளை எதிர்க்கருத்துகளால் வெல்லமுடியாமால் அல்லது விவாதிக்கமுடியாமல் சில எழுந்தமானமான கருத்துகளைச் சொல்கின்றார்கள்.//
பேச்சு பேச்சா இருந்தாலும் Face to Face தான் எனக்கும் பிடிக்கும் அதுதான் அனாமி போல் எழுதவில்லை... யாரையும் விமர்சித்தும் நான் பெரியவன் ஆக முயற்சிக்கவும் இல்லை

Anonymous said...

THE TOP HOT ONES - TOP 10 SONGS

Rank-01
Song: Karikalan
Music director: Vijay Antony
Singer(s): Surchith, Sangeetha Rajeswaran


Ahoy! Vijay Antony’s impish creativity to the fore here! A rollicking number with teasing lyrics articulated well by the singers. The female chorus is absolutely delightful. Knowing Vijay’s dancing skills, we can expect a visual treat in this song.


Rank-02
Song: Dekho Dekho
Music director: Harris Jayaraj
Singer(s): Suvisuresh, Sandhya, Sricharan (Rap Vocals)

A very interestingly assembled song, with a good potential for dramatic choreography. Appears to feature a large cast. Good rhythms, sitar and other delicate musical notes keep this song alive till the end.

Rank-03
Song: Allah Jaane
Music director: Shruti Haasan
Singer(s): Kamal Haasan

Shruti has done well in the background music department for this movie. This song doesn’t feature in the movie, like others. But it has been sensitively put together by her. Haunting to listen to.

Read more>>
Use below link:

http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-4/top-ten-songs/vettaikkaran.html

Anonymous said...

Vijay our next CM..

http://veliyoorkaran.blogspot.com/2009/10/blog-post_07.html

True Vijay Fan

ப்ரியா பக்கங்கள் said...

அடேங்க் கொய்யால வேட்டை காரனுக்கு பின்னால இவ்வளவு ரண களம் நடந்து இருக்கு ....

வேட்டைக்காரன் படக்கதை:

பண்டிக் காய்ச்சல் நோயால விஜய்யோட குடும்பமே மாண்டு போகுது. அதுக்குப் பழிவாங்க விஜய் உலகத்தில உள்ள எல்லாப் பண்டிகளையும் வேட்டையாடுகிறார். கிளைமாக்ஸ்ல நூறு பண்டிகளை ஒரே நேரத்தில் ஒரே ஒரு பன்ச் டயலாக் சொல்லி கொல்ல முயற்சிக்கிறார். தொண்ணூற்று ஒன்பது பண்டிகள் உடனே செத்து விழ, மீதி ஒரு பண்டி மட்டும் செவிடு எண்டு கண்டு பிடிப்பதுதான் விஜயின் மதியூகம். அந்த ஒரு பண்டியையும் த்ரில்லா ஒரு டான்ஸ் ஆடி கொன்று விடுவது படத்தைப் பார்பவர்கட்கு நுனிக் குண்... இருக்க வைக்கிறது! ஆல் இன் ஆல் தியேட்டரில கதிரையே தேவைப் படாது!

முக்கியம் : வெளியில சொல்லி போடாதிங்க அடுத்த படத்துக்கு கதையா எடுத்தாலும் எடுதிடுவான்கள். கவனம் :)

ஆதிரை said...

ப்ரியானந்த சுவாமிகள் ரணகளத்திலும் கிலுகிலுப்பூட்டுகிறீரே.....

Anonymous said...

'விஜய் முரசு' மாத இதழை இப்போது www.emagaz.in இல் இலவசமாக படிக்கலாம்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner