October 17, 2009

ஆதவன் - இன்னொரு குருவி??

உலகம் முழுவதும் தீபாவளி தினத்தன்று திரையிடப்படும் ஆதவன் திரைப்படத்தை ஒருநாள் முன்னதாகவே பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.

பாடல்கள் ஏற்கெனவே ஹிட்.. சூர்யாவின் தொடர்ச்சியான வெற்றிகள்.. அத்துடன் சூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள் பின் மன்னிப்பு.. நயனின் பிரபுதேவா காதல் சர்ச்சை..மாபெரும் வெற்றி பெற்ற தசாவதாரத்துக்குப் பின் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் படம்..குருவி பறக்காமல் மடங்கியபிறகு உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கின்ற படம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்களும் போட்டிக்கு வராமல் வேட்டைக்காரன் பின்தங்கியதால் ஏற்பட்ட வாய்ப்பும் ஆதவனை அசைக்க முடியாதவனாக மாற்றும் என்று பரவலாக நம்பப்பட்டது.

எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.

ஏற்கெனவே கதை ஓரளவு கசிந்திருந்தது..
சூர்யா பணத்துக்காக கொலை செய்யும் ஒரு அடியாள்.சரோஜாதேவி,நயன்தாரா குடும்பத்துக்குள் ஒரு கொலை செய்ய நுழைந்து காதல்வயப்பட்டு பின் மனம் மாறுவது தான் கதை என்று தகவல்கள் சொல்லியிருந்தன.
கொஞ்சம் கூட மாறுபடாமல் அப்படியே கதை..

கதை ரமேஷ் கண்ணாவுடையது.. அவர் இளையமான் என்ற கோமாளிப் பாத்திரத்திலும் வந்து சிரிக்கவைக்கிறார்.. (இளையராஜா பாதி..ரஹ்மான் பாதியாம்)

திரைக்கதை மற்றும் வசனம் கே.எஸ்.ரவிக்குமார்..

சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.

பட்டப் பெயர்கள் எதுவும் இல்லாத ஹீரோ என்ற நல்லபெயர் சூர்யாவிற்கு இருக்கும்போதிலும்,சிறுவயது சூரியாவின் புகைப்படங்கள் முதல் ஜோ-சூரியா அவர்கள் மகள் தியா உள்ள புகைப்படம் வரை காட்டி அவர் பெயரை காண்பிப்பது வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ..

நயன்தாரா,வடிவேல் ஆகியோருக்கும் அவர்களுடைய வழமையான ரசிகர்கள்..

Action திரைப்படம் என்பதை எழுத்தோட்டத்திலேயே அழுத்தமாக நிரூபிக்க முயன்றுள்ளார் இயக்குனர்.

படத்தொகுப்பு டோன்மாக்ஸ். பல இடங்களில் இவர் கைவண்ணம் மினுங்கினாலும் கொஞ்சம் அவசரம் தெரிகிறது.

சூர்யாவின் உடல் மொழிகளும்,முக பாவனைகளும் அசத்தல்.கட்டுமஸ்தான உடல் கம்பீரத்தை அள்ளித் தருகிறது.எனினும் அயனின் பாதிப்பு நிறையவே..இதனால் சில காட்சிகளில் ஏற்கெனவே பார்த்த அசதி..

அந்த அசதியைப் போக்கி திரைப்படத்தோடு இறுதிவரை எங்களை ஒட்டி,ஈர்க்க செய்பவர் வடிவேலு..நீண்ட நாட்களுக்குப் பிறகு திரைக்கதையோடு ஒட்டி வரும் வகையில் வைகைப் புயலடிக்கிறார்.

பல இடங்களில் வடிவேலு தன்னை மட்டுமே பார்க்கும் விதத்தில் centre of attractionஐ எடுத்துக் கொள்கிறார்.

சூர்யாவும் அவரும் சேர்ந்து சிரிக்கவைத்த அத்தனை இடங்களும் தீபாவளிப் பட்டாசுகள்.
பார்த்தீபனிடம் படும் அவஸ்தையை விட வடிவேலு அதிகம் பட்ட அவஸ்தை இந்த ஆதவனிலாகத் தான் இருக்கும்.
அந்தளவுக்கு சூர்யா மிரட்டுவதும் வடிவேலு மடங்கி அடங்குவதும் ரசனை மிகுந்த சிரிப்பு வெடிகள்..

பாலம்,வெடிகுண்டு,வீடியோ என்று தினுசு தினுசாக வடிவேலு மாடிக் கொள்வது புதுசு..
கிட்டத் தட்ட படத்தின் இரண்டாவது நாயகன் வைகைப் புயல் தான்..

நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..
எந்த உடையிலும் அழகாக நயனின் உடல்.. பாடல் காட்சிகளில் நயன் சும்மா உடலைக் குலுக்கி நடக்கவே திரையரங்கில் விசில்கள் பறக்கிறது..(இவ்வளவுக்கும் அநேகர் பள்ளி சிறுவர்கள்.. பிரபுதேவாவில் தப்பில்லை..அவரென்ன முனிவரா? )

உடல் கச்சிதமாக கட்டழகாக இருந்தாலும் கூட,முகம் என் இப்படி கிழடு தட்டிவிட்டது? கவலை? பதற்றம்? அளவுக்கதிக வேலை?

சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது.

நயன்தாராவுடன் ஒத்தைக்கு ஒத்தையாக ஒரு பாட்டில் குழுவோடு சேர்ந்து ஆட்டம் போடுகிறார்.. அடடா.. சிவாஜி,எம்.ஜி.ஆரின் ஆவிகள் பார்த்தாலும் ஆசைகொள்ளும். அதே கை,கண் அசைவுகள் தான் ரொம்பவே ஓவர்..
சரோஜாதேவியின் அளவுக்கதிக பூச்சலங்காரங்களைக் கலாய்க்கிறார்கள்.

காலஞ்சென்ற மலையாள நடிகர் முரளிக்கு படம் முழுக்க நிறைக்கும் கம்பீரமான பாத்திரம். மனிதரின் கண்களும் பேசுகின்றன.படத்தின் ஆரம்பத்திலேயே அவருக்கு அஞ்சலிகளைத் தெரிவித்துள்ளனர்.

ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்..

நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தபாபு.. பாடும் வானம்பாடியிலும் பின் புது வசந்தத்திலும் அசத்திய அந்த டிஸ்கோ கலைஞனா இந்தளவு வயக்கெட்டுப் போய் வில்லனாக?
போதை எவ்வளவு கொடியது??

கே.எஸ்.ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே நட்சத்திர அணிவகுப்பு என்பது போலே இதிலும் அனுகாசன், பெப்சி விஜயன்,ரியாஸ்கான், அலெக்ஸ், மனோபாலா, சத்யன் என்று வருகிறார்கள்..
சிலருக்கு மனதில் ஓட்டும் பாத்திரங்கள்..

வில்லன் ராகுல் தேவ் மிரட்டுகிறார்.. ஆனால் பெயரும்,பேசும் தமிழும்.கொல்கத்தவோடு ஒட்டவில்லை என்பது உறுத்தல்..

கே.எஸ்.ஆர் இயக்கும் படங்களில் உள்ள அவரது வழமையான டச்சுகள் மிஸ்ஸிங்.. நிறைய ஓட்டைகள்.. அடிப்படை லாஜிக் மீறல்கள்..

ரெட் ஜெயண்டோடு இணைந்ததோ என்னவோ குருவி போல பறக்க பல இடங்களில் சூர்யாவும் ஆசைப்பட்டுள்ளார். பொருந்தவில்லை..
அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?

கட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. துப்பாக்கிக் குண்டின் வேகத்துக்கு ஈடுகொடுத்து தோளில் குண்டடி தாங்குகிறார்.. கயிற்றிலே ஹெலிகொப்டர் வரை சென்று ஆகாய சாகசம் புரிகிறார்..குருவி பரவாயில்லை..
ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ?

சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம்.காட்சியமைப்பிலும் ஒளிப்பதிவாளர் ஆர்.கணேஷ் ஐஸ்லாந்தையும்,தென் ஆபிரிக்காவையும் தன காமராக் கண்களால் எடுத்து விருந்து படைக்கிறார்.

எனினும் முதல் பாதியில் டம டமவைத் தவிர மற்றைய இரு பாடல்களும் சுமார் ரகமே.. மூன்று ஹிட் பாடல்களுமே பிற்பாதியில் வருவது கதையோட்டத்தை இழுக்கிறது.

சண்டைக் காட்சிகள்,துரத்தும் காட்சிகளில் கனல் கண்ணன்,பிரெஞ்சு சண்டைக் கலிஞர் ஆகியோருக்கு ஈடு கொடுக்கிறது ஹரிஸ் ஜெயராஜின் இசையும்..

வடிவேலு இல்லாவிட்டால் படம் நுரை தள்ளி இருக்கும்.

எல்லாத் திருப்பங்களையும் எளிதில் யூகிக்கக் கூடியளவுக்கு பலவீனமான திரைக் கதை. தீபாவளிக்கு திரைக்கு கொண்டுவரவேண்டுமென்று அவசரப்பட்டிருப்பது தெரிகிறது.

கமலோடு செய்த வித்தியாச முயற்சிகளை சூர்யாவோடு செய்யப்போய் சூடுபட்டுள்ளார் இயக்குனர்.

பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா?)
எரிச்சலும் வருகிறது. பொருந்தவில்லை.

பல கிராபிக்ஸ் காட்சிகள் சொதப்பல்..
ஹொவ்ரா பாலம்,குளுமையான இயற்கைக் காட்சிகள்,பணத்தைக் கொட்டிஎடுத்த பாடல் செட்கள் என்பனவற்றை ஒளிப்பதிவாளர் சரியாக செய்தும் இவ்வாறான குளறுபடி கிராபிக்சினால் சில காட்சிகள் படுத்து விடுகின்றன.

சில வசனங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவை..

ஆரம்பத்தில் குழந்தைகளைக் கடத்திக் கொன்று உடல்பாகங்களை விற்பனை செய்யும்(நோய்டா விவகாரம்) கும்பல் பற்றி ஆராயவரும் நீதிபதியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கும் கேள்விகளும் அதற்கு சூடாகி நீதிபதி(முரளி) வழங்கும் பதில்களும் நடிகர்-பத்திரிக்கையாளர் விவகாரத்தின் பாதிப்பா?

(உன்னைப் போல பத்திரிகையாளர்களால் தான்யா எல்லாருக்கும் கெட்ட பெயர்.. எப்பிடி வேணாலும் கேள்வி கேப்பீங்களா? silly question)

வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..

ஆனாலும் எந்தவொரு இரட்டை அர்த்த வசனமும் இல்லாததால் பாராட்டுக்கள் வசனகர்த்தா ரவிக்குமாருக்கு..

நயன்தாராவின் கவர்ச்சியும் கல கல குடும்ப சூழலில் கொஞ்சம் மறைந்துவிடுகிறது..குடும்பப் பட்டாளங்களும் கலர்புல் பாடல்களும் ஹிந்தி படங்களை ஞாபகப்படுத்தினாலும் ஆபாசமில்லாத படம் என்பதால் குடும்பங்களோடு ரசிக்கத் தடையில்லை.. (மாசிலாமணியும் அப்பிடித் தானேங்கோ??)

இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..

தனது வழமையான பாணியில் இறுதிக் காட்சியில் வந்து கலகலக்க வைக்க முயன்றுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார்.. அவருடன் தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..

சிரிக்கவைக்கும் நடுப்பகுதி இருந்தாலும் வடிவேலுவும் பாடல்களும்,சூர்யாவின் துடிப்பும் இல்லாவிட்டால் ஆதவன்.. இயலாதவன்..

கலைஞர் டிவி புண்ணியத்தில் நஷ்டத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும்..
ஆனால் சூர்யாவின் 'திறமையான,மாற்று வழியில் வரும்' நடிகர் பெயர் காலி..

குருவியைத் தயாரித்த நிறுவனம் குடும்ப பூச்சு,காமெடி நெடி பூசி பறக்கவிட நினைத்துள்ள மற்றொரு குருவி???

ஆதவன் = குடும்பம்+காமெடி+குருவி??

பி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..
தாங்காது சூர்யா..
எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது

84 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

தியேட்டரில இருந்து ஷோ முடிஞ்சு போகும்போது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் எண்டு சொல்லிப்போனீங்கள்... ஆனா இப்பிடி இருக்கும் எண்டு ஆர் எதிர்பார்த்தது... கலகலப்பாப் போச்சுதுதான்.. இப்பிடி முடியும் எண்டு யாருக்குத் தெரியும்...

புல்லட் said...

ரவிக்குமார குனிய விட்டு கும்முறமாதிரி முடிச்சிருந்தாலாவது ஏதோ ஒரு அந்தார்த்ம திருப்தி கிடைச்சிருக்கும்... பயபுள்ள நம்ம கிட்ட பகிடி விட்டுட்டானே? ஆதவன் எயாரில போய் குண்டை குத்திவிட்டுட்டு வரும்போது பக்கத்துல யாரோ கேவிக்கேவி அழுதாங்க.. முடியல...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லா இருக்குன்னு சொல்ற மாதிரி தெரியுதே ஐயா..,

RJ Dyena said...

Aadhvan not upto the expected level....

i agree with all ur points anna....

ப்ரியா பக்கங்கள் said...

விடிய ஷோ பார்க்க டிக்கெட்டுடன் தூங்குகிறோம் தலைவா . அதுக்குள்ளே எங்களை பயபுடுத்றீங்கள்

மேவி... said...

அட பாவமே ....... அப்ப சூர்யா ஏமாற்றிவிட்டார்ன்னு சொல்லுங்க

FunScribbler said...

haha.. hey this is an awesome review! the kind of buildup that they gave for the 10 yr old child surya was atrocious. enaku vomitting sensation thaan varuthu!

surya has been getting into unnecessary troubles recently. :)

Aadhavan said...

The same kind of Review is alos available in:
http://www.supershowbiz.com/2009/10/aadhavan-review-new-tamil-movie-first.html

அஜுவத் said...

aathavan pathina muthal vimarsana katturaya irukkanum enru intha nadu rathiriyila pathiva poteengalo......

கார்க்கிபவா said...

லோஷன் மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..

//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?//

ஏன்? ரஜினி, அஜித்,விக்ரம் அட கமல் உட்பட யார் தான் தாண்டவில்லை? அது ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்?

//ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ?//

விஜய் செய்தால் அது அவர் தவறு. அதையே சூர்யா செய்தால் மற்றவர்கள் மேல் பழியா? ஏன் நடிக்கும்போது முடியாது என்று அவர் மறுத்து இருக்கலாமே? அயன் மட்டும்தான் ஹிட். வாரணம் ஆயிரம் இங்கே தோல்வி. கேபிள் சங்கரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் முன்பும் வேல் மட்டுமே சுமார் வெற்றி. மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் தோல்வியே. சூர்யாவுக்கு மாஸ் ஏறிக் கொண்டு வருவது என்பது உண்மைதான். அதனால்தான் இப்படி நடிக்கிறார். இதையேதான் விஜயும்,அஜித்தும் செய்கிறார்கள். சிங்கத்துக்கு பின் சூர்யா சூடுபட்ட பூனை ஆகாமல் இருக்க வேண்டுகிறேன்.

குருவி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதால் தலைப்பில் வைத்ததை ஏற்க முடிகிறது. ஆனால் தேவையில்லாமல் விஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.

புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்

Anonymous said...

I didn't expect these kind of reviews !
Its clear that Kamal Hassan is using KSR as associate director , but gives him director title at the END..young actors should avoid acting under his director - SURESH, ABUDHABI

தீப்பெட்டி said...

முழுக்க முழுக்க கார்க்கியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்..

இதே படத்தில் சூர்யாவுக்குப் பதில் விஜய் நடித்திருந்தால் உங்கள் விமர்சனம் எவ்வாறு இருந்திருக்குமென யூகிக்க முடிகிறது..

:(

Unknown said...

கிளம்பிற்றாங்கய்யா...கிளம்பிற்றாங்க...

நான் ரவிக்குமார் ஏமாத்த மாட்டார் எண்டெல்லே நினச்சன்...

சரி சரி...
பாக்க வேண்டிய படங்கள் லிஸ்ரில ஒர படம் குறைஞ்சிற்று.... ஹி ஹி ஹி....

Nirosh said...

இந்த ஹிரோக்கள் எல்லோரும் இப்படித்தான் போலிருக்கிறது.... கடைசியில் சூர்யாவும் சொதப்பிவிட்டார? ஆனால் கண்டிப்பாக நான் படம் பார்க்க முதலில் ஆர்வம் கொண்டது நம்ம வடிவேலுக்காகத்தான். அவர் ஜெயித்ததுல மிகவும் சந்தோசம்.. அப்போ படமும் மண்ணை கவ்வம கண்டிப்பா ஓடும் போலத்தான் இருக்கிறது....

நன்றி லோஷன் அண்ணா... நீண்ட நாட்களுக்கு பின் காத்திருந்து ஒரு நல்ல தீபாவளி பதிவு கொடுத்ததற்கு.....

Muruganandan M.K. said...

" தாங்காது சூர்யா..
எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது"

நல்ல ஆலோசனை

Anonymous said...

The Film is not up to the expected level
bt, full of enjoyment and a good commercial movie

We love Aadhavan and Suriya

Anonymous said...

நல்ல காலம் டொக்டரின்டை படம் வரவில்லை. இல்லாவிட்டால் கனபேருக்கு இலவசமாக பேதி மாத்திரை வழங்கப்பட்டு இருக்கும். அல்லா காப்பாத்தினான். படம் இளகின பப்படம் ஆனாதன் பிறகு வந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். வாழ்க டொக்டா்.

Unknown said...

///சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது///
இது கொஞ்சம் ஓவரான கடி. பாவம் நயன்ஸ்... என்ன செய்வது சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.

///ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்///
ஐயையோ... நவீன பார்ப்பான் சுனா தீனா சண்டைக்கு வரப்போறார் சூர்யாவோட... (சேச்சே. அவர் கமலோடதான் சண்டைபிடிப்பார்)

Anonymous said...

sir ungaluku vijaya pidikalana vitrunga aadhavan padathula aaram bichu ella padathukum vijaya ilukuringa bloggers unga ellorukkum vijaya iluthaathan hit varumna,othukonga.rajini,ajith,suryalam enamo award padam nadikira mathiri vijaya thakka vendiyathu.unga blogukae hit venumna vijaya ilukumbothu avaru masala padamla nadikirathu thappu ila

hamshi said...

Dewali nal valththukkkal

ஆ.ஞானசேகரன் said...

//நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.//

நல்லாயிருக்கோ ராசா

ஆ.ஞானசேகரன் said...

//பி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..
தாங்காது சூர்யா..
எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//

அப்படியா படம் பார்க்கலாமா வேண்டாமா?

Unknown said...

அடச்சா.. ரவிக்குமார் இப்படி பண்ணிட்டரே சார். இது குருவி மேரி எண்டு கூட சொல்ல ஏலாது. அதைவிட போர் அடிச்சுது எனக்கு. வடிவேலுவின் காமடி சிரிப்பே வரவில்லை...
கஷ்டபட்டு சூர்யவிட்கக ரசிக்க முடிந்தும் முடியவில்லை. இப்ப தளபதி படம் பார்த்திட்டு அப்பாடா நம்மலாத ரிலீஸ் பண்ணலாம் எண்டு நினைக்கேக்க அங்கால ஆரோ பேராண்மை பக்கம் இருந்து மிரட்டியிருக்கன்கலம். பார்த்தல் தன தெரியும்..

ஆதிரை said...

//சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.//

இறுதிப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் தியேட்டரை விட்டு வெளியேறினால் நல்லது. கூடவே, சனக்கூட்டத்தில் சிக்காமலும் வந்ததாய் இருக்கும்.

வந்தியத்தேவன் said...

//எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.//

சில நாட்களுக்கு முன்னர் எனக்கும் சொன்னீர்கள் இந்த விடயம் ஆனால் நான் கேஎஸ் சூர்யா இருவரிலும் நம்பிக்கை வைத்து படம் பார்த்து நொந்துபோனேன்.

// இளையராஜா பாதி..ரஹ்மான் பாதியாம் //

இரண்டு இசை மேதைகளை கிண்டல் செய்திருக்கின்றார் இந்த இளையமான் மூலம்.

//சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.//

பலர் பச்சிளம் பாலகர்கள் என்ற உண்மையையும் சொல்லவேண்டும். உள்ள குஞ்சு குருமன் எல்லாம் சூர்யாவின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.

//வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ //

நான் இதனை மாயவலை எனச் சொல்லியுள்ளேன். சூர்யாவிற்க்கு விரைவில் ஏதோ ஒரு ஸ்டார் வரும் கலக்சன் ஸ்டார் வந்தாலும் வரலாம்.

//நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..//

எனக்கென்றால் நயன் பெரிதாக இந்தப் படத்தில் காட்ட இல்லைப்போல் தெரிகின்றது.

//பாடல் காட்சிகளில் நயன் சும்மா உடலைக் குலுக்கி நடக்கவே திரையரங்கில் விசில்கள் பறக்கிறது. //

இது சரி அதிலும் அசிலி பிசிலி பாடலில் அரங்கில் இருந்த அத்தனை மொபைல் கமெராக்களும் அதனைப் பதிவு செயதன.

//உடல் கச்சிதமாக கட்டழகாக இருந்தாலும் கூட,முகம் என் இப்படி கிழடு தட்டிவிட்டது? கவலை? பதற்றம்? அளவுக்கதிக வேலை?//

நயன் ஏற்கனவே கொஞ்சம் கிழடுதான் நம்ம தமன்னா, சுனைனா களுடன் போட்டிபோடும் போது வயசு அதிகமானதாகத் தான் தெரியும்.

//கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது. //

ஏனென்றால் அவர் உங்கள் காலத்து நடிகை.

//காலஞ்சென்ற மலையாள நடிகர் முரளிக்கு படம் முழுக்க நிறைக்கும் கம்பீரமான பாத்திரம் //

இனி அவர் நடிக்கமாட்டாரே என நினைக்கும் போது கவலையாக இருக்கின்றது. நல்ல நடிகர்.

//கே.எஸ்.ஆர் இயக்கும் படங்களில் உள்ள அவரது வழமையான டச்சுகள் மிஸ்ஸிங்.. நிறைய ஓட்டைகள்.. அடிப்படை லாஜிக் மீறல்கள்..//

இதைதான் நானும் பல சொல்லியுள்ளேன் ஏன் கே.எஸ்.ஆர் இவற்றைக் கவனிக்கவில்லை.

வந்தியத்தேவன் said...

//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?//

விஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார்.

//சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.//

என் அறிவுரை அசிலி பிசிலி பாடலுடன் எழுந்துவாருங்கள்.

//ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம். //

எனக்கு பின்னணி இசை ஏனோ பிடிக்கவில்லை.

//ஆர்.கணேஷ் ஐஸ்லாந்தையும்,தென் ஆபிரிக்காவையும் தன காமராக் கண்களால் எடுத்து விருந்து படைக்கிறார்.//

நல்ல காலம் கந்தசாமி ஏகாம்பரம் கமெரா என்றால் படம் கந்தல் தான். கமெராவின் குளிர் தான் படத்தின் பலம்.

//வடிவேலு இல்லாவிட்டால் படம் நுரை தள்ளி இருக்கும்.//

வடிவேல் இருந்தபடியால் பார்ப்பவர்களுக்கு நுரை தள்ளவில்லை,

//பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா?)
எரிச்சலும் வருகிறது. பொருந்தவில்லை.//

வழிமொழிகின்றேன், அதிலும் இன்றைய சகல தொலைக்காட்சிப் பேட்டிகளிலும் சூர்யா நான் உடம்பைக் குறைத்து நடித்தேன் என மருத்துவத்துக்கே சவால் விட்டிருக்கின்றார். இது சாத்தியம் என்றால் நானும் என் உடம்பைக் குறைத்து மீண்டும் ஏஎல் படிக்க ஆசை.

//வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..//

வடிவேல் சூர்யாவின் நடிப்பை புகழும் காட்சி அந்நியனில் பிரகாஷ்ராஜ் விக்ரத்தைப் புகழும் அதே காட்சி போல அதே வசனங்களுடன் இருக்கிறது.

//இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..//

இது தான் படத்தின் பெரிய பலவீனமே.

//தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..//

இந்தக் காட்சிகள் சகல திமுக தொகாட்சிகளில் இனி கொமெடியாக வரும்.

//எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//

அடுத்த படம் ஹரி இன்னொரு ஆறு தான்.

சோடா பிளிஸ் பின்னூட்டம் இட்டு எனக்கு நுரை தள்ளிவிட்டது

கரன் said...

வந்தியத்தேவன் said...
//விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார். //

இந்தக் கூற்றில் எனக்கு உடன்பாடு கிடையாது.

சில இயக்குனர்கள் கூறியவை:
சங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

செல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

சேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.
(இவை எனக்குத் தெரிந்த சில தகவல்கள். கூறியவற்றின் ஆதாரங்களை விரும்பினால் தேடிப்பார்க்க.)

ஒரு பாலா சூர்யாவை நினைத்திருக்காவிட்டால் சூர்யாவே தனக்குள் இருக்கும் நடிகனை சில வேளைகளில் உணந்திருக்கமாட்டார். சூர்யா எனும் நடிகனும் எமக்கு கிடைத்திருக்கமாட்டார்.
ஒரு நடிகனுக்கான அங்கீகாரமும் அவனது முதல் வெற்றியும் இவைதான்.
இங்கே, சங்கரின் படத்தை(முதல்வன்) வேண்டுமானால் ஒதுக்கி விடலாம்.

இயக்குனர்கள் தமது படத்துக்கான நடிகனை சும்மா ஒன்றும் நினைப்பதில்லை.
அந்த நடிகனது பழைய படங்களின் ஏதோவொரு காட்சியில் வரும் நடிப்பு அவர்களை ஈர்த்திருக்கலாம்.

இளைய தலைமுறை நடிகர்களிலேயே தனது நடிப்பை முதலில் இனங்காட்டியது விஜய்.
உதாரணங்கள்:
பூவே உனக்காக, நிலாவே வா, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்.

பின்னர், அவரது பாதை ஏனோ மாறியது/மாற்றப்பட்டது.
ஆனால், இனி அவர் தனது பழைய பாதைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பொறுத்திருந்து பாப்போம்.

இங்கு(பதிவுலகில்) பலர் நடிப்புத் துறையில் மிகப் பெரும் பட்டங்கள் பெற்றவர்கள் போலும்.

***லோஷன் விமர்சனத்துக்கு நன்றிகள். உங்கள் விமர்சனமும் வாசித்தேன் வந்தியத்தேவன். நன்றிகள்.

பின் குறிப்பு:
இது வெறும் பின்னூட்டமே. பதிவு அல்ல.

suthan said...

hi anna
மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..

//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?//

விஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார்.

விஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.

புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்

by -p.suthan

Ananth said...

இருந்தாலும் எனக்கு உங்கள ரொம்ப புடிசிருக்கு
பார பச்சம் பாக்காம அடிகிறின்கலே :D :D

Subankan said...

பேசாமல் அந்த VIP show டிக்கட்டே எடுத்திருக்கலாம். நேற்றுப் போய் படம் பார்த்த நேரத்தை விட வரிசையில் நின்ற நேரம் அதிகம். வடிவேலு நீண்ட நாட்களுக்குப்பின் கலக்கல்தான்.

//பத்து வயசுப் பையனாக சூர்யாவைக் கட்ட முற்பட்டு தோல்வி கண்டுள்ளார்.கிராபிக்ஸ்/மோர்பிங் முகம் உறுத்துகிறது.(இதைத் தான் கஷ்டப்பட்டு நடித்தோம் என்று பில்ட் அப கொடுத்தார்களா?)
எரிச்சலும் வருகிறது. பொருந்தவில்லை.//

அதே. நானும் எழுதியிருக்கிறேன். அந்த முகத்தைப் பார்க்கவே சகிக்கவில்லை.

விஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.

ஆதிரை said...

//விஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.//

ஹா... ஹா...

Jackiesekar said...

நிறைய தகவல்களுடன் விமர்சனம் படிக்க சுவையாக இருந்தது

balu said...

ஒன்னு மட்டும் சொல்லுறேன் லோஷன் அண்ணா.....
நீங்க சூர்யாவ பத்தி தப்ப எழுதனும் எண்டு நினைச்சிடிங்க ...
அதுதான் இப்படி சொல்லுறிங்க....
சூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள்..
இதுதான் உங்கள எப்படி எழுத சொல்லுது....எல்லோரும் சேர்ந்து ஆதவன் கவுக்கணும் எண்டு முடிவு பண்ணிடிங்க... நல்ல ரசிகன் இருக்கும் வரைக்கும் உங்களால் எதுவும் பண்ண முடியாது....

கட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. எண்டு சொல்லுரிங்க.....என் அயன் படத்தில் பாயலைய..
இப்ப மட்டும் தன உங்க கண்ணுக்கு பட்டதோ....

என் அண்ணா இப்படி.....ஒரு வக்கிர புத்தி....

திவா said...

// கரன் said...

சில இயக்குனர்கள் கூறியவை:
சங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

செல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

சேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை. //

இந்த மூன்று படங்களும் மெகா ஹிட்ஸ் திரைப்படங்கள். இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.
விஜய் செய்வது மிகச் சரியானதே.. அவரால் எது முடியுமோ அதையே அவர் செய்கிறார்..
விஜய் ரசிகர்கள் எவரும் அவர் முதல்வன், காதல் கொண்டேன், ஓட்டோகிராப் போன்ற படங்களை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது.. குருவி, வில்லு போன்றவையே அவருக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உகந்த திரைப்படங்கள்.. நிச்சயமாக வேட்டைக்கரனும் அதே லிஸ்டில் தான் வரப்போகிறது.. பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..

Unknown said...

ஆதவன் பார்த்து நொந்தவர்கள் எல்லாம் பேராண்மை பார்க்க போறது நல்லது... சுப்பர் படம்..
உண்ணைப்போல் ஒருவனுக்கு பிறகு இன்னொரு ஹொலிவூட் படம் பார்த்த திருப்தி எனக்கு...

Anonymous said...

தசாவதாரம் வந்த பொழுதும் இதெ போன்ற சில கருத்துகளை பல இடங்களில் பாக்க கூடியதாக இருந்தது.. இன்று அதே சிலர், அதே பல இடங்களில் அந்த படத்தை பற்றி நல்லாகவும் இந்த படதிற்கு அதே போண்ற கருத்துக்களையும் கொடுத்துள்ளனர்.. என்ன கொடுமை சார்..

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் விஜய் ஆன்டனியின் காப்பி அடிதத பாடல்களை அஹா ஒஹோ என்டு கேப்பதுவும், ஷங்கரின் கொப்பி அடித்த சண்டை காட்ச்சிகளை (Anniyan = Matrix + Cradle 2 The Grave) பலே எண்டு கை தட்டி பார்பதுவும் எங்களுக்கு ஒண்றும் புதிது அல்ல..
பார்க்கதவர்கள் இதை மனதில் வைத்துகொன்டு போய் பாருங்கள். இன்று இல்லவிடிலும் என்றோ ஒரு நாள் DVD யில் பார்க்கத்தான் போரீர்கள்.
... Read More
கவலைப்படாதீர்க்ள் எந்திரன் கூட சொதப்பலாகத்தான் இருக்க போகுது.. Terminotor series, Irobot, Start wars, surrogate, the island போன்ற படஙகளோடு ESET Smart Security 3.0 (software) இனையும் பாத்து விட்டு போனீர்கள் என்றால் தெரியும்..

இதோ எந்திரனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு..
http://www.extramirchi.com/gallery/albums/south/shooting/Endhiran_location/Enthiran-Shooting_Location_%284%29.jpg
காப்பிட் புறம்....
http://lh4.ggpht.com/Noreply.filenetworks/R-dNQrViOyI/AAAAAAAAAUA/4gl-itLLJA4/eset-smart-security-nod32_thumb%5B1%5D.jpg

ARV Loshan said...

//மதுவதனன் மௌ. / cowboymathu said...
தியேட்டரில இருந்து ஷோ முடிஞ்சு போகும்போது யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் எண்டு சொல்லிப்போனீங்கள்... ஆனா இப்பிடி இருக்கும் எண்டு ஆர் எதிர்பார்த்தது... கலகலப்பாப் போச்சுதுதான்.. இப்பிடி முடியும் எண்டு யாருக்குத் தெரியும்..//
அது தான் பூடகமா சொன்னமில்ல.. ;?)

முதல் பாதி கல கல.. இரண்டாம் பாதி கடியோ கடி..

ARV Loshan said...

புல்லட் said...
ரவிக்குமார குனிய விட்டு கும்முறமாதிரி முடிச்சிருந்தாலாவது ஏதோ ஒரு அந்தார்த்ம திருப்தி கிடைச்சிருக்கும்... பயபுள்ள நம்ம கிட்ட பகிடி விட்டுட்டானே? ஆதவன் எயாரில போய் குண்டை குத்திவிட்டுட்டு வரும்போது பக்கத்துல யாரோ கேவிக்கேவி அழுதாங்க.. முடியல..//

ஹா ஹா.. உங்கள் பதிவும் பார்த்தேன்.. மனுஷர் ரொம்பவே தறி கேட்டு கற்பனையின் உச்சத்துக்கு போயிட்டார்,,

எனக்கும் கூட முடியல தான்.. இந்த வருடத்தின் பெஸ்ட் மொக்கை காட்சி என்று யாராவது விருது வழங்கலாம்.

ARV Loshan said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
நல்லா இருக்குன்னு சொல்ற மாதிரி தெரியுதே ஐயா.//

நான் சொன்னதைப் பார்க்கவா? என்ன கொடுமை சுரேஷ் இது..
இன்னும் விலாவாரியா எழுதினா ஆட்டோ வரும் போல இருக்கே.. ;)

ARV Loshan said...

Dyena Sathasakthynathan - டயானா சதா'சக்தி'நாதன் said...
Aadhvan not upto the expected level....

i agree with all ur points anna....//

yep :)

u came to the next show? Sources said.. :)

ARV Loshan said...

ப்ரியானந்த சுவாமிகள் said...
விடிய ஷோ பார்க்க டிக்கெட்டுடன் தூங்குகிறோம் தலைவா . அதுக்குள்ளே எங்களை பயபுடுத்றீங்கள்
//

இதுக்கு தான் சொல்லுறது படம் பார்க்க முதல் விமர்சனம் வாசிக்கக் கூடாதென்று..

அதுசரி ஆதவன் பார்த்த பிறகு பேச்சு மூச்சைக் காணோமே.. ஆர் யூ ஓகே?

ARV Loshan said...

டம்பி மேவீ said...
அட பாவமே ....... அப்ப சூர்யா ஏமாற்றிவிட்டார்ன்னு சொல்லுங்க
//

சூர்யாவை இயக்குனர் ஏமாற்றி விட்டார் போல தெரியுது.. ;)

Anonymous said...

hi anna
மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..

enga annan Vijay vaalga

ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்?

ivaru mattuma?

http://veliyoorkaran.blogspot.com/2009/10/blog-post_8871.html

கரன் said...

திவா said...
//இந்த மூன்று படங்களும் மெகா ஹிட்ஸ் திரைப்படங்கள்.//

உண்மை.

திவா said...
//இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.//

உங்கள் கருத்திலிருந்து அவை தோல்விப் படங்களாக அமைந்திருக்கும் எனக் கருதுவதாகப் படுகிறது.
படம் நன்றாக இருந்தாலும் விஜய் நடித்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.
(இது சரியாயின், உங்கள் Favourite movies பகுதியிலுள்ள 'யார் நடித்ததாயினும் நல்ல திரைப்படங்கள் அனைத்தும் பிடிக்கும்.' பகுதியை நீக்கி விடுவது நல்லது.)

நண்பரே, விஜய் நடித்திருந்தால் சில வேளைகளில் இப்படங்கள் இன்னமும் பெரிய வெற்றி அடைந்திருக்கலாம். சில வேளைகளில் தோல்வியும் அடைந்திருக்கலாம். வெற்றி தோல்வி இங்கு பிரச்சினையல்ல.

கமல் நடித்த குணா, ஹேராம் போன்ற பல படங்கள் தோல்விப் படங்களே.
கமல் நன்றாக நடிக்காததால் தோற்ற படங்களா அவை?
கமல் நடிப்பில் வேறோர் பரிமாணம் காட்டிய படங்கள் அவை.
அப்படியாயின், கமலின் ரசிகர்கள் அப்படியான படங்களை ஏற்கவில்லையென்று கருதலாமா?
அப்படி இல்லைதானே...
(அவை தோற்றதற்கு வேறு காரணங்கள் உண்டு)

ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.(நேரமிருந்தால், ஆர்வமிருந்தால் பத்தாண்டுகளுக்கு முற்பட்ட இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் பார்க்க)
இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன.

திவா said...
//சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும் //

'விசிலடிச்சான் குஞ்சு' போல் மேற்படி வார்த்தைகளும் பதிவர்கள் எடுத்ததற்கெல்லாம் பயன்படுத்தும் வார்த்தைகளாகி விட்டன.

திவா said...
//விஜய் ரசிகர்கள் எவரும் அவர் முதல்வன், காதல் கொண்டேன், ஓட்டோகிராப் போன்ற படங்களை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது//

மன்னிக்கவும் நண்பரே...

திவா said...
//குருவி, வில்லு போன்றவையே அவருக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உகந்த திரைப்படங்கள்..//

கமல் படம் பார்ப்பதற்காக குறுகிய நேரம் காரணமாக வீதி ஒழுங்கு விதிகளை மீறிய குற்றத்திற்காக காவல்துறையிடம் பிடிபட்ட அனுபவத்தை 'கமல் 50' நிழ்ச்சியில் ஒரு நடிகர் நினைவு கூர்ந்தார்.
அதற்காக அவரை கமலின் வெறியன் என்றோ விசிலடிச்சான் குஞ்சு என்றோ சொல்லலாமோ?
ஒரு ஆர்வ மேலீட்டால் நடைபெற்ற சம்பவம் அது.
(அந்த நடிகர் நடிப்புக்கான பல விருதுகளைப் பெற்றவர்.)
இப்படித்தானே, எல்லா நடிகர்களது ரசிகர்களும்.
உங்களது வார்த்தைகள் வருத்தமளிக்கின்றன (எந்த நடிகனது ரசிகனாக இருந்தாலும்).

திவா said...
//பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..//

இருக்கலாம்.
ஆனால், ஆதவன் பாடல்களைக் கேட்டு என்ன நினைத்தோம்? என்ன நடந்தது?

பாதைகள் மாறும்.
காத்திருக்கிறோம்.

பின் குறிப்பு:
சூர்யாவுக்காகவும்
வடிவேலுவுக்காகவும்
சில பாடல்களுக்காகவும்
ஒளிப்பதிவுக்காகவும்
இன்னும் சில சுவாரஸ்யமான காட்சிகளுக்காகவும்
ஆதவனை இன்னுமொரு முறை திரையரங்கில் பார்க்கும் ஆசை உண்டு.
நீங்களும் ஒருமுறையேனும் பார்க்கலாம்.

anymos said...

அய்யோ!இப்படியா !ரோம்ப கொடும.

ஆண்டனி said...

சூர்யா என்னமோ அப்டியே நடிப்புல நாலு தேசிய விருது வாங்குன மாதிரி ஓவரா பில்டப் வேற..அப்டி சொல்ல போனா விக்ரம் எவ்ளோ பரவால..சினிமா ல இன்னைய தேதிக்கு வசூல் ராஜா விஜய் மட்டும் தான்..

vibu said...

அட்டகாசம் வாயக்கு வந்த படி எழுதீற்றிங்க,பாவம் நம்ம சூர்யா றவிக்குமார்,

அண்ணா அைத விட கொடுைம வாய்ப்ப கிைடக்கும்ேபாெதல்லாம் ேபாட்டு தாக்கிறதுவியயை,ஏன் ஏேதனும் முன் விேராதமா

Anonymous said...

அய்யா லோஷன்,
தயவு செய்து விமர்சனம் என்ற பெயரில், கண்டதை எல்லம் எழுதாதீர்கள்.

நான் பல மொழி படங்களை பார்பவன், ஆனால் எப்போதும் ஒரு தமிழ் படத்தை தமிழனாகவே பார்பவன். இல்லை எண்றால் படத்தின் ஆரம்ப காட்சியை District 13(french movie) இல் இருந்து காப்பி அடிததுக்கே நான் வெறுப்பு அடைந்திருக்க வேண்டும். proof : ( http://www.youtube.com/watch?v=bTyWfbvX0xQ ), ஆனால் நான் மேலே குறிப்பிட்டது போலே காப்பி அடித்தவற்றை பார்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஒரு தமிழனாக சூரியா எவ்வளவு தூரம் District 13 க்கு நிகராக கடுமையக உளைதுள்ளார்(hard work) என்றதை பார்தேன், மற்றய தமிழ் நடிகர்களை விட ஒருபடி மேலாகவே தோண்றுகிறார்..

இந்த காட்சியை தவிர அனைத்து விடயங்களுமே அருமையாகவே அமைந்துளன .
நீண்ட நட்களுக்கு பிறகு ஒரு மன திருப்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன். ஒரு படத்திற்கு காசு செலவு செய்து என்ன காரணதிற்கக சென்றேனோ அதை விட மேலாக கிடைதத ஒரு சந்தோஷம். சிலவேளை நீஙகள் காசு செலவு செய்து போய் இருந்திருந்தால் அதன் அருமை தெரிந்திரிக்கும்.

ARV Loshan said...

Thamizhmaangani said...
haha.. hey this is an awesome review! the kind of buildup that they gave for the 10 yr old child surya was atrocious. enaku vomitting sensation thaan varuthu! //

ha ha same blood..

surya has been getting into unnecessary troubles recently. :)//
true. a talented actor wasting his chances

========

Aadhavan said...
The same kind of Review is alos available in:
http://www.supershowbiz.com/2009/10/aadhavan-review-new-tamil-movie-first.html//
thanx Aadhavan

ARV Loshan said...

அஜுவத் said...
aathavan pathina muthal vimarsana katturaya irukkanum enru intha nadu rathiriyila pathiva poteengalo.....//
இல்லை அஜுவத்.. எப்படியும் வந்தி முந்திக் கொள்வார் என்று தெரியும்.. தூக்கம் வராமல் இருந்ததாலேயே ஆறுதலாக நீளமாக பதிவிட்டேன்.
ஆனால் ஆச்சரியம் அடுத்த நாள் வரை நானும்,வந்தியுமே மட்டுமே ஆதவன் பற்றி விமர்சனம் இட்டிருந்தோம்

ARV Loshan said...

கார்க்கி said...
லோஷன் மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..//

வேறு யாரையும் ஒப்பிடக் கிடைக்கவில்லை சகா.. விஷால்,பரத்,JKR too early..

//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?//

ஏன்? ரஜினி, அஜித்,விக்ரம் அட கமல் உட்பட யார் தான் தாண்டவில்லை? அது ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்?//
அவங்க எல்லாம் தாண்டியது பழசு.. இப்பவும் தாண்டுவது இவர் மட்டும் தானே.. விஜய் மீது கோபம் காட்டவில்லை.. நம்பியிருந்த சூர்யாவும் விஜயைக் காப்பியடித்த கடுப்பு

//ஐயோ சாமி.. இருந்த நல்லதொரு நடிகரையும் நாசமாக்கி விட்டுத் தான் விடுவீர்களோ?//

விஜய் செய்தால் அது அவர் தவறு. அதையே சூர்யா செய்தால் மற்றவர்கள் மேல் பழியா? ஏன் நடிக்கும்போது முடியாது என்று அவர் மறுத்து இருக்கலாமே? //
நான் சொன்னது விஜய் வழி வேறு.. விஜயால் அதிலிருந்து மீளமுடியாது. இவரையும் அதுக்குள் அகப்படவேண்டாம் என்பதே நான் சொன்னது.

அயன் மட்டும்தான் ஹிட். வாரணம் ஆயிரம் இங்கே தோல்வி. கேபிள் சங்கரிடம் உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் முன்பும் வேல் மட்டுமே சுமார் வெற்றி. மாயாவி, சில்லுன்னு ஒரு காதல் தோல்வியே.//

இங்கே வாரணம் ஆயிரம் வசூலில் வெற்றி.

சூர்யாவுக்கு மாஸ் ஏறிக் கொண்டு வருவது என்பது உண்மைதான். அதனால்தான் இப்படி நடிக்கிறார். இதையேதான் விஜயும்,அஜித்தும் செய்கிறார்கள். சிங்கத்துக்கு பின் சூர்யா சூடுபட்ட பூனை ஆகாமல் இருக்க வேண்டுகிறேன். //
உண்மை தான் சூரியாவுக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமளித்தது.

இதையே தான் நானும் சுட்டிக் காட்டியுள்ளேன்

குருவி ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்பதால் தலைப்பில் வைத்ததை ஏற்க முடிகிறது. ஆனால் தேவையில்லாமல் விஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.

புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்//

சீண்டியது என்பதை விட உண்மையைச் சொன்னேன்.. மாஸ் மசாலா என்றால் வேறு யாரை ஒப்பீட்டுக்கு அழைக்க முடியும்..

எனது கிண்டல் தொனி வருத்தமடைய வைத்திருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் சகா.

ARV Loshan said...

Anonymous said...
I didn't expect these kind of reviews !
Its clear that Kamal Hassan is using KSR as associate director , but gives him director title at the END..young actors should avoid acting under his director - SURESH, ABUDHABI//

true.. KSR is not himself in this film

ARV Loshan said...

தீப்பெட்டி said...
முழுக்க முழுக்க கார்க்கியின் கருத்துக்களை வழிமொழிகிறேன்..

இதே படத்தில் சூர்யாவுக்குப் பதில் விஜய் நடித்திருந்தால் உங்கள் விமர்சனம் எவ்வாறு இருந்திருக்குமென யூகிக்க முடிகிறது..

:(//

கார்க்கிக்கு சொல்லியுள்ள பதிலே உங்களுக்கும் தீப்பெட்டி

======================

கனககோபி said...
கிளம்பிற்றாங்கய்யா...கிளம்பிற்றாங்க...

நான் ரவிக்குமார் ஏமாத்த மாட்டார் எண்டெல்லே நினச்சன்...

சரி சரி...
பாக்க வேண்டிய படங்கள் லிஸ்ரில ஒர படம் குறைஞ்சிற்று.... ஹி ஹி ஹி....//
அப்போ நீங்க பார்க்கலையா? அதெல்லாம் முடியாது.. நாங்க மட்டும் அனுபவிக்க நீங்க ஜாலியாக இருப்பதா? கிளம்புங்க உடனே..

ARV Loshan said...

Nirosh said...
இந்த ஹிரோக்கள் எல்லோரும் இப்படித்தான் போலிருக்கிறது.... கடைசியில் சூர்யாவும் சொதப்பிவிட்டார? ஆனால் கண்டிப்பாக நான் படம் பார்க்க முதலில் ஆர்வம் கொண்டது நம்ம வடிவேலுக்காகத்தான். அவர் ஜெயித்ததுல மிகவும் சந்தோசம்.. அப்போ படமும் மண்ணை கவ்வம கண்டிப்பா ஓடும் போலத்தான் இருக்கிறது.... //

ஆமாம். எப்படியாவது நஷ்டத்தை தாண்டிவிடும்..
வடிவேலு காப்பாற்றி விடுவார்.. சூர்யாவுக்கு இதெல்லாம் ஒரு பாடம்

==============

Dr.எம்.கே.முருகானந்தன் said...
" தாங்காது சூர்யா..
எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது"

நல்ல ஆலோசனை//

டாக்டர் வந்து ஆலோசனையை பாராட்டியிருப்பது நல்லதே.. நன்றி

ARV Loshan said...

Anonymous said...
The Film is not up to the expected level
bt, full of enjoyment and a good commercial movie//
true.. thats wat i have mentioned here.

We love Aadhavan and Suriya//
:)

============

Anonymous said...
நல்ல காலம் டொக்டரின்டை படம் வரவில்லை. இல்லாவிட்டால் கனபேருக்கு இலவசமாக பேதி மாத்திரை வழங்கப்பட்டு இருக்கும். அல்லா காப்பாத்தினான். படம் இளகின பப்படம் ஆனாதன் பிறகு வந்தால் ஓரளவுக்கு சமாளிக்கலாம். வாழ்க டொக்டா்.//

;)
விஜய் ரசிகர்கள் கவனிக்க.. நான் ஒன்னும் சொல்லவில்லை

ARV Loshan said...

Kiruthikan Kumarasamy said...
///சிலநேரங்களில் நயனை விட அவர் பாட்டியாக வரும் கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது///
இது கொஞ்சம் ஓவரான கடி. பாவம் நயன்ஸ்... என்ன செய்வது சட்டியில் இருப்பதுதானே அகப்பையில் வரும்.//

:)

///ஷாயாஜி ஷிண்டே கொல்கத்தாவாழ் தமிழ் பேசும் முஸ்லிம் கூலிப்படைத் தலைவன்///
ஐயையோ... நவீன பார்ப்பான் சுனா தீனா சண்டைக்கு வரப்போறார் சூர்யாவோட... (சேச்சே. அவர் கமலோடதான் சண்டைபிடிப்பார்)//
ஏன்யா சும்மா கிளறி விடுறீங்க..

============

Anonymous said...
sir ungaluku vijaya pidikalana vitrunga aadhavan padathula aaram bichu ella padathukum vijaya ilukuringa bloggers unga ellorukkum vijaya iluthaathan hit varumna,othukonga.rajini,ajith,suryalam enamo award padam nadikira mathiri vijaya thakka vendiyathu.unga blogukae hit venumna vijaya ilukumbothu avaru masala padamla nadikirathu thappu ila//

நன்றி அனானி.. உங்களுக்கும் மேலே பதில் கொடுத்தாச்சு.. கார்க்கிக்கான பதிலை வாசிக்கவும்

ARV Loshan said...

hamshi said...
Dewali nal valththukkkal//

அடப் பாவி.. இங்கேயும் இந்த டிவாலி தொடங்கியாச்சா? வாழ்த்தாமல் விட்டாலும் பரவாயில்லை.. நான் கொண்டாடுவதில்லை.. ஆனால் தீபாவளியை டிவாலி ஆக்க வேண்டாம்

திவா said...

கரன் said...
//உங்கள் கருத்திலிருந்து அவை தோல்விப் படங்களாக அமைந்திருக்கும் எனக் கருதுவதாகப் படுகிறது.
படம் நன்றாக இருந்தாலும் விஜய் நடித்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.//

விஜய் நடித்ததால் பார்க்க மாட்டேன் என்று நான் கூறவே இல்லையே!!!!!!!
காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக போன்ற திரைப்படங்களுக்கு இன்றும் நான் ரசிகனே.. அந்தக் காலகட்டங்களில் விஜயின் படங்கள் ஓரளவேனும் பார்க்கக் கூடியனவாக இருந்தது உண்மைதான்.. ஆனால் இன்று அவ்வாறா? தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக நினைத்து, அடுத்த சூப்பர் ஸ்டார் தானே என நினைத்து அவர் படங்களில் பண்ணும் அட்டகாசம் தாங்க முடியவில்லை!!!

கரன் said...
//ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.//

உண்மை... ஆனால் அன்றிருந்த நடிக்கத்தெரிந்த "நடிகர்" விஜய் இன்று இல்லாமல் போய்விட்டாரே?

கரன் said...
//இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன//
உண்மையைத்தானே எழுதுகிறார்கள்? விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கலாம் என்றெல்லாமா எழுத முடியும்?

ARV Loshan said...

ஆ.ஞானசேகரன் said...
//நான் படித்த பாடசாலை கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் மாணவத் தலைவர் மன்றம் நிதி திரட்டும் நோக்கில் முதல்காட்சியை வாங்கிக் காட்டியதில் எம் வானொலி வெற்றி FM ஊடக அனுசரணை வழங்கியதில் இந்த அதிர்ஷ்டம் எனக்கு.//

நல்லாயிருக்கோ ராசா//

:)

ஆ.ஞானசேகரன் said...
//பி.கு - சூர்யா நடிக்கும் அடுத்த படம் ஹரியின் இயக்கத்தில் சிங்கம்..
தாங்காது சூர்யா..
எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//

அப்படியா படம் பார்க்கலாமா வேண்டாமா?//

இவ்வளவும் வாசிச்சுமா இப்பிடி ஒரு சந்தேகம்?
முதல் பாதி பார்த்திட்டு இண்டேர்வலோடு எழும்பி வந்திருங்க..

ARV Loshan said...

SIRUVAN said...
அடச்சா.. ரவிக்குமார் இப்படி பண்ணிட்டரே சார். இது குருவி மேரி எண்டு கூட சொல்ல ஏலாது. அதைவிட போர் அடிச்சுது எனக்கு. வடிவேலுவின் காமடி சிரிப்பே வரவில்லை...
கஷ்டபட்டு சூர்யவிட்கக ரசிக்க முடிந்தும் முடியவில்லை. இப்ப தளபதி படம் பார்த்திட்டு அப்பாடா நம்மலாத ரிலீஸ் பண்ணலாம் எண்டு நினைக்கேக்க அங்கால ஆரோ பேராண்மை பக்கம் இருந்து மிரட்டியிருக்கன்கலம். பார்த்தல் தன தெரியும்..//

உண்மை தான் சிறுவா.. அதுசரி ரொம்ப அவசரமா பின்நூட்டிநீன்களோ?
நிறைய எழுத்துப் பிழைகளா இருக்கே..

================

ஆதிரை said...
//சூர்யாவின் இமேஜ் கெடுபடுவது தாங்கமுடியாதவராக நீங்கள் இருக்கும்பட்சத்தில் க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி பார்க்காதீர்கள்.//

இறுதிப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் தியேட்டரை விட்டு வெளியேறினால் நல்லது. கூடவே, சனக்கூட்டத்தில் சிக்காமலும் வந்ததாய் இருக்கும்.//

:) இன்றோடு சனம் குறைந்துவிடும் என்கிறார் நம்ம கஞ்சிபாய்

தங்க முகுந்தன் said...

ஆதவனுக்கு எழுதி - யாழ்தேவியின் ஆதவனாக மகுடம் பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் பணி! உங்களைத் தூரத்திலிருந்தாலும் நாம் நீங்கள் எழுதுவதைப் பார்த்தவண்ணம்தான் இருக்கின்றோம்!

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
//எனக்கு மனம் என்னவோ ஆதவன் இந்த அளவுகடந்த எதிர்பார்ப்புக்களால் கவிழும் என்றே சொல்லியது. எனினும் மசாலா வித்தை அறிந்த கே.எஸ்.ரவிக்குமார் மீது கொஞ்சம் நம்பிக்கை இருந்தது.//

சில நாட்களுக்கு முன்னர் எனக்கும் சொன்னீர்கள் இந்த விடயம் ஆனால் நான் கேஎஸ் சூர்யா இருவரிலும் நம்பிக்கை வைத்து படம் பார்த்து நொந்துபோனேன்.//

ஏதோ மனசு சொன்னது அதான் உங்களுக்கும் சொன்னேன்.. யார் நினைத்தார் இப்படி என்று..

//சூர்யாவின் பெயர் திரையில் தோன்றும்போதே விசில் ஆரவாரங்கள்.ரசிகர்கள் கணிசமான அளவில் அவருக்கு அதிகரித்துள்ளனர்.//

பலர் பச்சிளம் பாலகர்கள் என்ற உண்மையையும் சொல்லவேண்டும். உள்ள குஞ்சு குருமன் எல்லாம் சூர்யாவின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.//

ம்ம்.. அது தான் சூர்யாவையும் கவிழ்க்கப் போகுதோ?

//வெகுவிரைவில் ஸ்டாராகவோ,தளபதியாகவோ இவரும் மாறப்போகிறார் என்பதற்கான ஆரம்பமோ //

நான் இதனை மாயவலை எனச் சொல்லியுள்ளேன். சூர்யாவிற்க்கு விரைவில் ஏதோ ஒரு ஸ்டார் வரும் கலக்சன் ஸ்டார் வந்தாலும் வரலாம்.//

என்ன ஸ்டாரோ? அது அவரின் ஸ்டாரை இல்லாமல் பண்ணாமல் விட்டால் சரி..

//நயன்தாரா அறிமுகம் முதலே காட்டுவதும் மறைப்பதும் என்று அழகு,கவர்ச்சி திருவுலா நடத்துகிறார். கொஞ்சம் உருகவும் செய்கிறார்..//

எனக்கென்றால் நயன் பெரிதாக இந்தப் படத்தில் காட்ட இல்லைப்போல் தெரிகின்றது. //

ஆமாம் வந்தி நீங்கள் எதிர்பார்த்த (!) அளவு காட்டவில்லை தான்.. ;)

//கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவியின் முகம் அழகாகத் தெரிகிறது. //

ஏனென்றால் அவர் உங்கள் காலத்து நடிகை.//
அடடா.. இதை சொல்வது கே.பீ.சுந்தராம்பாள் காலத்து ரசிகர் அல்லவா?

=============

வந்தியத்தேவன் said...
//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?//

விஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார். //
இதைவிட வேறு ஏதாவது சொல்லவேணுமா.. டேய் வந்தி சிக்கிட்டாண்டா..

//ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் படத்துக்கு மிகப்பெரும் பலம். //

எனக்கு பின்னணி இசை ஏனோ பிடிக்கவில்லை. //

எனக்கு பிடிச்சிருக்கு.. ரசனைகள் வேறுபாடு??

//வடிவேலு சூர்யாவைப் பார்த்து சிவாஜி,எம்ஜீஆர்,ரஜினி,கமல் என்று வரிசையாக ஒப்பிடுவது, பத்து படியில் நூறு பிட்டு நான்.. என்று சூர்யாவுக்கான பன்ச்..//

வடிவேல் சூர்யாவின் நடிப்பை புகழும் காட்சி அந்நியனில் பிரகாஷ்ராஜ் விக்ரத்தைப் புகழும் அதே காட்சி போல அதே வசனங்களுடன் இருக்கிறது.

//இறுதி இருபது நிமிடங்களில் இயக்குனர் கொஞ்சமாவது தன கைவண்ணத்தை வித்தியாசமாகக் காட்டி இருந்தால் ஆதவன் இன்னும் கொஞ்சம் தப்பித்திருப்பான்..//

இது தான் படத்தின் பெரிய பலவீனமே.

//தயாரிப்பாளர் உதயநிதி வேறு..ஆனால் சிரிப்பு என்னவோ வரமாட்டேன் என்கிறது..//

இந்தக் காட்சிகள் சகல திமுக தொகாட்சிகளில் இனி கொமெடியாக வரும்.//
நீங்க வேற.. அவர் ஹீரோவாகப் போகிறார்.. நீங்க காமெடி பீசாக்கிறீங்களே பாஸ்..

//எதற்கும் மறுபடி பாலாவிடமோ, கௌதம் மேனனிடமோ, முருகதாசிடமோ பேசுவது நல்லது//

அடுத்த படம் ஹரி இன்னொரு ஆறு தான். //
;)

சோடா பிளிஸ் பின்னூட்டம் இட்டு எனக்கு நுரை தள்ளிவிட்டது//
ஏலே.. யாரங்கே.. நம்ம அண்ணன் சாரி.. அங்கிள் வந்திக்கொரு சோடா உடச்சிக் கொடு..

Unknown said...

ya its same another movie Kuruvi

அ.ஜீவதர்ஷன் said...

http://eppoodi.blogspot.com/2009/10/blog-post_19.html.
ஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்

அ.ஜீவதர்ஷன் said...

http://eppoodi.blogspot.com/2009/10/blog-post_19.html.
ஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்

ARV Loshan said...

கரன் said...
சில இயக்குனர்கள் கூறியவை:
சங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

செல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

சேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.
(இவை எனக்குத் தெரிந்த சில தகவல்கள். கூறியவற்றின் ஆதாரங்களை விரும்பினால் தேடிப்பார்க்க.)//

ஒரு பாலா சூர்யாவை நினைத்திருக்காவிட்டால் சூர்யாவே தனக்குள் இருக்கும் நடிகனை சில வேளைகளில் உணந்திருக்கமாட்டார். சூர்யா எனும் நடிகனும் எமக்கு கிடைத்திருக்கமாட்டார்.
ஒரு நடிகனுக்கான அங்கீகாரமும் அவனது முதல் வெற்றியும் இவைதான்.
இயக்குனர்கள் தமது படத்துக்கான நடிகனை சும்மா ஒன்றும் நினைப்பதில்லை.
அந்த நடிகனது பழைய படங்களின் ஏதோவொரு காட்சியில் வரும் நடிப்பு அவர்களை ஈர்த்திருக்கலாம்.

இளைய தலைமுறை நடிகர்களிலேயே தனது நடிப்பை முதலில் இனங்காட்டியது விஜய்.
உதாரணங்கள்:
பூவே உனக்காக, நிலாவே வா, காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், துள்ளாத மனமும் துள்ளும்.

பின்னர், அவரது பாதை ஏனோ மாறியது/மாற்றப்பட்டது.
ஆனால், இனி அவர் தனது பழைய பாதைக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
பொறுத்திருந்து பாப்போம்.//

அப்படி நடந்திருந்தால் அந்தப் படங்களே வேறு விதமாக வந்திருக்கும்.. அல்லது விஜய் என்பவற்றின் பாதை மாறியிருக்கும்.. ஆனால் நடக்கவில்லையே..

ஆனால்,அப்படி நடந்திருந்தால் என்பன போன்ற பேச்சுக்களுக்கே இடமில்லை இங்கே..

நிகழ்கால நடப்புக்கள்,நடிப்புகள் பற்றி மட்டுமே இங்கே ஆராயப்படுகின்றன.
நீங்கள் மேலே சொன்ன படங்கள் எல்லாம் வந்து எத்தனை ஆண்டுகள் இப்போது?

இங்கு(பதிவுலகில்) பலர் நடிப்புத் துறையில் மிகப் பெரும் பட்டங்கள் பெற்றவர்கள் போலும்.//
விமர்சனம் செய்ய அதெல்லாம் தேவையில்லை.. நடிப்புலகில் உள்ளவர்களும் பெரிய பட்டங்கள் பெற்றவர்களோ?அல்லது குறைந்த பட்சம் நடிப்பில் தேர்ச்சியாவது பெற்று வந்தவர்களோ?

ARV Loshan said...

IT Services said...
hi anna
மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..

//அதுக்குத் தான் இளைய தளபதி இருக்கிறாரே.. நீங்களும் மூக்குடைபட வேண்டுமா சூர்யா?//

விஜய் ரசிகர்களைச் சீண்டுவதை வன்மையாக எதிர்க்கின்றேன். விஜய் தனக்கு எது வருமோ அதைத் தான் செய்வார்.

விஜயை சீண்டியிருப்பது, சாரி பாஸ் எனக்கு பிடிகக்வில்லை.

புரிந்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்

by -p.suthan//

cut and paste பின்னூட்டம்?;)
உங்களுக்கும் மேலே கார்க்கிக்கு சொன்ன பதில் தான் சுதன்..

ARV Loshan said...

Ananth said...
இருந்தாலும் எனக்கு உங்கள ரொம்ப புடிசிருக்கு
பார பச்சம் பாக்காம அடிகிறின்கலே :D :D//

நன்றி நன்றி நன்றி.. :)
இதிலெல்லாம் பாரபட்சம், பங்கு,பஞ்சம் எல்லாம் பார்ப்பதில்லை..

===================

Subankan said...
விஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.//

ஆமாமா.. நான் சீன்டியிருக்கிறேன்.நீங்கள் சிறப்பு செய்திருக்கிறீர்கள்.. ;)
வாழ்க சுபாங்கன்.. உங்கள் பதிவும் வாசித்தேன்.. ;)

ARV Loshan said...

ஆதிரை said...
//விஜயைப் பற்றிய சீண்டல்கள் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகின்றது. ஆனால் இந்தப் படத்தில்கூட சூர்யாவை விஜய்யுடன் ஒப்பிட முடியாது.//

ஹா... ஹா...//

:)

==============

jackiesekar said...
நிறைய தகவல்களுடன் விமர்சனம் படிக்க சுவையாக இருந்தது//

நன்றி ஜாக்கி.. :)

ARV Loshan said...

balu said...
ஒன்னு மட்டும் சொல்லுறேன் லோஷன் அண்ணா.....
நீங்க சூர்யாவ பத்தி தப்ப எழுதனும் எண்டு நினைச்சிடிங்க ...
அதுதான் இப்படி சொல்லுறிங்க....
சூர்யாவின் அண்மைய பத்திரிகைகளின் மீதான தாக்குதல்கள்..
இதுதான் உங்கள எப்படி எழுத சொல்லுது....எல்லோரும் சேர்ந்து ஆதவன் கவுக்கணும் எண்டு முடிவு பண்ணிடிங்க... நல்ல ரசிகன் இருக்கும் வரைக்கும் உங்களால் எதுவும் பண்ண முடியாது....//

ஹா ஹா.. நல்ல நகைச்சுவை.. ஏதாவது பத்திரிகைக்கு ஜோக்கா அனுப்புங்க,.

கட்டடங்கள் தாண்டிப் பாய்கிறார்.. எண்டு சொல்லுரிங்க.....என் அயன் படத்தில் பாயலைய..
இப்ப மட்டும் தன உங்க கண்ணுக்கு பட்டதோ.... //

ஒரு தடவை என்றால் பொறுக்கலாம்.. அயனுக்கு பிறகு ஆதவனிலும் பாய்ந்தால்? எதுக்கும் ஒரு அளவிருக்கே தம்பி

என் அண்ணா இப்படி.....ஒரு வக்கிர புத்தி....//
இதுக்கு வக்கிர புத்தி என்றா பெயர்? உங்கள் தமிழ் ஆசிரியரை நான் கேட்டதா சொல்லவும்..

அதுசரி, எல்லா ஆதவன் பற்றிய விமர்சனங்களையும் வாசித்தீர்களா?

ARV Loshan said...

திவா said...
// கரன் said...

சில இயக்குனர்கள் கூறியவை:
சங்கர் : முதல்வன் படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

செல்வராகவன் : காதல் கொண்டேன் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை.

சேரன் : ஓட்டோகிராப் படத்துக்கு முதலில் நடிக்க வைக்க நினைத்தது விஜயை. //

இந்த மூன்று படங்களும் மெகா ஹிட்ஸ் திரைப்படங்கள். இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.
விஜய் செய்வது மிகச் சரியானதே.. அவரால் எது முடியுமோ அதையே அவர் செய்கிறார்..
விஜய் ரசிகர்கள் எவரும் அவர் முதல்வன், காதல் கொண்டேன், ஓட்டோகிராப் போன்ற படங்களை விஜயிடம் இருந்து எதிர்பார்க்கக் கூடாது.. குருவி, வில்லு போன்றவையே அவருக்கும் அவரது விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் உகந்த திரைப்படங்கள்.. நிச்சயமாக வேட்டைக்கரனும் அதே லிஸ்டில் தான் வரப்போகிறது.. பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..//

சொலவேண்டியதேல்லாம் தெளிவா சொல்லிட்டீங்க திவா.. ;)
வரட்டும் வேட்டைக்காரன்..

=================

SIRUVAN said...
ஆதவன் பார்த்து நொந்தவர்கள் எல்லாம் பேராண்மை பார்க்க போறது நல்லது... சுப்பர் படம்..
உண்ணைப்போல் ஒருவனுக்கு பிறகு இன்னொரு ஹொலிவூட் படம் பார்த்த திருப்தி எனக்கு...//

ம்ம் நல்லாத் தான் இருக்கு.. நேற்று தான் பார்த்தேன்

ARV Loshan said...

gokul said...
தசாவதாரம் வந்த பொழுதும் இதெ போன்ற சில கருத்துகளை பல இடங்களில் பாக்க கூடியதாக இருந்தது.. இன்று அதே சிலர், அதே பல இடங்களில் அந்த படத்தை பற்றி நல்லாகவும் இந்த படதிற்கு அதே போண்ற கருத்துக்களையும் கொடுத்துள்ளனர்.. என்ன கொடுமை சார்..//

அது தான் பதிவுலகம்.. அதுக்காக தசாவதாரத்தையும் ஆதவனையும் ஒப்பிடுவீர்களா? என்ன கொடும சார் இது.. நாங்களே குருவியோடு ஒப்பிடுகிறோம் ஆதவனை..

தசாவதாரம் கமலின் படம் அன்றி கே.எஸ்.ஆரின் படமல்ல ..

ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் விஜய் ஆன்டனியின் காப்பி அடிதத பாடல்களை அஹா ஒஹோ என்டு கேப்பதுவும், ஷங்கரின் கொப்பி அடித்த சண்டை காட்ச்சிகளை (Anniyan = Matrix + Cradle 2 The Grave) பலே எண்டு கை தட்டி பார்பதுவும் எங்களுக்கு ஒண்றும் புதிது அல்ல..
பார்க்கதவர்கள் இதை மனதில் வைத்துகொன்டு போய் பாருங்கள். இன்று இல்லவிடிலும் என்றோ ஒரு நாள் DVD யில் பார்க்கத்தான் போரீர்கள்.
... Read More
கவலைப்படாதீர்க்ள் எந்திரன் கூட சொதப்பலாகத்தான் இருக்க போகுது.. Terminotor series, Irobot, Start wars, surrogate, the island போன்ற படஙகளோடு ESET Smart Security 3.0 (software) இனையும் பாத்து விட்டு போனீர்கள் என்றால் தெரியும்..

இதோ எந்திரனை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு..
http://www.extramirchi.com/gallery/albums/south/shooting/Endhiran_location/Enthiran-Shooting_Location_%284%29.jpg
காப்பிட் புறம்....
http://lh4.ggpht.com/Noreply.filenetworks/R-dNQrViOyI/AAAAAAAAAUA/4gl-itLLJA4/eset-smart-security-nod32_thumb%5B1%5D.jpg//

அதெல்லாம் சரி.. அடிக்கும் காப்பியை சரியாக அடியுங்கள்.. இல்லை எமக்குப் புரிகிற மாதிரி அடியுங்கள்..
ஆனால் ஆதவன் க்ளைமாக்ஸ் எந்தவொரு ஆங்கிலப் படங்களிலும் வராத ஒன்று.. ஹீ ஹீ..

ARV Loshan said...

Anonymous said...
hi anna
மீண்டும் மீண்டும் தேவையே இல்லாமல் விஜயை சீண்டுவது வருத்தமானது..

enga annan Vijay vaalga

ஏன் விஜய் மீது மட்டும் உங்கள் கோவம்?

ivaru mattuma?

http://veliyoorkaran.blogspot.com/2009/10/blog-post_8871.html//

அடப்பாவி.. அவனா நீயி..
ஹீ ஹீ.. வெளியூர்க்காரனின் பதிவு முன்பே நான் பார்த்தது.. :)

ARV Loshan said...

கரன் said...

திவா said...
//இவற்றில் எதாவது ஒரு திரைப்படத்தில் கூட விஜய் நடித்திருந்தால் படத்தின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரிந்திருக்கும்.//

உங்கள் கருத்திலிருந்து அவை தோல்விப் படங்களாக அமைந்திருக்கும் எனக் கருதுவதாகப் படுகிறது.
படம் நன்றாக இருந்தாலும் விஜய் நடித்தால் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் போலும்.
(இது சரியாயின், உங்கள் Favourite movies பகுதியிலுள்ள 'யார் நடித்ததாயினும் நல்ல திரைப்படங்கள் அனைத்தும் பிடிக்கும்.' பகுதியை நீக்கி விடுவது நல்லது.)

நண்பரே, விஜய் நடித்திருந்தால் சில வேளைகளில் இப்படங்கள் இன்னமும் பெரிய வெற்றி அடைந்திருக்கலாம். சில வேளைகளில் தோல்வியும் அடைந்திருக்கலாம். வெற்றி தோல்வி இங்கு பிரச்சினையல்ல.

கமல் நடித்த குணா, ஹேராம் போன்ற பல படங்கள் தோல்விப் படங்களே.
கமல் நன்றாக நடிக்காததால் தோற்ற படங்களா அவை?
கமல் நடிப்பில் வேறோர் பரிமாணம் காட்டிய படங்கள் அவை.
அப்படியாயின், கமலின் ரசிகர்கள் அப்படியான படங்களை ஏற்கவில்லையென்று கருதலாமா?
அப்படி இல்லைதானே...
(அவை தோற்றதற்கு வேறு காரணங்கள் உண்டு)

ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.(நேரமிருந்தால், ஆர்வமிருந்தால் பத்தாண்டுகளுக்கு முற்பட்ட இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகளைப் பார்க்க)
இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன.//

//பத்தாண்டுகளுக்கு முற்பட்ட //
இது தான் இங்கே முக்கியம். இப்போது நடப்பதைக் கவனிக்கவும்.

திவா said...
//பாடல்களைக் கேட்கும்போதே வேட்டைக்காரன் எப்படி இருக்கும் என்பதனை ஊகிக்க முடிகிறது..//

இருக்கலாம்.
ஆனால், ஆதவன் பாடல்களைக் கேட்டு என்ன நினைத்தோம்? என்ன நடந்தது?//
;) அது தானே.. ஆதவன் நம்ப வைத்துக் கழுத்து அறுத்துவிட்டது..

.

பின் குறிப்பு:
சூர்யாவுக்காகவும்
வடிவேலுவுக்காகவும்
சில பாடல்களுக்காகவும்
ஒளிப்பதிவுக்காகவும்
இன்னும் சில சுவாரஸ்யமான காட்சிகளுக்காகவும்
ஆதவனை இன்னுமொரு முறை திரையரங்கில் பார்க்கும் ஆசை உண்டு.
நீங்களும் ஒருமுறையேனும் பார்க்கலாம்.//

இன்னொரு முறையா? ஆண்டவா .. வேண்டுமானால் இடைவேளையோடு எழும்பி வருவதற்கு அனுமதி உண்டெனில் வருகிறேன்

ARV Loshan said...

ஆண்டனி said...
சூர்யா என்னமோ அப்டியே நடிப்புல நாலு தேசிய விருது வாங்குன மாதிரி ஓவரா பில்டப் வேற..அப்டி சொல்ல போனா விக்ரம் எவ்ளோ பரவால..//
;)

சினிமால இன்னைய தேதிக்கு வசூல் ராஜா விஜய் மட்டும் தான்..//
அப்படியா?
அது கமல் நடிச்ச படம் இல்லையா? ;)

============

vibu said...
அட்டகாசம் வாயக்கு வந்த படி எழுதீற்றிங்க,பாவம் நம்ம சூர்யா றவிக்குமார்,//
மனசில் பட்ட உண்மையை எழுதினேன்... பாவம் எல்லாம் இங்க பார்க்க முடியுமா?

அண்ணா அைத விட கொடுைம வாய்ப்ப கிைடக்கும்ேபாெதல்லாம் ேபாட்டு தாக்கிறதுவியயை,ஏன் ஏேதனும் முன் விேராதமா//

ஆமா அவர் என்கிட்டே வாங்கின ஆயிரம் ரூபாவை இன்னும் தரல.. அது தான் காண்டு.. ;)

ARV Loshan said...

gokul said...
அய்யா லோஷன்,
தயவு செய்து விமர்சனம் என்ற பெயரில், கண்டதை எல்லம் எழுதாதீர்கள்.//
காண்பதை,கண்டதை தான் எழுதலாம் கோகுல்.. காணாததை எழுத முடியாது.. எழுதவும் கூடாது..

நான் பல மொழி படங்களை பார்பவன், ஆனால் எப்போதும் ஒரு தமிழ் படத்தை தமிழனாகவே பார்பவன்.//
நானும் அப்படித் தான்.. எல்லோருமே.. ஆனால் தமிழ் படம் இன்னமும் அதே சாக்கடைக் குழியில் இருக்ககூடாது என்றும் எண்ணம் உடையவன்

இல்லை எண்றால் படத்தின் ஆரம்ப காட்சியை District 13(french movie) இல் இருந்து காப்பி அடிததுக்கே நான் வெறுப்பு அடைந்திருக்க வேண்டும். proof : ( http://www.youtube.com/watch?v=bTyWfbvX0xQ ), ஆனால் நான் மேலே குறிப்பிட்டது போலே காப்பி அடித்தவற்றை பார்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஒரு தமிழனாக சூரியா எவ்வளவு தூரம் District 13 க்கு நிகராக கடுமையக உளைதுள்ளார்(hard work) என்றதை பார்தேன், மற்றய தமிழ் நடிகர்களை விட ஒருபடி மேலாகவே தோண்றுகிறார்..//

சூர்யாவைப் பற்றி தப்பாக சொல்லவில்லையே.. ஆனால் மோசமான கதையில் நடித்தது அவர் தவறு. விஜய் போன்ற பாணியை எடுத்தது, பாய்ந்தது அவர் தப்பு.. படத்தின் குறையையும் சூர்யாவின் குறைகளையும் போட்டு ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்?

இந்த காட்சியை தவிர அனைத்து விடயங்களுமே அருமையாகவே அமைந்துளன .
நீண்ட நட்களுக்கு பிறகு ஒரு மன திருப்தி திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன். ஒரு படத்திற்கு காசு செலவு செய்து என்ன காரணதிற்கக சென்றேனோ அதை விட மேலாக கிடைதத ஒரு சந்தோஷம். சிலவேளை நீஙகள் காசு செலவு செய்து போய் இருந்திருந்தால் அதன் அருமை தெரிந்திரிக்கும்.//

அப்படியா? இப்படி தான் நீங்கள் பல மொழிப் படம் பார்க்கிறீர்களோ?
நல்ல காலம் காசுகொடுத்துப் பார்க்கவில்லை என நான் ஆறுதல் பட்டுக் கொண்டேன்,
நீங்கள் சூர்யா ரசிகர்/வெறியராக இருக்கலாம்.. ஆனால் ஆதவனால் திருப்திப் பட்டதாக சொல்வதெல்லாம் ரொம்பவே ஓவர்

ARV Loshan said...

திவா said...

கரன் said...
//ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.//

உண்மை... ஆனால் அன்றிருந்த நடிக்கத்தெரிந்த "நடிகர்" விஜய் இன்று இல்லாமல் போய்விட்டாரே?//
true

கரன் said...
//இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன//
உண்மையைத்தானே எழுதுகிறார்கள்? விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கலாம் என்றெல்லாமா எழுத முடியும்?//

ha ha ha

ARV Loshan said...

தங்க முகுந்தன் said...
ஆதவனுக்கு எழுதி - யாழ்தேவியின் ஆதவனாக மகுடம் பெற்றமைக்கு எமது வாழ்த்துக்கள்!
தொடரட்டும் உங்கள் பணி! உங்களைத் தூரத்திலிருந்தாலும் நாம் நீங்கள் எழுதுவதைப் பார்த்தவண்ணம்தான் இருக்கின்றோம்!//
நன்றியண்ணா நன்றி.. உங்கள் பின்னூட்டம் பார்த்த பிறகுதான் எனக்கு விஷயமே தெரியும்..

ARV Loshan said...

suresh said...
ya its same another movie Kuruvi//
:) tx

==========

EPPOODI said...
http://eppoodi.blogspot.com/2009/10/blog-post_19.html.
ஆதவன்- சூரியாவுக்கும் ஏழரை ஆரம்பம்//

வாசித்தேன்.. பின்னூட்டினேன்.. :)

Buஸூly said...

நான் இன்று வரைக்கும் குருவி படத்தை பார்கவே இல்லை காரணம் என் நண்பர்கள் அதை பார்ப்பதற்கு பேசாமல் போய் தூங்கலாம்னு சொன்னது தான் அதாலதான் என்னவோ இத முதல்லயே போய் பாத்துடனும்னு போய் பாத்து நாமலாதான் சிக்கிக்கிட்டமோ ...............!!!

கரன் said...

திவா said...

நான் சொன்னது...
//ப்ரியமுடன் படம் வெளிவந்த சமயம் விஜயின் நடிப்பின் எதிர்காலம் பற்றி சில இந்தியப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் அடுத்த ஷாருக்கானோ, கமலோ என்று ஒப்பிட்டுப் பேசுமளவுக்கு எழுதியிருந்தன.//

திவா said...
//உண்மை... ஆனால் அன்றிருந்த நடிக்கத்தெரிந்த "நடிகர்" விஜய் இன்று இல்லாமல் போய்விட்டாரே?//

Loshan said
//true//

வழிமொழிகிறேன்.

நான் சொன்னது...
//இன்று அதே பத்திரிகைகள், சஞ்சிகைகள்தான் சூர்யாவின் நடிப்பாற்றல் பற்றி சிலாகித்து எழுதுகின்றன//

திவா said...
//உண்மையைத்தானே எழுதுகிறார்கள்? விஜய் ஒரு சிறந்த நடிகர், அவருக்கு ஒஸ்கார் விருது வழங்கலாம் என்றெல்லாமா எழுத முடியும்?//

Loshan said
///ha ha ha//

நிச்சயமாக எழுதமுடியாது.
ஏனென்றால், Oscar விருது Hollywood படங்களுக்கு வழங்கப்படுவது.
விஜய் Hollywood படமொன்றிலும் நடிக்கவில்லை.

கரன் said...

நன்றிகள் லோஷன், எனது கருத்துகளுக்கான உங்கள் கருத்துகளைத் தெரிவித்தமைக்கு.

LOSHAN said...
//அப்படி நடந்திருந்தால் அந்தப் படங்களே வேறு விதமாக வந்திருக்கும்.. //

இருக்கலாம். ஆனால், கதாபாத்திரங்ளின் பொதுவான தன்மைகள் மாற்றப்பட்டிருக்காது.

சிலர்(நீங்களல்ல),
விஜய்க்கு நடனம் மட்டும்தான் தெரியும். நடிக்கத் தெரியாது... (நடனம் கூட தெரியாது என்று சொல்பவர்களும் உண்டு)
ஏதோ தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு விடயங்களை வைத்துக் கொண்டு பேய்க்காட்டுகிறார்..என்றமாதிரியான தொனிபட எழுதுகின்றனர்.

மேற்படி இயக்குனர்கள் விஜய் என்பவரை ஒரு நடிகனாக கருதியதால் தான் அப்பாத்திரங்களுக்காக அவரை நினைத்திருந்தனர்.
விஜய்க்கு கொஞ்சமாவது நடிக்கத்தெரியும் என்று அந்த இயக்குனர்கள் எண்ணியிருந்தார்கள் என்பதைச் சொல்வதற்காகத்தான் அவர்களது(இயக்குனர்கள்) கருத்துகளை எழுதிருந்தேன்.

கரன் said...

LOSHAN said
//நிகழ்கால நடப்புக்கள்,நடிப்புகள் பற்றி மட்டுமே இங்கே ஆராயப்படுகின்றன.
நீங்கள் மேலே சொன்ன படங்கள் எல்லாம் வந்து எத்தனை ஆண்டுகள் இப்போது?//

//பத்தாண்டுகளுக்கு முற்பட்ட //

LOSHAN said
//இது தான் இங்கே முக்கியம். இப்போது நடப்பதைக் கவனிக்கவும்.//

//ஆராயப்படுகின்றன//
ஆராய்ச்சிகள் என்றால் உசாத்துணைகள் இல்லாமலா...
வரலாறு மிக முக்கியம்...அமைச்சரே...மன்னிக்கவும் லோஷனே...(நன்றி, இம்சை அரசன் 23ம் புலிகேசி)

பி-கு:
இதற்கு முன்னைய எனது பின்னூட்டத்தில்,
'கதாபாத்திரங்ளின்' என்று வந்துவிட்டது.
'கதாபாத்திரங்களின்' என்பதே சரியானது.
தமிழே, லோஷனே பொறுத்தருள்க...!

KANA VARO said...

அன்பின்,
கார்க்கி, கரன், தீப்பெட்டி,IT Service,
லோஷன் அண்ணாவை பற்றி தெரிந்து தான் தேவை இல்லாமல் நான் பின்னுரட்டம் இடாமல் இருந்தேன்...
நேரம் பொன்னானது அதை வீணாக்காதீர்கள்..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner