February 05, 2010

அசல் - அசல் திரைப்பட விமர்சனம்

அஜித்தின் அசல்..
அஜித்தின் 49 வது திரைப்படம்.

நீண்ட கால எதிர்பார்ப்பிற்குப் பின்னர் இன்று திரை கண்டுள்ளது.
இயக்கம் சரண். அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
இசை சரணின் ஆஸ்தான இசையமைப்பாளர் பரத்வாஜ்.
பாடல்கள் வழமை போல வைரமுத்து.
அதே நான்கு பேர் கூட்டணி, நான்காவது தடவையாகவும் இணைந்துள்ளது.. ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது..

தயாரிப்பு சிவாஜி பில்ம்ஸ்.

அல்டிமேட் ஸ்டார் பட்டத்தைப் பயன்படுத்தவேண்டாம் என்று அஜித் சொன்னதால்,வழமையான சரவெடிகளின்றி சட்டென்று எழுத்தோட்டத்துடன் படம் ஆரம்பிக்கிறது.

அதிலேயே பெரிய பரபரப்பில்லாத ஆச்சரியங்கள்..

இணை இயக்குனர் - அஜித்.. (ஆமாங்க தலையே தான்)
இப்போ இணை இயக்குனர்.. அடுத்த கட்டாமாக இயக்குனர் அவதாரம் எப்போது?அரை சதத்திலா?அது முடிந்த பிறகா?

கதை,திரைக்கதை,வசனம் - அஜித், சரண், யூகிசேது கூட்டணி..

சண்டைக்காட்சிகளுக்காக நான்கு வெவ்வேறு சண்டைப் பயிற்றுனர்கள்..
இதில் இருவர் வெளிநாட்டவர்கள்..
ரசிகர்களின் அந்த எதிர்பார்ப்புக்கமைய சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருப்பதோடு நீட்டி அலுப்படிக்கவில்லை என்பது ஆறுதலும், புதுமையும் கூட.

கொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..
மிகப்பெரிய வியாபாரக்கார,பணக்காரத் தந்தை..(அதுவும் அஜித்தே தான்.. இரட்டை வேடம்)
அவருக்கு இருக்கும் மூன்று பையன்களில் ஒருவர் (இளைய தல) இரண்டாவது தரம் வழி பிறந்தவர்.
இதனால் சகோதர சண்டை.சொத்துக்காக நடக்கும் மோதலில் ஜெயிப்பவர் யார் என்பதே சிறிய கதை..

பாடல்களை வைத்துக் கொண்டும்,இரண்டு கதாநாயகிகள் என்பதை மனதில் கொண்டும் சிலர் கண்மூடித் தனமாக ஊகித்துக் கொண்டது போல இது முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.

ஆனால் எடுக்கப்பட்ட களம்,விதம் ஆகியனவற்றால் 'அசல்' அசத்துகிறது.
படத்தின் பெரும்பாலான என்பதை விட முழுமையாகவே பிரான்சிலும்,மலேசியா,தாய்லாந்திலும் எடுத்திருக்கிறார்கள்.
பில்லாவுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் தொற்றியுள்ள ஸ்டைலிஷ் படமாக்கல் அசலிலும் தொடர்கிறது.

சிவாஜி நடித்த ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் திரைப்படத்துக்குப் பிறகு அசலே பிரான்ஸ் மண்ணில் நீண்ட காட்சிகள் வரும் படம் என நினைக்கிறேன்.

பிரசாந்த் என்ற புதுமுக ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் படமெங்கும் குளுமை..
பல காட்சிகளில் அன்டனியின் படத்தொகுப்பும்,ஒளிப்பதிவும் சேர்ந்துகொண்டு படத்தோடு எம்மை ஒன்றிக்க செய்கிறது.

நடிக,நடிகையர்

அஜித் இரட்டை வேடம்..

ஆனால் அசல் படத்தின் ஆங்கில உபதலைப்பு The Power of silence என்று சொல்வாதாலோ என்னவோ மனிதர் மிக அமைதியாக,ஆழமாக,குறைவாகப் பேசுகிறார்.

அஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.
எந்தவொரு பஞ்ச வசனமும் இல்லை.
ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.யூகி-அஜித்-சரண் கூட்டணியின் பொறுமையான உழைப்பு தெரிகிறது.

எந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)

மீசை,தாடி,கலரிங்,ஸ்பைக் செய்யப்பட்ட முடி என்று மனிதர் மிரட்டுகிறார்.
அவரது ஆடை வடிமைப்பில் செலுத்தப்பட்டுள்ள கவனமும்,நேர்த்தியும் அருமை.
தனது குறைபாடுகள் என்று விமர்சிக்கப்பட்ட விஷயங்களை சீர் செய்துகொள்ள அஜித் முயற்சி எடுத்துள்ளார்.
குரல்,நடனம்...

எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.

கதாநாயகிகளாக மிக நவ நாகரிக நங்கையாக ஷமீரா ஷெட்டியும்(ஜேம்ஸ் பொன்ட் அறிமுகப்பாடல் போல வரும் 'அசல்' பாடலும், குதிரைக்குத் தெரியும் பாடலும் அம்மணியின் கவர்ச்சியால் மினுங்குதுங்கோவ்),ஓரளவு நவ நாகரிக நங்கையாக மெலிந்து,கொஞ்சம் பொலிவாகியுள்ள பாவனாவும்.
சித்திரம் பேசுதடியில் படத்துக்குப் பிறகு பாவனா இதிலே தான் அழகாகத் தெரிகிறார்.பாடல் காட்சிகளில் முன்னெப்போதும் இல்லாத கவர்ச்சியும் தெளிக்கிறார்.

ஷமீரா ஒரு குதிரை தான்.சில உடைகளில் கவர்ச்சியும் வேறு சில உடைகளில் ஒரு பொறுப்பான கம்பீரமும் வருகின்றன.

வில்லன்களாக ஒரு நீண்ட பட்டாளம்..

சம்பத் - மிரட்டுகிறார்,ஆனால் இன்னும் கொஞ்சம் உணர்ந்து நடிக்க முயற்சி செய்யலாம்..
ராஜீவ் கிருஷ்ணா - ஒரு அழகான கதாநாயகன் இன்று அழகான வில்லனாகியுள்ளார்.கொஞ்சம் சைக்கோத் தனமான ஒரு பாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.

பழைய ஹீரோ சுரேஷ் மொட்டைத் தலையுடன் பிரான்ஸ் நாட்டுப் போலீஸ் ஆனால் வில்லனாக..
கஜினி வில்லன் பிரதீப் ராவத்..இவர் தான் சகுனி..மற்ற எல்லா வில்லன்களையும் ஆட்டுவது இவர் தான்.

இவர்களோடு ஷெட்டியாக மும்பை தாதாவாக ஒரு வில்லன்.பெயர் ஞாபகத்தில் இல்லை.மனிதர் அசத்தி இருக்கிறார்.சிம்பிளாக மிரட்டுகிறார்.ஸ்டைலாகவும் இருக்கிறார்.
ஆனால் இவரை சுற்றி உள்ள அடியாட்கள் எல்லோரிலும் அந்நிய வாசனை அடிப்பது தான் கொஞ்சம் ஓவர்.

தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரபுக்கு வந்து போகின்ற ஒரு வேடம். சொல்வதற்கு ஏதுமில்லை.

படத்தின் பின்னணியில் உழைத்த யூகி சேதுவுக்கு - பாத்திரப் பெயர் டொன் சம்சா சிரிக்க வைக்கும் பாத்திரம்.தன்னால் முயன்றவரை சிரிக்கவைக்கப் பார்த்துள்ளார்.நகைச்சுவை படத்தின் கதையோட்டத்துக்கு தேவைப்படாவிட்டால் முற்றாகவே தவிர்த்திருக்கலாம்.

கவர்ச்சியை படத்தில் ஆங்காங்கே தெளித்துவிட்டுள்ளார் சரண்.
வெளிநாட்டுப் படப்பிடிப்பும்,காட்சிகளின் பிரமாண்டங்களும் செல்வச் செழுமையைக் காட்டுகின்றன.தயாரிப்பாளர் வாழ்க.

சரணின் வழமையான ஆங்கிலப் பாணியிலான காட்சியமைப்புக்களும், சுவாரஸ்யமான,சாதுரியமான காட்சி நகர்த்தல்கள் ரசிக்கவைக்கின்றன.

எங்கே பாடல் படத்தில் இல்லை. அசல்,குதிரை பாடல்கள் குருக்கப்பட்டுள்ளன. இதனால் பாடல் காட்சிகளால் படம் தொய்வடையவில்லை.
துஷ்யந்தா,டொட்டடொயிங் பாடல்கள் இப்போதே ஹிட்.. இனி மேலும் ஹிட் ஆகலாம்.. பாடல்கள் எடுக்கப்பட்ட விதத்தில் குறைவைக்கவில்லை.

எனினும் இடைவேளைக்கு முன்பே ஒரு வில்லனின் கதையை அஜித் டக்கென்று முடித்துவிடுவதால்,இடைவேளையின் பின்னர் கொஞ்சம் படம் வேகம் குறைவதை இயக்குனர் கவனித்திருக்கலாம்.

பரத்வாஜ் பாடல்களை ஆகா ஓகோவென்று தராவிட்டாலும்,படத்தோடு பாடல்கள் அருமையாகவே இருக்கின்றன.பின்னணி இசையிலும் மனிதர் கலக்கி இருக்கிறார்.சரண் இவரை நம்பி தொடர்ந்து கூட்டணி அமைக்கலாம்.

படத்தில் விசேடமாக நான் கவனித்தவை..

சண்டைக் காட்சிகள் அளவுக்கதிகமாக நீட்டப்படாமை.
யாரையும் குத்தாத வசனங்கள்..
அளவான வசனங்கள்..
ஸ்டைலிஷ் costumes எல்லோருக்கும்..
நிரம்பலான பாத்திர பகிர்வு..(பிரபுவின் சைஸை வைத்து சொல்லவில்லை)

அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.ஆனால் அது ஓவரானதாக இல்லை.அவரின் பாத்திரப் படைப்பை சரண் கவனமாகக் கையாண்டுள்ளார்.நல்ல காலம் பில்லாவுக்குப் பிறகு அஜித் பேசுவதைக் குறைத்துக் கொண்டது.

அஜித்தின் பாத்திரத்தின் கனதியைப் பேண சரண் குழுவினர் எடுத்த சிரத்தை அருமை.இதனாலேயே படத்தில் அஜித் வில்லன்களை லாவகமாகப் பந்தாடும்போது ரசிக்கமுடிகிறது.

வழமையான 'தல' மசாலா,,
பார்க்கலாம்..ரசிக்கலாம்..
ஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இருந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..

அசல் - அஜித்தின் அசத்தல்..

பி.கு - இன்று பார்த்ததும் சுட சுட எழுதவேண்டும் என்பதால் 'அசல்' முந்திக் கொண்டது..
எனது ஆயிரத்தில் ஒருவன் நாளை வருவார்.

58 comments:

SShathiesh-சதீஷ். said...

நான் தான் முதலாவது. ஹீ ஹீ ஹீ

சூடான செய்தி.அஜித் ரசிகரிடமிருந்து அசல் பற்றி. அஜித் இப்போ நடிப்பை விட நடப்பதை அதிகம் நம்புகின்றார்.தனக்கு திருப்தி இல்லை ஆனால் அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கலாம்.(என்னையும் குழப்பிறார்.)படம் ஸ்டைலிஷாக இருக்கு.மொத்தத்தில் அசலுக்கு வேட்டைக்காரன் மேல். சத்தியமாக் இது என் மூஞ்சி புத்தக நண்பன் ஒருவரின் கருத்து. என்னுடையதல்ல

http://ennuley.blogspot.com/2010/02/blog-post.html

இவற்றை பார்த்து விட்டு அசல் நசல் என நினைத்தேன். அண்ணா நீங்கள் சொல்வதால் ஓரளவு நம்பிக்கை இருக்கு. தல அசத்தி இருந்தால் எங்கள் வாழ்த்துக்கள். நானும் பார்த்த பின் சொல்கின்றேன். அதற்க்கு முன் இதையும் கொஞ்சம் படியுங்கள்.

http://sshathiesh.blogspot.com/2010/02/blog-post_03.html

Jude said...

another masala!!! nice review though!

sellamma said...

லோசன் அண்ணா,,
படம் பார்க்காமலே விமர்சனம் எழுதி பிரபலமாகும் பல பதிவர்களுக்கு மத்தியில், படம் பார்த்து விமர்சனம் எழுதும் உங்கள் நேர்மைக்கு என் முதல் நன்றிகள்,,,

///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////

இது உங்களுக்கு விளங்குது,, மத்தவங்களுக்கு விளங்கலியே,,, (சத்தியமா விஜய் ரசிகர்களை சொல்லவில்லை)

sellamma said...

தலயின் படத்தை பாத்திட்டு அசத்தலா விமர்சனம் போட்டிருக்கீங்க,,
ரொம்ப நன்றிங்கண்ணா,,

ப்ரியா பக்கங்கள் said...

பரவாய் இல்லையே ..:)
நாங்கள் அடுத்த வாரம் பார்க்கலாம் என்று இருக்கிறம்.. என்ன 'தலை' படம் வராததால் 'தல' படத்துக்கு ஆதரவு

Paheerathan said...

ஒஹ் அப்போ பாக்கலாம் எண்டுறீங்க? ஆனாலும் இந்தகாலத்துல சினி சிட்டி பக்கம் போறதா இல்ல, கழுத்து தலையெல்லாம் காலால மிதிச்சு முறிச்சுபோடுவானுகள், அதனால ஒருவாரம் ஆகட்டும் :)

Vijayakanth said...

Official Media Sponsor endrapadiyaala than sudachchuda review ah? epdiyum innaikku ithu warum nu ethirpaarththathu than...!

Ethu eppadiyo Ajith therittaar nu solreenga? apdiththaane?

Unknown said...

அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//வழமையான 'தல' மசாலா,,
பார்க்கலாம்..ரசிக்கலாம்..
ஏகனுக்குப் பிறகு ஏக்கத்துடன் இருந்த அஜித்துக்கு ஆறுதல் இந்த 'அசல்'..
//

ஓ.கே..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.
//

நம்மிடம் சில உதாரணங்கள் உள்ளனவே.....,

Unknown said...

முதல் விமர்சனத்துக்கு முதல் பின்னூட்டம்.. :)))

balavasakan said...

அட அப்ப அஜித் தப்பிட்டார் எனகிறீங்க... ஏன் சரணுந்தான் சரணின் எத்தனை தொடர்ச்சியான தோல்விப்படங்களுக்கு பிறகு ..அசல்..வந்திருக்கிறது..ஏதோ நல்லலபடமா இருந்தால் சரி பாத்திரலாம்

கன்கொன் || Kangon said...

அடடா...
நல்லா இருக்கெண்டுறியளா? (அடப்பாவி, அதத்தாண்டா உந்தாப் பெரிய பதிவில சொல்லியிருக்கிறன் எண்டு பதில் சொல்லிராதயுங்கோ... ஹி ஹி...)

பார்ப்போம்... :)

KANA VARO said...

//முன்னைய சிவாஜியின் 'புதிய பறவை'இனதோ, வேறு எந்தப் புண்ணாக்குப் பறவையினதோ ரீமேக் இல்லை.//

//ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்.ஆனால் அவையும் ரசிக்கக் கூடியதாகவே உள்ளன.//

//எந்த கெட் அப்பாக இருந்தாலும் அந்த நளினமும் கம்பீரமும் அஜீத்துக்குப் பொருந்துவது போல வேறு யாருக்கும் பொருந்துவது தமிழில் அரிது.. (கமல்,அர்ஜுன்,சூர்யா மற்றையவர்கள்)//

//கொஞ்சம் (கொஞ்சமே தான்)பழகிய,பழைய கதை தான்..அதிலே கொஞ்சம் வித்தியாசம்..//

வித்தியாசம் புரிகின்றது புரிகின்றது.. எழுத்து நடை நன்றாகவே புரிகின்றது..

முந்திக்கொண்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

padam nanraga ullathu

Unknown said...

மிகை இல்லாத நேர்மையான விமர்சனம் ........
வாழ்த்துக்கள் ... தமிழ்10 தளத்தில் உங்கள் பதிவு சிறப்பு இடுகையாக இணைக்கப் பட்டுள்ளது

starock said...

அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.

Nimalesh said...

Ajith = stylish uh???

Anonymous said...

Nice review .... people will agree once they see the movie.. as said earlier by ajith For good films publicity i snot required. ASAL team will rock

Anonymous said...

super film... i watched just now.... 100 days confirmed

மணிஜி said...

பாத்துட்டு சொல்றேன்.

Subankan said...

இருக்கட்டும் அண்ணா, நாளை படத்தைப் பார்த்துவிட்டு, எனது விமர்சனத்தையும் எழுதிவிட்டு வந்து படிக்கிறேனே :)

பழூர் கார்த்தி said...

அப்போ பார்த்து விடலாம்.. விமர்சனத்திற்கு நன்றி!! அஜித் பேசுவதை குறைத்திருப்பது நல்லது :-)

Admin said...

film is really good in screen play.... film doesnt get bored in any seen... Ajith looks damn good.... Asal- Racy Entertainer...

யோ வொய்ஸ் (யோகா) said...

படம் பார்த்திற்ட்டு சொல்லுகிறேன்

Anonymous said...

அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.

///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////

Nanban said...

அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.

///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////

கஜீவன் said...

லோஷன் அண்ணா! எனெக்கன்னமோ உங்கட விமர்சனத்தில அரசியல் இருப்பது போல தோணுது (Media sponser)....இந்தப் படத்தில அப்படி என்ன இருக்கு????? தயவுசெய்து இப்படியான விமர்சனங்களை பல நபர்கள் விரும்பி பார்க்கும் உங்களது Blog ல் போட்டு மற்ற மொழி படங்கள் எங்கேயோ சென்றுகொண்டிருக்க இப்படியான படங்களால் தரங்கெட்டு போகும் தமிழ் சினிமாவை வளர்க்காதீர்கள்!!!!
pleeease!

Anonymous said...

என்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ... ஏன் லோஷன் நல்லாத்தான் இவ்வளவு நாளும் எழுதினீங்க .........?? நான் சொல்லுறன்., இந்தப் படம் அஜித்துக்கு நல்ல பாடம் கற்பிக்கும் வெறும் கூட்டணியையும் செண்டிமேன்டையும் நம்பி படம் பண்ணக் கூடாது எண்டு ... இந்தப் படம் வெல்லாது என்றது மட்டும் உண்மை ... அதுக்கு அஜித் ஒண்டும் -- "வேறு யாரும் இல்ல" ---- கதை இல்லாமலும் கெட்டப்பு மாத்தாமலும் நடிச்சு படத்த ஓட்ட...

//ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.//

தொடக்கத்திலே உங்களுக்கு டவுட் இது வெற்றி பெறுமா இல்லையா எண்டு.... அப்ப எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ...... நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம் எந்த படத்துக்கு.

suthan said...

அஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.
ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்......நிங்களும்.

Suresh said...

Film very nice... good entertainment with racy screenplay... Everyone will love this movie... though they r not Ajith fans... excellent work from Ajith and Cinematographer Prasanth

Anonymous said...

Ajith Rocks!!!!!

Deep said...

YESTERDAY EVENING ..I WATCH THE MOVIE..ITS LIKE HOLLYWOOD MOVIE...REALLY FANTASTIC..WORK...REALLY ROCKING MAN..AJITH.IN THIS MOVIE..DNT ..SPAM..ANYTHING WITHOUT WATCHING MOVIE...KICK U,...GO AND WATCH IN THEATRES...AND REPLY........

KANA VARO said...

//Nilaa
என்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ...//

றொம்ப லேற்..

problogger said...

ரொம்ப மொக்கையா இருக்கு எப்ப பார்த்தாலும் தல தல...சும்மா ஒரு bag ah தூக்கிட்டு slow motion ல நடந்து வந்தா படம் ஓடிடுமா..சண்டை காட்சிகள் சூப்பர் ..songs waste, story old..climax very old..வேற என்னப்பா..

சுதர்ஷன் said...

மேலே எதிராக அடித்த கம்மேண்டுகளுக்கு " விஜய் செத்தாலும் இப்பிடி ஒரு படம் நடிக்கமாட்டான்..
நாயகர்களுக்காக ஒரு மாஸ் திரைப்படத்தை(கதை பெரிதாக எதிர்பார்க்க கூடாது ) சும்மா சொல்ல கூடாது . என்ன தான் சொன்னாலும் இந்த பாத்திரம் யாராலும் செய்யமுடியாதது. பாஷா ரஜனிக்கு பிறகு.தமிழ் சினிமாவில் மாற்றவேண்டிய எவளவோ விஷயங்கள் அசலில் மாற்றப்பட்டுள்ளது .

Anonymous said...

I have one question for VIjay fans.....In Vettaikaran, why on earth was he walking like Ajith in Attagasam???...Vijay copied Billa Ajith in Villu and Attagasam Ajith in Vettaikaran...

ராம்குமார்.தி(கனடா) said...

எனக்கு அஜித்தின் நடிப்புப் பிடிக்கும்.ஆனால் இந்த விமர்சனத்தில் நேர்மை தெரியவில்லை. 'அசல்' படத்துக்கான விளம்பரம் போலத் தெரிகின்றது.

suthan said...

விடுங்க பாஸ்..கேக்குறவர் (பேநா).....மூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))

Sadeesh said...

Hello All,

Dont spread false comments on the film. The movie is good though its a kind of old storyline. It would never make u feel bored. Wat more would you expect from a movie nowadays?? The funda of a movie is to keep you entertained.. ASAL DOES IT REALLY WELL... All Cinema Lovers (Excluding that fucking Vijay fans) would definitely accept this...

Am sure that those who spread false comments about Asal are Vijay fans and except them every1 liked the movie... As said, a good movie will speak by itself and Asal is doing the right thing now...

Sonoo...

Sadeesh said...

Hello All,

Dont spread false comments on the film. The movie is good though its a kind of old storyline. It would never make u feel bored. Wat more would you expect from a movie nowadays?? The funda of a movie is to keep you entertained.. ASAL DOES IT REALLY WELL... All Cinema Lovers (Excluding that Vijay fans) would definitely accept this...

Yoganathan.N said...

நடுநிலையான விமர்சனம். என்னுடைய விமர்சனம். படித்துவிட்டு காமெண்ட் போடுங்க.

http://thalafanz.blogspot.com/

ARV Loshan said...

நன்றி சதீஷ்.. பார்த்திட்டு திருப்தி என்றும் சொல்லியுள்ளீர்கள்.. :)
உங்க கொடுமைப் பதிவும் வாசித்தேன்..

நன்றி ஜூட்.. :)

நன்றி செல்லம்மா.. நான் எப்போதுமே பார்த்திட்டு தான் எழுதிறேன்.. :) சிலதைப் பார்த்திட்டும் எழுதுவதில்லை.. ;)

///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////

இது உங்களுக்கு விளங்குது,, மத்தவங்களுக்கு விளங்கலியே,,, (சத்தியமா விஜய் ரசிகர்களை சொல்லவில்லை)//

ஆமாமா எனக்கு நல்லாவே விளங்குது.. ;)

ARV Loshan said...

அப்படியே ஆகட்டும் சுவாமிகள்.. சோ நீங்க வெளியிலிருந்து ஆதரவா? ;)

பகீரதன்.. இப்ப தான் ஒரு வாரம் ஆச்சே.. பார்த்தாச்சா?

விஜயகாந்த்,
Official Media Sponsor endrapadiyaala than sudachchuda review ah? epdiyum innaikku ithu warum nu ethirpaarththathu than...!//
அப்பிடில்லாம் இல்லை.. பார்க்கக் கிடைத்தது.. நேரமும் கிடைத்தது..
ஆதவனும் இப்பிடித்தானே போட்டேன்..

Ethu eppadiyo Ajith therittaar nu solreenga? apdiththaane?//
அப்பிடித் தான் சகலரும் சொல்றாங்க.. :)

ARV Loshan said...

லோகேஸ்வரன்.. ஆமாங்கோவ்.. இப்ப தான் நிரூபணம் ஆயிருச்சே..
=============
சுரேஷ்.. :)

//எனினும் வயதான தந்தைக்கும் மகனுக்கும் இடையில் மீசை,தாடி கூட ஒரே மாதிரி இருப்பது தான் கொஞ்சம் உறுத்துகிறது.
//

நம்மிடம் சில உதாரணங்கள் உள்ளனவே.//
ஆமா. ஆனால் ரொம்பவும் அரிதே..
=============
முகிலன் said...
முதல் விமர்சனத்துக்கு முதல் பின்னூட்டம்.. :))//

இல்லை முகிலன்.. கொஞ்சம் லேட் நீங்கள்..

ARV Loshan said...

Balavasakan said...
அட அப்ப அஜித் தப்பிட்டார் எனகிறீங்க... //

ஆமாம்.. :)

ஏன் சரணுந்தான் சரணின் எத்தனை தொடர்ச்சியான தோல்விப்படங்களுக்கு பிறகு ..அசல்..வந்திருக்கிறது....//

எத்தனை? இல்லையே.. வட்டாரம் கூட சராசரியாக ஓடியது.. கடைசியாக வந்த மோதி விளையாடு தான் மூக்குடைத்தது..

=============

கன்கொன் || Kangon said...
அடடா...
நல்லா இருக்கெண்டுறியளா? (அடப்பாவி, அதத்தாண்டா உந்தாப் பெரிய பதிவில சொல்லியிருக்கிறன் எண்டு பதில் சொல்லிராதயுங்கோ... ஹி ஹி...)

பார்ப்போம்... :)//

அடப் பாவி.. கேள்வியும் நீயே பதிலும் நீயே வா?

பார்த்தாச்சா?

ARV Loshan said...

VARO said...

வித்தியாசம் புரிகின்றது புரிகின்றது.. எழுத்து நடை நன்றாகவே புரிகின்றது..//

உங்களுக்கு என்ன புரிந்ததோ அது எனக்குப் புரியவில்லை.. எழுத்து நடை வழமை தான்.. :)

முந்திக்கொண்ட பதிவுக்கு வாழ்த்துக்கள்.//

நன்றி
===============

Anonymous said...
padam nanraga ullathu //

ஆமாம் :)

=====================
தமிழினி said...
மிகை இல்லாத நேர்மையான விமர்சனம் ........
வாழ்த்துக்கள் ... தமிழ்10 தளத்தில் உங்கள் பதிவு சிறப்பு இடுகையாக இணைக்கப் பட்டுள்ளது//

நன்றி. நன்றி :)

ARV Loshan said...

starock said...
அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.//

ஆமாங்கோவ்.. நீங்க சொன்னதும் நான் சொன்னதும் நடந்துவிட்டது..====================
Nimalesh said...
Ajith = stylish uh???//

இதிலென்ன சந்தேகம்.. :)

===================

Dreamer said...
Nice review .... people will agree once they see the movie.. as said earlier by ajith For good films publicity i snot required. ASAL team will rock //

tx .. it has happened ..

==================

Anonymous said...
super film... i watched just now.... 100 days கோன்பிர்மத்//
:)

=====================
===========================
தண்டோரா ...... said...
பாத்துட்டு சொல்றேன்.//

இன்னும் பார்க்கலையா? சொல்றேன்னு சொன்னீங்களே.. :)

ARV Loshan said...

Subankan said...
இருக்கட்டும் அண்ணா, நாளை படத்தைப் பார்த்துவிட்டு, எனது விமர்சனத்தையும் எழுதிவிட்டு வந்து படிக்கிறேனே :)//

சரி.. உங்கள் விமர்சனமும் பார்த்தேன்.. நான் சொன்னது சரி தான் :)

==============================
===========
பழூர் கார்த்தி said...
அப்போ பார்த்து விடலாம்.. விமர்சனத்திற்கு நன்றி!! அஜித் பேசுவதை குறைத்திருப்பது நல்லது :-)//

அதே அதே.. அது...

===========================
இரா.சுரேஷ் பாபு said...
film is really good in screen play.... film doesnt get bored in any seen... Ajith looks damn good.... Asal- Racy Entertainer...//

:) tx :)

=======================

யோ வொய்ஸ் (யோகா) said...
படம் பார்த்திற்ட்டு சொல்லுகிறேன்//

சரி.. இப்ப சொல்லுங்க..

ARV Loshan said...

nonymous said...
அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.

///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////

===========

Nanban said...
அப்போ "அசல்" படம் நிச்சயம் 'அசத்தும். அஜித்தின் வெற்றிப்பட வரிசயில் இதுவும் ஒன்றாக அமையும்.

///அஜித்தின் கம்பீரத்தினால் அஜித் பல இடங்களில் ஒரு one man show நடத்துகிறார்.////

இரண்டு பெரும் ஒரு ஆளா? :)

ARV Loshan said...

கஜீவன் said...
லோஷன் அண்ணா! எனெக்கன்னமோ உங்கட விமர்சனத்தில அரசியல் இருப்பது போல தோணுது (Media sponser)....இந்தப் படத்தில அப்படி என்ன இருக்கு????? தயவுசெய்து இப்படியான விமர்சனங்களை பல நபர்கள் விரும்பி பார்க்கும் உங்களது Blog ல் போட்டு மற்ற மொழி படங்கள் எங்கேயோ சென்றுகொண்டிருக்க இப்படியான படங்களால் தரங்கெட்டு போகும் தமிழ் சினிமாவை வளர்க்காதீர்கள்!!!!
pleeease!//

தம்பி கஜீவன். உங்க சந்தேகத்துக்கு தெளிவாகவும் மிகத் தெளிவாகவும் facebookஇல் பதில் சொல்லிவிட்டேன்..

நீங்கள் யாரின் ரசிகர், எதனால் இந்த காண்டு என்று புரிந்ததால் நான் என்னைக் குழப்பிக் கொள்ளவில்லை..

தரங்கெட்ட சினிமா என்றால் வரையறை என்ன என்றெல்லாம் குழம்பத் தேவையில்லை.. மசாலாவில் சிறந்த மசாலா என்பதை இங்கே தேர்ந்தால் சரி..

எனவே உங்கள் கருத்தை நான் நிராகரிக்கிறேன்.. நன்றி..

ARV Loshan said...

Nilaa said...
என்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ... ஏன் லோஷன் நல்லாத்தான் இவ்வளவு நாளும் எழுதினீங்க .........?? நான் சொல்லுறன்., இந்தப் படம் அஜித்துக்கு நல்ல பாடம் கற்பிக்கும் வெறும் கூட்டணியையும் செண்டிமேன்டையும் நம்பி படம் பண்ணக் கூடாது எண்டு ... இந்தப் படம் வெல்லாது என்றது மட்டும் உண்மை ... அதுக்கு அஜித் ஒண்டும் -- "வேறு யாரும் இல்ல" ---- கதை இல்லாமலும் கெட்டப்பு மாத்தாமலும் நடிச்சு படத்த ஓட்ட...

//ஹட் ற்றிக்குக்கு அதிகமாக மேலும் ஒரு வெற்றி கிடைக்கும் என்றே தெரிகிறது.//

தொடக்கத்திலே உங்களுக்கு டவுட் இது வெற்றி பெறுமா இல்லையா எண்டு.... அப்ப எதுக்கு இவ்வளவு பில்ட் அப்பு ...... நீங்க கொஞ்சம் அடக்கி வாசிச்சி இருக்கலாம் எந்த படத்துக்கு.//

ம்பு இப்போ தெளிஞ்சிட்டா? :)

உங்களை நினைச்சா பாவமா இருக்கு..

===============

suthan said...
அஜித் பேசும் மொத்த வசனங்களை ஒரு பக்கத் தாளில் எழுதிவிட முடியும்.
ஆனால் மற்றவர்கள் அநேகர் 'தல' புராணம் பாடுகிறார்கள்......நிங்களும்.//

நானும்? நான் அசல் புராணம் தான் பாடியுள்ளேன்.. :)

ARV Loshan said...

Suresh said...
Film very nice... good entertainment with racy screenplay... Everyone will love this movie... though they r not Ajith fans... excellent work from Ajith and Cinematographer Prasanth //

yeah .. :)

Anjaney said...
Ajith Rocks!!!!!//

asal too ..

Deep said...
YESTERDAY EVENING ..I WATCH THE MOVIE..ITS LIKE HOLLYWOOD MOVIE...REALLY FANTASTIC..WORK...REALLY ROCKING MAN..AJITH.IN THIS MOVIE..DNT ..SPAM..ANYTHING WITHOUT WATCHING MOVIE...KICK U,...GO AND WATCH IN THEATRES...AND REPLY......//

:)

கரன் said...

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14931646&cid=13525926

ARV Loshan said...

VARO said...
//Nilaa
என்ன லோஷன் , படம் பாத்தீங்களா இல்ல நித்திரையநீங்கள் தியேட்டர்ல அல்லது பட விநியோகத்திக்கு விளம்பரமா இல்ல அஜித் ரசிகன் எண்டு சொல்லாம சொல்லுறீங்களா.... நானும் படம் பாத்தேன் ..... விமர்சனங்களையும் வேற ப்லோக்கேர்களில வாசிச்சன் ... ஆனா இப்பிடி ஒரு அஜித்துக்கு வக்காளத்துமாதிரி படத்திலையும் பார்க்கல ..... ஓரிடத்திளையும் வசிக்கல ...//

றொம்ப லேற்..//

வந்திட்டாரு இ.வி.ர.ம.கொ.ப.செ ;)

problogger said...
ரொம்ப மொக்கையா இருக்கு எப்ப பார்த்தாலும் தல தல...சும்மா ஒரு bag ah தூக்கிட்டு slow motion ல நடந்து வந்தா படம் ஓடிடுமா..சண்டை காட்சிகள் சூப்பர் ..songs waste, story old..climax very old..வேற என்னப்பா..//

சரிங்க.. அப்ப உங்களுக்குப் பிடிக்கல.. ஓகே..

S.Sudharshan said...
மேலே எதிராக அடித்த கம்மேண்டுகளுக்கு " விஜய் செத்தாலும் இப்பிடி ஒரு படம் நடிக்கமாட்டான்..
நாயகர்களுக்காக ஒரு மாஸ் திரைப்படத்தை(கதை பெரிதாக எதிர்பார்க்க கூடாது ) சும்மா சொல்ல கூடாது . என்ன தான் சொன்னாலும் இந்த பாத்திரம் யாராலும் செய்யமுடியாதது. பாஷா ரஜனிக்கு பிறகு.தமிழ் சினிமாவில் மாற்றவேண்டிய எவளவோ விஷயங்கள் அசலில் மாற்றப்பட்டுள்ளது .//

உங்கள் விமர்சனமும் பார்த்தேன்.. பதிலிட்டேன்..

ARV Loshan said...

Anonymous said...
I have one question for VIjay fans.....In Vettaikaran, why on earth was he walking like Ajith in Attagasam???...Vijay copied Billa Ajith in Villu and Attagasam Ajith in Vettaikaran...

February 7, 2010 1:36 AM

ராம்குமார்.தி(கனடா) said...
எனக்கு அஜித்தின் நடிப்புப் பிடிக்கும்.ஆனால் இந்த விமர்சனத்தில் நேர்மை தெரியவில்லை. 'அசல்' படத்துக்கான விளம்பரம் போலத் தெரிகின்றது.

February 8, 2010 9:54 PM

suthan said...
விடுங்க பாஸ்..கேக்குறவர் (பேநா).....மூடியா இருந்தா அசல் ஆஸ்காருக்கு போகுதுன்னு சொல்வாங்க :))

February 11, 2010 11:31 PM

Sonoo said...
Hello All,

Dont spread false comments on the film. The movie is good though its a kind of old storyline. It would never make u feel bored. Wat more would you expect from a movie nowadays?? The funda of a movie is to keep you entertained.. ASAL DOES IT REALLY WELL... All Cinema Lovers (Excluding that Vijay fans) would definitely accept this...

Am sure that those who spread false comments about Asal are Vijay fans and except them every1 liked the movie... As said, a good movie will speak by itself and Asal is doing the right thing now...

Sonoo...//

ஓகே :)

Yoganathan.N said...
நடுநிலையான விமர்சனம். என்னுடைய விமர்சனம். படித்துவிட்டு காமெண்ட் போடுங்க.

http://thalafanz.blogspot.com///

பார்த்தேன்.. பயங்கர தல ரசிகர் போல.. உங்களுக்குப் பிடித்ததில் சந்தேகமேயில்லை.. :)

Yoganathan.N said...

//பார்த்தேன்.. பயங்கர தல ரசிகர் போல.. உங்களுக்குப் பிடித்ததில் சந்தேகமேயில்லை.. :)//

அட, நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என நினைக்கிறேன். எனக்கு பிடித்ததென்றும் நான் சொல்லவில்லை. பிடிக்கவில்லை என்றும் நான் குறிப்பிடவில்லை...
மொத்ததில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அதான் உண்மை :(

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner