February 19, 2010

ஜெயசூரிய ஜெயவேவா! முரளி - பிறகு பார்க்கலாம்


வந்துட்டாரைய்யா..

ஜனாதிபதித் தேர்தலில் இட்ட மை நகத்திலிருந்து முற்றாக அகலும் முன் அடுத்த தேர்தலாக நாடாளுமன்றத் தேர்தல் இதோ எட்டிப்பார்க்கப் போகிறது.

வேட்பாளர் தெரிவுகளும், கூட்டணி வியூகங்களும் இன்றும் இழுபறி – அரைகுறை நிலைகளிலேயே உள்ளன.

தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.

விருப்பத்தெரிவு வாக்குகளுக்காக இப்போதே சண்டைகள் சொந்தக்கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுக்கள், கயிறிழுப்புக்கள் தொடங்கிவிட்டன.

ஆளுந்தரப்பிலே முன்பு ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து அரசுப்பக்கம் தாவிய முக்கியஸ்தர்கள் அனைவருக்குமே (அமைச்சர்.கலாநிதி சரத் அமுனுகம தவிர) ஆப்பு வைக்கப்பட்டுவிட்டது.

பெருமளவு வாக்குகளில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மாவட்ட அமைப்பாளர் பதவி இந்தக் கட்சி மாறியவர்கள் யாருக்குமே வழங்கப்படவில்லை. தேர்தலில் இவர்கள் வென்றாலும் கூட அடுத்த அமைச்சரவையில் பலபேர் கழற்றிவிடப்படுவார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த ஒதுக்கப்பட்டவர்களில் அரசின் பிரசார பீரங்கிகள் கெஹெலிய ரம்புக்வெல்ல, ராஜித சேனாரத்ன போன்றோரும் அடங்குவது அதிசயம்.

ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் போட்டியிடுவதன் மூலம் மற்றுமொரு அரசியல் வம்சம் உருவாகிறது.

எனினும் ஒருகுடும்பத்தில் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கே வாய்ப்பு என – ஆளுங்கட்சி முடிவெடுத்திருப்பதால், பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உட்பட பலரின் வாரிசு அரசியல் திட்டங்களுக்கு ஆப்பு.

அப்படியானால் ஜனாதிபதியின் சகோதரர்கள் பற்றி? அவர்களது குடும்பங்கள் பற்றி?

பலரும் எதிர்பார்த்திருந்த விஷயம் உறுதியாகியுள்ளது.

அதிரடி வீரர் சனத் ஜெயசூரிய தனது அடுத்த இனிங்சை இப்போது அரசியலில் ஆரம்பிக்கிறார்.

கிரிக்கெட்டில் அவரது ஆட்டம் ஆட்டங்காண ஆரம்பிக்கவே – சனத் தனது அடுத்த கட்ட நகர்வை இரகசியமாக ஆரம்பித்திருந்தார்.

முன்பொரு தடவை அணியிலிருந்து நீக்கப்பட்ட நேரம் ஜனாதிபதியின் தலையீட்டினால் அசந்த டீமெல் மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதற்கு நன்றிக்கடனாகவும், அடுத்த கட்ட வாழ்வின் இருப்புக்காகவும் சனத் ஜெயசூரிய கால் காப்பு, கை கிளவுஸ் கழற்றிவிட்டு, கை கூப்பிக்கொண்டு களமிறங்கப் போகிறார்.

அவர் எடுத்த முடிவு என்னைப்பொறுத்தவரை சரிதான்!

இலங்கை அணியில் அவரது இடம் காலி!

T 20 அணியில் மட்டுமே எஞ்சியிருக்கிறார்.
அதுவும் உறுதியில்லை. IPL ஆட்டமும் இந்த வருடத்துடன் சரி என்று நினைக்கிறேன்.

எதிர்க்கட்சியில் இறங்கி உள்ளே – வெளியே விளையாட முடியாது – வேறு வழி?

All the best Sanath!

ஆளுங்கட்சி என்பதால் பெரிதாக பவுன்சர்கள், யோர்க்கர்கள் வராது – ஆனால் play with straight bat(நேர்மையாக விளையாடுங்கள்)
ஆனால் கிரிக்கெட்டையும் அரசியலையும் சமனாகக் கொண்டு செல்வதாக மாத்தறை மன்னன் பேட்டியளித்துள்ளார். எப்படியென்று தான் புரியவில்லை..

ஏற்கனவே களம்கண்டு – காயமும் கண்ட அர்ஜீன ரணதுங்க, ஹஷான் திலகரட்ண ஆகியோரும் இம்முறை தேர்தலில் நிற்பர் என நினைக்கிறேன்.

எனினும் சனத்தின் தோழரான மற்றொருவர் முரளீதரன் கண்டியில் தேர்தலில் களமிறங்குவார் எனக்கிளம்பிய ஊகங்கள் பொய்த்துவிட்டன.

இப்ப வேணாமே.. ப்ளீஸ்

ஒரு ஆங்கில இணையத் தளத்தில் முரளி நுவர எலியவில் களம் காண்கிறார் என்று செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் அது சும்மா ஊகமாம்.
அவர் குடும்பத்திலிருந்து கிடைத்த உறுதியான தகவல் இது.
இறுதி நேர அழுத்தங்கள் கூட அவர் முடிவை மாற்றாது என்பது நிச்சயம்.

அவர் தனது தந்தையைப் போல ஒரு ஐடியல் / ஐடியா Businessman. அவசரப்பட்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகமாட்டார்.

இன்னும் இளமையும், திறமையும் மிச்சமிருக்கே...

2011 உலகக்கிண்ணத்துக்குப் பின்னர் ஒரு தேர்தல் வந்தால் முரளீதரன் ஆளுந்தரப்பின் வேட்பாளராக கண்டி மாவட்டத்தில் களத்தில் குதிப்பார்/குதிக்கலாம்..

இந்தப் பதிவுக்கு நேரடி சம்பந்தம் இல்லாவிட்டாலும் இதையும் சும்மா வாசித்துப் பாருங்களேன்..

தமிழ்க்கூட்டமைப்பு, எதிர்த்தரப்புக் கூத்துக்கள், கூட்டுக்கள், குழப்பங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.

36 comments:

என்.கே.அஷோக்பரன் said...

//இப்போதே சண்டைகள் சொந்தக்கட்சிக்குள்ளேயே குத்துவெட்டுக்கள், கயிறிழுப்புக்கள் தொடங்கிவிட்டன.//

ஓம்..ஓம்.. உது எல்லா இடத்திலேயுந்தான் நடக்குது.

//எனினும் ஒருகுடும்பத்தில் தேர்தலில் போட்டியிட ஒருவருக்கே வாய்ப்பு//

நல்லது! (மற்றவையளும் கவனிக்க)

சனத் எடுத்த முடிவு சரியா தவறா என்று காலந்தான் பதில் சொல்லும். அரசியலில் prediction என்பது செய்யமுடியாது - ஏனென்றால் இன்றைய அரசியற் போக்கு நிலையற்றது. நீங்கள் சொன்னது போல கெஹெலியவுக்கு ஆப்படிக்கப்படும் என்று யார் எதிர்பார்த்தார்?

அது சரி... முரளியிண்ட பிரவேசம் இருக்கட்டும், உங்கட பிரவேசம் எப்ப? ;-)

கூட்டமைப்பு பற்றிய பதிவை படிக்கக் காத்திருக்கின்றேன்.

Buஸூly said...

ஆக மொத்ததில இனி கிரிக்கெட்டுக்கும் வளமான எதிர்காலம் தான் போல...........!!!

புல்லட் said...

நல்ல பதிவு..

ஒரு குடும்பத்தில ஒருத்தர்தான்போட்டியிடலாம் .. ஆனால் ஜனாதிபதியும் அவரது சகோக்களும் தனித்தனி குடும்பங்கள்தானே? :P

நீங்கள் குடுத்த லிங்கில சொன்னது உண்மையொ? ஹபரணை ஓட்டலில் அப்பிடி கதைச்சவரோ? கடைசி பந்தியப்பத்தா அந்தாள் சரியான மொக்கன் போலயல்லொ கிடக்க? டொக்குத்தரம்மாவோட எப்பிடி சமாளிக்கிறார்? :P


கூட்டமைப்பிண்ட விளாட்டை படிக்க ஆர்வமாயிருக்கம்.. எழுதுங்கோ!

Nimalesh said...

To be honest i dont like that sana coming to politics......... + i too heard ab murali bt not confirm.. let's see bt any how susanthika gonna contest in kegalle as per Daliy mirror....

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...

சனத் எடுத்த முடிவு சரியா தவறா என்று காலந்தான் பதில் சொல்லும். அரசியலில் prediction என்பது செய்யமுடியாது - ஏனென்றால் இன்றைய அரசியற் போக்கு நிலையற்றது. நீங்கள் சொன்னது போல கெஹெலியவுக்கு ஆப்படிக்கப்படும் என்று யார் எதிர்பார்த்தார்?//

அதென்றால் சரி தான்.. ஆனால் அதிகம் ஆசை வளர்க்காத வரை ,அமைச்சுக்கள் மீது ஆர்வம் காட்டாதவரை வளமாக,நலமாக இருக்கலாம்.. :)

அது சரி... முரளியிண்ட பிரவேசம் இருக்கட்டும், உங்கட பிரவேசம் எப்ப? ;-)//

ஏன்? நான் இப்போது நிம்மதியாக இருக்கிறேனே.. பணம்,பலம் இன்னும் சேரட்டும்.. பத்திரமாக இருக்கும் காலம் வந்தபிறகு பார்க்கலாம்.. ;)

கூட்டமைப்பு பற்றிய பதிவை படிக்கக் காத்திருக்கின்றேன்.//

விஷயங்கள் சேகரிக்கிறேன்..



Buஸூly said...
ஆக மொத்ததில இனி கிரிக்கெட்டுக்கும் வளமான எதிர்காலம் தான் போல...........!!!//

ம்ம்ம்..

இலங்கேஸ் said...

அண்ணா,
ஆகட்டும் ஆகட்டும்.........
பொறுத்திருந்து பார்ப்போமே ,காலம் பதில் சொல்லும்..............

ARV Loshan said...

புல்லட் said...
நல்ல பதிவு..

ஒரு குடும்பத்தில ஒருத்தர்தான்போட்டியிடலாம் .. ஆனால் ஜனாதிபதியும் அவரது சகோக்களும் தனித்தனி குடும்பங்கள்தானே? :ப//

ஆகா.. விட்டா ஐடியாவைஎல்லாம் நீங்களே போட்டுக் குடுப்பீங்க போல.. தம்பியரின் அறிவு மீதான மயக்கம் போல.. ;)



நீங்கள் குடுத்த லிங்கில சொன்னது உண்மையொ? ஹபரணை ஓட்டலில் அப்பிடி கதைச்சவரோ? கடைசி பந்தியப்பத்தா அந்தாள் சரியான மொக்கன் போலயல்லொ கிடக்க? டொக்குத்தரம்மாவோட எப்பிடி சமாளிக்கிறார்? :P //



முரளியர் ஒரு அப்பாவி..வாயைக் கட்டுப்படுத்தத் தெரியாது.. எக்குத்தப்பா உணர்ச்சிவசப்பட்டு எக்கச்சக்கமா உளறித் தள்ளிவிட்டார்.. ஆனால் இவ்வளவு நாளா விஷயம் வெளி வராதது எனக்கும் ஆச்சரியமே..


கூட்டமைப்பிண்ட விளாட்டை படிக்க ஆர்வமாயிருக்கம்.. எழுதுங்கோ!//

ஆனா ஒரு நிபந்தனை.. தாங்களும் தங்கள் கூர்ந்த அரசியல் பார்வையைப் பதிவிட வேண்டும்.. சரியோ?

ARV Loshan said...

Nimalesh said...
To be honest i dont like that sana coming to politics......... + i too heard ab murali bt not confirm.. let's see bt any how susanthika gonna contest in kegalle as per Daliy mirror....//

யாருக்குத் தான் விருப்பம்.. ஆனால் அவரின் விருப்பம் தான் முக்கியம்..

ம்ம் சுசியும் புதிய களத்தில் ஓடப் போறா.. :)

ARV Loshan said...

இளங்கேஷ் said...
அண்ணா,
ஆகட்டும் ஆகட்டும்.........
பொறுத்திருந்து பார்ப்போமே ,காலம் பதில் சொல்லும்...//

நீங்க சொன்னா சரி.. :)

இலங்கேஸ் said...

முரளியும் கண்டி மாவட்ட குளத்தில குதிச்சிட்டாரமே......................
அப்போ இனி தமிழ் பெயர்களையும் இலங்கை அணியில பார்க்கலாம் போலிருக்கே

ARV Loshan said...

இளங்கேஷ் said...
முரளியும் கண்டி மாவட்ட குளத்தில குதிச்சிட்டாரமே......................//

யார் சொன்னது? அதான் தெளிவா சொல்லிட்டனே.. அப்போ முன்னது டெம்ப்ளேட் பின்னூட்டமா? ;)

கன்கொன் || Kangon said...

அண்ணா!
முரளி பற்றிய செய்தி உண்மைதானா என்று உறுதிப்படுத்திச் சொல்ல முடியுமா?
எனக்குத் தெரிந்தவரை இப்பிடியொரு விடயம் இடம்பெற்றிருந்தால் இங்கிருப்பவர்கள் சும்மா இருந்திருக்க மாட்டார்கள்.

'கட்டுப்பாடற்ற பகுதி மக்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கவில்லை' என்று சொல்லியிருக்கலாம், ஆனால் நேரடியாக சொல்லியிருக்க வாய்ப்புக்கள் உண்டா?


சனத் ஐயா வாழ்க...
நான் நேற்று ருவீற்றியது தான்...
'2011 உலகக் கிண்ண அணி அறிவிப்பு. அமைச்சர் சனத் ஜெயசூரியாவும் விளையாடுகிறார்'

நேற்று சுபா அண்ணா கேட்டது தான்.
இவர்கள் அரசியலில் களமிறங்குகிறார்களா அல்லது இறக்கப்படுகிறார்களா? ! !

யோ வொய்ஸ் (யோகா) said...

அரசியலா அப்படினா என்னா?

எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அரசியல்தான்.

சனத் அரசியலுக்கு வருவது எனக்கு கவலையான விடயம்

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
அண்ணா!
முரளி பற்றிய செய்தி உண்மைதானா என்று உறுதிப்படுத்திச் சொல்ல முடியுமா?
எனக்குத் தெரிந்தவரை இப்பிடியொரு விடயம் இடம்பெற்றிருந்தால் இங்கிருப்பவர்கள் சும்மா இருந்திருக்க மாட்டார்கள்.//

எனக்கு சரியாத் தெரியவில்லை.. அது தான் நானும் நினைத்தேன்..



'கட்டுப்பாடற்ற பகுதி மக்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கவில்லை' என்று சொல்லியிருக்கலாம், ஆனால் நேரடியாக சொல்லியிருக்க வாய்ப்புக்கள் உண்டா?//

கலாம்.. ஆங்கிலம் என்பதால் சிங்களப் பக்கம் பரவாமல் இருந்திருக்கலாம்.


சனத் ஐயா வாழ்க...
நான் நேற்று ருவீற்றியது தான்...
'2011 உலகக் கிண்ண அணி அறிவிப்பு. அமைச்சர் சனத் ஜெயசூரியாவும் விளையாடுகிறார்'//

ஹா ஹா.. இலங்கையின் புதிய சாதனை??

ஆனால் அமைச்சர் என்பது கொஞ்சம் அதிகமே..



நேற்று சுபா அண்ணா கேட்டது தான்.
இவர்கள் அரசியலில் களமிறங்குகிறார்களா அல்லது இறக்கப்படுகிறார்களா? ! !//

இதிலென்ன கேள்வி வேண்டிக் கிடக்கு.. இலங்கையில் தானே இருக்கீங்க? ;)

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...
அரசியலா அப்படினா என்னா?//

அதுவே அனைத்துமாகி ஆட்டி அடக்கும் விஷயம்.. :)\



எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அரசியல்தான். //

அப்போ பிடிச்ச வார்த்தை - அப்பாவி??



சனத் அரசியலுக்கு வருவது எனக்கு கவலையான விடயம்//

அவருக்கு கவலையா இல்லையா என்பதே இங்கே அவசியம் மிஸ்டர்.யோ

கன்கொன் || Kangon said...

//கலாம்.. ஆங்கிலம் என்பதால் சிங்களப் பக்கம் பரவாமல் இருந்திருக்கலாம். //

இருக்கலாம்... ஆனால் மோப்பம் பிடிப்பவர்களுக்கு ஆங்கிலமென்ன தமிழழென்ன சிங்களமென்ன...


//ஹா ஹா.. இலங்கையின் புதிய சாதனை??

ஆனால் அமைச்சர் என்பது கொஞ்சம் அதிகமே.. //

ச்சும்மா... லுலுலுலுலு,.. :D


//எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அரசியல்தான். //

அப்ப போலிச் சாமியார் என்ற வார்த்தை பிடிக்குமோ?
கள்ளன் பிடிக்குமோ?
திருட்டுப் பிடிக்குமோ?
துரோகம் பிடிக்குமோ?

ஏனய்யா விஜயகாந்தின்ர அந்த ஒற்றை வசனத்தத் தூக்கி இந்தா ஆட்டு ஆட்டுறீங்க? :P

(ச்சும்மா... லுலுலுலு... கோவிக்கப்படாது...)

கன்கொன் || Kangon said...

மகேஸ்வரனின் சகோதரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகிறாராம்...

புதுச் செய்தி...

http://www.dailymirror.lk/index.php/news/1742-tmaheswarans-brother-to-contest.html

அரசியல்... ம்.. ம்.. ம்...

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
//கலாம்.. ஆங்கிலம் என்பதால் சிங்களப் பக்கம் பரவாமல் இருந்திருக்கலாம். //

இருக்கலாம்... ஆனால் மோப்பம் பிடிப்பவர்களுக்கு ஆங்கிலமென்ன தமிழழென்ன சிங்களமென்ன...


//ஹா ஹா.. இலங்கையின் புதிய சாதனை??

ஆனால் அமைச்சர் என்பது கொஞ்சம் அதிகமே.. //

ச்சும்மா... லுலுலுலுலு,.. :D


//எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை அரசியல்தான். //

அப்ப போலிச் சாமியார் என்ற வார்த்தை பிடிக்குமோ?
கள்ளன் பிடிக்குமோ?
திருட்டுப் பிடிக்குமோ?
துரோகம் பிடிக்குமோ?

ஏனய்யா விஜயகாந்தின்ர அந்த ஒற்றை வசனத்தத் தூக்கி இந்தா ஆட்டு ஆட்டுறீங்க? :P

(ச்சும்மா... லுலுலுலு... கோவிக்கப்படாது...)//



சப்பா.. எப்பிடியடா உன்னால மட்டும் முடியுது? ஆனால் ரசிக்கக் கூடியதா இருக்குது..
ஒரு குழுவாய் இயங்குரியா? ;)



கன்கொன் || Kangon said...
மகேஸ்வரனின் சகோதரன் யாழ்ப்பாணத்தில் போட்டியிடுகிறாராம்...

புதுச் செய்தி...

http://www.dailymirror.lk/index.php/news/1742-tmaheswarans-brother-to-contest.html

அரசியல்... ம்.. ம்.. ம்...//



எனக்கு இது கொஞ்சம் பழசு.. ;)

ஆனால் அந்த செய்தியில் மகேஸ்வரனை சுட்டது யார் என சொல்லி இருப்பது தான் விஷமம்/விஷம்

தர்ஷன் said...

முரளி அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பேட்டிகளின் போது மிகக் கவனமாக வார்த்தைகளை விடுபவர் அவர். அதிலும் சிங்கள மக்கள் மத்தியில் தன நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள அவர் ஒருபோதும் முனைந்ததில்லை. அவர் கூறிய கருத்து அவ்வூடகத்தால் திரிக்கப்பட்டிருக்கலாம்.

KANA VARO said...

//தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.//

உண்மை தான்! ஆனாலும் நம்ம வெள்ளைத்தலைவர், அதுதான் துமிந்த தலைநகர் முழுவதும் கட்டவுட்களால் அசத்துகிறார்.

ஜெயசூரியாவின் வாலைப்பிடிச்சுக் கொண்டு சுதந்திகா இறங்கிட்டா! விளையாட்டின் மூலம் தான் தாய்நாட்டுக்கு பெயரைப்பெற்றுக் கொடுத்தாவாம்! அரசியல் மூலம் மக்களுக்கு சேவை செய்யப்போறாவாம்!

அண்ணை ஒண்டு கேக்க மறந்துட்டன், உங்களுக்கு ஏதாவது ஐடியா…!! அட! சும்மா சொல்லுங்க… ஆனா மீடியா கோடினேற்றர் நான் தான்.

Nimalesh said...

eagarly waiting for your next blog.............

Subankan said...

//நான் அந்தப் பின்னூட்டம் போடும்போது இந்தப் பதில் வருமெண்டு எதிர்பார்த்தன்//

//அண்ணை ஒண்டு கேக்க மறந்துட்டன், உங்களுக்கு ஏதாவது ஐடியா…!! அட! சும்மா சொல்லுங்க… ஆனா மீடியா கோடினேற்றர் நான் தான்.//

ஆகா மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிக்கறாங்களே? அண்ணே இங்க எண்டா தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டிலயும் குத்துவன். அங்க குத்த என்னட்டை ஒண்டுகூட இல்லை.

இன்னொரு கேள்வி

அப்ப முரளிதரன் இந்தமுறை அமைச்சராக மாட்டாரா?

faris said...

dont tell lie,
murali in political
he will be a minister
if he want to play in next world cup he must play in election.
ok

KANA VARO said...

//ஆகா மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிக்கறாங்களே? அண்ணே இங்க எண்டா தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டிலயும் குத்துவன். அங்க குத்த என்னட்டை ஒண்டுகூட இல்லை.//

அன்பு படத்தில வடிவேலுக்கு ஓட்டுப் போட்ட மாதிரிப் போடுவன்

EKSAAR said...

//தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை
நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.//

அவர்கள் நினைவூட்டுவது தமது தலைவருக்கு. ஆனாலும் வீரவன்ச தான் கொஞ்சம் ஓவரா போயிட்டார். மவ்பிமே பஞ்சாயுதய என்ன கொடும சார்

//அப்படியானால் ஜனாதிபதியின் சகோதரர்கள் பற்றி? அவர்களது குடும்பங்கள் பற்றி?//
அவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில். அது நிச்சயமாக வேறு யாராலும் இயலாது.

//சனத் எடுத்த முடிவு என்னைப்பொறுத்தவரை
சரிதான்!//
அது FETISH முடிவு. அரசியலில் தேடும் பணம், செல்வாக்கு எல்லாம் அவரிடம் இருக்கு. ஆயினும் நாலுபேர் ஏசுவது மட்டும் இல்லை. அதை தேடிய பயணமே அது.

//இன்னும் இளமையும், திறமையும் மிச்சமிருக்கே...//

எங்கே? புள்ளிவிபரங்களிலேயா? வரலாறு முக்கியம். ஆனால் அதைவிட நிகழ்காலம் வெகு முக்கியம்.

//தமிழ்க்கூட்டமைப்பு, எதிர்த்தரப்புக் கூத்துக்கள், கூட்டுக்கள், குழப்பங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.//

வரலாறாகவா? எங்களுக்கு ஆர்வம் அதிர்காலம் பற்றிய கணிப்புகளும் முந்தித்தரும் செய்திகளுமே.

//காலம் வந்தபிறகு பார்க்கலாம்.. ;)//
சனத் மாதிரி ஆடி ஓய்ந்தபிறகா? அப்படியானால் நீங்கள் எனக்கு JUNIOR ஆகவேண்டிவரும்்.. :D

ARV Loshan said...

தர்ஷன் said...
முரளி அப்படி பேசியிருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். பேட்டிகளின் போது மிகக் கவனமாக வார்த்தைகளை விடுபவர் அவர். அதிலும் சிங்கள மக்கள் மத்தியில் தன நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள அவர் ஒருபோதும் முனைந்ததில்லை. அவர் கூறிய கருத்து அவ்வூடகத்தால் திரிக்கப்பட்டிருக்கலாம்.//

கலாம்.. ஆனால் முரளி இலகுவில் உளறித் தள்ளிவிடக் கூடியவர்..
ஆஸ்திரேலியாவில் வைத்து தான் ஒரு நல்ல தலைவரில்லை எனவும், பின்னர் ஒரு தடவை இந்தியாவில் அர்ஜுன ஒரு சர்வாதிகாரி எனவும் உளறித் தள்ளி சிக்கலில் மாட்டியது ஞாபகத்தில் வருமே..
===================

VARO said...
//தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.//

உண்மை தான்! ஆனாலும் நம்ம வெள்ளைத்தலைவர், அதுதான் துமிந்த தலைநகர் முழுவதும் கட்டவுட்களால் அசத்துகிறார். //

அந்த 'நம்ம' தலைவரில் ஒரு அன்பு தெரியுதே.. ;) விசுவாசம்?

ஜெயசூரியாவின் வாலைப்பிடிச்சுக் கொண்டு சுதந்திகா இறங்கிட்டா! விளையாட்டின் மூலம் தான் தாய்நாட்டுக்கு பெயரைப்பெற்றுக் கொடுத்தாவாம்! அரசியல் மூலம் மக்களுக்கு சேவை செய்யப்போறாவாம்!//



ஜெயசூரியாவின் வால்? ஏனைய்யா எங்கேயோ முடிச்சுப் போட்டு மூட்டி விடுறீங்க?



அண்ணை ஒண்டு கேக்க மறந்துட்டன், உங்களுக்கு ஏதாவது ஐடியா…!! அட! சும்மா சொல்லுங்க… ஆனா மீடியா கோடினேற்றர் நான் தான்.//

அடப் பாவி.. முடிவே பண்ணியாச்சா? லோஷன் பாவம்..

ARV Loshan said...

Nimalesh said...
eagarly waiting for your next blog..........//

ஓ கூட்டணி பற்றியா? வரும்.. உங்க ஆர்வத்துக்கு அளவே இல்லையா?

================

Subankan said...
//நான் அந்தப் பின்னூட்டம் போடும்போது இந்தப் பதில் வருமெண்டு எதிர்பார்த்தன்//

//அண்ணை ஒண்டு கேக்க மறந்துட்டன், உங்களுக்கு ஏதாவது ஐடியா…!! அட! சும்மா சொல்லுங்க… ஆனா மீடியா கோடினேற்றர் நான் தான்.//

ஆகா மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிக்கறாங்களே? அண்ணே இங்க எண்டா தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டிலயும் குத்துவன். அங்க குத்த என்னட்டை ஒண்டுகூட இல்லை.//

உங்க சிந்தனையோட்டம் எனக்குப் பிடிச்சிருக்கு.. ;)

இன்னொரு கேள்வி

அப்ப முரளிதரன் இந்தமுறை அமைச்சராக மாட்டாரா?//



முத்தைய்யா முரளிதரனைத் தானே கேட்டீங்க? தேர்தலில் போட்டியிடாவிட்டால் இல்லை.. (தெளிவான பதில் :))

ARV Loshan said...

faris said...
dont tell lie,
murali in political
he will be a minister
if he want to play in next world cup he must play in election.
ok //

இதென்ன நகைச்சுவை.. :)

===================

VARO said...
//ஆகா மாலை போட்டு மஞ்சள் தண்ணி தெளிக்கறாங்களே? அண்ணே இங்க எண்டா தமிழ்மணம், தமிழிஷ் ரெண்டிலயும் குத்துவன். அங்க குத்த என்னட்டை ஒண்டுகூட இல்லை.//

அன்பு படத்தில வடிவேலுக்கு ஓட்டுப் போட்ட மாதிரிப் போடுவன்//

வடிவேலுக்கும் வ.. வரோவுக்கும் வ..

வாழ்க.. ;)

ARV Loshan said...

என்ன கொடும சார் said...
//தாங்கள் தாங்களே மக்களுக்கு தம்மை
நினைவூட்டிக் கொள்ள போஸ்டர்களில் சிரிக்கும் பலரைக் கண்டு சிரிப்புத் தான் வருகிறது.//

அவர்கள் நினைவூட்டுவது தமது தலைவருக்கு. ஆனாலும் வீரவன்ச தான் கொஞ்சம் ஓவரா போயிட்டார். மவ்பிமே பஞ்சாயுதய என்ன கொடும சார்//

பஞ்சாமிர்தம் எண்டு சொல்ல வந்தாரோ? ;)

அதுசரி விமலுக்கும் உங்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா? ;)



//அப்படியானால் ஜனாதிபதியின் சகோதரர்கள் பற்றி? அவர்களது குடும்பங்கள் பற்றி?//
அவர்கள் வெவ்வேறு மாவட்டங்களில். அது நிச்சயமாக வேறு யாராலும் இயலாது.//



சரி தான்.. எங்கே நின்றாலும் எப்படி யார் வாக்களித்தாலும் என்னும்போது வெற்றி அவர்க்கே... ;) அதைத் தானே சொல்ல வந்தீங்க?



//சனத் எடுத்த முடிவு என்னைப்பொறுத்தவரை
சரிதான்!//
அது FETISH முடிவு. அரசியலில் தேடும் பணம், செல்வாக்கு எல்லாம் அவரிடம் இருக்கு. ஆயினும் நாலுபேர் ஏசுவது மட்டும் இல்லை. அதை தேடிய பயணமே அது//



இது சனத் மீது சேறு பூசும் முயற்சி..;)



//இன்னும் இளமையும், திறமையும் மிச்சமிருக்கே...//

எங்கே? புள்ளிவிபரங்களிலேயா? வரலாறு முக்கியம். ஆனால் அதைவிட நிகழ்காலம் வெகு முக்கியம்.//

ஒரு தொடர், இரு போட்டிகள் நிகழ்காலமல்ல.. மாகான மட்டப் போட்டிகளையும் அவதானியும்..



//தமிழ்க்கூட்டமைப்பு, எதிர்த்தரப்புக் கூத்துக்கள், கூட்டுக்கள், குழப்பங்கள் பற்றி பிறகு பார்ப்போம்.//

வரலாறாகவா? எங்களுக்கு ஆர்வம் அதிர்காலம் பற்றிய கணிப்புகளும் முந்தித்தரும் செய்திகளுமே.//

அதுக்காக முந்திரிக்கொட்டை ஆகி மூக்குடைபட வேணுமா? நம்ம ஆட்கள் பற்றித் தான் தெரியுமே..



//காலம் வந்தபிறகு பார்க்கலாம்.. ;)//
சனத் மாதிரி ஆடி ஓய்ந்தபிறகா? அப்படியானால் நீங்கள் எனக்கு JUNIOR ஆகவேண்டிவரும்்.. :த//
இது வேறயா? என்ன கொடும சார்.. (மெய்யாலுமே..)

rooto said...

உண்மையா முரளி உப்பிடி சொல்லி இருந்தா வெகுவிரைவில் களி நிச்சயம்!!! இல்லாட்டி அவரை இலங்கை அணியில் இருந்து கழட்டிவிட மேற்கொள்ளப்பட்ட வலைப்பின்னலாகவும் இருக்கலாம்!! எது எவ்வாறாயினும் இதில முரளி சொன்னதில எனக்கு உடன்பாடுதான்!! அத்தனையும் உண்மை!!!

KANA VARO said...

//Loshan said...
எதுவானாலும் என் இணைப்பதிகாரி வரோவுடன் பேசவும்..//

அட! அட! அட!... பதவிக்கு நன்றி,
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே!
இணுவை மைந்தன், வெள்ளவத்தை சூறாவளி, ஹம்டன் லேன் வேங்கை எனும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் எங்கள் அன்புக்குரிய அண்ணன் லோஷனின் தேர்தல் பற்றிய விபரங்கள், எமது கட்சியின் பொதுக்குழு கூடியபின்னர் அறிவிக்கப்படும். எனவே பொறுமை காக்க…

//அந்த 'நம்ம' தலைவரில் ஒரு அன்பு தெரியுதே.. ;) விசுவாசம்?//

அட! எதேச்சையா கதைக்கப் போக, அதில ஒரு பாயின்டைப்பிடிச்சு நமக்கு அடிக்கிறாங்களே,

//அடப் பாவி.. முடிவே பண்ணியாச்சா? லோஷன் பாவம்.//

வாழ்க லோஷன் அண்ணா! வளர்க அவர் அரசியல் பணி!

archchana said...

முரளிக்கு கொஞ்ச காலம் எங்கட காற்று வீசியது தான் . அந்த நேரம் கதைத்ததாக இருக்கும். ஆனால் முரளியால் ஒரு பயனும் இல்லை.
(அந்த காலத்தில் ஒளித்து வைத்த ஒலிவாங்கி க்காக ஜீவாஅக்கா விடம் தனக்கு தமிழ் தெரியாது என்றவர் அதைவிட உங்களிற்கும் ஒரு நேர்காணல் தமிழில் தரமுடியாது என்று சொன்னதாக ஞாபகம் ) எனவே வந்தாலும் தமிழரிற்கு எந்த பயனும் இல்லை. அவர் தமிழர் என இடையிடையே நாம் தான் நினைவு படுத்த வேண்டும்.

Vijayakanth said...

வர வர நம்ம கிரிக்கெட் ரொம்ப நகைச்சுவையா இருக்கு.... நம்ம கிரிக்கட் டீம் ல இடம்கிடைக்க கண்டிப்பா ஆளும்கட்சி அமைச்சராகனும்னு ஒரு நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.....!

அதுசரி ஒரு சந்தேகம்...ஜெயசூரிய மேடைகள் ல ஏறி பிரசாரம் பண்ணுவாரா இல்லாட்டி IPL விளையாட போறாரா....? தேர்தல் நேரத்துல தானே போட்டியும் நடக்குது..... ஒருவேளை IPL ல CENTURY அடிச்சா இங்க அது விளம்பரமாகி அவருக்கு ஓட்டு கிடைக்குமோ?

முரளி......பாவம்...... :(

//Blogger archchana said...

முரளிக்கு கொஞ்ச காலம் எங்கட காற்று வீசியது தான் . அந்த நேரம் கதைத்ததாக இருக்கும். ஆனால் முரளியால் ஒரு பயனும் இல்லை.
(அந்த காலத்தில் ஒளித்து வைத்த ஒலிவாங்கி க்காக ஜீவாஅக்கா விடம் தனக்கு தமிழ் தெரியாது என்றவர் அதைவிட உங்களிற்கும் ஒரு நேர்காணல் தமிழில் தரமுடியாது என்று சொன்னதாக ஞாபகம் ) எனவே வந்தாலும் தமிழரிற்கு எந்த பயனும் இல்லை. அவர் தமிழர் என இடையிடையே நாம் தான் நினைவு படுத்த வேண்டும்....//

முரளி பேசும் தமிழ் கொச்சையாக இருக்கும்....ஒரு ஊடகத்தில் அப்படி பேசுவது அழகில்லை என அவர் நினைத்திருக்கலாம் அதனால் தவிர்த்திருக்கலாம்...மற்றும்படி அவருக்கு தமிழ் தெரியாது என்றெல்லாம் ஒன்றுமில்லை...!

ARV Loshan said...

rooto said...
உண்மையா முரளி உப்பிடி சொல்லி இருந்தா வெகுவிரைவில் களி நிச்சயம்!!! இல்லாட்டி அவரை இலங்கை அணியில் இருந்து கழட்டிவிட மேற்கொள்ளப்பட்ட வலைப்பின்னலாகவும் இருக்கலாம்!! எது எவ்வாறாயினும் இதில முரளி சொன்னதில எனக்கு உடன்பாடுதான்!! அத்தனையும் உண்மை!!!//



கலாம்.. ஆனால் சொல்லி ஒன்றரை வருஷமாச்சே.. இனி எதுவும் நடக்காது.. :)

========================

VARO said...
//Loshan said...
எதுவானாலும் என் இணைப்பதிகாரி வரோவுடன் பேசவும்..//

அட! அட! அட!... பதவிக்கு நன்றி,
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே!
இணுவை மைந்தன், வெள்ளவத்தை சூறாவளி, ஹம்டன் லேன் வேங்கை எனும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் எங்கள் அன்புக்குரிய அண்ணன் லோஷனின் தேர்தல் பற்றிய விபரங்கள், எமது கட்சியின் பொதுக்குழு கூடியபின்னர் அறிவிக்கப்படும். எனவே பொறுமை காக்க…
//

ஆகா.. சீரியசாக் கூட எதுவும் முடிவெடுத்தா தாளிச்சு காமெடி ஆக்கி கைவிடப் பண்ணிராங்களே..பட்டமெல்லாம் வச்சு அழகிரி லெவலுக்கு கொண்டு வந்திருவான்களோ..

ARV Loshan said...

archchana said...
முரளிக்கு கொஞ்ச காலம் எங்கட காற்று வீசியது தான் . அந்த நேரம் கதைத்ததாக இருக்கும். ஆனால் முரளியால் ஒரு பயனும் இல்லை.
(அந்த காலத்தில் ஒளித்து வைத்த ஒலிவாங்கி க்காக ஜீவாஅக்கா விடம் தனக்கு தமிழ் தெரியாது என்றவர் அதைவிட உங்களிற்கும் ஒரு நேர்காணல் தமிழில் தரமுடியாது என்று சொன்னதாக ஞாபகம் ) //

அர்ச்ச்னனா நீங்கள் சொல்லும் நிகழ்வு நடந்ததாக எனக்கு ஞாபகமில்லை.. ஜீவா ஒளித்து வைத்த ஒலிவாங்கியில் ஒரு நாளும் முரளியிடம் பேசவில்லை..

என்னைப் பற்றி நீங்கள் சொன்னதும் மிகத் தவறு. முரளியிடம் நான் பல தடவை தமிழில் பேசியுள்ளேன்.சூரியனில் நான் வேலைசெய்தபோது முரளியிடம் நேரடிப் பேட்டி ஒன்றைத் தமிழிலேயே பெற்று இருந்தேன்.

முரளி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றையும் அவர் பேட்டியுடன் ஒலிபரப்பி இருந்தேன்.

=======================

ARV Loshan said...

Vijayakanth said...
வர வர நம்ம கிரிக்கெட் ரொம்ப நகைச்சுவையா இருக்கு.... நம்ம கிரிக்கட் டீம் ல இடம்கிடைக்க கண்டிப்பா ஆளும்கட்சி அமைச்சராகனும்னு ஒரு நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை.....!//

அமைச்சர்கள் அணியா? ;)



அதுசரி ஒரு சந்தேகம்...ஜெயசூரிய மேடைகள் ல ஏறி பிரசாரம் பண்ணுவாரா இல்லாட்டி IPL விளையாட போறாரா....? தேர்தல் நேரத்துல தானே போட்டியும் நடக்குது..... ஒருவேளை IPL ல CENTURY அடிச்சா இங்க அது விளம்பரமாகி அவருக்கு ஓட்டு கிடைக்குமோ?//

நல்லா இருக்கே இந்த ஆயடியா.. அட ஆமால்ல.. அப்போ இம்முறை ipl க்கு சனத் போகமாட்டார்..

முரளி......பாவம்...... :(

//Blogger archchana said...

முரளிக்கு கொஞ்ச காலம் எங்கட காற்று வீசியது தான் . அந்த நேரம் கதைத்ததாக இருக்கும். ஆனால் முரளியால் ஒரு பயனும் இல்லை.
(அந்த காலத்தில் ஒளித்து வைத்த ஒலிவாங்கி க்காக ஜீவாஅக்கா விடம் தனக்கு தமிழ் தெரியாது என்றவர் அதைவிட உங்களிற்கும் ஒரு நேர்காணல் தமிழில் தரமுடியாது என்று சொன்னதாக ஞாபகம் ) எனவே வந்தாலும் தமிழரிற்கு எந்த பயனும் இல்லை. அவர் தமிழர் என இடையிடையே நாம் தான் நினைவு படுத்த வேண்டும்....//

முரளி பேசும் தமிழ் கொச்சையாக இருக்கும்....ஒரு ஊடகத்தில் அப்படி பேசுவது அழகில்லை என அவர் நினைத்திருக்கலாம் அதனால் தவிர்த்திருக்கலாம்...மற்றும்படி அவருக்கு தமிழ் தெரியாது என்றெல்லாம் ஒன்றுமில்லை...!//



ஆம் சகோ. முரளி தமிழில் பேசுவதில்லை என சொல்வதெல்லாம் வதந்தி. நம்மவர்களே இட்டுக் கட்டிய கதைகள்..

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner