March 24, 2010

அய்யோ அம்மா சாமி.. பக்தியும் சாமியார்களும் ஒரு மீள்பார்வை


கடந்த புதன் கிழமை எனது வெற்றி வானொலியின் (வெற்றி FM) காலை நிகழ்ச்சியான விடியலில் அண்மைக்காலப் பரபரப்பு விடயமான சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் பற்றி ஒரு நிகழ்ச்சியை போதுமான முன் அறிவித்தல், ஆனால் அளவுக்கதிகமான விளம்பரம் இல்லாமல் செய்திருதேன்.

நித்தியானந்தா விவகாரம் பரபரப்பாகியிருந்த நேரம் இந்த நிகழ்ச்சியை காலையில் நிகழ்ச்சியில் தலைப்பாக வழங்குமாறு பல நண்பர்கள்,நேயர்கள்,சக அறிவிப்பாளர்கள் கேட்டிருந்தபோதும் அந்தவேளை இத் தலைப்பை வழங்கி இருந்தால் எல்லாக் கருத்துக்களும் ஒரே மையப் பொருளுடன் ஒரு நோக்கு சார்ந்ததாகவே அமைந்திருக்கும் என்பதாலும், அந்நிகழ்ச்சியே சன் நியூஸ் போல மலிவான ஒரு விளம்பர யுக்தியாக அமைந்துவிடும் என்பதாலுமே நித்தியானந்தா விவகாரம் சற்று ஓய்ந்து போன பிறகு இத்தலைப்பை ஒரு ஆராய்ச்சி பூர்வமான விடயமாக நேயர்களிடம் விட்டிருந்தேன்.

அந்நிகழ்ச்சி பற்றிய பதிவொன்றைப் பலரும் கேட்டிருந்தீர்கள்..

நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே நான் எனது முன்னைய பதிவிலே (
http://loshan-loshan.blogspot.com/2010/03/blog-post_16.html)சொன்னது போல
கடவுளை நம்புகிறீர்களா?கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?

எந்தவொரு சமயத்தையும் தனிப்படத் தாக்காமல் உங்கள் உங்கள் சமய நியாயங்களை,நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
என்று குறிப்பிட்டு விட்டே நிகழ்ச்சியை ஆரம்பித்தேன்.

இன்னொரு விடயமும் எனக்கொரு சந்தேகமாகவே இருந்தது.நிகழ்ச்சியிலும் பெரிதாக இந்த சந்தேகம் தீர்ந்தபாடில்லை.

அதென்ன போலி சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் மற்றும் கடவுளை அடைய வழி காட்டுவோர் அனைவரும் அல்லது அதிகமானோர் இந்து மதத்திலேயே தோன்றுகின்றார்கள்?
நிறையக் கடவுள்கள் இருப்பதாலா?

இன்னொரு விஷயத்தையும் ஆரம்பத்திலேயே என் தனிப்பட்ட கருத்தாக சொல்லி இருந்தேன்..

எந்தவொரு கடவுளையும் பெரிதாக நான் நம்புவதில்லை என்றாலும் இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவன் என்றபடியாலும், இப்போதும் சமயமாக இந்து சமயத்தையே குறிப்பிடுவதாலும் இந்தப் போலி சாமியார்கள் அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதால் சமயத்தின் மீது மேலும் மேலும் வெறுப்பும் நம்பிக்கையீனமும் தோன்றுகிறது.

அதிக கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்த என் மனைவியும் கூட இப்போது கோவில் போவதில் ஆர்வம் காட்டாத அளவுக்கு இந்த சம்பவங்கள் மாற்றியுள்ளன.

இனி நேயர்கள் சொன்ன கருத்துக்கள்&sms மூலமும் மின்னஞ்சலிலும் அனுப்பிய விஷயங்கள்.

பதிவர் கங்கோன் மின்னஞ்சலிய விஷயம் -

அண்ணா....
முதலில் இந்த அருமையான நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்...

கடவுளை நம்புகிறீர்களா?
இதுவரை நம்பியதுமில்லை, நம்பாமல் விட்டதுமில்லை.
எமம்மைத்தாண்டிய நிகழ்வுகள் நடப்பதால் கடவுள் இல்லை என்று சொல்ல முடியாத நிலை, ஆனால் இதற்கு முன்பைய காலத்தில் எம்மைத் தாண்டிய அமானுசிய விடயங்கள் என்று கருதியவை தற்போது விஞ்ஞான ரீதியாக வேறு விதத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் நம்புவதிலும் யோசிக்க வேண்டிய நிலை.
கடவுளுக்கே இந்த நிலை என்பதால் சமயம் பற்றி சிந்திக்க முடிவதில்லை. :)
(உ+ம் புளியமரத்தில் பேய் இருப்பதாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னர் நம்பியிருந்தோம், ஆனால் விஞ்ஞானம் அதில் உண்மை என்ன என்பதை விளக்கமாகச் சொல்லியிருக்கிறதல்லவா)

கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கடவுளையே நம்புவதில் கஷ்ரம் இருக்கும் போது தூதுவர்களை எல்லாம் நம்புவது எம்மாத்திரம்?
இவர்கள் மக்களின் நம்பிக்கைகளை முதலீடாக வைத்து பணம் உழைக்கும் வியாபாரிகள்.
ஆனால் ஆன்மிக வாதிகளையும் இந்தத் தூதுவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கிறேன்.
தூதுவர்கள் பணம் உழைக்கக் கிளம்பியவர்கள், ஆன்மிகவாதிகள் தாங்கள் உறுதியாக நம்பும் ஒன்றை மற்றவர்கள் அறிய வேண்டும் என நினைப்பவர்கள்.
இதுவரை கடவுளின் தூதுவர்கள், வழிகாட்டுபவர்கள் என்று புறப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சட்டரீதியற்று அல்லது சமயத்தின் மார்க்கத்திற்கப்பாற்பட்டு செயற்பட்டது வரலாறு என்பதால் இவர்களை எதிர்க்கிறேன்.

நீண்டுவிட்டதோ?
கேள்வி அப்படி... 140 அல்லது 160 எழுத்துக்களில் விடையளிப்பது கடினம்... :)

மீண்டும் வாழ்த்துக்கள் அண்ணா...

ஹனுமான் பூஜையை மல்லிகா ஷெராவத் மூலமாக ஆரம்பித்து வைத்த வாடா இந்திய (ஆ)சாமியார்

பிரேமகுமார்
கடவுளை நம்புகிறீர்களா?
கடவுளின் அவதாரங்கள்,கடவுளின் தூதுவர்கள்,கடவுளை அடைய வழி காட்டுகிறோம் என்பவர்களையும் ஏற்றுக் கொள்கிறீர்களா?
கடவுளை நம்புகிறீர்களா? ஆம்
இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படுபவர்களுள் விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும், விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச் சொல்லப்படுகின்றது. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும் அழைக்கப்படுகிறார். இந்துசமயத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தினர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

விவிக்தன் மின்னஞ்சல் மூலமாக
பாபாவோ- பகவானோ எல்லோரும் மனிதர்களே எனும் தெளிவு மக்களுக்கு வரவேண்டும். இயற்கையை மீறிய சக்தியென்று எவருக்கும் எக்காலத்திலும் இருந்ததில்லை. அப்படி ஒருவர் கூறுவாராக இருந்தால் அவர் ஒன்று ஏமாற்றுப் பேர்வழியாக அல்லது புத்தி பேதலித்தவராகத்தான் இருப்பார் எனும் உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு சட்டமும், ஊடகங்களும் துணை நிற்க வேண்டும்!
-----
அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருப்பவனை உடனடியாக கைது செய்வதற்கு சட்டம் இருப்பதுபோல் எவனாவது நானே கடவுள் என்றோ அல்லது கடவுளின் அவதாரம் என்றோ கூறித்திரிந்தால் அவர்களையும் கைது செய்ய சட்டம் இருக்கவேண்டும். இப்படிப்பட்டவர்களின் கடந்தகாலங்களை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த ஊடகங்களும் போட்டி போட்டு செயற்பட வேண்டும்!

காலை வணக்கம் அண்ணா.

இந்த மோசடிகள் ஏமாற்றுக்கள் எல்லாம் எமது சமயத்திலேயே உள்ளன ஏனைய மதங்களில் அவ்வளவு கோப்பறேற் சாமிகளையோ அல்லது ஆசாமிகளையோ அதிகம் காணமுடியாது. எது எவ்வாறாயினும் எனது கருத்து இவ்வளவுதான் "மனிதன் மனிதன்தான் - கடவுள் கடவுள்தான்" இப்போது நடப்பவற்றை பார்த்தால் எனக்கு விவேக்கின் ஒரு நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. இப்பபடிப்பட்ட சாமியார்களிடம் போய் தம்மைச் சீரளிக்கும் இவர்களுக்கு 100 அல்ல 1000 பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாது.

நன்றி
நிசா - மலேசியா


பல நேயர்கள் சாமியில் நம்பிக்கை உள்ளதென்றும் சாமியார்களில் நம்பிக்கை கிடையாதென்றும் சொல்லி இருந்தாகள்.
ஒரு சிலர் முன்னர் இறை தூதர்கள்,நாயன்மார்கள் ஆகியோர் உண்மையாக இறைவனின் வடிவமாக அருள் பெற்றே வந்திருந்தார்கள் என்றும் ஆனால் இப்போது அவ்வாறு சொல்வோர் மோசடி செய்து பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டவர்களென்றும் கூறினர்.
--
ஒரு சிலரின் கருத்துக்களில் ஏமாற்றப்பட்ட கோபமும்,கொதிப்பும் தெரிந்தது..
சில மதங்களில் இருப்பது போன்ற பகிரங்க,பயங்கரத் தண்டனைகள் இந்து சமயத்தில் வேண்டும் என்று தெரிவித்தார்கள்.சுட வேண்டும்,தூக்கில் இட வேண்டும். (இவற்றுள் சிலவற்றை நான் வானொலியில் வாசிக்கவில்லை)

இன்னும் சிலரின் கருத்துக்கள்

கடவுளுக்கு இடைத் தூதர்,இடைத் தரகர் தேவையில்லை.
கடவுளுக்கு வழிகாட்ட காசு ஏன் வாங்குகிறார்கள்?
கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் யாரையும் அரசாங்கங்கள் தடை செய்ய வேண்டும்.
சாமியார்களும் தொழிலாகவே இதை நடத்துவதால் வியாபார சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து பிசிநெசாக செய்யலாம்.
(இந்த ஐடியா நல்லா இருக்கே.. நாமும் கூட பார்ட் டைமா செய்யலாம் போலிருக்கேன்னு யோசித்தேன்)

மதுவுக்கு அடிமையாவது போல இந்த மடத்தனத்துக்கு அடிமையாகிறார்கள்.இதற்கான விழிப்புணர்ச்சியை அனைத்து ஊடகங்களும் ஏற்படுத்தவேண்டும்.
வானொலிகள்,தொலைக்காட்சிகள் இந்தப் போலி ஆசாமிகளின் விளம்பரங்களைத் தவிர்ப்பது போலப் பத்திரிகைகள்,சஞ்சிகைகளும் உறுதியாக செய்ரபடவேண்டும்.
சாமியார்களை நான் ஏன் வணங்க வேண்டும்? அவர்களுக்கு என்னை விட சிறப்பாக வித்தியாசமாக உடலில் எதுவும் இல்லையே..
இதுவரைகாலமும் வருமான வரித்துறையினர் சாமியார்களின் வீடுகளில் சோதனை மேற்கொண்டுல்லார்களா?
சமயம் உண்மை,.அது இல்லாவிட்டால் நாட்டில் மேலும் குற்றங்கள் அதிகரிக்கும். ஆனால் சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்ப்பதையும்,பணம் சம்பாதிப்பதையும்,மோசடிகள் செய்வதையும் தடுக்க வேண்டும்.


கடவுளையே நம்பலை.இதுக்குள்ளே இந்தக் கேவலமான ஜென்மங்கள் கடவுளுக்கு வழி காட்டுறாங்களா?
அடுத்து யார்?
இந்த நவீன காலத்தில் இணையம்,வீடியோ,கமெரா எல்லாம் வந்த பிறகே இவங்க இப்படிக் கூத்தாடினால் அந்தக் காலத்தில் இருந்த சாமியார்கள்,அவதாரங்கள் என்னென்ன திருவிளையாடல்கள் நடத்தினாங்களோ?

கதவைத் திறந்து காற்று வரச் செய்த அண்மைக்கால கதாநாயகர்

ஒரே ஒருவர் மட்டும், கொஞ்சம் வித்தியாசமாக சாமியார்களில் பிழையில்லை என்றும், அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்துள்ளார்கள் என்றும், அவர்களின் தவறான பக்கங்களை நீக்கி நல்ல விஷயங்களை மட்டும் வாழ்க்கைக்கு எடுப்பது நல்லது;அப்படியில்லாதவர்கள் முட்டாள்கள் என்றும் சொல்லியிருந்தார்.
இப்போது சர்ச்சையில் மாட்டி இருக்கும் நித்தியானதாவும் கூட யோகா,தியானம் பற்றி பல நல்ல விஷயங்களை சொல்லியுள்ளார் என்பது அவரது கருத்து.

(எல்லாம் நல்லா தான் சொன்னாரு.. ஆனா அவரு மட்டும் ரொம்ப நல்லாவே செய்திட்டாரே..)

ஆனால் எனக்குப் பெரும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்த ஒரு விடயம், யாரோருவரும் என்னுடன் இத்தலைப்பை வழங்கியது தொடர்பாகவும்,சாமியார்கள்,பகவான்கள் பற்றி ஆதரித்தும் என்னுடன் சண்டைக்கோ,வாக்குவாதத்துக்கோ வராதது தான்.. ;)

இவ்வளவுக்கும் அவ்வேளையில் பிரபலமாக இருந்த சாமியார் ஜோக்சை இடையிடையே கடித்துக் கொண்டிருந்தேன்.
அடியவர்களே ரொம்பவே ஏமாத்திட்டீங்க..

எமது மக்கள் ரொம்பவே விழிப்பாக இருப்பதைப் பார்த்தால் இனி வருங்காலம் இந்தப் போலிகள்,பகவான்கள்,அவதாரங்கள் ஓடி ஒழிவார்கள் போலவே தெரியுது..


இவற்றோடு இன்றைய,நேற்றைய சில பரபரப்புக்களையும் பாருங்கள்..

கல்கி சாமியார் (அம்மா பகவான்) கூத்து...
அதான் நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற ஏன் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா?

பிரபல ஆங்கிலப் பாடகர் ஏகொன்(Akon) புத்த உருவத்தை அசிங்கப்படுத்தி விட்டதாக அவர் மீது எழுந்த குற்றச் சாட்டும், இலங்கை அரசு அவரது வீசாவை மறுத்தது.


சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள்.
முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.


மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.

51 comments:

கன்கொன் || Kangon said...

நிகழ்ச்சியை முழுமையாக கேட்க முடியாமல் போய்விட்டது அண்ணா, 9 மணிவரை தான் கேட்டேன்...பதிவின் மூலம் அறிந்தது மகிழ்ச்சி...

பலர் தெளிவாக இருப்பது மகிழ்ச்சி என்றாலும் உந்த சாமியார்களை ஆதரிப்பவர்கள் பெரிதாக கருத்துத் தெரிவிக்க வரமாட்டார்கள் என்பது நான் எதிர்பார்த்தது தான்.
யார் வருவார்கள்?
சாமியார்கள் எல்லோரும் மாட்டும் நேரத்தில், சாமியார்களுக்கு தனிப்பட்ட ரீதியில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கும் ஒருவர் செய்யும் நிகழ்ச்சியில் முழுப்பேரும் சாமியார்களுக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும்போது தனியாளாக அங்கே வந்து அவர்கள் அவமானப் படவேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால், இந்தக் குற்ற உணர்ச்சி தொடர்ந்தால் திருந்திவிடுவார்கள்....

// நான் வேற ஏன் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா? /

:)
கவலையாக இருந்தது அந்த வீடியோக்களைப் பார்க்க..

எப்போதுதான் இவற்றிலிருந்து வெளியே வரப் போகிறோமோ....

Nila Loganathan said...

நிகழ்ச்சி கேட்கக் கிடைக்கவில்லை... , ஆனால் நல்ல பதிவு, தேவையானதொரு அலசல்,

//மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.//
உண்மை தான்......!

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆசாமிகளை நம்பி தமிழன்கன் வீணாய் போய்டாங்க. இதுக்கு ஊடகங்களும் ஒரு காரணம். (உங்களை சொல்லவில்லை)

Ramesh said...

கடவுள் இருக்கிறாரா இல்லையோ.. கடவுள் நம்பிக்கை இருக்கு ஏனெனில் அவ்வாறு வளர்க்கப்பட்டுவிட்டதால். ஆனால் இந்த மனிதர்களை கடவுளாகப்பார்க்கும் கேலித்தனத்தை இன்னும் ஏன் நம்புகிறார்கள் என:றுதான் புரியல. இதுவும் ஒரு உழைப்பு அல்லது பொழப்பு என்று நினைக்கிறார்கள் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மன அமைதி பெற வேண்டுமெனில் நல்லதை நினைத்து நல்லதை செய்யலாம் இயற்கையை ரசிக்கலாம் இனிமையான பாட்டுக்களைக் கேட்கலாம். இதை விடுத்து இந்த அசட்டு ஆசாமிகள் மீது பற்று அதீத உணர்வு காட்டுவதை நிறுத்தச் சொல்லவேண்டி மக்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும்

kippoo said...

சமயம் உண்மை,.அது இல்லாவிட்டால் நாட்டில் மேலும் குற்றங்கள் அதிகரிக்கும். ஆனால் சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்ப்பதையும்,பணம் சம்பாதிப்பதையும்,மோசடிகள் செய்வதையும் தடுக்க வேண்டும்.

////இதுதான் உண்மையான கருத்து என நான் எண்ணுகிறேன் ..........//

சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள்.
முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.

///முடிந்த அளவு வெற்றியில் நீங்க கொடுத்து விட்டீர்கள்
நாங்களும் ட்ரை பண்ணி பார்ப்போம் ..............////

கன்கொன் || Kangon said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
ஆசாமிகளை நம்பி தமிழன்கன் வீணாய் போய்டாங்க. இதுக்கு ஊடகங்களும் ஒரு காரணம். (உங்களை சொல்லவில்லை) //

நானும் இதை அடிக்கடி சொன்னாலும் வானொலிகள் (பொதுவாக எல்லா இலங்கை வானொலிகளும்) இந்த விடயத்தில் சிறப்பாக செயற்படுகின்றன...
மகிழ்ச்சியே....

kippoo said...

சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள்.
முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.

////முடிந்த அளவு வெற்றியில் நீங்க கொடுத்து விட்டீர்கள்
நாங்களும் ட்ரை பண்ணி பார்ப்போம் ..............///

சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்ப்பதையும்,பணம் சம்பாதிப்பதையும்,மோசடிகள் செய்வதையும் தடுக்க வேண்டும்.

////உண்மைதான் ./////.

நிமல் said...

நல்ல நிகழ்ச்சி, நானும் முழுமையாக கேட்டகவில்லை, பதிவாக போட்டதால் வாசிக்க முடிந்தது...!

//சாமியார்களும் தொழிலாகவே இதை நடத்துவதால் வியாபார சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து பிசிநெசாக செய்யலாம்.//

No 1 ...!

மற்றப்படி கடவுள்கள், சாமியார்களுக்கும் எனக்கும் அவ்வளவு பழக்கம் இல்லாததால் வேறு எதுவும் சொல்வதற்கில்லை... :-)

kippoo said...

சிந்தியுங்கள்.தெளிவாகுங்கள்.
முடிந்தால் குழம்பியிருக்கும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தெளிவாக்குங்கள்.

////முடிந்த அளவு வெற்றியில் நீங்க கொடுத்து விட்டீர்கள்
நாங்களும் ட்ரை பண்ணி பார்ப்போம் ..............///

சமயத்தின் பெயரால் மூட நம்பிக்கைகள் வளர்ப்பதையும்,பணம் சம்பாதிப்பதையும்,மோசடிகள் செய்வதையும் தடுக்க வேண்டும்.

////உண்மைதான் ./////.

மு. மயூரன் said...

இந்துமதத்தில் மட்டுமல்ல, எங்கெல்லாம் கண்ணால் காணமுடியாத, சோதனைக்கூடத்தில் பரிசோதித்துப்பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் நம்பச்சொல்லிச்சொல்லும் மதங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இந்த பிரச்சினை இருந்துகொண்டேதான் இருக்கு.

இதோ படியல்:

http://www.religion-cults.com/

இஸ்லாத்தில் குர் ஆனைத்தாண்டி எதுவுமில்லை என்றொரு கறார் நிலை இருப்பதால் அங்கே கொஞ்சம் குறைவு. ஆனாலும் சூஃபிகள், சியாறத்துக்கள், அல்லாசாமி என்று ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன.

மு. மயூரன் said...

நான் தந்த பட்டியல் முழுமையானதல்ல. விக்கிபீடியா தற்போது இயங்காமலிருப்பதால் முழுப்பட்டியல் தரமுடியவில்லை.

இஸ்லாத்தை அடிப்படையாகக்கொண்ட மதக்குழுக்களின் பட்டியல்:

http://www.religion-cults.com/Islam/islam5.html

மு. மயூரன் said...

இவ்விடத்தில் அனைவருக்கும் நானொரு வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

இத்தகைய ஏமாற்றுவேலைகளை ந்மபிப்போகும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்வண்ணம் பொதுவான கலந்துரையாடற் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினால் என்ன?

மாணவர்களை, இளைஞர்களை வரவழைத்து விழிப்புணர்வூட்டும் வண்ணம் பகிரங்க பொதுக்கூட்டம் ஒன்றை வைத்தால் என்ன?

இவ்வாறு செய்யவேண்டிய சமூகக்கடமை ஒன்று இருப்பதாகவே நினைக்கிறேன்.

கன்கொன் || Kangon said...

// மு.மயூரன் said...
இத்தகைய ஏமாற்றுவேலைகளை ந்மபிப்போகும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்வண்ணம் பொதுவான கலந்துரையாடற் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினால் என்ன?
//

ஆமாம்...
குழுமத்தில் இதைப் பற்றிக் கலந்துரையாடினால் என்ன?

Atchuthan Srirangan said...

ஒருவன் தான் செய்யும் அற்புதங்களை ஆராய்ந்து பார்க்க அனுமதி மறுப்பவன் களவாளி, அற்புதத்தை ஆராய்ந்து பார்க்கத் துணிச்சல் இல்லாதவன் ஏமாளி, ஒன்றை ஆராய்ந்து பார்க்காது அப்படியே நம்புகிறவன் முட்டாள்

Atchuthan Srirangan said...

//சாமியார்களும் தொழிலாகவே இதை நடத்துவதால் வியாபார சட்டங்களின் அடிப்படையில் பதிவு செய்து பிசிநெசாக செய்யலாம்.//

TAX FREE Business

Atchuthan Srirangan said...

வாழ்வில் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிக் கிடக்கும், இயலாமையாலும், ஆற்றாமையாலும் அமைதியைத் தொலைத்துக் கிடக்கும் மக்களை அந்தக் காவிக் கூடாரங்களின் பக்கம் விரட்டி-யடித்ததில் ஊடகங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு உண்டு.

ஜெகதீபன் said...

நன்றி அண்ணா நிச்சயமாய்த்தேவையான அலசல்.... நிறைய விஷயங்களை உங்களுடைய பார்வையில் சொல்லியிருக்கிறீர்கள்.... கடவுள் என்கிற விஷயம் நம்புகிறவர்களுக்கு அது "உண்மை" நம்பாதவர்களுக்கு அது "பைத்தியக்காரத்தனம்"... நம்புவதும் தவறு இல்லை... சரியான காரணங்களோடு நம்பாமலிருப்பவர்களிலும் தவறு கிடையாது.... ஆனால் அவதாரங்கள் என்று சொல்கிறவர்களை எப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியாது... இந்தியாவின் குறிப்பாக தமிழ் நாட்டின் நிலைமை வேறு.... அந்த மக்கள் மடத்தனமாகவே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள்.... (இந்திய நண்பர்கள் மன்னிக்கவும்) சினிமா என்றாலும் சரி... கடவுள் என்றாலும் சரி நிறைய மூடபழக்கங்கள் அவர்களிடத்தில் உண்டு.... இப்பொழுது பாருங்கள் ஆதாரங்களோடு பிடிபட்டவர்கள் நாளைக்கே தாங்கள் "பரிசுத்தமானவர்கள்" என்று அறிக்கை விட்டால் அதையும் நம்புவார்கள் (திரும்பவும் இ.ந மன்னிக்கவும்)... எல்லாரும் அப்படி இல்லை என்றாலும் பெரும்பான்மை அப்படித்தான்... ஆனால் இந்தியாவில் மட்டுமல்ல "உலகத்தமிழர்" வாழ்கிற இடங்களிலெல்லாம்(இலங்கை உட்பட) எதோ ஒரு விதத்தில் இந்த வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது... மேலே நண்பர் சொன்னது போன்று பதிவு செய்யாமல் வியாபாரம் செய்பவர்களின் மேல் கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்....எல்லா விஷயங்களிலும் ஏமாந்து போகிறவர்கள் பெரும்பாலும் நாங்களாய் இருப்பதால்... “நாசமாயப்போகட்டும் இந்த மோட்டுத் தமிழினம்”... வேறு என்னத்தைச்சொல்ல...!!!???!!!??? ** எல்லா இடங்களிலும் இந்தப்பிரச்சனை உண்டென்றாலும் எம்மினத்தின் மேல் சற்று அதிகமான கோபம் அவ்வளவே

ஜெகதீபன் said...

பெரிய்ய்ய பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்....

Unknown said...

/எமது மக்கள் ரொம்பவே விழிப்பாக இருப்பதைப் பார்த்தால் இனி வருங்காலம் இந்தப் போலிகள்,பகவான்கள்,அவதாரங்கள் ஓடி ஒழிவார்கள் போலவே தெரியுது../

உண்மைதான் லோசன் அண்ணா
அது இன்னும் சில காலங்களில் நடந்து விடும் .ஆனால் சில இடங்களில் இளம் வயதினர் இப்படியான சமுக விரோதிகளில் வலைகளில் போய் விழுந்து கொள்கிறார்கள் எனும் போது கொஞ்சம் கவலையாக இருக்கிறது

Kaviyarangan said...

தொகுப்பு பதிவிற்கு நன்றிகள்!

இந்து மதத்தோடுமட்டும் இது ஏன் அதிகம் என்று தொனிக்கின்ற தங்களது கேள்விற்கான ஒருவகை பதிலை
ஜெயமோகனின் ஆன்மீகம், போலி-4 காணலாம் என்று கருதுகின்றேன்.

மீண்டும் நன்றிகள்!

--
கவியரங்கன்.

இர்ஷாத் said...

//அதென்ன போலி சாமியார்கள்,கடவுளின் அவதாரங்கள் மற்றும் கடவுளை அடைய வழி காட்டுவோர் அனைவரும் அல்லது அதிகமானோர் இந்து மதத்திலேயே
தோன்றுகின்றார்கள்?
நிறையக் கடவுள்கள் இருப்பதாலா?//

ஆம்.
பின்வருவனவும் காரணங்களாக இருக்க கூடும் என நினைக்கிறேன்.

1.) ஊடகம் - நித்தியானந்தா போல் ஆபிரிக்காவிலோ, சீனாவிலோ,
தென் அமெரிக்காவிலோ நடந்தால் நமக்கு தெரிய வராது.

2.)தான் கொண்ட நம்பிக்கை பற்றி தெளிவின்மை, சந்தேகம், கற்றுக்கொள்ள வாய்ப்பு மறுக்கப்படல் (மதபோதகர் ஆவதற்குதான் மதகல்வி என்றாகுதல்)

3.) மொழி - தமிழில் புகழ்ந்து புகழ்ந்து அறியாமைக்கு வழி
வகுக்கிறது. மிகப்படுத்தல் நிரம்பி வழிகிறது. புகழ்வதில் போட்டி இருக்கிறது. உம் கருணாநிதியை புகழ்வதில் பாருங்கள். இந்தப்போட்டி ஒருகாலத்தில் தனிநபர் வணக்கமாக மாறும்.

//எந்தவொரு கடவுளையும் பெரிதாக நான் நம்புவதில்லை //

அதற்கு உங்கள் அம்மா மதம் மாறியவர் என்பது காரணமாக இருக்ககூடும். மதம் கலாச்சாரம் என்பனவற்றில் தாயின் பங்கு அளப்பரியது. (கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் பிள்ளைகள் சமய நம்பிக்கையற்றவர்களாக இருப்பதற்கு வாழும் உதாரணங்கள் நிறைய கண்டிருப்பீர்கள்)

//அதிக கடவுள் நம்பிக்கையுடையவராக இருந்த என் மனைவியும் கூட இப்போது கோவில் போவதில் ஆர்வம் காட்டாத அளவுக்கு இந்த சம்பவங்கள் மாற்றியுள்ளன.//

இது கூட மதத்தை அறிந்து கொள்ளாமல் பின்பற்றுவதால் ஏற்படுகிறது என்றே கருதுகிறேன். மத நம்பிக்கை உடையவர்கள் தனிப்பட்ட மனிதர்களை உதாரணங்களாக கொள்ளமுடியாது. நித்தியானந்தா மக்களை
ஏமாற்றியதற்கு மதத்தின் மீது பழி போடுவதா? நித்தியானந்தா இந்து மதத்தின் குறியீடாகிப்போனதேன்? (நித்தியானந்தாவின் லீலைகள் வெளிவருவதற்கு முன்னரேயே அவர் ஏமாற்றுகிறார் என்பதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லையா)

இன்னும் தான் கொண்ட மதத்தில் குழப்பம் இருக்கிறது என்பதற்காக மதங்கள் அப்படித்தான் என்பதும் பிழை. நாம் பின்பற்றும் மதம் பெற்றோரினூடாக வந்தது என்பதால் ஏனைய மதங்களில் என்ன இருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் முழுமையாக ஆய்ந்தோய்ந்து பார்க்க முடியாது. எனவே ஒரு அடிப்படை விசயத்தை
எடுத்து அது தொடர்பாக ஒவ்வொரு மதமும் என்ன சொல்கிறது? அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று
தேடினால் நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

//ஆனால் எனக்குப் பெரும் ஆச்சரியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்த ஒரு விடயம், யாரோருவரும் என்னுடன் இத்தலைப்பை வழங்கியது
தொடர்பாகவும்,சாமியார்கள்,
பகவான்கள் பற்றி ஆதரித்தும் என்னுடன் சண்டைக்கோ,வாக்குவாதத்துக்கோ
வராதது தான்.. ;)//

ஆஹா.. ஒரு சண்டை மூலமாக பின்னூட்டத்தில் சாதனை வைக்க எதிர்பார்த்தீர்களோ? (ஹிட்டுக்கும், பின்னூட்டத்திற்கும்தான் பதிவர்கள் மதத்தை கையில் எடுக்கிறார்கள் - முக்கியமாக தமிழில்)

//பிரபல ஆங்கிலப் பாடகர் ஏகொன்(Akon) புத்த உருவத்தை அசிங்கப்படுத்தி விட்டதாக அவர் மீது எழுந்த குற்றச் சாட்டும், இலங்கை அரசு அவரது வீசாவை
மறுத்தது.//

இதன் உள்வீட்டு ரகசியங்கள் தொடர்பாக எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன. ஆனாலும் கட்டாயம் புத்தரின் சிலையை அவ்வாறான தருணத்தில் பயன்படுத்தியிருக்க கூடாது. (இதற்கு மேலதிகமாக சில காரணங்களை சொன்ன்வர்கள் அதற்கு தகுதியானவர்கள்தானா?)

//மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்//

அன்பே சிவம் என்கிறீர்கள். வன்முறையை போதிக்காத படம் என்பதால் எனக்கு விருப்பமான படமாக இருந்தாலும் கடவுள் என்பதை மனிதர்களில் காணமுயல்வதுதான் எல்லா ஏமாற்றுக்கும் வழி சமைக்கிறது..

இர்ஷாத் said...

//மு.மயூரன் said...
இஸ்லாத்தில் குர் ஆனைத்தாண்டி எதுவுமில்லை
என்றொரு கறார் நிலை இருப்பதால் //

அதன் சரியான வடிவம் குர் ஆனும் நபி வழியும் என்பதாகும்.

இதுதான் அடிப்படை என்பதில் முஸ்லிம் என்று அழைத்து கொள்ளும் எந்த குழுவும் சந்தேகம் தெரிவிக்க மாட்டார்கள். (முஸ்லிம்களிடையேயான பிரிவுகள் அரசியலை அடிப்படையாக கொண்டவை) எனவே எது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமானது
என்றறிய இந்த நியமமே போதுமானதாக இருந்து வந்திருக்கிறது. ஊடகமும் வாசிப்பாற்றலும் இத்தெளிவை இன்னும் அதிகரிக்கிறது.

//இத்தகைய ஏமாற்றுவேலைகளை ந்மபிப்போகும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டும்
வண்ணம் பொதுவான கலந்துரையாடற் கூட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தினால் என்ன?//

வேண்டாமப்பா.. கலந்துரையாடல்கள் இலகுவாக திணிப்புகளுக்கு உள்ளாகிறது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் ஆராய வசதி செய்துகொடுங்கள். அது போதும்.

//ஆன்மீகம், போலி-4 //
அக்கட்டுரையில் "ஏசுவும் சரி, முகமது நபியும் சரி தாங்கள் மட்டுமே இறைத்தூதர்கள் என அத்தனை தீவிரமாக வலியுறுத்தினார்கள்" என்று வருகிறது.

அது பிழையாகும். தமக்கு முன்தோன்றிய இறைதூதர்களை பற்றி ஏசுவும் சரி, முகமது நபியும் சரி சொல்லாமல் விட்டதில்லை. இன்னு ஏசுவும் மீண்டும் உலகிற்கு வருவார் என்றும் முகமது நபி சொல்லியிருக்கிறார்.

Anonymous said...

எந்த மதத்திலும் துறவறம் என்பது இல்லை. அதை சிலர் தமது சுயநலத்துக்காக செய்கிறார்கள்.
அதிலும் பலர் பெண்களை தவிர்திருத்தலை இவ்வாறு கருதுகிறார்கள். ஆனால் அது இயற்கைக்கு எதிரானது,
சாத்தியமில்லாதது. அதனால் தான் இவ்வாறான விடயங்கள் ஏற்படுகின்றன. சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது புரிந்து கொண்டால் சரி. இல்லாவிட்டால் இதை போல் இன்னும் நடைபெறத்தான் செய்யும் .

NIRU said...

இர்ஷாத் said...//

"என்ன கொடுமை சார்" என்ற பெயரில் ஏன் பின்னூட்டம் இடவில்லை இர்ஷாத்?
கடவுச்சொல் மறந்து விட்டதா?

என்ன கொடுமை சேர் இது? ஹி ஹி ...

கன்கொன் || Kangon said...

// அதற்கு உங்கள் அம்மா மதம் மாறியவர் என்பது காரணமாக இருக்ககூடும். மதம் கலாச்சாரம் என்பனவற்றில் தாயின் பங்கு அளப்பரியது. (கலப்பு திருமணம் செய்துகொண்டவர்களின் பிள்ளைகள் சமய நம்பிக்கையற்றவர்களாக இருப்பதற்கு வாழும் உதாரணங்கள் நிறைய கண்டிருப்பீர்கள்) //

ஏனய்யா இதற்குள் குடும்பத்தை இழுக்கிறீர்கள்?
நான் கூட இந்துக் குடும்பத்தில்
பிறந்தவன்.
அம்மா பரம்பரையாக கோவில்கள் நிர்வாகம் செய்யும் பரம்பரையில் வந்தவர், அப்பா கோவில்கள் நிரம்பியுள்ள ஊரிலிருந்து வந்தவர்.
என் வீட்டில் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை, மத நம்பிக்கை உண்டு, எனக்கு இல்லை....
இதற்கு என்ன விளக்கம் திரு.இர்ஷாத் அவர்களே?



//இன்னும் தான் கொண்ட மதத்தில் குழப்பம் இருக்கிறது என்பதற்காக மதங்கள் அப்படித்தான் என்பதும் பிழை. நாம் பின்பற்றும் மதம் பெற்றோரினூடாக வந்தது என்பதால் ஏனைய மதங்களில் என்ன இருக்கிறது என்று தேடிப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு மதத்தையும் முழுமையாக ஆய்ந்தோய்ந்து பார்க்க முடியாது. எனவே ஒரு அடிப்படை விசயத்தை
எடுத்து அது தொடர்பாக ஒவ்வொரு மதமும் என்ன சொல்கிறது? அது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று
தேடினால் நிச்சயம் ஒரு தெளிவு கிடைக்கும் என்றே நம்புகிறேன். //

சரி...
இந்து மதம் தொடர்பாக தாங்கள் தேடி அறிந்தது என்னவோ?
இல்லை, பெற்றோர் வழி வந்த மதங்களை விட மற்ற மதங்களைப் பற்றி அறிய வேண்டும் என்றீர்கள், அதுதான் நீங்கள் இந்து மதத்தைப் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள், கிறிஸ்தவ மதத்தைப் பற்றி என்ன அறிந்திருக்கிறீர்கள்?



//ஆஹா.. ஒரு சண்டை மூலமாக பின்னூட்டத்தில் சாதனை வைக்க எதிர்பார்த்தீர்களோ?//

பின்னூட்டத்துக்கும் வானொலி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்?

// (ஹிட்டுக்கும், பின்னூட்டத்திற்கும்தான் பதிவர்கள் மதத்தை கையில் எடுக்கிறார்கள் - முக்கியமாக தமிழில்)//

என்னை இந்தப் பதிலனுப்ப வைத்தது இதுதான்.
நீங்கள் அதற்காகத்தான் வணக்கம் பற்றி எழுதி்னீ்ர்களா?
பார்த்தீர்களா, ஒத்துக் கொண்டுவிட்டீர்கள்....
நான் அந்தப் பதிவிலேயே கேட்டிருந்தேன் ஹிட்ஸ் இற்காகவா எழுதுகிறீர்கள் என்று...
ஹிட்ஸ் வேண்டுமானால் சொல்லியனுப்பவும், ஒவ்வொரு நாளும் வந்து 100 முறை refresh பொத்தானை அழுத்திவிட்டுச் செல்கிறேன்.


//"என்ன கொடுமை சார்" என்ற பெயரில் ஏன் பின்னூட்டம் இடவில்லை இர்ஷாத்?
கடவுச்சொல் மறந்து விட்டதா?

என்ன கொடுமை சேர் இது? ஹி ஹி ... //

ROFL...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.//

தெளிந்த உண்மை. இதற்கு முயன்றாலே நாம் பாதிக் கடவுள். முயல்வோம்.
தங்கள் வானொலிமூலம் மக்களை நல் வழிப்படுத்த வழியுண்டு. இதைச் செய்து எம் மக்களைக்
காப்பீர்கள் என நம்புகிறேன்.
கல்கி மடம், யாழ்ப்பாணம் வரை போய்விட்டதாம்; காணொளி பார்த்தான் ,பயந்து விட்டேன். யாராவது
தடை போடுங்கள். வழிகாட்டுங்கள்.
அத்துடன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் டென்மார்க் அபிராமி உபாசகி என ஒரு விளம்பரம்
ஒலிபரப்புகிறார்கள். காசு தருகிறார்கள் என்பதால் இதையெல்லாம் ஒலிபரப்பலாமா? அதுவும் தொலைபேசியில் அருள் வழங்குகிறாராம். அந்தத் தொலைபேசிக் காசில் தான் அவர் கூலி என்பதை
இவர்கள் அறிவார்களா?
சங்கராச்சாரியும் பலருக்குத் தொலைபேசியில் அருள் கொடுத்தவர் மறக்கக் கூடாது.
நாளை சிக்கல் இங்கே உருவாகதென என்ன? உததரவாதம். அங்கு கூடப் பணப்பறிப்பே எனப் பலர் கூறக் கேட்டேன்.
எமது மக்களும் நொந்து நூலானவர்கள்; எதைத் தின்றால் தீருமெனத் திணறுபவர்கள். இலகுவில்
இவர்கள் மடக்கிவிடுவார்கள்.
உங்களைப் போன்றோரே மனம் வைத்து இவர்களைக் காக்க வேண்டும். இது உங்கள் கடமையும் கூட.

ilangan said...

//ஒரே ஒருவர் மட்டும்இ கொஞ்சம் வித்தியாசமாக சாமியார்களில் பிழையில்லை என்றும்இ அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்துள்ளார்கள் என்றும் அவர்களின் தவறான பக்கங்களை நீக்கி நல்ல விஷயங்களை மட்டும் வாழ்க்கைக்கு எடுப்பது நல்லது;அப்படியில்லாதவர்கள் முட்டாள்கள் என்றும் சொல்லியிருந்தார்.
இப்போது சர்ச்சையில் மாட்டி இருக்கும் நித்தியானதாவும் கூட யோகாஇதியானம் பற்றி பல நல்ல விஷயங்களை சொல்லியுள்ளார் என்பது அவரது கருத்து//

அண்ணா அவர் சொன்னது உண்மை தான்.. வெள்ளவத்தையில அம்மா பகவான் காரரின் அந்த வெள்ளை நூலை வாங்கிக்கட்டிக்கொண்டு பல பள்ளி மாணவர்கள் அதிகாலை எழும்பி படிக்கத்தொடங்கினார்கள். (அந்த வெள்ளை நூலை வாங்கி கட்டினால் அதிகாலை எழும்பி படிக்கோணும் அந்த சட்டத்தின் படி படிப்பில் கொஞ்சம் பிடிப்பு வந்தது பலருக்கு)

விஞ்ஞான தகவல்படி 14 நாட்கள் ஒரு விடயத்தை தொடர்ந்து செய்தால் அது பழக்கமாயிடுமாம். அம்மா பகவானின் அருள் தான் இதெல்லாம் என கொள்வது தவறு. ஆனால் அவர்கள் ஒருவகையில் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள் என்பது உண்மையே..

தமிழன் தாயகத்திலிருந்து said...

எமது வாழ்க்கையின் அடிநாதமே நம்பிக்கை தான், நம்பிக்கை என்ற தண்டவாளத்தில் தான் எமது வாழ்க்கையே ஓடிக்கொண்டிருகிறது.ஆனால் அந்த நம்பிகையின் வடிவங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன,கடவுளே இல்லை என்பவர்கள் சந்தோசமாக வாழவில்லையா? ஆனாலும் பரம்பரை பரம்பரையாக வந்த எமது கலாச்சாரத்தின் அடிப்படையில் நாம் கடவுளின் அத்தையாவசியத்தை நம்பித்தான் ஆகவேண்டும்,காண்டம் சொல்பவர்களிடம் போனால் எமக்கு பெருத்த ஆச்சரியம் காத்திருக்கும்,எப்படி அவர்களுக்கு எமது குடும்பத்தினர் அனைவரினதும் பெயர் தெரிந்திருக்கிறது?இவைக்கெல்லாம் பதில்களில்லை.ஏதோ சக்தி எம்மை ஆட்டிப்படைக்கிறது என்பதை நம்பித்தான் ஆக வேண்டும்.

Cute Tamilan & Kalaignar TV said...

கடவுள் என்பது என்ன? ஒரு சக்தி? ஒரு பிரமாண்டம்? கேட்டதெல்லாம் கொடுக்கும் அவதாரம்? அருள்தரும் சக்தி? தீமைசெய்தல் தண்டிக்கும் சக்தி? இப்படி பலருக்கு பல விதமாக எண்ணத்தோன்றுகிறது. மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என நம்பப்படுகிறது. அது உண்மையோ இல்லையோ, மனித மனம் ஒரு குரங்கு இதை பொதுவாக எல்லாரும் ஏற்றுகொள்ள தான் வேணும். இதை கட்டு படுத்த ஒரு சக்தி வேணும். அதுக்காக உருவாக்கப் பட்டதுதான் கடவுள். சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு தப்புகள் செய்யும் போது சாமி கோவிக்கும், சாமி கண்ணை குத்தும் எண்டு கூறி நல்வழிப் படுத்த சாமி தேவை, அதேபோல் தன்னம்பிக்கை இழக்கும் போது சாமியை கும்பிடு சாமியிடம் கேட்டல் எல்லாம் கிடைக்கும் எண்டு சொல்லி சுய தன்னம்பிக்கையை வரசெய்ய கடவுள் தேவை. ஆக மனம் என்ற அலை பாயும் குரங்கை கட்டுப் படுத்தி சமூகம் கட்டுக்கோப்பாக நாகரீகமாக வாழவே கடவுள்கள் உருவாக்கப் பட்டன. நாகரீகமான சமூக அமைப்பு வேணும் என்டால் கடவுள் தேவை கடவுள் நம்பிக்கையும் தேவை. (லோஷன் அண்ணா இது எனது கன்னி முயற்சி உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்

Cute Tamilan & Kalaignar TV said...

கடவுள் என்பது என்ன? ஒரு சக்தி? ஒரு பிரமாண்டம்? கேட்டதெல்லாம் கொடுக்கும் அவதாரம்? அருள்தரும் சக்தி? எங்கும் இருப்பவர்? எல்லாம் அறிந்தவர்? தீமைசெய்தல் தண்டிக்கும் சக்தி? இப்படி பலருக்கு பல விதமாக எண்ணத்தோன்றுகிறது. மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என நம்பப்படுகிறது. அது உண்மையோ இல்லையோ, மனித மனம் ஒரு குரங்கு இதை பொதுவாக எல்லாரும் ஏற்றுகொள்ள தான் வேணும். இதை கட்டு படுத்த ஒரு சக்தி வேணும். அதுக்காக உருவாக்கப் பட்டதுதான் கடவுள். சிறுவயதில் இருந்தே பிள்ளைகளுக்கு தப்புகள் செய்யும் போது சாமி கோவிக்கும், சாமி கண்ணை குத்தும் எண்டு கூறி நல்வழிப் படுத்த சாமி தேவை, அதேபோல் தன்னம்பிக்கை இழக்கும் போது சாமியை கும்பிடு சாமியிடம் கேட்டல் எல்லாம் கிடைக்கும் எண்டு சொல்லி சுய தன்னம்பிக்கையை வரசெய்ய கடவுள் தேவை.தன் மனச்சாட்சிக்கு தப்பு செய்யாமல் நடந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள் என்கிறீர்கள், உண்மைதான் அது எத்தனை பேரால் முடியும். ஆக மனம் என்ற அலை பாயும் குரங்கை கட்டுப் படுத்தி சமூகம் கட்டுக்கோப்பாக நாகரீகமாக வாழவே கடவுள்கள் உருவாக்கப் பட்டன. நாகரீகமான சமூக அமைப்பு வேணும் என்டால் கடவுள் தேவை கடவுள் நம்பிக்கையும் தேவை. (லோஷன் அண்ணா இது எனது கன்னி முயற்சி உங்கள் விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்)

KANA VARO said...

நிகழ்ச்சி கேட்க முடியாமல் போனது எனக்கும் வருத்தமே!

கடவுள் நம்பிக்கை நிறையவே இருக்கின்றது... கோவில்கள் நிறைந்த இணுவிலில் பிறந்தவன். கொழும்பிலும் நான் பிடித்து வந்த அனைத்து விரதங்களையும் வேலையிலும் தொடர்கின்றேன்...

ஆனால் இந்த ஆசாமிகளில் சிறிதும் நம்பிக்கை அற்றவன். இவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். குறிப்பாக பெண்கள். உண்மை சாமியார்கள் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலும் துறந்தவர்கள். அவர்கள் பகட்டு வாழ்க்கை வாழ்ந்ததில்லை. மக்கள் பணத்தை கடவுள் பெயரில் சுரண்டியதில்லை. ( யோகர் சுவாமிகளை யாரும் குறை கூறுவார்களா?)

மனிதர்களுக்கு பகுத்தறிவை தந்தமை பிரித்தரிவதட்காக தான். அதை சரியான முறையில் செய்யாவிடின் யார் பொறுப்பு... அதிகாரம் படைத்தவர்களே இந்த போலி சாமியார்களின் கால்களில் ஐக்கியமாகும் போது நாம் யாரை நோவது...

Atchuthan Srirangan said...

//எமது மக்கள் ரொம்பவே விழிப்பாக இருப்பதைப் பார்த்தால் இனி வருங்காலம் இந்தப் போலிகள்,பகவான்கள்,அவதாரங்கள் ஓடி ஒழிவார்கள் போலவே தெரியுது..//

கல்கி பகவான் போன்ற போலி சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை, ஏனெனில் காதில் பூவைத்த ஏமாளிகள் எண்ணிக்கை கோடிக்கணக்கில்.

Unknown said...

எங்கள் நாட்டிலும் தமிழ் மக்களைப் பேய்க்காட்டும் தமிழ் கூட்டமைப்பு மக்களின் பிரதிநிதிகளென உரிமை கோரிய தலைவர்கள் இனப் பிரச்சினையை வைத்தே அரசியலில் வாழ்ந்தார்கள் தமிழ் நாட்டில் இந்துக்களைப் பேய்க்காட்டும் கள்ளச்சாமிகள் சனத்தைப் பேய்க்காட்டும் கபோதிகள். கடவுளைத் தூற்றி வயிறு பிழைப்பவர்கள்.செருப்பால் அடிக்க வேண்டும் உங்கள் இணையம் mullaimukaam.blogspot.com இணைக்கப்பட்டுள்ளது

கன்கொன் || Kangon said...

//ஒரே ஒருவர் மட்டும்இ கொஞ்சம் வித்தியாசமாக சாமியார்களில் பிழையில்லை என்றும்இ அவர்கள் பல நல்ல விஷயங்களை சொல்லித் தந்துள்ளார்கள் என்றும் அவர்களின் தவறான பக்கங்களை நீக்கி நல்ல விஷயங்களை மட்டும் வாழ்க்கைக்கு எடுப்பது நல்லது;அப்படியில்லாதவர்கள் முட்டாள்கள் என்றும் சொல்லியிருந்தார்.
இப்போது சர்ச்சையில் மாட்டி இருக்கும் நித்தியானதாவும் கூட யோகாஇதியானம் பற்றி பல நல்ல விஷயங்களை சொல்லியுள்ளார் என்பது அவரது கருத்து//

நள்ளிரவில் வாசித்ததாலோ என்னவோ இதைத் தவறவிட்டுவிட்டேன்... :P

சாமியார்கள் மட்டுமல்ல எந்தக் கெட்டவர்களிலுமுள்ள நல்ல விடயங்களை நிச்சயமாக எடுத்துக் கொள்ளலாம்.

அனால் அதற்காக அவர்களை ஏற்றுக் கொள்வதென்பது முட்டாள்தனம்.
அம்மா பகவான் சொன்னால் மட்டுமல்ல நீ நீயாக புறப்பட்டு படித்தாலும் முன்னேறலாம்.
ஆனால் அம்மா பகவான் சொல்லிப் படிப்பதாகச் சொல்வதில் நீ தான் படிக்கிறாய், நீ கஷ்ரப்பட்டு படித்துவிட்டு நீ முன்னேற அதை 'அம்மா பகவானின் அருள்' என்று சொல்லி அவர்கள் விளம்பரப்படுத்தி பணம் உழைத்துக் கொள்வார்கள்.

அவர்கள் சொல்லும் நல்ல விடயங்களை ஏற்றுக் கொள்வதற்கும் அவர்களை ஏற்றுக் கொள்ளவதற்குமிடையில் பெரிய வித்தியாசம் உள்ளது.

Anonymous said...

தான் சார்ந்த மதம் பற்றி எழுதும்போது கொதிப்பவர்கள் ஏனைய மதம் பற்றி எழுதும்போதும் புரிந்துகொள்ளவேண்டும். மதம் பற்றி இந்துக்கள் எழுதவேண்டும். அதை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமா? (யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியபோது மௌனிகளாக இருந்தவர்களுக்கு; தான் அகதியாகி முகாமில் வாழும்போதுதான் கஷ்டம் கொஞ்சமாவது தெரியும்)

தமிழர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ள முனையும் இந்துக்களுக்கும் கிறிஸ்த்தவர்களுக்கும் இரட்டை நிலைப்பாடு பரம்பரை குணமோ?

Taste of Your own medicine.. Is it bitter? cant help.. When its started by u all, u all must face Consequence. After that dont cry like a baby

கன்கொன் || Kangon said...

கணக்கில்லாத சர்ச்சைகளை எரிச்சலூட்டி எழுத கொடுமைப் பிடித்த பெயரொன்று,

பிழையாக இன, மத உணர்வுகளைத் தூண்டி எழுத சொந்தப் பெயர்,

கேவலமான துவேசக் கருத்துக்களையும், பண்பாடற்ற கருத்துக்களையும் தெரிவிக்க அனானியாக....

வாழ்க வாழ்க வாழ்க...

ஆதிரை said...

//யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்களை துரத்தியபோது மௌனிகளாக இருந்தவர்களுக்கு; தான் அகதியாகி முகாமில் வாழும்போதுதான் கஷ்டம் கொஞ்சமாவது தெரியும்//

இங்கு மதங்களைப்பற்றியும், மதங்களின் தூதுவர்களாக தங்களைப் பிரகடனம் செய்துள்ள போலிச் சாமியார்களைப்பற்றியும் தானே பேசப்படுகிறது. அதற்குள் ஏனையா இனவாத நச்சுக்களை விதைக்கின்றீர்கள்...?

Anonymous said...

ஆதிரை
பதிவுலகில் சில மாதங்களாக நடப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். யாராவது ஒரு வால் முளைத்தது எதையாவது கிறுக்கியதும், இங்கிருந்து சிலர் ஓடோடிச்சென்று முதல் மனிதனாக பின்னூட்டமிட்டு ஆதரவளிப்பதும் ஆசீர்வாதமும் நடந்திருக்கிறது இல்லையா? அப்போது இந்த நீதவான்கள் யாரும் ஹிட்ஸ்க்காக இப்படி செய்யாதீங்க அப்பு என்று சொல்லவில்லை. அல்லது அந்த போக்கை கண்டிக்கவில்லை. மௌனிகளாக இருக்கிறார்கள்.

இதற்கும் யாழ்ப்பாணத்து முஸ்லிம்களை
துரத்தியபோது மௌனிகளாக இருந்ததற்கும் என்ன வித்தியாசம்?

அதைத்தான் இங்கு ஞாபகப்படுத்தினேன். ஒப்பிட்டேன். அதற்கு மௌனமாக இருந்தால் இதற்கும் மௌனிகளாகவே இருக்க வேண்டும். அதுதான் நியாயம். இங்குவந்து அவர் அப்படி எழுதியிருக்கிறார், அதற்கு இதுதான் காரணம் என்றால்?

மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடமா?

ஆ.பிரணவன் - முதலில் மனிதன் அதன் பின் தமிழன். said...

லோஷன், முன்னைய பின்னூட்டம் கொஞ்சம் கடுமையாக இருந்ததோ? நான் எந்த சமயத்தவரையும் தாக்கும் எண்ணத்தில் அதை எழுதவில்லை.ஆனால் மனதில் உள்ள சில கருத்துக்களை சொல்லினேன்.இதையாவது பிரஸ்ரியுங்கள்.

இந்து சமயத்தவரும், கிறிஸ்தவரும் தங்கள் சமயங்களில் காணப்படும் குறைகளை விமர்சிக்கிறார்கள்.மற்றவர் (பிற சமயத்தவர்) விமர்சித்தாலும் ஏற்கிறார்கள்.

ஆனால் பெரும்பாலான இசுலாமியர்கள் மட்டும் தங்கள் குறைகளைக் கூட நிரியாகலாகவே கருதுவதும்,கண்மூடித் தனமாக தம் மதத்தைப் பின்பற்ற்வதும் கண்டிக்கத் தக்கது.அதில் உள்ள கொடும் தண்டனைகள்,பழக்கவழக்கங்களை சில நேர்மையான பதிவர்கள் சொன்னாலும் என்ன கொடும சார், இர்ஷாத் (இருவரும் ஒருவராமே) போன்ற சிலருக்கு சூடாகிறது.

அவர்கள் போன்றோருக்கு நீங்கள் சமயங்களைப் பற்றிப் பொதுவாக எழுதினாலும் தங்கள் விஷம துவேஷத்தைக் காட்ட நல்ல வாய்ப்பாகிறது.
உங்கள் முன்னைய மதமும் மண்ணாங்கட்டியும் பதிவிலேயே இர்ஷாத் அதைத் தெளிவாகக் காட்டினார்.
அவர் ஒரு விஷம வெறியர்.இங்கே அனானியாக சமயங்களைத் தாண்டி இனத் துவேஷத்தை ஊட்ட முனைபவரும் அவரே எனத் தெரிகிறது.

கவனியுங்கள் வேறு எனத் ஒரு இசுலாமிய நண்பரும் இங்கே தமது கருத்துக்களை அநாகரிகமாக சொல்லவில்லை.

இப்போது நீங்களும் சொல்லுங்கள் என்ன கொடும சார்.

இவர் முகத்திரையை கிழித்து ஒரு பதிவு போட மாட்டீர்களா?

அதுசரி இர்ஷாத் என்ற பெயரில் அடிக்கடி சில ஜோக்குகள்,கருத்துக்கள் உங்கள் விடியல் நிகழ்ச்சியில் போகிறதே.அவர் இவரா?
உங்கள் நண்பரா?

நண்பராயின் புரிய வையுங்கள்.

ஆ.பிரணவன் - முதலில் மனிதன் அதன் பின் தமிழன்.

Note-நான் அனானி அல்ல.உங்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலையும் வாசியுங்கள்.

Anonymous said...

ம்ம்.. அனானிதான் துவேசி. மற்றவர்களின் மதத்தை பற்றி எழுததொடங்கியவர்கள், அதற்கு ஆமா போட்டவர்கள், மௌனம் சம்மதம் என்றிருந்தவர்கள் எல்லாம் நல்லொழுக்க மானுட நேயம் காத்த நலன்விரும்பிகள். குலக்கொழுந்துகள்.

இவனுக்கு எதுக்கு இதெல்லாம். பழைய கதையை பேசிகிட்டு. நாம மறக்கணும் என்று விரும்பினா மறக்கணும். இதையெல்லாம் சுட்டிகாட்டினால் துவேசி.. அருமை.. அருமை.. நீதியின் உச்சம்.. புல்லரிக்குதப்பா...

(முந்தி ஒருவர் வடபுல சோனிகள் விரட்டப்பட்டு இத்தனை ஆண்டுகள் என்று பதிவெழுதினார். அவருக்கு நல்ல காட்டு காட்டினோம்.அந்த treatment தான் இவருக்கும் சரி)

தமிழ்நங்கை said...

துவேசம் கொண்ட அனானியிடம் ஒரு கேள்வி?
யாழ்குடாநாடு இராணுவத்தின் அல்லது அரசாங்கத்தின் கைகளில் வந்து கிட்டத்தட்ட 16 வருடங்கள் கடந்துவிட்டன ஏன் உங்கள் மஹிந்தரின் அரசோ அல்லது சந்திரிக்காவின் அரசோ வடக்கில் இருந்து வெளீயேறிய முஸ்லீம்களை இன்னும் மீள் குடியேற்றவில்லை? ஒரு ரூபாயுடன் வடக்கில் இருந்து வந்தவர்கள் எப்படி கோடீஸ்வர அமைச்சர்களாக இருக்கின்றார்கள்? ஏன் இன்னும் உங்கள் அமைச்சர்கள் மீள்குடியேற்றம் பற்றிக் கதைக்கவில்லை. முதலில் உங்கள் அழுக்கைப் பாருங்கள்.

பெண்களை அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரே மதம் இஸ்லாம் தான் என்பதையும்ம் புரிந்துகொள்ளுங்கள். அத்துடன் பல இஸ்லாமியர்கள் அல்லாவுக்கு விரோதமாக் ஹராமான செயல்களைச் செய்வது தங்களுக்க்குத் தெரியதா?

லோஷன் அண்ணா இந்த விரோதிகளின் இனவாதக் கருத்துக்கள் உங்கள் வலைக்க்கு அழகில்ல்லை.

Anonymous said...

//ஒரு ரூபாயுடன் வடக்கில் இருந்து வந்தவர்கள் எப்படி கோடீஸ்வர அமைச்சர்களாக இருக்கின்றார்கள்? //

அனியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இஸ்லாத்தில் இருக்கிறது.

//பெண்களை அடிமையாக்கி வைத்திருக்கும் ஒரே மதம் இஸ்லாம் தான் என்பதையும்ம் புரிந்துகொள்ளுங்கள். //

ம்ம் உண்மைதான். அவங்கதான் விதவைகளை பூட்டிவைத்தைருந்தார்கள். மொட்டையடித்திருந்தார்கள். வர்ணாசிரம முறையையும் மனிநீதியையும் பின்பற்றினார்க்கள் இல்லையா... List போட்டு பாருங்க தெரியும்...

Kaviyarangan said...

இர்ஷாத்: அக்கட்டுரையில் "ஏசுவும் சரி, முகமது நபியும் சரி தாங்கள் மட்டுமே இறைத்தூதர்கள் என அத்தனை தீவிரமாக வலியுறுத்தினார்கள்" என்று வருகிறது.

அது பிழையாகும். தமக்கு முன்தோன்றிய இறைதூதர்களை பற்றி ஏசுவும் சரி, முகமது நபியும் சரி சொல்லாமல் விட்டதில்லை. இன்னு ஏசுவும் மீண்டும் உலகிற்கு வருவார் என்றும் முகமது நபி சொல்லியிருக்கிறார்.


பதிலாக,

குறித்த கூற்றின் (எடுப்பு) உண்மை-பிழை நிலையில் குறித்த கட்டுரையின் முடிபு (போக்கும் கூட) தங்கியிராத வரையில் அது குறித்து பேசவிழைவது திசைதிருப்பல் என்றவகையில் தர்க்-ஒழுங்கீடாகிவிடும் (Straw man and Red herring). அல்லது அப்படியானவற்றை குறிப்பிடுவதற்கு ஒரு முறை உள்ளதென்று கருதுகின்றேன்.

ஆக, மூலவர்கள் அவ்வண்ணம் வலியுறுத்தினார்களோ இல்லையோ பின்காலத்தில் அம்மதங்கள் அவ்வகையில் (இறுக்கத்தன்மை, நிறுவனத்தன்மை, இன்ன பிற) சென்றதிற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.

E.g.,
Part of the problem of definition (that is defining Hinduism) is due to the fact that Hinduism does not have a single historical founder, as do so many other world religions; it does not have a unified system of belief encoded in a creed or declaration of faith; it does not have a single system of soteriology; and it does not have a centralized authority and bureaucratic structure. It is therefore a very different kind of religion in these respects from the monotheistic, western traditions of Christianity and Islam, though there are arguably stronger affinities with Judaism.
(Flood, Gavin; An introduction to Hinduism; Cambridge University Press, 1996.)
(அடைப்பில் உள்ளது என்னது.)

மற்றைய உலக மதங்களுடன் ஒப்பிடுகையில் இந்து மதம் தாராளவாதத் தன்மையுடன் இருப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு.
ஆக, அது தாராளவாத தன்மையுடத்தன எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்கிறது.

இங்கு நான் ஒரு மதத்தை காத்துநிற்க வரவில்லை - எனது தொழில் அதுவுமல்ல, ஏனெனில் நானொரு தீவிர நாத்திகன் - ஆக ஒரு கேள்விற்கான அல்லது புரிதலுக்கான ஒரு சுட்டியை மட்டுமே பகிர்ந்திருந்தேன் - அது திசைதிருப்பப்படுவதை தவிர்க்கத்தான் இவ்வரவு.

மு.மயூரன்: இந்துமதத்தில் மட்டுமல்ல, எங்கெல்லாம் கண்ணால் காணமுடியாத, சோதனைக்கூடத்தில் பரிசோதித்துப்பார்க்க முடியாத விஷயங்களை எல்லாம் நம்பச்சொல்லிச்சொல்லும் மதங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இந்த பிரச்சினை இருந்துகொண்டேதான் இருக்கு.

என்பது போன்றவற்றையே நான் உண்மையாக காத்தொழுகியிருக்கவேண்டும்.

என்னது சிக்கலான தொனியோ - பின்னூட்டத்தில் நீட்டி விரிக்கிறேனோ - சுலபமாக எடுத்துக்கொள்ளுங்கள்!

நியாயவாதி said...

//அனியாயம் செய்யப்பட்டவனின் பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று இஸ்லாத்தில் இருக்கிறது//

அப்படியென்றால் ஏன் சாதாரண மக்களின் பிரார்த்தனை எடுபடவில்லை அல்லாவும் காசுள்ளவனுக்கு மட்டும் தான் இரங்குவரா? அமைச்சராகியவர்கள் ஒரு ரூபாயில் இருந்து எப்படி கோடிஸ்வரானானார்கள்?

//ம்ம் உண்மைதான். அவங்கதான் விதவைகளை பூட்டிவைத்தை
ருந்தார்கள். மொட்டையடித்திருந்தார்கள். வர்ணாசிரம முறையையும் மனிநீதியையும் பின்பற்றினார்க்கள் இல்லையா... List போட்டு பாருங்க தெரியும்..//


ஹாஹா சிரிப்புத்தான் வருகின்றது. அது நடந்தது பல நூற்றாண்டுகளுக்க்கு முன்னர் ஆனாலும் இன்றைக்கும் காட்ட்மிராண்டிகளாக பல இஸ்லாமிய நாடுகள் இருப்பதை ஏனோ மறந்துவிட்டீர்கள். 21ஆம் நூற்றாண்டிலும் முகத்தை மூடுவதும் அடிமையாக வைத்திருப்பதும் எந்த வகையில் நியாயாம்?

கன்கொன் || Kangon said...

ஆக்கபூர்வமான, சமூகத்திற்குத் தேவையான, போலிகளுக்கு எதிரானதாக அமைந்த ஒரு நிகழ்ச்சி பற்றி பதிவில் பல போலிகள் அகப்படுகிறார்களே... :(

போலிகள் பற்றிய பதிவில் மதங்களை ஏன் இழுப்பான்?
பதிவிற்கும் பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறதே?

தர்ஷன் said...

மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.

நியாயவாதி said...

மதங்களை இனி இங்கு இழுக்கவேண்டாம். என்றாலும் சில கேள்விகள் ஏற்கெனவே வந்துள்ளதால் பதில் இந்த linkஇல் இருக்கமுடியும்..

http://bit.ly/d4i4XI

கணா said...

கடவுள் இருக்கிறார்
சாமியார்களும் இருக்கிறார்கள்

சமயம் மற்று மதக் கொள்கைகள் என்று சில இருக்க அது பின்பற்றப்பட வேண்டிய காரணங்கள் இடத்துக்கு இடம் காலத்துக்கு காலம் வேறுபட்டவையாக வெளி வருவதே உண்மையாகும். காலத்துக்கு காலம் தோன்றும் அறிஞர்கள் வளர்ந்து வரும் இந்த விஞ்ஞான உலகில் தமது சமயம் அழிந்து விடக் கூடாது என்ற காரணத்துக்காக விஞ்ஞான ரீதியாக சமயக் கொள்கைகளை விளக்க முற்படுகின்றனர்.


அதன் போது தான் ஒவ்வொருவரதும் விளக்கம் மாறுபடுகிறது .


ஏன் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஞானிகள் மற்றும் சித்தர்கள் என்று சொல்லப் படுபவர்களும் இதைதான் செய்தார்கள் .


இன்றைய சமூகத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால் விஞ்ஞான வளர்ச்சி


அதன் காரணமாக மனிதன் செய்யும் ஒவ்வொரையும் ஆராய முயல்கிறான்


சில கொள்கைகள் விளங்கப் படுகின்ற போது தப்பாக விளங்கிக் கொள்ளப் படுகின்றன


அதனால் தான் சில பிரச்சனைகள் உருவாகின்றன.

shan shafrin said...

இஸ்லாம் , அல்குர்ஆன் மற்றும் நபிவழி என்பவற்றை மட்டுமே அடிப்படையாய் கொண்டது.... இதற்கு அப்பாற்பட்ட எந்த கருத்துக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.........


*** இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறது என்று கூறுவோர் தயவு செய்து இந்த link இல் சென்று வாசிக்கவும்....... http://onlinepj.com/books/islam-penkalin-urimayai/..... *******

******* இஸ்லாம் எந்த விதத்திலும் அறிவியலுக்கு அப்பாற்பட்ட மார்க்கமில்ல...... அறிவியல் சான்றுகளை கீழ வரும் link இல் வாசித்து தெரிந்து கொள்ளவும்

http://onlinepj.com/books/thirukuranin_ariviyal_sanrukal/

and

http://onlinepj.com/books/ariviyal_sanrukal_2/

செல்வராஜா மதுரகன் said...

மதவாதம் இந்த இடத்திற்குப் பொருத்தமில்லை...
ஆனால் போலிச்சாமியார்கள் அதிகரித்தால் மத நம்பிக்கை குறைவதாக கூறுவதை என்னால் நியாயமாக பார்க்க முடியவில்லை. அடுத்து இந்து மதத்தில் மட்டும் இவ்வளவு சாமியார்கள் உருவாக அதன் தாராளவாதம் காரணமென்பதை நான் ஏற்கிறேன். இந்து மதம் கூறியபடி ஒரு இந்து கோவிலில் சென்று வழிபட்டால் மட்டும் முக்தி கிடைக்குமென்றில்லை. தேவாலயம் அல்லது பள்ளியில் தொழுதுகூட அடைய முடியும். ஏன் மனிதர்கள் மிருகங்கள் உயிரற்ற பொருட்களைக் கூட கடவுளாகக் கொள்ளமுடியும். அதை மதம் ஏற்கிறது. ஆனால் அந்த குறிப்பிட்ட வணங்கப்படும் மனிதர் தன்னைக் கடவுளாக எண்ணமுடியாது ஏனெனில் அவர் ஒலு உருவகமே அன்றில் உண்மை இல்லை. இதைவிட பல விடயங்களும் உள்ளன, சாமியார்கள் மற்றும் இந்து மதத்தைப்பற்றி நீண்ட ஒரு வாசிப்பை முடித்துள்ளேன் விரைவில் ஒரு பதிவாக தருகிறேன். ஆனால் நிறைவாக ஒன்று அறிவியலால் அளவிட முடியாத ஓர் எல்லைப்புள்ளி உண்டு அதுதான் கடவுள், எனவே அறிவியலையும் கடவுளையும் தேவையின்றி குழப்பவேண்டாம் இது ஐன்ஸ்டீனே ஒப்புக்கொண்ட விடயம்....

MR X said...

https://www.facebook.com/photo.php?fbid=218486281607918&set=a.118405411616006.17786.100003396441109&type=1&theater

See this LINk!! a single picture says 100 words

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner