May 01, 2010

சுறா - சூ...........


மாலைக் காட்சிகள் வேலைப் பளுவால் போக முடியாமல் போனது, நண்பர்களும் வரவேண்டும் என்றதனால் மிகத் தாமதமாக சுறாவின் முதல்நாளான வியாழன் பின்னிரவுக் காட்சிக்கே என்னால் போக முடிந்தது.


காட்டாறாக ஓடும் வெள்ளம், பயங்கர இடிகள்,கொட்டும் அடை மழையில் தட்டுத் தடுமாறி பாதி நனைந்து (வாகனத்தில் சென்றும்) திரையரங்கு பினால் 10 .30 என்று சொல்லப்பட்ட காட்சி ஒரு மணிநேரம் தாமதித்தது.
என் குட்டி விஜய் ரசிக மகன் அதற்குள் ஒரு நூறு தடவையாவது சுறா சுறா விஜய் விஜய் என்று சகஸ்ர நாமம் நடத்தி இருப்பான்.


அப்போது மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.. இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு காய்ந்து சுறா பார்க்க வந்திருக்கிறேன்.. மொக்கை கொடுமையை அனுபவிக்க வைத்து வாய் நிறைய வசை பாட வைக்கக் கூடாதென்று..


பெயரோட்டமே விஜயின் ஐம்பதாவது படத்துக்கு விசேடமாக அதிக அழுத்தம்,ஈர்ப்புடன் இருக்கிறது.
மழை வெள்ளப் பின்னணி.. நேற்றைய கொழும்பு நகரையும் ஞாபகப்படுத்தி சுறா வித்தியாசமாகத் தான் இருக்கப் போகிறது என்று கொஞ்சம் ஆறுதல் பட, முதல் காட்சி வச்சாங்க பாருங்க..
ஐயோ அம்மா.. எப்போ தான் இப்படி மொக்கை அறிமுகங்களை இவர்கள் கை விடுவார்களோ தெரியாது..


யாழ் நகர் (இது நம்மைக் குறி வைத்தா??) மீனவக் குப்பத்தின் தலைவர்(மாதிரி) சுறா எனப்படும் விஜய்.அங்குள்ள 1400 குடும்பங்களினதும் செல்லப் பிள்ளை. 


அங்குள்ள மீனவப் பெரியவர் ஒருவரின் வார்த்தைகளில் (இயக்குனர் ராஜகுமாரின் வசனப்படி) சொல்வதானால்,


சுறா..
பத்து தாய்மாரின் பாசம்,
நூறு யானைகளின் பலம்,
ஆயிரம் புயல்களின் வேகம்,
லட்சம் சாணக்கியர்களின் அறிவு 
உடையவனாம்..


  விஜயின் அடுத்த கட்டத்துக்கான அத்தனை பில்ட் அப் ஆயத்தங்களும் முதல் காட்சியிலிருந்தே அடுக்கப்படுகின்றன.
ஒரு தலைவராக மக்களுக்கு சேவை செய்ய எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு வீர இளைஞனாக விஜய்.


தங்கள் மீனவ மக்கள் குடியிருக்கும் இடத்தை வளைத்துப் போட எண்ணும் அமைச்சருடன் மோத வேண்டி ஏற்படுகிறது. 
"மந்திரி என்றாலும் மோதுவேன்.. மன்னனா இருந்தாலும் பயமில்லை" வசனங்கள் சூடேற்றுகின்றன.


கொஞ்சம் அம்மா செண்டிமெண்ட்..
இடையே கொஞ்சம் லூசு போன்ற (நம்ம லோக்கல் பாஷையில் பெக்கோ) அழகான,கொஞ்சம் வசதியான தமன்னாவுடன் காதல்.. 
வடிவேலுவுடன் லொள்ளு+லூட்டி..


படத்தின் முதல் சில காட்சிகளிலேயே விஜய் தனது அதி முக்கியமான,வெற்றி பெற்றே ஆகவேண்டிய ஐம்பதாவது படத்தை ஏன் பெரிதாக அறியப்படாத,இதுவரை பெரிய,பிரபல ஹீரோக்களை இயக்காத S .P .ராஜகுமாருக்கு கொடுத்தார் என்று..
என் உயிர் நீ தானே, பொன் மனம், எம் புருஷன் குழந்தை மாதிரி, கார்மேகம்,அழகர்மலை என்று சராசரி படங்களைக் கொடுத்தவர் தான் இந்த ராஜகுமார் (அப்பிடித் தான் திரையில் போடுறாங்க. ராஜ்குமார் இல்லையாம்)


விஜய் - அழகாக கம்பீரமாக இளமையாக,துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவை மேலும் அதிகரிக்குதே.. ரகசியம் என்ன?
கச்சிதமான ஸ்டைலிஷான உடைகள்.




விஜயின் ஐம்பதாவது படம் என்பதால் படம் முழுவதும் அவரே..
ஆடுகிறார்,சவால் விடுகிறார்,பின்னால் கை கட்டிக் கொண்டு நடக்கிறார்,அரசியல்வாதிகளுக்கு (சக நடிகர்களுக்கு அல்ல) சவால் விடுகிறார்,காதலிக்கிறார்,அறிவுரை சொல்கிறார், ஜோக்கடிக்கிறார்.. இன்னும் ஒரு நாயகனுக்கு என்னென்ன முடியுமோ எல்லாம் செய்கிறார்..
இத்தனையும் செய்தவர் நல்ல கதையையும் கேட்டு தெரிந்திருக்கலாமே என்பது தான் எம் ஆதங்கம்.


சண்டைக் காட்சிகளில் அனல் பறக்க விடுகிறார்.(கனல் கண்ணன் உபயம்)
நாடங்களில் இன்றைய இளம் கதாநாயகர்கள் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடும் அளவுக்கு துடிப்பு.கண் வெட்டாமல் பார்க்க வைத்துள்ளார்.
பொம்மாயி, நான் நடந்தா அதிரடி இரண்டு பாடல்களும் புயல் வேக நடன அசைவுகள்.. 
ராஜு சுந்தரம்,ராபர்ட் பாராட்டுக்குரியவர்கள்.


பல இடங்களில் வசன உச்சரிப்பிலும், கண்,முக அசைவிலும் விஜய் ஜொலிக்கிறார்.
ஆரம்பத்தில் சாதாரண மீனவனாகவும், பின் ஒரு அதிரடி ஹீரோவாகவும் வரும்போதும் வெவ்வேறு விதமாக அதிரடிக்கிறார்.


தமன்னா - அழகோ அழகு.. அதிலும் கொஞ்சம் கவர்ச்சியைத் தூக்கி அசத்துகிறார். அந்த இடையும் கண்களும்,உதடும் கலக்கல்.
ஆனால் தமிழ்ப் படங்களில் அழகான,பணக்கார,அரை லூசான கதாநாயகிகளைக் காட்டுவதை எப்போ தான் நிறுத்தப் போகிறார்களோ?
தமன்னா ஒரு அழகுப் பொம்மையாக,கடற்கரையோரம் நடமாட,பின் பாடல்களில் நடனமாட பயன்படுகிறார்.வேட்டைக்காரன் அனுஷ்கா அளவு கூட வேலையில்லை.


தன நாய்க்குட்டிக்காக தற்கொலை செய்ய வந்து தன்னைக் காப்பாற்றிய விஜயின் நல்ல குணங்கள் பார்த்து மயங்கிக் காதலில் விழுகிறார்.
பாடல் காட்சி ஒன்றில் தொள தொள கால்சட்டையை பிருஷ்டப் பகுதியில் விஜய் பிடித்து ஆட்ட ஆடுகிறார். என்ன டான்ஸ் மூவ்மெண்டோ?  


போக்கிரிக்குப் பிறகு மீண்டும் வடிவேலு விஜயுடன்..
இருவரும் சேரும்போதெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு கலக்குகிறார்கள்.


வில்லன் தேவ் கில்.. கம்பீரமாக இருக்கிறார்.வழமையான கடத்தல் காரர்+ஊழல் அரசியல்வாதிப் பாத்திரம்.
வேறொன்றும் விசேடமாக சொல்ல இல்லை. இந்த வில்லன் பாத்திரம் இன்னும் கொஞ்சம் புதுசாக,பிரம்மாண்டமாக படைக்கப்பட்டிருந்தால் சுறா இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்குமோ என்னவோ?


வில்லனின் உதவியாட்களாக ஸ்ரீமன்(இப்போதெல்லாம் ஹீரோவின் நண்பனாக நடிப்பதில்லையே.. ஏன்? வயசாகிட்டோ?),இளவரசு,.. இன்னும் நட்புக்காக ஒரே காட்சியில் ராதாரவி, மதன்பாப்,ரியாஸ்கான் ஆகியோரும் இருக்கிறார்கள்.


ஒளிப்பதிவு ஏகாம்பரம்.. பெரிதாக மினக்கெடவில்லை எனத் தோன்றுகிறது.பாடல் காட்சிகளிலும் கமெராவைக் குலுக்கி அசைத்ததில் சரி.


சண்டைக் காட்சிகள்,விஜயின் சவால் காட்சிகள்,நடனங்கள் போன்றவற்றில் படத் தொகுப்பாளர் டொன் மக்ஸ் தன கைவண்ணம் காட்டி உள்ளேன் ஐய்யா சொல்கிறார்.


பாடல்களில் சராசரியாகத் தெரிந்த மணிஷர்மா பின்னணி இசையில் அதைவிட சரிந்து போயுள்ளார்.
எல்லாம் எங்கேயோ கேட்ட பீலிங்க்ஸ்.. பகவதி,வேட்டைக்காரன்,போக்கிரி ஞாபகமெல்லாத்தையும் காட்சிகள் கொஞ்சம் நினைவூட்டினால்,இசை முழுக்க ஞாபகப்படுத்துகிறது.


சண்டைக் காட்சிகளின் நீளம் எங்களைத் தான் சோர்வாக்குகிறது என்று பார்த்தால் இசையமைப்பாளரையுமல்லவா?
ஒரே மாதிரி டெம்ப்ளேட் இசை.


விஜய் எந்த உடையிலும் அழகாகத் தெரிகிறார்.
ஆனால் சாதாரண குப்பத்து மீனவன் அவருக்கென்றே உரிய ஒரே pattern சேர்ட் அணிவதும்,பின்னர் வில்லனிடம் இருந்து லபக்கிய நூறு கோடி ரூபாவில் தன குப்பத்து மக்களுக்கு கல் வீடு கட்டிக் கொடுக்கும் இலட்சியத்துக்கு முன்னதாகவே,தான் மட்டும் விலையுயர்ந்த ஒபேல் காரில், கொட்டும் சூட்டும் கறுப்புக் கண்ணாடியுமாகத் திரிவதும் படம் முழுக்க இருக்கும் பல அபத்தங்களில் சில.


விஜய் மட்டும் இல்லாவிட்டால் இது முதல் வாரத்திலேயே டப்பாவாகக் கூடிய கதை..
ஐம்பதாவது திரைப்படமாக இந்தக் கதையைத் தெரிவு செய்யுமளவுக்கு விஜய் அவ்வளவு சினிமா அறிவு அற்றவரா?


இப்படிப்பட்ட படங்கள் விஜயின் காலத்துக்கு முந்திய கதாநாயகர்களின் காலத்தில் நூறு நாள் வெற்றித் திரைப்படத்துக்கான போர்முலா தான்.. ஆனால் இப்போது விஷால்,நகுல்,பரத் கூட இப்படிப்பட்ட கதைகளைத் தேர்ந்தேடுப்பார்களோ தெரியவில்லை.


எல்லாம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று விஜயின் தந்தையாரை கெட்ட தூசண வார்த்தைகளால் வைத்து தீர்த்தார் திரையரங்குக்கு வெளியே கடுப்புடன் வந்த மப்பிலிருந்த தீவிர விஜய் ரசிகர் ஒருவர்.


அடை மழை,நேர விரயம்,தூக்க நேரம் குறைந்தது, மீண்டும் விஜய் தந்த ஏமாற்றம் எல்லாம் எனக்கு இன்று இரண்டாவது நாளாகவும் தலைவலி,எரிச்சலைத் தந்து கொண்டிருக்கிறது.



இப்படியே காவல்காரனும் அமைந்தால் விரைவில் விஜயகாந்த் போலவே ஆகிவிடலாம்.. முழுநேர அரசியல்வாதியாவதைப் பற்றி சொன்னேன்..


சில விஜய் படங்கள் யாருக்குப் பிடிக்காவிட்டாலும்,அவர் ரசிகர்களுக்கு மட்டுமாவது பிடிக்கும்..ஆனால் சுறா என்றவுடன் அவரின் தீவிர ரசிகர்களுக்கும் சுர்ரென்று கோபம் வந்து "அடுத்து காவல்காரன் வரும். அப்போ பார்க்கலாம் " என்று சொல்வதிலிருந்து என்ன தெரிகிறது மக்களே.. ;)


படப் பெயரை விட்டுக் கொடுத்ததில் இப்போது அஜித் நிம்மதியாக இருப்பார் போலிருக்கே.


சுறா - சூ.. 
சூனியம் வைத்துக் கொண்டார் விஜய் என்று சொல்ல வந்தேனுங்க






இன்று சர்வதேசத் தொழிலாளர் தினம்- உழைத்து உழைத்து உலகை உயர்த்தும் உன்னதப் பிறவிகளான என் நண்பர்கள் அத்தனை பேருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.

67 comments:

A.V.Roy said...

இப்பிடி ஒரு படம் பாக்கத்தானா வேணும் என்று ஒரு பீலிங்கு... ஆள விடு சாமி. சொந்த காசில ஏன் மச்சி சூனியம் வைக்க.
நன்றி அண்ணா எச்சரிக்கைக்கு , நல்ல பாதுகாப்பா இனி இருந்துக்கிரம் :))) ...

King Viswa said...

பிரம்மாதம் தல. சரியான விமர்சனம்.

அடுத்து இதே மாதிரி காவல்காரன் படத்தை பார்த்து விட்டு எச்சரித்தால் நலம். உங்கள் வசதி எப்படி?

Subankan said...

தலைப்புக்கும், என்னோட பதிவுக்கும் சம்பந்தம் இல்லைத்தானே? :p

கன்கொன் || Kangon said...

//காட்டாறாக ஓடும் வெள்ளம், பயங்கர இடிகள்,கொட்டும் அடை மழை//

பாத்தீங்களா?
இதவிட கதாநாயகன் அறிமுகத்துக்கு என்ன வேணும்?
இது தான் தளபதி.... ;)


ஒரு பாடல் பார்த்தேன்.
விஜய் அசத்தியிருக்கிறார்.
நடனங்களில் காட்டும் திறமையை அப்பரிடமிருந்து தள்ளிநிற்கவும் பயன்படுத்தின் உருப்பட வாய்ப்புண்டு...

{{இப்படிப்பட்ட படங்கள் விஜயின் காலத்துக்கு முந்திய கதாநாயகர்களின் காலத்தில் நூறு நாள் வெற்றித் திரைப்படத்துக்கான போர்முலா தான்.. ஆனால் இப்போது விஷால்,நகுல்,பரத் கூட இப்படிப்பட்ட கதைகளைத் தேர்ந்தேடுப்பார்களோ தெரியவில்லை.}}

இரசித்தேன், முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்....

{{சுறா - சூ.. }}

ஏனண்ணா கெட்ட வார்த்தை கதைக்கிறீங்க?


{{சூனியம் வைத்துக் கொண்டார் விஜய்}}

ஓ! இதுவா... ;)


:)))

M.Rishan Shareef said...

நல்லவேளை தப்பித்தேன். :-)
நன்றி லோஷன்

வந்தியத்தேவன் said...

அண்ணே விஜய் வடிவேலுடன் வில்லு என்ற படத்தில் போக்கிரிக்குப் பிறகு நடித்தார். வில்லை எப்படி மறந்தீர்கள்?

மற்றும்படி விரைவில் உலகத் தொலைக்காட்சிகளில் சுறா வெளிவரும்போது பார்க்கவேண்டியதுதான்.

வந்தியத்தேவன் said...

அது சரி பல பதிவுகளில் என் பின்னூட்டத்திற்க்கு முன்னம் அல்ல்லது பின்னர் கங்க்கோனின் பின்னூட்டம் வரும் காரணம் என்ன?

மறந்துபோன விடயம் லோஷன் ஏன் இந்த கொலைவெறித் தலைப்பு. ஏற்கனவே நீங்களும் பெண்களும் என ஒருவர் உங்கள் படத்துடன் கலக்கல் பதிவு போட்டிருக்க்கின்றார். இதைவைத்து என்ன செய்யப்போகின்றாரோ ஹிஹிஹி.

கன்கொன் || Kangon said...

{{ அது சரி பல பதிவுகளில் என் பின்னூட்டத்திற்க்கு முன்னம் அல்ல்லது பின்னர் கங்க்கோனின் பின்னூட்டம் வரும் காரணம் என்ன? }}

இது வேறயா?
அவ்வ்வ்வ்...

தலைவனை தொண்டன் தொடர்வதில் வியப்பேதும் இல்லையே? ;)

வந்தியத்தேவன் said...

//தலைவனை தொண்டன் தொடர்வதில் வியப்பேதும் இல்லையே? ;)//

இப்படிச் சொல்லிச் சொல்லியே உடம்பை ரணகளமாக்குகின்றாங்கள்.

விஜய் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சாதனையை உடைக்க முயற்சிப்பதாக காற்றுவாக்கில் கதை அடிபடிகின்றது.

வாகீசன் said...

ஏன் லோஷன் அண்ணா, நான் நினைக்கிறேன் விஜய் தனது புதுப்பட இயக்குனருக்கு தனது பழைய பட இறுவட்டுக்களைக் கொடுப்பதுபோல, புதுப்பட இசையமைப்பாளர்களுக்கும் தனது பழைய படப் பாடல் இறுவட்டுக்களைக் கொடுக்கிறார்போல..

SShathiesh-சதீஷ். said...

Silence

M.Rishan Shareef said...

நல்லவேளை தப்பித்தேன். :-)
நன்றி லோஷன்

balavasakan said...

1.விஜயின் அடுத்த கட்டத்துக்கான அத்தனை பில்ட் அப் ஆயத்தங்களும் முதல் காட்சியிலிருந்தே அடுக்கப்படுகின்றன

ஆமா !! படத்தில நியூசே அதான்

2.விஜய் அழகாக கம்பீரமாக இளமையாக,துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவை மேலும் அதிகரிக்குதே.. ரகசியம் என்ன?
கச்சிதமான ஸ்டைலிஷான உடைகள்.

ஆமா படத்தில் ரசிக்க கூடிய ஒரே ஒரு விடயம் விஜய் தான் வேறு எதுவும் இல்லை

இது ரெண்டையுந்தான் நானும் சொல்லி இருக்கேன் ... மற்றையபடி நீங்க சொன்னது சரி சூனியந்தான்..

anuthinan said...

இப்பிடி ஒரு படம் பாக்கத்தானா வேணும் என்று ஒரு பீலிங்கு... ஆள விடு சாமி. சொந்த காசில ஏன் மச்சி சூனியம் வைக்க.

பாடல்கள் தெலுங்கு பில்லாவின் கொப்பியாம்............!!!

ஆக விஜய் திருந்தும் பொது மட்டுமே அவரின் படத்தை பார்க்க இருக்கிறேன் அண்ணா!!!

balavasakan said...

லோசன் அண்ணா !!!நீங்கள் செய்தது பச்சை துரோகம் !!

எனக்கு பரீடசை நடக்கும் போதா யாழ்ப்பாணத்திற்கு வருவது உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் ஒரே ஒரு சந்தர்ப்பமும் கைநழுவிபோய்விட்டது ... மன்னாருக்கு போய் விட்டு இங்கு வந்திருக்கலாம் தானே இனி எப்ப வருவீங்களோஓஓஓஓஓஓ,.....

Riyas said...

பாவம் விடுங்கப்பா...
அவரால ஏதோ முடிந்தது அதற்கு இப்புடியா

லோசன் வேனாம் வலிக்குது
அழுதுருவேன்...

Vijayakanth said...

இந்தப்பதிவை நேற்றே போட்டிருந்தா நான் படம் பார்க்க போய் அந்த கஷ்டத்தை அனுபவிச்சிருக்க மாட்டேனே!

இதுவரைக்கும் விஜய் நடிச்ச 49 படங்களிண்ட காட்சிகளை எடிட்டர் antony தொகுத்து குடுத்திருந்தாலே 50 படம் வித்தியாசமாகவும் நன்றாகவும் வந்திருக்கும்.

காவல்காரனும் இதே மாதிரியான்னு தெரியல.....சுறாவை இனி suntv வடிவேலுவின் கலக்கம் காமெடின்னு தான் விளம்பரப்படுத்தப்போறாங்க. அதிலயும் வெற்றிகரமா ஓடிக்கொண்டிருக்கும்னு வேற போடுறாங்க.....என்ன இருந்தாலும் suntvக்கு அவங்களோட விளம்பர உத்திகள் மேல அவ்வளோ நம்பிக்கையா....இந்த தடவை அவங்களும் கைய சுட்டுக்கப்போறாங்க!

என்.கே.அஷோக்பரன் said...

இந்தக் கறுமத்தை முதற்காட்சி பார்த்து தொலைச்சிட்டன் - கொடுமை! எங்களுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த நஒ்பன் ஒருவன் விஜய் பணக்காரன் ஆக 1 நிமிடம் முதல் சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வாரன் எண்டு கன்டீனுக்குப் போனான் - போயிட்டு ஒரு 2 நிமிடத்துல வந்தவனுக்கு அதிர்ச்சி - என்னடா எப்படிடா இவன் பணக்காரன் ஆனான்? எண்டு திகைச்சுப் போயிட்டான்! :-D

சுறாவைவிட குருவியும், வேட்டைக்காரனுமே பரவாயில்லை.

நல்லா கிழிச்சிருக்கிறீங்கள் - இன்னும் கிழிச்சிருக்கலாம்! பாட்டுக்கள் கூட கேக்குற மாதிரி இல்லை.... சீ....!

btb I think that is not OPEL Suv but Audi! ;-)

Unknown said...

திருந்தவே மாட்டார் போலருக்கே விஜய்.. :((

sellamma said...

படம் பாற்ற்த்த லோசன் அண்ணா பாவமா???
இல்லை இந்த பதிவை வாசிக்கும் விஜய் ரசிகர்கள் பாவமா???

பள்ளன் என்றால் படைப்பவன்,காப்பவன்,பண்பாளன் மற்றும் வேந்தன் said...

சுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள்
* பொதுவா சுறா'வைத் தேடிச் சென்றால், அதனிடம் கடி வாங்காமல் திரும்ப முடியாது
* 'சுறா'வைப் பார்த்த அதிர்ச்சியில் உயிரிழந்தால் அதற்க்கு இன்சூரன்ஸ் கிடைக்காது.
* ஒரு வேட்டைக்காரன் , வில்லெடுத்து சுறாவை வீழ்த்த நினைத்தால் அது நடக்காது. ஏனெனில் ,முட்டாள் 'சுறா' தானாகவே வீழும்.
* இருதய நோயாளிகள், குழந்தைகள், மற்றும் அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள். முட்டாள்த் தனமாக நேரில் காண செல்ல மாட்டார்கள்.

குறிப்பு: மேலே குறிப்பிட்ட கருத்துகள் கடல் உயிரினம் 'சுறா' பற்றியது. இதனை 'விஜயின்' சூப்பர் ஹிட் படம் 'சுறா'விற்கு பொருத்திப் பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

நிரூஜா said...

நான் இன்னும் சூனியம் வைக்கேல்ல...! வைக்கவா விடவா? :O

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள்.

டிஸ்கவரி சேனலில் தானே....

kittipullu said...

நீங்க அசல தூக்கி வைச்சு ஆடுனவரு தான......அசல்ல விஜய் நடிச்சிருந்தா அசல் மசால் வடைன்னு சொல்லிருபிங்க,போய் வேலைய பாருயா
.

Anonymous said...

திர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறப்பு



இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து போய் கரையை சேர்ந்தன. ஒரே நேரத்தில் இவ்வளவு மீன்களின் அகால மரணம் அப்பகுதியில் இருந்த பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. சிறிது நேரத்தில் மீன்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. மீனவர்கள் பலரும் அச்சத்துடன் கடற்கரையில் இதனை பார்த்தபடி இருக்க அரசு அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் காத்து இருந்தனர்.



கடற்கரையில் நடந்த இந்த சம்பவம் சில நேரங்களில் தமிழ்நாடு முழுவதும் பரவி, பல இடங்களில் இருந்து இதே மாதிரி செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. ஆம், தமிழகத்தின் பல இடங்களிலும் மீன்கள் இறந்துக் கொண்டே இருந்தன. இதோ, மதுரையில் ஒரு ஆற்றில் மீன்கள் இறந்த காட்சி.



சற்று நேரத்தில் அரசாங்க அதிகாரிகளும் தனியார் சுற்று சூழல் ஆர்வலர்களும் இந்த பகுதிகளுக்கு சூழ்ந்து கொண்டு ஆராய துவங்கினர். ஆனாலும் இந்த மர்மம் பிடிபடவில்லை.



பின்னர் பிரபல மீன்வளத்துறை நிபுணரும் நியூசிலாந்து நாட்டின் மீன்வளத்துறை
விஞ்ஞானியுமாகிய டாக்டர் செவன் அவர்கள் இந்த மர்மத்தை கண்டுபிடிக்க வந்தார்.



தன்னுடைய துறைசார்ந்த அறிவின் மூலமாக அந்த நிபுணர் இது மீன்களின் கூட்டு தற்கொலை என்பதையும் அதற்கான காரணத்தையும் கண்டறிந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த மீன்களின் மரணம் அனைத்தும் தமிழகத்தை சார்ந்தே உள்ளது என்பது. இப்படி பல்லாயிரகணக்கான மீன்கள் கூட்டாக தற்கொலை செய்துக் கொள்ள காரணம் என்ன?



?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?

?



இளைய தளபதி மருத்துவர் விஜய் அவர்களின் ஐம்பதாவது படத்தின் பெயர் சுராவாம். அந்த பெயர் தங்களின் இனத்தையே அவமானபடுத்துவதாக இருப்பதாக கருதிய மீன்கள் அந்த படத்தின் பெயரை மாற்ற வேண்டி தங்களின் கோபத்தை இப்படி தற்கொலை செய்துக் கொண்டு வெளியிட்டு உள்ளனர். தங்களின் இன-மான உணர்வை இப்படி தற்கொலை செய்து வெளிப்படுத்துவது தானே தமிழர்களின் இயல்பு, அதனால் தான் இந்த கூட்டு தற்கொலை என்பது மீன்களின் கையில் இருந்த ஒரு தற்கொலை கடிதம் விளக்கியதாம். இதனை அந்த மீன் நிபுணர் கூறினார்.

Anonymous said...

good review about the movie ... well said.

King Viswa said...

Above Comment from Anony - Content is available in this link: http://vedigundu.blogspot.com/2010/01/blog-post_30.html

Anonymous said...

திர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறப்பு

I just loved your comment.

My friends took me to this film "Sura". I wanted to go out during the interval time but they didnt allow us to go out. Really got irritated. Pls dnt write review abt his movie.

This happened in Sri Lanka.

Anonymous said...

When I was in India, I had a chance to read a comic book (unfortunately I couldnt remember the book name: But main character is "Thaara".) It is writtten by Malaysian born Sri Lankan. It is a good need some comics though improvements.

If you could pls find out the books pls let me know. If you please let me knw the books written by the Sri Lankan authors.

King Viswa said...

My Dear Anony Friend: Here is the Info required By You.

Title: Dhaaravum Kugai Manidhargalum தாராவும் குகை மனிதர்களும்

Translator: ராஜ திலகம்

Publishers: Manimegalai Publishers

Price: INR 50.00/-

More Info on the book: http://tamilcomicsulagam.blogspot.com/2010/01/future-of-tamil-comics-2009-comics.html

Kiruthigan said...

லோஷன் அண்ணா என்னதான் கிழிச்சு பதிவுபோட்டாலும் அது திருந்தாது

வில்லு-குருவிதேவலாம்...
வேட்டைகாரன்-வில்லு தேவலாம்...
சுறா-வேட்டைக்காரன் தேவலாம்...
காவல்காரன்-சுறா தேவலாம்..

தோழி said...

/// சுறா - சூ..
சூனியம் வைத்துக் கொண்டார் விஜய் என்று சொல்ல வந்தேனுங்க /// :) :)

Anonymous said...

@ King Viswa:

Thanks alot for your info. Really appreciated.

Anonymous said...

அழகிய தமிழ் மகன் அம்பேலாயிடுச்சி, குருவி கவுந்திடுச்சி, வில்லு புட்டுக்கிச்சி, வேட்டைக்காரன் சொதப்பிடுச்சி, சுறா ஊத்திக்கிச்சி. பேசாமல் விஜய் இனி இந்திய தொலைக்காட்சிகளில் முத்ல் முறையாக‌ சன் டிவி சீரியலுக்கு முயற்சி செய்யலாம்

Anonymous said...

பெரியோர்களே , தாய்மார்களே , குழந்தைகளே, நண்பர்களே இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றல் தயவு செய்து சுறா படம் பார்க்க செல்ல வேண்டாம் என் கேட்டு கொள்ளபடுகிறீர்கள். ஏனெனில் இதனால் ஏற்படும் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாது என்று அகில உலக மருத்துவர் நல சங்கம் தெரிவித்துள்ளது.

Anonymous said...

மாமியார் : மருமகளே ஏன் என் பேரன் அழுக்கிட்டே இருக்கான்? மருமகள் : அவன் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். மாமியார் : சாப்பிடாட்டி மறுபடியும் சுறா படத்துக்கு கூட்டி போயிடுவேன் சொல்லு உடனே சாபிட்டுருவான்

ARV Loshan said...

A.V.Roy said...
இப்பிடி ஒரு படம் பாக்கத்தானா வேணும் என்று ஒரு பீலிங்கு... ஆள விடு சாமி. சொந்த காசில ஏன் மச்சி சூனியம் வைக்க.
நன்றி அண்ணா எச்சரிக்கைக்கு , நல்ல பாதுகாப்பா இனி இருந்துக்கிரம் :))) ...//

அதுக்கு நாங்க தானா உங்களுக்கு டெஸ்ட் பண்ணி, டேஸ்ட் பண்ணி சொல்லணும்?

=================================

King Viswa said...
பிரம்மாதம் தல. சரியான விமர்சனம். //

நன்றி விஸ்வா

அடுத்து இதே மாதிரி காவல்காரன் படத்தை பார்த்து விட்டு எச்சரித்தால் நலம். உங்கள் வசதி எப்படி?//

இனிமேலும் இவரோட படத்தை ஓசி டிக்கெட் கிடைத்தாலும் பார்ப்பது பற்றி யோசிப்பதாக உள்ளேன்.. ;)

ARV Loshan said...

Subankan said...
தலைப்புக்கும், என்னோட பதிவுக்கும் சம்பந்தம் இல்லைத்தானே? :ப//
நீங்க சூப்பர் படம்னு இல்ல சொன்னீங்க.. ;)

========================

கன்கொன் || Kangon said...
//காட்டாறாக ஓடும் வெள்ளம், பயங்கர இடிகள்,கொட்டும் அடை மழை//

பாத்தீங்களா?
இதவிட கதாநாயகன் அறிமுகத்துக்கு என்ன வேணும்?
இது தான் தளபதி.... ;)//



ஆமாமா. என்ன பதி? ;)



நடனங்களில் காட்டும் திறமையை அப்பரிடமிருந்து தள்ளிநிற்கவும் பயன்படுத்தின் உருப்பட வாய்ப்புண்டு...//

அவர் விட்டாலும் அப்பர் விட மாட்டார் போல..

King Viswa said...

//நன்றி விஸ்வா

அடுத்து இதே மாதிரி காவல்காரன் படத்தை பார்த்து விட்டு எச்சரித்தால் நலம். உங்கள் வசதி எப்படி?//

இனிமேலும் இவரோட படத்தை ஓசி டிக்கெட் கிடைத்தாலும் பார்ப்பது பற்றி யோசிப்பதாக உள்ளேன்.. ;//

லோஷன் அண்ணா,

தமிழகத்தில் நீங்கள் இல்லாததால் தப்பித்தீர்கள். இங்கே கலைஞரின் "பெண் சிங்கம்" இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. வெகு விரைவில் "இளைஞன்" வேறு வரப்போகிறதாம்.

இந்த கொடுமைகளில் காவல்காரன் எவ்வளவோ பரவாயில்லை என்றே தோணுகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்று சொல்ல ஆசைதான். இருந்தாலும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஆகையால், வேண்டாமே இந்த விஷப்பரிட்சை.

ARV Loshan said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
நல்லவேளை தப்பித்தேன். :-)
நன்றி லோஷன்//

:)

==================

வந்தியத்தேவன் said...
அண்ணே விஜய் வடிவேலுடன் வில்லு என்ற படத்தில் போக்கிரிக்குப் பிறகு நடித்தார். வில்லை எப்படி மறந்தீர்கள்? //

ஆகா மறந்துட்டேனே.. எப்படி இதை மறந்தேன்.. வில்லு என்றவுடன் அந்த மீசை தானே ஞாபகம் வருது,..;)



மற்றும்படி விரைவில் உலகத் தொலைக்காட்சிகளில் சுறா வெளிவரும்போது பார்க்கவேண்டியதுதான்.//

உலகத் தொலைக்காட்சிகள் அல்ல. ஒரே தொலைகாட்சி

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
அது சரி பல பதிவுகளில் என் பின்னூட்டத்திற்க்கு முன்னம் அல்ல்லது பின்னர் கங்க்கோனின் பின்னூட்டம் வரும் காரணம் என்ன? //

நீங்க ரெண்டு பெரும் பேசி வச்சுப் பண்ணினா நான் என்ன செய்ய முடியும்? ;)



மறந்துபோன விடயம் லோஷன் ஏன் இந்த கொலைவெறித் தலைப்பு. ஏற்கனவே நீங்களும் பெண்களும் என ஒருவர் உங்கள் படத்துடன் கலக்கல் பதிவு போட்டிருக்க்கின்றார். இதைவைத்து என்ன செய்யப்போகின்றாரோ ஹிஹிஹி.//

அவர் அப்படித் தான்.. ;)


=====================

கன்கொன் || Kangon said...
{{ அது சரி பல பதிவுகளில் என் பின்னூட்டத்திற்க்கு முன்னம் அல்ல்லது பின்னர் கங்க்கோனின் பின்னூட்டம் வரும் காரணம் என்ன? }}

இது வேறயா?
அவ்வ்வ்வ்...

தலைவனை தொண்டன் தொடர்வதில் வியப்பேதும் இல்லையே? ;)//

தொண்டனா அல்லது குண்டனா? ;)

பருமனை சொல்லவில்லை.. குண்டர் என்பதன் ஒருமை.. ;)

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
//தலைவனை தொண்டன் தொடர்வதில் வியப்பேதும் இல்லையே? ;)//

இப்படிச் சொல்லிச் சொல்லியே உடம்பை ரணகளமாக்குகின்றாங்கள். //

தலைவா.. இவர் எத்தனாவது?

உங்களை லண்டன் கைப்புள்ள என்கிறாங்கலாமே.. மெய்யாலுமா?



விஜய் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சாதனையை உடைக்க முயற்சிப்பதாக காற்றுவாக்கில் கதை அடிபடிகின்றது.//

அஹ்...இதென்னடா புதுக் கதை>? என்ன சாதனை?

ARV Loshan said...

வாகீசன் said...
ஏன் லோஷன் அண்ணா, நான் நினைக்கிறேன் விஜய் தனது புதுப்பட இயக்குனருக்கு தனது பழைய பட இறுவட்டுக்களைக் கொடுப்பதுபோல, புதுப்பட இசையமைப்பாளர்களுக்கும் தனது பழைய படப் பாடல் இறுவட்டுக்களைக் கொடுக்கிறார்போல..//

இது வேற நடக்குதா?
==============

SShathiesh-சதீஷ். said...
Silence //

ம்ம்ம்ம் பேசிட்டு இருக்கம்ல.. ;)

இப்போ தான் உங்க சுறா - சனியன் பார்த்தேன்.. :) ரசிச்சிருக்கீங்க போல.. ஹீ ஹீ

ARV Loshan said...

Balavasakan said...

2.விஜய் அழகாக கம்பீரமாக இளமையாக,துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு படத்திலும் இவை மேலும் அதிகரிக்குதே.. ரகசியம் என்ன?
கச்சிதமான ஸ்டைலிஷான உடைகள்.

ஆமா படத்தில் ரசிக்க கூடிய ஒரே ஒரு விடயம் விஜய் தான் வேறு எதுவும் இல்லை//

அதே..



இது ரெண்டையுந்தான் நானும் சொல்லி இருக்கேன் ... மற்றையபடி நீங்க சொன்னது சரி சூனியந்தான்..//

ஆமாங்கோவ்..
=================

Anuthinan said...
இப்பிடி ஒரு படம் பாக்கத்தானா வேணும் என்று ஒரு பீலிங்கு... ஆள விடு சாமி. சொந்த காசில ஏன் மச்சி சூனியம் வைக்க.

பாடல்கள் தெலுங்கு பில்லாவின் கொப்பியாம்............!!!//

ஆமாம் கேள்விப் பட்டோம்..

ஆக விஜய் திருந்தும் பொது மட்டுமே அவரின் படத்தை பார்க்க இருக்கிறேன் அண்ணா!!!//

அதாவது பார்க்க மாட்டேன்னு சொல்றீங்க? ;)

ARV Loshan said...

Riyas said...
பாவம் விடுங்கப்பா...
அவரால ஏதோ முடிந்தது அதற்கு இப்புடியா//

ஆனா எங்களுக்கு முடியலையே.. ;)



லோசன் வேனாம் வலிக்குது
அழுதுருவேன்...//

அது ஏனைய்யா உங்களுக்கு வலிக்குது?

=====================



Vijayakanth said...
இந்தப்பதிவை நேற்றே போட்டிருந்தா நான் படம் பார்க்க போய் அந்த கஷ்டத்தை அனுபவிச்சிருக்க மாட்டேனே!//

போடவே முடியாத அளவு எனக்கு தலை வலி நண்பா..



இதுவரைக்கும் விஜய் நடிச்ச 49 படங்களிண்ட காட்சிகளை எடிட்டர் antony தொகுத்து குடுத்திருந்தாலே 50 படம் வித்தியாசமாகவும் நன்றாகவும் வந்திருக்கும்.//

ஆமா இல்ல.. நல்ல ஐடியாவ இருக்கே..

ARV Loshan said...

Balavasakan said...
லோசன் அண்ணா !!!நீங்கள் செய்தது பச்சை துரோகம் !!

எனக்கு பரீடசை நடக்கும் போதா யாழ்ப்பாணத்திற்கு வருவது உங்கள் நிகழ்ச்சியை பார்க்கும் ஒரே ஒரு சந்தர்ப்பமும் கைநழுவிபோய்விட்டது ... மன்னாருக்கு போய் விட்டு இங்கு வந்திருக்கலாம் தானே இனி எப்ப வருவீங்களோஓஓஓஓஓஓ,.....//

இது நல்ல கதை நான் அங்கே வாறன் எண்டு தெரிஞ்ச உடனே பரீட்சையை தள்ளிப் போட்டிருக்கணும்.. அல்லது பரீட்சைக்கு எஸ்கேப் குடுத்திருக்கணும்.. ;)

இனி அநேகமாக இந்த மாத இறுதியில் பகிரங்க அறிவித்தல் (!!!) குடுத்திட்டே வாறேன்..

ARV Loshan said...

என்.கே.அஷோக்பரன் said...
இந்தக் கறுமத்தை முதற்காட்சி பார்த்து தொலைச்சிட்டன் - கொடுமை! எங்களுடன் படம் பார்த்துக்கொண்டிருந்த நஒ்பன் ஒருவன் விஜய் பணக்காரன் ஆக 1 நிமிடம் முதல் சாப்பிட ஏதாவது வாங்கீட்டு வாரன் எண்டு கன்டீனுக்குப் போனான் - போயிட்டு ஒரு 2 நிமிடத்துல வந்தவனுக்கு அதிர்ச்சி - என்னடா எப்படிடா இவன் பணக்காரன் ஆனான்? எண்டு திகைச்சுப் போயிட்டான்! :-த//

அவர் படையப்பா, அண்ணாமலை பார்த்ததில்லையோ? ;)

சுறாவைவிட குருவியும், வேட்டைக்காரனுமே பரவாயில்லை.//

இல்லை.. இதை நான் கண்டிப்பா எதிர்க்கிறேன்..

குருவி ஒரு காவியம்.. அதை எதனுடனும் ஒப்பிட வேண்டாம்..



நல்லா கிழிச்சிருக்கிறீங்கள் - இன்னும் கிழிச்சிருக்கலாம்! பாட்டுக்கள் கூட கேக்குற மாதிரி இல்லை.... சீ....!//

இன்னும் கிழிச்சால் பதிவுக்குள் ஓட்டை விழுந்திரும் சகோ..

btb I think that is not OPEL Suv but Audi! ;-)//

ம்ம் ஒரு புளோல வந்திட்டு.. நன்றி

ARV Loshan said...

முகிலன் said...
திருந்தவே மாட்டார் போலருக்கே விஜய்.. :((//

ம்ம்ம்ம்
=============

sellamma said...
படம் பாற்ற்த்த லோசன் அண்ணா பாவமா???
இல்லை இந்த பதிவை வாசிக்கும் விஜய் ரசிகர்கள் பாவமா???//

எல்லோரையும் விட விஜய் தான்..

ARV Loshan said...

ம.பொன்ராஜ் said...
சுறாவைப் பற்றி ஒரு சில கருத்துக்கள்
*
குறிப்பு: மேலே குறிப்பிட்ட கருத்துகள் கடல் உயிரினம் 'சுறா' பற்றியது. இதனை 'விஜயின்' சூப்பர் ஹிட் படம் 'சுறா'விற்கு பொருத்திப் பார்த்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.//

ஆமாமா.. நம்பிட்டம்.. ;)

=============

நிரூஜா said...
நான் இன்னும் சூனியம் வைக்கேல்ல...! வைக்கவா விடவா? :ஒ//

அது உங்க சூ....தைப் அதாவது சூதானத்தைப் பொறுத்தது.. ;)


==================

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
அறிவுள்ள எவரும் 'சுறா'வை பார்க்க வேண்டும் எனில் டிவியிலேயே பார்த்துகொல்வார்கள்.

டிஸ்கவரி சேனலில் தானே....

கொல்வார்கள்?? ம்ம்ம்ம்

டிஸ்கவரி? ம்ம்ம்ம் ;)

கார்க்கி,சதீஷ்,வரோ.. ஓடியாங்கோ..

ARV Loshan said...

kittipullu said...
நீங்க அசல தூக்கி வைச்சு ஆடுனவரு தான......அசல்ல விஜய் நடிச்சிருந்தா அசல் மசால் வடைன்னு சொல்லிருபிங்க,போய் வேலைய பாருயா //

கும்பத்தை தூக்கி வச்சு ஆடலாம்.. குப்பையை? ;)

அசல்ல விஜய்? ஹையோ ஹையோ./.. கற்பனை செய்து பார்க்கவே காமெடியா இருக்கே,...

ARV Loshan said...

நிலா said...
good review about the movie ... well said.//

நன்றி நிலா


===================

King Viswa said...
Above Comment from Anony - Content is available in this link: http://vedigundu.blogspot.com/2010/01/blog-post_30.html //

ம்ம் முன்பே பார்த்திருக்கிறேன்.

============

Anonymous said...
திர்தியூட்டும் தகவல் - சென்னையில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறப்பு

I just loved your comment.

My friends took me to this film "Sura". I wanted to go out during the interval time but they didnt allow us to go out. Really got irritated. Pls dnt write review abt his movie.

This happened in Sri Lanka.//

ஓகோ.. :)

ARV Loshan said...

King Viswa said...
My Dear Anony Friend: Here is the Info required By You.

Title: Dhaaravum Kugai Manidhargalum தாராவும் குகை மனிதர்களும்

Translator: ராஜ திலகம்

Publishers: Manimegalai Publishers

Price: INR 50.00/-

More Info on the book: http://tamilcomicsulagam.blogspot.com/2010/01/future-of-tamil-comics-2009-comics.html //

உங்கள் துரித தேடலுக்கு நன்றி விஸ்வா

==================

Cool Boy said...
லோஷன் அண்ணா என்னதான் கிழிச்சு பதிவுபோட்டாலும் அது திருந்தாது//

அதுன்னா எது? ஓ அதுவா? ;)



வில்லு-குருவிதேவலாம்...
வேட்டைகாரன்-வில்லு தேவலாம்...
சுறா-வேட்டைக்காரன் தேவலாம்...
காவல்காரன்-சுறா தேவலாம்..//

ஓ இப்படித் தான் வருகுதா? ம்ம்ம்ம்

ARV Loshan said...

தோழி said...
/// சுறா - சூ..
சூனியம் வைத்துக் கொண்டார் விஜய் என்று சொல்ல வந்தேனுங்க /// :) :)//

ஹீ ஹீ.. :)



===============

நன்றி அனானி அல்லது அனானிகள்.. சிரித்தேன்.. :)

ARV Loshan said...

King Viswa said...


தமிழகத்தில் நீங்கள் இல்லாததால் தப்பித்தீர்கள். இங்கே கலைஞரின் "பெண் சிங்கம்" இந்த மாதம் ரிலீஸ் ஆகிறது. வெகு விரைவில் "இளைஞன்" வேறு வரப்போகிறதாம்.

இந்த கொடுமைகளில் காவல்காரன் எவ்வளவோ பரவாயில்லை என்றே தோணுகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,, என்று சொல்ல ஆசைதான். இருந்தாலும் மனம் ஒத்துக்கொள்ளவில்லை. ஆகையால், வேண்டாமே இந்த விஷப்பரிட்சை.//



என்னாது? பெண் சிங்கமா? பேரைக் கேட்டாலே பேதி வர்ற மாதிரி இருக்கே,,..

Jhona said...

Loshan Anna,

"எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் கடவுள் அவதரிப்பார்" - கீதை... its true... April 30th SURA release :[ ... May 1st Thala Ajith Birthday... :] ...

ஆதிரை said...

சுறா பார்க்கும் திட்டம் காலவரையின்றி ஒத்திப் போடப்படுகின்றது...

அசல், குருவி படங்களின் நிறம் இன்னும் என்னவென்று தெரியாதது போல சுறாவும் இருந்திட்டுப் போகட்டும்.

ARV Loshan said...

ஆதிரை said...
சுறா பார்க்கும் திட்டம் காலவரையின்றி ஒத்திப் போடப்படுகின்றது...

அசல், குருவி படங்களின் நிறம் இன்னும் என்னவென்று தெரியாதது போல சுறாவும் இருந்திட்டுப் போகட்டும்.//



இது முறையற்ற செயல்.. நாங்கள் அனுபவித்த சுகானுபவத்தை தாங்களும் அனுபவிப்பது தானே முறை.. ;)
குருவி,அசல் DVD இருக்கு வேணுமா? ;)

ARV Loshan said...

Jhona said...
Loshan Anna,

"எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் கடவுள் அவதரிப்பார்" - கீதை... its true... April 30th SURA release :[ ... May 1st Thala Ajith Birthday... :] ...//

MMMM :)

ஆதிரை said...

குருவி,அசல் DVD இருக்கு வேணுமா? ;)//

கூடவே ஆறு மணித்தியால காலத்தையும் கடன் தருவீர்களென்றால் நான் ரெடி

Sivakanth said...

காட்டாறாக ஓடும் வெள்ளம், பயங்கர இடிகள்,கொட்டும் அடை மழையில் தட்டுத் தடுமாறி பாதி நனைந்து (வாகனத்தில் சென்றும்)

இப்படியெல்லாம் கஷ்ரப்பாட்டு எல்லா படங்களும் பாக்கமுடியது..இல்லயா அண்ணா?

வந்தியத்தேவன் said...

அண்ணே சிவாஜியின் சாதனை தொடர்ந்து 14 தோல்விப் படங்கள் கொடுத்து 15 ஆவது படத்தை பெரு வெற்றியாக்கினார்.

Kiruthigan said...

Cool Boy said...
லோஷன் அண்ணா என்னதான் கிழிச்சு பதிவுபோட்டாலும் அது திருந்தாது//

அதுன்னா எது? ஓ அதுவா? ;)



//அதுன்னா எது? ஓ அதுவா? ;)//
அதுன்னா 'அது'இல்லை தல
உது தான் அது்னு சொன்னம்
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html
மது கதவ திறந்து வெளிய ஓடீட்டாராம்
இது எப்டியிருக்குன்னு
புது கருத்த சொல்லுங்க..

skcomputers said...

என்னமோ " அசல் " ஆஸ்காருக்கு
Nominate ஆயிருக்கிற மாதிரியும்..,
" சுறா " மட்டும்தான் Waste-ங்கிற
மாதிரியும்.,

romy said...

loshan anna vijay ya vambukku illukaati ungaluku toilet pogaadu taane, aama ajith mattum ennata kilichchaaru asal padatula. ore nada, ore udai, anda 9 walk,

vijay king of kollywood ,

romy said...

aaam ajith matuum asal padatula ennata kilichaaru, ore nadai 9 walk, ore udai.

viajy ilukaaty ungaluku toilet varaadu taane.

vijay real king of kollywood.

கன்கொன் || Kangon said...

// romy said...

vijay king of kollywood , //


// romy said...

vijay real king of kollywood. //

இத மட்டும் விஜய் பாத்தா ஒரே ஒரு வசனம் தான் சொல்லுவார்....
'இன்னுமாடா இந்த உலகம் என்ன நம்புது?'

Anonymous said...

vimax vimax vimax vimax vimax vimax vimax

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner