May 31, 2010

கங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம் - Kangon - The Black Lion


நீண்ட நாட்களாக இன்று,நாளை என்று நானே எனக்கும்,சக நண்பர்களுக்கும் எதிர்பார்ப்பை அளித்து அளித்து ஏமாற்றிய பிரம்மாண்டப் பதிவு இது..
என் வார்த்தைகளில் சொல்லப் போனால் இலங்கைப் பதிவுலகில், இது ஒரு ராவணன்,ஒரு எந்திரன்..
நான் என்னையே மணிரத்தினம்,ஷங்கர் என்பவர்களோடு ஒப்பிடுவதற்காகவல்ல..
இந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)
                              சொன்னா நம்ப மாட்டீங்களே..  எப்பூடி?

பதிவர்களைக் கலாய்த்து மொக்கைப் பதிவு இடுவதென்பது ஒரு கலாசாரம் ஆகிப் போனதால் நானும் சக நண்பர்களான வந்தியத்தேவன்(இவர் சொந்த செலவில் சூனியம் வைத்து எமக்கெல்லாம் ஒரு களிப்பூட்டும் நட்சத்திரம் ஆகின்றவர்- அது பதிவு,கும்மி,ட்விட்டர்,நேரில் என்று சகல வகையிலும்),ஆதிரை (கொஞ்சம் சீரியஸ் பதிவரேன்றாலும் எலிக் குஞ்சுப் பதிவினால் எல்லா நாட்டிலும் பிரபலமானவர்), புல்லட்(கல கல பதிவர்-இப்போதெல்லாம் எப்போதாவது எழுதினாலும் அப்போதைக்கு ஹிட் அடிப்பவர் - லேட்டஸ்ட் தகவலொன்று அண்மைக்காலமாக வாழ்க்கையின் வளப்படுத்தலுக்கு மிக முக்கியமான விடயமொன்றில் ரொம்பவே மும்முரமாம் இவர்) ஆகியோரை கலாய்த்து சிறப்புப் பதிவுகள் இட்டுள்ளேன்.

ஏனைய சகலரையும் அடிக்கடி பின்னூட்டங்கள்,கும்மிகள்,சில பதிவுகளினிடையே கடிப்பது கல கலப்பது வழக்கம்..

இந்தப் பதிவில் எம்மால் சிறப்பிக்கப்படும் இவர்...
உண்மையிலேயே நான் பார்த்து வியந்து,சில வேளை கொஞ்சம் பொறாமைப்பட்ட ஒரு இளம் பதிவர்..


யாரையாவது பிடித்து உரித்து,பின்னி எடுக்க பல விஷயமும் தெரிய வரணுமே..இவர் பற்றித் தான் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பலபல விஷயங்கள் வெளி வரும்..
சகல துறை விஷயம் பற்றியும் இவரோடு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் அரட்டலாம்.. (பயல் வெட்டி என்று சொல்லி கேலி பேசப்படாது.. உயர்வு நவிற்சி மட்டுமே எடுக்கப்படவேண்டும்)

இந்தப் பதிவு எங்கள் இன்றைய நாயகன், வந்தி லண்டன் சென்ற பிறகு இலங்கைப் பதிவுலகில் என்றுமே எங்கள் நாயகனாகியுள்ள சின்ன வந்தி என்ற சிறப்புப் பெயரையும் தாங்கியுள்ள கங்கோன்,கோபி என்றெல்லாம் தேவைக்கேற்ப,நேரத்திற்கேற்ப அழைக்கப்படும் இப்போதைய 'க்ரிஷ்' இன் பாராட்டுப் பத்திரம் என்பதைக் கருத்தில் கொள்க.. ;)
(மெய்யாலுமே பாராட்டுத் தாங்கோ)

கங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம் 
Kangon - The Black Lion


கனக கோபி என்று அறியப்பட்ட கங்கோன் (அண்மைக்காலம் வரை இப்படித் தான் எம் அனைவருக்குமே என் இவர் போகின்ற இணைய உலா வழியாக உலகம் முழுவதுமே இவரைத் தெரியும்) இப்போது தன்னை முன்னர் தானே வைத்துக் கொண்டது போல கோபி என்றோ, கனக கோபி என்றோ அல்லது கங்கோன் கோபி என்றோ அழைக்காமல் கிரீஸ் சாரி.. க்ரிஷ் என்று தன்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்..

காரணம் நிச்சயமாக நுமேரோலோஜி அல்ல.. அப்படியானால்?

ஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது.
கங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது..


இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;)
வலைப்பதிவின் சூட்சுமம் எல்லாம் விரல்களில் வைத்துள்ள நம்ம ஹீரோ, இணையத்தின் சகல தொடர்பு சமூகத் தளங்களிலும் நாள் முழுதும் குடியிருப்பார் (வேற வேலை??)

ட்விட்டர் இவரின் பாரம் தாங்காமல் அடிக்கடி Too much of load.. Try in a few minutes என்று அலறும்..
ஆனானப்பட்ட லலித் மோடியும் இவருக்குப் பின் தான்..
கொஞ்சக் காலத்திலேயே 14 500 twits அடித்தாடியுள்ளார் என்றால் சும்மாவா?

Facebook இவர் வருகை பார்த்ததுமே குய்யோ முறையோ என்று கூச்சலிட ஆரம்பிக்கும்.
பின்னே இவரின் பட லோடுகள் ஒரு பக்கம்.. பண்ணும் status மெசேஜ் லொள்ளுகள் ஒரு பக்கம்..

ஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..
எந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்..

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. ;)

இணையத்தில் என்ன வேண்டும்.. அத்தனையும் தெரியும் இவனுக்கு.. ;)
இவன் உடல் போலவே இவன் அறிவும் ஒரு பரந்த கடல்.. ;)
ஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்..
சில சமயம் ரஷ்யாவிலும் கூட கங்கோன் இணையம் மேய்ந்து கொண்டிருப்பான்..
கூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;)
நாங்கள் எல்லாம் தமிழ் போரம்களில் தடுமாறிக் கொண்டிருக்க சோமாலியா,சுவாசிலாந்து,செர்பியா என்று பேரே அறியாத இடங்களிலெல்லாம் கங்கோனின் பெயர் அறிந்திருக்கும்.

வெட்டிப் பயல் கங்கோன் என்று தன்னை நாவடக்கத்தோடு சொல்லிக் கொண்டாலும் வெட்டி வா என்றால் கட்டி வருவான் தம்பி.
இலங்கையில் இரண்டாவது பதிவர் சந்திப்பில் வியர்வை ஆறாக ஓட ஓட உழைத்துக் களைத்த உழைப்பாளி இவனே..
நனைந்து இவனின் கட்டழகு உடலோடு ஓட்டிப் போன நீல சேர்ட் சான்று.
                                                           உழைப்பாளி

கிரிக்கெட் சபைகள் எல்லாம் நம்ம ஹீரோவின் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடும்..
பின்னே, எல்லா விதிகளையும் விளக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு போல நடமாடித் திரிந்தால் சும்மாவா?
ஒரு போட்டியில் ஒரு பந்து வீசி முடிய முதல் நம்ம கங்கோன் ஐந்து ட்விட் பந்துகளை வீசி அசரடிப்பான்..
cricinfo கூட செய்திகளைப் போட முதல் இவனுக்கு தனியாக மின்னஞ்சல் செய்து உறுதிப் படுத்திக்கொள்ளுமாம்..

இலங்கை அணி அடுத்த சனத்தாக கருதி ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்காம்.. (ஹே என்னா நக்கல்.. சகலதுறை வீரர்னு சொன்னேன்)

 ஒரு பிரபல பதிவராக இருந்து அதில் தடம் பதித்த ஈரம் (!) காய முதலே பிரபல பின்னூட்டவாதியாக மாறி 'me the first' போட்டே சாதனை நடத்த வேறு யாரால் முடியும்?

எங்கிருந்து தான் வருகிறாரோ.. எல்லாப் பதிவுகளிலும் 'me the first' கங்கோன் தான்..

எவ்வளவோ பண்ணிட்டம் இதைப் பண்ண மாட்டோமா என்று வந்தி சென்ற பிறகு அந்த இடத்தைத் தனதாக்கி சளைக்காமல் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வித்தையிலும் கை தேர்ந்து குருவை மிஞ்சிக் கொண்டிருக்கும் சிஷ்யன்..
                            காதலுக்கு மரியாதை செய்யும் கறுப்புத் தங்கம்..


தினமும் கும்மியில் சளைக்காமல் எட்டுத் திக்கிலும் வரும் அடிகளை தன பஞ்சு மெத்தை உடலில் பவுன்ஸ் பண்ண விட்டு சிரிப்பார் இந்தக் கறுப்புக் கட்டழகர்.

உடலமைப்பால் தான் இவருக்கு கறுப்பு நமீதா என்ற பெயரும் வந்தது என்று தப்பாக யாரும் தப்பர்த்தம் செய்து விடக் கூடாது.. ;)
இவர் மனசும் பெரிசு..

யாருக்கு என்ன உதவி எப்படி தேவையோ உயிரைக் கொடுத்தாவது செய்யக் கூடியவர்..
பாவம் இந்த அப்பாவி நண்பன்.. ;)
ஏண்டா கூப்பிட்டோம் என்று ஆயிருப்பான்..

தன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..
ஹம்ப்டன் லேனில் உள்ள விற்கமுடியா மரவள்ளிக் கிழங்குப் பொரியல்,முறுக்கு,வடை போன்றவற்றின் ஏகபோக சீரண மெசின் இவனே..
பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பழக்கிறேன் என்று தினமும் பயமுறுத்தி பயமுறுத்தியே அதெல்லாம் இப்போது ஒரு நாளும் ஸ்கூலுக்கு கட் அடிக்காமல் போவதாகத் தகவல்..

இதெல்லாம் போதாமல் தபால் மூலப் பட்டப் படிப்பு போல, மின்னஞ்சல் மூலம் கிரிக்கெட் பயிற்சி என்று திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பாணப் பக்கம் உள்ள அப்பாவிப் பதிவர்களைஎல்லாம் போட்டுப் படுத்தி எடுக்கிறாராம் நம்ம கிரிக்கெட் ஞானி.

கையடக்கத் தொலைபேசியை இவன் வயதொத்த பச்சிளம் பாலகர்கள் காதலுக்கும் அரட்டைக்கும் பயன்படுத்த, இணையத்தில் 24 மணிநேரமும் தங்கி பாய் விரித்துப் படுத்திருக்கும் நம் ஹீரோவோ, இணையத்திலே அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி எங்கு வந்தாலும் தன் கையிலுள்ள மொபைலை அமுக்கு அமுக்கியே உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

பில் கட்டுகிற அப்பா போல அந்த டப்பா மொபைலும் நசுங்கி அவதிப்பட்டுத் திணறும்..

இருக்கிற,நிக்கிற சிக்கலில் எல்லாம் நேரடியாக தில்லுடன் மோதி தான் கருத்தை சொன்னதில் எப்போதுமே கங்கோன் பின் நிற்றதில்லை.(இப்படியான கட்டுமஸ்தான உடல் இருந்து பின் என்ன பலன்?)
இவர் வழி தனி வழி..
                       எப்பிடி இருந்தவன்.... ;)


ஆனால் இப்போ கொள்கை மாறி விட்டார் என்று அண்மைக் காலத்தில் எழுந்த சில சல சலப்புக்களை எல்லாம் மறுதலித்து கங்கோன் சொன்ன வார்த்தைகள் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தவை
"உதவி கேட்டால் யாருக்கும் உயிரையும் கொடுப்பான் இந்த கிரீஸ்..
மறப்போம் மன்னிப்போம்"



பிரபல பின்நூட்டவாதியாகவே வெற்றிப் பயணம் போய்க் கொண்டிருந்தவரை எப்படியாவது தடுத்து நிறுத்தி பதிவுப் பக்கம் அழைத்து வரவேண்டும் என இந்தக் கலாய்ப்புக்கு முயற்சி செய்கின்ற போதே, யாராலும் முடியாத அந்த விடயத்தை சாதித்தார் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய.

T 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சனத்தின் அபார ஆட்டம் பார்த்த கங்கோன் கொதித்தெழுந்து தன் மௌனம் கலைத்துப் பதிவிட்டார்..
அடுத்தடுத்து இரு பதிவு..

அம்மா பகவான் பக்தர்களுக்குப் பிறகு இப்போது சனத் ஜெயசூரிய ரசிகர்களும் கண்கோனைத் தேடித் திரிகிறார்களாம்.. அவர்களுக்கும் இவரது திருமுகம் காட்டவே இந்தப் பதிவு..


அண்மைக் காலமாகப் பதிவுகள் போடுவதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும் G Chat statusஇலேயே மினி பதிவுகள் இட்டு தம்பியர் அசத்தி இருக்கிறார்.. அவையெல்லாம் வெறும் மெசேஜ்களா இல்லை இல்லை.. தனியான தவிப்பும்,தாபமும் நிறைந்த காதல் காவியங்கள்..


போய்ச் சேர வேண்டியவரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதே இப்போது முக்கியமான கேள்வி..
                  நீங்க எல்லாம் ஏறினா எந்தக் கப்பல் தான் கவிழாது சாரே..


கங்கோனின் காவிய வரிகளில் தெரிந்தெடுக்கப்பட்டவை..

வைகாசி நிலவே வைகாசி நிலவே, மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருந்ததென்ன....


சமூகம், கட்டமைப்பு, விழுமியம் இவற்றை விட எனக்கு நான் முக்கியமானவன்.... என் தேடல் தொடங்குகிறது உறவகளுக்காய்...


கொக்கக் கோலா பிறவுணு கலருடா.... என் அக்காப் பொண்ணு வேற கலருடா....


நீ தோலைப் பார்த்து மாடு பிடிச்சா தொழிலுக்காகாது..


மனசு மட்டும் வெள்ளையாக இருந்தாலாகாதா?
நான் கண்ணீராலே கழுவிப் பார்த்தால் கறுப்பும் அழியாதா?


நான் நிராகரித்த நபர்களைத் தேடிய என் பயணம் நிராகரிக்கப்படுகையில் வரும் வலி நான் நிராகரிக்கப்படுவதை விடக் கொடியது.... #காதலேதும் இல்லை....


ஆண்டவா ஆண்டவா ஆறுபடை ஆண்டவா.... நாட்டுக்குள்ள எல்லாருமே நடிக்கிறாங்க ஆண்டவா....


நேசமில்லாத வாழ்வில் பாசமண்டாகுமா?


என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்.............


கதறக் கதறக் காதலிப்பேன், உன்னைச் சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்.... #அழகாயிருக்கிறது #பிடித்துப்போய்விட்டது


பூப்பூக்கும் தருணம், பூங்காற்றும் அறியாது... காதல் வரும் தருணம், கண்களுக்குத் தெரியாது....


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில...


அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்...




யாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார் என எம் குழு சார்பாக வாழ்த்துகிறோம்..

இவர் பற்றி எழுதினால் எழுத்து கொட்டிகிட்டே இருக்கு.. ஆனால் எந்தவொரு பதிவுக்கும் ஒரு முடிவு வேண்டும் இலையா..
So.....
                                             THE END


முக்கியமான பிற் குறிப்பு -
இந்தியாப் பக்கம் பதிவுலக அரசியல்(பதிவு-எதிர்ப் பதிவு), இலங்கைப் பக்கம் பதிவுலக அரசியல் (போலி-நிஜம்)என்று முண்டுப்பட்டு,முறுக்கி,மூக்குடைத்து,முட்டி மோதும் நேரம் அந்த சூட்டைஎல்லாம் இந்த மொக்கை,மகா மொக்கை பிரம்மாண்டப் பதிவில் கூலாகி கல கல என்று இருங்க என்ற நல்லெண்ணத்தோடு வழங்கி இருக்கிறோம்..


இது ஒன்று பட்ட ஒரு கூட்டுக் கலாய்த்தல் படைப்பு..

இயக்கம் - A .R .V .லோஷன்


உதவி இயக்கம் - பவன் ;) - எரியாத சுவடிகள்..

ஆலோசனைக் குழு - ஒன்றா ரெண்டா.. ;)

பவனின் வரிகளில் எங்கள் கறுப்புத்தங்கம்....

21 comments:

கன்கொன் || Kangon said...

தகவலுக்கு நன்றி...

அவ்வ்வ்வ்....

SShathiesh-சதீஷ். said...

//ஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..
எந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்.///

தம்பி அவா தானே இங்கேயும் நீ தான் முதலா. ஓகே எல்லோரும் வாங்கோ பின்னூட்ட அப்புறம் கும்ம ரெடி....லோஷன் அண்ணா. ஒபெநிங் சூப்பர் சோ பதிவு மெஹா ஹிட்.

balavasakan said...

யம்மாடி !! கங்கொன் பற்றிய பதிவென்டு பதிவு லோட் ஆகும்போதே தெரியது.. அந்த இரு வரலாற்று சிறப்பு மிக்க படங்கள் இரண்டையும் எடுத்தது இருக்கிறம் + மணியம் சுண்டல் நான் என்று பெருமையுடன் கூறிக்கொளகிறேன்...

##சகல துறை விஷயம் பற்றியும் இவரோடு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் அரட்டலாம்##

உண்மைதான் எனக்கும் அனுபவம் இருக்கு ...

##இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;)##

ஹா..ஹா...

##பஞ்சு மெத்தை உடலில் பவுன்ஸ் பண்ண விட்டு சிரிப்பார் இந்தக் கறுப்புக் கட்டழகர்.##

அடித்தாட முடியாது என்கிறீர்களா..!!

##மனசு மட்டும் வெள்ளையாக இருந்தாலாகாதா?
நான் கண்ணீராலே கழுவிப் பார்த்தால் கறுப்பும் அழியாதா?##

டச்சு பண்ணிட்டுது க்ரிஸ்..வாழ்க வளமுடன்...

கன்கொன் || Kangon said...

எல்லாவற்றுக்கும் பெரிரிய்ய்ய்ய்ய்யயயய பின்னூட்டம் போடவேண்டும்....

எதுக்கும் ஒளித்திருந்துவிட்டு வந்து ஆறுதலாய் இடுகிறேன்....

ஹி ஹி.... ;)

balavasakan said...

உதவி இயக்குனரின் கைவண்ணங்கள் படங்களில் தெரிகிறது கலக்கல் பவன்

Bavan said...

//தன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..//

விழுந்து விழுந்து சிரிக்கிறேன்...ஹாஹாஹா
ஹாஹாஹா

///இது ஒன்று பட்ட ஒரு கூட்டுக் கலாய்த்தல் படைப்பு..

ஆலோசனைக் குழு - ஒன்றா ரெண்டா.. ;)///

அதுதானே
ஆதிரை அண்ணா, வந்தியண்ணா, சதீஸ் அண்ணா, சுபாங்கன் அண்ணா.. எல்லாரையும் சொல்லணுமா இல்லையா..:P

ARV Loshan said...

அட பாவிகளா.. இப்பிடியொரு வரவேற்பா?
அதுக்குள்ளே தமிளிஷில் 8 வாக்கு?

மொக்கைகளுக்கு இருக்கும் மவுசே மவுசு.. ;)

ம்ம்ம்ம்

கன்கொன் || Kangon said...

// மொக்கைகளுக்கு இருக்கும் மவுசே மவுசு.. ;) //

சில பல பிரபலங்களுக்கு இருக்கும் அதரவை மொக்கைக்குரிய ஆதரவாக தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம்... :D

ஆதிரை said...

பச்சைப்புள்ளையை இப்படியா பண்ணுறது?

Bavan said...

//இப்போது தன்னை முன்னர் தானே வைத்துக் கொண்டது போல கோபி என்றோ, கனக கோபி என்றோ அல்லது கங்கோன் கோபி என்றோ அழைக்காமல் கிரீஸ் சாரி.. க்ரிஷ் என்று தன்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்.//

அதற்குக்காரணம் ஜோசியரிடம் மோதிரம் வாங்கியதுதானாம்... ஏதோ வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஒன்று தனக்கு நிறைவேற வேண்டுமென்று ஜோசியரிடம் போய் அந்த ஜோசியர் கொடத்த மோதிரம் மூலம் நிறைவேறிய தனது ஆசையை தக்க வைத்துக்கொள்ளத்தான் பெயரை மாற்றினாராம்..:P

//ஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது.//

இதுவரை நடந்த ஆராய்ச்சிகளின் படி தொடர்பு இருப்பதாக பட்சி சொல்கிறது..

//கங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது..//

வாரிசு அல்லவா.. சொ.செ.சூ இருக்கத்தான் செய்யும்..:P

//ஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..//

ஹாஹா

//ஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்..//

அட சொல்லவே இல்ல..

//கூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;)//

ஸ்பானிஸ் பாடல்களும் பாடமாக்கி வருகிறாராம்..:P

//கிரிக்கெட் சபைகள் எல்லாம் நம்ம ஹீரோவின் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடும்..//

இவரை எனது பயிற்றுவிப்பாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்..:P

//எங்கிருந்து தான் வருகிறாரோ.. எல்லாப் பதிவுகளிலும் 'me the first' கங்கோன் தான்..//

அதுதானே கன்கொன் இதுக்கு விளக்கம் அளிக்கவும்


//யாருக்கு என்ன உதவி எப்படி தேவையோ உயிரைக் கொடுத்தாவது செய்யக் கூடியவர்..//

அது உண்மை... இரவு ரெண்டு மணிக்கு இங்கிலாந்து டீம் அன்டர்சனின் வீட்டு நாயின்ட பெயரைக்கேட்டாக்கூட ஆராய்ந்து சொல்லுவார்..:P

//தன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..//

பதிவின் ஹைலைட் வசனம்...ROFL..


//திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பாணப் பக்கம் உள்ள அப்பாவிப் பதிவர்களைஎல்லாம் போட்டுப் படுத்தி எடுக்கிறாராம் நம்ம கிரிக்கெட் ஞானி.//

அவ்வ்வ்வ்வ்வ்..

//நீங்க எல்லாம் ஏறினா எந்தக் கப்பல் தான் கவிழாது சாரே..//

LMAO....முடியல... அண்ணே இநதப்படத்துக்கு இப்பிடி ஒரு விளக்கத்தை எதிர்பார்க்கல..

//இவர் பற்றி எழுதினால் எழுத்து கொட்டிகிட்டே இருக்கு.. ஆனால் எந்தவொரு பதிவுக்கும் ஒரு முடிவு வேண்டும் இலையா..//

அதுதானே அடுத்தமாதம் பார்ட்-2 போடலாம் என்ன அண்ணே..:P


//உதவி இயக்கம் - பவன் ;) - எரியாத சுவடிகள்..//

யாரிவர்.. கன்கொன் அண்ணே கன்கொன் அண்ணே இந்த பவன் நானில்லை..:P:P:P

இப்போதைக்கு இது போதும் மிகுதியப்பிறகு பார்ப்பம்..வர்ட்டா..

Vathees Varunan said...

அப்ப எல்லாரும் கூட்டாத்தான் வேலை செய்திருக்கிறியள்போல...ஏதாவது பதிலடி காங்கொனிடமிருந்து இருக்குமோ?
கொடுமை என்னவென்றால் இந்த பதிவிற்கும் அவருதான் me the First....என்ன கொடுமை இது...

KANA VARO said...

எங்கள் பத்தரை மாதத்து தங்கத்தை கருப்பு தங்கம் என்ற இந்த பதிவை வன்மையாக கண்டிக்கிறேன்.

பட டிசைனிங் உதவி தேவைப்பட்டிருந்தால் என்னிடமும் கொஞ்சம் கேட்டிருந்தால், பயலை உண்டு இல்லை என்று ஆக்கியிருக்கலாம்.

post .... டோட்டலி டமேஜ்

நிரூஜா said...

என்ன கொடுமை சரவணன்... சீச்சீ..., கன்கோன் இது...

Vijayakanth said...

enakkum anubavam irukku... eththanai manikku tweet panninaalum udane bathil tweet warum..... iwarathu thirumugaththa ulagukku kaattina loshan annaku romba danksuuu. ini konjam jaakkirathaiyaa irukkalaam athukkuthaan :P

Subankan said...

ஆகா, என்னா அடி என்னா அடி. கருப்பு தங்கம் தலைமறைவாமே? ஆளைக் காணக்கிடைக்கவேயில்லை

கன்கொன் || Kangon said...

// இந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;) //

ஐயோ எனக்கு புகழ்ச்சி பிடிக்காது...
வேணாம்....


// லேட்டஸ்ட் தகவலொன்று அண்மைக்காலமாக வாழ்க்கையின் வளப்படுத்தலுக்கு மிக முக்கியமான விடயமொன்றில் ரொம்பவே மும்முரமாம் இவர் //

அதாவது படிக்கிறாரா?
படிப்புத்தானே வாழ்க்கை? :P


// உண்மையிலேயே நான் பார்த்து வியந்து,சில வேளை கொஞ்சம் பொறாமைப்பட்ட ஒரு இளம் பதிவர்.. //

இதேன்?
எப்பிடிடா இவன் இப்பிடி வாழ்க்கையில கவலையே இல்லாம வெட்டியா இருக்கிறான் எண்டா? :-o


// (மெய்யாலுமே பாராட்டுத் தாங்கோ) //

நம்பிறன்....


// காரணம் நிச்சயமாக நுமேரோலோஜி அல்ல.. அப்படியானால்? //

விரும்பிய பெயர்.... ;)


// ஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது. //

இருக்காது.... இருக்கவே இருக்காது.
பேஸ்புக்கிலயும், ஜிமெயிலயும் அழுகாச்சிக் காவியம் தான் நடக்கிறது.



// கங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது.. //

:( :( :(



// இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;) //

Lol....
உசுப்பேத்தப்படாது.


// வலைப்பதிவின் சூட்சுமம் எல்லாம் விரல்களில் வைத்துள்ள நம்ம ஹீரோ, //

ஆனாப் பதிவு எழுதிறேல... :(


// பண்ணும் status மெசேஜ் லொள்ளுகள் ஒரு பக்கம்.. //

அவ்வ்வ்வ்....


// எந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்.. //

மன்னிக்க வேண்டும்,
invisible ஆகிவிடும். ;)


// ஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்.. //

ஆனாப் பிடிச்ச மீனை தின்ன மாட்டான். :P


// கூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;) //

அவ்வ்வ்...
ஏன் இந்த மோசமான வதந்தி?
சொல்லுறதும் சொல்லுறீங்கள் நல்லதாச் சொல்லப்படாதா?


இண்டைக்கு இது போதும்....
மிகுதி விளக்கம் நாளை தரப்படும். ஆணிகள் காரணமாக இது போதும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

எங்கள் தானை தலைவரை கலாய்க்க வேண்டாம் என கடுமையாக எச்சரிக்கிறேன்.

பொருளாளர்
”அகில உலக கன்கொன் ரசிகர் மன்றம்”

யோ வொய்ஸ் (யோகா)

வந்தியத்தேவன் said...

கங்கோன் மன்னிக்கவும் கங்கோனந்தா என் சீடன் என்பதில் பெரு மகிழ்ச்சி. நான் ஆசிரமத்தை விட்டு விலகினாலும் என் பணிகளை செவ்வனே செய்வார் என்ற நம்பிக்கை உண்டு,

குருவுக்கும் சிஷ்யனுக்கும் உள்ள முக்கிய ஒற்றுமையை மறந்துவிட்டீர்கள்? கண்டுபிடியுங்கள்.

இவன்
வந்தியானந்தா.

நிறைய ஆணிகள் காரணமாக பின்னூட்டம் குறைக்கப்பட்டுள்ளது, இதற்கான பதில் சிலவேளைகளில் பதிவாகக் கூட வரலாம். இதுவும் ஒரு கூட்டுத் தயாரிப்புத் தான்.

லேட்டஸ்டான பின்குறிப்பு : நாம் சொந்த செலவில் எமக்குத் தான் சூனியம் வைப்பவர்கள். ஆனாலும் சூனியம் வைப்பவர்களை செலவே இல்லாமல் கண்டுபிடிப்போம்.

Kiruthigan said...

மனிதருள் மாணிக்கத்தை புகழ தமிழில் வார்த்தைகளே இல்லை என நினைத்திருந்தேன்...
லோஷனண்ணா புகழ்ந்து விட்டீர்கள்...
ஆகா அற்பூதம்...

ஷக்தி said...

பாவம் மனிதருள் மாணிக்கம்..........

Karthikeyan G said...

//Shakthi said...


பாவம் மனிதருள் மாணிக்கம்..........
//


:))))))

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner