June 03, 2010

சிங்கம் - கிர்ர்ர்ர்





நேற்று தான் சிங்கம் பார்க்கப் போக நேரம் கிடைத்தது.
பார்க்கப் போகு முன்பே காது வழியாகக் கேட்ட விமர்சனங்கள் பொதுவாக நல்லது என்றே சொல்லின.. ஒரு சில சாமி மாதிரி என்று சொல்லின..


நானும் ஹரியின் படம்.. முன்னர் வெளிவந்திருந்த பட போஸ்டர்கள் , அது பற்றி நான் போட்ட பதிவு (ஓடுரா ஓடுரா சிங்கம் வருது..  )என்று எல்லாவற்றுக்கும் தயாராய்த் தான் போயிருந்தேன்.


ஆனால் உண்மையாக முதல் காட்சியிலிருந்து படம், குறிப்பாக வேகமான திரைக் கதை கட்டிப் போட்டு விட்டது.






சுருக்கமாக சொல்லப் போனால்..
வெகு பழக்கமான தமிழ் சினிமாவின் போலீஸ் கதை.


நேர்மையான துணிச்சலான போலீஸ் அதிகாரிக்கும் விடாப்பிடியான அடாவடித்தனம் செய்யும் எந்தவொரு பாதகத்துக்கும் அஞ்சாத பயங்கர வில்லனுக்கும் இடையிலான விறுவிறு மோதல் தான் கதை.


இப்படியான ஒரே விதமான கதைகளும் மீண்டும் மீண்டும் வந்தாலும் சில வெற்றி பெற்றே ஆகின்றன..
காரணம் ஒன்றும் மாய வித்தை அல்ல.. மிக சிம்பிளான அடிப்படை விஷயங்கள்.
Basic formulas..


திரைக்கதையின் வேகம்
பொருத்தமான நாயகன்.. அல்லது பொருந்திப் போகிற நாயகன்..
சுவாரஸ்யமான ஒரு சில காட்சிகளாவது..
பலமான ஒரு வில்லன்..


இவை நான்கும் இந்தப்படத்திலே இருப்பதால் சன் பிக்சர்சுக்கு - Sun Pictures உண்மையிலேயே முதன் முறையாக ஒரு வெற்றிப் படம் கிடைத்துள்ளது.


ரொம்பவே லேட்டாப் பார்த்ததால் சிங்கம் பற்றி விமர்சனம் எழுதத் தேவையில்லை என்றே முதலில் எண்ணியிருந்தேன்.
எனினும் படம் முடிந்து வெளியே வரும்போது யாரோ ஒரு இளைஞர் சொன்ன ஒரு கொமெண்டில் கிடைத்த உற்சாகம் சிங்கத்தில் நான் ரசித்த,பிடித்த, பிடிக்காத விஷயங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று பதிவுப் பக்கம் கூட்டிவந்துவிட்டது.


"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல"
- ஆனால் எக்கச்சக்க ஆணி பிடுங்கல்களால் ஒரு நாள் தாமதம்.. ;)


பரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா? ;)




சூர்யா கம்பீரமாக சிங்கம் மாதிரியே இருக்கிறார்.
இறுக்கிய கம்பீர உடலும்,முறுக்கிய மீசையும்,மிடுக்கான நடையும்,பார்வையிலேயே தெரிகிற பொறுப்பும் நேர்மையும் அவரது home workஐயும் பாத்திரத்துக்குத் தன்னைப் பொருத்த அவர் எடுத்த கடின உழைப்பையும் காட்டுகிறது.




கண்கள் பேசுகின்றன.. கைகள் ரொம்பவும் அதிகமாகவே சில சமயம் பேசுகின்றன..
ஹரி படம் என்பதால் அதிக முறைப்பு,அதீத பேச்சு..அதிரடி சண்டைகள்,பாய்ச்சல்கள்,ஓட்டங்கள் என்பவற்றைத் தவிர்க்க முடியாது தான்..


சூர்யாவைப் பார்க்கும் போதெல்லாம் அடிக்கடி எழும் ஆதங்கம் அனுஷ்காவுடன் இவரைப் பார்த்த பின் மீண்டும் எழுந்தது..
சே.. இன்னும் கொஞ்சம் உயரமாக இருந்திருக்கக் கூடாது..
பல இடங்களில் உறுத்துகிறது.


படத்தில் சூர்யாவை விட முதலில் இருந்து முடிவு வரை அதிக பில்ட் அப் கொடுக்கப்படுபவர் வில்லன் மயில்வாகனம் பிரகாஷ் ராஜ்.


(இந்தப் படத்தில் ஹீரோ வில்லன்களின் பெயரைக் கேட்க சர்வசாதாரணமாக இலங்கையின் பல பாகங்களில் வைக்கப்படும் பெயர்கள் ஞாபகம் வருகிறது. துரைசிங்கம் - மயில்வாகனம்)


மனிதர் மின்னுகிறார். படத்தைத் தூக்கி நிறுத்துவது இவர் தான்.
சவால் விடுவதாகட்டும்,மிரட்டுவதாகட்டும்,ஆவேசம்,கோபம், அவமானம் படுவதாகட்டும் பிரகாஷ் ராஜ் பிரகாசிக்கிறார்.


கடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..
இவ்வளவு நாளும் பார்த்த படங்களிலெல்லாம் பிரகாஷ் ராஜ் வந்தால் கூட நடிக்கும் எந்தக் கொம்பனாக (ஹீரோ) இருந்தாலும் பிரகாஷ் ராஜின் பிரம்மாண்ட விஸ்வரூப நடிப்புக்குள் வீழ்ந்து காணாமல் போனதையே பார்த்திருக்கிறேன்.


வசூல் ராஜா - கமல்,மொழி-பிருதிவிராஜுக்குப் பிறகு முதல் தடவையாக ஒரு  ஹீரோ பிரகாஷ்ராஜ் என்ற மலையை விழுங்கி மேவி நிற்கிறார்.


சூர்யா அந்த வகையில் ஜொலித்திருக்கிறார்..
ஒரு வேளை ஹரி அமைத்த பாத்திரப் படைப்பு அவ்வாறு சூர்யாவை அதாவது துரைசிங்கத்தை கர்ஜிக்க வைத்திருக்கலாம்..


அனுஷ்கா - அப்பப்பா.. என்ன கவர்ச்சி.. காட்சிகளில் நல்ல பெண்ணாக வந்து போனாலும் இந்தப் 'புலி' பாடல் காட்சிகளில் உரித்துக் காட்டுகிறது..
உயரம் தான் கொஞ்சம் உறுத்துகிறது.
ஒரு பாடல் காட்சியில் ஓவரோ ஓவர்..
இன்னும் ஒரு சிம்ரனாக இடுப்பை இயன்றவரை காட்டி,அசைத்து ஆடுகிறார்.




விவேக் - மினி வெண்ணிற ஆடை மூர்த்தி.. பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது.. பச்சையாக கொச்சை பேசுகிறார். சில காட்சிகள் சிரிக்க வைத்தாலும் வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..


ஏனைய நடிகர் பட்டாளம்..


நாசர் - அளவெடுத்த பாத்திரம்
ராதாரவி - பல நாளுக்குப் பிறகு மிடுக்கு..
விஜயகுமார் - (ஹரியின்) மாமாவுக்கு மரியாதை
நிழல்கள் ரவி - கடைசிக் காட்சியில் மிளிர்கிறார்
போஸ் வெங்கட் - நேர்மை,பாவம்,பரிதாபம்




சில காட்சிகள் ரசனை..


கோவில் காட்சி.. சூர்யாவின் கண்ணில் அப்படியொரு காந்தம்.
அனுஷ்காவிடம் தன் சம்மதம் சொல்லும் சூர்யா..
நாசர் நாயகன் பாடலுடன் மூக்குடைபடுவது..
நல்லூரிலும் பின்னர் சென்னையிலும் பி.ரா-சூர்யா சந்திக்கும் அனல் பறக்கும் காட்சிகள்..
யுவராணி வரும் சில காட்சிகள்..


ஆனால் சிங்கம் படம் என்பதால் அடிக்கடி சூர்யா அடிக்கும் போதெல்லாம் சிங்கம் கிராபிக்சில் வருவது கார்ட்டூன் ஞாபகம் வருகிறது


அக்ஷன் காட்சிகள் வழமையான ஹரி மசாலா.. ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது.. இந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..


ஒளிப்பதிவாளர் பிரியன் தன்னுடைய உச்சபட்ச உழைப்பை ஹரிக்கு கொடுத்திருக்கிறார்.
பாடல் காட்சிகளில் அதிகமாக ஜொலிக்கிறார்.


பாடல்கள் படத்தில் நல்லாவே வந்திருக்கின்றன.


முதல் பாடல் மட்டும் ரொம்ப்பவே ஓவர் பில்ட் அப்..
கால்பந்துப் போட்டியில் ஒரு கோல் சூர்யா அடிப்பாராம்.. உடனே அணி வெல்லுமாம்.. கிழவங்க எல்லாம் 'சுறா' விஜய் கணக்குல இவரைத் தூக்குவாங்களாம்.
என்ன கொடும இது சூர்யா.. சாரி ஹரி..


எவ்வளவு தான் புதுசாப் படத்தைக் காட்டினாலும், சில ஊகிக்கக் கூடிய திருப்பங்களும், ஹரியின் 'சாமி' ஞாபகங்களும், அரிவாள், ஏலே,தூத்துக்குடி,கிராமிய மற்றும் குடும்ப செண்டிமென்ட்களும் கொஞ்சம் பழைய வாசனை தருகிறது.


அதுபோலவே சூர்யா-பிரகாஷ்ராஜ் மோதலில் நம்ப முடியாத சில லாஜிக் மீறல்களும் .. (மயில்வாகனத்தின் உறுத்துகின்ற பொய் மீசை போலவே)
ஆனாலும் வேகம் அதிவேக திரைக்கதை இவை எல்லாவற்றையும் கொஞ்சம் தள்ளி வைக்கிறது.


அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??


விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..
எத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.


(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)


நேற்று இலங்கையில் ஐந்தாவது நாள்.. அப்படியும் Houseful.
பார்த்த எல்லோரது முகத்திலும் ஒரு திருப்தி..


எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் "மசாலா எண்டா ஹரி தான்".
இது தான் ஹரியின் Success formula..


எனக்கு சிங்கத்தைப் பொறுத்தவரையில் செம திருப்தி..
போரடிக்கவில்லை..
எதிர்பார்த்துப் போயிருந்த ஹரியின் பாணிப் படம்..
சூர்யா சிங்கமாக கர்ஜித்திருக்கிறார்..
போஸ்டரில் பார்த்தது போல பயமுறுத்தவில்லை.;)


அவரது கண்ணும்,மீசையும்,நெஞ்சு நிமிர்த்திய கம்பீரமும் இன்னும் கண் முன்னமனசில் நிழலாடுகிறது..
பிரகாஷ்ராஜின் விஷமத்தனமான வீம்புகளும் தான்..


சிங்கம் - ரியல் சிங்கம் தான்..


சிங்கம் -கிர்ர்ர் 
(கர்ஜிக்கிறதை சொன்னேங்க.. ஹீ ஹீ)






பி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..
அசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..
ஸோ அது வேற.. இது வேற..




ஸ்பெஷல் வாழ்த்துக்கள்..
இன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..
நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..

38 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

me the first

கன்கொன் || Kangon said...

கிர்ர்ர்ர்ர்.... @yoga

யோ வொய்ஸ் (யோகா) said...

சிங்கம் கர்ஜிக்கிறது. ஆனாலும் என்னை கடைசி வரை கட்டி வைத்தது அனுஷ்கா அக்காதான்...

கன்கொன் || Kangon said...

அண்ணா...

இதுவும் ஐந்தாண்டுகாலத் திட்டத்துக்குள் போடப்படுகிறது....
எப்பத்தான் பாத்து முடிக்கப் போறனோ.... :(

எண்டாலும் பதிவின்ர எல்லாத்தையும் விடக் கடைசிவரி வாழ்த்தை நிறையவே இரசித்தேன்....


// கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்.. //

ஹி ஹி....

எண்டாலும் குழப்பகரமான அரசியலைத் தவிர்த்து வசனகர்த்தா கருணாநிதி மறக்க முடியாத ஓருவர் என்று நான் நம்புகிறேன்.

Subankan said...

எனக்கும் படம் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்குப்பிறகு பாடசாலை நண்பர்களுடன் சொந்த ஊரில் பார்த்தது இரட்டிப்பு மகிழ்ச்சி :)

Vijayakanth said...

நான் ரசித்த காட்சி...
நல்லூருக்கு பிரகாஷ்ராஜ் கையொப்பமிட வரும் காட்சி.....அதிலயும் முக்கியமா பிரகாஷ்ராஜ் சத்தம் போட பொதுமகன் ஒருத்தன் அலவாங்கு எடுத்து காருக்கு குத்துவானே ..அடடடா என்ன ஒரு காட்சி....

சூர்யாவை பதவி உயர்த்திட்டு அதை விஜயகுமார் பிரகாஷ்ராஜுக்கே சொல்லுற சீன் படு சூப்பர்..!

மொத்ததில சிங்கம் வசூல் வேட்டையாடுது...

அதுசரி லோஷன் அண்ணா வி.தா.வ படத்தையும் டப்பா லிஸ்ட் ல போட்டுடீங்களே

Unknown said...

//தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்//

வரவேற்கிறேன் ..

Bavan said...

அடுத்து ராவணா அல்லது எந்திரன்தான் தியெட்டரில் என்று முடிவு அண்ணா.. இது DVD அல்லது sponsor கிடைச்சா போறதா முடிவு..:P

ஆங்கிலப்படங்கள் பார்ப்பதால் தமிழ்ப்படங்கள் பார்க்க கொஞ்சம் பஞ்சி #பீட்டர்_இல்லை..:P

ஜனநாயகக்கடமைகளும் முடிஞ்சு வர்ட்டா...

ILA (a) இளா said...

நானும் பார்த்துடேன். உங்க கட்சிதான் நானும்.

பனித்துளி சங்கர் said...

நானும் படம் பார்த்துவிட்டேன் . உங்களின் விமர்சனம் நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Its me said...

கடைசிக் காட்சி வரை பி.ரா அதகளம்..//

இல்லையே அந்தப்பாடல் காட்சியில் மட்டும் தானே அது அதகளம்

Vathees Varunan said...

எதிர்பார்த்த விமர்சனம்தான். இப்படியான படங்களை வழங்குவதில் ஹரிக்கு நிகர் ஹரியேதான்.


நீங்கள் பதிவிலே குறிப்பிட்டுள்ளதுபோல சில காட்சிகளை பார்க்கும்போது அவை வேறு ஒரு திரைப்படத்தில் பார்த்ததுபோல இருக்கிறது...
ஆனாலும் சூரியாவின் பிரகாஷ்ராஜின் நடிப்பு இவற்றோடு திரைக்கதையின் வேகம் என்பன படத்தை சுவாரசியத்தோடு பார்க்கவைக்கின்றன.

// விவேக் - பத்மஸ்ரீக்கு சரக்கு தீர்ந்து விட்டது//

//வடிவேலுவாக மாறுகிறாரோ எனத் தோன்றுகிறது..//

ஓரே இரட்டை அர்தமுள்ள வசனங்கள். சச்சின் படத்தில வடிலு செய்யுற விடயங்களைபோலவே இங்கு விவேக்கும் செய்யுறாரே...நிற்சயமாக மாறுகிறார் போலத்தான் தெரிகிறது.

அனுஷ்கா அக்காவைபற்றி சொல்லவே தேவையில்லை. பாடல் காட்சிகளில சென்சர் போடுமளவுக்கு பின்னியெடுத்துட்டா...

உங்கள் விமர்சனம் நன்று. வாழ்த்துக்கள்.

நிரூஜா said...

நண்பர்களின் பாச வற்புறுத்தலினால் இப்போது தான் 4ம் தரம் பார்த்து விட்டு வாந்தனான். உங்கள் பாணியில் விமர்சனம் கலக்கல்... :)

வந்தியத்தேவன் said...

//பரவாயில்லையே நாமளும் வலைப்பதிவர் தானா? ;)//

வலைப்பதிவர் என்றபடியால் தான் தமிழ்மணம் விருது கிடைத்தது. இது உங்களுக்கு அங்கீகாரம் தான் என நினைக்கின்றேன்.

//அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது?? //

இப்படி எழுதித்தான் விஜய் ரசிகர்களிடம் திட்டுவாங்குகின்றீர்கள். ஏன் இந்த சொசெசூ.


//(உண்மையை சொன்னால் நிறையப் பேருக்கு கோவம் வரும் தான்.. ஆனால் இது உண்மையிலேயே நக்கல் அல்ல.. மனசில் உள்ள ஆதங்கம்)//

விஜயிடம் இன்னொரு காதலுக்கு மரியாதையோ அல்லது பிரண்ட்ஸ்சோ எதிர்பார்க்கவில்லை அட்லீஸ்ட் இன்னொரு கில்லி கொடுப்பாரா என்றால் ஹீம் முடியல்லை. அதே ஆதங்கம் தான் எனக்கும்.

//எனக்கு முன் இருக்கையில் இருந்த ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க அங்கிளின் கமெண்ட் "மசாலா எண்டா ஹரி தான்".
இது தான் ஹரியின் Success formuல..//

ஏன் அண்ணை பொய் சொல்கின்றீர்கள், அவர் உங்களுக்கு பக்கத்தில் இருந்த உங்கள் நண்பர் தானே. வயதைக் குறைக்கவேண்டாம்.

//இன்று பிறந்தநாள் காணும் இசைராஜா இளையாராஜா அவர்களுக்கும், அவர் ரசிகர்களுக்கும்..//

இசைராஜாவின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகளுக்கு நன்றிகள்

//நாளை பிறந்த நாள் காணும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் அவர் தம் ரசிகர்கள் (இவருக்கும் இருப்பாங்க தானே.. ;)) மற்றும் தொண்டரடிப்பொடிகளுக்கும் வாழ்த்துக்கள்..//

பெண் சிங்கத்தின் கதாசிரியருக்கு இந்த வருட ஆஸ்காரைத் தவறவிட்ட கலைஞருக்கு வாழ்த்துக்கள்.

இன்னொருவருக்கு நாம் பிறகு வாழ்த்துச் சொல்கின்றோம். ஹிஹிஹி

சிங்கம் எல்லாம் இப்போதைக்கு பார்க்கமுடியாது. அதனால் விமர்சனத்தைப் பற்றி நோ விமர்சனம்.

அனுஷ்கா பற்றி எழுதத் தொடங்க மொபைலா பாடல் டிவியில் போகின்றது. அனுஷ்காவிற்க்குப் பதிலாக நம்ம தமன்னாவைப் போட்டிருந்தால் இன்னும் கலக்கியிருக்கும்,

குஷ்பு said...

தலைவர் கலைஞரின் பிறந்தநாள் விழாவில் நான் முதன்முரை டமிலில் உரையாற்றப்போகின்றேன். தலைவர் உறை கிழிகிழிகிழி.

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/06/karunanidhi-birthday-meeting-kushboo.html

balavasakan said...

சூர்யா நல்ல கதைகளை தெரிவ செய்து நடிக்கும் வரை அவருக்கோ எங்களுக்கோ ஆபத்து இல்லை

Karthick Chidambaram said...

தலைவா சூர்யாவா விஜய் ஆக்காதீங்கப்பா ... அது நமக்கு நல்லதில்ல ...

Risamdeen said...

"அப்ப நாளைக்கு ப்லொகில் சிங்கம் விமர்சனம் பார்க்கலாம் போல"

but ungada ammaa oruvaaru muraittaarhal...

நாகேந்திரன் said...

இந்த சிங்கத்துக்கு நிகர் சூர்யாதான் நல்ல சிறந்த படம்

Unknown said...

anna, arumayaana vimarsanam.....kaatsigaluku eetra maadiri Surya Sooopera porundukiraar......
//ஆனால் சூர்யா பறந்து பறந்து அடிப்பதைப் பார்க்க பயமாக உள்ளது..
இந்த வெற்றி அவரையும் விஜய்.அஜீத்தோடு போட்டி போட வைத்து விடுமோ என்று..//

Suryaa win Story selections arumayaaga irupadaal avar Ajith/Vijay yudan pooti pooda maatar endru nambuvom......

tizan said...

லோஷன் அண்ணா,
நீண்ட நாட்களாக எழுத வேண்டுமென்று யோசித்து இன்று எழுத விளைகிறேன். காரணம் விமர்சனம் என்று ஒன்று எழுத வந்து விட்டால் சொந்த சுய வெறுப்பு விருப்புகளை மூட்டை கட்டி வைத்து விட வேண்டும். தாங்கள் சில சமயங்களில் நடுநிலையுடன் எழுத தவறுகிறீர்கள் என்பது வெட்ட வெளிச்சம்.

(பி.கு - இலங்கையில் சிங்கத்துக்கு நம் வெற்றி FM வானொலி உத்தியோகபூர்வ வானொலி என்று அதுக்கும் இதுக்கும் லிங்க் குடுக்காதீங்க மக்கள்ஸ்..
அசல்,ஆதவன்,வி.தா.வ,சுறா.. என் ரெட்டை சுழி,கனகவேல் காக்க ஆகிய டப்பிகளுக்கும் நாம் தான்..
ஸோ அது வேற.. இது வேற..)

அசல், வி.தா.வ. பற்றிய உங்கள் விமர்சனத்தை தாங்களே திரும்பவும் படித்து பாருங்கள்.

உங்களுக்கு விஜயை பிடிக்குமா பிடிக்காதா என்பது பற்றி எனக்கு அக்கறையில்லை. நான் விஜய் ரசிகனாய் இருந்தாலும் போக்கிரியின் பின் விஜய் நடித்த 5 படங்களும் தோல்வி படங்களே என்ற உண்மையை ஏற்று கொள்ளுபவன்.

ஏன் இந்த கொலை வெறி. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை போன்றவை மூலம் தன் நடிப்பாற்றலையும் நிரூபித்திருக்கிறார். மசாலா படங்கள் என்றதும் ஞாபகத்துக்கு வருவது இன்று விஜய் தானே அந்தளவுக்கு கில்லி, போக்கிரி, திருபாச்சி போன்ற படங்கள் மூலம் தன்னை நிரூபித்திருக்கிறார்.

(அது சரி இதுவும் விஜய் வேணாம் என்று சொன்ன கதையாமே..
அடிச்சுது அப்பாவிகளான நமக்கும் சூர்யா+ஹரிக்கும் லக்..
பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??)

என்ன நேற்று வந்தவர்களும் இதையே செய்வதனால், ஓவர் மசாலாக்களை தருவதால், விஜய் அவற்றை தவிர்க்கலாம் என்பது என் எண்ணம். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்யலாம், ஏற்று கொள்கிறேன். அதற்காக விஜயை கேவலமாக விமர்சிப்பது தவறு. உங்கள் எழுத்துகளில் ( நீங்கள் மட்டுமல்ல) அளவு கடந்த நையாண்டிகளை சில சமயங்களில் காண்கிறேன்.

ஒருவர் நடித்த படத்தை இன்னொருவரை வைத்து கற்பனை பண்ணினால் நன்றாக இருக்காது. ஒருவேளை விஜய் சிங்கத்தில் நடித்து வெற்றி பெற்று இருந்தால், சூர்யாவை வைத்து கற்பனை செய்யும் போது சில வேளைகளில் நீங்களே சொல்லியிருப்பீர்கள் இது சூர்யாவுக்கு சரி வராது என்று.

நான் விஜய் ரசிகனாக இருந்தாலும் பொதுவாக எல்லா சினிமாக்களையும் ரசிப்பவன் என்பதாலும், விமர்சனம் என்று வரும்போது சுய விருப்பு வெறுப்புகளை மூட்டை கட்டிவிடுபவன் என்பதாலும் எனது எண்ணத்தை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே.

சிங்கம் பற்றிய எனது பார்வை
சிங்கம் வழமையான மசாலா என்றாலும் ஹரி அதை கொடுத்த விதத்தில் இரண்டரை மணி நேரம் எங்களை கட்டி போட்டு விடுகிறார். சிங்கம்.. அயனுக்கு பிறகு சன் பிக்சர்ஸ் இன் வெற்றிபடம், சூர்யா போன்ற திறமைசாலிகள் இந்த மாதிரி மாஸ் படங்களை தேர்வு செய்ய காரணம் C சென்டர் ரசிகர்களையும் கவருவதற்காகவே என்பது உங்களுக்கும் தெரியும்.

அன்புடன் இவன்,
என்றும் விஜய் ரசிகன்.

Prapa said...

நீண்ட நாட்களுக்கு பிறகு, படம் பார்த்த மாதிரி இருந்தது,,,, சிங்கத்தின் கர்ஜனை சூப்பர்,,,,.....வாழ்த்துக்கள் சகோதரம். ,,

அஜுவத் said...

அண்ணா இனி அரிவாள் தடி வர்ர படம் பார்க்கிறதா இல்ல; அது சரி பாடல் காட்சிகளில் ஏன் அனுஷ்காவ காட்டி மறைக்கிறார்கள்.........

Unknown said...

இது இந்தப் பதிவு சம்மந்தப்பட்டது அல்ல.

நேற்றிலிருந்து இலங்கையிலிருந்து மீண்டும் மத்திய அலைவரிசையில் 873 அலைஎண்ணில் தமிழ் சோதனை ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாமே ?

நீங்களும் இதுபோல வெற்றியை தமிழக மக்களுக்கு கேக்கற மாதிரி ஏதாவது செய்யலாமே?

Anonymous said...

நீங்கள் விமர்சனம் எழுதும் விதம் இப்போது மேலும் மெருகேறியுள்ளது ... பாராட்டுக்கள். சிங்கம் படத்தை இன்னும் பார்க்கவில்லை ..... உங்களது இந்த விமர்சனத்துடன் ... சனிக்கிழமை பார்ப்பதாக இருக்கிறேன்....உங்களை ஒரு நாடு நிலை விமர்சகர் என்று நினைக்கிறேன் ....

அது ஏனோ தெரியவில்லை ... இப்பொழுதெல்லாம் எந்த சினிமா தகவல் ஆகட்டும் விஜய் வருகிறார் .... அவருக்கு சம்மந்தமில்லாத இடங்களில் கூட உங்களைப் போன்ற சில நபர்கள் அவரை வேண்டுமென்றே இழுக்குறீர்கள் .... உண்மையிலேயே அவர் நீங்கள் ஒப்பனை செய்கின்ற அளவுக்கு அவ்வளவு தரக் குறைவான நடிகர் கிடையாது ..... சினிமா துறையில் அவர் தொடர்ந்து ஐந்து தோல்விப் படங்களை கொடுத்தாலும் .... தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைத் தந்த காலமும் உண்டு .....உண்மையிலேயே அவருக்கு ரசிகன் நான் .... அது போல் உங்களது பதிவுகளையும் வாசிப்பவன் ...

நான் தயவு உங்களிட கேட்கிறன் ... விஜைஜை இப்படிப்பட்ட விமர்சனங்களில் வம்புக்கிளுப்பதன் நோக்கம் என்ன ???...இதனால் உங்களுக்கு கிடப்பது என்ன ???.... நன்றாகத் தெரியும் உங்களுக்கும் அவருக்கும் நேரடியாக ஒரு பிரச்சினையும் இல்லை என்று...இதை நான் "ஒரு மலையை பார்த்து நாய் குரைப்பதாகவே உணர்கின்றேன் ....".

நான் உங்களது ஒவ்வொரு பதிவையும் வசிப்பது உண்டு ஆனால் பின்னூட்டம் தருவது இல்லை, அனால் இடம் கிடக்கும் போதெல்லாம் விஜைஜை பற்றி அவதூறாக எழுத்து கிறீர்கள்.

//பின்ன நம்ம டாக்டர் போலீசா நடிச்சிருந்தா நமக்கெல்லாம் வாந்திபேதி வந்திருக்காது??

எதை வைத்து எப்படி எழுதினீர்கள்....விஜய் முன்பு போலீஸ் கதானாயகன நடித்தாரா அந்தப் படம் உங்களுக்கு அப்படி ஒரு உணர்வைத் தந்ததா...?
இப்படி எழுதுவதன் மூலம் உங்களை நீங்களே ஒரு நடுநிலைமைய எழுத்தாளன் என்பதை நிருபிக்கத் தவறுகிறீர்கள் ....ஒரு விமர்சகனுக்கு நடுநிலை மிக முக்கியம் ...???

தயவு செய்து ... விஜயை பற்றி மக்களிடையே ஒரு கேவலமான நடிகன் என்ற பேரை பரப்ப முயற்ச்சி செய்யாதீர்கள்....

நாங்களும் மக்கள் தான் said...

ஒரு கேவலமான நடிகன் என்ற பேரை பரப்ப முயற்ச்சி செய்யாதீர்கள்....//

அப்படியெல்லாம் பரப்பத் தேவையில்லை. because already confirmed..
நாங்களும் மக்கள் தான்

மாயாவி said...

//விஜயை நினைச்சா பரிதாபமா இருக்கு..
எத்தனை வெற்றி பெற்ற படங்களை நிராகரித்து டப்பாக் கதைகளை எடுத்து தானும் டப்பா ஆகிக் கொண்டிருக்கிறார்.
//
உங்க விமர்சனத்தோட த்ரிஷ்டிபொட்டே இந்த வரி தான் பாஸ்....

எனக்கும் சிங்கம் ரொம்ப பிடிச்சது...

sivaruban said...

Really nice movie. yesterday i watch at causeway point singapore. really a good masala movie from hari. some more points to surya.end of movie i heard a comment from one lady Better than sami.

romy said...

loshan anna, pokkiri film la ,vera enda nadigarayaavdu nadichca eppadi erukkum nu ninachchi paarunga, vaandipedi varaadu , sooo........la pogum, y unga ajith nadichcha dog aayil pogum, vijay makkaluku nalladu pannra kadaigala taan terivu seyiraaru, ada mudalla puringi kollunga. vijay naama ennaikum avaroda irukkradala vijay taan No 1. ide suriya or ajith 5 flops tanda, vanga market illamale pogum, y vikram only 2 flops maraket dal, raavanan for ar rahuman n mani ratnam not for vikram. vijay ever king ok kollywood. go n see vijay tv awards,

Unknown said...

Nice comments romy, Loshan first understand the really other than when writing this sort of reviews... write the correct things.
you first understand that Vijay is the only one having huge fan base next to Rajini so in ur articles think, loads of Vijay fans also might be reading ur post. Dnt be a anti-vijay supporter, U dnt need to support to vijay rarher try to be a good article writer.

கன்கொன் || Kangon said...

// Goutham said...

Nice comments romy, Loshan first understand the really other than when writing this sort of reviews... write the correct things.
you first understand that Vijay is the only one having huge fan base next to Rajini so in ur articles think, loads of Vijay fans also might be reading ur post. Dnt be a anti-vijay supporter, U dnt need to support to vijay rarher try to be a good article writer. //

தமிழ்நாட்டில கமல்ஹாசன் எண்டொரு நடிகர் இருக்கிறாரப்பா...

சிவாஜி கணேசனத்தான் மரியாதை குடுக்காம இறக்கும்வரை விட்டிற்றியள், கமல்ஹாசனயாவது கொஞ்சமாவது மதியுங்கப்பா....

என்னத்தச் சொல்லி... :(

Unknown said...

//கன்கொன் || Kangon

தமிழ்நாட்டில கமல்ஹாசன் எண்டொரு நடிகர் இருக்கிறாரப்பா...

i ws talking abt fan base..... nt abt acting...

Kamal already a world famous actor... wen its cum to acting u knw, rajini is next to kamal only.

கன்கொன் || Kangon said...

//
i ws talking abt fan base..... nt abt acting...

Kamal already a world famous actor... wen its cum to acting u knw, rajini is next to kamal only. //

விளங்கிச்சு....

இதுக்கு நான் விளக்கம் குடுக்கத்தான் வேணுமா?
எ.கோ.சரவணா இது...

கமலை விட விஜய்க்கு இரசிகர்கள் அதிகம் எண்டுறியள்?
சரியய்யா... நான் நம்புறன்.
சில விசயங்கள விளங்கப்படுத்திறத விட பேசாமயே விடலாம்.

எதுக்கும் இருக்கிற கிணத்த விட்டு வெளில இடக்கிட எட்டிப் பாருங்கோ...
ஏனெண்டா உள்ளுக்குள்ளயே இருந்தா பாசி வளர்ந்திடும், கிணத்தச் சொன்னன்.
நான் விளக்கமே சொல்லேல உங்களுக்கு.

வாழ்த்துக்கள்...

தலயும் அவர் தானே தளபதி அவர்தான்....

Unknown said...

@கன்கொன் || Kangon said...

its no point of talking to u....

this is non of ur business.. to post trply to my posts. first try to understand...
கமலை விட விஜய்க்கு இரசிகர்கள் அதிகம் எண்டுறியள்?

cnt use ur brain to think frm my replies that Kamal might be having more fans than Rajini and Vijay all over the world since he is extra ordinary actor.... Frankly tell, im a Kamal fan nt a Rajini fan......Actually I dnt even use Kamal name to compare with Vijay since Vj is very far frm him.

THIRAVI said...

vijay manusana illa kadavula avara minjirathukku alu illatha matiriye padam panraru.(eg- Sura) padam na ellaraum sandosa paduthanum ipadi oruthan pugal pada enna vilambara padama? vijay ya pathi comment panninathum koba padura ethanayo rasigargal yen unga parents ah pathi konjamavathu yosichu parthirukeengala? ama unga parents ungaluku seiyathatha apadi intha vijay enna pannitaru???? ithula periya payam ennana vijay paiyanum hero va ethana oora adichu norukka porano??? apuram vijay CM vijay paiyan PM apadiyana makkaloda nilamai?????????????

பரிசல்காரன் said...

Thala,

Inime vimarsanam potta adippanga. Raavanankku pottukkalam!

Anonymous said...

Hello, I new yours frient on this forum)

Nitheesram Rajes said...

<<>>
<<>>
........................
HITS கிடைக்க வேண்டும் என்பதற்காக Vijai பற்றி எழுத வேண்டாம்.
பணத்திற்காக லஞ்சம் வேண்டி உழைப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் தெரியவில்லை.
#A Small Vijay Fan#

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner