July 06, 2010

முரளி !!! I will miss you !

அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய - இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் பற்றியும், நேற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பற்றியும் ஒரு பதிவு இடலாமென்று யோசிக்கையில் தான் அந்தத் தகவல் வந்து மனசை உடைத்து விட்டது.

Muttiah Muralitharan to announce his retirement from Test Cricket after the 1st Test match against India to be played in Galle. - Nishantha Ranatunga

அலுவலக வேலைகளிலும் அலைச்சல்களாலும் அசதியோடு வாகனமோட்டிக் கொண்டிருந்த எனக்கு வாழ்க்கையே வெறுமையானது போல இருந்தது.

முரளி கடுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரிக்கு விளையாடியதிலிருந்து படிப்படியாக அவரது முன்னேற்றங்கள், சாதனைகள்,உலக சாதனைகள் என்று அத்தனையையும் விடாமல் விருப்பத்தோடு தொடர்ந்து கொண்டிருப்பவன் நான்.
91 இல் பாடசாலைப் பருவகாலத்தில் பந்துவீச்சு சாதனை படைத்துப் பரிசு வாங்கியபோது...
அப்போதே இவரின் ரசிகன் நான்.. என் அப்பா என்னை அழைத்து சென்று முரளியை அறிமுகப்படுத்தி வைத்தார்.


உடனடியாக வாகனமோடிக் கொண்டே தெரிந்த (கிரிக்கெட் பற்றி,முரளி பற்றி, இந்த முடிவு பற்றி) பிரபலங்கள்,ஊடகவியலாளர்கள்,கிரிக்கெட் சபை நண்பர்கள் ஆகியோரிடம் கேட்டால் சிலர் அப்படியா என்றார்கள்.. சிலர் ஆமாம் என்று கவலைப் பட்டார்கள். சிலர் உறுதிப் படுத்தினார்கள்.

இது ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் இருந்து வந்த தகவல்.
இன்னும் முரளி நேரடியாக எதுவும் அறிவிக்கவில்லையாம் என்பது ஆறுதல்.
இந்த செய்தி பொய்யாகிவிடக் கூடாதா என்று ஒரு நப்பாசை.

என்றோ ஒருநாள் ஓய்வு பெறுவார் எனத் தெரியும்.. ஆனால் அந்த நாள் இப்படி சீக்கிரம் வருகிறதே என்பது மனதைப் பிசைகிறது.

80,90களில் இருந்து எனக்கு நான் பார்த்து ரசித்து வந்த ஒவ்வொரு கிரிக்கெட் நாயகர்களாக ஓய்வுபெறும் போதும் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக வெறுக்கிறது.

முதலில் வெங்க்சர்க்கார்,அலன் போர்டர், மகாநாம,ஸ்டீவ் வோ,டீ சில்வா, ஷேன் வோர்ன், ஹெய்டன், கில்க்ரிஸ்ட், ஜோண்டி ரோட்ஸ், வசீம் அக்ரம்..

இதன் பின் இப்போதைய மூவர் இல்லாமல் கிரிக்கெட்டை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது..

முரளி,சச்சின், பொன்டிங்...

இவர்கள் மூவரும் விளையாடாத ஆட்ட வகையான Twenty 20 போட்டிகள் பிடிக்காமல் போனதற்கும் இதுவே காரணமோ?

இப்படி நான் சிறு வயதில்,பின்னர் பதின்ம வயதுகளில்,அதன் பின்னர் நான் வளர வளர என்னோடு வளர்ந்த இந்த நட்சத்திரங்கள் கிரிக்கெட் உலகிலிருந்து விலக விலகத் தான் எனக்கும் வயது போவதை உணர்கிறேன்.

முரளி ஓய்வு பெறுவதை அறிவித்திருக்கும் நேரம் மிகச் சரியானதே..

அணியை விட்டு நீ வேண்டாம்..நீ எமக்கு ஒரு சுமை என்று துரத்துவதை விட,அல்லது வேண்டா வெறுப்பாக அணியில் வைத்திருப்பதை விட உச்சத்தில் இருக்கும்போதே ஓய்வை அறிவிப்பதே உச்ச,உயரிய நட்சத்திரங்களின் இயல்பு,பெருந்தன்மை.

நான் ரசித்த பெரும்பாலான வீரர்கள் அவ்வாறே நடந்திருக்கிறார்கள்.
(நானும் நான் மிக நேசிக்கும்,ரசிக்கும் இந்த வானொலித் துறையிலிருந்து அவ்வாறே விலக விரும்புகிறேன்.. ஆனால் இப்போதைக்கு இல்லை )

நீ போகாதே,.. நீ தேவை என்று மற்றவர்கள்,ரசிகர்கள்,சக வீரர்கள் எங்களை MISS பண்ணும் வகையிலேயே அந்த ஓய்வு அமைவதே சாதனையாளர்களுக்கு அழகு.

முரளி ஒரு உண்மையான அணி வீரர்.. உண்மையான சாதனையாளர்..

முரளிதரன் இப்போது அனேக பந்துவீச்சு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

டெஸ்டிலும் ஒருநாள் போட்டிகளிலும் அவர் கைப்பற்றிய விக்கெட்டுக்களை இன்னொருவர் முந்துவது எப்போதுமே நடக்காமல் போகலாம்..

தானாக எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காத ஒரு நல்ல மனிதர்.

800 விக்கெட்டுக்களை அடைய இன்னும் எட்டு விக்கெட்டுகள் தேவைப்படும் நேரத்தில் தான் இந்திய அணியுடன் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியுடன் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

அந்தப் போட்டியில் முரளி தேவையான எட்டு விக்கெட்டுக்களை எடுத்து சாதனை நாயகனாக விடைபெறுவாரா என்பதே ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வி.
Murali has taken 792 wickets in 132 Tests and 515 wickets in 337 ODIs. 


ஆனால் உலகக் கிண்ணப் போட்டிகளில் முரளி விளையாடுவார் என்பதே பிந்திய தகவல். இது ஒரு ஆறுதல்..

முரளி தரப்பிலிருந்து இதுவரை வெளியிடப்பட்ட தகவல்களின் படி ஓய்வின் பின்னர் இலங்கையில் இடம்பெறவுள்ள முக்கோண கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என்றும் அதன் பின் உலகக் கிண்ணம் வரை விரும்பிய போட்டிகளில் விளையாட தேர்வாளர்கள் இடமளித்துள்ளார்கள் என்றும் தெரிய வருகிறது.

விளம்பரங்கள்,கோடிக் கணக்கில் குவியும் பணம் என்பவற்றுக்காக அணியில் இளையவரின் இடத்தைத் தாமே எடுத்து துண்டு விரித்து அடம் பிடித்து இருந்து நாட்டாமை பண்ணும் பல முதிய முன்னாள் சாதனையாளர்களை விட முரளி பல்லாயிரம் மடங்கு மேலே..

அணித் தலைவர் சங்கக்காரவும் தேர்வாளர் குழுவின் தலைவர் அரவிந்தவும் முழுத் தொடரும் விளையாடிய பின் ஓய்வு பெறுமாறு கேட்டபோதும் தன்னால் நூறு சதவீத பலத்துடன் தொடர் முழுவதும் பந்துவீச முடியுமோ என்று சந்தேகிப்பதாகக் குறிப்பிட்டு முதல் டெஸ்ட் போட்டியின் இறுதியில் விடைபெறுவதாக சொல்லியுள்ள முரளியின் ரசிகன் என்பது பெருமையாக உள்ளது.

அவர் எப்போதும் ஒரு கனவானாகவே இருந்துள்ளார்.

முன்பு தான் சுயநலவாதியாக தனது இடத்தை அணியில் நீண்ட காலம் வைத்திருக்கப் போவதில்லை என்று சொன்னது போல "எப்போது போகப் போகிறாய்' என்று யாரும் கேட்க முதலே விலகுவதாக அறிவித்துள்ளார்..

முரளியை டெஸ்டில் நான் ரசிப்பது போல வேறெந்த வகையிலும் அதிகமாக ரசிப்பதில்லை..

We will miss you Murali..
Specially I will miss you a lot..
மீண்டும் இப்படி இளமை திரும்பாதா? எனக்கும் முரளிக்கும்.. 

இன்று இந்த செய்தியால் Mood போச்சு..
உலகக் கிண்ண எதிர்வு கூறல் பதிவு Cancelled..

நெதர்லாந்து வெல்லும்.. வெல்லவேண்டும்,..

கானாவைக் கைகளால் தோற்கடித்து அரையிறுதி வந்த உருகுவே மண் கவ்வ வேண்டும்..



22 comments:

கன்கொன் || Kangon said...

நானும் முரளி இல்லாமல் தவிக்கப் போகிறேன்.

கிறிக்கற்றில் உங்களோடு எனக்கு நெருங்கிய ஒற்றுமையான விருப்பங்கள் இருப்பதால் என் உணர்வுகள் அப்படியே பதிவு முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன...

அருமை அண்ணா...
இதைவிட வார்த்தைகள் இல்லை.

முரளியின் ஓய்வை அறிந்தபோது ஒரு வெறுமை உணர்வு வந்தது.
கொஞ்ச நேரத்தில் அதை மறக்க முயன்றேன், இப்போது பதிவைப் படித்ததும் திரும்ப அதே சுமை...

கிறிக்கற்றைத் தாண்டிய எதிர்காலம் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன் முரளிக்கு.

Subankan said...

:(

எத்தனையோ சர்ச்சைகளையும், சேறுபூசல்களையும், எரிச்சல்களையும் தாண்டி வந்த முரளிமீது எப்போதுமே ஒரு தனி மரியாதை உண்டு.

I will miss you a lot Murali..

Vijayakanth said...

நீங்க சனத்தை போட்டு தாளிக்கிறது முரளி கேள்விபட்டிருப்பார்.....அதுதான் நல்ல முடிவு எண்டு நீங்க சொல்லணும் எண்டு இந்த முடிவ எடுத்திருப்பார்....

SShathiesh-சதீஷ். said...

எல்லோருக்கும் கவலை தரும் செய்தி தான் இது. ஆனால் சிங்கம் தன் பலம் இருக்கும் போது ஓய்வு பெறுவது தான் சிங்கத்துக்கும் பெருமை. முரளி அதை சரியாக செய்கின்றார் என நம்புகின்றேன். கவலையை ஒருபுறம் தள்ளி விட்டு ஒரு சாதனை தமிழனின் எதிர்கால வாழ்வுக்கு வாழ்த்து சொல்வோம்.

யோ வொய்ஸ் (யோகா) said...

for me also this is a sad news, we going to miss murali magic in future..

shan shafrin said...

முரளியை பார்த்தாவது சிலர் திருந்த மாட்டாங்களா..... :(

anuthinan said...

சில மாற்றங்களை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அண்ணா!!!

உங்களைப்போல எனக்கும் கவலை கவலை கவலை

balu said...

we mis u murali anna..

தர்ஷன் said...

எனக்கு அரவிந்த ஓய்வுப் பெறப் பொது இப்படித்தான் இருந்தது. இனிமேல் கிரிக்கெட் பார்க்க மாட்டேனோ என்று கூட தோன்றியது. இப்போது முரளி எனக்கேதோ அவர் இன்னமும் மூன்று வருடமேனும் விளையாடுவார் என்றே தோன்றியது. இது எதிர்பாராதது.

என்.கே.அஷோக்பரன் said...

நானும் சிறுவயதில் கிரிக்கட் ரசிகன் தான்! 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தைக் கட்டிலில் படுத்தபடி இரசிக்கும் வாய்ப்பு (சந்தர்ப்பம்...), காலில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு சில மாதங்கள் கட்டிலிலே மட்டுந்தான் என்காலங்கழிந்தது, அந்தச் சிறு பராயத்தில் நான் ஒரு கிரிக்கட் ரசிகனாகவே இருந்தேன். 1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டிகளில் கலக்கிய அர்ஜீன ரணதுங்க, அரவிந்த டி சில்வா, களுவித்தாரண, அசங்க குருசிங்ஹ, முரளிதரன், வாஸ் என எனது அபிமான வீரர்களாக இலங்கையணி வீரர்கள்தான் அது முதல் இருந்து வந்தனர்.

ஏனோ தெரியவில்லை இந்த தலைசிறந்த வீரர்கள் ஓய்வு பெறப் பெற எனக்கும் கிரிக்கட் மீதான ஆர்வம் குறையத்தொடங்கியது (நேரம் மற்றும் இன்னபிற காரணங்களும் உள்ளடக்கம்), ஆனால் இன்றுவரை ஒரு போட்டியில் முரளி விளையாடுகிறார் என்றால் ஆர்வத்துடன் பார்ப்பேன்... முரளி உலகசாதனை படைக்க சில விக்கெட்டுக்கள் மட்டுமே எடுக்கவேண்டியிருக்கும் போட்டிகளை கட்டாயம் பார்த்தே தீருவேன்... அப்படி நான் விரும்பிய வீரர் ஓய்வு பெறுகிறார் என்றதும், மனது கொஞ்சம் பாரமாகிறது.... (முரளி எனது மனதில் தனி இடம் பெற இன்னொரு நாம் அனைவரும் “உணரும்” காரணமும் முக்கியமானது!)

அவரது எதிர்காலம் சிறக்கப் பிரார்த்திப்போம்!

Anonymous said...

Jayasurya இனியாவது சிந்திக்கட்டும்.

Unknown said...

எனது அப்பாவின் ஆர்வத்தினால் நானும் கிரிக்கெட் கேட்க தொடங்கி (வன்னியில் டிவி பார்க்கமுடியாத காலம் அது)1996 உலக கோப்பை இலங்கை வென்றதன் பின் நான் இலங்கை ரசிகன் ஆனேன்.அப்பா இந்தியா ஆதரவு. அதனால் இலங்கை அணியின் எல்லா வீரர்களையும் அறிந்திருந்தாலும் சனத், முரளி இருவருமே இன்றுவரை அசைக்க முடியாத இடத்தில் என் மனதில். இரண்டுபேரு விளையாடும் போட்டி என்றால் அன்று பள்ளிக்கூடம் எனக்கு மட்டும் லீவு. இப்போது சனத் இல்லாத போட்டியில் முரளியும் இல்லை என்றால்.................. தலைக்கணமும் பந்தாவும் தான் ஒரு சாதனையாளன் என்ற ஆர்ப்பாட்டமும் இல்லாமல் எப்போது ஒரு சிநேக பார்வையும் பிழை விட்டாலும் கலங்காத சிரிப்பும் இனி பார்க்க முடியாது யாரிடமும். நேற்று வந்த வவ்வால்கள் போடுகிற ஆட்டத்திக்கு முன்னே முரளி ஒரு gentleman கிரிக்கெட்டில். வாழ்த்தி விடை கொடுப்போம் கண்ணீருடன்.

Unknown said...

மேற்கிந்தியத் தொடருக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகிவிடுவேன் என்று சொல்லியிருந்தார். இந்தியத் தொடர் அவசர அவசரமாகப் புகுத்தப்பட்டதும் அத்துடனேயே விலகுகிறார். எனக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. அந்த காலி டெஸ்ட் போட்டியில் முரளி ஆகக்குறைந்தது எட்டு விக்கெட்டாவது வீழ்த்தவேண்டும் என்ற ஆசையோடு முரளி எடுக்கிற கடைசி விக்கெட்டாக சச்சின் இருக்க வேண்டும் (என்ன தான் சச்சின் இல்லாவிட்டால் நான் கிரிக்கெட் பார்க்கமாட்டேன் என்றாலும்) என்றொரு நப்பாசையும் இருக்கிறது.

Unknown said...

M
V 2 Missed A Legend...

Good Bye Dear Hero

Bavan said...

:((((( We miss you murali..:(((

அஹமட் சுஹைல் said...

அண்ணா இப்படி ஒரு பதிவ ஏன் அண்ணா போட்டீங்க. ரொம்ப கஸ்டமா இருக்கு. ஏலவே முரளியின் முடிவால் கஸ்டப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு இப்பதிவு இன்னும் கஸ்டமா இருக்கு அண்ணா.உண்மையிலயே கஸ்டமா இருக்கு. முரளி தன் முடிவை மாற்ற வாய்ப்பே இல்லையா..?

Jana said...

என்னைப்பொறுத்தவரையில் முரளியின் முடிவு வரவேற்கத்தக்கதே. சிறந்தமுடிவும்கூட

Good bye Murali....

Unknown said...

லோஷன் அண்ணா..,

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.இன்னும் இரண்டு ஆண்டுகள் டெஸ்ட் மேட்ச் முரளி விளையாடினால் 1000 விக்கட்டுகளை அள்ளியிருப்பார்.சனத் ஆடும் லெவனில் விளையாடும்போது இவர் ஏன் ஓய்வு பெற வேண்டும்?

Unknown said...

'Murali doesn't deserve the record' - Emerson

Unknown said...

'Murali doesn't deserve the record' - Emerson http://www.cricinfo.com/australia/content/current/story/466590.html

Bavan said...

// sanjeevan said...
'Murali doesn't deserve the record' - Emerson //

பொறாமை பிடித்தவன்..:)

கன்கொன் || Kangon said...

Ross Emerson admits to no-balling Murali due to orders from the top

http://www.islandcricket.lk/news/60670708/ross_emerson_admits_no_balling_murali_due_orders_from_the_top

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner