August 30, 2010

சீ சீ சீ....

இரண்டு பதிவுகள் மனதில் சேமிக்கப்பட்டுக் காத்துக் கொண்டிருந்தாலும் இந்த மூன்று நாட்களில் மனதை அரித்துக் கொண்டிருந்த சில விஷயங்களை முதலில் பதிவாகக் கொட்டிவிடவேண்டுமென்று இந்தப் பதிவு..




சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரம்.


பதினெட்டு ஊசிகள்,ஆணிகள் அவரது உடலுக்குள் அவர் வேலை செய்த எஜமானர் குடும்பத்தினரால் ஏற்றப்பட்டிருக்கின்றன.
இதுவரை சத்திரசிகிச்சையின் பின் அகற்றப்பட்டு எடுக்கப்பட்டவை இததனை.
இன்னும் எத்தனை ஆரியவதி என்ற அப்பாவியின் உடலுக்குள் இருக்கின்றனவோ தெரியாது..


இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுவேலை,தொழிற்சாலை வேலைகளுக்கு செல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பி இருக்கிறார்கள்.


பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..


இப்போது ஆரியவதிக்கு நடந்த ஆணியேற்றிய கோரம்..


அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?
ஏன் இப்படி ஒரு கோர வெறி?


சக மனிதர்களைத் துன்புறுத்துவதில் குடும்பமாக ஏன் இப்படி ஒரு இன்ப வெறி அவர்களுக்கு?
பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?


அரபு நாடுகளில் மட்டும் இவ்வகையான செயல்கள் பணியாளர்களுக்கு எதிராக நடைபெறுவது ஏன் என்று புரியவில்லை.


அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?


வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறதோ?


இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?
இலங்கை அரசு இப்படியான சம்பவங்கள் இனியும் நடக்காமல் தடுக்க தனது நட்பு நாடுகளுள் ஒன்றான சவூதி அரேபியாவை நேருக்க வேண்டும். அல்லது பணிப்பெண்களை ஜோர்டானுக்கு அனுப்பாமல் நிறுத்தியது போல சவூதிக்கும் அனுப்புவதை தடுக்க வேண்டும்.


இதனால் அரேபியர்கள் நிறுத்திக் கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
அவர்கள் தொடர்ந்தும் இந்தியா,பிலிப்பைன்ஸ்,பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து தங்களுக்கான 'வதைபடக்கூடிய அடிமைகளை' அழைத்துக் கொள்வார்கள்.



சிலாபம் காளி கோவிலில் நடந்த மிருக பலி..


என்ன தான் சிறு தெய்வ வழிபாடு, முன்பிருந்தே வந்தது என்று சப்பைக் கட்டு சாட்டுக்கள் சொன்னாலும் நானூறுக்கு மேற்பட்ட உயிர்கள் ஒரு ஆலயத்தில் வைத்து பக்தி என்ற பெயரில் பலி கொடுக்கப்பட்டது தவறே.


இதை நியாயப்படுத்தி ஒரு சிலர் கருத்து சொல்லி வருவது பெரும் வேடிக்கை மட்டுமல்ல வெட்கமும் கூட..


அவர்கள் இந்த பலியை வேள்வியாக,முன்பிருந்தே இருந்துவரும் வழிபாட்டு முறையாக நியாயப்படுத்துவதன் காரணம், இந்த மிருகபலியை முன்னின்று தடுக்க முனைந்தவர்கள் பௌத்த பிக்குகள் என்பதே.
எங்கள் சமய விவகாரம்.. நாம் பார்த்துக் கொள்வோம் என்ற குறுகிய நோக்கமே இது.


யார் தடுத்தாலென்ன.. நியாயம் என்றால் நியாயம் தான்.


ஒரு பக்கம் வடக்கு-கிழக்கில் போர் என்ற பெயரில் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது இவர்களின் நியாயம் எங்கே போனது என்ற கேள்வியில் இருக்கும் நியாயம் மிகச் சரியானதே.


ஆனால் அதற்காக இது சரி என்று ஆகிவிடாது.
உயிர்கள் என்றால் உயிர் தான்.
சமயம்-வழிபடும் இடம் என்றால் அதற்குரிய புனிதம் வேண்டியதே.




அசைவ உண்ணி நீ யார் இது பற்றிப் பேச என்று கேட்டால், வெள்ளி-செவ்வாய் தாவர உன்னிகளாக அப்படியானால் ஏன் விரதமிருந்து கோவில் போகிறீர்கள் என்று நானும் கேட்கத் தயார்.


பௌத்த பிக்குகள் செய்ததை ஏன் இந்த சைவ உண்ணிகள், அகிம்சாவாதிகள்,அன்பைப் போதிப்பவர்கள் செய்யவில்லை?
அவர்கள் செய்யும் போது ஏன் கடுக்கிறது?


இதற்குள் வழிபடுவது எப்படியும் செய்யப்படலாமாம்..இறைவனை நாம் அறிந்த முறையில் வழிபடுவதை இறைவன் ஏற்பாராம்.. கண்ணப்ப நாயனாரை உதாரணமாக அழைத்து வருகிறார்கள்.
இந்தக் காலம் மனிதர்கள் நாகரிகமடைந்த காலம். இன்னும் உயிர்ப்பலி தேவையா?


இன்னும் சிலர் அகிம்சை+உயிர்ப்பலியை மூடநம்பிக்கைஎன்று வகைப்படுத்துகிறார்கள்.
ஒரு சில உயர்சாதிப் பிரிவினர் உருவாக்கிக் கொண்ட விதியாம் இது.. எனவே கோவில்களில் ஆடு,மாடு,கோழி அடிக்கலாமாம்.


எங்கே போய் என் தலையை முட்டுவேன்..


இப்போது சொல்லுங்கள் சமயங்கள் எம்மை நல்வழிப்படுத்தும் என இளைஞர்கள் நம்புவீர்களா?




பாகிஸ்தானும் கிரிக்கெட் சூதாட்டமும்..


மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டப் புயல் சந்தேகத்தில் சிக்கி இருக்கிறது.


ஆஸ்திரேலியாவுடன் படுதோல்வி தோற்ற சர்ச்சையால் பலபேருக்குத் தண்டனை வழங்கப்பட்டு(அதில் ஒரு சிலர் மன்னிப்புப் பெற்று இப்போது தான் மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளார்கள்) காயம் ஆறி மீண்டும் அடித்தளத்திலிருந்து அணி கட்டமைக்கப்படும் நேரம் மறுபடி ஒரு பெரிய சர்ச்சை.




இம்முறை பணம் கொடுத்து வீரர்களை தன் கைப்பாவையாக ஆட்டிவைத்த பந்தயக்கார சகோதரர்கள் கையும்களவுமாக அகப்பட்டு அதில் ஒருவர் கைதாகியும் இருக்கிறார்.


பாகிஸ்தான் வீரர்களின் முகவராக இருந்து அவர்களுக்கு இங்கிலாந்தில் வாய்ப்பை,அனுசரணைகளை பெற்றுத் தரும் ஒரு முகவராக நீண்ட காலம் செயல்பட்டு பாகிஸ்தானிய முன்னணி வீரர்களோடு நெருங்கிப் பழகிய மசார் மஜீத் இப்போது Scotland Yardஇன் பிடியில்.


இப்போதைக்கு இந்தப் பாகிஸ்தானிய அணியில் நால்வர் தன்னிடம் 'வேலை' செய்ததாக மசார் கூறியுள்ளார்.
அதில் உறுதி செய்யப்பட்டுள்ள இருவர் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் பிரகாசித்த மொஹம்மத் ஆமீர்,மொஹம்மத் ஆசிப்.


அடுத்த இருவரில் ஒருவர் பாகிஸ்தானிய அணியினாலேயே சந்தேகத்துக்குள்ளாக்கப்பட்ட குள்ளநரி கம்ரன் அக்மல்.
அடுத்தவரின் பெயர் சாதாரண ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் ஐயமில்லை..
தற்போதைய டெஸ்ட் அணியின் தலைவர் சல்மான் பட். 


இப்போது இவர்களில் மூவரின் செல்லிடப் பேசிகளும் பறிமுதலாகி இருக்கின்றன.
ஏற்கெனவே ICCயின் லஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவின் சந்தேகப் பட்டியலில் கைது செய்யப்பட்ட மசாரும் பாகிஸ்தானிய வீரர்கள் பலரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எனக்கு முன்பே ஆசிப்,பட் ஆகியோரைக் கண்ணில் காட்டமுடியாது.
சோம்பேறித் தனமும்,கள்ளத் தனமும் கலந்த கலவையாகவே இவர்களைப் பார்த்தால் எனக்குத் தோன்றியது..தோன்றுகிறது.


ஆனால் சிறப்பாக விளையாடி வந்தவரும்,உயிரைக் கொடுத்துப் பந்துவீசி வந்தவருமான ஆமிரைப் பிடித்திருந்தது.
ஆனால் இப்போது?
வழமையான பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரராகி விட்டார். :(


இந்த Spot betting எனப்படும் கிரிக்கெட் சூதாட்டமானது போட்டிகளின் முடிவுகளை பேரம் தாக்கத்தை ஏற்படுத்தாது எனினும் இதுவும் கிரிக்கெட்டுக்கு ஏற்படுத்தும் துரோகம் தான்.
போட்டியின் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்கெனவே பேசி வைத்தது போல பணம் வாங்கிக் கொண்டு செயற்பட இந்தப் புதிய பையன் ஆமிரினால் மட்டுமல்ல,உலக சாதனையாளர் சச்சின் டெண்டுல்கரினாலும் முடியும்.
யாரின் சந்தேகப் பார்வையும் படாது..


இது பற்றி விரிவாக,ஆதங்கத்துடன் சக பதிவர் கங்கோன் கோபி பதிவிட்டுள்ளார்.



பாகிஸ்தான் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள்....





திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும்.
மனசாட்சியின் படி ஒவ்வொருவரும் விளையாடினால் மட்டுமே இதனை தடுக்கமுடியும்.


காரணம் நானும் இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பணம் வாங்கியிருப்பேன் எனவே நினைக்கிறேன்.. யாரும் இங்கே மகான்கள் அல்ல.


சந்தேகப் பார்வை பாகிஸ்தானின் மேல் படிந்துள்ளமையானது அதனுடன் விளையாடும் சகல அணிகளுக்கும் சங்கடத்தையும் பாகிஸ்தானுக்கேதிராகப் பெற்ற வெற்றிகளின் மீதான சந்தேகத்தையும் தரப்போகின்றன.




நேற்றைய படுதோல்வியும் இங்கிலாந்தின் திறமையாக அல்லாமல்,பாகிஸ்தானின் மோசடியாகவே நோக்கப் படுகிறது.


இதற்கெல்லாம் முக்கிய முடிவு ஒன்றை சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்தே ஆகவேண்டியுள்ளது.
உடனடியாக முழு விசாரணை ஒன்றை நடத்தாமல் போட்டிகளைத் தொடரக் கூடாது.
சம்பந்தப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்ட அத்தனை பாகிஸ்தானிய வீரர்களையும் தடை செய்யவேண்டும்.


சீ.. கிரிக்கெட்டில் ஏமாளிகள் ரசிகர்கள் நாமா?


சீ - சீரழிவு சீ - சீர்கேடு சீ- சீப்பான(cheap) விஷயங்கள் 

#*# இப்போது மனப் பாரம் கொஞ்சம் இறங்கி இருக்கிறது.
நேரமிருந்தால் கிரிக்கெட் மற்றும் திரைப்பட பதிவுகள் இரண்டு இன்றும் நாளையும் வரும்.

28 comments:

கன்கொன் || Kangon said...

சவுதியில் பெண்ணிற்கு: பெரும்கொடுமை அது.
உண்மையைச் சொன்னால் இந்தச் செய்தியை நான் வேண்டுமென்றே தவிர்த்து வந்தேன்.
ஒன்றிரண்டு செய்திகளை வாசித்ததுமே இந்தக் கொடூரத்தைத் தாங்க முடியவில்லை.
அதுவும் ஆணிகள்...
என்ன கொடூர மனது.... :(
இந்தச் செய்தி சிறிது நாளில் மறந்துபோய் விடும். :(
ஏழைகள் எங்கும் பாவம்தான்.


பலி-
அடுத்த கொடூரம். :(
உயிர்களுக்கு மதிப்பில்லாமை... :(

பாகிஸ்தான் -
கவலை+கோபம்.... :(

ஆமிரை கிறிக்கற் உலகிலிருந்து இழக்கத் தயாராகிவிட்டேன், பாகிஸ்தான் கிறிக்கற் அதை செயற்படுத்தினால் சரி....

என் பதிவை சுட்டியமைக்கு நன்றி அண்ணா.

3 கவலைகள் சேர்ந்த ஒரு பதிவு... :(
ம்ஹ்ம்.... :(

Bavan said...

சவுதி பெண் - ம்ம்..:( கொடூரத்தின் உச்சக்கட்டம். என்ன சொல்வடிதன்று தெரியவில்லை..:(

கோயில்களில் பலிபீடம் என்று இருப்பது ஆணவம் கன்மம் மாயை போன் தீய குணங்களை பலியிட என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதை இன்னும் பலர் விளங்காமலிருக்கிறார்கள். மிருகங்களைக் கொன்றால் மரணதண்டனை இல்லை அந்த தைரியம்தான்..:(

பாகிஸ்தான் - அடஅடஅட.. இவர்கள் பெரியமனிதர்கள் பெரியமனிதர்கள்தான் என்பதை நிரூபித்துவிட்டார்கள்..:P

மற்றவர்கள் மாட்டுப்பட்டது கவலையில்லை ஆமீரின் பந்துவீச்சு எனக்குப் பிடிக்கும், அவரும் இதற்குள் சிக்கிக்கொண்டது கவலை.

ஆனால் யாரும் மகான் அல்லத்தானே..:)

Anonymous said...

அடிமைகளை நீ எவ்வளவும் துன்புறுத்தலாம் என மார்க்கம் கூறும் போது அதை கடைப்பிடிப்பவர்கள் செய்கிறார்கள் போலும்...

Vathees Varunan said...

உண்மையிலே சவுதியில் அந்த பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம் மிகவும் கண்டிக்கப்படவேண்டியது... ஆனால் இதற்கு இலங்கை அரசும் சவுதி அரசும் என்ன செய்யப்போகின்றது? வழமைபோலவே நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன ஆனாலும் எந்தளவிற்கு அவை செயற்படுத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பமுவார் என்பது கேள்விக்குரிய விடயமாக இருக்கப்போகின்றது.

//அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?//

உங்களுக்கு மட்டுமல்ல பலபேருக்கு இந்த கேள்வி மனதில் எழுகின்றது இப்புடியுமா ஒரு பெண்ணை சித்திரவதை செய்வார்கள்?செய்தியினை வாசிக்கும்போதே மிகவும் கஷ்டமாக இருக்கிறது

அடுத்தது கோயில்களுக்கு மிருகங்களை பலியிடுவது இதுவும் ஒரு கண்டிப்புக்குரிய செயல்தான். இது சிலாபத்தில் மட்டுமல்ல யாழ்பாணத்திலும் இருக்கிறது இந்த மிருகங்களை தெய்வங்களுக்கு பலியிடுவதை இலங்கையில் முற்றாக தடை செய்யவேண்டும் என்பதே என்னுடையதும் பலருடையதுமான கோரிக்கை
மற்றயது கிரிக்கட் சூதாட்டம் எந்த விளையாட்டானாலும் நேர்மை அங்கு இருக்கவேண்டும் அற்ப விருப்பங்களுக்காக பணத்திற்காக இவ்வாறு தன்னுடைய திறமையை அணியினுடைய வெற்றியை விற்பது மிகவும் தண்டிக்கப்படவேண்டிய விடயம். அதுவும் இந்த கிரிக்கட் சூதாட்டத்தில் பாக்கிஸ்தான் வீரர்கள் அண்மைக்காலமாக தொடர்ந்து சிக்குவது பாக்கிஸ்தானின் கிரிக்கட்டுக்கு ஆரோக்கியமான விடயமல்ல என்பதுபோலதான் எனக்கு படுகிறது. உண்மையிலேயே அவ்வாறு வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு நிற்சயம் கடுமையாக தண்டனைகளை வழங்கவேண்டும் குறைந்தபட்சம் அவர்களுக்கு இனி எந்தவொரு போட்டியிலும் விளையாட முடியாத அளவிற்கு வாழ்நாள் தடையினை விதிக்கவேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் கிரிக்கட் எதிர்காலத்தில் தொடர்ந்தும் ஒரு கனவான விளையாட்டாக இருக்க முடியும்

யோ வொய்ஸ் (யோகா) said...

///சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரம்.////

தொலைக்காட்சியில் பார்த்தேன், அவர்கள் மனி ஜென்மமா இல்லை அரக்கர்களோ தெரியாது?

////சிலாபம் காளி கோவிலில் நடந்த மிருக பலி..////
எல்லாவற்றையும் அரசியலாக்குபவர்களது வாயிற்கு கிடைத்த அவல்.

/////உயிர்கள் என்றால் உயிர் தான்.
சமயம்-வழிபடும் இடம் என்றால் அதற்குரிய புனிதம் வேண்டியதே///// சேம் பிளட், இவ்வாறானவற்றை தடுக்க வேண்டும்.

/////
மீண்டும் ஒரு தடவை பாகிஸ்தான் கிரிக்கெட் சூதாட்டப் புயல் சந்தேகத்தில் சிக்கி இருக்கிறது.////
வேதனையான விடயம்...

mohamed asfer said...

அண்ணா இந்தப் பதிவு சிலருக்கு கற்கண்டு சாப்பிட்டது இனிக்கின்றது.

நேரடியாகவே சொல்கிறேன், இஸ்லாம் என்பது வேறு அதனை பின்பற்றுவோர் என்பது வேறு. அரபிகளை வைத்து நீங்கள் இஸ்லாத்தை மட்டிட வேண்டாம்.

அவர்கள் செய்வது மகா தவறு, இது போன்ற சம்பவங்கள் பல தடவை நடந்திருந்தும் ஏன் நமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை?? ஏன் எடுக்கத்தவறுகிறது..

நேன்பு திறக்கும் நேரமாகிவிட்டது. see u later

ம.தி.சுதா said...

வருத்தத்திற்குரிய விடயம்... இப்படியானவர்களால் தான் அவர்கள் மதத்திற்கே இழுக்கு வருகிறது.... ஆனால் நாம் கண்களால் நேரே கண்ட பலதை ஊடகங்கள் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் லோசன் அண்ணா உங்கள் மனதில் இருக்கும் பதிவுகளை எழுத சந்தர்ப்பம் கிடைக்காமல் அதை மட்டும் தான் எழுதிக் கொண்டிருப்பீர்கள். கடவுள் என்றொருவன் எமை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான். வாழும் போதே தீர்ப்பிற்காய் பலர் காத்திருக்க வேண்டியிருக்கும்...

mohamed asfer said...

இஸ்லாத்தில் ஒருவரை சித்திரவதைப்படுத்துமாறு எங்கும் கூறப்படவில்லை. அந்த பெயர் குறிப்பிடாத நண்பனுக்கு இஸ்லாத்தை பற்றி தெரியவில்லை என்று நினைக்கிறேன்.

சில முஸ்லிம் பதிவர்கள் ஏன் சைலண்டா இருக்காங்க என்று தெரியவில்லை. சில நேரம் இது லோஷன் அண்ணாவின் பதிவு என்று எண்ணி இருக்கலாம்.

குறிப்பாக அந்த 3 எழுத்து பதிவர்.

Raheema Faizal said...

அடிமைகளை எவ்வளவு வேண்டுமானாலும் துன்புறுத்தலாம் என்பது தவறான கருத்து....
எந்த மார்க்கமும் அவ்வாறு யாரையும் அறிவுறுத்தவும் இல்லை.குறிப்பாக - இஸ்லாம் மார்க்கம்
ஒரு சிலரின் நடத்தைகளை வைத்து எல்லோரையும் அவ்வாறு கணக்குப்போடதீர்கள்...
ஐந்து விரல்களும் ஒன்றாக இருப்பதில்லை....
எல்லாமனிதர்களும் ஒரே மாதிரி நடந்து கொள்வதும் இல்லை...
தவறு செய்யும் இயல்புடையவன் மனிதன்...
இதற்காக கருத்துக்களை கண்டபடி வெளியிடாதீர்கள்

Muhammad said...

அனைவருக்கும் வணக்கம், இஸ்லாத்தை பின்பற்றுவோரை வைத்துக்கொண்டு இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்யாதீர்கள்.
இந்த உலகில் வெறும் அரபு பெயர் தாங்கிகலாகவும் பணம் பதவி புகழ் எல்லாவற்றுக்கும் திரிபவர்களாகவும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு இனத்திலும் மதத்திலும் கெட்டவன் இருக்கத்தான் செய்கிறான் அவனை வைத்துக்கொண்டு அவன் இனத்தையும் மதத்தையும் கெட்டவை என சொல்லமுடியுமா??
எவன் ஒருவன் அல் குர் ஆனையும் ஹதீசையும் பின்பற்றுபவனே உண்மையான முஸ்லிம்.

சிங்கள பெண்மணியை கொடுமை செய்த அந்த சவுதி எஜமானார்கள் இஸ்லாத்தின் படி தண்டிக்க பட வேண்டியவர்கள். அவர்கைளை சவுதி அரசு தண்டிக்கவிடின் அந்த பாவத்திற்கு அவர்களும் துணை போனவர்களே தீர்ப்பு நாளில் அவர்கள் தக்க கூலி பெறுவார்கள்.

சூதாட்டத்தை அல்லாஹ் தடை செய்துள்ளான் அவனை மீறுவோர் தங்கள் செயல்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இந்த உலகில் பதவிகளிலும் புகழினதும் உச்சிகளில் இருந்து கொண்டு கொடுமைகள் செய்வோரை நாம் தினமும் அறிகிறோம் ஆனால் எல்லாருக்கும் அவர்கள் செய்த பாவங்களுக்கு இவ்வுலகில் தண்டனை கிடைப்பதில்லை.
அவர்களை செய்த பாவங்களுக்காக இறைவன் நிச்சயம் தண்டிப்பான்.

எல்லா புகழும் இறைவனுக்கே...........

Anonymous said...

உங்க மனதில் இருக்கும் வெறுப்பை கொட்ட ஆரியவதி களம் அமைத்திருக்கிறார்.. இலங்கையில் இருந்து சுமார் ௧௮ லட்சம் பேர் வெளிநாடுகளில் பணிபுரிகிறார்கள். அதில் ஆனோர் பணிப்பெண்கள்.. நீங்கள் ஊடகத்தில் இருப்பவர்.. உங்ககளது அடங்காத ஊடகம் உணமைஎல்லாம் வெளிச்சம் போட்டதால்தான் தாக்கப்பட்டது என்று கூட ஒப்பாரி வைக்கிறீர்கள்..

//இன்னும் எத்தனை ஆரியவதி என்ற அப்பாவியின் உடலுக்குள் இருக்கின்றனவோ தெரியாது..?//
ஏன்? வைத்திய அறிக்கைகள் இதற்கு மேலும் இருக்ககூடும் என்று எங்காவது சொல்லியிருக்கிறதா? ஏன் இந்த விஷமம்?

//இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுவேலை,தொழிற்சாலை வேலைகளுக்கு செல்லும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் சொல்லொணாக் கொடுமைகளை அனுபவித்து நாடு திரும்பி இருக்கிறார்கள்//
நீங்கள் இருக்கும் நிறுவனம் போல் பல தனியார் நிறுவனங்கள் பிச்சை காசை சம்பளமாக கொடுப்பதனால்தான் பலர் செல்கிறார்கள். உங்களுடன் வேலை செய்த பலர் வெளிநாடுகளுக்கு சென்றது, வெளிநாட்டவர்களை கல்யாணம் செய்து சென்றது காசுக்காகத்தான் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்..

//பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..//
இப்படித்தான் ஊடகங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் பற்றியும் எழுதுகிறார்கள். நீங்களே சொல்லியிருகிறீர்கள் ஒரு சிலர் அவ்வாறு நடந்ததற்காக எல்லோரையும் குற்றம் சுமத்த முடியாது என்று.. அப்படியானால் லட்சம் பெண்களில் எத்தனை வீதமானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? உங்கள் லாஜிக் இடிக்கிறதே..

//அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?//
//பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?//
//வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறதோ?//
அப்படித்தான் ஒருவர் சில பெண்களை வாகனத்தில் ஏற்றி சென்றார் என்றும் சொல்கிறார்கள்.. அப்படியாயின் அந்த ஒருவர் மீதா குற்றம் சுமத்துவது.. அல்லது அவர் சார்ந்த சமூகத்தையா?

//அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?//
இதில் உல்லாச என்பது உங்கள் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடல்லவா?


பதில் எதிர்பார்க்கிறேன்.. (அடிவருடிகளிடம் இருந்து அல்ல )

யோவ்.. எஸ்டேட் தமிழர்களை வீடு வேளைக்கு வைத்து செய்யும் அநியாயங்கள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா?

Anonymous said...

//பிணமாகத் திரும்பிய பலரைப் பற்றி அறிந்திருக்கிறோம்.
பிணமாகியும் அங்கேயே மறைக்கப்பட்ட பலரை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்..//
இப்படித்தான் ஊடகங்களில் பெண்களுக்கெதிரான பாலியல் கொடுமைகள் பற்றியும் எழுதுகிறார்கள். நீங்களே சொல்லியிருகிறீர்கள் ஒரு சிலர் அவ்வாறு நடந்ததற்காக எல்லோரையும் குற்றம் சுமத்த முடியாது என்று.. அப்படியானால் 14லட்சம் பெண்களில் எத்தனை வீதமானோர் இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்? உங்கள் லாஜிக் இடிக்கிறதே..

//அந்த மத்திய கிழக்கு எஜமானர்கள் மனிதர்களா?//
//பணிப்பெண்கள்,வேலையாட்கள் என்றால் அவர்களுக்கேயான அடிமைகளாக நினைத்துவிட்டார்களா?//
//வெளிவந்த சில உண்மைகள் இப்படியிருக்க இன்னும் வெளியே வராமல் என்னென்ன நடந்திருக்கிறதோ?நடந்துகொண்டிருக்கிறதோ?//
அப்படித்தான் ஒருவர் சில பெண்களை வாகனத்தில் ஏற்றி சென்றார் என்றும் சொல்கிறார்கள்.. அப்படியாயின் அந்த ஒருவர் மீதா குற்றம் சுமத்துவது.. அல்லது அவர் சார்ந்த சமூகத்தையா?

//அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?//
இதில் உல்லாச என்பது உங்கள் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடல்லவா?


பதில் எதிர்பார்க்கிறேன்.. (அடிவருடிகளிடம் இருந்து அல்ல )

யோவ்.. எஸ்டேட் தமிழர்களை வீடு வேளைக்கு வைத்து செய்யும் அநியாயங்கள் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லையா?

anuthinan said...

//இப்போது ஆரியவதிக்கு நடந்த ஆணியேற்றிய கோரம்..//

கொடுமையின் உச்ச கட்டம் அண்ணா இது!!

//அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?//

எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. அங்கு இஸ்லாம் என்று பல பிரிவுகள் இருக்கிறது. எனவே, அவர்கள் என்ன எண்ணுகிறார்களோ???

//இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?//

கடுமையான சட்ட தண்டனைகளை கொண்ட நாடுகளில்தான் இப்படியான கொடுமைகளும் நடக்கிறது!

//இதற்குள் வழிபடுவது எப்படியும் செய்யப்படலாமாம்..இறைவனை நாம் அறிந்த முறையில் வழிபடுவதை இறைவன் ஏற்பாராம்.. கண்ணப்ப நாயனாரை உதாரணமாக அழைத்து வருகிறார்கள்.
இந்தக் காலம் மனிதர்கள் நாகரிகமடைந்த காலம். இன்னும் உயிர்ப்பலி தேவையா?//

என்னை பொருத்தவரை இது எல்லாம் வணிகம்தான். ஏதோ ஒரு தேவைக்காக எங்கோ இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நிறுத்தவே முடியாது

//ஆனால் சிறப்பாக விளையாடி வந்தவரும்,உயிரைக் கொடுத்துப் பந்துவீசி வந்தவருமான ஆமிரைப் பிடித்திருந்தது.
ஆனால் இப்போது?
வழமையான பாகிஸ்தானிய கிரிக்கெட் வீரராகி விட்டார். :(
//

எனக்கும்தான் அண்ணா!!!

//
திருடனாய்ப் பார்த்து திருந்தவேண்டும்.
மனசாட்சியின் படி ஒவ்வொருவரும் விளையாடினால் மட்டுமே இதனை தடுக்கமுடியும்.//

எனக்கு என்னவோ இந்த தடவை பிரச்னை வீரர்களிடம் இருந்தது என்று சொல்லுவதை விட, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் இருந்துதான் தொடங்கி இருக்கிறது என்று தோன்றுகிறது. அதாவது, போதிய ஊதியமின்மை,கவனிப்பு இன்மை எல்லாமே ஒரு திருடனை உருவாக்கி விட்டு இருக்கிறது.


என்ன நடந்தாலும், எத்தினை தடவை பாகிஸ்தான் அணி இப்படி பிரச்சனையில் சிக்கினாலும், அப்ரிடி மட்டும் சிக்குவதே இல்லை. எப்படி அண்ணா?????

Ziadh said...

Hi Loshan,

Just to share some of my thoughts regarding the Saudi incidents. Everyone is angry and sad about what happened to Ariyavathi. I would say it is barbaric mentality and nature of those couple whom she was working for. Having said that,in my view, it is not proper to collectively hold an ethnic group or religious group or nation responsible for what two people did. I believe this is one of the problems in this world especially in Sri Lanka. We tend to say a Sinhalese did this or a Tamil did that or a Muslim did this or Indians are like that and British are like this. Rather we should say 'a foolish and barbaric 'so and so' did this'.

I believe this was the reason for the origin of war in Sri Lanka. When SWRD Bandaranayake brought 'Sinhala only act' in 1956, the hatred in our mind against Sinhalese started. We forgot to see that it is the fool SWRD and his associates who were doing this. It was nothing to do with ordinary Sinhalese people. They never demanded this act. Similarly, foolish Prabakaran started assassinating moderate political leaders who wanted to resolve it through a dialog and killed 13 soldiers, some foolish people looked at as if the whole Tamils were responsible for this which led to one of the blackest event in the history of the world. Had they looked at it as an act of a group of fools and tried to find the responsible people, Sri Lanka would not have got into this mess or lost thousands of innocent lives.

Sorry for this long comment. Let us use ethnicity or religion or nationality to understand each other and let us celebrate the diversity. The world is beautiful because of that. Otherwise, it would be boring and monotonic. Let us stop collectively branding people. Let us stand up and point out the wrong doers; not their affiliation.

aswer said...

உல்லாச அரபுக்களின் மார்க்கம் என்று எந்த ஒரு மார்க்கமும் இல்லை'.

செல்வம் நிறைந்த,அருள் நிறைந்த பூமி அது...
அங்கு வாழ்கிறவர்கள் வசத்திபடைதவர்களாக இருக்கிறார்கள் அவ்வளுதான்

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெருவதேகேன்று சில சட்ட திட்டங்கள் இருக்கிறது...
1. சிறிதளவென்றாலும் வேலை அனுபவம்..
2.குறித்த வயதெல்லை
3.வீட்டு பணிப்பெண்களாயின்,சமையலறை சாதனங்களை கையாளும் திறன் .
4.மொழித்தேர்சி

இவை எதுவும் சிறிதும் இல்லாத பெண்கள் ,ஆண்களை திருட்டு பாஸ்போர்ட்களில் அனுப்புவதை தவிர்க்கும் போதுதான் இவ்வாறன தவறுகளை குறைக்க முடியும்...
கருத்துக்களை கண்டபடி கூறுகின்றவர்கள் இதற்கான நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்யலாமே..
இஸ்லாத்தை பொறுத்தவரை ஒரு பெண் தனியாக வெளிநாட்டு சென்று உழைப்பது தவிர்க்கப்படல் வேண்டும்
அதையும் மீறி செல்பவர்கள் தங்கள் வாழ்கையை அழித்துக்கொள்கிறார்கள்.
இதற்கு அரபு உலகம் மட்டும் பொறுப்பல்ல.
அந்த பெண்ணின் பெற்றோர் ,சகோதரர்கள்,கணவன்,
எல்லாவற்றிற்கும் மேலாக அந்த நாட்டிலுள்ள அத்தனை ஆண்களும்தான் பொறுப்புக்கூற வேண்டும் .

உரிய தொழில் பயிற்சிகளோடு வெளிநாடு சென்று எத்தனையோ இலட்சங்களை சம்பாதிகிரவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே

அரபு உலகை மட்டும் குற்றம் சொல்வது தவறு ....
சிலரை வைத்து பலரையும் எடை போடாதீர்கள்...

எமது நாடுகளில் , பெண்களை ஏமாற்றும் ஆண்களையும்
பார்த்திருக்கிறோம்.....
ஏமாற்றப்பட்டு ,எதுவும் அறியா குழந்தைகளை குப்பையில் வீசும் பெண்களையும் பார்த்திருக்கிறோம்...

இதற்காக யாரும் ,ஒட்டு மொத்த ஆண்களயோ,ஒட்டுமொத பெண்களையோ வெறுத்து குற்றம் சொல்லி ஒதுக்கிவிட்டீர்களா என்ன?

Muhammad said...

Anuthinan S said...
//
//அந்த உல்லாச அரபுக்களின் மார்க்கம் அன்பையல்லவோ போதிக்கிறது?//
எனக்கு இதில் சந்தேகம் இருக்கிறது. அங்கு இஸ்லாம் என்று பல பிரிவுகள் இருக்கிறது. எனவே, அவர்கள் என்ன எண்ணுகிறார்களோ???//
அனுதினன் அவர்களே ,
உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக......... ,
இஸ்லாத்தில் பல பிரிவுகள்தான் ஆனால் எல்லாவற்றுக்கும் உயிர் நாடி அல் குர் ஆன் தான். இந்த உலகில் முஸ்லிம் அவர்கள் எந்த பிரிவாக இருக்கட்டும் அவர்களின் வேதம் அல் குர் ஆன். அது அமைதியையே போதிக்கிறது. பணம் புகழ் அவர்களின் கண்களை மறைத்து விட்டது. ஒரு வேலை அந்த பணமே சவுதி அரசின் கண்களையும் மறைக்ககூடும். ஆனால் தப்பு செய்தவன் கண்டிப்பாக தண்டனை பெறுவான். இந்த சில கருமிகளைக்கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டாமே....


//இவர்களுக்கான தண்டனையை வழங்குமா சவூதி அரசு?//
கடுமையான சட்ட தண்டனைகளை கொண்ட நாடுகளில்தான் இப்படியான கொடுமைகளும் நடக்கிறது!
இப்போது பணம் எல்லா சட்டங்களையும் விழுங்கி ஏப்பம் விடுகிறதே............
ஆகவே இம்மையில் அந்த அரபுகளுக்கு தண்டனை சிலவேளையே..........

Vathees Varunan said...

இங்கே எனக்கு தெரிந்தளவில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் ஏன் மத்திய கிழக்கு நாடுகளில் அதிபமாக இடம்பெறுகின்றது என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை. நண்பர்களே சவுதியில் காட்டரபுகள் என்று ஒரு பகுதியினர் இருக்கிறார்களாம் அவர்களுக்கு படிப்பறிவு கிடையாதாம் ஆனால் பணம் இருக்கிறதாம் அவர்கள்தான் இப்படியான செயல்களில் ஈடுபடுகின்றவர்களாம் இது என்னுடைய இஸ்லாமிய நண்பர் எனக்கு கூறியது. எனக்கு இதுபற்றி சரியாக விளங்கவில்லை யாராவது தெரிந்தவர்கள் விளக்கி கூறமுடியுமா நண்பர்களே?

கன்கொன் || Kangon said...

எனக்கிருக்கும் ஒரு சந்தேகம்.

அரபுக்களின் மார்க்கம் என்றால் என்ன?
அரபுக்களில் கிறிஸ்தவர்களும் இருக்கிறார்களே?

Mohamed Faaique said...

இலங்கை இந்திய கடைசி போட்டியை பற்றி எதிர்பார்த்தேன்.. எதிர்பாரிக்கிறேன்

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

"கனவான்"களின் விளையாட்டாக வர்ணிக்கப்படுகின்ற கிரிக்கெட் விளையாட்டானது "களவான்"களின் விளையாட்டாக மாறுவதை தடுக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு அதிகபட்ச தண்டனைகளினை ஐசிசி வழங்க வேண்டும். மேலும் ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு, ஐபிஎல் கிரிக்கெட் தொடரினை முனைப்பாக கவனிக்க முன்வரவேண்டும்.

ARV Loshan said...

முக்கியமாக,சுருக்கமாக ஒரு விஷயம்..

நான் எந்த மதத்தையும் ஆதரிப்பவன் அல்ல..
பதிவிலுள்ள படங்கள் மூன்றை மிக உன்னிப்பாகப் பாருங்கள்.

ஒரு பெயரில்லாதவர் பொங்கி(பொய்க்கு) வெடித்திருப்பதைப் போல நான் எந்தவொரு காழ்ப்புனர்ச்சியுடனோ,அல்லது ஏதாவது ஒரு சமயத்தைக் கேவலப்படுத்தவோ ஆரியவதியின் விடயத்தைப் பதிவிடவில்லை.

அப்படிப் பார்த்தால் இந்து சமயத்துக்கேதிராகவும் நான் எழுதியவனாகிறேன்- கோவில்களில் பலி நடத்தியமையை நான் எதிர்த்ததால்..

ஆகவே, நண்பர்கள்.. பதிவின் உள்ளார்ந்த விடயத்தையும் நான் பதிவிட்ட நேரடி விடயங்களையும் நோக்குங்கள்.

பொதுமைப்படுத்துவதற்கு நான் எப்போதும் எதிர்ப்பானவன். ஒருவன் தவறு செய்தால் ஒட்டுமொத்த இனத்தை/சமயத்தைக் கண் மூடித்தனமாக விமர்சிக்கும் கோணல் புத்தி உடையவனல்ல நான்.
புரிந்து கொள்ளுங்கள்.

அனானி தானே என்று அந்தக் கருத்தைப் பிரசுரிக்காமலே விட்டிருப்பேன்.. ஆனால் இப்படியும் சிந்திக்கும் குறுக்கு மூளைக் காரர்களும் உள்ளார்கள் எனக் காட்டவே அதையும் பிரசுரித்தேன்.

LOSHAN
www.arvloshan.com

கருத்து இட்ட அத்தனை பேருக்கும் நன்றிகள். தனித்தனியான பதில்களைப் பின்னர் தருகிறேன்.

முதலில் வந்த அனானியின் உறவு said...

அனைவரும் இதையும் முழுவதுமாக வாசியுங்களேன்.இப்போது முன்பு வந்து குர் ஆன் அடிமை வாழ்க்கையை அனுமத்திக்கவில்லை என்று வாதம் செய்தவர்கள் என்ன சொல்லப் போறீங்க?


http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/5879-அடிமை-வியாபாரம்-அனுமதிக்கப்பட/

அடிமை வியாபாரம் அனுமதிக்கப்பட்டது ஏன்?

'செல்வத்தால் சிறப்பிக்கப் பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. இறைவனின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?'

- குர்ஆன் 16 : 71

அடிமை சம்பந்தமாக இது போன்று பல வசனங்கள் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. திருக்குர்ஆனின் பல வசனங்களில் 'வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களை குறிப்பபிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.

'அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்' என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

மத நம்பிக்கை உள்ள பெரும்பான்மையானவர்களிடம் உள்ள பிரச்சினை என்னவென்றால், எந்த ஒரு முட்டாள்தனத்தையும் தன் மதத்தில் இருக்கிறது, என்ற ஓரே காரணத்திகாக, அதை சரி என்று நிரூபிக்க முயல்வது.

இதற்காக அர்த்தமில்லாத வியாக்யானம் பேசுவது. :lol:

ஆதிரை said...

பின்னூட்டங்களுக்காக...

Unknown said...

அன்பிற்கினிய லோஷன் அண்ணா...,

/ /...சவூதி அரேபியாவிலிருந்து இலங்கை திரும்பிய வீட்டுப் பணிப்பெண் ஆரியவதிக்கு நடந்த கொடூரம்.../ /

இது போன்ற காட்டுமிராண்டித்தனம் நமது கண்ணுக்கு தெரியாமால் நிறைய நடந்துகொண்டுதான் இருக்கிறது. மாற்றுவது சிரமம்.

##அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.##

- அன்புநெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும்; இல்லையேல், அது எலும்பைத் தோல் போர்த்திய வெறும் உடலேயாகும் - .(அன்புடைமை) திருக்குறள்


நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.

Unknown said...

அன்பிற்கினிய லோஷன் அண்ணா...,

/ /...சிலாபம் காளி கோவிலில் நடந்த மிருக பலி... அசைவ உண்ணி நீ யார் இது பற்றிப் பேச என்று கேட்டால், வெள்ளி-செவ்வாய் தாவர உன்னிகளாக அப்படியானால் ஏன் விரதமிருந்து கோவில் போகிறீர்கள்.../ /

1. ## தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். ##


- தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

2. ## அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. ##

- நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.

(திருக்குறள் - புலான்மறுத்தல்)

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.

Unknown said...

அன்பிற்கினிய லோஷன் அண்ணா...,

/ /..பாகிஸ்தானும் கிரிக்கெட் சூதாட்டமும்.../ /

## வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. ##

- வெற்றியே பெறுவதாயினும் சூதாடும் இடத்தை நாடக்கூடாது. அந்த வெற்றி, தூண்டிலின் இரும்பு முள்ளில் கோத்த இரையை மட்டும் விழுங்குவதாக நினைத்து மீன்கள் இரும்பு முள்ளையே கௌவிக் கொண்டது போலாகிவிடும்.
(திருக்குறள் - சூது)

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.

Unknown said...

Dear brothers …What Loshan Anna has written is 100% appreciable and I welcome his views. Whom the peoples have to be condemned are the relatives of those innocent women sent as house maids. They may be their husbands, brothers, fathers who the real females are knocking down their family, and these silly “grooms” who urge them to bring dowry.
Dear brother “Muthalil vantha annonyin uravu”
Islam had denounced slavery 1400 years ago and showed the most humane way to deal with it. It took the so-called free minds and the Western and European intelligentsia another 1300 years to "realize" that slavery is an ill in the society. From the past 1300-1350 years, they have been promoting slavery. For Muslims, they were in a state of Ignorance. Now when they "realize" that slavery is an evil, they have the mouth to say that Islam promotes (sic) slavery. What a shame. The question of Slavery and the human nature in which Islam has treated it is one of the least understood subject by many so called self-proclaimed Human Right Activists of todays "free" (euphemism for "enslaved") world. But, I have to stress that the case of slavery should not be confused with that of female servants or maids, for they are free and not slaves.
For your further understanding please have a look on this link
http://saif_w.tripod.com/questions/slavery/islam_slavery_gulen.htm

அசால்ட் ஆறுமுகம் said...

அண்ணா!
விழிப்புணர்வை தூண்டும் பதிவு...

என்னைப்பொறுத்தவரை எனக்கு மத நம்பிக்கை குறைவு. இல்லை என்றே சொல்லலாம். ஆனால் என்னைக்கு தெரிந்தவரை எந்த மதமும் (இஸ்லாம்,இந்து,பௌத்த,கிறிஸ்தவ,etc...) வன்முறையை பின்பற்ற சொல்லவில்லை. அன்பையே போதிக்க சொல்கின்றன.. வன்முறையை பின்பற்ற சொல்வது மதம் அல்ல, தீவிரவாதம் (என் கருத்து).

அதோடு ஒருவர் விடும் பிழைக்கு அவர் மதத்தை கருத்து கூறுவது சரி என்று எனக்குப்படவில்லை. அது மதத்தின் மீது நம்பிக்கை வைத்து சரியாக பின்பற்றுபவரை காயப்படுத்தும் என எண்ணுகிறேன்.

மேலும்

கிரிக்கெட்டில் தொடர்ந்து இவ்வாறன செயல்கள் நடப்பது வருந்தத்தக்கது. இவ்வாறன செயல்களை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் சில வருடங்களில் துடுப்பாட்டம் துட்டாடம் (துட்டு = பணம்) ஆகிவிடும்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner