October 13, 2010

ஒபாமா + அமெரிக்காவுக்கு எதிராக போர்



ஒரு நாள் காலை. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் ஒபாமாவின் தனிப்பட்ட நேரடி தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வருகிறது.
எடுத்தால் 
"மிஸ்டர் ஒபாமா.. உமக்கு எதிராகவும் உம் நாட்டுக்கு எதிராகவும் போர் தொடுக்க முடிவெடுத்திருக்கிறேன்" என்று ஒரு குரல்.


கொஞ்சம் துணுக்குற்றுப் போன ஒபாமா சிரித்துக்கொண்டே "என்னது போரா?ஏன்? யாரது? எங்கிருந்து பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.


"நான் இலங்கையின் கொழும்பிலிருந்து கஞ்சிபாய்.உங்க அமெரிக்கா எங்கள் மேதகு ஜனாதிபதியை ஒழுங்கா மரியாதையா கவனிக்குதில்லை.உங்கள் நாட்டில் இருந்து அடிக்கடி இறுக்கியும் உங்க கட்டுப்பாட்டில் இருக்கும் ஐ.நா வும் அடிக்கடி நம்ம ஜனாதிபதியை வம்புக்கு இழுக்குது. அதனால தான் போர்" என்றும் கம்பீரமாக குரல் வந்தது.


பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு "சரி உங்களிடம் இப்போது எத்தனை பேர் படையில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார் ஒபாமா.


"ம்ம்.. இப்போ நான், சிங்கப்பூர் சீலன்,லபக்கு தாஸ் இப்படி எல்லாமா ஒரு பத்துப் பேர் இருக்கிறோம்" என்றார் கஞ்சி பாய்.


"ம்ம் ஓகே.. ஆனால் மிஸ்டர் கஞ்சி.. என்னிடம் ஒரு பதினைந்து லட்சம் பேராவது படையில் இருக்கிறார்கள்... தெரியுமா?" என்று கெத்தாகக் கேட்டார் ஒபாமா.


"நாசமாப் போக.. ஓகே மிஸ்டர் ஒபாமா.. நான் கொஞ்ச நேரத்தில் யோசிச்சிட்டு மறுபடி எடுக்கிறேனே" என்று அவசரமாக தொலைபேசியைத் துண்டித்தார் கஞ்சி பாய்.


இதை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டே இருந்தார் ஒபாமா..


பார்த்தால் மீண்டும் கொஞ்ச நேரத்தில் அழைப்பு..

எடுத்தால் மீண்டும் அதே கஞ்சி பாய்..
"மிஸ்டர் ஒபாமா.. நான் அதே கஞ்சிபாய்.உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவில் மாற்றமில்லை.எங்கள் படைக்கு கொஞ்சம் வாகனங்களும் ஆயுதங்களும் எடுத்திட்டம்"


பலமாக சிரித்துக் கொண்டே"அப்படியா? என்னென்ன ஆயுதங்கள்?என்னென்ன வாகனங்கள்?" என்று கேட்டார் ஒபாமா.


"ம்ம்.. ஒரு ட்ராக்டர்,ரெண்டு லொறி,நாலஞ்சு கார்,வான் இருக்கு.. அப்ப்பிடியே கொஞ்சக் கத்தி,பொல்லுகள்,அலவாங்குகள்,கோடரிகள்,கட்டுத் துவக்குகள் அப்பிடி ஆயுதங்கள் சேர்த்திட்டம்" என்று நம்பிக்கையாக சொன்னார் கஞ்சி பாய்.


இவனையெல்லாம் என்ன செய்வது என்றே யோசித்துக் கொண்டு "ஐ சே கஞ்சி பாய்.. என்னிடம் உள்ள ஆயுதங்கள் உலகத்திலேயே வேறு யாரிடமும் இல்லை.மில்லியன் கணக்கான ஆயுதங்கள்,சகல விதமான நவீன ஆயுதங்களும் இருக்கு.. அணுகுண்டு உட்பட" என்று ஒபாமா சொன்னார்.


"ஆகா.. இப்பவே கண்ணைக் கட்டுதே" என்று முணுமுணுத்த கஞ்சிபாய் "ஓகே.. இது பற்றி எனது சகாக்களிடமும் கொஞ்சம் பேச இருக்கு. நான் மறுபடி எடுக்கிறேனே" என்று மீண்டும் தொலைபேசியைத் துண்டித்தார்.


எப்படி இப்படியான ஒருவனிடம் தான் மாட்டினேன் என்று புரியாமல் முடியில்லாத தன் தலையைப் பிய்த்துக் கொண்டார் ஒபாமா..


இப்படியே ஒரு நான்கைந்து தடவை கஞ்சிபாய் அழைப்பு எடுப்பதும் ஒபாமா தனது அமெரிக்கப் படைபலத்தைப் பற்றிப் பீற்றுவதுமாக அன்றைய நாள் கடந்துவிட்டது.


அடுத்த நாள் காலை..


மவனே இன்று மட்டும் தொலைபேசி எடு, நிச்சயமா அணுகுண்டு போட்டு அழித்து விடுகிறேன் என்னும் முடிவோடு இருந்தார் பராக் ஒபாமா.


முதல் நாளின் கடுப்பு அவரது தூக்கத்தையே போக்கடித்திருந்தது சிவந்து வீங்கிய கண்களில் தெரிந்தது.


தொலைபேசி கிணுகிணுத்தது..
எடுத்து காதில் வைக்கிறார் ஒபாமா.

"குட் மோர்னிங் மிஸ்டர் ஒபாமா.. நான் கஞ்சிபாய் ப்றோம் ஸ்ரீ லங்கா"

வந்திட்டான்யா வில்லன் என்று மனசில் கறுவிக் கொண்டே " ம்ம் தெரியுது சொல்லுங்க" என்று பல்லைக் கடித்துகொண்டார் ஒபாமா.


"மன்னிக்கணும்.. உங்கள் மீது போர் தொடுக்கும் ஐடியாவை தற்காலிகமாகப் பின் தள்ளிப் போட எண்ணியுள்ளேன்"
என்று கொஞ்சம் கவலையுடன் சொன்னார் கஞ்சிபாய்.


"ஆ? என்னது?" என்று கொஞ்சம் ஆச்சரியப்பட்ட ஒபாமா, "ஏன் திடீரென்று இப்படியொரு முடிவு?" என்று கேட்டார்.


"பயம் எல்லாம் இல்லை. ஆனால் நேற்று ஒரு யோசனை வந்தது. உங்க அமெரிக்காவை நாங்க போரில் வென்ற பிறகு, நாங்கள் சிறைப்பிடிக்கப் போகும் உங்க படைவீரர்கள் பத்து, பதினைந்து லட்சம் பேரையும் எங்கே சிறை அடைப்பது? அதான்.. அதுக்கேத்த ஏற்பாடு செய்யும்வரை போரை ஒத்திவைக்கிறேன்" என்று கஞ்சிபாய் சொல்லி முடிக்க,தொலை பேசி ஒரு பக்கம் விழ மயக்கம் போட்டு ஒபாமா சாய்ந்தார்.


CNN BREAKING NEWS - President Obama faints after attending to a phone call.


இன்று காலை விடியலில் சொன்ன கதை. :)


சிறு தகவல் - இன்று வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 218 ஆண்டுகள் ஆகிறதாம்.

39 comments:

கன்கொன் || Kangon said...

காலையில் கேட்டு இரசித்தேன்....

இங்கு கொஞ்சம் மசாலா தடவியிருக்கிறீர்கள். :D :D :D

கஞ்சிபாய் வாழ்க.....

கன்கொன் || Kangon said...

ஆனா இன்னொரு புறமாக இதுதான் தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம். :-)

கஞ்சிபாய் வந்தபடியால் நகைச்சுவைக்கதை ஆகிவிட்டது. :D

K. Sethu | கா. சேது said...

இது கொஞ்சம் ஒவர்ர் கடி ;>)

முன்னர் ஒரு தடவை கேட்க நினைத்திருந்தேன். (கேட்டும் இருந்திருக்கலாம் - மறந்திட்டேன்). அது உந்த கஞ்சி பாய் எங்கே எப்போது எவ்வாறு பிறந்தார்? அவர் நல்லவரா கொட்டவரா ? ;>)

//சிறு தகவல் - இன்று வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிறதாம்.//

90 வயதைச் சாப்பிட்டு விட்டீர்களே? 1792 ஒக்டோபர் 13 இல் ஜோர்ஜ் வாஷிங்டன் அடிக்கல் நாட்டினாராம் :

http://www.lookandlearn.com/blog/?p=1371

கன்கொன் || Kangon said...

// அது உந்த கஞ்சி பாய் எங்கே எப்போது எவ்வாறு பிறந்தார்? அவர் நல்லவரா கெட்டவரா ? ;>) //


ஹா ஹா....
சேது ஐயா!
நீங்கள் நல்லவரா கெட்டவரா? ;-)

எப்போது பிறந்தார் எண்டது சரி, அதென்ன எவ்வாறு பிறந்தார்? ;-)
படைப்புக்கொள்கையில் நம்பிக்கையுண்டோ? ;-)

K. Sethu | கா. சேது said...

//சேது ஐயா!
நீங்கள் நல்லவரா கெட்டவரா? ;-)//

ஆஆஆங் அவ்வ்வ்.. :( (கேட்டுட்டானே !)


//எப்போது பிறந்தார் எண்டது சரி, அதென்ன எவ்வாறு பிறந்தார்? ;-)//

லோஷனின் கனவில் முதலில் வந்தாரா, கடதாசி பேனையால் உருவானாரா, கணினியில் உரை திருத்தியிலா ? test tube baby ஆ ? இப்படி எல்லாம் கேட்க முடியுமே?.

எனக்கு ஓர் உண்மை தெரிஞ்சாகனும் - ஆமா ;>)

//படைப்புக்கொள்கையில் நம்பிக்கையுண்டோ? ;-)//

இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். !

மனிதர்களின் கனவில் பிரம்மா ஒரு கதா பாத்திரமா அல்லது பிரம்மாவின் கனவில் மனிதர்கள் கதா பாத்திரங்களா ? (இருக்கு வேதத்தில் இருந்து சுட்டது !)

KUMS said...

தினமும் விடியலில் சொல்லும் விடயங்களை இப்படி பதிவுகளாக போட்டால் அது எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
கஞ்சி பாய்க்கு வர வர குசும்பு அதிகமாகிகொண்டே போகிறது. :)

அண்ணா வெள்ளை மாளிகை பற்றி பல மர்மக் கதைகள் உலவுகின்றனவே அவை எல்லாம் உண்மையா? அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகைக்கு வரும் என்று சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் படித்த ஞாபகம். 9/11 தாக்குதலுக்கு சில நாட்களின் முன் லிங்கனின் ஆவியை வெள்ளை மாளிகையில் பார்த்ததாக வெ.மா பணியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததும் ஞாபகம் வருகிறது.

Unknown said...

கஞ்சிபாய் வாழ்க...இதில ஒரு உள்குத்தும் இல்லையே??

Subankan said...

ஆகா ஹாஹா :)

Bavan said...

ஹாஹா.. நிலத்தில் விழுந்து உருண்டு சிரிக்கிறேன்..:D

anuthinan said...

கதை கலக்கல் அண்ணா!!! ஆனால், கதையில் காஞ்சி பாய் வந்ததால் அது காமேடி கதையாக மாறி போய்விட்டது !!!

யோ வொய்ஸ் (யோகா) said...

கஞ்சி பாய் வாழ்க

ம.தி.சுதா said...

ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...

KANA VARO said...

கலக்கல் காமடி

நிறைய நாளுக்கு பிறகு விடியல் கேட்டன்.

Vijayakanth said...

nalla velai pathivu tamil la irukku...Obama ku tamil theriyathu.. oruwelai english la ezhuthi irunthaa OBAMA kannila thenpattaa ganji baay gaali :P

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

fowzanalmee said...

ரஜினி அமிதாப் காமெடிக்கு அப்புறம் பெஸ்ட் காமெடியன்னா இதுதான்

ஆதிரை said...

//அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகைக்கு வரும் என்று சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் படித்த ஞாபகம். 9/11 தாக்குதலுக்கு சில நாட்களின் முன் லிங்கனின் ஆவியை வெள்ளை மாளிகையில் பார்த்ததாக வெ.மா பணியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததும் ஞாபகம் வருகிறது.//

ஆமாம்... உண்மைதான். நேற்றும் ஆபிரகாம் இலிங்கனின் ஆவி வெற்றிப்பணிமனைக்கு வந்து போனதாக வெ.பணியாளர் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார்.

கதை... கலக்கல். கஞ்சிபாயின் மீது சவாரி ஓடிவிட்டீர்கள்.

கன்கொன் || Kangon said...

ஆதிரை அண்ணா வாழ்த்துக்கள்.

நிறைய நாட்களுப் பின் நீங்கள் பின்னூட்டமிட்டதை இன்றுதான் பார்த்தேன். ;-)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
காலையில் கேட்டு இரசித்தேன்....//

:)

இங்கு கொஞ்சம் மசாலா தடவியிருக்கிறீர்கள். :D :D :D //
கொஞ்சமே தான்.. சொல்வதை விட எழுதுகையில் இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டுமே.


கஞ்சிபாய் வாழ்க.....//

வாழ்க வாழ்க :)



கன்கொன் || Kangon said...
ஆனா இன்னொரு புறமாக இதுதான் தன்னம்பிக்கை என்றும் சொல்லலாம். :-)

கஞ்சிபாய் வந்தபடியால் நகைச்சுவைக்கதை ஆகிவிட்டது. :D //

ம்ம்ம்..அவருக்குள்ளே தன்னம்பிக்கைக்கான ஒரு விருட்சமே ஒளிந்திருக்கு.

ARV Loshan said...

K. Sethu | கா. சேது said...
இது கொஞ்சம் ஒவர்ர் கடி ;>)//

எல்லாம் ஒபாமா திருப்பிக் கடிக்கார் எனும் நம்பிக்கை தான் ;)



முன்னர் ஒரு தடவை கேட்க நினைத்திருந்தேன். (கேட்டும் இருந்திருக்கலாம் - மறந்திட்டேன்). அது உந்த கஞ்சி பாய் எங்கே எப்போது எவ்வாறு பிறந்தார்? அவர் நல்லவரா கொட்டவரா ? ;>)//

கேட்கலை.. :)

கஞ்சிபாய் எங்கே,எப்படி பிறந்தார் எனத் தெரியாது.. ஆனால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடன் சேர்ந்துகொண்டார். உபயம் எதோ ஒரு இந்திய இணையம் :)

இப்போது அவர் எம்மவர். என் நண்பர்.உங்களில் ஒருவர்.

அவர் ரொம்ப நல்லவர் ;)



//சிறு தகவல் - இன்று வெள்ளை மாளிகைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆகிறதாம்.//

90 வயதைச் சாப்பிட்டு விட்டீர்களே? 1792 ஒக்டோபர் 13 இல் ஜோர்ஜ் வாஷிங்டன் அடிக்கல் நாட்டினாராம் :

http://www.lookandlearn.com/blog/?p=1371 //

ஆமாம். நன்றி சுட்டிக் காட்டியமைக்கு.
வானொலியில் காலையில் சரியாக சொல்லிவிட்டு இங்கே சறுக்கி விட்டேன்.

ARV Loshan said...

KUMS said...
தினமும் விடியலில் சொல்லும் விடயங்களை இப்படி பதிவுகளாக போட்டால் அது எங்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.//

எல்லாவற்றையும் அவ்வாறு பதிவிடுவது இயலாத காரியம். ஜோக் என்றால் சின்னது தானே..


கஞ்சி பாய்க்கு வர வர குசும்பு அதிகமாகிகொண்டே போகிறது. :)//

எப்ப தான் குறைன்னு இருந்தது?



அண்ணா வெள்ளை மாளிகை பற்றி பல மர்மக் கதைகள் உலவுகின்றனவே அவை எல்லாம் உண்மையா? அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும் போதெல்லாம் முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் ஆவி வெள்ளை மாளிகைக்கு வரும் என்று சில வருடங்களுக்கு முன்பு பத்திரிகையில் படித்த ஞாபகம். 9/11 தாக்குதலுக்கு சில நாட்களின் முன் லிங்கனின் ஆவியை வெள்ளை மாளிகையில் பார்த்ததாக வெ.மா பணியாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்ததும் ஞாபகம் வருகிறது.//

சில,பல கதைகள் வருகின்றன.. நானும் அங்கே போய்ப் பார்த்தால் தான் தெரியும்.. :)

ARV Loshan said...

மைந்தன் சிவா said...
கஞ்சிபாய் வாழ்க...இதில ஒரு உள்குத்தும் இல்லையே??//

உள் குத்து என்றால்? ;)

#லோஷன் = அப்பாவி
====================



Subankan said...
ஆகா ஹாஹா :)//

அட.. :)

சிமைலி சுபாங்கன் எங்கே? ;)

==============================

Bavan said...
ஹாஹா.. நிலத்தில் விழுந்து உருண்டு சிரிக்கிறேன்..:D //

பார்த்து.. எலும்புகள் நொறுங்கிவிடும் ;)

ARV Loshan said...

Anuthinan S said...
கதை கலக்கல் அண்ணா!!! ஆனால், கதையில் காஞ்சி பாய் வந்ததால் அது காமேடி கதையாக மாறி போய்விட்டது !!!//

ம்ம்ம்ம்

======================

யோ வொய்ஸ் (யோகா) said...
கஞ்சி பாய் வாழ்க//

அதே.. :)

================



ம.தி.சுதா said...
ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...//

நன்றி :)

ARV Loshan said...

KANA VARO said...
கலக்கல் காமடி //

நன்றி

நிறைய நாளுக்கு பிறகு விடியல் கேட்டன்.//

:)

=================

Vijayakanth said...
nalla velai pathivu tamil la irukku...Obama ku tamil theriyathu.. oruwelai english la ezhuthi irunthaa OBAMA kannila thenpattaa ganji baay gaali :P //

அதானே தமிழிலேயே பிளந்து கட்டுறோம்.. ;)

தயவு செய்து ட்ரான்ஸ்லேட் பண்ணி ட்வீட் பன்னிராதேங்க..

ARV Loshan said...

Eeva said...
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!//

அழைப்பு,தகவல்+வருகைக்கு நன்றி :)

=================

fowzanalmee said...
ரஜினி அமிதாப் காமெடிக்கு அப்புறம் பெஸ்ட் காமெடியன்னா இதுதான்//

அடடா அவ்வளவு உயரத்துக்குப் போயிட்டாரா நம்ம கஞ்சி? ம்ம்ம்ம் சந்தோசம் :)

ARV Loshan said...

ஆதிரை said...
நேற்றும் ஆபிரகாம் இலிங்கனின் ஆவி வெற்றிப்பணிமனைக்கு வந்து போனதாக வெ.பணியாளர் ஒருத்தர் குறிப்பிட்டிருந்தார்.//

என்னாது? எப்போ? இங்கே இருந்த ஒரு ஆவியைத் தான் ரொம்பக் காலம் காணலியே என்று பார்த்தால் லிங்கனின் ஆவியா?

மீண்டும் லீவு எடுக்கணும் போல தான் கிடக்கு ;)



கதை... கலக்கல். கஞ்சிபாயின் மீது சவாரி ஓடிவிட்டீர்கள்.//

ஹீ ஹீ.. யாராவது கிடைக்கணுமே.. ;)

======================

கன்கொன் || Kangon said...
ஆதிரை அண்ணா வாழ்த்துக்கள்.

நிறைய நாட்களுப் பின் நீங்கள் பின்னூட்டமிட்டதை இன்றுதான் பார்த்தேன். ;-)//

ம்ம் உங்களுக்குக் காலம் கனிவதைப் போல ஆதிரைக்கும் இப்போ தான் நேரம் வந்திருக்காம் ;)

கன்கொன் || Kangon said...

// ம்ம் உங்களுக்குக் காலம் கனிவதைப் போல ஆதிரைக்கும் இப்போ தான் நேரம் வந்திருக்காம் ;) //

அடடே...
நீங்கள் சாத்திரம் எல்லாம் பாக்கத் தொடங்கீற்றீங்களோ அண்ணா? ;-)
எனக்கு காலம் கனியிது எண்டு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். :-)

ஆதிரை said...

//எனக்கு காலம் கனியிது எண்டு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். :-)//

லோஷன் அண்ணா சொல்லி, இந்தியா வென்ற கதை தெரிந்த பின்னுமா???

கன்கொன் || Kangon said...

// லோஷன் அண்ணா சொல்லி, இந்தியா வென்ற கதை தெரிந்த பின்னுமா??? //

அப்ப எனக்கு காலம் கனியவே கனியாது எண்டுறீங்களா? ;-)

ஆதிரை said...

//அப்ப எனக்கு காலம் கனியவே கனியாது எண்டுறீங்களா? ;-)//

ஆஸி - இலங்கை போட்டியில் ஆஸிதானே வெல்லும்??

அதைப் போல...!!!

Bavan said...

//அப்ப எனக்கு காலம் கனியவே கனியாது எண்டுறீங்களா? ;-)//

ஹாஹா.. அதுக்கு நீங்கள் லோஷன் அண்ணா சப்போர்ட் பண்ணாத அணிக்கு சப்போர்ட் பண்ணோணும்..:P

கன்கொன் || Kangon said...

// ஆஸி - இலங்கை போட்டியில் ஆஸிதானே வெல்லும்??

அதைப் போல...!!! //

இதென்ன கணக்கு?
ஏன் லோஷன் அண்ணா இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பார் எண்டதாலயா?

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
// ம்ம் உங்களுக்குக் காலம் கனிவதைப் போல ஆதிரைக்கும் இப்போ தான் நேரம் வந்திருக்காம் ;) //

அடடே...
நீங்கள் சாத்திரம் எல்லாம் பாக்கத் தொடங்கீற்றீங்களோ அண்ணா? ;-)//

இது சாத்திரம் இல்லை தம்பி.. சமூக நடப்பு ;) பொது அறிவு எண்டும் சொல்லலாம் ;)


எனக்கு காலம் கனியிது எண்டு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். :-)//

எல்லாம் நிறையப் பேர் சொல்லித் தான் உங்களுக்கே தெரியுது போல..

ARV Loshan said...

ஆதிரை said...
//எனக்கு காலம் கனியிது எண்டு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும். :-)//

லோஷன் அண்ணா சொல்லி, இந்தியா வென்ற கதை தெரிந்த பின்னுமா???//

நான் எதிர்வுகூறி நேற்று பங்களாதேஷே வென்ற பிறகும் இப்படிப் பேசுவது நியாயமில்லை.. ஆமா சொல்லிட்டேன்..
=================




கன்கொன் || Kangon said...
// லோஷன் அண்ணா சொல்லி, இந்தியா வென்ற கதை தெரிந்த பின்னுமா??? //

அப்ப எனக்கு காலம் கனியவே கனியாது எண்டுறீங்களா? ;-)//

ஹா ஹா.. ரசித்தேன்.
ஆனாலும் நாங்கள் சொல்லியா எல்லாம் நடக்குது.. ;)

அது பாட்டுக்குத் தானா நடக்குது..

ARV Loshan said...

ஆதிரை said...
//அப்ப எனக்கு காலம் கனியவே கனியாது எண்டுறீங்களா? ;-)//

ஆஸி - இலங்கை போட்டியில் ஆஸிதானே வெல்லும்??

அதைப் போல...!!!//

எப்ப இருந்து இந்த கிரிக்கெட் பந்தயம்+சூதாட்டம் தொடங்கி இருக்கீங்க? புது பிசினசா? ;)


======================

Bavan said...
//அப்ப எனக்கு காலம் கனியவே கனியாது எண்டுறீங்களா? ;-)//

ஹாஹா.. அதுக்கு நீங்கள் லோஷன் அண்ணா சப்போர்ட் பண்ணாத அணிக்கு சப்போர்ட் பண்ணோணும்..:P //


தம்பி பலே பாண்டியா பார்ட் டூ இப்போது தான் ஆரம்பிக்கிறது..

நேற்று பங்களாதேஷ் வென்றதில் இருந்து..

நினப் பாரும்.. ;)

ஆஷசிலும் வெற்றி எமக்கே..

கன்கொன் || Kangon said...

// நான் எதிர்வுகூறி நேற்று பங்களாதேஷே வென்ற பிறகும் இப்படிப் பேசுவது நியாயமில்லை.. ஆமா சொல்லிட்டேன்.. //

ஓமோம்...
இலகுவா வெல்ல வேண்டிய போட்டிய கடைசிப் பந்துப்பரிமாற்றம் வரைகொண்டுபோய் எதுவும் நடக்கலாம் எண்டு வந்துதான் வெண்டவங்கள்...
மறக்க வேணாம். ;-)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
// ஆஸி - இலங்கை போட்டியில் ஆஸிதானே வெல்லும்??

அதைப் போல...!!! //

இதென்ன கணக்கு?
ஏன் லோஷன் அண்ணா இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பார் எண்டதாலயா?//

நேற்று பங்களாதேஷ் வென்றதை ஞாபகப் படுத்துகிறேன் ;)


==========================

ILA(@)இளா said...
போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!//

நன்றி இளா :)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
// நான் எதிர்வுகூறி நேற்று பங்களாதேஷே வென்ற பிறகும் இப்படிப் பேசுவது நியாயமில்லை.. ஆமா சொல்லிட்டேன்.. //

ஓமோம்...
இலகுவா வெல்ல வேண்டிய போட்டிய கடைசிப் பந்துப்பரிமாற்றம் வரைகொண்டுபோய் எதுவும் நடக்கலாம் எண்டு வந்துதான் வெண்டவங்கள்...
மறக்க வேணாம். ;-)//

சர்வதேசக் கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜமப்பா :)

அது அந்தகே கேன சாரி கேன் வில்லியம்சனால் வந்த வினை.. ;)

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner