November 11, 2010

இரும்பில் முளைத்த இருதயம் - எனக்குப் பிடித்த எந்திரன் காதல்

பல நாட்களாகப் பாடல்கள் பற்றிய பதிவு ஏதும் போடவில்லை.
பாடல்களுடனேயே ஒரு நாளின் பல மணிப் பொழுதுகளைக் கழிப்பவனாதலால்,பல பாடல்கள் மனதுக்குள் இலகுவாகக் குடியேறுவதும்,பல பாடல்கள் கொஞ்சக் காலமாவது உதடுகளில் முணுமுணுக்க ஏறி உட்காருவதும் என் ஒலிபரப்பு வாழ்க்கையில் சகஜம்.


இந்த இரண்டு மூன்று மாதங்களில் நான் அடிக்கடி முணுமுணுத்த,விரும்பி ரசித்த ஐந்து பாடல்களை இங்கே உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
அதற்காக இது தான் என் ரசனை என்று யாரும் முத்திரை குத்த முடியாது.
இவையும் என் ரசனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.


காரணம் வானொலியில் அதிகமாக மற்றவர்களால் விரும்பிக் கேட்கப்படும்,ஒலிபரப்பாகும் பாடல்களை விட வேறு இனிமையான(என்னைப் பொறுத்தவரை) பாடல்களைப் பிடிப்பது என் வழமை.


இவற்றுள் உங்களுக்குப் பிடித்த பாடல்களும் இருக்கலாம்..


1.இரும்பிலே ஒரு இருதயம் - எந்திரன்




மதன் கார்க்கியின் விஞ்ஞானமும் ஒரு தலைக் காதலும் கலந்த வரிகள் மனதைத் தொட்ட அளவு, A.R.ரஹ்மானின் மந்திர,எந்திர இசையும் பச்சென்று என் மனதில் கேட்ட முதல் தடவையே ஒட்டிக் கொண்டது.


இசைப் புயலின் குரலிலும் எனக்கு ஒரு தனியான ஈர்ப்பு.. எவர் போலவும் இல்லாத ஒரு குரல்.
இந்தப் பாடலிலும் பாத்திரத்துக்குப் பொருந்துகிறது.


இசையிலும் ஒரு நவீனம்,துடிப்பு.. ஒரு எந்திரனுக்கு காதல் வந்தால்,உணர்வுகள் வந்தால் ஏற்படும் மாற்றங்களைக் காட்டும் குறியீட்டு இசைக் கருவிகளின் கையாள்கை என்று கலக்கி இருக்கிறார் ரஹ்மான்.


Kash and Krissy என்ற அந்த இரு துடிப்பான பெண் குரல்களும் பாடலுக்கு இன்னொரு கிக் FEELING கொடுக்கின்றன.


பாடலின் முக்கிய உயிரான வரிகளில் எதைப் பிடித்துள்ளது என சொல்வது???


பாடலின் ஆரம்பத்தில்..


பூஜ்ஜியம் ஒன்றோடு 
பூவாசம் இன்றோடு 


என்று அறிவியலையும் காதலையும் இணைத்தது முதல்,


கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணாக் காதல்
பெண் பூவே உன்னோடு 


என்னுள்ளே எண்ணெல்லாம் 
நீதானே நீதானே 
உன் நீலக் கண்ணோரம் 
மின்சாரம் பறிப்பேன் 
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன் 
என் எஞ்சின் நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன் 
நீ தூங்கும் நேரத்தில் 
நான் என்னை அணைப்பேன் 


இப்படியான வரிகளில் ரசித்து சிலாகிக்க வைத்து,குறும்பாகவும் காதலின் விளையாட்டுக்களையும் எந்திரன் திரைப்படத்தின் ஒரு வரிக் கதையையும் இந்தப் பாடலின் வரிகளுக்கிடையில் ஊடு பாய விடுகிறார் மதன் கார்க்கி.


தொட்டுப் பேசும் போதும்
ஷோக் அடிக்கக் கூடும்.
காதல் செய்யும் நேரம் 
மோட்டார் வேகம் கூடும் 
இரவில் நடுவில் battery தான் தீரும் 


என்று காதலியின் தேவை சொல்பவர்,




உன்னாலே தானே – என்
விதிகளை மறந்தேன்
&


ரத்தம் இல்லாக் காதல் என்று
ஒத்திப் போக சொல்வாயா?


என்று எந்திரக் காதலையும் கதையின் திருப்பத்தையும் தொடுகிறார்.


உயிரியியல் மொழிகளில் எந்திரன் தானடி
உளவியல் மொழிகளில் இந்திரன் நானடி 
சாதல் இல்லா சாபம் வாங்கி
மண்மேலே வந்தேனே
தேய்மானமே இல்லா
காதல் கொண்டு வந்தேனே


என்று எந்திரன் ரோபோ தன் பெருமைகளையும் தன்னைக் காதலிப்பதால் கிடைக்கும் அனுகூலங்களையும் பீற்றிக்கொள்ள,
காதலிக்கப்படும் பெண்ணோ வெகு சிம்பிளாக அதனையும் அதன் காதலையும் தட்டிவிட்டு நிராகரிக்கிறாள்..
அவள் சொல்லும் காரணங்கள் நிறைய ஆங்கிலம்+கொஞ்சம் கொஞ்சும் தமிழில் ரப்(RAP)பாக வருகிறது.


Hey… Robo… மயக்காதே …
you wanna come and get it boy
Oh are you just a robo toy
I don’t want to break you
even if it takes to
kind of like a break through
you don’t even need a clue
you be my man’s back up
i think you need a checkup
i can melt your heart down
may be if you got one
we doing that for ages
since in time of sages
முட்டாதே ஓரம்போ
நீ என் காலை சுற்றும் பாம்போ
காதல் செய்யும் ரோபோ 
நீ தேவையில்லை போ போ   


நீ வெறும் ரோபோ தான் எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறாள் நாயகி.


தந்தையின் இயல்புகள் தனயனுக்கும் ஜீன்களால் வந்து கலப்பது ஒருபக்கம், தந்தை இதே படத்தில் எழுதிய மற்றப் பாடல்களையும் தாண்டிப் பலரை ஈர்ப்பது என்பது எவ்வளவு பெரிய சாதனை?
வைரமுத்துவின் குட்டி முதல் படத்திலேயே பதினாறு என்ன பல நூறு அடி பாய்ந்துள்ளது.


ஏற்கெனவே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்திருப்பீர்கள்..
இந்த இடுகையை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்..
இன்னும் புதியதாகத் தெரியும்..





எந்திரனில் வைரமுத்துவின் வரிகளில் புதிய மனிதா,அரிமா அரிமா, காதல் அணுக்கள் பாடல்களும் மனதுக்குப் பிடித்தே இருந்தாலும் இரும்பிலே இருதயம் முளைக்க வைத்த மதன் கார்க்கியின் வரிகள் மனதின் மெல்லிய பரப்பில் ஏறி உட்கார்ந்து விட்டன.
            கவிப் பேரரசும் இளைய கவி இளவரசும் 


மதன் கார்க்கிக்கு செங்கம்பள வரவேற்பு எந்திரன் மூலம் கிடைத்துள்ளது.
இந்தப் பிரம்மாண்டப் புகழைப் பத்திரமாக தொடர்ந்து வரும்பாடல்களிலும் கொண்டு செல்வார் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறேன்.


வைரமுத்து,நா.முத்துக்குமார் வரிசையில் மேலும் ஒரு அற்புத அறிவியல் பாடலாசிரியர்? காலம் சொல்லும்..




(எந்திரன் பாடல்கள் பற்றி எழுதச் சொல்லி அன்பு வேண்டுகோளை முன்வைத்த சில நண்பர்களை அப்போது ஏமாற்றிவிட்டேன்.. இப்போது கொஞ்சமாவது திருப்தி தானே? )


ஐந்து பாடல்கள் பற்றியும் இதே இடுகையில் சொல்லலாம் என்று ஆரம்பித்தால் இரும்பிலே பாடலில் கொஞ்சம் அதிகமாகவே ஊறி அதிகமாக பதிவில் ஊற்றிவிட்டேன் போல் தெரிகிறது..


மீதி நான்கு பாடல்களையும் அடுத்த பதிவில் சொல்லவா?


பி.கு - இன்னொரு பாடல் இடுகை இட்டுள்ளேன்.. கொஞ்சம் வித்தியாசமாக ..
கொஞ்சம் பாருங்களேன் - இதுவரை வாசித்திராவிட்டால்..

தீனா சுட்ட முருகன் பாடல்..

14 comments:

கன்கொன் || Kangon said...

:-))

எனக்கும் இரும்பிலே இரும்பிலே பாடல் பிடித்திருந்தது, கூடவே காதல் அணுக்களும்.

ஆனால் வரிகள் அழகாக இருப்பது உண்மைதான்.


// ஏற்கெனவே இந்தப் பாடலைக் கேட்டுப் பார்த்திருப்பீர்கள்..
இந்த இடுகையை வாசித்த பிறகு மீண்டும் ஒரு தடவை கேட்டுப் பாருங்களேன்.. //

கேட்கிறேன்..... :-)


// மீதி நான்கு பாடல்களையும் அடுத்த பதிவில் சொல்லவா? //

தனித்தனியாக 4 பதிவுகளா?
அவ்வ்வ்வ்.... ;-)

நல்ல பாடல், உங்களுக்குப் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால் பதிவெழுதியமைக்கு நன்றி.
இப்படியான பதிவுகளை வாசித்த பின்னர் பாடல்கள் வழமையாக எனக்கு அதிகமாகப் பிடிக்கும், (உ+ம்: கதறக் கதறக் காதலிப்பேன்), இங்கும் நடக்கிறதா பார்ப்போம். :-)

Unknown said...

கார்க்கி எழுதி இருக்கின்றார் நன்றாக..
பிரபல்யத்தின் வாரிசு என்பதால் இலகுவாக வாய்ப்பு கிடைத்துவிட்டது அதுவும் பிரமாண்டங்களுடன்!!
இந்தியாவில் சில பதிவர்கள் எழுதிய கவிதைகளை பார்த்தால் நீங்கள் கார்க்கியை விட அவர்களையே ஆதரிப்பீர்கள்..வாய்ப்பு கிடைக்காததால் வீணே கிடக்கின்றனர்..
வேண்டுமென்றால் உதாரணத்துக்கு ...

http://vanakkamthamiz.blogspot.com/

போய் பாருங்கள்...வருடத்துக்கு ஏன் ஒரு மாதத்தில் எவ்வளவை எழுதித்தள்ளி இருக்கிரார்என்று.

யோ வொய்ஸ் (யோகா) said...

////இசைப் புயலின் குரலிலும் எனக்கு ஒரு தனியான ஈர்ப்பு./////
அப்ப நீங்க நம்ம கட்சி, எனக்கும் எந்திரன் பாடல்களில் முதலில் மனதில் பதிந்த பாடல் இதுதான், ஆனால் இப்போதெல்லாம் அடிக்கடி முணுமுணுப்பது யோகி.பி படித்த ரோபோடா பாடல்

Bavan said...

சேம் பிளட், எந்திரன் பாடல்கள் அனைத்தையும் கேட்கவேண்டும் என்று நினைத்து playlistடில் செலக்ட் பண்ணிவிட்டு பிறகு மற்றவற்றை remove பண்ணிவிட்டு இதை மட்டும் கேட்டிருக்கிறேன்..:)

மதன் கார்க்கி - புலிக்குப்பிறந்தது பூனையாகுமா..:D

Unknown said...

//கூகிள்கள் காணாத
தேடல்கள் என்னோடு//

ரொம்பவே புடிச்சிருக்கு..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஃஅதற்காக இது தான் என் ரசனை என்று யாரும் முத்திரை குத்த முடியாது.
இவையும் என் ரசனை என்று எடுத்துக்கொள்ளுங்கள்.ஃஃஃஃஃஃ

எல்லாவற்றையும் விட இது ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு...

பாடலைப் பற்றி சொல்லவும் வேண்டுமா அது தான் நீங்களே சொல்லிவிட்டீர்கணுளே அண்ணா..

ஷஹன்ஷா said...

...(கவிப் பேரரசும் இளைய கவி இளவரசும்)...
அண்ணா கார்க்கிக்கு முதன்முதலில் அடைமொழி வைத்த பெருமை உங்களுக்கே...

...(வைரமுத்து,நா.முத்துக்குமார் வரிசையில் மேலும் ஒரு அற்புத அறிவியல் பாடலாசிரியர்? காலம் சொல்லும்..)...
பொறுத்திருந்து பார்ப்போம்....தமிழ் சினிமா இவரை பயன்படுத்துகிறதா என்று....(இல்லையேல் தமிழ் சினிமா இன்னும் பழைய பஞ்சாங்கம் தான்...)


....(Kash and Krissy என்ற அந்த இரு துடிப்பான பெண் குரல்களும் பாடலுக்கு இன்னொரு கிக் FEELING கொடுக்கின்றன)...
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ”கிக்”கான இசை இறக்குமதிகள்..


...(காதல் செய்யும் ரோபோ
நீ தேவையில்லை போ போ..)....
இதுதான் இன்றைய காதலின் நிலையோ????

வந்தியத்தேவன் said...

எனக்கு கிளிமஞ்சதாரோ தான் ரொம்ப பிடித்திருக்கின்றது. உந்தப் பாட்டை பாடிய மலேசிய பாடகிகளின் வீடியோவும் நெட்டில் இருக்கின்றது.

கார்க்கியின் வரிகள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததாக இருப்பது புதுமையும் அருமையும். ஆனாலும் இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற அவரின் தந்தையின் முதல் பாடலுக்கு முன்னர் இரும்பிலே ஒரு இதயம் கொஞ்சம் பிந்தள்ளித் தான் நிற்கின்றது.

//(எந்திரன் பாடல்கள் பற்றி எழுதச் சொல்லி அன்பு வேண்டுகோளை முன்வைத்த சில நண்பர்களை அப்போது ஏமாற்றிவிட்டேன்.. இப்போது கொஞ்சமாவது திருப்தி தானே? )//

நண்பிகள் என ஹம்டன் லேன் ஆந்தை சொல்லிச்சு.
தீனா சுட்ட இடுகை வாசித்தேன் ஹிஹிஹி. முருகன் தமிழ்க் கடவுள் என்பதால் என்னவும் செய்யலாம். இதனையே விஷ்ணுவுக்கு செய்திருந்தால் இந்தியா எரிந்திருக்கும் ஹிஹிஹி.

அப்படியே சில வரிகளுக்கு பொழிப்புரையும் தந்திருக்கலாம், என்னைப்போன்ற பச்சிளம்பாலகர்களுக்கு விளங்குதில்லை.

Philosophy Prabhakaran said...

கிட்டத்தட்ட ஈன்ன்கு ஏற்பட்ட அதே உணர்வுகள்...
எனக்கு பிடித்த வரிகள்:
"எச்சில் இல்லா எந்தன் முத்தம் சர்ச்சை இன்றிக் கொள்வாயா...
ரத்தம் இல்லாக் காதல் என்று ஒத்திப் போகச் சொல்வாயா..."

தர்ஷன் said...

எனக்கும் இந்தப் படத்தில் மிகவும் பிடித்தப் பாடல் இதுதான்

Unknown said...

//பொறுத்திருந்து பார்ப்போம்....தமிழ் சினிமா இவரை பயன்படுத்துகிறதா என்று//
:))

Netபணம் said...

அருமையான பாடல் விமர்சனம் லோஷன், அடுத்த பதிவையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

fowzanalmee said...

என்திரனில் எனக்கு பிடித்த பாடல்.... அப்பாவை மிஞ்சி விட்டார் மகன்..
இப்பெடி எல்லாம் வித்தியாசமாக இசை அமைக்கும் ரஹ்மானின் பாடல்கள் எம்மையும் தாண்டி வெள்ளையர்களை கூட விட்டு வைக்கவில்லை பாருங்கள் ......
கனடாவில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் ரஹ்மானின் தமிழ் பாடல் ..
http://www.facebook.com/#!/permalink.php?story_fbid=124031050989265&id=100000553856937

இதை பற்றியும் ஒரு பதிவு இடலாமே லோசன் அண்ணா

Riyas said...

நல்ல பாடல் விமர்சனம் லோசன் அண்ணா..

நீங்கள் சொன்ன மதன் கார்கியின் வலைப்பக்கம்..

http://madhankarky.blogspot.com/

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner