December 04, 2010

கங்கோன் - நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள்

நடமாடும் விஸ்டன், உருண்டோடும் கூகிள் என்று நான் /நாம் அழைக்கும் கறுப்பு சிங்கம், சிரிப்பு சிங்கம், கிரிக்கெட்டே இவனது அங்கமான கங்கோனின்(கனகலிங்கம் கோபிக்ருஷ்ணா முழுப்பெயர்.. அப்பப்பா என்னுடன் நீளத்தில் போட்டிக்கு வருவார் போல) பிறந்த நாள் இன்று..

நாளை பார்ட்டி எமக்கு பிரத்தியேகமாகத் தருவதாக சொன்னவருக்காக தனிப்பதிவு போடாவிட்டால் சரியில்லையே..
ஆனாலும் ஒரு அரங்கேற்ற நிகழ்வைத் தொகுத்துவழங்கும் வேலையினால் சில நாட்களாக பிசி.

அதனால் என்ன? முன்பே இட்ட ஒரு பிரம்மாண்டப் பதிவை சில மாற்றங்களுடன் புதுப்பித்து வாழ்த்துகிறேன்..
கங்கோனின் அண்மைக்கால சாதனைகள்,மைல் கற்களும் படங்களும் முன்னைய பதிவான கறுப்பு சிங்கம் - கங்கோனில் சேர்க்கப்பட்டு இந்தப் பதிவு..

அண்ணே இதையும் விட அப்பாவியா சிரிக்க முடியாதுன்னே..

எதிர்கால சகலதுறையாளனே சில விஷயங்களில் தன்னடக்கத்துடன் பின்னிர்பதை விடுத்து,தயக்கங்கள் தாண்டி முன்னுக்கு வா.. மிளிர்வாய்.

அண்ணன்களில் ஒருவனாக வாழ்த்துகிறேன்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
உன் வாழ்க்கையை இந்த வருடத்திலிருந்து திட்டமிட்டு ஆரம்பி.

*****************

முன்னைய பதிவு.. மாற்றங்களுடன் மீள் பதிவாக..


நீண்ட நாட்களாக இன்று,நாளை என்று நானே எனக்கும்,சக நண்பர்களுக்கும் எதிர்பார்ப்பை அளித்து அளித்து ஏமாற்றிய பிரம்மாண்டப் பதிவு இது..
என் வார்த்தைகளில் சொல்லப் போனால் இலங்கைப் பதிவுலகில், இது ஒரு ராவணன்,ஒரு எந்திரன்..
நான் என்னையே மணிரத்தினம்,ஷங்கர் என்பவர்களோடு ஒப்பிடுவதற்காகவல்ல..
இந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)




                              சொன்னா நம்ப மாட்டீங்களே..  எப்பூடி?

பதிவர்களைக் கலாய்த்து மொக்கைப் பதிவு இடுவதென்பது ஒரு கலாசாரம் ஆகிப் போனதால் நானும் சக நண்பர்களான வந்தியத்தேவன்(இவர் சொந்த செலவில் சூனியம் வைத்து எமக்கெல்லாம் ஒரு களிப்பூட்டும் நட்சத்திரம் ஆகின்றவர்- அது பதிவு,கும்மி,ட்விட்டர்,நேரில் என்று சகல வகையிலும்),ஆதிரை (கொஞ்சம் சீரியஸ் பதிவரேன்றாலும் எலிக் குஞ்சுப் பதிவினால் எல்லா நாட்டிலும் பிரபலமானவர்), புல்லட்(கல கல பதிவர்-இப்போதெல்லாம் எப்போதாவது எழுதினாலும் அப்போதைக்கு ஹிட் அடிப்பவர் - லேட்டஸ்ட் தகவலொன்று அண்மைக்காலமாக வாழ்க்கையின் வளப்படுத்தலுக்கு மிக முக்கியமான விடயமொன்றில் ரொம்பவே மும்முரமாம் இவர்) ஆகியோரை கலாய்த்து சிறப்புப் பதிவுகள் இட்டுள்ளேன்.

ஏனைய சகலரையும் அடிக்கடி பின்னூட்டங்கள்,கும்மிகள்,சில பதிவுகளினிடையே கடிப்பது கல கலப்பது வழக்கம்..

இந்தப் பதிவில் எம்மால் சிறப்பிக்கப்படும் இவர்...
உண்மையிலேயே நான் பார்த்து வியந்து,சில வேளை கொஞ்சம் பொறாமைப்பட்ட ஒரு இளம் பதிவர்..



கடலை ஆச்சிக்கும் கடன் வைத்த கர்ணப் பிரபுவாக..

யாரையாவது பிடித்து உரித்து,பின்னி எடுக்க பல விஷயமும் தெரிய வரணுமே..இவர் பற்றித் தான் ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா பலபல விஷயங்கள் வெளி வரும்..
சகல துறை விஷயம் பற்றியும் இவரோடு நாளின் இருபத்து நான்கு மணி நேரமும் அரட்டலாம்.. (பயல் வெட்டி என்று சொல்லி கேலி பேசப்படாது.. உயர்வு நவிற்சி மட்டுமே எடுக்கப்படவேண்டும்)

இந்தப் பதிவு எங்கள் இன்றைய நாயகன், வந்தி லண்டன் சென்ற பிறகு இலங்கைப் பதிவுலகில் என்றுமே எங்கள் நாயகனாகியுள்ள சின்ன வந்தி என்ற சிறப்புப் பெயரையும் தாங்கியுள்ள கங்கோன்,கோபி என்றெல்லாம் தேவைக்கேற்ப,நேரத்திற்கேற்ப அழைக்கப்படும் இப்போதைய 'க்ரிஷ்' இன் பாராட்டுப் பத்திரம் என்பதைக் கருத்தில் கொள்க.. ;)
(மெய்யாலுமே பாராட்டுத் தாங்கோ)



கங்கோன் - ஒரு கறுப்பு சிங்கம் 



Kangon - The Black Lion





கண்ணாடி போட்டால் நானும் ஒரு கமலகாசன் தானுங்கோ..
(இது கமலுக்குத் தெரியுமா?)

கனக கோபி என்று அறியப்பட்ட கங்கோன் (அண்மைக்காலம் வரை இப்படித் தான் எம் அனைவருக்குமே என் இவர் போகின்ற இணைய உலா வழியாக உலகம் முழுவதுமே இவரைத் தெரியும்) இப்போது தன்னை முன்னர் தானே வைத்துக் கொண்டது போல கோபி என்றோ, கனக கோபி என்றோ அல்லது கங்கோன் கோபி என்றோ அழைக்காமல் கிரீஸ் சாரி.. க்ரிஷ் என்று தன்னை அழைக்க வேண்டும் என்று விரும்புகிறார்..

காரணம் நிச்சயமாக நுமேரோலோஜி அல்ல.. அப்படியானால்?

ஒவ்வொரு மணி நேரமும் மாறும் Facebook மற்றும் G chat statusக்கும் இந்தப் பெயர் மாற்றத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என கிரிஷின் நட்பு வட்டாரம் இன்னும் புலனாய்கிறது.



கமெராக் கண்ணனாக.. கோபியர் கவனம்..

கங்கோனின் இன்னொரு ஆயுதம் கமெரா.. ஆனால் சில சமயம் இவனுக்கே அது சொ.செ.சூ வைத்து விடுகிறது..


இணையத்தின் இண்டு இடுக்கு எல்லாம் தெரிந்த ஒரு டேக்னோலோஜி குண்டு இவன் ;)
வலைப்பதிவின் சூட்சுமம் எல்லாம் விரல்களில் வைத்துள்ள நம்ம ஹீரோ, இணையத்தின் சகல தொடர்பு சமூகத் தளங்களிலும் நாள் முழுதும் குடியிருப்பார் (வேற வேலை??)

ட்விட்டர் இவரின் பாரம் தாங்காமல் அடிக்கடி Too much of load.. Try in a few minutes என்று அலறும்..
ஆனானப்பட்ட லலித் மோடியும் இவருக்குப் பின் தான்..
கொஞ்சக் காலத்திலேயே 14 500 twits அடித்தாடியுள்ளார் என்றால் சும்மாவா?



புஜபலத்தை நிரூபிக்கும் போட்டியில் எங்கள் இணையப் புலி..

Facebook இவர் வருகை பார்த்ததுமே குய்யோ முறையோ என்று கூச்சலிட ஆரம்பிக்கும்.
பின்னே இவரின் பட லோடுகள் ஒரு பக்கம்.. பண்ணும் status மெசேஜ் லொள்ளுகள் ஒரு பக்கம்..

ஆனால் ஒரே ஒரு பாச உறவுக்கு மட்டும் தம்பியர் பயமோ பெரும் பயம்..
எந்தப் புயலுக்கும் அசையாத இந்த ஆல மரம் அந்தப் பெயர் சொன்னால் மட்டும் அனைத்திலும் Log out ஆகிவிடும்..

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.. ;)

இணையத்தில் என்ன வேண்டும்.. அத்தனையும் தெரியும் இவனுக்கு.. ;)
இவன் உடல் போலவே இவன் அறிவும் ஒரு பரந்த கடல்.. ;)
ஹக்கிங்,பிஷிங் தொடக்கம் கண்டன காணாதன எல்லாம் அறிவான்..
சில சமயம் ரஷ்யாவிலும் கூட கங்கோன் இணையம் மேய்ந்து கொண்டிருப்பான்..
கூகிள் ஆண்டவரின் ஆசியில் டச்சு,ஸ்பானிஷ் மொழிகளிலும் ஆன்டிமாருடன் கடலை போடும் வித்தையும் அறிந்தவன் ;)
நாங்கள் எல்லாம் தமிழ் போரம்களில் தடுமாறிக் கொண்டிருக்க சோமாலியா,சுவாசிலாந்து,செர்பியா என்று பேரே அறியாத இடங்களிலெல்லாம் கங்கோனின் பெயர் அறிந்திருக்கும்.

இப்பிடிக் கவித்திட்டாங்களே ஆஸ்திரேலியா .. 
அடுத்து அனலைஸ் செய்து ஆப்கானிஸ்தானுக்கு சப்போர்ட் பண்ணலாமோ?


வெட்டிப் பயல் கங்கோன் என்று தன்னை நாவடக்கத்தோடு சொல்லிக் கொண்டாலும் வெட்டி வா என்றால் கட்டி வருவான் தம்பி.
இலங்கையில் இரண்டாவது பதிவர் சந்திப்பில் வியர்வை ஆறாக ஓட ஓட உழைத்துக் களைத்த உழைப்பாளி இவனே..
நனைந்து இவனின் கட்டழகு உடலோடு ஓட்டிப் போன நீல சேர்ட் சான்று.



                     உழைப்பாளி - இம்முறை பதிவர் சந்திப்புக்கும் சரீர உழைப்புக்குத் தயார் ;)

கிரிக்கெட் சபைகள் எல்லாம் நம்ம ஹீரோவின் பெயரைக் கேட்டாலே அதிர்ந்து போய் விடும்..
பின்னே, எல்லா விதிகளையும் விளக்கங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒரு போல நடமாடித் திரிந்தால் சும்மாவா?
ஒரு போட்டியில் ஒரு பந்து வீசி முடிய முதல் நம்ம கங்கோன் ஐந்து ட்விட் பந்துகளை வீசி அசரடிப்பான்..
cricinfo கூட செய்திகளைப் போட முதல் இவனுக்கு தனியாக மின்னஞ்சல் செய்து உறுதிப் படுத்திக்கொள்ளுமாம்..

இலங்கை அணி அடுத்த சனத்தாக கருதி ஒவ்வொரு நாளும் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்காம்.. (ஹே என்னா நக்கல்.. சகலதுறை வீரர்னு சொன்னேன்)



சீனியர் போனபின் வலையுலகில் சிஷ்யன் நானே சிங்கம் ;)

 ஒரு பிரபல பதிவராக இருந்து அதில் தடம் பதித்த ஈரம் (!) காய முதலே பிரபல பின்னூட்டவாதியாக மாறி 'me the first' போட்டே சாதனை நடத்த வேறு யாரால் முடியும்?

எங்கிருந்து தான் வருகிறாரோ.. எல்லாப் பதிவுகளிலும் 'me the first' கங்கோன் தான்..

எவ்வளவோ பண்ணிட்டம் இதைப் பண்ண மாட்டோமா என்று வந்தி சென்ற பிறகு அந்த இடத்தைத் தனதாக்கி சளைக்காமல் சொந்த செலவில் சூனியம் வைக்கும் வித்தையிலும் கை தேர்ந்து குருவை மிஞ்சிக் கொண்டிருக்கும் சிஷ்யன்..



                 காதலுக்கு மரியாதை செய்யும் கறுப்புத் தங்கம்..(இது எத்தனையாவது என்று கணக்குக் கேட்கிறார் பப்புமுத்து)


தினமும் கும்மியில் சளைக்காமல் எட்டுத் திக்கிலும் வரும் அடிகளை தன பஞ்சு மெத்தை உடலில் பவுன்ஸ் பண்ண விட்டு சிரிப்பார் இந்தக் கறுப்புக் கட்டழகர்.

உடலமைப்பால் தான் இவருக்கு கறுப்பு நமீதா என்ற பெயரும் வந்தது என்று தப்பாக யாரும் தப்பர்த்தம் செய்து விடக் கூடாது.. ;)
இவர் மனசும் பெரிசு..

யாருக்கு என்ன உதவி எப்படி தேவையோ உயிரைக் கொடுத்தாவது செய்யக் கூடியவர்..




ஊராரின் ஊட்டல் ஊட்டசத்தின் ரகசியம்.
பாவம் இந்த அப்பாவி நண்பன்.. ;)
ஏண்டா கூப்பிட்டோம் என்று ஆயிருப்பான்..


தன வீட்டருகில் உள்ள குழந்தைகளுக்கு உணவூட்டும் தாய்மாருக்கு இவன் ஒரு நடமாடும் பூச்சாண்டி..
ஹம்ப்டன் லேனில் உள்ள விற்கமுடியா மரவள்ளிக் கிழங்குப் பொரியல்,முறுக்கு,வடை போன்றவற்றின் ஏகபோக சீரண மெசின் இவனே..
பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு கிரிக்கெட் பழக்கிறேன் என்று தினமும் பயமுறுத்தி பயமுறுத்தியே அதெல்லாம் இப்போது ஒரு நாளும் ஸ்கூலுக்கு கட் அடிக்காமல் போவதாகத் தகவல்..

இதெல்லாம் போதாமல் தபால் மூலப் பட்டப் படிப்பு போல, மின்னஞ்சல் மூலம் கிரிக்கெட் பயிற்சி என்று திருகோணமலை,வவுனியா,யாழ்ப்பாணப் பக்கம் உள்ள அப்பாவிப் பதிவர்களைஎல்லாம் போட்டுப் படுத்தி எடுக்கிறாராம் நம்ம கிரிக்கெட் ஞானி.

கையடக்கத் தொலைபேசியை இவன் வயதொத்த பச்சிளம் பாலகர்கள் காதலுக்கும் அரட்டைக்கும் பயன்படுத்த, இணையத்தில் 24 மணிநேரமும் தங்கி பாய் விரித்துப் படுத்திருக்கும் நம் ஹீரோவோ, இணையத்திலே அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்கி எங்கு வந்தாலும் தன் கையிலுள்ள மொபைலை அமுக்கு அமுக்கியே உலக கிரிக்கெட்டைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்.

பில் கட்டுகிற அப்பா போல அந்த டப்பா மொபைலும் நசுங்கி அவதிப்பட்டுத் திணறும்..

இருக்கிற,நிக்கிற சிக்கலில் எல்லாம் நேரடியாக தில்லுடன் மோதி தான் கருத்தை சொன்னதில் எப்போதுமே கங்கோன் பின் நிற்றதில்லை.(இப்படியான கட்டுமஸ்தான உடல் இருந்து பின் என்ன பலன்?)
இவர் வழி தனி வழி..



                       எப்பிடி இருந்தவன்.... ;)


ஆனால் இப்போ கொள்கை மாறி விட்டார் என்று அண்மைக் காலத்தில் எழுந்த சில சல சலப்புக்களை எல்லாம் மறுதலித்து கங்கோன் சொன்ன வார்த்தைகள் சரித்திரப் பிரசித்தி வாய்ந்தவை
"உதவி கேட்டால் யாருக்கும் உயிரையும் கொடுப்பான் இந்த கிரீஸ்..
மறப்போம் மன்னிப்போம்"

ஒரே ஓவரில் இருபத்தெட்டு ஓட்டங்கள் கொடுத்த பிறகு ஸ்னூக்கர் பழகும் அனலிஸ்ட்


பிரபல பின்நூட்டவாதியாகவே வெற்றிப் பயணம் போய்க் கொண்டிருந்தவரை எப்படியாவது தடுத்து நிறுத்தி பதிவுப் பக்கம் அழைத்து வரவேண்டும் என இந்தக் கலாய்ப்புக்கு முயற்சி செய்கின்ற போதே, யாராலும் முடியாத அந்த விடயத்தை சாதித்தார் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சனத் ஜெயசூரிய.

T 20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சனத்தின் அபார ஆட்டம் பார்த்த கங்கோன் கொதித்தெழுந்து தன் மௌனம் கலைத்துப் பதிவிட்டார்..
அடுத்தடுத்து இரு பதிவு..

அம்மா பகவான் பக்தர்களுக்குப் பிறகு இப்போது சனத் ஜெயசூரிய ரசிகர்களும் கண்கோனைத் தேடித் திரிகிறார்களாம்.. அவர்களுக்கும் இவரது திருமுகம் காட்டவே இந்தப் பதிவு..


அண்மைக் காலமாகப் பதிவுகள் போடுவதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்தாலும் G Chat statusஇலேயே மினி பதிவுகள் இட்டு தம்பியர் அசத்தி இருக்கிறார்.. அவையெல்லாம் வெறும் மெசேஜ்களா இல்லை இல்லை.. தனியான தவிப்பும்,தாபமும் நிறைந்த காதல் காவியங்கள்..






போய்ச் சேர வேண்டியவரிடம் போய்ச் சேர்ந்ததா என்பதே இப்போது முக்கியமான கேள்வி..



                  நீங்க எல்லாம் ஏறினா எந்தக் கப்பல் தான் கவிழாது சாரே..


கங்கோனின் காவிய வரிகளில் தெரிந்தெடுக்கப்பட்டவை..

வைகாசி நிலவே வைகாசி நிலவே, மை பூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய் பூசி வைத்திருந்ததென்ன....


சமூகம், கட்டமைப்பு, விழுமியம் இவற்றை விட எனக்கு நான் முக்கியமானவன்.... என் தேடல் தொடங்குகிறது உறவகளுக்காய்...


கொக்கக் கோலா பிறவுணு கலருடா.... என் அக்காப் பொண்ணு வேற கலருடா....


நீ தோலைப் பார்த்து மாடு பிடிச்சா தொழிலுக்காகாது..


மனசு மட்டும் வெள்ளையாக இருந்தாலாகாதா?
நான் கண்ணீராலே கழுவிப் பார்த்தால் கறுப்பும் அழியாதா?


நான் நிராகரித்த நபர்களைத் தேடிய என் பயணம் நிராகரிக்கப்படுகையில் வரும் வலி நான் நிராகரிக்கப்படுவதை விடக் கொடியது.... #காதலேதும் இல்லை....


ஆண்டவா ஆண்டவா ஆறுபடை ஆண்டவா.... நாட்டுக்குள்ள எல்லாருமே நடிக்கிறாங்க ஆண்டவா....


நேசமில்லாத வாழ்வில் பாசமண்டாகுமா?


என் தாயின் மீது ஆணை, எடுத்த சபதம் முடிப்பேன்.............


கதறக் கதறக் காதலிப்பேன், உன்னைச் சிறுகச் சிறுக சிறைபிடிப்பேன்.... #அழகாயிருக்கிறது #பிடித்துப்போய்விட்டது


பூப்பூக்கும் தருணம், பூங்காற்றும் அறியாது... காதல் வரும் தருணம், கண்களுக்குத் தெரியாது....


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கையில...


அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம் எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்...




இந்த வண்டி போதுமா?(வண்டி என்பதன் இருபொருள் விளக்கம் கேட்கக் கவிஞர் சுபாங்கனை அணுகவும்)

யாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார் என எம் குழு சார்பாக வாழ்த்துகிறோம்..

இவர் பற்றி எழுதினால் எழுத்து கொட்டிகிட்டே இருக்கு.. ஆனால் எந்தவொரு பதிவுக்கும் ஒரு முடிவு வேண்டும் இலையா..
So.....
                                             THE END

அண்மைக்கால கங்கோன் சாதனைகள்..

நீந்திய காலம் பதிவேழுதாமலேயே பிரபல 'பதிவராக' இருப்பது..
அசைக்க முடியாத பின்னூட்ட வாதி..
மெகா சைஸ் பந்துபோல இருந்துகொண்டும் களத்தடுப்பில் பந்துகளை லபக் என்று கைப்படுத்தும் அழகு.
காதல் மன்னனாக நண்பர்ஸ் என்ற சதிகாரர்கள் முனையும்போதும் சமாளித்து 'நல்லவனாகவே' இருப்பது.
ஆர்ம்ஸ்ட்ரோங் என்றான போதும் கூட இதயம் மட்டும் சொப்ட் ஆகவே இருப்பது.
பந்துவீசி ஒரே ஓவரில் 28 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு போட்டியில் கவிழ்த்த அணியை
அடுத்த போட்டியில் 30 அடித்துக் காப்பாற்றியது.
தோற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவையே கும்மி வாதங்களில் ஜெயிக்க செய்யும் அழகில் ரிக்கி பொண்டிங்குக்கு அடுத்து தலைவராகக் கங்கோனை ஆஸ்திரேலியா தேர்வாளர் அழைத்திருப்பது.
தூங்கி வழிந்து வீட்டுக் கதிரையில் விழுந்தும் கதிரை இன்னும் உடையாமல் இருப்பது.
இன்னமும் என்றும் ஒரே அனலிஸ்ட் என்ற பெயருக்கு உண்மை அர்த்தம் கொடுப்பது.
இணையத்தின் சகல தேவைகளுக்கும் ஒரே சகலரோக நிவாரணியாக இருப்பது.

அதான் சொன்னேனே பந்துவீச மட்டும் கூப்பிடாதேங்கன்னு..
சின்னப் பையனிடமே பந்தைப் பறிகொடுத்த உண்மையான பச்சிளம் பாலகனப்பா


இது ஒன்று பட்ட ஒரு கூட்டுக் கலாய்த்தல் படைப்பு..

இயக்கம் - A .R .V .லோஷன்


உதவி இயக்கம் - பவன் ;) - எரியாத சுவடிகள்..

ஆலோசனைக் குழு - ஒன்றா ரெண்டா.. ;)

பவனின் வரிகளில் எங்கள் கங்கோன் 

பி.கு - தம்பி கங்கோன் நாளை தர இருக்கும் பார்ட்டியை மறக்காதீர் ;)

24 comments:

Subankan said...

நாளை இவர் தர இருக்கும் பார்ட்டியை மனதிற் கொண்டும், இன்று இவர் வாங்கித்தந்த ஃபலூடாவை மறக்காமலும் இருப்பதால் இப்போதைக்கு வாழ்த்து மட்டும்தான்.

வாழ்த்துக்கள் பீப்பீ

அப்பாலிக்கா யாராச்சும் ப்ரீயா இருந்தாங்கன்னா கும்மிக்கலாம்

SShathiesh-சதீஷ். said...

முழு மதி போன்ற கோபியை கறுப்பு என சொன்ன லோஷன் தாத்தா ஒழிக. வாழ்த்துக்கள் தங்கமே.

ம.தி.சுதா said...

கான்கோனுக்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?

ம.தி.சுதா said...
This comment has been removed by the author.
ம.தி.சுதா said...

கோபி உங்க படம் ஒன்றை போடுவோமென்றால் லோசண்ணாவின் கருத்துப் பெட்டி சில html ஐ எடுக்குதில்லையே....

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//அப்பப்பா என்னுடன் நீளத்தில் போட்டிக்கு வருவார் போல //

ம்ம்ம்... என்ன லோஷண்ணா இது. இதுவரைக்கும் நீங்களும் கங்கோனும் உருவத்தில்தான் ஒற்றுமையானவர்கள் என்று நினைத்திருந்தேன்.

Unknown said...

nice! :-)

Unknown said...

கன்கொன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

முதலில் அனலிஸ்ட் சிங்கத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஒரு பார்ட்டி கேட்டு லோஷன் அண்ணாஇ என்ன கொடும இது!!!3 முறை தொலைபேசியில் கதைத்திருக்கிறேன்.நேரில் பார்க்க வேணும் என்று ஒரு ஆசை இருக்கிறது!!!.......

வாழ்த்துக்கள்!!!

Bavan said...

அட அட அட அட... கன்கொனை எனது Batting coach என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்..:P

கன்கொனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..:D

ம்.. ஸ்டார்ட் த மியூசிக்...:P

பீப்பீ ரசிகர் பேரவை said...

தங்கத்தலைவரின் புதிய நாமம் பீப்பீ பற்றி எதுவும் சொல்லாமையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

என்.கே.அஷோக்பரன் said...

கலக்குறீங்க லோஷன் அண்ணா!
கங்கோன் - நல்ல நண்பன், நல்ல மனிதன்!

Unknown said...

ஹஹா நல்லா கலாய்க்கிறான்கப்பா ..

யோ வொய்ஸ் (யோகா) said...

நம்ம சிங்கத்தின் சாதனைகள் சிலவற்றை மாத்திரம் பட்டியலிட்டு, அவரை ஒரு குறுகிய சாதனையாளராக மாத்திரம் வெளிக்காட்டிய லோஷனுக்கு கருப்பு கொடி காட்ட கண்டியில் கூட்டம் சேர்க்கிறேன்.

மழைக்காலத்தில் போராட்டம் நடத்த முடியாதென்பதால், மழைக்காலம் முடிந்த பின்னர் கருப்பு கொடி போராட்டத்தை செய்யவுள்ளோம். அதுவரை எமது எதிர்ப்புகளை லோசனுக்கு தெரிவிக்க ஐ.நா.சபைக்கு கூட்டாக தந்தியடிப்போம்

anuthinan said...

வாழ்த்துக்கள் கோபி அண்ணா!!

அத்துடன் பதிவை இல்லை இல்லை கும்மியை பதிவு ஆக்கிய லோசன் அண்ணாவுக்கும், ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்

Jana said...

முதலில் கோபிக்கு எனது பிறந்ததின வாழ்துக்கள் உரித்தாகட்டும்.
எப்போதும் புன்னகைக்கும்முகம் ஒருசிலரக்கே கடவுள் கொடுத்தவரம் என்று நினைக்கின்றேன் லோஷன்.

அது கோபிக்கும் கிடைத்துள்ளது. எந்த உறுதிபடைத்த மனிதரையும் வளைத்துப்போடும் வளையோடான அந்த புன்னகை அவருக்கு தெர்டந்தும் இருக்க பிரார்த்தனைகள்.
அதேபோல இன்று இடம்பெறும் பார்ட்டியும் சிறக்க வாழ்துக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களை உங்களுக்கு விருப்பமான ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன், விரும்பினால் தொடரவும்.

கமல் படங்களில் பிடித்த 10 படங்கள்
http://yovoicee.blogspot.com/2010/12/10.html

செழியன் said...

//யாழ்ப்பாணம் நல்லூர் வீதி ஆச்சியின் ஓசிக் கடலையும், மணியம் காரச் சுண்டலும்,ஹம்ப்டன் லேன் மரவள்ளிக் கிழங்கு சிப்சும், சிந்து கபே தோசையும், நல பாகம் பிட்டும் அப்பமும் இருக்கும் வரை கங்கோன் எனப்படும் கருப்பு நமீதாக் கிரீஸ் இன்னும் பல சாதனைகள் நிகழ்த்தி இலங்கைப் பதிவுலகில் என்ன உலகப் பதிவுலகிலேயே ஒரு தனி முத்திரை பதித்து தான் 'கறுப்பு சரிதத்தை' எழுதுவார்//

கன்கொன் || Kangon said...

நன்றி லோஷன் அண்ணா.

// சில விஷயங்களில் தன்னடக்கத்துடன் பின்னிர்பதை விடுத்து,தயக்கங்கள் தாண்டி முன்னுக்கு வா.. //

ம்.. புரிகிறது.
அறிவுரையைப்படி நடக்கிறேன்.

வாழ்த்துத் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஷஹன்ஷா said...

அருமையான பிறந்த நாள் பரிசு....
வாழ்த்துகள் கங்கோன் அண்ணா....மன்னிக்கவும் பிந்தியதற்கு.....(தனிப்பட்ட காரணங்கள்&விடாத அடை மழை-சிக்னல் பிரச்சனை)


லோஷன் அண்ணா...படங்கள் மிக அருமை...அதிலும்

ஃஃஃஃஇந்தப் பதிவின் நாயகன் ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினி, இல்லாவிட்டால் சீயான் விக்ரம் ரக பிரபலம் என்பதனால்.. ;)ஃஃஃஃஎன்று சொல்லீட்டு சுறா படத்தில தல தளபதியாக மாறி நடித்த படத்தை போட்டீங்க..............கலக்கல்...

ஷஹன்ஷா said...

loshan anna....:-இன்னும் 5 பதிவுகள் 500ற்கு.....விரைவில் எதிர்பார்க்கின்றோம்....

வந்தியத்தேவன் said...

பின்னவன் பெற்ற செல்வன் அடியனேன் பெற்றதன்றோ. கோபி என் சிஷ்யன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

KUMS said...

ச‌கோத‌ர‌ர் க‌ங்கொனுக்கு இனிய‌ பிந்திய‌ பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள்.
எல்லா வ‌ள‌ங்களும் பெற்று சிற‌ப்பாக‌ வாழ‌ வாழ்த்துகிறேன்.

//இன்னமும் என்றும் ஒரே அனலிஸ்ட் என்ற பெயருக்கு உண்மை அர்த்தம் கொடுப்பது.
இணையத்தின் சகல தேவைகளுக்கும் ஒரே சகலரோக நிவாரணியாக இருப்பது.//

100% உண்மை

ஷஹன்ஷா said...

ஃஃஃஃஃவந்தியத்தேவன் said...
பின்னவன் பெற்ற செல்வன் அடியனேன் பெற்றதன்றோ. கோபி என் சிஷ்யன் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்ஃஃஃஃஃ
அக மகிழும் விஸ்வாமித்திரர்.....

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner