December 15, 2010

இலங்கை கிரிக்கெட் தேர்வாளராக நான் !!!

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு கிரிக்கெட் பதிவோடு..

இலங்கையின் மழை, இந்தியாவின் முக்கிய வீரர்கள் நியூ சீலந்துக்கு எதிராக விளையாடாமை, ஆஸ்திரேலிய வீரர்கள் ஒழுங்காக விளையாடாமை என்று பல விஷயங்களால் கிரிக்கெட் கொஞ்சம் அலுத்திருன்தது.

நாளை மீண்டும் பரபர கிரிக்கெட் ஆரம்பிக்கிறதே.. அதான் மனதில் இருப்பவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள..

இலங்கை

2011  உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையின் முப்பது வீரர்கள் கொண்ட முன்னோடி வட்ட கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட, அண்மைக் காலமாக சிறப்பாக விளையாடிவரும், இளம் வீரர்களுடன் வருவார்களா இல்லையா? என்ற எதிர்பார்ப்பையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திய இருவரும் பெயரிடப்பட்டுள்ளார்கள்.
அந்த இருவர் !!

இறுதியாக இரு வருடங்களுக்கு முன் விளையாடிய சமிந்த வாஸ் (வயது 36), அரசியலில் இறங்கியுள்ள 41 வயதான முன்னாள் சூப்பர் ஸ்டார் சனத் ஜெயசூரிய ஆகியோரே அந்த இருவர்.

வாஸ் மீண்டும் அணியில் இணையப் போகிறார்;மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராக ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் விளையாடப் போகிறார் என்றும் நம்பகமான விஷயங்கள் வெளிவந்திருந்தன.
ஆனால் சனத் ஜெயசூரிய மீண்டும் வருவார் என்பதற்கான நம்பகமான வாய்ப்புக்கள் இருக்கவில்லை.அரசியல் அழுத்தம் காரணமாகவே இவரது தெரிவு இடம்பெற்றுள்ளது என்பது தெளிவு.

இரண்டு இளைய வீரர்களுக்கு இந்த இடங்களைத் தேர்வாளர்கள் வழங்க முடியாமல் செய்த சூழ்நிலை எது என்று ஓரளவுக்கு அநேகருக்குத் தெரியும்.

சனத் என்ன form இல் எப்படி இருக்கிறார் என்று அவர் பயிற்சி பெரும் மைதானத்தில் விளையாடும் கழக அணி வீரர் சிங்களத்தில் சொன்னது "கஹனவா.. ஹையேன் என போலேவலட்ட ஐயா நிகம்ம மாட்டுவேனவா நே" (அடிக்கிறார்.. வேகமாக வரும் பந்துகளுக்கு அண்ணர் மாட்டுப் படுறாரே)

வாசின் அனுபவம் வேண்டுமானால் உப கண்ட ஆடுகளங்களில் உபயோகப்படலாம். இங்கிலாந்தில் பிராந்திய போட்டிகளிலும் வாஸ் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனால் வேகம்? இப்போது வாஸ் வீசும் பந்துகளின் வேகத்தை விட ரண்டீவின் பந்துகள் வேகமாக இருக்கலாம்.

சனத்தின் பொற்காலம் கடந்துவிட்டது.அவருக்குப் பந்துவீச்சாளர்கள் பயந்த காலம் கடந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

அறிவிக்கப்பட்டுள்ள முப்பது பேரில் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை உலகக் கிண்ணம் வென்ற வேளையில்(1996) அணியில் இருந்த மூவர் உள்ளார்கள்.முரளி,வாஸ்,சனத்.
தேர்வாளர் குழுத் தலைவர் அரவிந்தவும் இவர்கள் கூட விளையாடியவரே.

நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வாஸ்,சனத்தின் தெரிவு பற்றி அரவிந்த பிடி கொடுக்காமலேயே பேசி இருந்தார்.
திறமை,பெறுபேறுகளுடன் அனுபவமும் சேர்ந்தால் ஒரு நல்ல அணியைத் தெரிவு செய்ய முடியும் என்பதே அவரது கருத்தின் சாராம்சம்.

நான் என்ன செய்வது?
நான் மட்டும்?

திறமையாக இளைய வீரர்களைத் தேடி இணைத்து செல்லும் அணியினை இவ்விரு 'முன்னாள்' வீரர்களின் சேர்க்கை பின்னோக்கி தள்ளிவிடும் என்பது ஒரு பக்கம், இந்த சிரேஷ்ட சாதனையாளர்கள் முப்பது பேரில் பெயரிடப்பட்டு பின்னர் கழற்றிவிடப்படுவதானது அவர்களின் கௌரவத்துக்கு இழுக்கு என்ற விஷயமும் இருக்கிறது.  

ஜனவரியில் தேர்வு செய்யப்படவுள்ள பதினைந்து வீரர்களுக்கான என் சிபாரிசுகள் -

குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, T.M.டில்ஷான், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், சாமர கபுகெதர, சாமர சில்வா,எஞ்சேலோ மத்தியூஸ்,திசர பெரேரா, முத்தையா முரளிதரன்,சுராஜ் ரண்டீவ், அஜந்தா மென்டிஸ், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, டில்ஹார பெர்னாண்டோ.

தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்களோ?

வாஸ் வந்தால் குலா வெளியே? சனத் வரவேண்டுமாக இருந்தால் தரங்க /சாமர சில்வா வெளியே?

மீண்டும் மேற்கிந்தியத் தீவுகள் விளையாட வந்து, மழை பெய்யாமல் இருந்தால் விளையாடும் form மூலமாவது பார்க்கலாம்.. ம்ம்ம்ம்  

உலகக் கிண்ணத்துக்காக இலங்கையில் தயார் செய்யப்பட்டுள்ள மைதானங்களின் தன்மைகள் பற்றி இலங்கை அணிக்கே இன்னும் தெரியாதது மற்றுமொரு சிக்கல்..
Home Advantage???
அப்பிடின்னா என்னாங்கோ?

#*# இன்னும் ஒரு அல்ல அல்ல இரு விரிவான கிரிக்கெட் அலசல்கள் இன்று இரவுக்குள் வரும் ..

22 comments:

கன்கொன் || Kangon said...

தலைப்பைப் பார்த்ததும் உடனே நினைத்தது இந்த விசயம் டீ சில்வாக்குத் தெரியுமா? :P

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்வ்...

பதிவு இந்தளவு பெரிதாய் இருக்குமெண்டு நான் நினைக்கவே இல்ல. :P

சனத் விடயம் அழுத்தத்தால் என்பது தெளிவு.
வாஸின் form இன் அடிப்படையில் வாஸ் deserves என்றே சொல்லலாம்.
ஆனால் பதினொருவருக்குள் வரமுடியுமா என்று தெரியவில்லை.

வேகம் பிரச்சினையில்லை என்று நினைக்கிறேன்.
அண்மைக்காலமாக swing பந்துவீச்சாளர்களிடம் தற்போதைய வீரர்கள் அதிகமாகத் திண்டாடுவதைப் பார்த்திருக்கிறேன்.
என்றாலும் வாஸ் பதினொருவர் அணிக்குள் தெரிவுசெய்யப்பட் வாய்ப்புகள் குறைவு என்பதால் பதினைந்துபேர் அணிக்குள் வேண்டாம். :-(

மைதானங்கள்: ஆமாம். ஆமாம்.

ஏனைய அலசல்களுக்காகக் காத்திருக்கிறேன் றேன் றேன். ;-)

Subankan said...

தலைப்பைப் பார்த்த உடனே பின்னூட்டியது
வாழ்த்துகள் அண்ணா :)

கார்த்தி said...

அது சரி சாமர சில்வாவை ஏன் உள்ளுக்கு போட்டீர்கள்?

Unknown said...

I hope vass will perform well but sanath aiya ????????

Bavan said...

//குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, T.M.டில்ஷான், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால், சாமர கபுகெதர, சாமர சில்வா,எஞ்சேலோ மத்தியூஸ்,திசர பெரேரா, முத்தையா முரளிதரன்,சுராஜ் ரண்டீவ், அஜந்தா மென்டிஸ், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, டில்ஹார பெர்னாண்டோ.//

அஜந்த மென்டிஸ் உங்கள் தேர்வின் படி 11வர் அணிக்குள் இல்லைத்தானே..:P

சமிந்தவாஸ் - 11பேர் அணிக்குள் வரவேண்டும் என்பது எனது ஆசை..:)

சனத் - No comments..:(

மற்றைய பதிவுக்கு வெயிட்டிங்..:D

ம.தி.சுதா said...

அண்ணா சனத் விசயத்தில் நானும் தங்கள் பக்கம் தான்... இப்போது அவருக்கு தனது போர்ம்மை தானே கணிப்பிடத் தெரியாமல் இருக்கிறார் (20-20 உலகக்கிண்ணம்...)

ம.தி.சுதா said...

இரவு வரை காத்திருக்கிறேன்.... இலங்கை அணியில் எற்பட வேண்டிய பெரிய மாற்றமென்றால் எனது வழமையான பதில் தான் (தலைமை..)

கன்கொன் || Kangon said...

// அஜந்த மென்டிஸ் உங்கள் தேர்வின் படி 11வர் அணிக்குள் இல்லைத்தானே..:P //

அஜந்த மென்டிஸ் பதினொருவருக்குள் விளையாட வேண்டும்.
He's a good limited overs bowler.
இல்லாவிட்டால் தேர்வாளருக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ;-)

kaialavuman said...

கபுகதெரா-வை விட கந்தம்பி நல்ல choice என்று தோன்றுகிறது. கபுகதெரா கிடைத்த வாய்ப்புகளை நிறைய் முறை தவர விட்டுள்ளார். ஆனால், கந்தம்பி அவற்றில் நன்றாக விளையாடியுள்ளார். அனுபவத்தை பார்த்தால் கபுகதெரா தேறுவார்.

kaialavuman said...

கபுகதெரா-வை விட கந்தம்பி நல்ல choice என்று தோன்றுகிறது. கபுகதெரா கிடைத்த வாய்ப்புகளை நிறைய் முறை தவர விட்டுள்ளார். ஆனால், கந்தம்பி அவற்றில் நன்றாக விளையாடியுள்ளார். அனுபவத்தை பார்த்தால் கபுகதெரா தேறுவார்.

kaialavuman said...

சமரவீரா என்ற நின்று (அதே சமயம் ஒரு நீண்ட innings) ஆடக்கூடிய ஆட்டக்காரரை ஏன் யாரும் நினைத்துக் கூட பார்க்க மாட்டீர்கள் என்றுத் தெரியவில்லை. மஹீலா, சங்கா தவிர நிலையாக ஆடும் வீரர் அவரைத் தவிர வேறு யாரும் தெரியவில்லை.

Ofcourse, நான் இந்தியாவைச் சேர்ந்தவன் என்பதால் அங்கு local நிலைமைத் தெரியாது.

மற்றபடி நல்ல அலசல்.

Unknown said...

அன்பிற்கினிய நண்பரே...,

" சனத் ஜெயசூரிய" - ONCE UPON A TIME .......ம்ம்ம்ம்ம்ம்.....

அனேகமாக அனைத்து துறைகளில் உள்ள பிரபலங்கள் சந்திக்கும் பிரச்சனை இதுதான். கால மாற்றங்களுக்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக்கொள்பவர்கள் மட்டுமே வெற்றிபெற முடியும்.

உதாரணமாக இந்தி சினிமாவுக்கு தன் ஓய்வை அறிவித்துவிட்டு ரீ என்ட்ரியாக இப்போதும் கலக்கும் அமிதாப் பச்சன்.

தமிழ் சினிமாவில் நம்மை குதறி எடுக்கும் பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ்,SAC மற்றும் மிக முக்கியமாக விஜயT ராஜேந்தர் ...., போன்றவர்கள் சனத் ஜெயசூரிய உதாரணங்கள்.

இலங்கை அணியில் இந்த இரண்டு சீனியர்களும் தேவை இல்லை. - பாவம் சங்கா.

சனத் மீண்டும் தேர்வாகி இருப்பதற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு வார்னே மீண்டும் திரும்ப வேண்டும் என்பதற்கும் சம்பந்தம் உண்டா..?

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன்.ச.ரமேஷ்.

ஷஹன்ஷா said...

அண்ணா தங்கள் அணித்தெரிவு சூப்பர்....
வாஸின்(டம்) வேகம் பெரிதாக தேவையில்லை என்று நான் நினைக்கின்றேன்....அண்மையில் டெஸ்ட் போட்டியில் குலா வின் swing ல் மே.இ வீரகள் தடுமாறினரே....

சனத் இனி தேவையில்லை...அவரின் form ????
அவரை விட தரங்க மத்தியுஸ் கபுகெதர ஆகியோரின் fome நம்பிக்கை தருகிறது....

அடுத்து மழை....
அண்ணர் குழப்பாட்டில் world cup கு சிறந்த அணியை பார்க்கலாம்....

ஷஹன்ஷா said...

///Home Advantage???////
ஓ...வீடு நல்லா இருக்கணுமோ....???he he he

வந்தியத்தேவன் said...

நல்லதொரு அலசல். மான்புமிகு பாஉ சனத்தை நிறுத்துவது சாலச் சிறந்தது. புதியவர்களுக்கு இடம் கொடுக்கலாம் இளம் கன்றுகள் பயமறியாது,

அங்கிள் நீங்கள் தேர்வாளர் என்றால் என்னை தெரிவு செய்வீர்கள்தானே? #சந்தேகம்

Bavan said...

//வந்தியத்தேவன் said...

அங்கிள் நீங்கள் தேர்வாளர் என்றால் என்னை தெரிவு செய்வீர்கள்தானே? #சந்தேகம்//

நாங்கள் இங்கிலாந்து, அவுஸ்ரேலியாவில, தென்னாபிரிக்கா, நியூசிலாந்தில முயற்சிப்பம், இலங்கையில தேர்வாளர்கள் சரியில்லை..:P

Unknown said...

கன்கொன்'ஐ ஆதரிக்கிறேன் பதிவின் நீட்டத்துக்கு..
பெரிசாக எதிர்பார்த்தேன்..
ஆனால் இரு பதிவுகள் வருகின்றமையால் பொறுமையாக..
// போது வாஸ் வீசும் பந்துகளின் வேகத்தை விட ரண்டீவின் பந்துகள் வேகமாக இருக்கலாம்//
அவ்வாறு பந்து வீசுவாரானால் எப்படி இங்கிலாந்தில்?அதுவும் இலங்கையர்??

யோ வொய்ஸ் (யோகா) said...

ஆமாம் நீங்கள் எப்போது தேர்வுகுழு தலைவரானீங்க?

Anonymous said...

சனத், வாஸ் நிச்சயமா அணியில் இடம் பெற வேண்டும்.....

அஹமட் சுஹைல் said...

வாஸும் சனத்தும் வருவதாயிருந்தால்

டில்ஹார - வாஸ்
கபுகெதர/சாமர - சனத்
அஜந்த மெண்டிஸுக்குப் பதிலாக ஜீவன் மெண்டிஸ் வந்தால சிறப்பாக இருக்கும்.

இது தொடர்பான எனது அலசல்.

http://aiasuhail.blogspot.com/2010/12/blog-post_7721.html

உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்.

Unknown said...

I guess Dilhara could br repaced by vaas especially in subcontinent slow tracks.........

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner