December 23, 2010

மன் மதன் அம்பு

மூன்று பேருக்கிடையிலான காதல்,பத்துக்குட்பட்ட பாத்திரங்களின் பங்குபற்றுதலில் நிறையக் கலகல கொஞ்சம் ஆழமான காதல்,கொஞ்சம் அழுத்தமான செண்டிமெண்டோடு தொய்யாமல் துரிதமாகப் பயணிக்கும் அருமையாகக் கோர்க்கப்பட்ட அழகான படம்.

மன் மதன் அம்பு என்று மூவரையும் தனித்தனியாகப் பிரித்து ஏற்கெனவே விளம்பரங்கள் காட்டிவிட்டாலும் கதை என்ன என சுவாரஸ்யமாகத் திரைப்படம் மூலமாகவே விவரிப்பது கமலின் திரைக்கதையும் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கமும் தான்.

த்ரிஷா நடிகை, மாதவன் அவரின் காதலன்,பணக்காரர், கமல் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற மேஜர், சங்கீதா விவாகரத்தானவர், இரு குழந்தைகளின் தாயார்.
 இந்த நான்கு முக்கிய பாத்திரங்கள்+சங்கீதாவின் குறும்புக்கார மகன், மலையாள இயக்குனர் குஞ்சு குருப்(என்ன பெயரைய்யா இது), ரமேஷ் அரவிந்த், ஊர்வசி, உஷா உதூப் என்று ஒரு சில பாத்திரங்களோடு சுவாரசியமாகப் பயணிக்கிறது கதை.

மற்றவர்கள் தொடத் தயங்கும் சில விஷயங்களை துணிச்சலாக எடுத்து லாவகமாகக் கதை சொல்வதில் கமலுக்கு நிகர் அவரே.. மீண்டும் மன்மதன் அம்புவில் நிரூபித்துள்ளார்.
நடிகையின் காதலும்,காதலின் இடையே புதிய காதலும்..

ஆள் மாறாட்ட வித்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமே என்றாலும்,இதில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பது நியதிஎனினும் சொல்லும் விதத்தில் சொதப்பாமல்,சுவையாக சொல்வதில் ஜெயிக்க வேண்டுமே.. அதில் கமலும்,இயக்குனர் ரவிக்குமாரும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்கள்.

இப்போதே சொல்லிவைக்கிறேன்..

கமலுக்கு அடுத்தவொரு பிரம்மாண்ட வெற்றிப்படம்.
உதயநிதி ஸ்டாலின் போட்டதற்குப் பல மடங்கு எடுத்துவிடுவார்.
அவரது செழுமையின் உறுதி கண்களுக்கு ஐரோப்பிய சுற்றுலா இலவசமாகப் போய்வந்த குளிர்ச்சியைக் கொடுக்கிறது.

சூர்யா கௌரவ நடிகராக வந்து ஒரு அசத்தல் ஆட்டம்+அலட்டல் இல்லாத அறிமுகம் காட்டிவிட்டு செல்கிறார். அதே காட்சிகளில் கே.எஸ்.ஆரும் தனது சென்டிமென்டான தலைகாட்டலைக் காட்டிவிட்டு திருப்தியாகிறார்.

படத்தின் 90 சதவீதமும் நடப்பது ஐரோப்பிய நாடுகளிலும்,நகர்கின்ற கப்பலிலும் தான்.
ஆனாலும் அந்நியத்தனம் இல்லாமல் அழகு தமிழை ரசிக்கக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் கமல்.

கமலின் வயது படத்துக்குப் பெரிய ப்ளஸ்.பாத்திரத்தில் கச்சிதமாகக் கமல் ஒட்டவில்லை என்றால் தானே அதிசயம். முதல் காட்சியில் அதிரடி அறிமுகம் முதலே ரசிக்கவைக்கிறார்.

கதை,திரைக்கதை,வசனம் - கமல்..
கமல் படமே தான் என்றாலும் த்ரிஷாவை சுற்றித் தான் கதை.
ஆனாலும் த்ரிஷாவை கனமான பாத்திரமாகப் பார்க்கும் முதல் படம் எனும் வகையில் கமல் அவரிலும் தெரிகிறார்.
எந்தவொரு காட்சியும் அனாவசியம் என்று சொல்ல முடியாமல் தொய்வில்லாமல் கதை செல்கிறது.

இடையிடையே சினிமா நடிகர்களை, குறிப்பாக நடிகைகளை சமூகம் பார்க்கும் விஷமா,விமர்சனப் பார்வையை மாதவன் பேசும் வசனங்கள் மூலமாகக் கொட்ட வைக்கிறார்.

அறிவுஜீவித்தனமான தமிழ்+ஆங்கில வசனங்களும்,புத்திசாலித்தனமான தர்க்கங்களும், கிரேசி மோகன் பாணியிலான நகைச்சுவை சரவெடிகளும் கலந்துகட்டி ஒரு அருமையான வசன விருந்தே படைத்திருக்கிறார்.(உலக நாயகனின் வழமையான நண்பர் குழாம் கதை விவாதத்தில் இடம்பெற்றிருந்தாக அறிந்தேன்)

நேர்மையானவங்களுக்கு திமிர் என்பது ஒரு கேடயம்.
இது ஒரு சாம்பிள் வசனம்.. வசனக் கூர்மைகளை ரசிக்கவென மீண்டும் இரு தடவையாவது பார்க்கும் திட்டம்.

மிக முக்கியமான விடயம் அண்மைக்காலத்தில் சர்ச்சை கிளப்பிய கமல்-த்ரிஷா கவிதை இன்று நான் பார்த்த இலங்கையில் முதல் காட்சியில் இடம் பெற்றிருந்தது.
(இலங்கையின் தணிக்கைக் குழுவிலும் நேற்று இது பற்றி விவாதங்கள் இடம்பெற்றதாக அறிந்தேன். இனித் தூக்கப்படுமா தெரியவில்லை)



பாடல்கள் படத்தின் ஓட்டத்தோடேயே கதை சொல்லிகளாகப் பயணிப்பதும் நல்ல யுக்தி..
அதிலும் 'நீலவானம்' நான் முன்பு ரசனைப் பதிவில் சொன்னது போல, முன்னைய காதலைக் கமல் Flashbackஆக சொல்வதாக அமைத்துள்ளார்கள்.
ஆனால் காட்சிகள் பின்னோக்கி செல்வதாக அமைத்திருப்பது புதுமை.. காட்சிகள் Rewindஇல் செல்கையில் வாயசைப்பு மட்டும் சரியாக அமைவதும் புதிய பாராட்டக்கூடிய முயற்சி. வாயசைப்பில் சிரமம் உண்டு என்பதால் இடை நடுவே சொற்கள் தடுமாறி,இடம் மாறுவதைப் பொறுக்கலாம்.

பாடல் முடிகையில் அரங்கம் நெகிழ்ந்து சில வினாடிகள் அமைதியாகி,பின்னர் கரகோஷித்தது இங்கே ஒரு புதுமை.

தகிடுதத்தம் காட்சியோடு பொருந்தி ஒவ்வொரு வரிகளுக்கும் அர்த்தம் கொடுத்தது. நடன அசைவுகள்,பாடல் காட்சியில் வரும் வெள்ளைக்காரரும் ஆடுவது ரசனை.

கமல்+த்ரிஷா கவிதை முடியும்வரை ரசித்துக் கரகோஷம் கொடுத்த ஒரு ரசனை மிக ரசிகர்களோடு இருந்து பார்த்த பெருமை.. (நம் பதிவர்கள் சுபாங்கன்,பவன் ஆகியோரும்,சில நம் பதிவுலக ரசிகர்களும் வந்திருந்தது இடைவேளையின் பின்னரே தெரிந்தது)

கமலின் முகபாவ மாறுதல்கள் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அற்புதம்.எத்தனை Close up காட்சிகள்.. கண்கள் பேசுகின்ற விதங்கள் லட்சக்கணக்கான வார்த்தைகள் சொல்லாத விடயங்கள்.
அத்தனை காட்சிகளிலும் கண்கள்,உதடுகளின் அசைவுகளைக் கவனித்தாலே சிலைகளும் நடிக்கக் கற்றுக்கொண்டு விடும்.

அதிலும் த்ரிஷாவுக்குத் தன் கடந்தகாலம் பற்றி சொல்லி, த்ரிஷா மன்னிப்புக் கேட்கும் இடத்தில் சோகம்+விரக்தியுடன் உதடு காய்வது போல ஒரு அசைவு கொடுப்பார்.. Class !!!

கமலுடன் சேர்ந்த ராசி த்ரிஷாவின் நடிப்பில் அப்படியொரு பக்குவம். முதல் தடவை கலக்கி இருக்கிறார் என நினைக்கிறேன். நடிகை என்பதனால் கொஞ்சம் கவர்ச்சியாகவே வலம் வருகிறார்.அவரது தொடை, மார்பு Tattoo தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. வாலிப சமூகம் சார்பாக.

தமிழ் நடிகைகளின் தமிழ் பற்றிக் கமல் கிண்டல் பேசும் இடங்களில், முகத்துக்குப் பூச்சையும் பேச்சில் ஆங்கிலத்தையும் பூசிவிடவேண்டும் என்று சொல்லும் இடத்தில் அப்படியொரு முகபாவம்.
மாதவனுடன் ஆரம்பக் காட்சிகளிலும் கமலுடன் இடையில் வரும் காட்சிகளிலும் ஜொலிக்கிறார்.

மாதவன் - நிறைய வித்தியாசம் காட்டி நடிக்க வசதியான பாத்திரம்.சந்தேகம்,உருகுதல்,காதல்,கோபம்,அப்பாவித்தனம் என்று கலக்குகிறார். கொஞ்சம் அன்பே சிவம் மாதவன் எட்டிப் பார்த்தாலும்,மாதவன் த்ரிஷாவுடன் கோபப்படும் இடங்களில் காரம்.

கமல்- மாதவன் தொலைபேசி உரையாடல்கள், தண்ணி அடித்து உளறும் காட்சிகள்,கடைசி நிமிடங்கள் - சிரிப்பு சரவெடிகள்.ஒவ்வொரு சொல்லையும் அவதானித்து ரசிக்கவேண்டிய இடங்கள்.

சங்கீதா குண்டாக,காமெடியாகக் கலக்குகிறார். பாத்திரத்துக்குக் கனகச்சிதம்.சில காட்சிகளில் த்ரிஷாவையும் விஞ்சி வெளுத்துவாங்குகிறார்.
இவரின் மகனாக வரும் அந்தக் குட்டிப் பையன் படு சுட்டி.. பிரமாதப்படுத்துகிறான்.கண்ணாடியும் அவனும்,அவனின் கூர்மையான அவதானிப்பும் பல திருப்பங்களைத் தருகின்றன.

வெற்றிப் படத் தயாரிப்பாளராக வரும் குஞ்சன் (இவரது உண்மைப் பெயரே இதானாம்) வரும் நேரமெல்லாம் சிரிப்பு வெடி தான்.
ரமேஷ் அரவிந்த் கமலின் நண்பராக,ஊர்வசி அவர் மனைவியாக.. கொஞ்சம் நெகிழ்ச்சிக்காக.
புற்றுநோய் நோயாளியாக இருந்தும் கமலுடன் ரமேஷ் அரவிந்த் பேசும் கட்சிகள் நெகிழ்ச்சியான நகைச்சுவைகள்.. கொஞ்சம் யதார்த்தமான கவிதைகள் எனவும் சொல்லலாம்.
 கமலின் வழமையான நடிகர் பட்டாளத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் இவர்கள் இருவருமே..


 கமலின் முதல் மனைவியாக கொஞ்ச நேரமே வந்தாலும் கண்களையும், மனதையும் அள்ளி செல்கிறார் அழகான ஜூலியட். தொடர்ந்தும் தமிழ்ப்படங்கள் நடிக்கலாமே அம்மணி?

யாழ்ப்பாணத் தமிழ் பேசிக்கொண்டு வரும் பாத்திரம் சுவாரஸ்யம். அவரது பாத்திரம் இயல்பாகவே இருக்கிறது.புலம்பெயர் இலங்கைத் தமிழரைக் கொஞ்சம் ஈர்ப்பதற்கான ஒரு கொக்கி? அவரது மனைவி வரும் ஒரே காட்சியும் ரசனை.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் ஒரு (ஒரேயொரு) frameஇல் வந்துபோகிறார். எது என்று கண்டுபிடிப்போருக்கு அவரே பரிசளிக்கட்டும்.


கதையோட்டத்தில் கண்ணுக்கு விருந்தான அழகான இடங்களையெல்லாம்,உல்லாசக் கப்பலின் அழகான பகுதிகளை இன்னும் அழகாகக் காட்டும் ஒளிப்பதிவாளர் புதியவராம்.. வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே கவர்ந்திருக்கிறார் மனுஷ நந்தன். இவர் பிரபல எழுத்தாளர் ஞானியின் மகன் என்பது கூடுதல் தகவல்.

பிரான்ஸ்,ஸ்பெயின், இத்தாலி ஆகிய இடங்களின் அழகு அப்படியே படத்துக்குப் பொலிவு கொடுக்கிறது.

எடிட்டரும் புதியவராம் ஷான் முஹம்மத்.மேருகூட்டியே இருக்கிறார்.

பாடல்களில் கலக்கிய DSP படத்தின் பின்னணி இசையிலும் பின்னி எடுத்துப் பிரகாசித்துள்ளார். சென்டிமென்ட் காட்சிகளில் வயலினும் சேர்ந்து உருக்குகிறது.ஆனால் சில இடங்களில் வசனங்களை இசை விழுங்குவதாக நான் உணர்ந்தேன்.

ஆரம்பக் காட்சிகளில் வரும் பாடல் வரிகளும் இசையும் மனதைத் தொட்டது.. ஆனால் அது இறுவட்டில் வரவில்லை.தேடிப் பார்க்கவேண்டும்.

எனக்குப் படம் பார்க்கையில் சலிப்பையும் எரிச்சலையும் தந்த ஒரே விடயம் கீழே ஆங்கிலத்தில் இடப்பட்ட உப தலைப்புக்கள். பல இடங்களில் கவனத்தை சிதறடித்துவிட்டது.இதற்காகவும் படத்தை மீண்டும் பார்க்கவேண்டும்.

இடைவேளை வரும் இடம் நெஞ்சைத் தொட்டது. அதிலும் த்ரிஷா - கமலின் புதிய வாழ்க்கை ஆரம்பிக்கக் காரணமான சம்பவம் என்பவற்றை ஒரே புள்ளியில் இணைப்பது திரைக்கதையில் உள்ள நெகிழ்ச்சியான ஒரு சாமர்த்தியம்.

 இடைவேளைக்குப் பிறகு என்னவொரு வேகம்+விறுவிறுப்பு.. ஒரு நிமிடம் அங்கே இங்கே திரும்பமுடியாமல் செய்திருக்கிறார்கள் கமல்+ KSR கூட்டணி..

வசனங்களின் இடையே திரையுலகம்,சமூகம்,திருமணத்தின் சில முட்டாள் தனமான பிணைப்புக்கள், காதல் பற்றிய தன எண்ணம்,மேல் தட்டு வாழ்க்கை, தமிழின் பிரயோகம் என்று பல விஷயங்களையும் கமல் தன பார்வையில் அலசினாலும் பாத்திரங்களை ஓவராக புத்திஜீவித்தனமாக அலைய விடாததும்,அலட்ட விடாததும் பாராட்டுக்குரியது.

*** கதை என்ன,எப்படி என்று நான் எதுவுமே சொல்லவில்லை;அது என் வழக்கமும் இல்லை. பார்த்து ரசியுங்கள்;சிரியுங்கள்.

ரசிக்கவும்,சிரிக்கவும்,மெச்சவும் அருமையான ஒரு விருந்து....

மன்மதன் அம்பு - ஜோராப் பாயுது..


பிற குறிப்பு - 9வது கமல் படம் தொடர்ந்து முதற்காட்சி பார்த்து சாதனை வைத்துவிட்டேன்.அதுவும் அலுவலக நேரத்தில்... அலுவலகம் வந்தால் நம்ம தலைவர் "கமல் படம் ரிலீசா? அதான் இவ்வளவு நேரமும் பண்ணவில்லை" என்று சொன்னது ஹைலைட். இவ்வளவுக்கும் நம் பெரியவர் சிங்களவர்.
இப்படிப்பட்டவங்க இருக்கிற காரணத்தால் தானே மழையே பெய்யுது ;)


* கமலின் இரண்டாவது மகளின் காதலர் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த இளைஞரும் எம்முடனேயே கடைசி வரிசையில் இருந்து படம் பார்த்திருந்தார் என்பது கூடுதல் விசேஷம்.
(தம்பி திருமணம் நடந்தாக் கூப்பிடுங்க)

47 comments:

கன்கொன் || Kangon said...

பார்க்க ஆவலாயுள்ளேன், பார்க்கும்வரை விமர்சனம் படிக்க மாட்டேன் மாட்டேன் மாட்டேன்.... ;-)

Unknown said...

//மன்மதன் அம்பு - ஜோராப் பாயுது..//
ஓ! அப்ப பாக்கலாம் என்றீங்க!

Prem said...

Nallai irukku unga விமர்சனம்... :)

sinmajan said...

ஆஹா.. ஆளாளுக்கு படத்தைப் பார்த்துவிட்டு வந்து ஒரேயடியாக ஆர்வத்தைத் தூண்டுறாங்களே

Unknown said...

//அவரது தொடை, மார்பு Tattoo தெரியவேண்டும் என்றே திட்டமிட்டு தேர்வு செய்துள்ள ஆடை வடிவமைப்பாளர் கௌதமிக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.. வாலிப சமூகம் சார்பாக//
ச்சா! பெரியவங்க பெரியவங்க தான்! :-)

வந்தியத்தேவன் said...

No time for watching I miss first day first show

KANA VARO said...

ஆஹா பார்த்தாச்சு...

அசால்ட் ஆறுமுகம் said...

ஐயோ எக்ஸாம் டைம் இல படம் வந்திட்டுதே........ நீங்க வேற பாக்கவேணும் போல சொல்லுறீங்க........ பார்த்துவிடுவம்.....

Subankan said...

ஆகா, பார்வைகள் பல இடங்களில் ஒத்துப்போகின்றனவே :)

உங்கள் பக்கத்திலிருந்து பார்த்திருக்க வேண்டியது, ஜஸ்டு மிஸ்சு. தியேட்டரில் பல நேரங்களில் உங்கள் பக்கத்திலிருந்தே கரவொலி கிழம்பியதை அவதானித்தேன் ;-)

//எனக்குப் படம் பார்க்கையில் சலிப்பையும் எரிச்சலையும் தந்த ஒரே விடயம் கீழே ஆங்கிலத்தில் இடப்பட்ட உப தலைப்புக்கள். பல இடங்களில் கவனத்தை சிதறடித்துவிட்டது.//

தமிழ்ப் படம் பார்க்கும்போது ஆங்கில உபதலைப்புகளைக் கவனிப்பது அழகான பெண் வரும்போது அவள் கால்களைப் பார்ப்பது மாதிரி :P

Unknown said...

அண்ணா போட்டிட்டீங்களா..நானும் இப்ப தான் பார்த்தேன்,,
இதுக்கு மேல நா என்ன சொல்ல!!
ஹிஹி அருமை விமர்சனம் அண்ணே!

யோ வொய்ஸ் (யோகா) said...

படம் பார்த்த பின்னர் விரிவான பின்னூட்டம் போடுகிறேன்

Jana said...

ஆஹா...ஆள் ஆளுக்கு எழுதி கடுப்பை ஏற்றுகின்றீர்களே!!! முதல்தடவையாக கமல்படம் முதல் காட்சியை மிஸ் பண்ணிவிட்டேன். ஆனால் நாளை இரவு பார்த்துவிடுவேன்.

Vijayakanth said...

padam kandippaa kurainjathu 3 thadawai paarkka wendiya padam.... antha vasanangalukkaaga.....!

ம.தி.சுதா said...

நல்லதொரு பார்வை அண்ணா.. அது யாரு குஞ்சு குருப் நான் நம்ம பவனோ
என நினைத்தேன்.. ஹ..ஹ...ஹ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

சுகந்தன் said...

நீங்க கமல் ரசிகர் எண்டு தெரியுது...நல்லா ரசிச்சிருக்கீங்க..ஆனால் கடைசி 1/4 பகுதியையுமா ரசிச்சீங்க?..அடடா...இப்படியொரு தொடக்கத்திற்கு அது செம சொதப்பல் அண்ணா..அதுவும் மாதவன்+சங்கீதா...என்ன ஒரு climax.கமல் ok but மாதவன் ரசிகரா ஒரு பதிவு போடுங்க..

Unknown said...

தரமான பார்வை.

//கமலின் இரண்டாவது மகளின் காதலர் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த இளைஞரும் எம்முடனேயே கடைசி வரிசையில் இருந்து படம் பார்த்திருந்தார் என்பது கூடுதல் விசேஷம்.
(தம்பி திருமணம் நடந்தாக் கூப்பிடுங்க)//

சினிமா கிசு கிசு போல மொட்டையாச் சொன்ன எப்படி?

satheesh said...

super review. it lead me to watch the film

அஜுவத் said...

missed dis tym.........:(

vimarsanam super.........

கேணியூர் வீறுடை வேந்தனார் said...

super review. here release tomorrow.

Shafna said...

எப்படிங்க? கொஞ்சம் விட்டிருந்தா திரையை கிழிச்சிட்டு உள்ளே புகுந்து,கமலின் வலது கையாவே இருந்திருப்பிங்களோ? அது யாருங்க இரண்டாவது மகளின் காதலன்? படம் பாக்கலைய் ஆனா பாத்துட்டேன்.

Vathees Varunan said...

நல்ல விமர்சனம் அண்ணே..
கமலின் மற்றுமொரு கலக்கலான படம். பல இடங்களில் கமல் மட்டுமே தனியாளாக தனித்துவமாக தெரிகிறார் எனக்கு அந்த நீலவானம் பாடல் வித்தியாசமாக தொகுப்பு செய்யப்பட்டிருக்கின்ற விதம் பிடித்திருக்கின்றது புது முயற்சி அத்தோடு கமலும் த்ரிஷாவினதும் கவிதையோடமைந்த பாடல்காட்சி முழுவதும் ஒரே ஷொட்டில் எடுக்கபட்டிருப்பதை பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது ஒளிப்பதிவாளருக்கு ஒரு சபாஷ்...

மொத்தத்தில் மன்மதன் அம்பு கலக்கல்

VISA said...

டீடெயில் விமர்சனம் :)

KAPIL said...

SUPERB ARTICLE..... AS USUAL SAGALAGALAA KALAIGAR "KAMAL hASAN" HAS PRODUCED A ROCKING FILM TO HIS CAREER...

Sanjay said...

At the stroke of interval la AAHAA nu vaaya polakka vachchittu, second half la Comedy track ku maariyathaal konjam yemaatram...

When both of them were about to make INCREDIBLE CONFESSIONS, antha LENGTHY kavithai scene thevaya??

ஷஹன்ஷா said...

அண்ணா....ஆர்வத்தை கூட்டி விட்டுட்டீங்க.....கண்டிப்பாக வருடம் முடிய முன்னரே 3 தடவைக்கு மேல் பார்ப்பேன்.....


ஃஃஃஃமலையாள இயக்குனர் குஞ்சு குருப்ஃஃஃஃ

நான் நினைத்தேன் நம்ம பவன் குருப் அமைத்து விட்டாரோ என்று....!!


ஃஃஃஃ கமலின் இரண்டாவது மகளின் காதலர் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட அந்த இளைஞரும் எம்முடனேயே கடைசி வரிசையில் இருந்து படம் பார்த்திருந்தார் என்பது கூடுதல் விசேஷம்ஃஃஃஃ

அட அவரும் வந்திருந்தாரா....அவர் பக்கத்தில் இரண்டாவது மகளும் இருந்ததாக அறிந்தேன்...உண்மையா அண்ணா....???

மன்மதன் அம்பு - ஜோராப் பாயுதுஃஃஃஃ

இதோ நானும் வாறேன்...சேர்ந்து பறப்போம்........

Philosophy Prabhakaran said...

கண்கொன் கருத்தை வழிமொழிகிறேன்... ஆனாலும் உங்களது விமர்சனத்தை மேலோட்டமாக படித்தேன்... எனக்கும் ஜூலியட் மீது ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது... படம் பார்த்துவிட்டு வருகிறேன்...

Vijay Vasu said...

என்னை பொருத்தவரை படம் படு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

Vijayakanth said...

uyirum.... manasum..... oosal :P

@VJ i agree with you at one point, eppudi paamara makkalukku ithu puriya pogutho....!

but i disagree with many points - kalaignjarukkaaga kamalai saaduwathu ellaam konjam over

Vijay Vasu said...

Athu eppadi...

When Enthiran releases.. the whol online world is opposing the movie because it is produced by Sun TV. But, doesn't teh same apply for Kamal movies?

Anyways.. i am finally happy that the movie is utter flop :-)

This will teach a good lesson to the ORKUT kamal fans who unwantedly degrade Rajini.

கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா... said...

@VJ

எல்லா விமர்சனத் தளங்களிலும் ஒரே செய்தியை வெட்டி ஒட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கே வெட்கமாகத் தெரியவில்லை?

படம் உங்களுக்குப் புரியாமலிருந்தால் சாதாரண மக்களுக்குப் புரியாதென்றில்லை, உங்களை ஏதோ பெரிய அறிவாளியாகவும் சாதாரண மக்கள் என்றால் ஒன்றும் அறியாதவர்கள் என்றும் எண்ண வேண்டாம்.

படம் வெளிவந்து முதல்நாளில் படம் தோல்வி என்று அறிவித்த உங்கள் இரசனைக்குப் பாராட்டுக்கள்.

பிழைப்பைப் பார்க்கவும்.

Anonymous said...

@ VJ

Y are u blabbering ? who told u MA is a flop? please check before open your nasty mouth.

MA is running Houseful in Tamil Nadu

K.Shankaran

Loshan - please dont allow these type of abusive comments

ரெட்டை வாலு said...

// VJ said...
Athu eppadi...

When Enthiran releases.. the whol online world is opposing the movie because it is produced by Sun TV. But, doesn't teh same apply for Kamal movies?

Anyways.. i am finally happy that the movie is utter flop :-)

This will teach a good lesson to the ORKUT kamal fans who unwantedly degrade Rajini.
//

ஒரு ரஜினி ரசிகராக உங்கள் உண்மை முகத்தை வெளியிட்டமைக்கு நன்றி சார். கொஞ்சம் வளரப்பாருங்க எவ்வளவுகாலம்தான் சின்னப்புள்ளயாவே இருக்கப்போறீங்க? :P

Sangeethan said...

// Athu eppadi...

When Enthiran releases.. the whol online world is opposing the movie because it is produced by Sun TV. But, doesn't teh same apply for Kamal movies? //

But if you couldn't prevent, if you hadn't prevented Endhiran, then why to Kamal?
Had you boycotted Endhiran, you've all the rights to call others to boycott, but you did watch it, then why on the earth wasting your energy.


// Anyways.. i am finally happy that the movie is utter flop :-) //

Oho... You've the special power to calculate whether it's a utter flop or super hit in just two days?
Take a bow, sir.

// This will teach a good lesson to the ORKUT kamal fans who unwantedly degrade Rajini. //


So your real problem is not that Manmadhan Ambu isn't good, it's just you're against Kamal fans?
Get a life mate. If you like the film, go and watch, otherwise shut your mouth and mind your own business.

Mohan said...

உங்கள் விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது!

Kiruthigan said...

நல்ல விமர்சனம் அண்ணா...
சில இடங்களில் நளதமயந்தி ஞாபகம் வந்தது..

கரன் said...

நான் மிக அண்மையில் அனுபவித்து ரசித்த படங்களில் ஒன்று.
படத்தின் இறுதிக்காட்சிகளில் சங்கீதாவின் நடிப்பை மிகவும் ரசித்தேன்.
உலக நாயகனைப் பற்றி புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை.
Feel good movie.


Loshan said...
//இப்போதே சொல்லிவைக்கிறேன்..

கமலுக்கு அடுத்தவொரு பிரம்மாண்ட வெற்றிப்படம்.
உதயநிதி ஸ்டாலின் போட்டதற்குப் பல மடங்கு எடுத்துவிடுவார்.//

அதைத்தான் நானும் விரும்புகிறேன்.
ஆனால், அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பது என்னுடைய அபிப்பிராயம்.
பார்ப்போம்.

Anonymous said...

//உதயநிதி ஸ்டாலின் போட்டதற்குப் பல மடங்கு எடுத்துவிடுவார்//
அப்பிடி நடக்க சந்தர்ப்பமே இல்லை ஏன் என்றால் படத்த வாங்கி வெளியிடுவது ஜெமினி பிலிம் circuit (producers of 3 idiots remake)

Muruganandan M.K. said...

பலரும் பலவிதமாக எழுதிக் கொண்டிருக்கும் படம் பற்றி
தெளிவான விமர்சனம் உங்களால் கிட்டியுள்ளது. பார்க்க வேண்டும்.

Sivatharisan said...

நல்ல விமர்சனம் அண்ணா...

இரா பிரஜீவ் said...

என்னைப்பொறுத்த வரையில் நான் வாசித்த விமர்சனங்களில் எனக்கு நியாயமாகபட்டது உங்களின் விமர்சனம் மட்டும் தான்! வாழ்த்துக்கள்!!!

பாமர மக்களுக்கு புரியிற மாதிரி என்றால் அதன் அர்த்தம் என்னைப்பொறுத்த வரையில் ஒருவருக்கு தெரிந்ததையே அல்லது புரிந்ததையே சொல்லுவது. இது கிட்டத்தட்ட ஒருவரை மட்டம் தட்டுவது போலானது. ஒருவரை அடுத்த கட்டம் நோக்கி சிந்திக்க வைக்கவேண்டுமே அல்லமால் செக்குமாடுமாதிரி ஒண்டையே சுத்தி சுத்தி வாறது புத்திசாலியா இருக்காது!

ரஜினிக்கு வரிந்து கட்டுபவர்கள், ரஜினியின் திரைப்பட சாகங்கள் 75% மானவை stunt double கலைஞர்களின் உழைப்புத்தான். இது எந்திரன் வரை உண்டு. ஆகையால் ரஜினிக்காக இன்னொரு நடிகரை அதுவும் கமலை விமர்சிப்பது உங்கள் கிறுக்குத்தனத்தைத்தான் காட்டுகிறது.

அண்ணா, உங்கட விமர்சனத்தை சுட்டு பதிவா போடுற முறையை மாத்தி இப்ப comment ஆக போடுறாங்க! மூலத்தின் முகவரி இல்லாமலே.
http://www.envazhi.com/?p=22830
திருடராய் பார்த்து திருந்தா விட்டால்...

valli said...

//இப்போதே சொல்லிவைக்கிறேன்..

கமலுக்கு அடுத்தவொரு பிரம்மாண்ட வெற்றிப்படம்.//

அப்பிடி தெரியலையே...

உலக சினிமா ரசிகன் said...

திரைக்கதையை அருமையாக அமைத்துள்ளார் கமல்.வசனமும் அற்புதம்.”வீரத்தின் உச்சமே அகிம்சைதான் ”மொத்த வசனத்துக்கும் இது ஒரு பதம்.

Anonymous said...

Even I had a clean record of watching Kamal Movies on the launch date for the last few movies.Feeling realy bad to lose it.Anyway your review sounds great. Most guys who had commented negative are seems to be biased.Facts are stubborn that Kamal is a good creator and grading of his execution is also determined by numbers. Hope the numbers will be favourable this time sround for the "Ulaga Nayagan".

RAMACHANDRAN BALAMURUGAN said...

//மன்மதன் அம்பு - ஜோராப் பாயுது..//
ஓ! அப்ப பாக்கலாம்.
பார்க்க ஆவலாயுள்ளேன்.
அருமை விமர்சனம்.

Anonymous said...

Hey Loshan,

Over all I disagree with you, I accept your some of the reviews out of many .....

Film is lacking lot of things for a successful movie.

Unknown said...

BACK ROUND MUSIC WAS THE BEST, ALSO SHOWS THE TRUTH OF A ACTRESSES LIFE BEFORE MARRIAGE

Anonymous said...

லோஷன் அண்ணா நீங்க சுறா வேட்டை காரனுக்கு விமர்சனம் எழுதீனீங்களே ....விஜய் ட ஒரு நல்ல படம் வந்திருக்கு அதை பத்தி எழுத மாட்டீங்களா ?????

plz காவலன் விமர்சனம் தரவும்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner