December 22, 2010

பரீட்சை மண்டபத்தில் Cheer girls????

இப்போது பரீட்சைகள் காலம் இல்லையா?
ஆனால் பரீட்சை எப்படி என்று கேட்டாலே, பொறி கலங்கி பூமி அதிருவது போல எல்லாரது மூஞ்சிகளும் மாறிவிடும்.. (எங்களது கடந்த கால அனுபவமும் இதுவே தானே)

இதற்காக பரீட்சைகளை எப்படி சுவாரசியமாக மாற்றுவது என்று ரூம் போட்டு யோசித்துப் பார்த்தேன்...

உலகம் முழுக்க IPL மூலமாக கிரிக்கெட் பரபர விற்பனைப் பொருளாக மாறியது போல, பரீட்சையையும் மாணவர்கள் விரும்புகிற ஒரு சுவாரஸ்யமான விஷயமாக மாற்ற நம்மால் முடிந்த சில ஐடியாக்கள்...

IPL பாணியில் பரீட்சைகள்..

1. பரீட்சை நேரத்தை ஒரு மணித்தியாலமாக மாற்றி,புள்ளிகளை 50ஆக மாற்றிவிடுவது..
2. பதினைந்தாவது நிமிடத்தில் Strategy break அறிமுகப்படுத்தப்படும்.
3. மாணவர்களுக்கு ப்ரீ ஹிட் (Free hit) கொடுப்பது; அவர்களுக்கான கேள்விகளை அவர்களே எழுதி விடைகளையும் அவர்களே எழுத ஒரு வாய்ப்பு
4. முதல் பதினைந்து நிமிடங்கள் Power Play... பரீட்சை அறைக்குள் மேற்பார்வையாளர் இருக்கமாட்டார்.. மாணவரகள் இஷ்டப்படி புகுந்து விளையாடலாம்.
5. கொப்பி அடிக்காமல், பிட் அடிக்காமல் எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த Fair Play விருதுகளை அறிமுகப்படுத்தல்.. (ரொம்ப நல்லவங்களுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்போமே)
6. பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.

எல்லா மாணவர்களும் விரும்பப்போகின்ற முக்கியமான விஷயம் இது....

ஒவ்வொரு சரியான விடை எழுதும் நேரமும் ஊக்குவித்து உற்சாகப்படுத்த பரீட்சை மண்டபங்களில் Cheer Girls  இருப்பார்கள்...
மாணவிகள் விரும்பினால் Cheer Boysஉம் ஏற்பாடு செய்யலாம்....



ஹலோ.. எங்கேப்பா எல்லாரும் பரீட்சைகளுக்குப் படிக்கத் தயாராகிறீங்களா? இன்னும் அமுல்படுத்தலீங்க.. நீங்கள் எல்லாம் ஆதரவளித்து இந்த ஐடியாவை வரேவேற்று வெற்றிபெறச் செய்தால் வந்திடும் விரைவில்.
(வாக்குக் குத்துங்கன்னு மறைமுகமாக சொல்றேனாக்கும்)

* IPL 4 பரபரப்பு ஆரம்பித்திருக்கும் நேரத்தில் இப்படியொரு மொக்கை போடலாமேன்னு தான்.. அடுத்த இரு பதிவுகள் கொஞ்சம் சீரியசாக இருப்பதால்...

* இன்று காலை விடியலில் ஏக வரவேற்பைப் பெற்ற விஷயம் இப்போ இடுகையாக..

இதன் ஒரிஜினல் ஆங்கில வடிவம் ;)

IPL style Exams ;)

25 comments:

கார்த்தி said...

ஐயோ மொக்கையோ மொக்கை!
Cheer Girlsஐ விட எங்க பசங்களுக்கு Power Playதான் முக்கியம். அதுக்கிடேலயே எல்லாத்தையும் முடிச்சிடுவாங்க!

Subankan said...

கொஞ்சம் வடிவான சுப்பர்வைசர் வந்தாலே ததிங்கினத்தோப் போட ஆரம்பிச்சுடுவாங்க, இந்த லட்ஷணத்தில Cheer Girlsஆ? வெளங்கிடும் :P

Mohamed Faaique said...

நீங்களும் மொக்கை போடா ஆரம்பிச்சுடீங்களா?

Anonymous said...

Exam will over with in the power play

Kiruthigan said...

ஆஹா...

பரீட்சை மண்டபத்தில் Cheer girls ஐநாவில் ஆலோசிக்க வேண்டிய ஐடியா..
உடனே அமல் படுத்த வேண்டும்..
சுபாங்கன் அண்ணா வேணுமெண்டா திரும்பியிருந்து எழுதட்டும் :P

KANA VARO said...

இது ரொம்ப நல்லாயிருக்கே! அடுத்தமுறை நம்ம மாட்ச்சுக்கு கண்டிப்பா கூப்பிடனும்.

அஹமட் சுஹைல் said...

ஒரே நகைச்சுவை போங்கள்.


பரீட்சை மண்டபத்தில் அப்புக் குட்டி(situation Song)

http://aiasuhail.blogspot.com/2010/10/blog-post_31.html

இதையும் கொஞ்சம் பாருங்களேன்.

ஷஹன்ஷா said...

அண்ணா சூப்பர்....விடியலிலும் காலாய்ச்சோம்.....

அண்ணா ஒரு மாணவனின் குறைந்த பட்ச புள்ளியை அவனே தெரிவு செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும் என்று நான் நினைக்கிறேன்...(ஏலத் தொகை போல.)
ஏன் என்றால் exam hall ல கூட Cheer Girls ஐ சைட் அடிக்கிறவங்க இருப்பாங்க...(வேற girls இல்லாட்டில்....புரியுமே...)

ஷஹன்ஷா said...

@ Cool Boy கிருத்திகன்:-
நாங்க miss பண்ணினது இந்த Cheer girls மட்டும்தான் என்ன....!

மிச்சமெல்லாம் சொல்லியா தெரியணும்.....

@Subankan :-
அப்புடி யாரேனும் இருந்தா சொல்லுங்கப்பா...அங்க நான் வந்து exam எழுதுறேன்....

கன்கொன் || Kangon said...

:D

இரசித்தேன் விடியலிலும்.... ;-)

anuthinan said...

நான் இதை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன். இதை ஒருபோதும் பாடசாலைகளில் நடமுறைபடுத்த இடம் தரமாட்டேன்.

முதலில் பல்கலைகழக பரிட்சையில் இதை அறிமுகபடுத்த சொல்லுங்கள். பிறகு பார்க்கலாம்.:P

நிரூஜா said...

கலக்கல் அண்ணா.
போன வருசம் இதை அமுல் படுத்தி இருந்தா நான் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதேக்க எனக்கு உதவியா இருந்திருக்கும். கூடவே cheergirls இன் சுவாரசியமும் கூடவே இருந்திருக்கும். ;)

ஆகுலன் said...

நான் இதை ஆமோதிக்கிறேன்......................

Vijayakanth said...

PART 1 PAPER ONEDAY MATCH, PART 2 PAPER TEST MATCH AH???

KURAINJATHU MAASATHTHUKKU ORU MATCH AAWATHU PASANGA KETPAANGA ANNE :p

தமிழமுதம் said...

super...

யோ வொய்ஸ் (யோகா) said...

////பரீட்சைத் தாளில் பிழையான வினா ஒன்று கேட்கப்பட்டிருந்தால் அடுத்த கேள்விக்குத் தவறான விடை சொன்னாலும் புள்ளிகள் கழிக்கப்படாது..
இதுவும் ஒரு வகை Free hit தான்.
/////
இம்முறை வந்தால் அநேகமாக இனி எல்லோரும் பாஸ்தான், காரணம் எங்களது கேள்வி தாள் குளறுபடிகள்தான் தினசரி செய்திகளில் வருகின்றனவே.

எப்போ இவ்வாறான பரீட்சை வரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

Jana said...

இப்படித்தான் இனி எக்ஸாம் எல்லாம் நடக்கும் என்றால்..... சாதாரண தரத்தில் இருந்து திரும்பவும் படித்துவர நான் தயாா்.

sinmajan said...

வைவா விற்கு முதல் நாண்யச்சுழற்சி செய்து யார் கேள்வி கேபதென்பதைத் தீர்மானிக்கணும்.. இதுவும் ரொம்ப முக்கியம் லோசன் அண்ணா

ஷஹன்ஷா said...

அண்ணா நேரம் கிடைக்கும் இங்கும் வந்து போங்கோ...
http://sivagnanam-janakan.blogspot.com/2010/12/blog-post_22.html

ம.தி.சுதா said...

ஆஹா.. கல்வியமைச்சுக்குத் தெரிவிப்போம்... ஒரு பரீட்சார்த்தமாக முயற்சித்துப் பார்ப்போம்... ஹ..ஹ..ஹ..

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???

Shafna said...

இப்டி ஈந்தா சோக்கா ஈக்கும்...மறுவா எல்லா கொமருவளும் பொடியனுவளும் fail ஆவி fail ஆவியே ஈப்பாங்க..ஸ்கூல்கு வராம exam க்கு மட்டும் வருவாங்க.. flash news கல்வி மற்றும் பரீட்சைகள் விவகார அமைச்சர் திரு ஏ.ஆர்.வி.லோஷன்,வெளி நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்..

உமர் | Umar said...

இந்தக் கட்டுரையை படித்துவிட்டு உங்கள் அணியை தேர்வு செய்யுங்களேன். உங்களுடைய எதிர்வுகூறல்கள் பிரசித்தம் என்று கேள்விப்பட்டேன்.

Vathees Varunan said...

ம்..ம்...நல்லாத்தான் போடுறீங்க மொக்கை.....
அதுசுரி பதிவர் சந்திப்பு பற்றி மொக்கை ஏதும் இல்லையோ???

அஜுவத் said...

அண்ணே ஜாக்கிறத; நம்ம பல்கலைக்கழக நன்பர்கள் மாதிரி நம்ம ஸ்கூல் பசங்களும் போராட்டம் அப்பிடி இப்பிடி என்று போய்டபோறாங்க; பின்ன இதன் சூத்திரதாரி என்னு உங்கள ஏதாவது செய்திட போறாங்க.........

வருண் துஷ்யந்தன் said...

பின்னிப் பெடலெடுத்திட்டிங்க தலைவா...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner