June 09, 2011

கம்பி மத்தாப்புக் கண்ணும், பெண்ணின் மூக்கு வேர்வையும்


அண்மையில் வெளிவந்துள்ள பாடல்களில் ஒன்று முதல் தரம் கேட்டவுடனேயே காது வழியாக மனசுக்குள் ஏறி அமர்ந்து விட்டது...

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு என்று மிக எளிமையான வரிகளுடன், ரசிக்கக் கூடிய தாளத்துடன் வந்துள்ள பாடல் இப்போது எங்கள் வானொலியின் சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று...

தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது

இந்த வரிகளில் இருக்கும் அப்பாவித் தனமும்,

அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

இந்த வரிகளில் இருக்கும் ஏக்கமும், கெஞ்சலும் பாடகர் கார்த்திகேயனின் ரசிக்கக்கூடிய நயமான குரலில் யாரையும் ஈர்த்து விடும்....

புதிய இசையமைப்பாளர் C.சத்யாவின் இசையில் சேவற்கொடி திரைப்படப்பாடல் இது....



பாடல் வரிகள்.. சாட்ஷாத் வைரமுத்துவே தான்..

இம்முறையும் தேசிய விருதைத் தனதாக்கிய மகிழ்ச்சி அவருக்கு புதுப் பொலிவையும் எழுத்துக்களுக்கு புதிய உற்சாகத்தையும் பேனாவுக்கு இளமை மையையும் கொடுத்திருக்கிறது போலும்..
மனிதர் துள்ளலுடன் துடிப்பாகக் கிராமியக் காதலின் அழகை வடிக்கிறார்.

முன்பு காதலன் திரைப்படத்தின் 'காதலிக்கும் பெண்ணின் கைகள்' பாடலில் "காதல் ஒன்னும் குற்றம் கிற்றம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே" என்று எச்சிலைப் புனிதப்படுத்திய கவிஞர் இந்தப் பாடலில்...

சுத்தமான தெருவில் 
அவ துப்பி செல்லும் போதும் 
எச்சில் விழுந்த இடத்தில் 
மனம் நிக்குது நிக்குதடா

என்று உருகுகிறார்.

ஒரு பெண்ணின் உண்மையான அழகு அவள் தூங்கி எழும் நேரத்தில் தெரியும் என்பார்கள். வைரமுத்துவும் உறுதிப்படுத்துகிறார்...

தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு

அடுத்த வரிகள் கவிநயத்தின் உச்சம் எனச் சொல்லக் கூடிய இடங்கள்...

அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும் 
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்

ஆனால் என் மனதை சுண்டியிழுத்த இந்தப் பாடலின் முத்தான வரிகள்...
மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

பெண்களின் மூக்கு நுனிக் கோபமும், மூக்கு வேர்வையும் பார்ப்பதற்கு அழகானவையே.. (அனுபவித்துப் பார்த்த ரசனையுள்ளவர்கள் கவனிக்க)

வைரமுத்துவுக்கும் அவரது இளமை வரிகளுக்கும் ஒரு கவி வணக்கம்..

பாடலின் இசை சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படத்தின் "கண்ணும் கண்ணும் பார்த்துக்கிட்டா டிங் டிங் டிங்" பாடலை ஞாபகப்படுத்தினாலும்,
சரணத்தின் மெட்டும் இசையும் மனத்தைக் கட்டிப்போட்டு சொக்கவைக்கின்றன.

திரைப்படம் - சேவற்கொடி 
பாடியவர் - M.L.R.கார்த்திகேயன்
பாடல் எழுதியவர் - வைரமுத்து
இசை - C.சத்யா 

கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு 


கம்பி மத்தாப்பு கண்ணு கண்ணு
வண்ண மத்தாப்பு பொண்ணு பொண்ணு 


தூரத்தில பார்த்தா காதல் வாராது
பக்கத்துல பார்த்தா காமம் வாராது
மானும் இல்ல மயிலும் இல்ல
தூணும் இல்ல குயிலும் இல்ல
இருந்தும் மனது விழுந்து போச்சுது 


அவ மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


அழுக்கு துணிய உடுத்தி 
அவ தலுக்கி நடக்கும் போது
சுழுக்கு பிடிச்ச மனசு 
அட சொக்குது சொக்குதடா


சுத்தமான தெருவில் 
அவ துப்பி செல்லும் போதும் 
எச்சில் விழுந்த இடத்தில் 
மனம் நிக்குது நிக்குதடா


தூங்கி எழுந்த பிள்ளை அழகு
அவள் சோம்பல் முறிச்சா கொள்ளை அழகு
அவள் சொல்லுக்கடங்கா முடியும்
சூடிக் கசங்கிய மலரும் 
என்னை இழுக்கும் கண்ண மயக்கும்
ரெண்டு பல்லு கண்டு பித்து பிடிக்கும்


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்


விளக்குமாரு பிடிச்சி 
அவ வீதி பெருக்கும் போது
வளைவு நெளிவு பாத்து
மனம் வழுக்க பாக்குதடா


குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில் 
நெஞ்சு தெறிச்சு போகுதடா


அவ வளைவி ஒலிக்கும் வாசல் அழகு
அவ கொலுசு ஒலிக்கும் வீதி அழகு
ஒரு விக்கல் எடுக்கிற போதும்
தும்மி முடிக்கிற போதும்
அவஸ்தையிலும் அவள் அழகு
குத்தம் குறையிலும்  மொத்த அழகு


மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்

கேட்டு ரசிக்க....




சத்யாவின் இசையில் வைரமுத்துவின் வரிகளில் சேவற்கொடியில் இன்னும் நான்கு பாடல்களும் ரசிக்கக் கூடியவையே.

"புறாவாய் வந்து போகிறாய்" - இந்தப் பாடல் பற்றியும் தனியாக சிலாகிக்க வேண்டும்..
"வேலவா"
"மீனே செம்மீனே"
"நெஞ்சே நெஞ்சே"

அண்மையில் எனது ட்விட்டரில் நான் சொல்லியிருந்தேன்..

 Loshan ARVLOSHAN 



விருது கிடைத்த தென்மேற்குப் பருவக்காற்று இப்போது இன்னொரு புதியவரின் இசையில் சேவற்கொடி...
பயணம் தொடரட்டும்..

மகன் மதன் கார்க்கி ஒரு பக்கமாக ரசனையான வரிகளை ரகம் ரகமாகத் தனதுகொண்டிருக்கு, தந்தையும் போட்டிக்குத் தயாராகி விட்டார் போல...

இந்த ஆரோக்கியமான போட்டி எங்களுக்கு ரசனையான பாடல்களைத் தரட்டும்..


25 comments:

Ashwin-WIN said...

ஐ ஆம் ஆஜர்;
மொத வெட்டு.

Prapa said...

ஒரு காதலன், காதலியின் அன்றாட நடவடிக்கைகளை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறான் என்பதன் மொத்த வெளிப்பாடு.... அருமை அருமை, மெட்டை எங்கோ கேட்டது போல் இருந்தாலும் ரசிக்க கூடியதாக இருக்குறது, வாழ்த்துக்கள் . 'கம்பி மத்தாப்பு' இன்னும் கொஞ்ச நாளைக்கு சில தம்பிகளின் செல் பேசியின் ரிங் டோன் ப்ளஸ் ரிங் இன் டோன்.

Prapa said...
This comment has been removed by a blog administrator.
Ashwin-WIN said...

//மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்//
அஹ்ஹா மனுஷன் என்னாமா சிந்திக்குராறு..
//
குளிச்சி முடிச்சி வெளியில்
அவ கூந்தல் துவட்டும் போது
தெறிச்சு விழுந்த துளியில்
நெஞ்சு தெறிச்சு போகுதடா//
இந்த வரிகளில இருக்கிற சந்தமும் இயல்பான அழகை ரசிக்குறதும் ரொம்ப பிடிச்சிருக்கு.

பெண்ணின் அழகை விமர்சிக்கையில் வழமையாக கவிஞர்கள்(+வைரமுத்து) பாவிக்கும் உறுப்பு விமர்சனம் தவிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. #பெண்கள் அந்தஸ்து

valli said...

சில பாட்டுகள் முதல் முதலாய் கேட்க நேரும்போது வாயோரம் சிறு புன்னகை தவழும் அப்படியே ஒறிடத்தில இருந்து அல்லது நின்று அமைதியா கேட்கச்சொல்லும். இப்படி எப்பயாவது இருந்திட்டு நடக்கும். இன்றைக்கு காலையிலும் இது நடந்தது. நன்றி விடியலுக்கும் பாட்டுக்கும்...

SShathiesh-சதீஷ். said...

:)

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Jawid Raiz said...

வைரமுத்துக்கே உரிந்த்தான சில சொற்பிரயோகங்கள்.. இந்த பாடலிலும் குறைவில்லை... பகிர்வுக்கு நன்றி லோஷன்

Shafna said...

பாடலை ரசித்ததில் கிடைத்த தெளிவை விட,பாடல் பற்றிய உங்கள் தெளிவில் கிடைத்த ரசனை அதிகமானது...

அஜுவத் said...

சூப்பர் பாடல் அண்ணா; எனது Facebook wall ல சற்று முன் தான் status ல போட்டு விட்டு பார்க்கிறேன்......... உங்க பதிவு; உன்மயிலேயே சூப்பர் பாடல் :-D

கார்த்தி said...

வில்லங்கமான வரிகளுடன்தான் பாட்டு வந்திருக்கு!
புது இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை தருவது நல்லவிடயம்!
இந்த பாடலின் ஆரம்ப இசை ”பொம்பளங்க காதலைதான் நம்பிவிடாதே” பாடல் மாதிரி இல்லையா?
விடியலில் இந்தபாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன்!

sinmajan said...

அனுபவித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஷஹன்ஷா said...

அழகிய பாடல் மீண்டும் வைரமுத்துவிடமிருந்து..


///மூக்கு மேல வேர்வையாகணும்
இல்ல நாக்கு மேல வார்த்தையாகணும்
அவ மாத்தி உடுத்தும் ஆடை ஆகணும்
இல்ல போர்த்தி படுக்கும் போர்வையாகணும்///

இன்னும் சில நாட்களுக்கு (மதன் கார்க்கி பாடலோ வைரமுத்துவின் வேறு பாடலோ வரும் வரை) இவ்வரிகள் தான் காதல் ஆண்களின் தேசிய வரி - கீதம்..

அண்ணா இந்த குரலுக்கு சொந்தக்காரர் இவ்வளவு நாளும் எங்க போனாரு.. சூப்பர் Voice.. விஜய் பிரகாஷ் போல சிறந்த ஒரு இடம் பிடிப்பார்..

நன்றி அண்ணா விஷேடமாக, பாடலை கேட்டவண்ணமே பதிவையும் படிக்க உதவியமைக்கு...

ஷஹன்ஷா said...

இசை- பாடல் வரிகளை சிதைக்காத அழகு கலக்கல்..
இடையிடையே வரும்“சக்போன்” இசை மேலும் அழகு..

நிரூஜா said...

பெண்களின் மூக்கு நுனிக் கோபமும், மூக்கு வேர்வையும் பார்ப்பதற்கு அழகானவையே..//

:)

Bavan said...

வாவ்.. வெற்றியில்தான் முதலில் இப்பாடலைக் கேட்டேன் என்று நினைக்கிறேன்..:-))

பாட்டு நல்லாருக்கு..:D

ARV Loshan said...

Ashwin-WIN said...
ஐ ஆம் ஆஜர்;
மொத வெட்டு.//

சுதாவின் சுடு சோற்றின் புது வேர்ஷனா இது?

ஆனாக் கொஞ்சமா தேர்ரரா இருக்கே..

============================

பிரபா said...
ஒரு காதலன், காதலியின் அன்றாட நடவடிக்கைகளை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறான் என்பதன் மொத்த வெளிப்பாடு.... //

ம்ம்ம் புரியுது தம்பி.. ;)



'கம்பி மத்தாப்பு' இன்னும் கொஞ்ச நாளைக்கு சில தம்பிகளின் செல் பேசியின் ரிங் டோன் ப்ளஸ் ரிங் இன் டோன்.//

நீங்க இப்பவே போட்டாச்சு போல :)

ARV Loshan said...

Ashwin-WIN said...

பெண்ணின் அழகை விமர்சிக்கையில் வழமையாக கவிஞர்கள்(+வைரமுத்து) பாவிக்கும் உறுப்பு விமர்சனம் தவிர்த்திருப்பது வரவேற்கத்தக்கது. #பெண்கள் அந்தஸ்து//

உண்மை.. வெகுளித்தனமான காதல் ரசனை:)

#ஒரு முடிவோட தான் கிளம்பி இருக்கீங்க போல ;)

Ashwin-WIN said...

டெர்ரர இருந்தாதான் பொழைக்க முடியும் பாஸ். இனிமே இப்டிதான். :))
ஐயோ ரெண்டு நாளா இந்த பாட்ட கேக்காம இருந்தான். இப்போ திரும்ப கமென்ட் பண்ண வந்து கேக்கவேண்டியதா போச்சு. இனி இன்னைக்கு முழுக்க இதுதான். மனச கொள்ளுறாங்க பாட்டுல.

ARV Loshan said...

வள்ளி said...
சில பாட்டுகள் முதல் முதலாய் கேட்க நேரும்போது வாயோரம் சிறு புன்னகை தவழும் அப்படியே ஒறிடத்தில இருந்து அல்லது நின்று அமைதியா கேட்கச்சொல்லும். இப்படி எப்பயாவது இருந்திட்டு நடக்கும். இன்றைக்கு காலையிலும் இது நடந்தது. நன்றி விடியலுக்கும் பாட்டுக்கும்...//

உண்மை தான் :) ஆகா மகிழ்ச்சி :)

எல்லாப் புகழும் விடியலுக்கே

===================

SShathiesh-சதீஷ். said...
:)

யோ வொய்ஸ் (யோகா) said...
:)

சிமைலி சிங்கங்கள் இரண்டுக்கும் நன்றி..

===============


Jawid Raiz said...
வைரமுத்துக்கே உரிந்த்தான சில சொற்பிரயோகங்கள்.. இந்த பாடலிலும் குறைவில்லை... பகிர்வுக்கு நன்றி லோஷன்//

நன்றி ரைஸ்

ARV Loshan said...

Shafna said...
பாடலை ரசித்ததில் கிடைத்த தெளிவை விட,பாடல் பற்றிய உங்கள் தெளிவில் கிடைத்த ரசனை அதிகமானது...//

ஆகா உச்சி குளிர்ந்து.. நன்றி

===================

அஜுவத் said...
சூப்பர் பாடல் அண்ணா; எனது Facebook wall ல சற்று முன் தான் status ல போட்டு விட்டு பார்க்கிறேன்......... உங்க பதிவு; உன்மயிலேயே சூப்பர் பாடல் :-D//

:) நன்றி :)

ARV Loshan said...

கார்த்தி said...
வில்லங்கமான வரிகளுடன்தான் பாட்டு வந்திருக்கு!//

வில்லங்கம்? எந்த வரிகளை சொல்றீங்க புலனாய்வாளரே?


புது இசையமைப்பாளர்கள் நல்ல பாடல்களை தருவது நல்லவிடயம்!//

உண்மை. சிரேஷ்டர்களுக்கு நல்ல போட்டியைக் கொடுக்கிறார்கள்.

இந்த பாடலின் ஆரம்ப இசை ”பொம்பளங்க காதலைதான் நம்பிவிடாதே” பாடல் மாதிரி இல்லையா?//

ம்ம் கொஞ்சம்.. அதுபோலவே உத்தமபுத்திரன் - கண்ணிரண்டில் மோதியையும் கூட..


விடியலில் இந்தபாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன்!//

எனக்கும் பிடிச்சிருக்கு; நேயர்களுக்கும் ரொம்பப் பிடிச்சிருக்கு

ARV Loshan said...

sinmajan said...
அனுபவித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.//

பிடிச்சிருக்குமே :)

====================


“நிலவின்” ஜனகன் said...

இன்னும் சில நாட்களுக்கு (மதன் கார்க்கி பாடலோ வைரமுத்துவின் வேறு பாடலோ வரும் வரை) இவ்வரிகள் தான் காதல் ஆண்களின் தேசிய வரி - கீதம்..//

சரியாச் சொன்னீங்க


அண்ணா இந்த குரலுக்கு சொந்தக்காரர் இவ்வளவு நாளும் எங்க போனாரு..//

நிறையப் பாடி இருக்காரே.. கன்னித்தீவு பொண்ணா கூட இவர் பாடியது தான்.



நன்றி அண்ணா விஷேடமாக, பாடலை கேட்டவண்ணமே பதிவையும் படிக்க உதவியமைக்கு...//

அதற்கு உதவிய கன்கோனுக்கு உங்கள் நன்றியை சொல்கிறேன்

ARV Loshan said...

நிரூசா said...
பெண்களின் மூக்கு நுனிக் கோபமும், மூக்கு வேர்வையும் பார்ப்பதற்கு அழகானவையே..//

:)//

வணக்கம் பூமிநாதரே ;)

==================

Bavan said...
வாவ்.. வெற்றியில்தான் முதலில் இப்பாடலைக் கேட்டேன் என்று நினைக்கிறேன்..:-))

பாட்டு நல்லாருக்கு..:D //

:) உண்மை

சுபானு said...

லோசன் அண்ணா உங்க மேலே கோபம் கோபமா வருது.. அமர்களமா இருக்கு பாட்டு என்று நானும் எழுதுவம் என்று பாத்தா.. முந்தீட்டிங்களே.. :-(

ஆனாலும்.. உங்கட வரிகள் அழகா இருக்கு... ( இனிமேல் நாங்க எழுதினா எங்க எடுபடவா போகுது.. :-( ஆனாலும் எழுதத்தான் போறன்.. :-) )

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner