May 14, 2009

மதம் - வெறி ?- துவேஷம் ??- அவசரம்??? யாருக்கு???? - ஒரு விளக்கம்

எனது மதமும் மண்ணாங்கட்டியும்.. என்ற பதிவு கிளப்பிய சர்ச்சையும் ஒரு சிலருக்கிடையிலான தனிப்பட்ட கருத்து மோதல்களையும் பார்த்த பிறகே ஒரு விளக்கப் பதிவு போடலாம் என்று எண்ணினேன்..

பின்னூட்டங்களில் மாறி மாறி தங்களுக்குள்ளேயே நண்பர்கள் பதில்களை அளிப்பதால் நான் அதில் என் கருத்துக்களை இடாமல் தனிப்பதிவு தரலாம் என்று எண்ணினேன்.

எனது மனதில் பட்ட கருத்துக்களை நான் எப்போதுமே எங்குமே சொல்லத் தயங்கியதில்லை.. பல நேரங்களில் இது எனக்குப் பலபல கருத்து மோதல்களைத் தந்திருந்தாலும் கூட நான் அது பற்றி கவலைப் படுவதில்லை.. ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே கவனிப்பேன்.. என் வெளிப்படையான கருத்து யாரையாவது புண்படுத்துமா என்று.

சில நண்பர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல ஒன்றுக்கு ஆயிரம் முறை யோசித்தே இப்படியான பதிவுகளை இடுமாறு குறிப்பிட்டிருப்பதைப் போல அப்படி ஒரு சர்ச்சையையும் நான் தொட்டதாக நினைக்கவில்லை.. பொதுப்படையாகவே சொல்லி இருக்கிறேன்..

அந்த smsஇல் என்ன நியாயம் இருக்கிறது என்று அந்த நண்பர்களைக் கேட்கிறேன்..
என் உங்களுக்கு இவ்வளவு சூடாகிறது?

இந்தப்பதிவை எந்தவொரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமயத்தையோ தாக்குவதற்காக எழுதவில்லை. எழுதவேண்டிய தேவையுமில்லை.

இதை நிரூபித்துக்காட்டவேண்டிய தேவையும் எனக்கில்லை.

நான் ஒரு ஊடகவியலாளனாக பொதுப்படையானவன் & பக்கம் சாராதவன்! எனினும் என் மனதில் பட்டதை என் தளத்திலே சொல்லும் உரிமை எனக்குள்ளது.

இஸ்லாமிய நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த இஸ்லாமிய மதம் பற்றிய sms தகவலைப் பற்றிய கருத்தைப் பதிந்தேனே தவிர – நிறைய பின்னூட்டங்களில் பலர் பொங்கி வெடித்திருப்பதைப் போல இஸ்லாம் மதத்தைப் பற்றி எங்கேயும் தாழ்த்திக் கூறவில்லை.

//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//

எல்லா மதமாற்றங்கள் - திணிப்புக்கள் பற்றியும் தெளிவாகவே பொதுவாகவே சொல்லியிருந்தும் சிலபேர் - இஸ்லாமைப் பற்றியே நான் சொன்னதாக பொங்கி வெடித்திருப்பது ஏனோ?

காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்!

பின்னூட்டங்களில் என் பதிவின் பின்னணியில் (என் பதிவில் இல்லாத விடயங்கள்) தத்தம் கருத்துக்களைத் தெரிந்தவர்கள் அதன் பொறுப்பாளிகள்.

காரசாரமான கருத்துக்கள் எதிரெதிராகப் பாய்ந்த போது – மிக மோசமான, துவேஷமான, தூஷனை மிகுந்த சில பின்னூட்டங்களை மட்டும் மட்டுறுத்தி ஏனையவற்றைப் பிரசுரித்துள்ளேன்.

எனினும் என்னைத்திட்டிய பின்னூட்டங்கள் எவையும் நீக்கப்படவில்லை. பிற சமயங்களை, பிறரைப் புண்படுத்தி வந்திருந்த சில அனானி, அசிங்கப் பின்னூட்டங்களை நிராகரித்துள்ளேன.

நண்பர்களே இறை மொழியாக நீங்கள் சொல்லிய

//உங்க மதம் உங்களுக்கு எங்க மதம் எங்களுக்கு//

என்பதே என் கருத்தும். எனினும் என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்ளூ

எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்!

அடுத்து Susan என்பவரின் பின்னூட்டம்

//எனக்கு ஒரு sms வந்தது...

தயவு செய்து கீழுள்ள செய்தியினை குறைந்தது 10 நண்பர்களிடமாவது SMS or Text மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறநாட்டு நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Just 41 days,1410 Tamils killed & 4100 wounded,Brothers & Sisters please make your voice heard,Your voice our life.Only you can save us. Eelam Tamils

ஆனால் எனக்கு கோபம் வரவில்ல..//

உண்மையில் வேதனை தந்த ஒரு விஷமத்தனமான பின்னூட்டம்.

மனதினுள் எவ்வளவு வன்மம் - குரூரம் இருந்தால் இப்படியொரு ஒப்பிட வந்திருக்கும்.

லாராவின் மதமாற்றமும் - அப்பாவிகளின் மரணங்களும் ஒரே தராசிலா? உங்களை இறைவழி நிற்பவர் - இறை நம்பிக்கையுடையவர் என்று உண்மையிலேயே இஸ்லாம் என்ற சமயத்தைப் பின்பற்றும் யாராவது ஒருவர் ஏற்றுக்கொள்வாரா?

இதற்குத் தான் நான் சற்றுக் காட்டமாகவே சொன்னேன் ..

//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..

அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....

அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!

இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!

மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//

நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..

என்னுடைய பதிவின் மூலமாக ஏதாவது தெளிவு யாருக்காவது ஏற்பட்டிருந்தால் சந்தோசம். மாறாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே.. பின்னூட்டம் போட்ட சிலர் என்னிடம் மன்னிப்புக் கோரினால்
மகிழ்வேன்.

மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. (இதையும் பொதுப்படையாகவே சொல்கிறேன்.. யாரும் எந்தவொரு மதத்தையும் சொன்னேன் என்று அவசரம்,இனத்துவேஷம் என்று சண்டைக்கு வந்துவிடாதீர்கள்)

இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.

30 comments:

ers said...

நண்பா...

இந்த விளக்கமே தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மதவெறியர்கள் திருந்தப்போவதில்லை. அது இஸ்லாமியரோ... இந்துவோ... கிறிஸ்தவரோ... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

Media 1st said...

அருமை நீங்கள் ஒரு நடுநிலை வாதி அண்ணா மதம் மதம்தான் மனிதன் மனிதன்தான்

மனிதணாக இருக்கவே விரும்புகிறேன்

Anonymous said...

what u have written is absolutely ....correct keep u r good work..don't bother the non humans.

Sinthu said...

மதங்களை மதிப்பது தப்பு அல்ல. அதனில் இருக்கின்ற பற்றித் தப்பாகப் பயன்படுத்துவது தான் தப்பு.. இவர்களைப் போன்றவர்களை விட மதங்களை நம்பாதவர்களே மேல் என்று தான் நான் நினைக்கிறேன்...

கலையரசன் said...

சீற்றம் பெறுகட்டும்!
உணர்வுகள் தொடரட்டும்!!

அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க...
www.kalakalkalai.blogspot.com

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..

அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....

அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!

இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!

மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//

எள்ளளவும் தவறில்லை

உலகத்துல மதம்கிற $#@%$ கண்டுபிடிக்க படலனா பல லட்சம் மனித உயிர்கள் அழிந்திருக்காது.

நாட்டுக்கு நாடு மதம் மாறுபடுது அவ்வளவுதான்... உயிர் போறது அதே மதத்தாலதான்...

Anonymous said...

CHANGING WORLD..........MUST WATCH

MUST WATCH Short Video!
TAKE TIME TO WATCH THIS.

http://www.youtube.com/watch?v=6-3X5hIFXYU

நிம்முவாகிய நான்...

முகமது பாருக் said...

உங்களோட முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை தோழா...

ஒரே ஒரு வாழ்கைதான் அதுல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர வேறொன்றுமில்லை..

நல்ல பதிவு தோழரே

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)

கோவி.கண்ணன் said...

நெல்லைத்தமிழ் பின்னூட்டத்துடன் ஒத்துப் போகிறேன்.

பிறமதங்கள் பற்றி கருத்துச் சொல்லக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் மதநல்லிணக்கம் என்று தெரியவில்லை.

ஒன்றை புனிதப்படுத்திக் காட்டும் போது அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் அவரவர் மதங்களை மதமல்ல மார்க்கம் என்றே சொல்கிறார்கள். இதுல அக்மார்க் மதம், மார்க்கம் என்று எதுவுமே கிடையாது. எவனாவது செத்துப் போனவன் வந்து சொன்னால் தான் உண்டு, அதுவும் இதுவரை நடந்தது இல்லை.

நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே அதில் விவாதம் செய்து உண்மை என்று நிருபணம் செய்ய ஒன்றும் இல்லை என்பதால் உயர்ந்ததிலும் உயர்ந்தது எங்கள் மதமே என்கிற மார்த்தட்டலை எந்த மதத்துக் காரர்கள் செய்தாலும் அது மறைமுகமாக மாற்று மத துவேசமே. நாலு பேருக்கு முன் 'என் தாய் பத்தினி' என்று சொன்னால் முகம் சுளிகவும், எதிராகவும் பேசச் செய்வார்கள், அதை எதிர்கொள்ளத்தான் வேண்டிவரும்.

Feros said...

உங்கள் முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை....

வாழும் போது நல்லவர்களா வாழ்வேம்
தொடரட்டும் நல்ல பதிவுகள் ...

ஜோ/Joe said...

சூட்டை குறைப்பதற்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.

//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//

என்ன தான் இருந்தாலும் கிறிஸ்தவனுக்கு பதில் கிறிஸ்துவே நேரடியாக sms அனுப்பனுமுண்ணு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகம் தான் :)))))

Anonymous said...

How to give the comments in Tamil
Pls Help

ARV Loshan said...

இறுதியாக உதவி கேட்ட நண்பருக்காக..

www.suratha.com

http://www.google.com/transliterate/indic/Tamil

Anonymous said...

//காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்!//

//என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்//

//எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்!//

//நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..//

என்னுடைய பதிவின் மூலமாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே..//

//பின்னூட்டம் போட்ட சிலர் எனக்கு மன்னிப்பு அனுப்பினால் மகிழ்வேன்.// Not happy with this line

//மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. //

//இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.//

சத்தியாம, இந்த வரிகளைப் படித்து ஒரு நிமிசம் ஆடிப் போய்விட்டேன்.. ஒரு படி உங்களை மனதில் ஏற்றி வைத்துவிட்டேன்... Actually, வானொலி ஒலிபரப்பாளராக ஏன் ஒரு புளொக்கராக உங்கள் மேல் ஒரு நேசம்இருத்தாலும், ஒரு மனிதனாக, உங்கள் மேல் அளப்பெரிய மரியாதை வந்துள்ளது.. Hats off!!!!!!!

(சரி சரி ‍ பேசாமல் மரியாதையைக் காப்பாற்றும் வழியைப் பாக்கத் தொடங்குங்கோ... ஐபிஎல் பெண்களைப் பார்த்து வழியாமல்)

Anonymous said...
This comment has been removed by the author.
ARV Loshan said...

நெல்லைத்தமிழ் said...
நண்பா...

இந்த விளக்கமே தேவையில்லை. என்னை பொறுத்தவரையில் மதவெறியர்கள் திருந்தப்போவதில்லை. அது இஸ்லாமியரோ... இந்துவோ... கிறிஸ்தவரோ... யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.//

எனக்கும் அது தெரிந்தாலும் உங்கள் போல் நல்ல நண்பர்கள் என்னை அறிந்தளவுக்கு அறியாதோர் என்னைப் பற்றித் தப்பாக நினைத்து விடக் கூடாதில்லையா?
அதற்காகத் தான் இந்த விளக்கம்..

ARV Loshan said...

தர்ஷன் ' in ' DSHAN2009 NETWORK said...
அருமை நீங்கள் ஒரு நடுநிலை வாதி அண்ணா மதம் மதம்தான் மனிதன் மனிதன்தான்

மனிதணாக இருக்கவே விரும்புகிறேன்//

நன்றி சகோதரா.. மனிதராக முதலில் இருப்போம். அதன் பின் மற்றவற்றைப் பார்ப்போம்

===================

Anonymous said...
what u have written is absolutely ....correct keep u r good work..don't bother the non humans.//

Thanx bro/sis. ) will do.

ARV Loshan said...

Sinthu said...
மதங்களை மதிப்பது தப்பு அல்ல. அதனில் இருக்கின்ற பற்றித் தப்பாகப் பயன்படுத்துவது தான் தப்பு.. இவர்களைப் போன்றவர்களை விட மதங்களை நம்பாதவர்களே மேல் என்று தான் நான் நினைக்கிறேன்...//
அதே அதே.. புரிந்துகொண்டதில் மகிழ்ச்சி..

===============
கலையரசன் said...
சீற்றம் பெறுகட்டும்!
உணர்வுகள் தொடரட்டும்!!

அப்படியே நம்ம பதிவுக்கும் வாங்க...
www.kalakalkalai.blogspot.com//

நன்றி கலை.. வந்தேன்.. வருவேன்.. :)

நீங்களும் அடிக்கடி நம்ம பக்கம் வாங்க.

ARV Loshan said...

பித்தன் said...
//கவலைப்படவும், கோபப்படவும் உலகில் எத்தனையோ பல முக்கியமான விடயங்கள் இருக்கும் நேரம் இதெல்லாம் மயிராச்சு..

அவரவர் விரும்பிய பாதையைத் தேர்ந்தெடுக்கட்டும்....

அதைக் கொண்டாடவும் வேண்டாம்.. கொலை வெறியுடன் துரத்தவும் வேண்டாம்!

இது 21ம் நூற்றாண்டு.... இன்னமும் மதங்களை வைத்துக்கொண்டு மலிவான விளையாட்டுக்கள் வேண்டாம்!

மதமும் மண்ணாங்கட்டியும்..
போங்கடா போய் மனிதர்களைப் பாருங்கள் முதலில்..//

எள்ளளவும் தவறில்லை

உலகத்துல மதம்கிற $#@%$ கண்டுபிடிக்க படலனா பல லட்சம் மனித உயிர்கள் அழிந்திருக்காது.

நாட்டுக்கு நாடு மதம் மாறுபடுது அவ்வளவுதான்... உயிர் போறது அதே மதத்தாலதான்...//

எல்லாருமே இதைப் புரிந்துகொண்டால் பாதி உலகம் திருந்தும்..

ARV Loshan said...

முகமது பாருக் said...
உங்களோட முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை தோழா...

ஒரே ஒரு வாழ்கைதான் அதுல எப்படி வாழ்கிறோம் என்பதுதான் முக்கியமே தவிர வேறொன்றுமில்லை..

நல்ல பதிவு தோழரே

தோழமையுடன்

முகமது பாருக் //

புரிதலுக்கும், உணர்வில் ஒன்றுபட்டமைக்கும் நன்றி தோழா..

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என்று நினைபவன்)//
உண்மை தான்.. எனது எண்ணமும் அதே..

ARV Loshan said...

கோவி.கண்ணன் said...
நெல்லைத்தமிழ் பின்னூட்டத்துடன் ஒத்துப் போகிறேன்.

பிறமதங்கள் பற்றி கருத்துச் சொல்லக் கூடாது என்று சொல்வது எந்த வகையில் மதநல்லிணக்கம் என்று தெரியவில்லை.

ஒன்றை புனிதப்படுத்திக் காட்டும் போது அதற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என்பதை மதவாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லோரும் அவரவர் மதங்களை மதமல்ல மார்க்கம் என்றே சொல்கிறார்கள். இதுல அக்மார்க் மதம், மார்க்கம் என்று எதுவுமே கிடையாது. எவனாவது செத்துப் போனவன் வந்து சொன்னால் தான் உண்டு, அதுவும் இதுவரை நடந்தது இல்லை.//

நல்லா சொன்னீங்க.. பொட்டில் அறைந்தது போல இருந்தது..
இதனால் தான் உங்கள் எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

//நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை மட்டுமே அதில் விவாதம் செய்து உண்மை என்று நிருபணம் செய்ய ஒன்றும் இல்லை என்பதால் உயர்ந்ததிலும் உயர்ந்தது எங்கள் மதமே என்கிற மார்த்தட்டலை எந்த மதத்துக் காரர்கள் செய்தாலும் அது மறைமுகமாக மாற்று மத துவேசமே. நாலு பேருக்கு முன் 'என் தாய் பத்தினி' என்று சொன்னால் முகம் சுளிகவும், எதிராகவும் பேசச் செய்வார்கள், அதை எதிர்கொள்ளத்தான் வேண்டிவரும்.//

எப்போது எமதை உயர்த்துகிறோமோ, அப்போதே மற்றவரைத் தாழ்த்துகிறோம்..

ARV Loshan said...

Feros said...
உங்கள் முந்தைய பதிவும் பார்த்தேன் தவறேதுமில்லை....

வாழும் போது நல்லவர்களா வாழ்வேம்
தொடரட்டும் நல்ல பதிவுகள் ...//

நன்றி சகோதரா.. உங்கள் தனி மடல் கண்டதும் மகிழ்ச்சி..

ARV Loshan said...

ஜோ/Joe said...
சூட்டை குறைப்பதற்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.

//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//

என்ன தான் இருந்தாலும் கிறிஸ்தவனுக்கு பதில் கிறிஸ்துவே நேரடியாக sms அனுப்பனுமுண்ணு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகம் தான் :)))))//

ஆகா இப்படித் தான் பிரச்சினைகளே தொடங்குதா? ஒரே ஒரு எழுத்து மிஸ் ஆகிட்டுது..

ஆனாலும் உங்க பின்னூட்டம் பார்த்து வாய் விட்டு சிரித்தேன்..

ARV Loshan said...

Triumph said...
//காரணம் மொழிப்பற்று – வெறி என்பது எனக்குள்ளே கொஞ்சமாவது இருந்தாலும் இருக்கும் எனினும் மதவெறி என்ற சாக்கடைக்குள்ளே ஊறியவனல்ல நான்!//

//என்னை நான் எப்போதும் சமயம் கொண்டு இனம் காட்டியவனல்ல (வானொலியிலும் - வாழ்க்கையிலும் கூட) எனவே துவேஷம், முட்டாள்தனம், அவசரம் போன்ற வார்த்தைகளை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறேன்//

//எனக்கு அனுப்பியவாகள் பெற்றுக்கொண்டு அளவிருந்தால் சூடிக்கொள்ளுங்கள்!//

//நான் அடிப்படை நாத்திகனும் அல்ல..எனினும் மதங்கள் பற்றி எழுந்திருக்கும் வெறி,பைத்தியக்காரத் தனங்கள் கண்டு சற்று அலுத்துப் போய் இருக்கிறேன் என்பதே உண்மை..//

என்னுடைய பதிவின் மூலமாக வீண் விரோதங்கள் ஏற்பட்டிருந்தால் வருந்துகிறேன்.எனினும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. தவறு செய்தால் தானே..//

//பின்னூட்டம் போட்ட சிலர் எனக்கு மன்னிப்பு அனுப்பினால் மகிழ்வேன்.// Not happy with this line

//மதங்களை மதியுங்கள்.. நம்பிக்கை இருந்தால் பின்பற்றுங்கள்.. வெறியர்கள் ஆகாதீர்கள்.. //

//இருக்கும் பிறப்பிலேயே மனிதராய் வாழ்வோம்.. இறந்தபின்னர் நடப்பதை நினைத்து மதம் பிடித்து மரங்களாய் வாழாமல்.//

சத்தியாம, இந்த வரிகளைப் படித்து ஒரு நிமிசம் ஆடிப் போய்விட்டேன்.. ஒரு படி உங்களை மனதில் ஏற்றி வைத்துவிட்டேன்... Actually, வானொலி ஒலிபரப்பாளராக ஏன் ஒரு புளொக்கராக உங்கள் மேல் ஒரு நேசம்இருத்தாலும், ஒரு மனிதனாக, உங்கள் மேல் அளப்பெரிய மரியாதை வந்துள்ளது.. Hats off!!!!!!!

(சரி சரி ‍ பேசாமல் மரியாதையைக் காப்பாற்றும் வழியைப் பாக்கத் தொடங்குங்கோ... ஐபிஎல் பெண்களைப் பார்த்து வழியாமல்)//

ஆகா என் தங்கை என்னைப் புரிந்துகொண்டாள் என்று மெய்ம்மறந்து வசித்துக் கொண்டு போனால் அடைப்புக் குறிக்குள்ள ஆப்பு வச்சிட்டியே தங்கச்சி..

என்னமோ போ..

வால்பையன் said...

ஓ! இப்போ எஸ்.எம்.எஸ் மூலமா இந்த வேலை நடக்குதா!

உருப்பட்டா மாதிரி தான்!

கிராமத்து பயல் said...

மனிதன் மனிதனாக முதலில் வாழ்ந்தால் போதுமே
நல்ல விளக்கம் அனால் அது தேவையில்லை..

யாழினி said...

மதம் என்ற பெயரில் மனிதத்தை தொலைத்து விட்டு அலைபவர்களைப் பார்த்தால் வேதனையாக இருக்கும்.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஜோ,
உங்க பின்னூட்டம் பார்த்து சிரிப்பு அடக்கமுடியவில்லை.

:))))

நிரூஜா said...

காலத்தின் தேவைக்குஏற்ற பதிவு. பின்னூட்டம் இடும் மனநிலை இல்லை. எல்லாம் இந்திய தேர்தல் முடிவுகள் தான். ....! ம்ஹ்.... பாப்பம்...

ஆ! இதழ்கள் said...

ஜோ/Joe said...
சூட்டை குறைப்பதற்காக ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ளுகிறேன்.

//இதே smsஐ ஒரு இந்துவோ, கிறிஸ்துவோ அனுப்பியிருந்தாலும் கூட இதேயளவு எரிச்சல் எனக்கு ஏற்பட்டிருக்கும்.//

என்ன தான் இருந்தாலும் கிறிஸ்தவனுக்கு பதில் கிறிஸ்துவே நேரடியாக sms அனுப்பனுமுண்ணு எதிர்பார்க்குறது கொஞ்சம் அதிகம் தான் :)))))//

இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு கேக்குது..

லோஷன் - பதிவிற்கு வாழ்த்துக்கள்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..

View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner