June 26, 2011

ஹைனசும்,அவனும் இவனும் - ஞாபக அலைகள்


ஊர் மக்களின் அன்புக்கும் பரிதாபத்துக்கும் பாத்திரமான தனியாளாக வாழும் ஜமீன்தார்.

ஊர்மக்களுக்குப் பெரிதாக நன்மைகள் செய்யாவிட்டாலும், கொஞ்சம் பந்தா காட்டி, (தன்னைத் தானே ஹைனஸ் - Highness என்று அழைத்துக்கொள்ளும் அளவுக்கு)கோமாளித்தனம் செய்தாலும் மக்கள் அவரைத் தம் தலைவராகவே ஏற்றுக்கொள்ளும் ஒரு நல்ல மனிதர்.

அவரை உயிராக நேசிக்கும் இரு இளைஞர்களுக்கும் அனைத்தையும் வழங்கி ஒரு God Father ஆக இருக்கிறார் அந்த 'ராஜா'.
அவரது எதிரிகள் அவர்களுக்கும், ஊருக்குமே எதிரிகளே.
போலீசார் கூடக் கோமாளிகள்.

மற்றவர்கள் அவரை ஏமாற்றி, சொத்துக்களை அபகரித்து தனியாளாக விட்டுச் சென்றாலும் அவர் காட்டில் அவரே ராஜா.
அந்த இரு கோமாளி இளைய அடியாட்களோடு தன் நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்துவரும் தலைவருக்கும் அவரது இரக்கக் குணத்தாலேயே எதிரி உருவாகிறான்.

அந்தக் கொடூர எதிரியாலே, துரத்தி அடித்து, சேற்று நிலத்திலே நிர்வாணமாகப் படுகொலை செய்யப்படும் தங்கள் ராஜாவின் மரணம் கண்டு கொதிக்கும் அந்த இரு விசுவாச அடியாட்களும், கொலையாளியையும் சேர்த்தே எரிக்கிறார்கள்.

சில காட்சிகள் சில காட்சிகளின் உருவகம் சில விஷயங்களை ஞாபகப்படுத்துவதால் நாம் இருக்கும் நிலையில் மனதில் ஏற்படும் ஞாபக அலைகளால் இந்தக் கதை மனதுக்கு நெருக்கமாக வராமல், மனத்தைக் கொஞ்சமாவது உருக்காமல், பிடிக்காமல் போகுமா?

ஆனால் திரைப்படமாக......



பி.கு - நேற்றுப் பார்த்த அவன்-இவன் திரைப்படம் பற்றி நாளை பதிகிறேன்.

4 comments:

கார்த்தி said...

உங்களின்ர பார்வையில் படம் என்ன ரகம்? வொல்லவே இல்லையே!

Mathuran said...

//சில காட்சிகள் சில காட்சிகளின் உருவகம் சில விஷயங்களை ஞாபகப்படுத்துவதால் நாம் இருக்கும் நிலையில் மனதில் ஏற்படும் ஞாபக அலைகளால் இந்தக் கதை மனதுக்கு நெருக்கமாக வராமல், மனத்தைக் கொஞ்சமாவது உருக்காமல், பிடிக்காமல் போகுமா?///

உண்மைதான் லோஷன் அண்ணா.. உதாரணமாக ஜிஎம். குமார் கொல்லப்படும் காட்சி மறக்க நினைத்த பல விடயங்களை மீண்டும் ஞாபகப்படுத்துவதாய் அமைந்திருந்தது

Riyas said...

பார்த்தாச்சா அவசரமா பதிவிடுங்க

ம.தி.சுதா said...

////மனத்தைக் கொஞ்சமாவது உருக்காமல், பிடிக்காமல் போகுமா?////

அண்ணா இன்னும் நான் பார்க்கவே இல்லை அண்ணா...

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner