March 30, 2009

????? + 20 - 200வது பதிவு



இன்று கணக்கின் அடிப்படையில் எனக்கு 200வது பதிவு.

பதிவுகள் 200ஐ எட்டும் நேரம் வருகைகள் 150,000ஐத் தாண்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.  alexaவின் வரிசைப்படுத்ததிலும் 180,000க்குள்ளேயே இடம்பெற்றுள்ளேன்.
நம் பதிவுகளுடன் தொடர்ந்து வருவோர் (Followers) 96 (எப்படியாவது இன்னிக்கே சதமடிக்க உதவுவீங்கன்னு தெரியுமே!)

பல மைல்கல்களை ஒரே நேரத்தில் பதிவு செய்யும் இந்தப் பதிவில் எனது நண்பர்கள் என் வலைத்தள வாசகர்கள் சில அனானிகள் (இவர்கள் இரண்டு பிரிவுகளுள்ளும் அடங்காதவர்கள்) ஆகியோரின் கேள்விகள் சிலவற்றுக்கான பதில்களைத் தரலாமென்று எண்ணியுள்ளேன்.

இந்தக்கேள்விகள் (சந்தேகங்கள்) மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் smsகள் மற்றும் நேரடியாகவும் வந்தவை.என்னுடைய பல பதிவுகளிலேயே சில விஷயங்களை ஏற்கெனவே சொல்லியிருந்த போதிலும் இந்த 200வது பதிவிலேயே அவற்றை மீண்டும் அழுத்தமாகச் சொல்லவேண்டும் என்பதனால் மீண்டும் சில இடம்பெறுகின்றன.

இதோ உங்கள் கேள்விகள் எனது கேள்விகளாகவும் என் பதில்களும் -

கே - உங்கள் துறையை விட அதிகமாக கிரிக்கெட் சினிமா பற்றி எழுதுவது ஏன்? ஹிட்சுக்காகவா?

-  ஒலிபரப்புத்துறையிலேயே ஏழுநாளும் இருபத்து நான்கு மணிநேரமும் இருப்பதனால் அதுபற்றியே எழுத சிலவேளை சலிப்பாக இருக்கும். எனினும் ஒலிபரப்பு என்றுமே எனக்கு சலிப்பதில்லை.

ஆனால் நான் ஆரம்பித்த எனது பத்துவருடகால ஒலிபரப்பு அனுபவங்கள் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன் - பதிவிடுவேன்

சில வானொலி விஷயங்களை விரிவாக நான் எழுத முடியாமலிருக்கிறது. நான் இன்னமும் வானொலியில் பணியாற்றுவதால் போட்டி வானொலிகளை (நான் முன்னர் பணியாற்றிய வானொலிகள்) பற்றிப் பல விஷயங்களை எழுத முடியாத நிலையும் எனது வெற்றி எப் எம் பற்றிய சில தொழிநுட்ப விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாமலுள்ளது.

எனினும் எப்போதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான இடம்பெறும் நேரம் எனக்கும் பொறுமையும் நேரமும் இருந்தால் ஒலிபரப்பு பற்றிய பதிவு வரும்.

கிரிக்கெட் எனது மனதுக்குள்ளேயே சிறுவயது முதல் ஊறிப்போன ஒரு விடயம்! ஒலிபரப்புக்கு முதல் கவிதையை விட படிப்பை விட எனக்கு கூடுதலாகப் பிடித்தது கிரிக்கட். இப்போதும் விடாமல் தினமும் நான் தொடர்வதும் என்னைத் தொடர்வதும் கிரிக்கெட்தான்.

அதுபோல தினந்தோறும் கிரிக்கெட்டிலும் சினிமாவிலும் தான் (அரசியல் தவிர) ஏதாவது புதிதாய் நடந்து கொண்டேயிருக்கும். இவையிரண்டுமே வாசிக்கும் அனைவருக்கும் பிடிக்கும்.  எனவே தான் அடிக்கடி கிரிக்கெட் - இதற்கு அடுத்தபடியாக சினிமா. எனினும் ஓப்பீட்டளவில் என் சினிமாப் பதிவுகள் குறைவானவையே!

ஹிட்சுக்கேன்றே சில பதிவுகளை எழுதினாலும் கூட என் ஒலிபரப்புத் துறை சார்ந்த பதிவுகளும் கூட பல ஹிட்ஸ் பெற்றவையே.. 

கே - ஒவ்வொரு நாளும் பதிவு போடுமளவுக்கு அலுவவலகத்தில் வெட்டியா?

- அப்படியில்லை. Time management– நேர முகாமைத்துவமும் என்னுடைய தொழில் துறையும் சக ஊழிய நண்பர்களின் ஒத்துழைப்புமே காரணங்கள்.

சாதாரணமாக மற்றவர்களுக்கெல்லாம் 8 – 8 ½ மணிநேர வேலை. ஆனாலும் நானோ 10 முதல் 12 மணிநேரம் வரை அலுவலகத்தில் பணிபுரிபவன். இதில் 4மணிநேர நிகழ்ச்சி. அதன்பின் இருக்கும் நேரத்தில் முகாமைத்துவ, ஒலிபரப்பு, பிரதியெழுதும் வேலைகளும் சில கூட்டங்களில் கலந்துகொள்வதும் கூட்டங்களை நடத்துவதும் எனக்கான கடமைகள். 
இவற்றுக்கிடையில் கிடைக்கும் நேரத்தை என் வலைப்பதிவுலகத்துக்கும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

வீட்டில் நேரம் கிடைக்கும் போது பதிவிடுவது தவிர எழுதிக் கொண்டு வருவதை நான் அடிக்கடி சொல்லும் அருந்ததி அக்காவின் அனுசரணையில் பதிவேற்றக் கூடிய வாய்ப்பும் எனக்கான அதிர்ஷ்டம் தான். (இந்தப் பதிவு கூட அப்படிதான்)

கே - பதிவுலகில் நுழைந்ததும் தனிப்பட்ட வாழ்க்கையிலோ தொழிலிலோ பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதா?

- ஆமாம் - சின்னச் சின்னப் பாதிப்புக்கள் தான்!
இல்வாழ்க்கை விவாகரத்து வரை போகவில்லை
வேலைக்கு இதுவலை வந்தப் பிரச்சனையுமே இல்லை.

ரொம்ப பரபரப்பான ஆர்வமான நாட்களில் வீட்டில் எந்த நேரமும் கணணி முன் இருந்தால் சண்டை சச்சரவு வராதா?  இதனால் தான் கணணி முன் அமராமல் கூடுதலான வரை எழுதிக் கொண்டு தட்டச்சி பின் பதிவேற்றுகிறேன்.

அலுவலகக் கடமைகளைப் பொதுவாகப் பாதிக்காத வகையில் பதிவில் ஈடுபட்டாலும் சில நாட்களில் 4மணிநேர நிகழ்ச்சியிடையே பல தடவை கலையகத்துக்கும் எனது இருக்கைக்கும் இடையே ஒடி ஒடி உழைப்பதுண்டு.

கே - பதிவுகளில் இவ்வளவு நேரத்தை செலவிடுவதில் ஏதாவது ஆதாயம்?

- அட்சென்ஸ் மற்றும் பல விளம்பரங்கள் போட்டிருந்தாலும் அந்த விளம்பரங்களுக்கான வெகுமதியெல்லாமே On the way தான். வந்து சேரும் போது மில்லியன் கணக்கில் வந்து சேரும் போல தெரியுது.

ஆனால் இதனைவிட அதிகமாகப் பெற்றவை பல உண்டு.வானொலியினால் பெற்ற பிரபல்யத்தை விட இப்போது வலைப்பதிவர் என்ற பிரபல்யம் சர்வதேச ரீதியாக அதிகம்.

பல புதிய நண்பர்கள் கிடைத்துள்ளனர். பழைய நண்பர்கள் நெருக்கமாகியுளளனர். இவையெல்லாவற்றையும் விட முன்பை விட வாசிப்பும் பழக்கம் அதிகரித்துள்ளது.எப்போதும் வாசிப்பவனாக நான் இருந்தாலும் இப்போ எழுத ஆரம்பித்த பிறகு எங்கேயாவது இசகு பிசகா எழுதிடுவேனா என்று அதிகமாகவே வாசிக்கிறேன்.

இது ஒலிபரப்பிலும் எனக்கு நிறையவே உதவுகிறது. 


கே -  அனானிகளின் கடுமையான விமர்சனங்களின் பயம் தான் பின்னூட்டங்களுக்கு மட்டுறுத்தல் போட வைத்ததா? முன்பெல்லாம் துணிச்சலாக திறந்து விட்டிருந்தீர்களே?

-  ஆமாம்.. எதற்கும் ஒரு எல்லை இருக்கு தானே.. சில விமர்சனங்கள் எல்லை மீறி என்னை மட்டுமல்லாமல் பலரையும் தனிப்பட்ட முறையில் சீண்டும் போதும், எனக்கு அந்த அனானிப் பின்னூட்டங்கள் ஏதாவது சிக்கலை ஏற்படுத்தும் எட்ன்று நான் கருதியபோதும் தான் அன்புக்குரிய சிரேஷ்ட பதிவர் ஒருத்தர் "உங்கள் தளத்தை மற்றவர் அசிங்கம் செய்து குப்பையாக்க என் அனுமதிக்கிறீர்கள் " என்று ..
மட்டுறுத்தல் போட்டேன்.. அனால் இன்றும் பெயர் தாங்கி (உண்மைப் பெயர்) வரும் எந்தவொரு விமர்சனத்தையும் (அது பிரசாரம்,மற்றவர் மீதான வசைபாடலாக இல்லாத இடத்தில்) என் தளத்தில் பிரசுரிக்கிறேன்.

அனானிகளை ஒரு போதும் நான் வெறுப்பதோ,இல்லையேல் தடை செய்யப்போவதோ இல்லை.. காரணம் பல வாசகர்கள் இல்லாததால் அனானிகளாக வந்து பின்னூட்டுகிறார்கள். பலர் பல காரணங்களினால் பெயர்களை சொல்லாமல் மறைக்கிறார்கள்.. எனினும் எனது எல்லா வாசகர்கள்/நண்பர்களுக்கும் சின்ன வேண்டுகோள்.அனானிகளாக வந்து பின்னூட்டினாலும் பெயர் இடம் என்பவற்றை மட்டும் வெளிப்படுத்துங்கள்.. 

கே -  இலங்கைப் பிரச்சினை பற்றி எழுதுவதைக் குறைத்து/நிறுத்தி விட்டீர்களா? பயமா?

-  ஆம்.. பயமில்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.. எனக்கு மட்டும் ஆபத்து என்றால் பரவாயில்லை.. என் சார்ந்தோருக்கும் என்று வரும்போது ஏன் வம்பு?

அப்படியிருந்தும் சில விஷயங்களை தெரியப்படுத்தும் விதத்தில் அறியத் தருகிறேன்..

அரைகுறையாக பட்டும் படாமலும் சொல்வதை விட சொல்லாமலே விடலாம் என்று தான் சில விஷயங்களில் நான் கை வைப்பதே இல்லை.. (அதற்குரியவர்கள் அந்தந்த விஷயங்களை சரியாக செய்யும் போது நான் எதுக்கு?)
 
முன்பே நான் சொன்னது போல காலம் வரும்வரை காத்திருக்கிறேன்.. ஏன் கைகளையும் கருத்துக்களையும் கட்டி வைத்துக் கொண்டே..


கே -  இலங்கைப் பதிவர் என்ற அடையாளம் உங்களுக்கு advantage?/dis advantage?

-  இரண்டுமே இல்லை.. என்னைப் பொறுத்தவரை தமிழ் பதிவர் என்பதே எனதும் எல்லோரும் அடையாளம் என்றிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.. 
பிரிந்து கிடந்து படுகிறோமே போதாதா?

இன்னும் பல கேள்விகள் இருந்தாலும் எல்லாவற்றையும் இங்கே இப்போது கொட்டி,பதில்களையும் கொட்டினால் "எங்க அலுவலகத்தில் வலைப்பதிவு படிக்க மேலதிக நேரம் கொடுக்க மாட்டாங்க" னு சண்டைக்கு வரலாம் .. So,இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறேன்..

இன்னமும் உங்களிடம் இருக்கும் என் பதிவுகள்,என் பற்றிய கேள்விகளைத் தயவுசெய்து அனுப்புங்கள்..
arvloshan@gmail.com
மாதமொரு முறையாவது பதில் தரலாமே..

   --- ****----

நான் இதுவரை எழுதிய 200 பதிவுகளில் நானே ரசித்து எழுதிய 20 பதிவுகள்..

நேரமிருந்தால்,முன்பு வாசித்திராவிட்டால் கொஞ்சம் எட்டிப்பார்த்து வாசித்துப் போங்களேன்.. அந்தப்பதிவுகளும் ஜென்ம சாபல்யம் பெறும்...

ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மறுபடி சுவைக்கலாம் .. தப்பில்லை.. (கொடுமைன்னெல்லாம் சொல்லப்படாது.. )






















42 comments:

சி தயாளன் said...

வாழ்த்துகள்...குறுகிய காலத்தில் வானலைகளில் சாதித்ததைப் போல் மேன்மேலும் பதிவுலகிலும் சாதிக்க வாழ்த்துகள்..:-))

எம்.எம்.அப்துல்லா said...

வாழ்த்துகள் அண்ணா :)

Abiman said...

Congrats anna..

பூச்சரம் said...

பூச்சரம் - இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS : BETA VERSION NOW ONINE

இலங்கை பதிவர்கள் தங்கள் வலைப்பூக்களை சமர்ப்பியுங்கள்..

புல்லட் said...

வாழ்த்துக்கள்... :)

இதயம் said...

லோஷன் வாழ்த்துக்கள்.

மென்மேலும உங்கள் எழத்துப்பணி தொடர மீண்டும என் வாழ்த்துக்கள்

கேள்வி பதில் அருமைதொடரட்டும்!!

இப்போது அடிக்கடி புதிய பதிவு பார்க்கமுடிகிறது

good.

Tech Shankar said...

மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்.

//.வானொலியினால் பெற்ற பிரபல்யத்தை விட இப்போது வலைப்பதிவர் என்ற பிரபல்யம் சர்வதேச ரீதியாக அதிகம்.

Anonymous said...

good

nimalesh said...

alla the best bro..

kuma36 said...

வாழ்த்துகள் அண்ணா!!!!!!!

இர்ஷாத் said...

வலைப்பூக்களுக்கு ஒரு வரம்
வாங்கித்தந்தது உன் கரம்
இலங்கை தமிழ் வலைப்பூக்களின்
இயற்பிடம் ஆனாய்
கல்லூரியும் ஆனாய்

பூக்கள் சில - மலர்க்கொத்து
போதாது அது எனக்கு
பேராசையாய் கேட்பேன் நந்தவனம்
அதில் வரவேண்டும் வண்டுகளுமாயிரம்
பதிவுகள் இருநூறு
பாதையோ மிக நெடிது
இருந்தாலும்
மறந்துவிடு பழங் கணக்கு
தொடங்கிவிடு புது இலக்கு

தொடுவதற்கு இருக்கு ஆயிரம்
தொடவேண்டும் நீ சீக்கிரம்

Jackiesekar said...

வாழ்த்துகள்loshan....

வேத்தியன் said...

200வது இடுகைக்கு வாழ்த்துகள் லோஷன் அண்ணா...
அப்புறம் இன்னொரு தடவை பரிசீலனை பண்ணி கமென்ட் மாடரேஷனை எடுத்து விடுங்களேன்...
மீ த பர்ஷ்ட்டு போட வசதியா இருக்கும்ல..
அதான்...
:-)))

சின்னப் பையன் said...

வாழ்த்துகள் அண்ணா :)

ARV Loshan said...

டொன் லீ, அப்துல்லா, அபிமான் நன்றிகள்.. வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும்..

நன்றி புல்லட்..

நன்றி இதயம்..

//இப்போது அடிக்கடி புதிய பதிவு பார்க்கமுடிகிறது
//
?? வித்தியாசமான பதிவுகளை சொல்கிறீர்களா?

நன்றி தமிழ் நெஞ்சம்

அனானி, நிமலேஷ் நன்றிகள்..

ARV Loshan said...

கலை நன்றி..

இர்ஷாத்.. நெஞ்சைத் தொட்டு விட்டீர்கள்.. கவி வாழ்த்துக்கு நன்றி..

//மறந்துவிடு பழங் கணக்கு
தொடங்கிவிடு புது இலக்கு //

புரிகிறது பல பொருளும்.. :)

jakkie சேகர் நன்றி..

வேத்தியன் நன்றி.. எனக்கும் எடுக்க விருப்பமாகத் தான் இருக்கு.. கொஞ்ச நாள் போகட்டுமே.. :)

நன்றி சின்னப்பையன்..

பூச்சரம், உலவு.. முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.. எம் ஆதரவு எப்போதும் இருக்கும்..

Gajen said...

வாழ்த்துக்கள் அண்ணா!! மென்மேலும் எழுதுங்கோ!! காலம் வரேக்க எழுத வேண்டியத எழுதுங்கோ...

FunScribbler said...

200? very good! congrats! you have a long way to go. keep rocking.

கணினி தேசம் said...

வாழ்த்துகள்.

:)))))

Anonymous said...

வாழ்த்துக்கள்! மென்மேலும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்!

VVK
CHENNAI

ஆ.ஞானசேகரன் said...

மனம் மிகுந்த வாழ்த்துக்கள்

SASee said...

பாட்டும் நானே...
பாவமும் நானே...
மாதிரி்......
கேள்வியும் நானே...
பதிலும் நானே....
போடும் உனை நாம்
போட வைத்தோமே....
(அந்த மெட்டில் இதையும் பாடிப்பாருங்களே அண்ணா பொருத்தமாயுள்ளது)

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணா...

வெற்றி மீது வெற்றி வந்து
உம்மைச் சேரும்....
அதை வாங்கித்தந்த
பெருமையெல்லாம்...?????????

ARV Loshan said...

நன்றி தியாகி..

//காலம் வரேக்க எழுத வேண்டியத எழுதுங்கோ...//
ம்ம்ம்ம் காத்திருக்கிறோம்..

நன்றி தமிழ்மாங்கனி..

நன்றி கணினிதேசம்

நன்றி VVK

நன்றி ஆ.ஞானசேகரன்

Thusha said...

வாழ்த்துக்கள் அண்ணா


மீண்டும் உங்கள் அடுத்த பதிவில்

ARV Loshan said...

நன்றி சசீ..

வெற்றி மீது வெற்றி வந்து
உம்மைச் சேரும்....
அதை வாங்கித்தந்த
பெருமையெல்லாம்...?????????//

வேறு யார்... உங்களை சேரும்..

நன்றி துஷா.. :)

பிளாட்டினம் said...

வாழ்த்துக்கள் அண்ணா... நானும் ஒரு அனோனி யா?

Tech Shankar said...

I am proud about u.

I am the 100th follower for you.

I joined as a follower in your blog.

Great Feeling.

by
TN. (Please check your private mail)

ARV Loshan said...

நன்றி பிளாட்டினம் ..
//நானும் ஒரு அனோனி யா?//
உங்களுக்கு தான் பெயர் இருக்கே.. அப்போ நீங்கள் அனானி கிடையாது..

நன்றி தமிழ்நெஞ்சம்.. தொடர்வதற்கும் நன்றி..

(பார்த்தேன் நன்றி)

Anonymous said...

வாழ்த்துக்கள் லோசன்

கல்வி அபிவிருத்தி ஒன்றியம் said...

வாழ்த்துக்கள் லோசன் அண்ணா....

உங்கள் பக்கங்களுக்கு வந்து உலகத்தை வளம் வருபவன் நான். உங்கள் பக்கம் வேஅவில்லை என்றால் அன்றைய நாள் நிம்மதி அற்ற ஒரு நாள் எனக்கு...

தொடர்ந்தும் சாதனைகளை எதிர்பார்க்கிறேன்.

Subankan said...

வாழ்த்துக்க‍ள் அண்ணா!, 200 பதிவுகளுடனும் கூடவே பயணித்த‍வன் என்ற பெருமை எனக்குண்டு. உங்களைப்பார்த்து எழுத்த் தோடங்கியவன் நான். எனது பதிவில் உங்கள் பாராட்டைப்பார்த்த‍போது இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி.

Sinmajan said...

வாழ்த்துக்கள் அண்ணா..
”களை”ஞர் மாதிரி கேள்வி பதிலும் ஆரம்பிச்சிட்டீங்க..
ஹி..ஹி..உடன்பிறப்பே..
(ம்..ம்..இப்ப திருப்தி..)

Vathees Varunan said...

வாழ்த்துக்கள் லோஷன் அண்ணே,

kuma36 said...

இந்த கேள்விகளேல்லாதையும் வாசித்துவிட்டு பதிலை வாசிக்காமலே எப்படி சொலிருப்பிங்கனு ஒரு கற்பனைப்பன்னிகிட்டு வாசித்தேன் 100க்கு 90% நான் நினைத்தது சரி, இன்னும் கொஞ நாளில் 10%...

Unknown said...

அண்ணா! கலக்குறீங்க போங்க.. All the BEST!!

ARV Loshan said...

நன்றி அனானி..


சந்ரு said...
வாழ்த்துக்கள் லோசன் அண்ணா....//
நன்றி

உங்கள் பக்கங்களுக்கு வந்து உலகத்தை வளம் வருபவன் நான். உங்கள் பக்கம் வேஅவில்லை என்றால் அன்றைய நாள் நிம்மதி அற்ற ஒரு நாள் எனக்கு...//
நன்றி


தொடர்ந்தும் சாதனைகளை எதிர்பார்க்கிறேன்.//
நன்றி


Subankan said...
வாழ்த்துக்க‍ள் அண்ணா!, 200 பதிவுகளுடனும் கூடவே பயணித்த‍வன் என்ற பெருமை எனக்குண்டு. உங்களைப்பார்த்து எழுத்த் தோடங்கியவன் நான். எனது பதிவில் உங்கள் பாராட்டைப்பார்த்த‍போது இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி.//

நல்ல விஷயங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்.. நன்றி & வாழ்த்துக்கள்..


Sinmajan said...
வாழ்த்துக்கள் அண்ணா..
”களை”ஞர் மாதிரி கேள்வி பதிலும் ஆரம்பிச்சிட்டீங்க..
ஹி..ஹி..உடன்பிறப்பே..
(ம்..ம்..இப்ப திருப்தி..)//
அடப்பாவி.. யாரை யாருடன் .??? எனக்கு இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா..



வதீஸ்வருணன் said...
வாழ்த்துக்கள் லோஷன் அண்ணே,//
நன்றி


கலை - இராகலை said...
இந்த கேள்விகளேல்லாதையும் வாசித்துவிட்டு பதிலை வாசிக்காமலே எப்படி சொலிருப்பிங்கனு ஒரு கற்பனைப்பன்னிகிட்டு வாசித்தேன் 100க்கு 90% நான் நினைத்தது சரி, இன்னும் கொஞ நாளில் 10%...//

ஓ.. இதெல்லாம் வேற நடக்குதா? அப்போ அடுத்த முறை எனக்கு வர்ற கேள்விகளையெல்லாம் உங்களுக்கு அனுப்பினாப் போச்சு.. ;) வேலை குறைஞ்சிட்டு ..

ப்ரியா பக்கங்கள் said...

வாழ்த்துக்கள் நண்பரே,
உங்க Blog Writing
எங்களுக்கு பஞ்சாமிர்தம் மாதிரி .
இங்கு தமிழ் பத்திரிகைகள் கூட இல்லை, இணைய பத்திரிகைகள் வாசித்தல் மட்டும் தான். அதிலும் உங்க தயாரிப்புகள் இக்கு தான் முதலிடம்.
தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க எங்களை மாதிரி பசங்க இருகாங்க!!!
ஆபிசில தீபா, Vijju.. ( Unga Fans) போன்றோரும் உங்களை வாழ்த்தினதா சொல்ல சொன்னவை..

Priyan
(Holland)

ஆதிரை said...

அட லோஷன் (இப்படி அழைக்கும் உரிமையை எடுத்துக் கொள்கின்றேன்)...

வாழ்த்துக்கள். உங்களுடைய அனைத்துப் பதிவுகளுடனும் கை கோர்த்து நடந்தவன் என்ற ரீதியில் பெருமைப்படுகின்றேன்.

இப்போதெல்லாம் வேலைத்தளத்தில் என் தலைக்கு மேல் வேலை. ஆனாலும், உடனுக்குடன் உங்கள் பதிவுகளை வாசிக்க முடிந்தாலும் சிலசமயங்களில் என் கருத்துக்களை பின்னூட்டமிட தாமதமாகிவிடுகின்றது. இந்தப் பின்னூட்டம் போன்று.... ஆனாலும், உங்களைப் பின்தொடருவேன்... (பதிவுகளில் தான். Arpico விலும், No-Limit இலும் அல்ல......:D)

ARV Loshan said...

Priyan said...
வாழ்த்துக்கள் நண்பரே,//

நன்றி நண்பரே


//உங்க Blog Writing
எங்களுக்கு பஞ்சாமிர்தம் மாதிரி .//

ஆகாகா.. பழனியா நல்லூரா? ;)


//இங்கு தமிழ் பத்திரிகைகள் கூட இல்லை, இணைய பத்திரிகைகள் வாசித்தல் மட்டும் தான். அதிலும் உங்க தயாரிப்புகள் இக்கு தான் முதலிடம்.
தொடர்ந்து எழுதுங்கள் வாசிக்க எங்களை மாதிரி பசங்க இருகாங்க!!!//

அந்த துணிச்சல்ல தானே தொடர்ந்தும் எழுதிறேன்.. ;)]

//ஆபிசில தீபா, Vijju.. ( Unga Fans) போன்றோரும் உங்களை வாழ்த்தினதா சொல்ல சொன்னவை..

Priyan
(Holland)//

ஆகா.. அன்பான தீப,விஜு ரெண்டு பேரையும் சிறப்பா விசாரிச்சதா சொல்லுங்க.. :)

ARV Loshan said...

ஆதிரை said...
அட லோஷன் (இப்படி அழைக்கும் உரிமையை எடுத்துக் கொள்கின்றேன்)...//

பரவால்ல.. அடேய் என்று கூபிட்டாக் கூட ஓகே தான்.. (வீதியில் அல்ல)


//வாழ்த்துக்கள். உங்களுடைய அனைத்துப் பதிவுகளுடனும் கை கோர்த்து நடந்தவன் என்ற ரீதியில் பெருமைப்படுகின்றேன்.//

நன்றி சகோதரா.. தெரியும்.


//இப்போதெல்லாம் வேலைத்தளத்தில் என் தலைக்கு மேல் வேலை.//

தலைக்கு மேல் வேலை என்றால் தலை வலிக்குமே.. ஓவர் வேஇட் வைக்காதீங்க..தலைப் பாரம் வரும்.;)


//ஆனாலும், உங்களைப் பின்தொடருவேன்... (பதிவுகளில் தான். Arpico விலும், No-Limit இலும் அல்ல......:D)//

ஹா ஹா.. பின் தொடருங்க பரவால்ல.. பயமுறுத்தாதீங்க.. (மூன்று இடத்திலேயும் ;) )

Anonymous said...

வாழ்த்துக்கள்! லோசன் அண்ணா!

பனித்துளி சங்கர் said...

வாழ்த்துகள் தல !

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner