September 21, 2009

முன்னூறாவது பதிவு - சில நம்பர்கள் & சில நண்பர்கள்



இது எனது முன்னூறாவது பதிவு.. முதலாவது பதிவு இட்டதே இன்னமும் நேற்றுப் போல ஞாபகம் இருக்கிறது..

இந்தப் பதிவின் மூலம் சில சுவாரஸ்யமான புள்ளி விபரங்களை பகிரலாம் என்று ஒரு ஆசை..

எனக்கு எப்போதுமே புள்ளிவிபரங்களில் ஒரு தனியான ஆசை.. அது கிரிக்கெட்டோ,அரசியலோ,பொது அறிவோ, இல்லை ஏன் வலைப்பதிவுகளோ அடிக்கடி புள்ளி விபரங்களைப் பதிந்து வைத்துக் கொள்வது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம்.

அது என்னை நானே எடை பார்த்து மேம்படுத்திக் கொள்ள எப்போதுமே உதவுகிறது..


* குறி சொற்களின் அடிப்படையில் அதிக பதிவுகள் எழுதப்பட்ட விஷயம் - இலங்கை, கிரிக்கெட், இந்தியா..

* அதிகம் பேரால் ஒரே நாளில் வாசிக்கப்பட்ட பதிவுகள்..
ஹிட்சை வாரிக் கொட்டி வருகைகளை அதிகப் படுத்தியவை இந்தப் பதிவுகள்.. சில பின்னூட்டங்களையும் வாரித் தந்துள்ளன..























* பின்னூட்டங்களை எனக்கு அதிகம் வழங்கி முன்னணியில் இருப்போர்.. (இவங்களை முந்த அதிகதிகம் பின்னூட்டம் போடப் போகும் சிங்கங்களையும் சிங்காரிகளையும் என் வலைத்தளம் வலை விரித்து அழைக்கிறது)
ஆதிரை (105)
வந்தியத்தேவன் (99)
என்ன கொடும சார் (83)
’டொன்’ லீ (81)
சந்ரு (75)
Sinthu (73)

(அனானிகளாக மிக அதிகமான பின்னூட்டங்கள் வந்திருந்தாலும் பெயருள்ளவர்களின் அடிப்படையிலான வரிசை இது.. )


*அதிகமான பின்னூட்டங்களைக் குவித்த பதிவுகள்..







*இதுவரைகாலமும் எனது தளம் எட்டிய அலெக்சா தரப்படுத்தலின் உச்ச ஸ்தானம் 180 320.

பின்னர் கொஞ்சக் காலம் இடைவெளி விட்டதாலும், முன்பெல்லாம் போல ஒவ்வொரு நாளும் ஒரு பதிவு வீதமோ, ஒவ்வொரு வாரமும் ஐந்து பதிவாவது போட முடியாததால் அலெக்சா தரப்படுத்தலில் இப்போது 294,137ஆவது ஸ்தானத்தில் நிற்கிறேன்..

ஆனால் தேடித் பார்த்த வேளையில் இலங்கைப் பதிவர்களில் சர்வதேசத் தரப்படுத்தலில் எனது தளம் தான் முன்னிலையில் நிற்கிறது.

எனினும் இலங்கையில் உள்ள பிரபலமான வலைத்தளங்களில் எனக்குக் கிட்டியுள்ளது 1525ஆம் இடம் மட்டுமே.. (இலங்கையில் பிரபலமான வலைத்தளங்களில் நண்பர் வந்தியத்தேவனின் என் உளறல்கள் முன்னிலையில் உள்ளது.. 692.. முழுமையான விபரமான தகவல்கள் வெகுவிரைவில் என் பதிவாக வரும்.. நம்புங்கப்பா வெகு விரைவில் தருவேன்)

*இதுவரை எனது தளத்துக்கு ஒரே நாளில் கிடைத்த அதிக ஹிட்ஸ்..

3424
2653
2638


*அதிகமானோர் வருகை தந்த நாடுகள்..

இந்தியா
இலங்கை
அமெரிக்கா
சிங்கப்பூர்
பிரித்தானியா
கனடா
ஐக்கிய அமீரகம்
பிரான்ஸ்
சவூதி அரேபியா
ஆஸ்திரேலியா


வழமையாகவே நண்பர்கள் அதிகமுள்ள எனக்கு இந்த ஒருவருட பதிவுலக வாழ்க்கையில் மேலும் நண்பர்கள் பல்கிப் பெருகியுள்ளனர்..

முகம் தெரிந்த மற்றும் முகம் அறியாதவர்கள்..

அவர்களில் ஒரு சிலரை முக்கியமாக இங்கே சொல்ல வேண்டி இருக்கிறது..

லக்கி லுக் (தற்போது யுவக்ருஷ்னா), அகிலன், கார்க்கி, கோவி கண்ணன்,சாரு நிவேதா, சயந்தன், பரிசல்காரன்,ஜ்யோவ்ராம் சுந்தர் போன்றோரின் தளங்கள் தான் முன்பு அதிகம் நான் வாசித்து பதிவுலகம் வரத் தூண்டியவை.

பதிவுலகப் பயணத்தின் ஆரம்பத்திலும் தற்போதும் ஆலோசனை போன்றவற்றில் உதவும் நண்பர் என் கீழ் பணிபுரியும் புது மாப்பிள்ளை பிரதீப்..

ஆரம்பத்தில் நிறைய ஊக்குவித்து,நெளிவு சுளிவு, திரட்டிகள் பற்றிய நுட்பமும் சொல்லித் தந்த சயந்தன்..

முன்பே அறிந்த ஆனால் இவர் தான் என்று அறியாமல் பின் வலையுலக பதிவர்களாக அறிமுகமாகி,நண்பராகி இப்போது மிக நெருக்கமான நண்பராகியுள்ள வந்தியத்தேவன்,,
எங்கள் ரசனைகள் பல ஒத்திருப்பதால்(சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ) நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்கிறோம்..

தொழிநுட்ப விஷயங்கள் அட்சென்ஸ் பற்றியெல்லாம் நிறிய சொல்லித் தந்த தமிழ்நெஞ்சம்.. இதுவரையும் மின்னஞ்சலில் மட்டுமே எம் தொடர்பு..

என் சக ஊழியரின் தம்பியாக தெரிந்து, பின்னர் நண்பராகி, என் வலைத்தள வாசகராக நிறைய ஆலோசனைகளையும் பல தொழிநுட்ப உதவிகளையும் செய்து தரும் நண்பர் ஹர்ஷேந்த்ரா.. என் வார்ப்புருவும் அவர் கைங்கரியமே..

அலுவலக சக பதிவர்கள் ஹிஷாம்,அருண், சதீஷ்..
ஹிஷாமும் நானும் போட்டிக்கு பதிவு போட்ட காலம் இருந்தது.. இப்போது அவர் அதிகம் போடுவதில்லை.. இதனால் ஒரு சுவாரஸ்யம் எனக்கும் இருப்பதில்லை.பல் தொழிநுட்ப விஷயங்கள் பதிவுலக சூட்சுமங்களை நாம் பகிர்ந்திருக்கிறோம்..

தம்பிமார் அருண்,சதீஷ் ஆகியோரும் என் நலன்விரும்பிகள்.. சதீஷ் முன்பெல்லாம் என் சில பதிவுகளை தட்டச்சியும் தந்திருக்கிறார்.. அருண் பல கட்ஜெட் உதவிகள் செய்துள்ளார்.

ஆரம்பப் பதிவுகளில் பின்னூட்டங்கள் மூலமாக ஊக்குவிப்பும் பாராட்டும் வழங்கிய மாயா, கோவி கண்ணன் ஆகியோரையும் மறக்க முடியாது..சிங்கையில் கோவி அண்ணனை சந்தித்தது மனது மறக்கா நிகழ்வு..

முதல் தடவை தொடர்பதிவுக்கு அழைத்த பரிசல்காரன்..

சகா என்று பழகும் கார்க்கி..சாட்டிங்கில் நண்பரான நெல்லை மோகன்,அதிஷா..

பின்நூட்டிகளாக அறிமுகமாகி பின்னர் பதிவர் சந்திப்பின் பின் நெருக்கமான நண்பர்களான ஆதிரை, புல்லட்..
பல விஷயமும் பகிரும் நண்பர்கள் இவர்கள்..

முன்பே கொஞ்சம் பழக்கமாக இருந்து எனது சிங்கப்பூர் விஜயத்தின் பின்னர் நட்பான டொன் லீ மற்றும் விசாகன்(கதியால்)..

சிங்கையில் நட்பாகி இனிய நண்பராக இருக்கும் ஞானசேகரன்..

நேயரகாத் தெரிந்து நண்பர்களாகி இருக்கும் யோ(கா) மற்றும் கலை..
கிழக்கிலிருந்து நட்பாகி இருக்கின்ற சந்த்ரு மற்றும் பிரபா..

பதிவர் சந்திப்புக்கு பிறகு நெருங்கி இருக்கும் கௌ பாய் மது,பால்குடி,சுபானு..

இது தவிர இனிய பழகும் நண்பர்கள் கானா பிரபா, ரிஷான், ஜோதி பாரதி,சுபாங்கன்,குசும்பன் இன்னும் பலர்..

பின்னூட்டங்களை அடிக்கடி இடும் பங்களாதேஷ் சகோதரியர் கூட்டம் சிந்து,துஷா, யாழில் இருந்து ஹம்ஷி.. இங்கிலாந்திலிருந்து அடிக்கடி வரும் நண்பி மது.. சிங்கையிலிருந்து ஒரே வானொலித் துறையினால் பழக்கமாகி நட்பான விமலா(ஒலி)- இரு முறை சிங்கை சென்றும் இரண்டு பேரும் பிஸியாக இருந்ததால் சந்திக்கவில்லை..

என் வானொலி நிகழ்ச்சி நேயராக அறிமுகமாகி பின் வலைத்தள வாசகராகி, வித்தியாசமான பின்னூட்டங்கள் விமர்சனங்கள் மூலமாக என்னுடன் நெருக்கமான என்ன கொடும சார்.. அவர் என்னை துரோணர் என்கிறார்.. ;)

இன்னுமொரு மறக்க முடியாத நண்பர் செந்தழல் ரவி.. எனது சிக்கலான நேரத்தில், சிறை சென்ற போது, ஒரு உருக்கமான பதிவின் மூலம் பலருக்கு அறியத் தந்தவர்..

யாரையாவது தவற விட்டிருந்தால் மன்னிக்க..

பின்னூட்டமிடாமல் தொடர்ந்து வாசித்துவருகின்ற பல நண்பர்களும் எனக்கு நட்பாகி இருக்கிறார்கள்..

எனது தளம் முழுவதும் நிரம்பிக் கிடக்கும் கட்ஜெட் எல்லாமே இப்படியான சுவாரஸ்யமான தரவுகள்,புள்ளி விபரங்களை நான் அறிந்துகொள்ள தான்.. இதில் ஒரு தனி சந்தோசம்..
எனவே தான் உங்களோடும் அதை இங்கே பகிர்ந்துகொண்டேன்..


*இன்று மாலைக்குள் நேரமிருந்தால் இன்னும் இரண்டு பதிவுகளைப் போடுவதாய் உத்தேசம்.. என் இந்தக் கொலை வெறி என்று கேட்காதீர்கள்..

உன்னைப் போல் ஒருவன்
சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர்..
இரண்டும் எனக்காக வெயிட்டிங்..

நேரமிருந்தால் வருகிறேன்..




61 comments:

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் தலைவா!

வந்தியத்தேவன் said...

முன்னூறு அடித்ததற்க்கு வாழ்த்துக்கள் நண்பா. புரட்சித் தலைவர், வருங்கால தமிழக முதல்வர் விஜயகாந்தின் அடுத்த படத்திற்க்கு நீங்கள் தான் வசனம் என்கின்றார்கள் உண்மையா?(ச்சப்பா எத்தனை புள்ளிவிபரங்கள்).

சுபானு said...

வாழ்த்துக்கள் அண்ணா... தொடர்ந்து கலக்குங்க...

Nimalesh said...

முன்னூறு அடித்ததற்க்கு வாழ்த்துக்கள்.............

வந்தியத்தேவன் said...

//இலங்கையில் பிரபலமான வலைத்தளங்களில் நண்பர் வந்தியத்தேவனின் என் உளறல்கள் முன்னிலையில் உள்ளது.. 692.. //

அப்ப நான் தான் இலங்கையில் முதல்வன் (ஹிஹிஹி உள்குத்துப் புரிகிறதா?)
நீங்கள் சர்வதேச முதல்வன் (சும்மாவா சிங்கப்பூர் எல்லாம் சிங்களாக(?) சுற்றிய சிங்கம் அல்லவா)

//வந்தியத்தேவன்,,
எங்கள் ரசனைகள் பல ஒத்திருப்பதால்(சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ) நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்கிறோம்//

அண்ணா மக்களுக்கு புரியும் படி சொல்லவும், அவர் குறிப்பிட்ட அந்த சில விடயங்கள் சினிமா, நக்கல், பம்பல், கலக்கல் படம் மட்டுமே. ஏனைய பதிவுலகத்திற்க்கு சம்பந்தப்படாத ஏனைய விடயங்களில் லோஷன் தான் முதல்வன்.

//பின்நூட்டிகளாக அறிமுகமாகி பின்னர் பதிவர் சந்திப்பின் பின் நெருக்கமான நண்பர்களான ஆதிரை, புல்லட்..பல விஷயமும் பகிரும் நண்பர்கள் இவர்கள்..
//

ஓம் ஓம் இந்த வசனத்தில் ஒரு இடத்தில் இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் புல்லட் பகிரும் விடயங்கள் தெரியவரும்.

//உன்னைப் போல் ஒருவன்//
எதிர்பார்க்கின்றேன்

//சாம்பியன்ஸ் கிண்ணத் தொடர்..//
ஹாஹா கொஞ்ச நாளைக்கு நமக்கு ஜல்லியடிக்க நல்ல விடயம்.

சரி சரி பின்னேரம் உங்கள் 300ஆவது பதிவிற்கா பார்ட்டி தானே.

புல்லட் said...

// இலங்கையில் பிரபலமான வலைத்தளங்களில் நண்பர் வந்தியத்தேவனின் என் உளறல்கள் முன்னிலையில் உள்ளது.//
பல கிளுகிளுப்பு சைட்கள் இலங“கையில் தடை செய்ய்ப்பட்டதன் விளைவே அது.. ஆலையில்லா ஊளருக்கு இலுப்பம்பூ சக்கரை..

பிந்திய செய்திகள் : வந்தியின் வெப்சைட்டை தடைசெய்ய இலங்கை அரசு உத்தரவு? அண்மையில் எழுப்பப்பட்ட சட்டம் மூலம் செய்யப்பட்ட வலைத்தளங்களில் தவறவிடப்பட்ட உளறல்கள்..

Subankan said...

முச்சதத்திற்கு வாழ்த்துக்கள் அண்ணா, உன்னைப் போல் ஒருவன் இன்று கொன்கொட்டில். பார்த்துவிட்டு வந்து படிக்கின்றேன்.

வந்தியத்தேவன் said...

//புல்லட் said...
பல கிளுகிளுப்பு சைட்கள் இலங“கையில் தடை செய்ய்ப்பட்டதன் விளைவே அது.. ஆலையில்லா ஊளருக்கு இலுப்பம்பூ சக்கரை..

பிந்திய செய்திகள் : வந்தியின் வெப்சைட்டை தடைசெய்ய இலங்கை அரசு உத்தரவு? அண்மையில் எழுப்பப்பட்ட சட்டம் மூலம் செய்யப்பட்ட வலைத்தளங்களில் தவறவிடப்பட்ட உளறல்கள்..//

தம்பி புல்லட்டிற்க்கு ஒரு அறைகூவல் என்னுடைய வலையில் நயன்தாரா குறிப்புகள் தவிர வேறு எங்கே கிளுகிளுப்பு இருக்கின்றது. இதனை நிரூபித்தால் நான் கிரிக்கெட், சினிமா பதிவுகள் எழுதுவதில்லை என சத்தியம் செய்கின்றேன். இந்த குற்றச்சாட்டிற்க்கு புல்லட் மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக இயங்கும் பெண்கள் அணிக்கு என் ஆதரவு தரப்படும் என சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.

வந்தியத்தேவன் said...

//புல்லட் said...
பல கிளுகிளுப்பு சைட்கள் இலங“கையில் தடை செய்ய்ப்பட்டதன் விளைவே அது.. ஆலையில்லா ஊளருக்கு இலுப்பம்பூ சக்கரை..

பிந்திய செய்திகள் : வந்தியின் வெப்சைட்டை தடைசெய்ய இலங்கை அரசு உத்தரவு? அண்மையில் எழுப்பப்பட்ட சட்டம் மூலம் செய்யப்பட்ட வலைத்தளங்களில் தவறவிடப்பட்ட உளறல்கள்..//

தம்பி புல்லட்டிற்க்கு ஒரு அறைகூவல் என்னுடைய வலையில் நயன்தாரா குறிப்புகள் தவிர வேறு எங்கே கிளுகிளுப்பு இருக்கின்றது. இதனை நிரூபித்தால் நான் கிரிக்கெட், சினிமா பதிவுகள் எழுதுவதில்லை என சத்தியம் செய்கின்றேன். இந்த குற்றச்சாட்டிற்க்கு புல்லட் மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக இயங்கும் பெண்கள் அணிக்கு என் ஆதரவு தரப்படும் என சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.

SShathiesh-சதீஷ். said...

முச்சதம் அடித்தவர் வரிசையில் இணைந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். இன்று மாலைக்குள் இன்னும் இரண்டு பதிவா இரண்டுநாளாய் நான் ஒரு பதிவும் போடாமல் கவலையாக இருக்கும் போது கொஞ்சம் எரிகிறது. இருந்தாலும் சாம்பியன்ஸ் ற்றோபி பதிவிற்காக காத்திருக்கின்றேன். வழக்கம் போல இலங்ப்கைக்கு இம்முறையும் குருட்டு வாய்ப்பு இருக்கெண்டு நினைக்கின்றேன். எப்பிடி நீங்கள் சொல்ல போவதை முதலில் சொல்லி விட்டேன். என்னையும் இந்த பதிவில் உள்ளடக்கியதற்கு நன்றிகள். உங்களை பார்த்து படித்து வலை உலகிற்கு வந்த எந்னைப்போங்ரார்களுக்கு உங்கள் முச்சதம் இன்னும் வேகத்தை அதிகரித்துள்ளது.

லோஷன் ரசிகர் மன்றம் said...

பதிவுலகின் முதல்வர், கலைஞர், முத்தமிழ் வித்தகர் லோஷன் வாழ்க‌

சி தயாளன் said...

வாழ்த்துகள்....! :-)

Busooly said...

வாழ்த்துக்கள் தகவல்.கொம்

Admin said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா?

தொகுப்பு அருமையாக இருக்கின்றது...

Admin said...

//(இலங்கையில் பிரபலமான வலைத்தளங்களில் நண்பர் வந்தியத்தேவனின் என் உளறல்கள் முன்னிலையில் உள்ளது.. 692.. முழுமையான விபரமான தகவல்கள் வெகுவிரைவில் என் பதிவாக வரும்.. நம்புங்கப்பா வெகு விரைவில் தருவேன்) //


வந்திக்கு வாழ்த்துக்கள்.

எல்லாம் நயன்தாரா செய்த வேலைகள் என்று ஒரு கதை அடிபடுகிறது உண்மையா அண்ணா?

Admin said...

//முன்பே அறிந்த ஆனால் இவர் தான் என்று அறியாமல் பின் வலையுலக பதிவர்களாக அறிமுகமாகி,நண்பராகி இப்போது மிக நெருக்கமான நண்பராகியுள்ள வந்தியத்தேவன்,,
எங்கள் ரசனைகள் பல ஒத்திருப்பதால்(சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ) நிறைய விஷயங்களை பரிமாறிக் கொள்கிறோம்..//


உங்கள் வலைப்பதிவு மூலமாகத்தான் எனக்கும் அறிமுகமானவர் நண்பர் வந்தி. எனக்கும் அவருக்கும் உங்கள் வலைப்பதிவில் சிறு கருத்து மோதலே எமது நட்பின் ஆரம்பமாகும். உங்களோடு மட்டுமல்ல அவரின் ரசனைகள் என்னோடும் ஒத்திருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும் (நயன்தாராவைத் தவிர) நல்ல நண்பர்.

வந்தி நயன்தாராவின் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Admin said...

//இன்று மாலைக்குள் நேரமிருந்தால் இன்னும் இரண்டு பதிவுகளைப் போடுவதாய் உத்தேசம்.. என் இந்தக் கொலை வெறி என்று கேட்காதீர்கள்..//

இன்னும் ஒரு வருடத்தில் 300 என்ன 600 பதிவே போடலாம் என்று சொல்லுங்க..

Admin said...

வந்தியத்தேவன் said...

அப்ப நான் தான் இலங்கையில் முதல்வன் (ஹிஹிஹி உள்குத்துப் புரிகிறதா?)
நீங்கள் சர்வதேச முதல்வன் (சும்மாவா சிங்கப்பூர் எல்லாம் சிங்களாக(?) சுற்றிய சிங்கம் அல்லவா)

புரிகிறது புரிகிறது... நீங்களுமா முதல்வன் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிங்க... அதுசரி முதல்வன் என்றா என்ன என்று சொல்லுங்க வந்தி... அல்லது நாங்கதான் முதல்வன் என்று சொல்வோரிடம் கேட்டு சொல்லுங்க எனக்கு எல்லோரும் நாங்கதான் முதல்வன் என்று சொல்றது புரியாத புதிராகவே இருக்கின்றது... யார் முதல்வன்?


அதுக்குள்ளே அவங்களைப்பார்த்து நிகழ்சிகளை copy அடித்து (வெற்றிபெற) நினைப்பதாக ஒருசிலருக்கு பேச்சு. (சிரிப்பு வருது)

Admin said...

வந்தியத்தேவன் said...


//தம்பி புல்லட்டிற்க்கு ஒரு அறைகூவல் என்னுடைய வலையில் நயன்தாரா குறிப்புகள் தவிர வேறு எங்கே கிளுகிளுப்பு இருக்கின்றது. இதனை நிரூபித்தால் நான் கிரிக்கெட், சினிமா பதிவுகள் எழுதுவதில்லை என சத்தியம் செய்கின்றேன். இந்த குற்றச்சாட்டிற்க்கு புல்லட் மன்னிப்பு கேட்காவிட்டால் அவருக்கு எதிராக இயங்கும் பெண்கள் அணிக்கு என் ஆதரவு தரப்படும் என சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.//



அடிக்கடி தனது வலைப்பதிவில் கிளுகிளுப்பான படங்களைப்போட்டு புல்லட்டுக்கு கிளுகிளுப்பெத்தி, கல்யாண ஆசை வர வைத்ததனால் புல்லட்டின் சதியே தடைக்குக் காரணம்.

Anonymous said...

//அவருக்கு எதிராக இயங்கும் பெண்கள் அணிக்கு என் ஆதரவு தரப்படும் என சொல்லிக்கொள்ளவிரும்புகின்றேன்.//

என்ன தான் அண்ணாவாக இருந்தாலும் பிழை பிழை தானே.. அதனால், அந்த அணிக்கு தலைவி அவரின் பாசமலரான நான் தான்... ஹி ஹி..

அட பாவி லோஷன் அண்ணா, தங்காய் தங்காய் என்டு உருகிவிட்டு என்னை மறந்து போனியா... இரு இரு... அண்ணியிட்ட மாட்டாமல் விட்டது என்ட பிழை தான்... கஷ்டகாலம் தொடங்கிவிட்டதுடா அண்ணா உனக்கு,,,

Admin said...

//பின்னூட்டங்களை எனக்கு அதிகம் வழங்கி முன்னணியில் இருப்போர்.. (இவங்களை முந்த அதிகதிகம் பின்னூட்டம் போடப் போகும் சிங்கங்களையும் சிங்காரிகளையும் என் வலைத்தளம் வலை விரித்து அழைக்கிறது)
ஆதிரை (105)
வந்தியத்தேவன் (99)
என்ன கொடும சார் (83)
’டொன்’ லீ (81)
சந்ரு (75)
Sinthu (73)//


பின்னூட்டத்தில் எப்படி முன்னுக்கு வந்தேன் என்று இப்போ புரியுதா அண்ணா?

வந்தியத்தேவன் said...

// சந்ரு said...
வந்தியத்தேவன் said...

புரிகிறது புரிகிறது... நீங்களுமா முதல்வன் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிங்க... அதுசரி முதல்வன் என்றா என்ன என்று சொல்லுங்க வந்தி... அல்லது நாங்கதான் முதல்வன் என்று சொல்வோரிடம் கேட்டு சொல்லுங்க எனக்கு எல்லோரும் நாங்கதான் முதல்வன் என்று சொல்றது புரியாத புதிராகவே இருக்கின்றது... யார் முதல்வன்? //

சந்ரு இது ஒரு பிரச்சனைக்குரிய கேள்வி. எனர்ஜியும் தாங்கள் தான் முதல்வன் என்கிறார்கள், பிரகாசமும் தாங்கள் தான் முதல்வன் என்கின்றார்கள். இடையில் மெல்லிய காற்றும் முதல்வன் என்கிறார்கள். உண்மையில் முதல்வன் இவர்களைக் கேட்கும் நேயர்கள் தான். நிறைய விளக்க கொடுக்கவேண்டிய கேள்வி இது பதில் பதிவாக விரைவில். பின்விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு.

Anonymous said...

வாழ்த்துக்கள் btw :D

ஊர்சுற்றி said...

//எனக்கு எப்போதுமே புள்ளிவிபரங்களில் ஒரு தனியான ஆசை.//

எனக்கும். உங்களது புள்ளிவிபரங்களை மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள்!

கார்த்தி said...

வாழ்த்துக்கள் லோசன் அண்ணா!!
விரைவில் 1000 அடிக் வாழ்த்துக்கள்

துஷா said...

வாழ்த்துக்கள்!அண்ணா

"பின்னூட்டங்களை அடிக்கடி இடும் பங்களாதேஷ் சகோதரியர் கூட்டம் சிந்து,துஷா, "

நன்றி அண்ணா
எப்போதும் போல் ஒவ்வெரு நாளும் உங்கள் வலைத்தளம் வருவேன் ஆனால் முன் போல் பின்னுட்டம் போடுவது இல்லை/ குறைந்து விட்டது

Admin said...

//வந்தியத்தேவன் said...
// சந்ரு said...
வந்தியத்தேவன் said...

புரிகிறது புரிகிறது... நீங்களுமா முதல்வன் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிங்க... அதுசரி முதல்வன் என்றா என்ன என்று சொல்லுங்க வந்தி... அல்லது நாங்கதான் முதல்வன் என்று சொல்வோரிடம் கேட்டு சொல்லுங்க எனக்கு எல்லோரும் நாங்கதான் முதல்வன் என்று சொல்றது புரியாத புதிராகவே இருக்கின்றது... யார் முதல்வன்? //

சந்ரு இது ஒரு பிரச்சனைக்குரிய கேள்வி. எனர்ஜியும் தாங்கள் தான் முதல்வன் என்கிறார்கள், பிரகாசமும் தாங்கள் தான் முதல்வன் என்கின்றார்கள். இடையில் மெல்லிய காற்றும் முதல்வன் என்கிறார்கள். உண்மையில் முதல்வன் இவர்களைக் கேட்கும் நேயர்கள் தான். நிறைய விளக்க கொடுக்கவேண்டிய கேள்வி இது பதில் பதிவாக விரைவில். பின்விளைவுகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு.//


பிழைகளை சுட்டிக்காட்ட எப்போதும் நான் தயங்கியவனில்லை. (நல்ல விடயங்களை பாராட்டாமலும் விடுவதில்லை) உண்மையைச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது. இவர்களுமா கருத்துச் சுதந்திரத்தை பறிக்கப்போகின்றார்கள். பின் விளைவுகளை நான் ஏற்றுக்கொள்ளத் தயார். நீங்கள் பதிவிடுங்கள் நான் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கின்றேன் . அதன்பின் வரும் பின்விளைவுகளைப் பார்ப்போம்.

Sinthu said...

வாழ்த்துக்கள் அண்ணா............. முன்பெல்லாம் வானொலியில் தான் உங்கள் கருத்துக்களை உங்கள் குரலினூடாக கேட்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் இங்கு வந்தவுடன் உங்கள் கருத்துக்களை இத்தளத்தினூடு பார்க்க முடிந்தது............
உங்கள் பதிவுகளை எதிர் பார்த்து..........

Unknown said...

வாய்ப்பாடிக்குமாரின் வாழ்த்துக்கள் !

வேந்தன் said...

முன்னூறு அடித்ததற்க்கு வாழ்த்துக்கள் அண்ணா.

வேந்தன் said...

// சந்ரு said...
அதுசரி முதல்வன் என்றா என்ன என்று சொல்லுங்க வந்தி//
சந்ரு & வந்தி அண்ணா
திரு, திருமதி போல ஒரு வானோலியின் பெயர் சொல்ல முன் சொல்வதுதான் முதல்வன் என்னும் சொல்.
உதாரணமாக:- நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது முதல்வன்.எனர்ஜி / முதல்வன்.பிரகாசம்.
;)))))))

Admin said...

// வேந்தன் said...
// சந்ரு said...
அதுசரி முதல்வன் என்றா என்ன என்று சொல்லுங்க வந்தி//
சந்ரு & வந்தி அண்ணா
திரு, திருமதி போல ஒரு வானோலியின் பெயர் சொல்ல முன் சொல்வதுதான் முதல்வன் என்னும் சொல்.
உதாரணமாக:- நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது முதல்வன்.எனர்ஜி / முதல்வன்.பிரகாசம்.
;)))))))//


முதல்வன் என்பதனை எதனை வைத்துக்கொண்டு அளவிடுகின்றனர் என்பதே என் கிளவி. முதல்வன் என்பதன் அளவுகோல் என்ன? நல்ல நிகழ்ச்சிகளை வழங்குவதா?, அரட்டுவதா? , சொதப்புவதா, தாங்கள் மட்டும்தான் புத்திசாலி என்று நினைத்து மக்களை முட்டாளாக்க நினைப்பதா?

இரா பிரஜீவ் said...

விஜயகாந்திற்கு போட்டியா இன்னொரு கணக்கு புலி எண்டு இப விளங்குது.

கடைசி படம் அசத்தலோ அசத்தல்!

Admin said...

//முதல்வன் என்பதனை எதனை வைத்துக்கொண்டு அளவிடுகின்றனர் என்பதே என் <<<,கிளவி>>>. முதல்வன் என்பதன் அளவுகோல் என்ன? நல்ல நிகழ்ச்சிகளை வழங்குவதா?, அரட்டுவதா? , சொதப்புவதா, தாங்கள் மட்டும்தான் புத்திசாலி என்று நினைத்து மக்களை முட்டாளாக்க நினைப்பதா?//

கிளவி என்று வந்துவிட்டது திருத்துகின்றேன்.


முதல்வன் என்பதனை எதனை வைத்துக்கொண்டு அளவிடுகின்றனர் என்பதே என் கேள்வி. முதல்வன் என்பதன் அளவுகோல் என்ன? நல்ல நிகழ்ச்சிகளை வழங்குவதா?, அரட்டுவதா? , சொதப்புவதா, தாங்கள் மட்டும்தான் புத்திசாலி என்று நினைத்து மக்களை முட்டாளாக்க நினைப்பதா?

தெருவிளக்கு said...

எப்படித்தான் தவறாமல் இடுகை இடுகிறீர்களோ தெரியாது.......
மலைக்க வைக்கிறீர்கள் அண்ணா.....
அடுத்த ஆயிரமாவது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள்

Anonymous said...

இணைய ரவுடிகளால் பரிதாபமாக பறிபோன உயிர் http://a1realism.blogspot.com/2009/09/blog-post_20.html

Elanthi said...

300 பதிவா???? வியப்பா இருக்கு அண்ணா.... வாழ்த்துக்கள். தொடரட்டும்...
சக்தியோடு தொடங்கிய உங்கள் படைப்புக்கள் மீதான ரசனை இன்று வெற்றியாக வலையினுலும்.
வெற்றின் நிகழ்ச்சிகளை இணையமூடாக கேட்டு வருகின்றேன். பொழுதுபோக்கிற்கு 100 வீதம் சிறந்த வானொலி.
அது எப்படி அண்ணா உங்களால் மட்டும் முடிகிறது?

கோவி.கண்ணன் said...

300க்கு வாழ்த்துகள்.

சென்றவாரம் கானாபிரபாவுடன் நேரடி சந்திப்பில் உங்களைப் பற்றியும் அலவளாவினோம். தம்பி டொன்லி நீங்கள் என்னைப் பற்றி விசாரித்தாகச் சொன்னார்

navamumaibalan said...

வாழ்த்துக்கள் அண்ணா.தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. பின்னூட்டங்கள் இடாவிட்டாலும் நாங்களும் தொடர்ந்து வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். சில குறிப்புகள் போடத் தோண்றும் பொழுதுகளில் என்னை கட்டுபடுத்திக் கொள்வதுண்டு. நான் அனுப்பிய தனிப்பட்ட் இரு மின்னஞ்சல்களுக்கும் பதிலில்லாத போது ஏன் சிரமத்தைக் கொடுப்பான் என ஒதுங்கியமையும் ஒரு காரணம் தான். அண்ணா இப்போதெல்லாம் உங்கள் குரலை கேட்க முடியாவிட்டாலும் உங்கள் பதிவுகளையே இரசித்துக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க வளமுடன்
நவம் உமைபாலன்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் லோ"ஷன்"

Karthikeyan G said...

Congrats Sir.. :)

செல்வன் said...

அண்ணா, வாழ்த்துக்கள்.
எவ்வளவோ செய்யிறீங்க.. கிடுகு toolbar ஐயும் உங்கட தளத்தில போடுங்கவன்.. http://kiduku.com/blog/?p=9 இங்க விபரம் இருக்கு அண்ணா

Jay said...

வாழ்த்துக்கள் லோஷன் அவர்களே. என்னுடைய தமிழ் + ஆங்கிலம் வலைப்பதிவுகள் ஒன்றுசேர அலக்சாவில் 166,242 இலங்கையில் 610. தனியே தமிழ் பதிவிற்கு மட்டும் என்று அலெக்சா கணிப்பதில்லை போல. ஒரு டொமைன்னுக்கு ஒரு தரவை மட்டுமே காட்டுது.

மீண்டும் வாழ்த்துக்கள்

மயூரேசன்
Mayuonline.com
Mayuonline.com/blog

Anonymous said...

ungazh vettigazh thodaraddum anna

Anonymous said...

ungazh vettigazh thodaraddum anna

Anonymous said...

ungazh vettigazh thodaraddum anna

ஆதிரை said...

//என்னை நானே எடை பார்த்து மேம்படுத்திக் கொள்ள எப்போதுமே உதவுகிறது.

எடையும் முன்னூறைத் தாண்டும் போல...

ஆதிரை said...

//அதிகமான பின்னூட்டங்களைக் குவித்த பதிவுகள்..

ஆவி உலாவும் அலுவலகம் !


ம்ம்ம்ம்....

ஆதிரை said...

//அட பாவி லோஷன் அண்ணா, தங்காய் தங்காய் என்டு உருகிவிட்டு என்னை மறந்து போனியா... இரு இரு... அண்ணியிட்ட மாட்டாமல் விட்டது என்ட பிழை தான்... கஷ்டகாலம் தொடங்கிவிட்டதுடா அண்ணா உனக்கு,,,

கஷ்ட காலம் நீங்க சனீஸ்வரனுக்கு எண்ணெய்ச் சட்டி எரிக்கவும்

ஆதிரை said...

ஓர் வருடத்தில் முன்னூறாவது பதிவு. வாழ்த்துக்கள் அண்ணா

அஜுவத் said...

சூப்பர் அண்ணா.......... அது சரி இரண்டு பதிவு என்றீங்க இன்னும் ஒன்றையும் காணவில்லயே.......

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா

Unknown said...

வாழ்த்துக்கள் அண்ணா

தங்க முகுந்தன் said...

300ஆவது பதிவுக்கு எங்களுடைய வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளவும்!

Hisham Mohamed - هشام said...

அது என்னமோ என்ன மாயமோ தெரியல பதிவெழுத வந்த என்னோடு வருகிற சோம்பல நேரம் இருந்தும் என்னை வேறெங்கோ அழைத்துச்செல்கிறது.

என்னதான் இருந்தாலும் குறுகிய காலத்தில் பல நம்பர்களையும் நண்பர்களையும் சம்பாதிதத உங்கள் ஈடுபாடு அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.

தொடரட்டும் உங்கள் பணி... வாழ்த்துக்கள்.

//ஹிஷாமும் நானும் போட்டிக்கு பதிவு போட்ட காலம் இருந்தது.. இப்போது அவர் அதிகம் போடுவதில்லை.. இதனால் ஒரு சுவாரஸ்யம் எனக்கும் இருப்பதில்லை.பல் தொழிநுட்ப விஷயங்கள் பதிவுலக சூட்சுமங்களை நாம் பகிர்ந்திருக்கிறோம்..//

பதிவுலகில் இன்னுமொரு புரட்சி படைக்க வருகிறேன் உங்களோடு.......

பால்குடி said...

லோஷன் அண்ணாவுக்கு நல்வாழ்த்துக்கள். தொடர்ந்தும் உங்களின் பதிவுகளை நிறையவே எதிர்பார்க்கிறோம்.

viththy said...

300ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
சாம்பியன்ஸ் கிண்ண பதிவிற்காக காத்திருக்கின்றேன்......

யோ வொய்ஸ் (யோகா) said...

வாழ்த்துக்கள் லோஷன்.. லேட்டா பின்னூட்டம் போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கேன்...

//சில விஷயங்களில் அவர் கிங்.. ஹீ ஹீ//

எந்த விஷயத்தில் இங்க பப்ளிக்ல வேண்டாம் டிவிட்டர்ல வாரப்ப சொல்லுங்க

Sivatharisan said...

வாழ்த்துக்கள் லோஷன்..

என்ன கொடும சார் said...

//என்ன கொடும சார்.. என்னை துரோணர் என்கிறார்//

கட்டை விரல் கேப்பீங்களா?

மற்றும் பின்னூட்டத்தில் முதல் இடத்தில் உள்ள வர்களில் ஒருவர் தப்பாட்டம்.. போட்டியில் இழந்து விலக்கவும்.. நியாமமான போட்டியை உறுதி செய்யவும்.. இல்லாவிட்டால் மற்றோரும் சந்து க்குள் சிந்து பாடுவாங்க.. NO FOULS PLEASE :D

கரவைக்குரல் said...

முந்நூறு பதிவுகள் குறைந்த காலம் ஒருவருடத்தில் எட்டிய உங்களுக்கு வாழ்த்துக்கள் லோஷன்
இன்னும் சிறப்பாக மூவுலகத்துக்கும் கேட்கும் படியாக உங்கள் குரலும் எழுத்தும் ஒலிக்கட்டும் பரவட்டும்

வாழ்த்துக்கள்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner